விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படத்தை முன்வைத்து, கஷ்மீர் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள் – முழநீளக் குறிப்புகள்

March 28, 2022

முதலில், இப்பதிவின் முன்னோட்டத்தைப் படிக்கவும்: விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள் March 20, 2022

+ முன்னமே நான் எச்சரித்தது போல, இது 6400+ வார்த்தைகள் அடங்கியது – 6-7 பாகங்களாகப் பிரித்துப் பதித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தமிழில், எப்போதாவது புனைவுகளல்லாத XXLongform அதிநீளக் கட்டுரைகள் படிப்பதற்கென, ஒரு சகமனிதர் பட்டாளம் திரளவேண்டும் என்பது எனக்கு முக்கியம். ஆகவே!

ஆகவே, பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் ஓடவும்; வேகமய்யா, வேகம்!

இந்தப் பதிவில் பத்து பிரிவுகள் (பயப்படாதீர்கள்; இவற்றில் சில நீளம் அதிகம், சில கோமணஸைஸ்):

1) தகஷ்மீர்ஃபைல்ஸ் படம் பார்த்த சிறுகதை 2)  இப்பதிவை எழுதியதற்கான பின்புலம் + வெட்கங்கெட்ட கோரிக்கை ஒன்று 3) கஷ்மீர் ஹிந்துக்களின் தொடர் அழித்தொழிப்புகளின் பின்புலங்கள் 4) 1989-90 (வருடங்களில் மட்டும்) கஷ்மீர் ஹிந்து அழித்தொழித்தல் நடந்த சமயம் குறித்த கோரச்சோக புள்ளியல் விவரங்கள் + விவரணைகள் 5) 1989-90 விஷயங்களைப் பொதுவாகவே நாம் அறியவில்லை +  எனக்கு அந்தக் கோரங்கள் எப்படி ஒருமாதிரி கேள்விப்பட நேர்ந்தது என்பதைக் குறித்த விவரங்கள், எதிர்கொள்ளல்கள்  6) 1989-90 கஷ்மீர் ஹிந்து ஒழிப்பின் சமயம் (மும்) வெகுவாக உச்சாடனம் செய்யப்பட்ட ஜிஹாதி இஸ்லாமிய கொலைகார கோஷங்கள் + அவற்றின் ஒருமாதிரி தமிழாக்கம் 7) கஷ்மீர்ஃபைல்ஸ் படம் பார்க்குமுன்னரும் பின்னரும், என்னுடைய சில இடதுசாரி/’லிபரல்’ அறிவுஜீவிய நண்பர்கள் உதிர்த்த கருத்துகளும் என், சில எதிர்வினைகளும் 8) கஷ்மீர் ஹிந்து அழித்தொழித்தல் குறித்த லிபரல்-இடதுசாரி அஞ்ஞானிகளின் கேள்விகள்+ சந்தேகங்கள்+ மேலான கருத்துகள் – என்னுடைய வியாக்கியானத்துடன் 9) நானும் தகஷ்மீர்ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்க நேர்ந்த சூழலும் அது குறித்த என் சிலபல கருத்துகளும்  10) இப்பதிவில் வந்திருக்கவேண்டிய ஆனால் வராத விஷயங்கள் பற்றிய மெடா-தகவல் – அதாவது, அடுத்த பதிவில் வரக்கூடியவை.

1

சென்ற வாரம், கண்டமேனிக்கும் அங்குமிங்கும் என் வேலைகளைத் தள்ளிப்போட்டு, முதியோர்-பராமரிப்பு வேலைகளை ‘அவுட்ஸோர்ஸ்’ செய்தபின், ஏதோ அலுவலக வேலை, வெளியே சென்றாகவேண்டும் என வீட்டில் மனதாறப் பொய் சொல்லிவிட்டு இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தேன்.

அடுத்த நாள், என் மனைவியும் இன்னொரு தியேட்டருக்குச் சென்று அதே படத்தைப் பார்த்தார்; அதே சால்ஜாப்பு.

என்னைப் போன்ற கல்நெஞ்சு கிடையாது அவருக்கு, பாவம். எனக்குக் கல் நெஞ்சினை உருவாக்கிய பல விஷயங்களை அவர் வாழ்க்கையில் (என் இயல்புக்கும் மீறி) எதிர்கொள்ள நேர்ந்திருக்கவில்லை. ஆகவே, அளவு கடந்த பரிவுடன், கைக்குட்டைக்கு அப்பாற்பட்டு டர்க்கிஷ் டவல்/துண்டு ஒன்றையும் எடுத்துப் போகப் பரிந்துரைத்திருந்தேன்.

பின்னர்.

சென்ற சில நாட்களாக (பலப்பல வருடங்களாக அவ்வப்போது மேலெழும்பிப் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள்தாம்) இந்த கஷ்மீர் கொடூரங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். திரைப்படங்களால் ஆக்கிரமிப்பும் துப்புரவாகச் சலவையும் செய்யப்பட்ட மூளைகள், பாலிவுட் எனக் காப்பி மயமாக்கப்பட்ட. ஹிந்துமதங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் உர்தூவுட்/UrduWood + தமிழக திராவிடமரக்கட்டை (DravidiyaWood ) பொறுக்கிகள் + நம் அறிவுஜீவிய மொகரைக்கட்டைகள், இடதுசாரி அற்பர்கள் பற்றியும். மேலும், இந்தியதேசியகாங்க்ரெஸ் எனும் பேடிமுதல்வாதக் கட்சியைக் குறித்தும்.

கடைசியில் வழக்கம்போலவே இவையெல்லாம் கல்வி, கற்பித்தல், கற்பிதங்கள், கற்பனைகள், நேச்சர் ஆஃப் ரியலிட்டி, பர்ஸெப்ஷன், பரிணாமத்தின் உந்துதல் பரிமாணங்கள்,  அப்ரஹாமிய வழித் தோன்றல்கள், தர்மம்-ரிதம் என வந்து, ‘எல்லாம் சரி, பெத்தபேச்செல்லாம் பேசலாம் – ஆனால், இதற்கு நாம் என்னதான் காத்திரமாக, களத்தில் செய்யக்கூடும்’ எனும் தர்மசங்கடக் கேள்வியுடன்  ஒருமாதிரி இனிதே முடிந்து, நாளை அதிகாலை மீண்டும் தொடர்வோம் என…

ஆகவே(யும்) இந்தப் பதிவு.

(திருமணம் நடந்த பிறகு சுமார் 20-25 வருடங்களுப்பின்னர் தாம், அவருடன் இம்மாதிரி விஷயங்களையும் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன – அதுவரை வளர்வளர் எனக் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில், பள்ளிகளில் வேலைசெய்வது இன்னபிற க்ரஹஸ்திப் பணிகளிலும் படுபிஸியாக இருந்துவிட்டோமோ என்ன எழவோ…)

2

தொடர்ந்து இரண்டுமூன்று மணி நேரம் என எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் இருப்பதால் – விட்டுவிட்டுப் பல மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு, நிறைய குறிப்புகளில் இருந்து தொகுத்து, பல விவரங்களை ஒருதடவையாவது சரிபார்த்து இதனை எழுதியிருக்கிறேன்.

இங்கிருந்து கீழேயுள்ள அனைத்து கருத்துகளுக்கும், வியாக்கியானங்களுக்கும் பின்னால் காத்திரமான தரவுகள் இருக்கின்றன – எதையும் நான் அட்ச்சிவுடவில்லை; ஆனால் அடிக்குறிப்புகள் என விலாவாரியாகக் கொடுக்க ஆரம்பித்தால் இப்பதிவு இன்னமும் நீளமாகிவிடும், மேலதிக நேரமும் எடுக்கும்.

மேலும் – சுட்டிகள்/தரவுகள் எனக் கொடுத்தாலுமேகூட – பெரும்பாலும் சொற்ப ஆசாமிகள்தாம் அதனைத் தேடிப் போகிறார்கள் – நம்மவர்களின் ஆர்வம், சரிபார்க்கும் திறன் அப்படி; ஆகவே, முடிந்தவரை எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை.

குறிப்பாக – எந்த விஷயத்தின் பின்புலத்தையாவது, அல்லது அதன் தர்க்கரீதியாக நிறுவுதலையாவது, இதைப் படிப்பவர்களில் யாராவது தெரிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சலில் (மட்டும்) தொடர்பு கொண்டால், பதிலளிக்கிறேன்.

அவ்வளவுதான்.

ஒரு வெட்கங்கெட்ட கோரிக்கை: ஒத்திசைவின் வரலாற்றிலேயே(!) இந்தப் பதிவுக்குத் தான் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்; கஷ்மீர் பிரச்சினை (=இஸ்லாம்) குறித்து முன்பே படித்திருந்த சுமார் 15-20 புத்தகங்களை மறுபடியும் பரிசீலனை செய்தல், முக்கியமான விஷயங்களைச் சரிபார்ப்பது, பழைய குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்ப்பது, பலப்பல பரிமாணங்களையும்/வரலாற்றுத் துகள்களையும் கோர்ப்பது, முடிந்தவரை கோர்வையாக (எனக்கு இது எவ்வளவு கஷ்டம், பாருங்கள்), ஒரளவாவது படிக்கும்படிக்கு(!!) எழுதுவது என இதற்காகக் கணிசமான நேரம் ஒதுக்கித் துண்டுதுண்டாகக் கிடைத்த நேரத்தில் எல்லாம் இதனைப் பேய் பிடித்தவன் போல எழுதியிருக்கிறேன். அதே சமயம் கஷ்மீர் நிலவரம் பற்றி நம்மூரில், தமிழ் வழியாக, அதிக பரிச்சயமே இல்லை என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறேன்.

ஆகவே. இந்தக் கட்டுரையின் சுட்டியை, முடிந்தால் பரப்ப முடியுமா? கருத்துகளைத் தெரிவிக்க முடியுமா? ஏனெனில் சுமார் பத்து பேராவது இப்பதிவைப் படித்து அசைபோடவேண்டும் என்பது என் விடலைத்தன விருப்பம்; மற்றபடி உங்கள் விருப்பம்; நன்றி.

இதைத் தேவைப்பட்ட துண்டுகளாக வெட்டி நீங்கள் உலவவிட்டாலும், என் பெயரைக் குறிப்பிடா விட்டாலும் ஒரு சுக்குக்கும் பிரச்சினை இல்லை; ஒத்திசைவு வலைத்தளத்தில் பதிக்கப்படும் எதற்கும் காப்பிரைட் எனும் விஷயமே இல்லை. நம்பகத் தன்மை உள்ள விஷயங்கள் யாரைச் சென்றடையவேண்டுமோ அவர்களிடம் போய்ச்சேர வேண்டும், அவ்வளவுதான்.

3

சரி. இந்தப் பதிவில், கஷ்மீர் ஹிந்துக்களின் அழித்தொழிப்புகளின் பின்புலங்களாக இருந்த பலப்பல விஷயங்களின் மேம்போக்கான விவரணைகள் மட்டுமே இருக்கின்றன – விலாவாரியாக அவற்றை எழுதவில்லை. எடுத்துக் காட்டுகளாக:

காலம்காலமாக கஷ்மீர் பிரதேசத்தில் (லும்) நடந்துவரும் இஸ்லாமிய ஜிஹாதிவகை அராஜகம் பற்றியோ, ஸுஃபி வகையறா தீவிரவாத வன்முறைப் பொறுக்கிகள் தலைமையேற்று நடத்திய படுகொலைகளையோ மதமாற்றங்களையோ பற்றி இங்கு பேசப்போவதில்லை. புல்புல் ஷா என்றழைக்கப் பட்ட ஸையத் ஷர்ஃபுத்தீன் அப்துர் ரஹ்மான் ஸுஹ்ரவாடியிலிருந்து ஆரம்பித்து பிற ஸுஹ்ரவாடிகள், நக்ஷ்பந்திகள், குப்ரவிகள், கத்ரிகள்… என பலப்பல ஸூஃபி , 15-16ஆம் நூற்றாண்டின் மீர் ஷம்ஸுத்தீன் அரக்கி.  எனும் கொடுங்கொலைக்கார ஸூஃபி, கொத்துகொத்தாக கஷ்மீர் பண்டிட்டுகளையும் பிற ஹிந்துக்களையும் அழித்தொழித்த ஆசாமி உட்பட அவர்கள் இடித்த எண்ணிறந்த ஹிந்து கோவில்கள் உட்பட…

இந்த 1990+ வருடங்களில் ஏழாவது முறையாக (காங்க்ரெஸ், நேஷனல் கான்ஃபெரன்ஸ் காரணமாக – முக்கியமாக ஃபரூக் அப்துல்லாஹ் சமயம்) நிகழ்ந்த பண்டிட் அழித்தொழித்தல்கள், துரத்தியடிக்கப் பட்ட விஷயங்களைப் பற்றி மட்டும் தான் பேசப்போகிறேன் – மாறாக அதற்கு முன் நடந்த, கீழ்கண்ட ஆறு  அதிகோர அழித்தொழித்தல்/விரட்டப்படல் அலைகள் பற்றி விலாவாரியாகச் சொல்லப்போவதில்லை.

அலை1. மீர் மொஹம்மத் ஹம்தானி எனும் ஸூஃபி + ஸிகந்தர் ஷா ‘புஷ்டிகான்’ எனும் கஷ்மீர் பகுதி அரசன் (1389–1413) – இந்த புஷ்டிகான் என பெயர் வந்ததே, அந்த அரசனுடைய சிலையுடைப்பு, கோவில்தகர்ப்பு, ஹிந்துகள் அழித்தொழிப்பு காரணமாகத்தான். இதற்கு குரு, காரணகர்த்தா – இந்த ஸூஃபி வெறியன்.

அவனுக்கு உதவியவன் அண்மையில் மதம்மாறி சுயவெறுப்பில் இருந்த  ஸுஹா பட்டா எனும் ஸைய்ஃப் -உத்-தீன். இவர்கள் மூவர் அணியும் ஜிஹாதிமுஸ்லீம் படையும் சேர்ந்து செய்த அட்டூழியங்களுக்கு ஒரு கணக்கு வழக்கே இல்லை; இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு…

…ஒரு கட்டத்தில் கஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டது: ‘இஸ்லாமியனாக மாறு, அல்லது எங்கள் வாளால் தலைசீவப்படு.’ விளைவு: பல்லாயிரக் கணக்கான ஹிந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டார்கள் – ஒரு சமயம், கொல்லப்பட்ட இவர்களிடமிருந்து அறுத்து எடுக்கப்பட்ட பூணூல் (ஜன்யூ, யக்ஞோபவீதம், ஜக்னோபெய்ட்) 37 கிலோக்ராம் எடை. இதன் கணக்கு: ஒரு பூணுலின் எடை சுமார் 6-7 க்ராம் – ஆக, இந்தக் கொத்தில் மட்டுமே, சுமார் 6000 ஹிந்து பண்டிட்டுகள் தலை சீவப் பட்டிருக்கிறார்கள். மாஷால்லாஹ்!

(கொசுறுச் செய்தி: இதே விஷயத்தை ‘முகலாயப் பேரரசன் அக்பர்’ சிதோர்கட் கோட்டை முற்றுகையில் ஆண்டில், தோற்ற ஹிந்துக்களுக்குச் செய்தபோது, இப்படி வெட்டியெடுத்த பூணூலின் எடை ஒரு கணக்கின்படி, சுமார் 200 கிலோ! வெறும் 30, 000+ ஹிந்துக்கள் மட்டுமே ஹலால் முறையில் தலை சீவப்பட்டனர். அல்லாஹூ அக்பர்!)

அலை2. மீர் ஷம்ஸுத்தீன் அரக்கி & இரண்டாம் ஃபடேஹ் ஷா (1505–1514) – இந்த ஸூஃபியும் அரசனும் சேர்ந்து செய்த அட்டூழியங்களுக்குக் கணக்கே இல்லை.

அலை3. இஃப்திகர் கான் அஹெம்மத், ஔரங்ஸெப் காலத்தில் (1658-1707) கஷ்மீர் கவர்னராக இருந்த சமயம் – அந்த ஆள் செய்த ஹிந்துக்களுக்கு எதிரான அயோக்கியத் தனங்களுக்கும் வரம்பே இருந்திருக்கவில்லை.

அலை4. அஹ்மெத் ஷா அப்தாலி (1748 முதல் 1767 வரை) – இந்த  ஆஃப்கனிய துர்ரானி வெறியன், எட்டுமுறை கஷ்மீரை, அது வளரவளர ஒழித்துக் கட்டினான்; ஹிந்துக்களாகிய குஃபர்களை அழித்து, அவர்களது கலாச்சாரத்தை படுபயங்கரமாக பாழ்படுத்தினான்.

அலை5. காலனிய ப்ரிட்டிஷ் அரசாங்க  காலம் (ஜூலை 13, 1931 ஹிந்துக்களுக்கு எதிராக ‘இஸ்லாமிய அவமதிப்பு’ எனும் பெயரில் ஆரம்பித்து, வெறுப்புத்தீ பரவியது) – இந்த கஷ்மீரி ஹிந்து ஒழிப்பு விஷயத்திலிருந்துதான் ஷேக் அப்துல்லா ஒரு பெருந்தலைவரானார்.

அலை6. காங்கிரஸ்-ஷேக் அப்துல்லா சமயத்தில் தொடர்ச்சியாக, விதம்விதமாக நடந்த  வன்முறை அழுத்தங்களால் கஷ்மீர் பண்டிட்களின் சிதறடிக்கப் படல் (1950-80)

இப்படி ஒவ்வொரு அலையிலும் கொத்துகொத்தாக கஷ்மீர் பண்டிட்டுகள், அவர்கள் ஹிந்துக்கள் எனும் காரணத்தால் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள், நாட்டைவிட்டு வெளியேறுமாறு துரத்தவும் பட்டிருக்கிறார்கள், பலர் தப்பித்தும் வந்திருக்கிறார்கள்.. (ஆனால் இணையத்தின் ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா வகைகளில் இவ்விஷயங்கள் பற்றி… மூச்!)

இவை வெறும் கொலைகள், கற்பழிப்புகள் அல்ல – மாறாக, முழுமையான கலாச்சார ஒழிப்புகள்கூட! ஆனால் இவற்றைப் பற்றி விஸ்தாரமாகப் பேசப் போவதில்லை.

0

ஜவாஹர்லாலுக்கு முன்னர் நடந்த மோசடிகளையும், அவருக்கே உரிய அறியாமையாலும், நிர்வாகத் திறமின்மை காரணமாகவும் ஸோஷலிஸயிளிப்புகளினாலும் அவர் செய்த கூறுகெட்ட குழப்படிகளையும் + சில அசிங்கமான மோசடிகளையும், பின்னர் காங்கிரஸ் தயவில் தொடர்ந்து வளர்ந்த கஷ்மீர் குறித்த, பாரதத்தின் சோம்பேறித்தனத்தையும் பாரதவாசிகளான நம் அசட்டையையும்  ஞாபக மறதியும் பற்றியுமில்லை.

1930-40களில் ஆரம்பித்து – Uyghur/வீகுர் இஸ்லாமியர்கள் கஷ்மீருக்கு வந்து இங்கே ‘ஸெட்டில்’ ஆகி, 1949 வாக்கில் அவர்களில் ஆயிரக்கணக்கானோரை வரவேற்று அவர்களுக்குக் குடியுரிமையும் அரசுவேலை வகையறா உதவிகளையும் செய்த (அதே சமயம் கஷ்மீரத்திலேயே இருந்த பாவப்பட்டஹிந்துக்களுக்கு உதவிகூடச் செய்யாமல், அவர்களை அழித்தொழிக்க முகாந்திரம் கொடுத்த) ஷேக் அப்துல்லாக்கள் பற்றி விலாவாரியாகப் பேசப் போவதில்லை.  (இந்த வீகர்-கஷ்மீர் தொடர்புகள் குறித்த என்னுடைய ஒரு டிவிட்டர் சரம்)

இதே வீகுர்கள் இஸ்லாமிக் ஸ்டேட், அல்-கைய்தா வகையறா இஸ்லாமியக் கொலைவெறிப் படையினர்களுடன் இழைந்து பணியாற்றுகிறார்கள் – இதனால் நம்மூர் வீகுர்கள் பாரதத்துக்கு அளிக்கப் போகும் பிரச்சினைகள் பற்றியும் நான் கவலைப் படவில்லை.

0

ஆதிஷ்-இ-சினார் (ஷேக் மொஹெம்மத் அப்துல்லாவின் உர்தூ சுயசரிதை (1986), ஆங்கிலமாக்கம்: குஷ்வந்த் சிங் (1993), அலி மொஹம்மத் பப்ளிஷர்ஸ்)  புத்தகத்திலிருந்து சில ‘சுவையான பகுதி’களைத் தந்துவிட்டு அகல்கிறேன்; இதில் பல பகுதிகள் அப்பட்டமாகவே இஸ்லாமிய வெறி, சில பக்கங்கள் அப்படியில்லாமல் வேறு விதமான வெறி, அல்லது மதச்சார்பின்மையுடன் முட்டுக்கொடுக்க  பண்டிட்டுகளை நக்கலாகப் புகழ்தல் – அவ்வளவுதான்:

கஷ்மீர் பண்டிட்டுகள் எப்போதுமே, ஒரு பழைய கஷ்மீர் பழமொழிக்கு ஏற்பவே நடந்துகொள்வார்கள்:

‘when Dhars thrive Kashmir declines’  

…என எழுதுகிறார்.

… இதனை ‘பண்டிட் தழைத்தால், கஷ்மீர் வீழும்’ என ஒருமாதிரி புரிந்துகொள்ளலாம். (அல்லது தமிழகத்தில் இதே போல, ‘தமிழ்/தமிழகம்/திராவிடம் வீழ்ந்தால்தான் பாப்பானுக்கு மகிழ்ச்சி’  + ‘தமிழ் வளர்ந்தா அவாளுக்குப் பொறுக்காதே!’ + ‘பாப்பானையும் பாம்பையும் பாத்தா, மொதல்ல பாப்பான அடி…’ + ‘ஒரு பாப்பானுக்கு ஒரு  [நம்மாளு?] செத்தாலும் நூத்துக்கு மூணுபேர் தான் நாம்ப சாவணும்…‘ ஈவெரா ‘பெரியார்’ பகர்ந்த பொன்மொழி + ‘தமிழகத்தில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரையிலே… நூற்றுக்கு மூன்று பேராக… நிலையில் இருக்கக்கூடியவர்கள்… தங்கள் வேஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் என்றைக்கும் இருந்தது கிடையாது…‘   (முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மேலான கருத்து) … போன்ற திராவிடப் பரப்புரைகள் உபயோகப் படுத்தப் பட்ட விதங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்; என்ன, இதுவரை திராவிடர்களிடம் துப்பாக்கி இல்லை என்பது ஆசுவாசமளிக்கலாம்.)

வரலாறு முழுவதும் நெடுக, ஹிந்து பண்டிட்டுகள் கஷ்மீரின், இஸ்லாமியர்களின் முதுகில் குத்தியவர்கள் + எதிரிகளுக்கு உதவியவர்கள் + சுய ஆதாயம் என்றால் எந்த வித கீழ்மையும் செய்பவர்கள் எனப் பல விதங்களில் சொல்கிறார் – இந்த ஷேக் அப்துல்லா:

The Mughal rulers of India won over the loyalty of the Kashmiri Pandits and used them as informers and spies against the Muslim nobility…

~முகலாய மன்னர்கள், கஷ்மீரி பண்டிட்களின் ராஜவிசுவாசத்தைப் பெற்றதனால் அவர்களை ஒற்றர்களாகவும் புல்லுருவிகளாகவும் கஷ்மீர் முஸ்லீம் பெருந்தகைகளுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள்.

The Afghan period in the eighteenth century, (the Afghans invaded Kashmir under Ahmed Shah Durrani in 1753) was the darkest in the history of Kashmir. As usual, the Kashmiri Pandits sided with the oppressive rulers.

~ பதினெட்டாம் நூற்றாண்டில் ஆஃப்கனியர்களின் படையெடுப்பால் நடந்த போர், கஷ்மீர் வரலாற்றில, மிக மோசமான ஒன்று; வழக்கம் போலவே, கஷ்மீரி பண்டிட்டுகள் கொடுங்கோலர்களுடன் கை கோர்த்துக் கொண்டனர்…

They invited Maharaja Ranjit Singh, the ruler of Punjab, who invaded Kashmir, and annexed it to his kingdom.

~கஷ்மீரி பண்டிட்டுகள், பஞ்சாப் மஹாராஜா ரஞ்சித் சிங்கை வரவழைத்து, அவர் கஷ்மீரின் மீது தாக்குதல் நடத்தி அதனை அவருடைய ராஜ்ஜியத்துடன் இணைக்க ஏதுவாக இருந்தார்கள்!

After the downfall of the Sikhs, the Kashmiri Pandits sided with the Raja of Jammu, Gulab Singh and were richly rewarded by him…

~ஸீக்கியர்கள் வீழ்ந்தபின் கஷ்மீரி பண்டிட்டுகள் ஜம்மு அரசர் குலாப்ஸிங்குடன் கைகோர்த்துக்கொண்டதால், அவர்களுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைத்தன.

…இப்படியே இரண்டு மூன்று பக்கங்களுக்குத் தொடர்ந்தும் பிற பக்கங்களில் இஸ்லாம்சார் வெறுப்பியத்தை அள்ளித் தெளித்துக்கொண்டே, வரலாற்றுச் சார்போ தரவோ ஒன்றுமே இல்லாமல் எழுதிக்கொண்டே போகிறார், ஷேக் அப்துல்லா. அவருடைய பொய்ப் பரப்புரைக்கு மாறாக, நிகழ்ந்தவை எல்லாம், கஷ்மீர் பண்டிட்களுக்கு எதிரான அடக்குமுறைகளே! அவற்றைத் துப்புரவாகவே வெள்ளையடிப்பு செய்வதற்கு அப்பாற்பட்டு, இஸ்லாமியக் கொடூரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டவர்களையே அதற்காகக் காரணம் சொல்கிறார்!

0

ஷேக் அப்துல்லா + ஜவாஹர்லால் நேரு சேர்ந்து வைத்த விதம்விதமான தீப்பந்தங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பேசப்போவதில்லை – மாறாக சில விஷயங்களைப் பற்றி மட்டும் மேலோட்டமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறேன்.

அக்டோபர் 1947ல், பாகிஸ்தானில் இருந்து அதனுடைய ராணுவமும், பிற முஸ்லீம் வெறியர்களும் ஒன்று திரண்டு கஷ்மீரை ஆக்கிரமிக்க வந்தபோது அப்போதிருந்த கஷ்மீர் மஹாராஜா ஹரிஸிங், தன்னுடைய ராணுவத்தின் முக்கியமான பிரிவு ஒன்றை அவர்களை எதிர்கொள்ள அனுப்பினார்; என்ன நடந்தது? அந்த, பெரும்பாலும் முஸ்லீம்கள் வியாபித்திருந்த கஷ்மீர் ராணுவம், அவர்களுடனே கூட இருந்த ஹிந்துக்களை இஸ்லாமின் பெயரால் கொன்றுவிட்டு, தங்கள் தளவாடங்களுடன் பாகிஸ்தானின் படைகளுடன் ஐக்கியமாயினர். பின்னர் கஷ்மீர் மன்னரின் டோக்ரா-ஹிந்து படைவீரர்கள்தாம் இப்போது பாரதவசமிருக்கும் கஷ்மீர் பகுதிகளை, பாரதப் படைகள் வரும் வரை காத்தனர்… இதன் விவரணைகளை நான் பகிரப் போவதில்லை.

காங்கிரஸும் நேஷனல் கான்ஃபரன்ஸும் (ஷேக் அப்துல்லா கட்சி) செய்த குழப்படிகளாலும், குடுமிப்பிடிச் சண்டைகளாலும், சாச்சா நேருவின் நிர்வாகத் திறமையின்மையாலும் – 1953ல் ஷேக் அப்துல்லா கவிழ்ந்து – பக்க்ஷி, ஸாதிக் & மீர் மொஹம்மத் காஸிம் போன்றோர் (காங்கிரஸ் ஆசியுடன்) அமர்ந்ததிலிருந்து மேலதிகமாக இஸ்லாமியமயமாயிற்று கஷ்மீர். ஷேக் அப்துல்லா ஏற்கனவே அலமாரி ஜிஹாதி (closet jihadi) – ஆனால் இப்போது நேரடியாக கோதாவுக்கு வந்தார்.

1953 வாக்கில் ஷேக் அப்துல்லா, இந்திய தேசிய காங்க்ரெஸ் கட்சியை, ஒரு ;காஃபிர் (முஸ்லீம்களல்லாதவர்களைக் கொண்ட) கட்சி என்று சொன்னதைப் பற்றியோ அதற்கு ஓட்டுப் போடக்கூடாது என ஒரு மத ‘ஃபத்வா’ கொடுத்ததையோ, 1977ல் ஜனதாபார்ட்டி ஜனஸங்கம் எல்லாம் காஃபிர்களின் கட்சிகள் என்றதையோ, தன் நேஷனல்கான்ஃபரன்ஸ் கட்சி உறுப்பினர்கள் கையில் கொர்-ஆன் பிரதிகளைக் கொடுத்து, அதனை எடுத்துச் சென்று, முஸ்லீம்களெல்லாம் கண்டிப்பாக, காஃபிர் கட்சிக்கு ஓட்டுப்போடாமல் தம் கட்சிக்குத் தான் ஓட்டுப் போடவேண்டும், என ‘வாக்கு சேகரித்ததையோ’ விலாவாரியாகச் சொல்லவில்லை.

முதலாவதாகப் பெரிய அளவில், அமைப்பு ரீதியாகச் செயற்படுத்தப்பட்ட (~1976) அமானுல்லா கான் எனும் ஜிஹாதியின் ஜேகேஎல்எஃப் (JKLF – Jammu & Kashmir Liberation Front) வன்முறை கும்பல் எப்படி யாரால் முட்டுக்கொடுக்கப் பட்டது, அதன் நிதி வசதிகள், ஆயுதங்கள், அதற்கு எப்படியெல்லாம் கஷ்மீர் முஸ்லீம் தலைவர்கள் உதவினார்கள் என எதையும் சொல்லவில்லை. (ஆனால், இதற்கும் கஷ்மீர் பண்டிட்டுகளே காரணம் என நம் NDTV காரர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை!)

1977-82 வாக்கில் இதே ஷேக் அப்துல்லா 800+ கிராமங்களின் பெயர்களை, அவற்றின் ஹிந்துமதச் சார்பை மாற்றி, இஸ்லாமியமயமாக்கினார். (இந்த எண்ணிக்கையை சிலர் 2500 எனச் சொல்கிறார்கள் – அவர்களுடைய கணக்குகளின் விவரங்களைப் பார்த்தால், சர்வ நிச்சயமாக இது 2000க்கு மேலேதான் இருக்கும் எனப் படுகிறது) – இதன் காரணகாரியங்களைப் பற்றிப் பேசப்போவதில்லை. 100% ஹிந்துக்கள் இருந்த கிராமங்கள் பெயர்களைக் கூட மாற்றினார்கள் – இதற்கான காரணங்களையும் தான்!

கஷ்மீரி ஹிந்துக்கள் (முக்கியமாக பண்டிட்டுகள்) அனைவரையும் ‘பாரத் கே முக்பிர்‘ – பாரதத்தின் கைக்கூலிகள் (அல்லது ஏஜெண்டுகள்) எனத் தொடர்ந்து அழைத்துக் கேவலப்படுத்தி, இதனால் முஸ்லீம்களையும் உசுப்பிவிட்ட ஷேக் அப்துல்லா பற்றிப் பேசப்போவதில்லை.

ஷேக் அப்துல்லா 1982ல் இறந்தபின் அவருடைய, லண்டன் டாக்டர் மகன், ஒரு சுக்கு அரசியல்/நிர்வாக அனுபவமுமற்ற ஃபரூக் அப்துல்லா (நம் ராஜீவ் காந்தியைப் போலவே!) கஷ்மீர் தலைவராக இறக்குமதி செய்யப் பட்டு கஷ்மீர் முதலையமைச்சார் ஆகிறார்; ஊழல் + ஜிஹாதி வன்முறை. காங்கிரஸ் ஆசியுடன். 1984 வாக்கில் அவருடைய சகோதரியின் கணவர் குலாம் மொஹம்மத் ‘ஜி எம்’ ஷா. ஃபரூக்கைக் கவிழ்த்திவிட்டு முதலையமைச்சர். 1986ல் வருடாவருடம் கக்ஷ்மீர் நிகழ்வுகளைப் போலவே ஜிஹாதி கொலைக்கொடூரங்கள் நடந்தபின் அவர் பதவியிறக்கம் செய்யப் படுகிறார். பின்னர் மறுபடியும் ஃபரூக் முதலையமைச்சர், 1987ல் தேர்தல் வெற்றியும் அவருக்கு…

அதாவது: ஃபரூக் அப்துல்லா, அவருடைய மாமாமச்சான் முறை ஜிஎம் ஷா, இவர்களுக்கிடைய குடுமிப்பிடிச் சண்டை – இதில் காங்கிரஸ் கலந்துகொண்டு மாறிமாறி ஆதரித்துக் குட்டையைக் குழப்பியது, அவர்கள் இருவருமே ஜிஹாதிகளானாலும், காங்கிரஸ் ஒருசமயம் ஆதரிக்காத நபர், காங்கிரஸை ‘ஹிந்து/பாரத ஏஜெண்ட்’ எனச் சொல்லி அவருடைய ஆதரவு முஸ்லீம்களுக்கு வெறுப்பு ஊட்டியதைப் பற்றி, தாண்டிச் செல்கிறேன்.

1982ல் முஸ்லீம்களை, பாரத அரசுக்கு எதிராக உசுப்பிவிடுவதற்காக ஃபரூக் அப்துல்லா – ‘ரீஸெட்டில்மெண்ட் பில்’ ஒன்றை கஷ்மீர் அஸ்ஸெம்ப்ளியில் கொணர்ந்தது – அதன் மூலமாக பாகிஸ்தானுக்குச் சென்ற கஷ்மீரி முஸ்லீம்களுக்கு அவர்கள் திரும்பிவந்தால் உடனடியாக பாரதக் குடியுரிமை வழங்கப்பட என அறிவிப்பு செய்தது – இதை, பாரத அரசுக்கு ஒப்புதல் இருக்காது என நன்றாகத் தெரிந்தே செய்தது, பாரத அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் ‘பாரதம் முஸ்லீம்களை வஞ்சிக்கிறது’ எனப் பரப்புரை செய்தது குறித்து ஒன்றும் பெரிதாக எழுதப் போவதில்லை.

0

குலாம் மொஹம்மத் ‘ஜி எம்’ ஷா வதந்தி பரப்பல்: ராஜராஜசோழனுக்கு மட்டும் தான் கட்டிய கோவிலுக்கு ராஜராஜேச்சுரம் எனப் பெயர் வைக்கமுடியுமா – கஷ்மீர் முஸ்லீம் ஒருவரும் அப்படிச் செய்யக் கூடாதா?

இப்படியாகத்தானே 1984ல் ஜிஎம்ஷா பதவிக்கு வந்த இரண்டாம் வருடத்தில் (ஃபெப்ருவரி, 1986) ஜம்மு நகரில் இருந்த சட்டமன்ற நிலப்பரப்பில் இருந்த பழமையான ஹிந்து-சிவன் கோவில் வளாகத்திலிலேயே தம் பெயரில் ‘ஷா மாஸ்க்’ எனும் மஸூதியைக் கட்ட விழைந்தார்?

குல் ஷாவின் இந்த ஆக்கிரமிப்பு, ஜம்மு ஹிந்துக்களால் பெரிய அளவில் எதிர்க்கப் பட்டவுடன், அவர்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்த பின்னர், அவர் ஜகா வாங்கினார் – பதிலுக்கு ஒன்றுமே பேசவில்லை.

ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் ஸ்ரீநகருக்குத் திரும்பியவுடன் அறிவித்தார், ஜம்முவில் ஹிந்துக்களால் பிரச்சினை, “இஸ்லாம் கத்ரே மே ஹை!’ – இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது.

பொறுப்பான ஒரு பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சர் (இத்தனைக்கும், அவர் எனக்குத் தெரிந்து திராவிடர் அல்லர்!) இப்படிச் சொன்னவுடன் ஆரம்பித்தனவே கஷ்மீரி பண்டிட்டுகளில் பெரும்படுகொலைகள், கடையெறிப்புகள், கோயில்கள் இடிக்கப்படுதல்++…

முஸ்லீம் ஜிஹாதிகள் கோரதாண்டவம் ஆடினர். ஏனெனில், இல்லாவிட்டால் இஸ்லாம் ஆபத்தைச் சந்திக்குமன்றோ?

ஆனால், நான் – ஃபெப்ருவரி-மார்ச் 1986ல் கஷ்மீர் ஹிந்துக்களுக்கு எதிரான இந்தப் பெரும் முஸ்லீம் கலகத்தையும் கண்டு கொள்ளவில்லை. அதற்குப் பிறகு குல் ஷாவின் அரசு கலைக்கப் பட்டதையும்தான்!

0

1987ல், முக்கியமாக அனந்த்நாக் பகுதியில் நடந்த கஷ்மீரி ஹிந்து அழித்தொழிப்பு பற்றியும் ஒன்றும் எழுதப் போவதில்லை.

ஜூலை->டிஸெம்பர் 1989 காலங்களில் சிறையில் இருந்த பலப்பல, கொடுங்குற்றங்கள் (கொலைகள், கொள்ளை, கற்பழிப்புகள்) செய்ததற்காக தண்டிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை (சுமார் 70) , விடுதலை செய்த ஃபரூக் அப்துல்லா பற்றியும் பேசப் போவதில்லை.

1989 டிஸெம்பர் 8 வாக்கில், முஃப்தி மொஹம்மத் ஸய்யீத் (இவர் அப்போதைய காங்கிரஸ் விஷ்வனாத் ப்ரதாப் ‘விபி’ ஸிங் + மத்திய அரசவையில் ஹோம்/உள்நாட்டுத்துறை அமைச்சர்) மகள் ரூபியா ஸைய்யீத் கடத்தப் பட்டு (இது அப்பட்டமான நாடகம்), பணயக் கைதிகளாக ஐந்து கொடும் ஜேகேஎல்எஃப் தீவிரவாதிகள் விடுதலை செய்யப் பட்டதையும், அதனால் முக்கியமான ஜிஹாதி தலைமையானது இஸ்லாமியத்தீவிரவாதிகளுக்குக் கிடைத்ததையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. (ஆனால், முஃப்தி மொஹம்மத் ஸய்யீத் தன் எதிரியானதால், இந்தக் கைதிகள் விடுதலையை ஃபரூக் அப்துல்லா எதிர்த்தார்!)

1988-89 வாக்கிலேயே நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தபோது, அவருடைய அமைச்சர்களும் & சகாக்களும், ராணுவத்தை அங்கு அனுப்பினால் நிலைமை சீராகும் என்று கருதியபோது – அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, மிகத் தெளிவாகச் சொன்னார், “ஃபரூக் அப்துல்லா என் அத்யந்த நண்பர், ராணுவத்தை அனுப்பி, எப்படி அவரை நான் அதிருப்தி படுத்தக்கூடும்?” இதன் பின்புல அவலத்தைப் பற்றியும் விவரமாக எழுதப் போவதில்லை.

1980களின் கடைசியில், கஷ்மீரில் – பெருமளவில் பாகிஸ்தானிய ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது. பெரும்பாலான முஸ்லீம் கடைகளில் பாரத நாணயம் ஒப்புக்கொள்ளப் படவில்லை. இது தொடர்பாக, பாரத ரூபாயைக் கடைக்காரர்களுக்குக் கொடுத்த கஷ்மீர் பண்டிட்டுகளின் கதியை (பொருளாதார ரீதியாக மட்டுமில்லை) நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

பாகிஸ்தான் நேரம், பாரத நேரத்திலிற்கு அரைமணி நேரம் பின்னால் இருப்பது என்பது உண்மை – இந்த விஷயம் இஸ்லாமிய ஜிஹாதிகளால் கஷ்மீரில் வலியுறுத்தப் பட்ட்தும் உண்மை; ஆனால் எந்தவொரு கஷ்மீர் பண்டிட்/ஹிந்துவும் அசந்துபோய் தன் கைக்கடிகாரத்தில் பாரத நேரம் காட்டும் படிக்கு வைத்திருந்தாலும் அவருடைய கதி 1990க்கு முன்னர் என்னானது என்பது பற்றியும் பேசப் போவதில்லை.

பாரத் மாதா கீ ஜெய் என முழக்கமிட்டவர் நாக்கை இழுத்து அறுத்தல் போன்ற பல விஷயங்கள் அக்கால 1990க்கு முந்தைய கஷ்மீரில் நடந்தன – அவற்றைப் பற்றியும் எழுதப்போவதில்லை – அந்த முழக்கத்துக்காக மட்டுமே கொல்லப்பட்டவர்கள் பற்றியும்தான். (அதே சமயம், நாளுக்கு ஐந்துமுறையாவது ‘அல்லாஹ் தான் உயர்ந்த, ஒரே கடவுள், மற்றதெல்லாம் குப்பை’  என்கிற ரீதியில் மஸூதிகளிலிருந்து ஆஸான்/அதான் அறைகூவப்படும்போது, யாரும் ‘பாங்கு ஓதுபவரின்’ நாக்கை அறுத்ததாகவே தெரியவில்லை!  என்ன ஆச்சரியம்!)

அதுவரை குட்டிக்குட்டி இஸ்லாமிய வெறியர் அணிகளை ஆதரித்த பாகிஸ்தான், 1989ல் அல்லாஹ் சுழி போட்டு ஆரம்பித்து, கடும் பயிற்சியும் நிதியும் ஆயுத தளவாடங்களும் கொடுத்து இந்தியாமேல் ஏவிய ஹிஸ்புல்-முஜாஹித்தீன் (HM) இஸ்லாமிய பயங்கரவாதிகள் எப்படி உருவானார்கள் என்பதையும் நான் பேசப் போவதில்லை. இதே வழியில் பிற 100+ ஜிஹாதி கஷ்மீர்/பாகிஸ்தான் முஸ்லீம் கும்பல்கள், ஹர்கத்-உல்-அன்ஸர் (HuA) உள்ளிட்ட ஆஃப்கனிய கொலைகார கும்பல்கள் உருவாக்கி உந்தப்பட்டதையும்தான்… இஸ்லாமிய வெறிக்கு, இவை நேரடியாகவே தீனிபோட்ட விஷயத்தின் விவரணைகளைச் சொல்லவில்லை.

அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் (ஹிந்து-முஸ்லீம்) பாடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகத்தான பணிகளைப் பற்றிச் சொல்லவரவில்லை. ஷேக் அப்துல்லாவின் முகாந்திரமேயற்ற அப்பட்டமான பொய்மைகளை, கேவலப் பரப்புரைகளைப் பற்றிப் பேசவில்லை. “கஷ்மீர் அரசு, கஷ்மீரில் இருந்த ராணுவத் தளவாடங்களை, முக்கியமாகத் துப்பாக்கிகளை, ஆர்எஸ்எஸ் குண்டர்களிடம் கொடுத்திருக்கிறது. முஸ்லீம்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்!” இம்மாதிரி வாயோர நுரை தள்ளல்களினால், சாதாரண ஹிந்துக்களுக்கு எதிராக திரட்டப்பட்ட கொலைவெறி முஸ்லீம் திரள்களைப் பற்றிப் பேசப் போவதில்லை. (ஹிந்துக்கள் மீது இழைக்கப்பட்ட 1990 ஜிஹாதிமுஸ்லீம் கொடூரங்களைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புதான் முதன்மையாக 700+ புகலிடங்களை ஜம்முவில் அமைத்து, பணத்தைத் திரட்டி கஷ்மீர் ஹிந்துக்களுக்கு, பிற்காலங்களிலும் ஆதரவாக இருந்தது – இதைப் பற்றிய விவரணைகளையும், பிற அமைப்புகள் (ஆர்ய ஸமாஜ், டோக்ரா ஸமாஜ்+) உதவியதையும் எழுதப் போவதில்லை))

1989-90ல் இஸ்லாமியக் கொடூரங்கள் வெறியிலும் எண்ணிக்கையிலும் தீவிரமடைந்தன; ஆகவே 1988 வரை கூட வருடத்துக்குச் சுமார் 7,00, 000 சுற்றுலாப் பயணிகளாக வந்துகொண்டிருந்த கஷ்மீர், 1990ல் வெறும் 10,000த்துக்கு இறங்கியது; இதற்குக் காரணம், வழக்கம்போலவே ஹிந்து தீவிரவாதமா, ஆர்எஸ்எஸ்ஸா, அல்லது இது கஷ்மீர் பண்டிட்டுகளின் சதி காரணமாகவே என்பவற்றை உங்களுடைய ஊகத்துக்கு விட்டுவிட்டு அகல்கிறேன்.

ஜேகேஎல்எஃப் வெளியிட்ட கஷ்மீர் பண்டிட்டுகளுக்கான மிரட்டல்:

~~ உங்களை நாங்கள் பயமுறுத்தவில்லை. ஆனால் அல்லாவின் சொத்தான இந்த நிலம் முஸ்லீம்களுடையது மட்டும்தான். சீக்கியர்களும் ஹிந்துக்களும் இங்கு வாழ முடியாது. இதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளத் தவறினால், நாங்கள் உங்கள் குழந்தைகளிலிருந்து ஆரம்பிப்போம்.

இம்மாதிரி பகிரங்கமாக வந்த, தினசரிகளில் அச்சிடப் பட்ட, போஸ்டர் ஒட்டப்பட்ட விஷயங்களைப் பற்றி விவரமாகச் சொல்ல வரவில்லை…

0

ஏன் 1989 வரை அங்கு நடந்த அழிச்சாட்டியங்களை இப்போது வெறும் வரலாற்று நினைவுகளாகவே கொண்டு, விட்டு விடுகிறேன்.

1989 லோக் ஸபா தேர்தல்களுக்குப் பின் 2, டிஸெம்பர் 1989 அன்றுதான், விஷ்வநாத் ப்ரதாப் ‘விபி ஸிங்’  பாரதப் பிரதமர் ஆனார். இதற்கு பாரதீய ஜனதா கட்சி ஆதரவு இருந்தது. கருணாநிதி திமுகவின் ஆதரவும்தான்! அதாவது திமுக மத்திய அரசில் பங்கும் பெற்று (அவர்கள் வழமையே போல) ஊழல் பண கலெக் ஷன் செய்துகொண்டிருந்த போதுதான் – கஷ்மீரி பண்டிட் அழித்தொழிப்பு 1990 ஜனவரி இன்ஸ்டால் மெண்ட் நடந்தது. பாஜக இதற்குப் பொறுப்பு என்றால், சர்வ நிச்சயமாக கருணாநிதி திமுகவும் சரிசமப் பொறுப்புதான். (முரசொலி மாறன் அந்த அமைச்சரவையில் இருந்தார் என நினைவு…)

ஆனால் அதற்குள், மேற்கண்ட,  ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துவிட்டன ராஜீவ்காந்தியின் மௌடீகத்தாலும் ஃபரூக் அப்துல்லாவின் சூழ்ச்சியாலும், முஃப்தி ஸைய்யீதின் அயோக்கியத்தாலும் – பொதுவாகவே இஸ்லாமிய வெறித் தலைவர்களாலும் – பண்டிட்களின் அழித்தொழிப்புக்கு, விரட்டியடித்தலுக்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் போடப்பட்டிருந்தன. கஷ்மீர் போலீஸ், காவல்துறை போன்றே செயல்படவில்லை. நிர்வாகமே ஸ்தம்பித்து விட்டிருந்தது – பயந்து சுணங்கியது அல்லது கொலைகாரர்களுடன் கைகோர்த்துக் கொண்டது.

ஜக்மோஹன் திறமைவாய்ந்த அதிகாரி – அவ்வப்போது ‘கறிவேப்பிலை’ போல அவர் காங்கிரஸால்  (கஷ்மீரிலேயே கூட) உபயோகப் படுத்தப் பட்டாலும் – முன்னமே சில ஆண்டுகளுக்குக் கஷ்மீரில் பணி செய்தவராக இருந்திருந்தாலும், அவருடைய கையைக் கட்டிப்போடாமல் இருந்திருந்தால், பிரச்சினைகளை ஒரு பிடியில் கொணர்ந்திருப்பார். ஆனால் நிலைமை படுமோசமாக முற்றிய பின்னர் தான் 1990 ஜனவரி 16-17 வாக்கில் அவரை, மத்திய அரசினர் கவர்னராக நியமித்தார்கள்.

செய்யமுடிந்த அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்ட ராஜீவ்காந்தியின் நண்பர் ஃபரூக் அப்துல்லா, 18 ஜனவரி 1990 அன்று ராஜினாமா செய்துவிட்டு லண்டனுக்கு ஓடுகிறார்; அவர் காட்டிய காரணம், ‘ஜக்மோஹன் கஷ்மீர் ஆளுநராக நியமிக்கப் பட்டார்!’

ஜக்மோஹன் 19 ஜனவரி அன்று பொறுப்பேற்றுக்கொண்டு நேரடியாக ஜம்மு சென்றார் – ஏனெனில் குளிர்கால கஷ்மீர் அரசு அங்கிருந்துதான் செயற்படும் – ஸ்ரீநகரிலிருந்து அல்ல.

ஆனால், நிலை ஏற்கனவே, படுமோசமாக முற்றியிருந்தது.

சரி. 1989 இறுதி வாக்கிலிருந்து நுரைபொங்கத் தொடர்ந்த இஸ்லாமிய வெறியையும், 1990 ஜனவரி முதல் பெருங்குவியத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜிஹாதி ரத்தக் களறியையும், இன்றுவரை வீரியமிழந்திருந்தாலும் தொடரும் ஜிஹாதி இஸ்லாமையும் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

… குறிப்பாக, 1990 ஜனவரியில் நடந்த விஷயங்களில் பின்புலம், என்ன, யார், யாவை என… (கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் பின்புலத்திலும்)

4

கஷ்மீர் பண்டிட்டுகளின் மீதான இஸ்லாமியக் கொலைவெறியின் 1990 வருடத்திய எடிஷனின் பரிமாணம் எப்படி இருந்திருக்கிறது – என்பதைச் சில புள்ளி விவரங்களுடனும் விவரணைகளுடனும் அனுமானங்களுடனும் பார்க்கலாம்.

ஏனெனில், அரசு ரீதியாக, முழுமையாகவே இருட்டடிப்பு செய்யப்பட்ட விஷயம் இது.

ஊடகப் பேடிகளின் கள்ளமௌனம் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

(நடந்தவை எல்லாம் இரக்கமற்ற தொடர் கொத்துக் கொத்தாக அரங்கேற்றப்பட்ட படுகொலைகளா, அல்லது படுபயங்கர ஜினோஸைட் (கலாச்சார, மானுட, வாழ்வாதார ஒழிப்பு) என்பதா – என மயிர் பிளக்கும் விவாதங்களில் ஈடுபடவேண்டிய அவசியமேயில்லை – விவரங்களை உள்வாங்கினாலே அதெல்லாம் தெளிவுபடும்)

  • ஆவணபூர்வமாகவே இது ஏழாம் துரத்தியடித்தல்/’புலம் பெயர்தல்’ –  பலர் நினைப்பது போல இது திடுதிப்பென்று 1990ல் ஏற்படவில்லை; கடந்த பல நூற்றாண்டுகளாகவே (அயோக்கிய ‘மெய்ஞான’ ஸூஃபிகள், அல்லாஹ் சுழி போட்டு ஆரம்பித்த அட்டூழியமிது!) இது தொடர்ச்சியாகச் செவ்வனே நடந்து வருகிறது.
  • துரத்தியடிக்கப் பட்டவர்கள் – சுமார் 4-7 லட்சம் பண்டிட்டுகள் – பல காத்திரமான கணக்கெடுப்புகளின் படி, இது சுமார்  6 லட்சத்தில் இருக்கிறது
  • அதாவது ஆறு லட்சம் சோகக் கதைகள்… (படத்தில் நான்கு குடும்ப நிகழ்வுகளின் சோகங்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்)
  • சிலர் 3 லட்சம் எனவும் சொல்கிறார்கள். நான் மதிக்கும் பெரியவர்கள், சென்ற 4 மாமாங்கங்களாக கஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை அவதானிப்பவர்கள் + அவர்களுக்குக் காத்திரமான உதவியும் செய்பவர்கள், இந்த எண்ணிக்கையைக் குறைந்த பட்சம் 6 லட்சம் என்கிறார்கள். எது எப்படியோ – மிகக்குறைந்த பட்சம், இது 2.50 லட்சமாக இருக்கலாம். அதிக பட்சம் 7.
  • குறைந்த பட்சம் 2500 – 4000  கஷ்மீரி பண்டிட்டுகள்,  ஜிஹாதிகளால் படுகொலை செய்யப் பட்டனர். (இவற்றில் சுமார் 23 மட்டுமே, படத்தில் ஒருமாதிரி காட்டப்பட்டிருக்கின்றன)
  • 32,000த்துக்கும் மேற்பட்ட கஷ்மீரி பண்டிட் வீடுகள் எரியூட்டப் பட்டன. (படத்தில் இரண்டு மூன்று தீப்பந்தங்கள் பண்டிட் வீடுகளில் வீசியெறியப் பட்டதைக் காண்பித்தார்கள், அவ்வளவுதான்)
  • 13000+ வீடுகள் அப்படியே, அவற்றிலிருந்த அனைத்துப் பொருட்களுடன் முஸ்லீம் ரவுடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. (இதில் ஒன்றைக் கூடப் படத்தில் காண்பிக்கவில்லை – மாறாக, பண்டிட் புஷ்கர்நாத் வீடு ஏறத்தாழ அப்படியே 20-30 ஆண்டுகளுக்குப் பின் இருக்கிறது! வெறுமனே, அவர்கள் வீட்டுக் கோவில் மாடத்தில் இருந்த சிவலிங்கத்தைக் கீழே தட்டிவிட்டிருப்பதாகக் கதை!)
  • பண்டிட் குழந்தைகள் செல்லும் பள்ளிக்கூடங்கள், 1000+ எரியூட்டப் பட்டன. (படத்தில் இது ஒன்றையும் காண்பிக்கவில்லை)
  • 3000+ கஷ்மீர் பண்டிட் கடைகள்  எரிக்கப் பட்டன அல்லது சூறையாடப் பட்டன – இவற்றில் பெரும்பாலானவை சிறு பெட்டிக் கடைகள், அன்றாடங் காய்ச்சி ரீதியில் நடத்தப் பட்டவை. (படத்தில் இது ஒன்றையும் காண்பிக்கவில்லை)
  • ஹிந்து கோயில்கள் 500+ – சுத்தமாக இடித்தொழிக்க்ப் பட்டன. (படத்தில் இது ஒன்றையும் காண்பிக்கவில்லை)
  • மேலதிகமாகச் சுமார் 50+ கோயில்கள், மஸூதிகளாக மடைமாற்றம் செய்யப்பட்டன. (இதனையும் படத்தில் காண்பிக்கவில்லை)
  • இந்தியாவிலேயே உள் நாட்டு(!) அகதிகளாக இருக்கும் பண்டிட்டுகள், சுமார் 3.5 – 4.5 லட்சம் பேர். அடிப்படையிலேயே புத்திகூர்மையும், சஹிப்புத்தன்மையும் (விதிவிலக்குகளாக இருந்த/இருக்கும் சாச்சா நேரு குடும்பத்தினரை நாம் அறிவோம்), மாளா உழைப்பைத் தரும் மக்கள் திரளானதால் , பலர் மறுபடியும் பெரிய பதவிகளுக்கு வந்தனர். சிலபலர் வேலைவாய்ப்புகளைத் தேடி வெளி நாடுகளுக்குச் சென்றனர். பாவப்பட்ட பலர் இன்னமும் அகதிவளாகங்களில் இருக்கின்றனர்.
  • முகாம்களில் 1991க்குள்ளாகவே, 6000த்துக்கும் மேற்பட்ட இறப்புகள்  – பாம்புக் கடியினாலும், காலராவாலும் ஏற்பட்டன.
  • கீழ்கண்ட கொடூரங்கள் நடந்தேறின: (இஸ்லாமிய வெறியர்கள் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமா நஞ்சமா?)
    • கஷ்மீர் பண்டிட் முக்கியஸ்தர்களையும் ஹிந்து தலைவர்களையும் குறி வைத்துக் கொலை செய்து – காத்திரமான தலைமை இல்லாமல் செய்தது.
    • கொத்துக் கொத்தாக, குடும்பம் குடும்பமாகக் கொலை செய்தது.
    • முஸ்லீம் பக்கத்து வீட்டுக் காரர்களால், சுட்டப்பட்டு – ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட பண்டிட்டுகள்
    • அபயம் கொடுக்கிறேன் எனச் சொல்லி ஏமாற்றப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பண்டிட்டுகள்
    • அபகரிக்கப்பட்டு மதமாற்றம் செய்து சீரழிக்கப்பட்ட பண்டிட் இளம்பெண்கள்
    • தகப்பனுக்கும் தாய்க்கும் எதிரில் அவர்களுடைய பெண்குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணரப்பட்டது
    • கணவனுக்கு எதிரில் கும்பல்கும்பலாக மனைவி கற்பழிக்கப் படுவது; அச்சமயம், அவன் கண்ணை மூடவிடாமல் செய்வது.
    • மனைவிக்கு எதிரில் கணவனைச் சித்திரவதை செய்து கொல்வது
    • நகங்களைப் பிடுங்கிச் சித்திரவதை செய்யப்பட்டு – உடலெல்லாம் எரிசிகரெட்டால் தீக்காய்ச்சுவது
    • உயிருடன் இருக்கும்போதே தோலுரிப்பது
    • கண்களை நோண்டுவது
    • ஆண்குறிகளை அறுப்பது
    • அறுத்த ஆண்குறிகளையும் கொட்டைகளையும் அறுக்கப்பட்டவர்களின் வாயில் திணிப்பது
    • ஹலால் வகையில் (அண்மையில் பகிரங்கமாக இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கி ஜிஹாதிகள் செய்ததைப் போல) அல்லாஹூஅக்பர் (‘அல்லாஹ் தான் முதன்மையானவர்’) கூக்குரலுடன் கழுத்தை அறுத்தல்
    • சாலையோர மரங்களில் தூக்கில் போடுவது
    • பெண்குறிகளைக் கிழிப்பது
    • அரத்தை வைத்து, உயிருடன் இருக்கும்போதே அறுப்பது
    • உயிருடன் இருக்கும்போதே துண்டுதுண்டாக உடலை வெட்டுவது
    • குற்றுயிரும் குலையுயிருமான கஷ்மீரி ஹிந்துக்கள் சாக்குக்கோணிகளில் கட்டப்பட்டு  நதியிலும் ஏரிகளிலும் விசிறியடிக்கப் பட்டது
    • உயிருடன் இருக்கும்போதே கல்லைக் கட்டி நதியில் மூழ்கடிப்பது
  • பெருமளவில் இந்த அட்டூழியங்களில் முஸ்லீம் சிறுவர்களும், பெண்மணிகளும் ஈடுபட்டது

…தொடரத் தொடர வேதனை மிகும்; இவை அனைத்துக்கும் அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருக்கின்றன..

(கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இந்த அட்டூழியங்கள் தொடர்பாக, ஒரு விஷயம் கூட ஊதிப் பெருக்கப் படவில்லை; மாறாக பலப்பலபல விஷயங்கள் குறைத்தே காட்டப்பட்டுள்ளன.

டயலாக், ஓயாத பேச்சுகள்/உரையாடல்கள், மேடைப்பேச்சு இவற்றைத் தவிர அனைத்து விஷயங்களும் நடந்தவைகளின் நீர்க்கடிக்கப்பட்ட சோகங்கள்தாம்!

படத்தில் காண்பிக்கப் பட்ட, உண்மையாகவே ஆவணபூர்வமாக நடந்த விஷயங்கள்: முஸ்லீம் பக்கத்துவீட்டு ஆள் ஒற்றுவேலை செய்து போட்டுக்கொடுத்ததால், அரிசிப் பீப்பாயில் ஒளிந்துகொண்டிருந்த பண்டிட் ஒருவர் சுட்டுத்தள்ளப்பட்டது, அவர் ரத்தத்தில் தோய்ந்த அரிசியை அவர் மனைவிக்கு வலுக்கட்டாயமாக உண்ணக் கொடுத்தது, பஸ் நிறுத்ததில் நின்ற ராணுவ வீரர்களைக் கொன்றது, நதிக்ராம் கொலைகள், அகதிமுகாம் அவலங்கள், தூக்கிலிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர், ஒரு பெண் பண்டிட் மரத் தொழிற்சாலையில் அறுக்கப் படுதல்…

இவ்வளவு மட்டுமே!)

5

1980களின் முடிவு –> 1990களின் ஆரம்பத்தில்.

…இவ்வளவெல்லாம் நடந்திருக்கின்றன. அட்டூழியங்கள், வெறுக்கத்தக்க கொடூரங்கள் தாம் இவை. ஆனாலும் நம்மில் பலர் (அச்சமயத்தில் 20+ வயதினராக இருந்தபோதும்கூட!) இதனைக் குறித்துக் கேள்வி கூடப் பட்டிருக்கவில்லை; ஏன்?

என் மனைவி ஓரளவுக்கு மேற்படிப்பு வாய்த்தவர், ஸ்டேட்ஸ்(!) கல்வித்தகுதி உட்பட்டு..பொது/லௌகீக அறிவிலும் படிப்பிலும்  சூட்டிகையாக இருப்பதிலும் . (அடியேனைப் போலல்லாமல்தான்!) அதிகம் திறம் வாய்ந்தவர். இருந்தாலும் அவருக்கு பஞ்சாப், காலிஸ்தானியர்கள் செய்த ஹிந்து-சீக்கியப் படுகொலைகள், ப்ளூஸ்டார் எல்லாம் நினைவிருக்கிறதே தவிர – சமகாலத்து கஷ்மீர் நிலவரங்கள் குறித்து, அச்சமயத்தில் ஒன்றுமே, ஒரு சுக்குமே தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர் படித்த கல்லூரியில் பொது அறிவுத் திறனை வளர்த்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை அரசியல் நோக்கு, வரலாற்றறிவு, சமூக வளர்ச்சி, தொலைதூரப் பார்வை போன்றவை, அவர் படித்த அக்காலங்களில் தொழில் நுட்பக் கல்லூரி வட்டாரங்களில் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் அவருக்கு ஐந்தேவருடம் முன் படித்துமுடித்த எனக்கு அப்படி இருந்திருக்கவில்லை – ஜொலிக்கும் சகவழியினர் இருந்ததும், முக்கியமாக நான், ஒருமாதிரி வெறிபிடித்த ஹேம்ரேடியொ ஆபரேட்டர் ஆக இருந்ததும்  – எனக்கு, இம்மாதிரி அட்டூழியங்களை ஓரளவாக அறிந்து/புரிந்துகொள்வதற்கு – பரிச்சயப் படுத்திக்கொள்வதற்கு உதவின எனச் சொல்லலாம்.

ஆனாலும் பொது ஊடகங்களில் – பத்திரிகைகளானாலும் சரி, பிபிஸி போன்ற அழிச்சாட்டிய (ஆனால் பிரபலமான) ரேடியோ நெட்வர்க்குகளானாலும் சரி, இந்திய டெலிவிஷன் சேன்னல்களானாலும் சரி, தஹிந்து போன்ற முதுகெலும்பற்ற, பொய்வாத தினசரிகளானாலும் சரி – எதிலுமே பெரிதாக கஷ்மீரின் 1989-91 அவலங்கள் குறித்த செய்திகள் வந்ததாகவே நினைவில்லை. இந்த இருட்டடிப்புதான், ஊடகங்களின் அயோக்கியத் தனத்தினால் தான் நம் வரலாற்றறிவுக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறது;

ஏனெனில், ஏறத்தாழ அதே சமயம் நடந்த குவைட்-இராக் தள்ளுமுள்ளுகள் (1990) பற்றியும்,  அயோத்தியின் அநீதிக் கும்மட்டங்கள் இடித்துநிரவப்பட்டதற்கும் (1992) எவ்வளவு பெரிய கவரேஜ்/பிரச்சாரம் செய்தார்கள் இவர்கள்?

இந்த மெய்ன் ஸ்ட்ரீம் மீடியா வாதிகள், வெகுசில விதிவிலக்குகட்குட்பட்டு. வெறும் பேடித் தெருப்பொறுக்கிகள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

…நான் அடிப்படையில் ஈபிடபிள்யு, மெய்ன்ஸ்ட்ரீம் வகை சஞ்சிகைகளையும், பிற இடதுசாரி பத்திரிகைகளையும் தொடர்ந்து அக்காலங்களில் படித்து வந்தவன் தான். வீட்டில் தொலைக்காட்சி என இருந்திருக்காவிட்டாலும், நான் நிகழ்கால பப்பரப்பா நிகழ்வுகளை உடனுக்குடனே சுடச்சுட அறிந்துகொள்வதில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், பொதுஅறிவில் ஏகத்துக்கும் சோடை போகவில்லை. ஏனெனில் மதிக்கத் தக்க நண்பர்களின் சகவாசம் + ஹேம்ரேடியொ

ஆகவே, சிலபல பாகிஸ்தானி+பாரத ஹேம் ஹேண்டில்கள் மூலம் கஷ்மீர்-ஹிந்துக்கள் படுகொலை (+ அவர்கள் மீதான இஸ்லாமிய அட்டூழியங்கள்) நடந்துகொண்டிருப்பதை அறிந்தாலும் – அதன் கூர்மையான விவரணைகள் கிடைக்கவில்லை.

0

…அந்தக் கால கட்டத்தில், என் தகப்பனார் ரெய்ல்வேயில் (இன்டெக்ரேல் கோச் ஃபேக்டரி) ஒரு மூத்த குமாஸ்தாவாக இருந்தார் – வரவுசெலவு கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை – ஒவ்வொரு ரெய்ல்வே பிரிவும் அக்கௌண்ட்ஸ் சரிசெய்ய கொடுக்கல்-வாங்கல்களை நிரவ – தங்களுடைய ஆட்களை ஒரு பொது இடத்துக்கு அனுப்புவார்கள் – ஒருவாரம் போல அது திருவிழா மாதிரி நடக்கும். 1991ல் அது ஜம்மு-தாவியில் நடந்தது – அல்லது 1990ல் இருந்திருக்கலாம். அச்சமயம் இந்தக் கோர விஷயங்களைப் பற்றி அரசல்புரசலாக அவர் கேள்விப்பட்டிருந்தார்.

வீட்டிற்கு வந்ததும் மிகுந்த சோகத்துடன் இதைப் பற்றிப் பேசிய நினைவு இருக்கிறது; மேலும், “நம்ப தமிழ் நாட்டுல அவ்வளவு மோசமாய்டாதுடா, இங்க இருக்கிற பாய்-மார், வெறி பிடிச்சவங்க இல்லை. என் முஸ்லீம் நண்பர்கள், மாணிக்கங்கள்.”

அவர் காங்கிரஸ்காரர், நிறைய முஸ்லீம் நண்பர்கள் வேறு. பிற்காலத்தில், இதே தகப்பனாரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் ஒரு ‘படித்த’ ஆசிரியர் வேலை(!) செய்த இளம் முஸ்லீம். அப்போது ஒரு முஸ்லீம் ‘மாணிக்கம்’ நண்பர் கூட அவருக்குத் தன்னிச்சையாக உதவ வரவில்லை – இத்தனைக்கும் என் தகப்பனாரிடம் அவ்வளவு உதவி வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள், அவர்கள்.

எனக்கும் நன்றாகவே தெரிந்த, என் அப்பாவுடைய மாணிக்க ‘தோஸ்த்’  நண்பர் ஒருவரை இது தொடர்பாகப் போய்ப்பார் என என் அப்பா சொன்னதால், போய்ப் பார்த்தேன்.

“உன்னப்பா சாமிநாதன் எனக்கு எவ்வளவோ பண்ணிருக்காரு, ஆனா அந்த டீச்சர் ஜமாத்துக்கு போறேண்றானுல்ல, அது பிற்காலத்துல எனக்குப் பிரச்சினையாய்டக் கூடாது பாரு… வந்தே ஆகணும்னா வர்ரேன்…”  என்பது போலச் சொன்னார்.

எனக்கு அவருடைய நிலைமையும் புரியாமல் இல்லை. பாவம். உம்மா என்றால் சும்மாவா? விட்டுவிட்டேன். (இதைப் பற்றியெல்லாம் விவரமாக 2014 பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறேன்: முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? February 10, 2014)

…ஆனால், அது வேறு கதை.

என் தகப்பனார் ஜம்முபோய் அறிந்துகொண்ட விஷயங்களுக்குத் திரும்புகிறேன்.

…அவருடைய வருத்தத்தைப் பார்த்து – “அப்பா, அது அப்படியில்லை – அவர்கள் மட்டுமே செய்யமுடியாது, அந்த எண்ணிக்கை அவர்களிடம் இல்லை – மாறாக, நம் திராவிடர்களோடு கூட்டணி வைத்து அவர்கள் அப்படிச் செய்யலாம் – ஏனெனில் ‘பொது எதிரி’ என ஒருவனைக் காண்பித்து, அவனையே அவர்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என மூளைச் சலவை செய்தால் – அது நாளடைவில் உண்மையாகவே நிறுவப் பட்டுவிடும். ஏற்கனவே அப்படி ஒரு தடம் காத்திரமாக இருக்கிறது, பத்து வருடங்களுக்கு முன்னால் 82-83ல் நங்கநல்லூரில் நடந்த, பிராம்மணர்களுக்கு எதிரான சிறுகலவரம்/தாக்குதல் நினைவிருக்கிறதா? பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து ஒரு எஃப்ஐஆர் போடக்கூட ஒப்புக்கொள்ளாமல் பயந்துகொண்டிருந்தார்களே?? ஏன், ஒரு கம்ப்ளெய்ண்ட் வாங்கிக்கொள்ளக்கூட அவர்களுக்கு முதுகெலும்பு இருந்திருக்கவில்லையே!

…இப்படியே ஒவ்வொரு சிறு ஜாதியாகக் குறி வைத்து ஒழிக்கலாம், ஹிந்து மதங்களை நாளடைவில் தேய்வடையச் செய்யலாம்.  ஆனால் யார் கண்டார்கள் – அப்படி நடக்காமலும் போகலாம் –  ஏனெனில் கோயில்களில் எவ்வளவு பக்தர்கள் இருக்கிறார்கள் பார்; என் சிறு வயதில் இவ்வளவு கும்பல்களைப் பார்த்த நினைவே எனக்கு இல்லை. மேலும் ஆயுதம் தாங்கிய பொறுக்கி கும்பல்கள் நம்மூரில் இல்லை. எப்படியும் உன் அல்லது என் வாழ்நாளில் அது இம்மாதிரி கஷ்மீரில் நடந்த கோர அளவில் நடக்காமல்தான் இருக்கும் எனப் படுகிறது… ++” என்று ஒருமாதிரி சொன்ன மங்கல் நினைவு.

(இன்றிருந்தால், மேற்கண்ட கருத்துகளைக் கொஞ்சம் மாற்றி –  இப்படியும் சொல்லியிருப்பேன் – அந்தக் கூட்டணியில்  இவாஞ்செலிக்கல் க்றிஸ்தவர்களையும் சேர்த்துக் கொள்வேன்.  + ஆயுதமும் பெருந்தொடர்புகளுமுடைய மதவெறியூட்டப்பட்ட கும்பல்கள் இப்போது தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

இன்னொன்றும்: திராவிட திமுக-வுக்கு ஒரு மாயஎதிரி தேவைப்படுகிறது. ஏனெனில் அதற்கு ஒரு குறிக்கோளோ மேலான செயல்பாடோ அல்லது தமிழகத்தின் மீதான கரிசனமோ இல்லை – வெறுப்பினாலும் பணப்பேராசையினாலும் மட்டுமே அக்கட்சி ஒருங்கிணைக்கப் படவேண்டும் எனும்போது…

பொன்முட்டையிடும் வெறுப்பியயிலக்கு வாத்து இது. தமிழகத்தில் எந்தக் கொடும் பிரச்சினை வந்தாலும் (கமலகாசனின் மய்யம் கட்சி உட்பட) அதற்கு இந்த ‘3%’ மக்கள் திரளை நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக்க முடியும்.

அவர்களுக்கு வசதியாக – ஏற்கனவே, ஜஸ்டிஸ் பார்ட்டி கும்பலில் இருந்து ஆரம்பித்து – தமிழ் பிராம்மணர்களுக்கும், வடவ-ஆரியர்(!)களுக்கும், பனியாக்களுக்கும் (அவர்களில் குறிப்பாக மார்வாடிகளுக்கும்) எதிரான, ஒரு வெறி மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த திராவிடர்களும், தமிழ்வெறியர்களும். போதாக்குறைக்கு கோடம்பாக்கக் கூவான்கள் வேறு…

…என் வாழ்நாளிலேயே ஒருமாதிரி ஒழிப்பைப் பார்ப்பேனோ – அல்லது அண்ணாமலை அவர்கள் ஆட்கொண்டு, இந்தத் திமுக திராவிடர்களை ஒழித்துவிடுவாரோ? நம் பாவப்பட்ட தமிழகத்தை, திராவிடப் பெருவியாதியிலிருந்து மீட்டு, சுபிட்சத்தையும் தேசியத்தையும் நோக்கி எடுத்துச் செல்வாரோ?)

0

சரி. எனக்கு, ஹேம்ரேடியோ மூலம் வந்த செய்திகளுடன், என் அப்பா சொன்ன விஷயமும் ஒத்திசைவில் இருந்தது தெரிந்தது – ஆனால் அதைத் தொடர்ந்து நான் யோசிக்கவில்லை, தொழிற் பிரச்சினைகளில் மூழ்கியிருந்தேன்வேறு.

1991-92 வாக்கில், ஏதோ தொழில்முறை வேலையாக தில்லி  சென்றிருந்தபோது கஷ்மீரி ஹிந்துக்கள் அகதிகள் முகாம் (தில்லி புறநகர்ப் பகுதி ஒன்றில் என நினைவு)  என் நண்பன் ஒருவனுடன் சென்ற நினைவும் இருக்கிறது. உள்ளே ஒரு ‘சுற்றுலா’ போக மனதில்லை – வெளியே, வாசலில் இருந்து பார்த்த போதே – முள்வேலிக்குள்ளே (இது படுமோசமாக விஷயம் எனச் சொல்லமாட்டேன், உள்ளுர்வாசிகளைத் திருப்தி படுத்துவதற்காகவும், ஒருமாதிரி பாதுகாப்புக்காகவும் இதனைச் செய்திருக்கலாம்) உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்த அந்தப் பாவப்பட்ட ஹிந்துக்களின் அவலநிலையைப் பார்த்தே வெறுத்துவிட்டது. பல கஷ்மீர் பண்டிட்டுகள் (பொதுவாகவே படிப்பும், தொடர்புகளும் உடைய மக்கள் திரளது) அங்கு இல்லை – இருந்தவர்கள் ஏழைபாழை ஹிந்துக்கள்/பண்டிட்டுகள். படிப்பறிவோ/தகுதிகளோ இல்லை – கடைகண்ணி வைத்து கஷ்மீரில் பிழைத்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள் – அல்லது குறுவிவசாயிகள், எங்கே போவார்கள் பாவம்? (எனக்குத் தெரிந்து 2012 வரை அந்த முகாம்/வளாகம் இருந்தது – இன்றுவரை இருக்கவும் வேண்டும்)

அச்சமயம் ஒரு அகதிக்கு மாதத்துக்கு ரூ 600/- உதவித்தொகை(!) கிடைத்துவந்தது என நினைவு. (அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கும் பலப்பல இலங்கைத்தமிழர் அகதிகள் முகாம்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையில்தாம் இருந்தன, இப்போதும் இருக்கின்றன, தங்கள் தாய் நாட்டில் இல்லையே தவிர, அவர்கள் இங்கு வேலைவாய்ப்புகள் பெற்று சுபிட்ச நிலையில்தான் இருக்கிறார்கள் – இவர்களில் பலருக்குத் திரும்பி ஸ்ரீலங்கா செல்லவே விருப்பம் இல்லை என்பது வேறு விஷயம்)

…1990ல் நின்றுவிடவில்லை இஸ்லாமிய ஜிஹாதி வெறி; கஷ்மீர் பண்டிட் தொடர்படுகொலைகள் நடந்தவண்ணம் தான் இருந்தன.

பின்னர், வாழ்க்கையின் பிற விஷயங்களில்/அழுத்தங்களில் அவற்றை மறந்துவிட்டேன் கூட. உண்மை. இதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை.

0

ஆனால், மறுபடியும் – 2001-2 வாக்கில் என் பொறியியல் குழுவில் சேர்ந்த ஒரு இளைஞன் மூலமாக மறுபடியும் கஷ்மீர் ஹிந்து தொடர்ஸம்ஹாரம் பற்றி ஒரு நேரடி, தொடர் வாக்குமூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்தச் சோகக் கதை இங்கே: இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990) January 19, 2014

சரியான நேரத்தில் இந்தக் கஷ்மீர் பண்டிட் இளைஞன் ராஜீவுக்கு உதவ முடியாமல் தாமஸமாக இருந்துவிட்டேனே என இந்த நாள் வரை வருத்தப் பட்டுக்கொண்டிருக்கிறேன்கூட… :-(

6

1989 டிஸெம்பர் -> 1990 ஜனவரி: ஸ்ரீநகர் பகுதி மட்டுமல்லாமல், பிற கஷ்மீர் நகரங்களிலும், ஏன், சிறு நகர/கிராமங்களிலும், முறையாக, அறிவியல் பூர்வமாக – கஷ்மீர் ஹிந்துக்களுக்கு எதிரான கொடூர வன்முறைக்கான திட்டமிடுதல்களும், எடுத்துக்காட்டுக் கொலைகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன,

வாரக்கணக்காக போராட்டங்கள், கதவடைப்புகள், கொலைவெறி ஜிஹாதிகளின் அணிவகுப்புகள் எனப் பதட்ட நிலை அதிகமாகிக் கொண்டே இருந்தது. உண்மையான சமத்துவத்துடனும் – முஸ்லீம் பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கொலைவெறியூட்டப் பட்டது. பொதுவாக, வன்முறைகளில் பங்குபெறாத முஸ்லீம் பெண்களும் ஆவேசத்துடன் தங்கள் பிள்ளைகளையும் கணவர்களையும் முடுக்கிவிட்டார்கள்.ரத்தவெறி முழக்கங்களும், முஸ்லீம்களை உசுப்பி விடுதலும் தொடர்ந்து நடந்தன.

ஜனவரி 18-19, 1990 அன்று: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஸூதிகளிம் கூம்பு ஸ்பீக்கர்களில் இருந்து, தொடர்ந்து செய்யப் பட்ட அயோக்கிய, ஹிந்துஒழிப்புப் பிரச்சாரம் அரங்கேறியது. அவற்றில் எனக்கு நினைவிருக்கும் சிலவற்றை, என் அக்கால நாட்குறிப்புகளிலிருந்து கிடைத்தவரைஒருமாதிரித் தமிழாக்கம் செய்து கொடுக்கிறேன்.

இஸ்லாம் ஹமாரா மக்ஸத் ஹை, கொரான் ஹமாரா தஸ்தூர் ஹை, ஜிஹாத் ஹமாரா ராஸ்தா ஹை!

(இஸ்லாம் நமது குறிக்கோள், கொர்-ஆன் நமது அரசிலமைப்புச் சட்டம், ஜிஹாத் நமது வாழ்க்கைமுறை!)

முஸ்ஸல்மானோ ஜாகோ! காஃபிரோன் பாகோ!

(முஸ்லீம்களே, எழுச்சியடையுங்கள்! காஃபிர்களே, ஒடிவிடுங்கள்!)

கஷ்மீர் பனேகா பாகிஸ்தான்!

(கஷ்மீர் பாகிஸ்தானாகும்!)

பாகிஸ்தான் ஸே க்யா ரிஷ்தா? லா இலாஹா இல்லல்லாஹ்!

(பாகிஸ்தானுடன் என்ன தொடர்பு? அல்லாஹ்தான் ஒற்றைக் கடவுள்! (அல்லது) பாகிஸ்தானும் நாமும் இஸ்லாமினால் பிணைக்கப் பட்டிருக்கிறோம்!)

லா ஷார்க்யா ல கர்பியா, இஸ்லாமியா! இஸ்லாமியா!

(கிழக்கிலிருந்து மேற்கு வரை எங்கும் இஸ்லாம், எதிலும் இஸ்லாம்!)

ஸ/ஜலீமொ, ஓ காஃபிரோ, கஷ்மீர் ஹமாரா சோட் தோ!

(ஓ இரக்கமற்ற/அடக்கியாளும் காஃபிர்களே! எங்கள் கஷ்மீரை விட்டோடுங்கள்!)

கஷ்மீர் மேய்ன் அகர் ரெஹ்னா ஹை, அல்லாஹூஅக்பர்  கஹ்னா ஹோகா!  

(கஷ்மீரில் வாழவேண்டுமென்றால், அல்லாஹூஅக்பர் சொல்லியேயாகவேண்டும்! (அதாவது முஸ்லீமாக மாறியே தீரவேண்டும்!))

கஷ்மீர் பனாவோ பாகிஸ்தான், பதாவ் வரைய், பத்னியு ஸான்!

(கஷ்மீர் பண்டிட் ஆண்களைத் தவிர்த்து, ஹிந்து பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டு, கஷ்மீரை பாகிஸ்தானாக்குவோம்!)

பீப்பிள் லீக் கா க்யா பைகம், ஃபடே, ஆஸாதி ஔர் இஸ்லாம்!

(மக்கள் அணியின் கொள்கை என்ன? வெற்றி, சுதந்திரம் & இஸ்லாம்!)

யஹான் க்யா சலேகா, நிஸாம்-இ-முஸ்தஃபா!

(இங்கு என்ன நடக்கும்? முஸ்தஃபா(மொஹெம்மத்) வின் கட்டுப்பாடு! (அல்லது) எங்களுக்கு இஸ்லாமிய ஷாரியத் வழி அரசுதான் வேண்டும்!)

பாரத் தேரி மௌத் ஆயி! லஷ்கர் ஆயி லஷ்கர் ஆயி!

(இந்தியாவே உனக்கு சாவுதான்! இஸ்லாமியப் படை வந்துவிட்டது, வந்துவிட்டது!)

பந்தூக் லேங்கே ஆஸாதி, பிஸ்டல் லேங்கே ஆஸாதி!

(துப்பாக்கியை எடுத்து சுதந்திரம் பெறுவோம், பிஸ்டலை வைத்து சுதந்திரமடைவோம்!)

ரக்டோ ரக்டா, பாரத் கோ ரக்டோ!

(மிதி, மிதி – பாரதத்தை நசுக்கு/மிதி) – இது பாரதக் கொடியைக் கீழே போட்டு அதனை மிதித்துக்கொண்டே கத்துவது.

ரக்டோ ரக்டோ, பட்டோன் கோ ரக்டோ!

(மிதி, மிதி – கஷ்மீர் பண்டிட்களை மிதி! – இது கஷ்மீர் கோவில்களில் பறக்கும் காவிக்கொடியை, தெருவில் கிழித்துப் போட்டு மிதித்துக்கொண்டே கோஷம் போடுவது)

தில் மேன் ரகோ அல்லாஹ் கா காஃப், ஹாத் மேன் ரகோ கலாஷ்னிகோவ்!

(அல்லாஹ் குறித்த பயத்தை இதயத்தில் வைத்து, கைகளில் கலாஷ்னிகோவ் [யந்திரத் துப்பாக்கி] ஏந்துவோம்!

ஏக் ஹாத் மேன் கலாஷ்னிகோவ், தூஸ்ரா மேன் கொர்-ஆன், ஹம் முஜாஹித் கூம்கூம்கே தரானா-இ-கஷ்மீர் காயேங்கே, பட்டோன் கோ மாரேங்கே!

(கலாஷ்னிகோவ் ஒரு கையிலும், கொர்-ஆன் மற்றொரு கையிலும் ஏந்திய இஸ்லாமியப்போராளி (=வெறியர்)களாகிய நாங்கள், கஷ்மீர் விடுதலை கானங்களைப் பாடுவோம், பண்டிட்டுகளைக் கொல்லுவோம்!)

ரலீவ், ட்ஸாலிவ் யா கலீவ்!

(முஸ்லீமாக மாறு, அல்லது இந்த இடத்தை விட்டு ஓடு, இல்லையேல் செத்து ஒழி!)

7

சென்ற வாரம் வரையில் என் சிலபல அறிமுகங்கள் (அதாவது , இதுவரை – அதுவும் சொற்பம்) ஆரூடம், அதுவும் வெறும் ட்ரெய்லர்/முன்னோட்டம் பார்த்துவிட்டுச் சொல்லியவற்றின் சாராம்சம் – இதற்கெல்லாம் அந்த ஈன ஜன்மங்கள், ஒரு தரவும் கொடுக்கவில்லை:

(பெரும்பாலான இப்படியாப்பட்ட மூடர்களுடன் நான் நேரடித் தொடர்பே வைத்துக்கொள்வதில்லை, நமட்டுச் சிரிப்புக்குப் பின் அகன்றுவிடுவேன் – இதற்கு அலுப்பும்தான் காரணம்; ஏனெனில், இவர்களில் அனைவருக்கும் பெரும் வசதிவாய்ப்புகள் இருந்தாலும்,  சுழல் நாற்காலியில் சொகுசாக அமர்ந்து, ட்விட்டர்/வாட்ஸ்அப் வகையறா அறிவுரை/அறவுரைக வகை கருத்துக் குண்டுளைத் தாண்டி – களத்தில் இறங்கி ஒரு மசுரையும் பிடுங்கியதில்லை, வாழ்க்கையிலும் எந்தப் பெரிய மசுரையும் சாதித்ததில்லை – அரைகுறை குமாஸ்தாக்கூவான்கள்… ஹ்ம்ம்… பெத்த படிப்பும் பெரிய வேலையும் ஸ்டாக்மார்க்கெட் பெரும்பணமும் தேசத்துக்கு ஒருவீடும் வைத்திருப்பவர்கள்தான், அசடுகள் அல்லர்தாம்):

  1. இந்தப் படம் டப்பா, வெறும் புரளியும் பொய்மையும் கலந்த இஸ்லாமிய-வெறுப்புப் ப்ரொபகண்டா/பரப்புரை. மக்களை ஏமாற்றக் கூடாது, அது முடியவும் முடியாது. இத்தனை நாள் இந்தியப் படங்களில் இதனைக் காட்டாமல் இருந்ததற்குக் காரணமே அதெல்லாம் பொய்தான்.
  2. கஷ்மீர் பண்டிட்டுகளின் அவல நிலையையைச் சித்திரித்துக் குளிர்காய்ந்து லாபம் பார்க்கும் வழிதான் இது!
  3. கஷ்மீர் பண்டிட்டுகள் முஸ்லீம்களைக் கொடுமைப்படுத்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறித்திருக்கின்றனர் – இதையெல்லாம் காண்பிக்கவில்லையே!
  4. இது ஊத்தி மூடப்படும்; சீந்துவாரற்று, தயாரிப்பாளர்களின் முடிவையும் நடத்திக் காட்டும்;  இதற்குச் செலவான சுமார் ரூ. 15கோடி பணால், போயேபோச்சு! யோசித்துப் பாருங்கள் – இந்தப் பணமுதலீடு செய்தது கஷ்மீர் பண்டிட்டுகளா? இல்லையே! இதில் முதலீடு செய்ய பாத்தியதைப் பட்ட அவர்கள் முன்வராதபோதே தெரியவில்லையா – பண்டிட்டுகளைப் பகடைக்காயாக வைத்து முதலாளிகள் பணம் பண்ணுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைத்தானே அது காண்பிக்கிறது?

கடந்த சில நாட்களில் இந்தப் படத்தின் வியாபாரம் குறித்த எண்ணிக்கைகள் வெளியில் வரும் நிலையில், அதே நபும்ஸகர்கள் சொன்னது (இது  நடந்தது ஒரு செல்ல வாட்ஸ்அப் குழுமத்தில்; இதில் ஏறத்தாழ அனைவரும் லிபரல்-இடதுசாரிகள் – மற்றபடி புத்திசாலிகளைக் கொண்டதுதான்!):

  1. அங்கேயிங்கே என ஓரிரு கொடும் சம்பவங்கள் நடந்திருக்கலாம், அதையெல்லாம் பொதுமைப் படுத்தக் கூடாது – எப்படியும் ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருப்பதால், இவற்றைப் பொருட்படுத்தியிருக்கக்கூடாது. இப்படிப் படம் எடுப்பது இஸ்லாமியர்களை, அனைவரும் வெறுப்பதற்கு இட்டுச் செல்லும். இஸ்லாமோஃபோபியா!
  2. இது விஷம், இது இந்தியாவுக்கு நல்லதேயல்ல. ஏற்கனவே ஹிந்துத்துவ வெறியர்கள் துள்ளுகிறார்கள். இந்த வன்முறையாளர்களை நம்பமுடியாது, முஸ்லீம்களைப் போலக் கட்டுக்கோப்பு உள்ளவர்கள் அல்ல அவர்கள். இதை வெளிவர விட்டிருக்கக் கூடாது. முஸ்லீம்களை இப்படி எதிர்மறையாகச் சித்திரித்தால் அது சரியல்ல. இம்மாதிரி விஷயங்கள் கருத்துரிமையில் வரமாட்டா.
  3. ‘என் கண்ணைப் பிடுங்கினால் உன் கண்ணை நோண்டியெடுப்பேன் என்பது உலகத்திலுள்ள அனைவரையும் குருடாக ஆக்கிவிடும்.’ மஹாத்மா காந்திஜி அப்படித்தானே சொல்லியிருக்கிறார்.
  4. இவ்வளவு பணம் (ஒன்றிரண்டு நாட்களுக்கு முந்தைய எண்ணிக்கையில் பாக்ஸ்ஆஃபீஸ் கலெக்ஷன் ரூ 200/- கோடியைத் தாண்டிவிட்டது எனக் கேள்விப்பட்டதும்) ‘”கொள்ளைலாபம் – இதில் ஒரு கணிசமான பங்கை விவேக் அக்னிஹோத்ரி, கஷ்மீர் பண்டிதர்களின் நல்வாழ்க்கைக்கோ மதச்சார்பின்மை நடவடிக்கைகளுக்கோ கொடுப்பாரா?”

பேடிகள்.

8

கேள்விகள், கேள்விகள்… துன்புறுத்தும் கேள்விகள்…

ஹிந்துதீவிரவாதத்தினால்தான் கஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாதம் பெருமளவில் தீவிரமடைந்தது என்கிறார்கள். கொடும் இஸ்லாமியஜிஹாதால் பாதிக்கப் பட்டவர்களையே பாதிப்புக்குக் காரணமாகச் (victim blaming) சொல்கிறார்கள். அப்படியிருந்தால், அது உண்மையாக இருந்தால் – ஏதாவது ஒரு, ஒரேயொரு முஸ்லீமாவது – கஷ்ஂமீரில் இருந்து ஹிந்துக்களின் வன்முறை காரணமாக வெளியேறிப் பிற புகலிடம் நோக்கி நகர்ந்திருக்கிறாரா? ஏன், ‘ஹிந்துத்துவா கொடுமை(!)’ காரணமாக பாரதத்திலிருந்தே விட்டு ஓடிப்போய் பாகிஸ்தான் பங்க்ளாதேஷ் ஆஃப்கனிஸ்தான் போன்ற அமைதி ததும்பும் இஸ்லாமிய நாடுகளில் சரணடைந்திருக்கிறார்களா?

0

வெட்கங்கெட்டுப்போய் கஷ்மீரில் முஸ்லீம்களும் கொலை செய்யப்படவில்லையா எனக் கேட்கிறார்கள், கஷ்மீரி ஹிந்துக்களைக் கொலைவெறிக் கொடுமை செய்ததை நியாயப் படுத்துகிறார்கள். ஆம், கஷ்மீரில் முஸ்லீம்களும் கொலை செய்யப் பட்டனர்; ஒப்பு நோக்கினால் இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், பல கஷ்மீர் முஸ்லீம் காவல்துறையினரும், சில கஷ்மீர் முஸ்லீம்களும் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்களில் ஒருவர் கூட, அவர்கள் முஸ்லீம்கள் என்பதால் கொலை செய்யப் படவில்லை; மாறாக அவற்றுக்கு மூன்று காரணங்கள் 1) அவர்கள் பாரதத்தின் பக்கம் இருந்தனர், ஆகவே கஷ்மீர் ஹிந்துக்களின் சார்பாக இருந்தனர் அல்லது 2) அவர்கள் அலுவலக ரீதியாக அரசின்பக்கம் இருந்து அவர்கள் பணியைச் செய்தனர், அல்லது 3) சிலருக்கு போட்டி ஜிஹாத் அமைப்புகளிடமிருந்தும், அவர்கள் சிலபல ஜிஹாதிகளை திருப்தி செய்யாததினாலும் முடிவு.

1+2 பிரிவினருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்கள் கொலை இஸ்லாமியர்களால் (கவனிக்கவும், அவர்களைக் கொலை செய்தவர்கள் கஷ்மீரி பண்டிட்டுகள் அல்லர்!) ஜிஹாதிஇஸ்லாமியத்தின் சார்பாகச் செய்யப் பட்டது என்பதை நான் மறுபடியும் நினைவூட்டுகிறேன்.

0

முட்டுக் கொடுக்கும் முட்டுக்கலப்பை லிபரல்கள் – கஷ்மீர் ஹிந்துக்கள் ரத்தக்கொலைவெறியுடன் முஸ்லீம்வெறியர்களால் துரத்தியடிக்கப் பட்டதை – ‘வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மக்கள் இடம்பெயர்வது சகஜம், இதனைப் பெரிது படுத்தக்கூடாது‘ என்கிறார்கள்!  வருடாவருடம் சிலபல பறவைகள் சீதாஷ்ண நிலைக்குத் தக்கபடிஇடத்துக்கு இடம் மாறுவதைப் போலக் கதையடிக்கிறார்கள், சப்பைக்கட்டுகிறார்கள்?

பாவிகளே! அப்படியா நடந்தது அவ்விஷயம்? வெறும் முன்னேற்றத்துக்கா அவர்கள் தப்பித்துச் சென்றனர்? அப்படியென்றால், உங்கள் வியாக்கியானம் ‘சரி’ என்றால், ஏன் ஏறத்தாழ ஒரு முஸ்லீம்கூட, கஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை? அவர்களுக்கு ‘முன்னேற’ விருப்பமே இல்லையா, அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளா? என்ன சொல்லவருகிறீர்கள்? மேலும் கஷ்மீரி பண்டிட்டுகள் திரும்ப (முக்கியமாக கஷ்மீரில் பாதுகாப்புடன் வாழ்க்கை நடத்தத் தானே, இன்றுவரை ஆசையுடன் இருக்கிறார்கள்?)

(மேலும் இந்த, அயோக்கியர்கள் – பறவைகள் ஒரு சுற்றுச்சுற்றி மறுபடியும் தங்கள் இருப்பிடம் நோக்கிச் செல்லமுடிவதைக் கருத்தில் கொள்வதேயில்லை!)

0

இன்னமும் சில வெட்கங்கெட்ட ஊடகப்பேடிகள், அத்வானியின் ரத யாத்திரையையும் (ஸெப்டெம்பர்-அக்டோபர் 1990), அயோத்தியின் சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்பு பப்ரிகும்மட்ட அகற்றலையும் (6 டிஸெம்பர் 1992) காரணம் காட்டி – இவைகளால் தான் கஷ்மீர் ஹிந்துக்கள் விரட்டப் பட்டனர், கொலை செய்யப்பட்டனர் (ஜனவரி 19-20, 1990) என முட்டுக் கொடுக்கிறார்கள். அயோக்கியர்கள். கேவலஸ்தர்கள்!

0

விசாரணை, கமிட்டி, உண்மை அறியும் குழு என ஒன்றுகூட கஷ்மீர் மாநில அரசு சார்பிலோ, மத்திய அரசு சார்பிலோ அமைக்கப் படவில்லை. கேவலம் ஒரு வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை ஒரு பெரிய அரசியல்தலைவரும் இந்த பாவப்பட்ட அகதிகளை அவர்களுடைய முகாம்களில் பார்க்கச் செல்லவில்லை. இந்தச் சோகத் தொடர்கதை குறித்து யாராவது, எந்தப் பேடி ஊடகமாவது கேள்வி கேட்டார்களா?

அவர்களை, அவர்கள் மீது கவிழ்த்தப்பட்ட கொடும்வன்முறையால், ‘உள்நாட்டு அகதிகள்’ refugees எனக்கூட நியாயமாக அழைக்கவில்லை – அவர்களை, மைக்ரன்ட்ஸ், migrants – புலம்பெயர்ந்தோர், இடம்விட்டு இடம்பெயர்ந்தோர் எனத்தான் அரசாங்க ஆவணங்களில் விளிக்கிறார்கள். இந்த, ஒரு அடிப்படை விஷயத்தைக் கூட நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

0

தென்னாஃப்ரிகாவில் நடந்ததுபோல, இங்கும் ட்ரூத் அண்ட் ரெகன்ஸிலியேஷன் கமிஷன் (Truth & Reconciliation Commission) ஒன்றை வைக்கலாம் – அதற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள்; கேவலஸ்தர்களுக்கு தென்னாஃப்ரிக வரலாறும் பிடிபடவில்லை என்பது இதனால் தெரிகிறது.

உண்மை-சமரச சன்மார்க்கம் நல்லிணக்கம்… எல்லாம் சரி, மதரீதியாகத் திரட்டப்பட்ட முஸ்லீம் திரள்கள்?

எவ்வளவு முஸ்லீம் அமைப்புகள், இந்தக் கொடூரத்துக்கு எதிராக அறிக்கை விட்டிருக்கின்றன?

கஷ்மீர் ஹிந்துக்கள் அழித்தொழிக்கப் பட்டதையே விடுங்கள் – முக்கியமான 20-30 ஹிந்துகோவில்களை இடித்துத் தகர்த்து அவற்றின்மேல் கட்டிய மஸுதிகளுக்காக எவ்வளவு முஸ்லீம் அமைப்புகள் வருத்தம் தெரிவித்திருக்கின்றன, நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக வாதம் செய்திருக்கின்றன? எவ்வளவு  முஸ்லீம் பெருந்தகைகள் (அரசியல் காத்திரம் உடையவர்கள், முஸ்லீம் மஹ்ஜப் மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள் – வெறும் ஒன்றிரண்டு பாவப்பட்ட முஸ்லீம் அறிவுஜீவிகள் அல்ல) இவ்விஷயங்கள் குறித்து நேர்மையான-நியாயமான பார்வை எடுத்திருக்கிறார்கள்?

இந்த நிலையில் அந்த உம்மாவிடமிருந்து எப்படி ‘உண்மை’யை எதிர்பார்ப்பது?  சமரசம்-நல்லிணக்கம் எனப் பின்னர் தானே பார்க்கமுடியும்? சமரசம் என்பது கொடுங்கோலர்கள் பக்கத்திலிருந்து எழும்பவேண்டுமா, அல்லது அவனால் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் தாம் சமரசம் செய்யவேண்டுமா? என்னடா இது கதை? ப்ளடி.

TRCன் தற்போதைய நிலை என்ன என்பதையும் அவர்கள் அறியவில்லை. இன்னொரு பக்கம் – முஸ்லீம் என ஒருவன்/ஒருத்தி ஆழமாக உணர்ந்தால், கொர்-ஆன், ஹடித், ஸிரா வழி மட்டுமே உலகைப் பார்த்தால் (துரதிருஷ்டவசமாக, எனக்கு நன்றாகவே அறிமுகமாகியிருக்கும் பல முஸ்லீம் நண்பர்களில் மிகப் பெரும்பான்மையினர், இவர்களில் மிகவுயர் படிப்புப் படித்தவர்கள்கூட இப்படித்தான்!)  – அவர்களுக்கு தேசம், தேசியம் என்பதெல்லாம் பொருட்டேயில்லை – அவையெல்லாம் மூன்றாம் பட்சம்தான் என்பது தெரியவரும். தனிப்பட்ட முறையில் இவர்கள் ஒருவேளை வன்முறை செய்யாமல் இருக்கலாம் – ஆனால் கும்பலில் இவர்கள் சேர்ந்தால், கும்பல்விஷம் தலைக்கேறி விடும். இவர்களுக்கு ஜிஹாத் செய்யாமல் இருந்தால் தான் பாவம். காஃபிர்களை மதம்மாற்றாமல்/ஒழிக்காமல் இருந்தால்தான் பாவம்.  மாறாக ஜிஹாத்/மதமாற்றம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடுவதோ, சொர்க்கம்.

0

இந்த விஷப் பிரச்சாரத்தை மீறி, பேடி உந்துதல்களைமீறி ஒருசில, மிகச் சிறுபான்மை முஸ்லீம்கள் இருக்கிறார்கள்; தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் நிலைமை பரிதாபம் தான், புரிந்துகொள்கிறேன்!

மூன்று மாஜி-முஸ்லீம்களையும் நேரடியாக அறிவேன். இவர்களில் ஒருவர் தமிழ்க்காரர். ஆனால், இவர்கள் பொதுவெளியில் தங்களைக் காட்டிக்கொண்டதில்லை – ஏன், புனைபெயரில்கூட எழுதுவதில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு’ நபும்ஸக குமாஸ்தாத்தனம் இதற்குக் காரணமல்ல – அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக, தம் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; இவர்களே கொஞ்சம் பணம் படைத்தவர்களாக, தொடர்புகள் உள்ளவர்களாக இருந்திருந்தால், இது பெரிய பிரச்சினையாக இல்லாமல் இருந்திருக்கலாம் எனக்கூட என்னால் சொல்லமுடியாது – ஏனெனில், பாரதத்தில் முஸ்லீம் சமூகத்தின் அரசியல்நிலை கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கிறது. (இதைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், குறைந்த பட்சம், பேராசிரியர் பாபாஸாஹேப் காஜி/ஸி அவர்களின் Mobilising Muslims in Northern Indian Sub-continent: Unfruitful Past, Cruel Present, Grim future (2004) கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கலாம்; பின்னர், ஒருவேளை வாய்ப்பிருந்தால்: இம்தியாஸ் அஹெமத் அவர்களின் Caste and social stratification among Muslims in India (1978) படிக்கலாம்.

…நிலைமை இப்படி இருக்கும்போது பேச்சாவது, வார்த்தையாவது…

ஏன், கொலைவெறி இஸ்லாமிய மிரட்டலை, ஹிந்து ஒழிப்புக்கான அறைகூவலை லூப்பில் தொடர்ந்து ஒலிபரப்பிய, ஓரிரவு ~2500 ஹிந்துகொலைகளுக்கு நேரடிக் காரணமாக இருந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஸூதிகளில் – ஒரு பத்து, பத்தே பத்து மஸுதிகளிலிருந்து ஒரே ஒரு நாளுக்கு, அவை செய்த கேவலத்துக்கு மன்னிப்பு கேட்டு, லூப்பில் வருத்தத்தை ‘கஷ்மீர்பண்டிட்டோ அக்பர்’ எனஅறைகூவல் செய்யப்பட்டுமே, பின்னர் பார்க்கலாம்…

…வந்து விட்டான்கள்,  உண்மையாம், சமரசமாம், ப்ளடி கமிஷனாம்! பேடிகள்!

லிபரல்-இடதுசாரி அறிவுஜீவிகளுக்கு, அவர்களுக்குச் சிரிப்பு மூட்டுவதற்காக, கீழ்கண்ட, கஷ்மீர் முஸ்லீம் ஒருவர் ஸ்ரீநகர் தினசரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைக் கொடுக்கிறேன்.

அன்பர், கஷ்மீரி பண்டிட்டுகள் ஒரு புற்றுநோய் போல – அவர்களைக் கஷ்மீருக்குத் திரும்பவர விடக்கூடாது என்கிறார்.

மிகத் தெளிவாக இருக்கிறார். நன்றி. எனக்குத் தெரிந்த பலப்பலர் இப்படித்தான். ஏன் மேலதிகமாகக் குட்டையைக் குழப்பவேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாகவும் இருக்கலாம்.

TRC? Ha ha!

0

கஷ்ஂமீரில் நடந்துகொண்டிருப்பது, தற்போது பாகிஸ்தானிலும் பங்க்ளாதேஷிலும் நடந்துகொண்டிருக்கும் ஹிந்து அழித்தொழிப்புகள், மேற்குபங்க்ளாதேஷில் நடந்துகொண்டிருக்கும் பீபிஸாஹிபா மம்தா தீதியின் கொலைவெறி – இவையெல்லாம். நமக்குச் சொல்வது என்ன? இவற்றைக் கட்டியங்காரனின் ஆரூடங்கள், மீதமிருக்கும் ஹிந்துக்களுக்கு வரப்போகும் ஆபத்துகளைக் கட்டியம் கூறுவன எனக் கருதலாமா?

நடந்தது கஷ்மீர் ஹிந்துக்களின் ஜினோஸைடா, எடுத்துக்காட்டுக் கொலைகளா, பண்பாட்டு அழிப்பா என்றெல்லாம்கூட மயிர்பிளக்கும் விவாதங்களுக்குள் போகவேண்டாம் – நடந்தவை இஸ்லாமிய-ஜிஹாதிகளால் ஸ்பான்ஸர் செய்யப்பட்ட கொலைகள் – இவை தொடர்பாக, பாரத சமுதாயத்தின் எதிர்கொள்ளல் எப்படி இருக்கவேண்டும் எனச் சிந்தித்து மேற்படி நடவடிக்கைகள் எடுத்தால் போதுமானது.

விடிவு வருமா?

விடிவதற்கு என்ன செய்யலாம், அந்த நிஜ விடியல் எப்படி இருக்கலாம் என, இந்தப் பதிவுக்கு வரக்கூடும் எதிர்வினைகளைப் பொறுத்துப் பார்க்கலாம்.

நன்றி.

“Eternal vigilance, monitoring, relevant action & long-term field interventions constitute the price we pay for liberty.”

9

‘த கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் பார்த்தது குறித்த சிலபல கருத்துகளையும் தெரிவிக்கவேண்டும்.

0. பெரிய எதிர்பார்ப்பு என இல்லாமல் ஆனால், 1) கஷ்மீர் பண்டிட்களின் அவல நிலைக்காக, அக்கோரச் செய்திகள் குறித்த நம் செல்ல ஊடகங்களின் கள்ளமௌனம் காரணமாக 2) ஹிந்துக்களுக்கும் பாரதீயத்துக்கும் எதிரான சக்திகளை எதிர்கொள்ள – காத்திரமான முனைவுகளை, ஒரு நுகர்வோன் எனும் அளவிலாவது அணுகவேண்டும் என்பதற்காக 3)  ஹிந்துத்துவ எழுச்சியை உருவாக்க முனையும் எத்தனங்களுக்கு, என்னளவில், அதாவது மிகச்சிறிய அளவில் பொருளாதார ரீதியில் பங்களிக்கவேண்டும் என்பதற்காக 4) மிகமுக்கியமாக என் அன்புக்குரிய முன்னாள் குழுவினன், அகாலத்திலும் மாளாசோகத்திலும் இறந்த என் ராஜீவ்பண்டிட்டுக்காக… என இந்தப் படத்தைப் பார்த்தேன்.

1. கடைசியாக, தியேட்டர் சென்று படம் பார்த்தது என்பது 1997ல் என நினைவு. டெவில்’ஸ் அட்வொகெட். எனக்குப் பிடித்த அல்பசீனொ படம். கொஞ்சம் மிகை-நடிப்பு, அதீத பின்னிசை – ஆனாலும் பொறுத்துக்கொள்ளும் படியாகவே இருந்தது. கடைசியாக முழுமையாகப் பார்த்த தமிழ்ப்படம் மைக்கெல்மதனகாமராஜன் 1991வாக்கில்; அதுவும் பாதிப்படத்துக்குள்ளாகவே நாக்கு தள்ளிவிட்டது. எப்படா இந்த ஏகப்பட்ட அடிப்படைத் தவறுகள் இருந்த ஸ்லாப்ஸ்டிக் முடியும் எனக் காத்திருந்து முதலில் அந்தத் தியேட்டரை விட்டுவிட்டு வெளியே ஓடியவன் நானாகத்தான் இருக்கும்.

அதற்குப் பிறகு அதற்குப் பின் ஓரிரு தடவை, வீட்டிலேயே முக்கிமுனகி என 5-10 நிமிடம்போலச் சிலபல தமிழ்ப் படங்களைப் பார்க்க, உறவினர்களின் கெடுபிடியால் கொடுப்பினை இருந்திருக்கிறது; நண்பர்கள் எனத் தங்களைக் கருதிக்கொள்ளும் சிலர் 5-10 நிமிடத் துணுக்குகளை/ட் ரெய்லர்களை – ‘இப்படத்தை நீ அவசியம் பார்த்தேயாக வேண்டும்’ எனும் அன்புத்தொல்லைப் பரிந்துரையுடன் தொடர்ந்து அனுப்புகிறார்கள், எனக்கு நாக்குதள்ளித்தள்ளி அது நீளமானதுதான் மிச்சம். எப்படியோ இன்னமும் உயிருடன் இருக்கிறேன்  அண்மையில் நண்பர் ஒருவர் தயவினால் சிலபல வடிவேலு-செந்தில்-கவுண்டமணி காமெடித் துளிகளைப் பார்த்திருக்கிறேன்; நண்பர்களின் இடஞ்சுட்டிப் பொருள்விளக்குதலின் தயவினால், கொஞ்சம் அவற்றைப் புரிந்துகொண்டுவிட்டது போல ஒரு பிரமை. (இன்னும் என்னென்ன கொடுமயல்லாம் பாக்கணுமோ! :-(

2. மல்ட்டிப்ளெக்ஸ் எனும் ஜந்து உள்ளே எப்படி இருக்கும் எனவே எனக்கு அறிமுகமில்லை. அதைவிட, ஒரு சினிமா டிக்கெட்டுக்குச் சுளையாக ரூ.206/- (!!!!) எனும் கள நிலவரம், கலவரம் கொடுத்தது. ஒருமாதிரி ஆசுவாசம் செய்துகொண்டு உள்ளே நுழைந்தால் – ஏழெட்டு குட்டி தியேட்டர்கள் – நான் சென்றதில், எண்ணி மொத்தம் 112 இருக்கைகள். சுமார் 60 பேர் இருந்தோம். ஒரே இளைஞர்மயம் – ஒரு திங்கட்கிழமையன்று, பட்டப் பகலில், மதியம் 3லிருந்து 7மணி வரை நேரம் செலவழிக்க இவர்களுக்கு ஏது அவகாசம்? பணி செய்யுமிடங்களிலோ, கல்விசாலைகளிலோ இருக்க வேண்டியவர்களுக்கு இங்கே என்ன வேலை? (ஒருசில காதல்கத்தரிக்காய்களும் இருந்திருக்கலாமோ என்ன எழவோ!)

…பின்னர் ஏகப்பட்ட விளம்பர ட்ரெய்லர்கள் – எனக்கு இது பிடிபடாததால், அவற்றில் இரண்டை, திரைப்படத்தின் ஆரம்பம் எனவே நினைத்து, ‘ஐயய்யோ, இப்படியா ஆரம்பிக்கும் இந்தப் படம்?’ என மிகவும் பயந்துபோய்விட்டேன்; நல்லவேளை, விளம்பரங்கள் ஓரிரு வினாடிகளில் இளித்துவிடும், இளித்தும்விட்டன; இருதயம் சாதாரணமாக ஓட ஆரம்பித்தது… இதற்கு நடுவில், சிலபல இளைங்கர்களில் பெரிய்ய்ய பேப்பர் அண்டாக்களில் பாப்கார்ன் நிரப்பிக்கொண்டு வந்தார்கள் – இந்த அண்டாக்களை அமர்த்துவதற்கு நாற்காலிகளின் கைப்பிடிகளில் ஒரு சிறு குழி வேறு. அதனைக் கொரிக்கும் சப்தம் கொஞ்சம் பிரச்சினை – ஆனால் படம் ஒருமாதிரி ஸீரியஸ்ஸாக இருந்ததால் அந்த விஷயங்களை ஃபில்டர் செய்துவிட்டுப் படத்தில் ஆழ முடிந்தது. (படுகொலைகளையும் பிழியும் சோகங்களையும் எப்படி பாப்கார்னோடு பார்க்கிறார்கள்? இடைவேளை விட்டவுடன் அதே கும்பல் இன்னொரு தடவை பாப்கார்ன் காகிதஅண்டாக்களைக் கொண்டு வருமோ என நினைத்தேன்; அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை – அந்தக் கும்பலுக்கே இந்த அசட்டையும் வரலாறுகளை அவமரியாதை செய்வதும் கேவலம் எனப் பட்டிருக்கவேண்டும்.)

சரி.

இஸ்லாமின்  இயல்பின்படியே (அதன் கொர்-ஆன்/ஹடித்களின் ஆணைப்படியேதான், அல்லாஹ் ஆணையிட்டபடிதான், அந்த மார்க்கத்தின் ஏகபோக ஸ்தாபகர் மொஹெம்மதின் எண்ணிறந்த சுயவழிகாட்டுதல்களும் அறிவுறுத்தல்களின் படியும்தான்) , ‘காஃபிர்’ ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்,  நம்பவே முடியாத கொடூரங்கள் இப்படத்தில் மிகவும் அடக்கி வாசிக்கப் பட்டுள்ளன.

ஆனால், என் மனைவி சொன்னது என்னவென்றால் – படம் பார்ப்பதன் மூலம் மட்டுமே இவ்விஷயங்களுக்கு அறிமுகமாகும் ஒரு ஆம்-ஜன்தா பார்வையாளன், விபரீதமான விஷயங்களை மிகவும் தத்ரூபமாகக் காட்டினால் (அவை 100% உண்மையாகவே இருந்தாலும்கூட) – வாயடைத்துப் போய்விடுவான், சுரணையே போய்விடும்; மேலும் மதச்சார்பின்மைக்காரர்களின் ஓலங்களை ஒருபக்கம் கடாசித் தள்ளினாலும் ஸென்ஸார் போர்ட் என்றெல்லாம் இருக்கிறதே, முட்டாளே! மிக முக்கியமாக, இது வர்த்தகரீதியாக வெற்றி பெற்றால்தானேடா இன்னமும் இம்மாதிரி படங்கள் வரும்? உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்?

எனக்கு என்ன பட்டது என்றால் – கற்பழிப்புகளை, பெற்றோர்களுக்கு எதிரில் மகள் சூறையாடப்படுவதை, கணவனுக்கு எதிரில் கும்பல்கும்பலாக மனைவி கற்பழிக்கப் படுவது, தோலுரிப்பது கண்களை நோண்டுவது, ஆண்குறிகளை அறுப்பது, பெண்குறிகளைக் கிழிப்பது போன்றதயெல்லாம் காட்டவேண்டாம்; மாறாக, குறைந்த பட்சம் – இஸ்லாமியப் பெண்களும் குழந்தைகளும் கொலைவெறிகளில் ஈடுபட்டதைப் பற்றி, ஆயிரக் கணக்கில் வீடுகள் அழிக்கப் பட்டமை, கடைகள் சூறையாடப் பட்டமை, குற்றுயிரும் குலையுயிருமான கஷ்மீரி ஹிந்துக்கள் நதியிலும் ஏரிகளிலும் விசிறியடிக்கப் பட்டமை குறித்து ஒன்றிரண்டு ஃப்ரேம்களாவது காட்டியிருக்கலாமே என்றுதான்…

பலப்பல கோயில்கள் சிதைக்கப் பட்டிருக்கின்றன, ஆனால் இதில் ஒன்றைக்கூடக் காட்டவில்லையே++.

(ஏனிப்படி எனப் புரியாமலில்லை – அனைவருடைய கதைகளையும், அனைத்துக் கொடுமைகளையும் சொல்லமுடியாது எனத் தெரியும், இருந்தாலும்…)

தொழில் நுட்பம், ஸ்பெஷன் எஃப்பெக்ட்ஸ், கதையோட்டம், சில இடங்களில் கண்டின்யூய்ட்டி இல்லாமை, கிழவனின் கை போல நடுங்கிக்கொண்டிருக்கும் கேமரா, சில சமயங்களில் தேவையே இல்லாத இசை, பேச்சுகளில் செயற்கைத் தனம், மிகைப் பேச்சு++ என ஆயிரம் நொள்ளை சொல்லலாம்.

ஆனால் முந்தைய பதிவில் சொன்ன காரணங்களாலும், விவேக் அவர்கள் இதில் துளிக்கூட மங்க்கி-பேலன்ஸிங் (monkey balancing =”கொலைகாரன்களுக்கும் அவர்கள் பக்க நியாயம் இருக்குமில்லையா” அல்லது “ஒருவன் விடுதலைப் போராளியா அல்லது கொடூரக் கொலைஞனா என்பது நம் பார்வையைப் பொறுத்த விஷயம்” அல்லது “எல்லா மதங்களிலும் கொலைவெறி இருக்கிறது, ஹிந்துக்களிலும் அட்டுழியக் கொலைகாரர்கள் இருக்கிறார்கள், சந்தனக்கட்டை வீரப்பன் இருந்திருக்கவில்லையா?” வகை ‘தர்க்கரீதியான’ அணுகல்கள்) செய்யவில்லை என்பதாலும் – பாரதீயத்துக்கு நம்முடைய குறைந்த பட்ச பங்களிப்பாக இந்தப் படத்தைப் பார்த்தால், உங்களுக்கு காசியில் காராம்பசுவை வளர்த்தெடுத்த புண்ணியம் கிடைக்கும்.

நன்றி.

10

இந்தப் பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது – ஆகவே கீழ்கண்ட விஷயங்களை, அடுத்த பதிவில் பார்க்கலாமா?

இந்தப் படத்தினால் (மட்டும் அல்ல) பாரத சமூகம் பெறக்கூடும் படிப்பினைகளும், பாடத்திட்டமும் யாவை?

எல்லாம் சரி, இவ்வளவு கோர இஸ்லாமிய விஷயங்கள் நடந்திருக்கின்றன – இதெல்லாம் நமக்குத் தெரியவரவில்லை என்பது உண்மைதான். ஏனிப்படியானது? இப்போதாவது நமக்குத் தெரிந்தேயாகவேண்டிய விஷயங்கள் நம்மை வந்தடைகின்றனவா?

டீப்-ஸ்டேட் என ஒன்று இருக்கிறதா? நடப்பதெல்லாம் கான்ஸ்பிரஸி/சதிவலைத்திட்டம் என எடுத்துக்கொள்கிறேனா?

ஏன், நான் சொல்வதெல்லாம்கூட ஒருமாதிரி சதிவலையின் அங்கம், ஹிந்துத்துவா பரப்புரை எனக் கொள்ளலாமே?

…பார்க்கலாம்.

(நினைவூட்டல்: என், வெட்கங்கெட்ட கோரிக்கை)


26 Responses to “விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படத்தை முன்வைத்து, கஷ்மீர் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள் – முழநீளக் குறிப்புகள்”

  1. அசுரதிராவிடன் Says:

    இசுலாமியன் ஏன் பாப்பானுங்கள ஒழிச்சான்? இவனுங்க இப்படி வெறுப்பைக் கக்கினாக்க அவன் என்னதான் செய்வான்?

    அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி அபிஷ்டு, ஆத்துக்குள்ளயே பதுங்கி பதிவு போடும் ஓய்.


    • ? Dear 🤡,

      🤣.

      💪🏿

      • Em Says:

        I doubt if this idiot even read the whole article.
        Do dravidiots join these cults and lose all cognitive ability or is it a pre-condition to join this thuggish cult ? Worse is when I see decent people believing their spiel and justifying their actions. I wonder if we will see a Dravidiology-mukt TN in my lifetime.


      • என் நண்பரைப் படுகேவலமாகக் கிண்டல் செய்வதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

  2. தமிழன் Says:

    வணக்கம் ஐயா,
    த கஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த இந்தப் பதிவு பாழுங்கிணறே உலகெனும் மாயையில் உழலும் தமிழ்ச் சமூகம் விழித்தெழுவதற்கான இன்றியமையாக் கொடை. இதன் பின்னிருக்கும் தங்களது உழைப்பிற்கும், நேர்மைக்கும், நெஞ்சுரத்திற்கும் எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்! பெயரோ புகழோ பெரும்பணமோ எதிர்பாராமல், மிரட்டல்களையும் சதிகளையும் கடந்து, தொடர்ந்து உண்மையைத் தரவுகளுடன் உரத்துக் கூறிவரும் தங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம்!

  3. Rajmohanbabu Mani Says:

    ராம் சின்ன ஒரு திருத்தம் முக்தி முகம்மது சயீத் விபி சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார் கடத்தல் நடந்த சமயம் 8 Dec 1989


    • ஆ! என் தவறு. திருத்திக் கொண்டேன். (கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு  வரைவுகளை – காலவரிசை பெயர்கள் எண்ணிக்கைகள் உட்பட –  ஒன்றுக்குஇருமுறை சரிபார்த்திருக்கிறேன், என நினைத்திருக்கிறேன் – இது ப்ளடி தப்பியிருக்கிறது, மன்னிக்கவும்! இப்போது, நான் முன்னம் எழுதியதை அப்படியே அடித்திருக்கிறேன்)

      நன்றி!

  4. Swami Says:

    Brilliant post, Ram!
    Will try to spread this far and wide

  5. அல்லா பிச்சை Says:

    எல்லாம் பொய். வெறிபிடிச்ச நாயே  முஸ்லீம் மேல இவ்வளவு வெறுப்பா

    அல்லா உனக்கு நல்லபுத்தி கொடுக்கட்டும்.


    • அன்புக்கு நன்றி.

      எனக்கு முஸ்லீம்களின் மீது வெறுப்பு இல்லை – அவர்கள் நேரடி/மறைமுக ஜிஹாதிகளாக ஆகாதவரை.

      மற்றபடி, எனக்கு ஆழ்ந்த அனுதாபம்தான். உங்களை மீறிய செயல்களினால் (பிறப்பு / குடும்பம் / மூளைச்சலவை / அறியாமை / பொய்மைப் பிரச்சார பாதிப்பு இன்னபிற) நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

      உடனடியாக, ஒரு நல்ல மனோதத்துப்பித்துவ மருத்துவரை அணுகவும். இல்லையேல் (நீங்கள் இருப்பது பஹ்ரைய்ன் பகுதியில் எனப் புரிந்துகொண்டேன்) அருகில் இருக்கும் இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களுடன் இணைந்து மதப்பணி ஆற்றவும்.

      வாழ்த்துகள். மாஷால்லாஹ்.

  6. Aathma Says:

    தலைமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.. என்ன செய்ய..

  7. Rajan Says:

    ஐயா,

    உங்கள் விரிவான இவ்வரைவுக்கு முதற்கண் நன்றி!

    கஷ்மீர் பண்டிட்டுகளின் இன அழிப்பு, பா. ஜ. க. வின் மிகைப் படுத்தப்பட்டப் பிரச்சாரம் என்றே எண்ணியிருந்தேன், உங்கள் ஜனவரி 19 நினைவு குறிப்புகளைப் படிக்கும் வரை. அக்கட்டுரையின் மூலம், நான் அதுவரை ஒரு தீவிரவாதியாக மட்டுமே அறிந்திருந்த, மென்மையான அறிவுஜீவித் தோற்றம் கொண்ட யாசின் மாலிக், எவ்வளவு கொடிய அயோக்கியன் என அறிந்துகொண்டேன்.

    தமிழ் நாட்டு ப்ராஹ்மணர்களுக்கும் இக்கொடுமை வாய்திருக்கக் கூடும், ஈவேரா என்ற வெறியன் ஆட்சி அதிகாரத்தை பற்றியிருந்தால். நல்ல வேளை, அதிகாரம், ஊழல் என அண்ணா அவ்வியக்கத்தை நல்வழிப் படுத்தி மடை மாற்றினார். எனினும் அவர் வழிதோன்றல்கள், அவ்வப்போது 3 சதவிகித்தினர் என நினைவுருத்திக்கொண்டே இருப்பர்.

    இன்று தமிழ் நாட்டில் சில சலனங்கள் நம்பிக்கை அளித்தாலும், The Kashmir Files விவாகரத்தில் பத்திரிகைகளின் கள்ள மௌனம், அறமற்ற நடுநிலை, முழு வெள்ளையடிப்பு, திரை பிரபலங்களின் (ரஜினி உட்பட ) நபும்சகத்தனம் அல்லது முழுத் திரிபு போன்றவை, ஒன்றும் மாறவில்லையோ என ஆயாசம் கொள்ள வைக்கிறது.

    இறுதியாக The Kashmir files பற்றி: தாங்கள் சொன்னது போல் திரைப்படம் சில இடங்களில் நாடகத்தனமாக இருந்தாலும், பல இடங்களில் ரத்தத்தை உறைய வைத்தது என்பதும் உண்மை.. இப்படத்தைக் கண்ட பின், தேடி கண்டுபிடித்து விவேக் அக்னிஹோத்ரியின் Budha in a traffic jam ஐப் பார்த்தேன். ஒரு படைப்பாளராக அவர் எல்லைகளை அறிந்து கொண்டேன் . எனினும் இந்தியத் திரையு லகில் பாரதீயத்தின் சார்பாக தனியாகப் போரிடும் இவர் போன்ற வெகு சிலரை (தமிழ் நாட்டில் இன்றைக்கு மோகன் ஜி மட்டுமே) ஆதரிக்கும் அவசியமும் புரிகிறது.

    ராஜன்


  8. […] ராமசாமி அவர்கள் எழுதியுள்ள முக்கியமான பதிவு இது. ஆங்கிலத்தில் ஓரளவு பரவலாகவே […]


  9. […] ராமசாமி அவர்கள் எழுதியுள்ள முக்கியமான பதிவு இது. ஆங்கிலத்தில் ஓரளவு பரவலாகவே […]

  10. Sesha a.seshagiri Says:

    1992 ஆம் ஆண்டு பிரச்னைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பங்களாதேஷ் ல் இந்துக்களுக்கு எதிராக நடந்த கொடிய வன்முறைச் சம்பவங்களைப் பற்றி தஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” மக்களிடம் சென்றடைந்த அளவிற்கு கூட – அதை விட கொடுமைகள் நிறைந்த- இவை சென்றடையவில்லை என்பது மிகப் பெரிய அவலம்.மேலும் மேற்கத்திய நாடுகளோ, ஐ.நா.சபையோ, மேற்கத்திய ஊடகங்களோ (நம் நாட்டு பொறுக்கி RSB ஊடகங்களை விட்டுத் தள்ளுங்கள் ) பாகிஸ்தான் மாலலா யூசுப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதி அளவு கூட இந்த சோக நிகழ்வுகளுக்கு இன்று வரை கொடுக்க முன்வரவில்லை என்பது காலக் கொடுமை !

  11. Aathma Says:

    ShYou mentioned Sheikh Abdullah’s hate writing comparing with TN movements..I find the same script spoken by Churchill..any dots to be connected? Or is it the true expression?


    • Churchill was of course a racist of the worst order; but, he pretty much acted in his national interest, in the best interests of his empire – which is again is all about colonialism, imperialism, massacres, dirty tricks, imposing slavery (intellectual & physical), brutality and all that. However, I would say that his hate was not necessarily Christian in nature – though all the jargon and ideas of democracy to secularism to imperialism… ALL have their basics in eschatology and biblical underpinnings, which manifest as the ‘whiteman’s-burden.’ He DEFINITELY suffered from that burden, poor beast.

      • Aathma Says:

        Sir..he expressed the same anti-Brahmin sentiments..very identical to what we hear here.. especially his 1935 townhall speech..


      • Sir, agreed. But it stemmed from his colonialist/imperialist feelings – I recollect having written about it too, either on this blog or elsewhere.

        My point is that – he saw brahmins as impediments to the imperial agenda/designs of rent seeking & usurpation – not as some theological impediment to the spreading of christianity.

        In the case of many, many english/german/american Christian missionaries and ALL sufis/islamists – they saw Bs as major impediments to the spread of their superstitions/faiths. My limited point was that Churchill was not looking at the Bs from that perspective. If England’s scoundrel interests were not affected (in his op) by Bs – he may not have bothered.

        (please note that I am not calling him a gentleman or anything)


  12. some past stuff/comment, rather off-tangent, on churchill – https://othisaivu.in/2021/08/24/post-1340/#comment-18836

    I guess, a prev comment/post in which I had specifically referred to that particular offending speech of Churchill is lost/deleted.


    • Do repeat after me:

      Islam stands for peace. It is an inclusive religion. It insists on brotherhood of men. It is for love towards fellow human-beings. It shuns violence.

      Satisfied?

      Yet another Hindu is killed by Jihadis, so what? The murderers are not Muslims. Islam does not teach its adherents to kill. It is for this reason that Pakistan army has ONLY Hindu soldiers – because Muslims just cannot kill. Sorry. It is haram for them.

      Anyway.

      My request to you SNR – NEVER try to read & understand Quran, Sira & Hadiths.

  13. Paramasivam Says:

    Dear Ram,
    Thank you so much for spending time to uncover the truth with historical evidence on Kashmiri Pandit genocide. I will forward it as much as possible.

    Regards,
    Sivam


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...