தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்

March 31, 2023

இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்.

+ ஆறேழு வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து கெடப்பில் போட்டிருந்த வரைவுப் பதிவை பட்டி பார்த்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பிரசுரிக்கிறேன். நன்றி.

1

இது சென்னையின் பூந்தமல்லி (= பூ இருந்த அல்லி) பகுதியில், இப்போது வழிபாட்டில் இருக்கும் மசூதி ஒன்றைப் பற்றிய, கறாரான ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்ட விஷயம்.

ஏன் இதனை எழுதுகிறேன்? இதன் தேவையென்ன?

இம்மாதிரி சர்ச்சைகளுக்குள் புகாமல் நட்டநடு நடிப்பு நிலையெடுத்து முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் — அவ்வப்போது நகைக்கத்தக்க அதிசராசரிகளான நம் தமிழிலக்கியக்காரர்களையும் கொள்ளைக்காரத் திராவிடர்களையும் கிண்டல் செய்துகொண்டிருக்கலாம் அல்லவா?

ஆனால் முடியாது. இதற்குப் பல காரணங்களும் உந்துதல்களும் இருக்கின்றன. அவையாவன:

1. நமது வரலாறு சொல்லிகள்/விளம்பிகள் பெரும்பாலும் அயோக்கியர்கள். வாய்கூசாமல் பொய் சொல்பவர்கள் + அநியாயப் பரப்புரை செய்பவர்கள் என்பதைப் பலப்பல நேரடி அனுபவங்களின் மூலம் அறிந்திருக்கிறேன்; எதை எப்படிச் சொன்னால் பருப்புவேகும் என்பதை அறிந்து தெளிந்து அதற்கேற்றபடி வெறுப்பியத்துடன் நடனமாடுபவர்கள் அவர்கள். ஆக, பாரதத்துக்கான + தரவுகளின் மேற்பட்ட வரலாறுகளை மீட்டெடுக்கவெண்டும் என்பதில் எனக்குக் கொஞ்சம் ஆர்வம். தொடர்ந்து, மிக முக்கியமான விவாதங்களை ​+ உரையாடல்களைக் கட்டெழுப்ப வேண்டும் என்பதில் ஒரு முனைப்பு.

2. தனிப்பட்ட முறை காரியார்த்தப் போராளித்தன அரசியல்சார் குழுமங்களின் பிடியிலிருந்தும் + அவர்களின் காமாலைக்கண் கட்டுரை/புத்தகங்களின் மூலமான பரப்புரைகளிலிருந்தும் மீண்டு – நம்மால் நேர்மையான உரையாடல்களை இணையத்தின் சாத்தியக்கூறுகளின் மூலமாக மீட்டெடுக்க முடியும் என்பதைக் குறித்த நம்பிக்கை.

3. இம்மாதிரிப் பல நிகழ்வுகளை நான் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறுகள் மூலமாகவும் என் ஊர்சுற்றல்கள் + சில மதிக்கத்தக்க பெரியவர்களுடனான உரையாடல்கள் மூலமாகவும் அறிந்திருக்கிறேன்; கொஞ்சம் போலப் புத்தக அறிவும் இருக்கிறது. ஆக, இவற்றில் ஒன்றைப் பறறியாவது எழுதவேண்டும் – அதுவும் வேறு யாரும் காரியார்த்தமாகவோ கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவோ பூசி மெழுகுவதற்கோ எழுதாததை ஆவணப்படுத்தவேண்டும் எனப் பலப்பல ஆண்டுகளாக இருக்கும் நமைச்சல்மிகு விழைவு.

4. முக்கியக் காரணமாக – அண்மையில், நான் ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளிக்கையில் https://othisaivu.wordpress.com/2017/10/18/post-783/ இப்படிச் சொல்லியிருந்தேன்.

இதைப் படித்த ஒரு நண்பர் புண்பட்டுவிட்டார். ‘தமிழகத்தில் எங்காவது இப்படியொரு ‘கோவிலை இடித்து மசூதியைக் கட்டிய விஷயம்’ நடந்திருக்கிறதா எனக்கேட்டு, நீ பொய் சொல்கிறாய் என்று சொல்லித் தொடர்ந்து கொஞ்சம் தரக்குறைவாக எழுதிவிட்டார். இத்தனைக்கும் என்னைப் பற்றி கடந்த சுமார் 15 வருடங்களாக அறிந்துள்ளவர், நேரடிப் பழக்கம். நல்ல நண்பராக இருந்தவர். இருந்தாலும், தேவையேயில்லாமல் என் அம்மாவையும் இழுத்துவிட்டார்; மகன் இப்படி இருப்பதற்கு அதுவும் 50+ வயதில் இப்படியெல்லாம் எழுதுவதற்கு அவன் தாய் என்னதான் செய்வார், பாவம். மேலும், அவர் எனக்குத் தெரிந்து வேறொரு தொழிலும் செய்யவில்லை. எங்களை (கூடப் பிறந்தவர்கள் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்) ஓய்வுஒழிவில்லாமல் ஒரு குமாஸ்தாவின் சம்பளத்தில் வளர்த்தெடுத்திருப்பதே ஒரு முழு நேரப் பணியாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆக.

அவருக்கு என் பதிலாக – அய்யா, எனக்கு நீங்கள் இனிமேல் இந்த ஒத்திசைவு எழவைப் படிக்கவில்லையானால் பிரச்சினையில்லை, என் தாயாரைத் திட்டினாலும் பரவாயில்லை – ஆனால் சர்வ நிச்சயமாக, நான் மனதாறப் பொய்சொல்லவில்லை. எப்படியும் – உங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்றில்லை, நானே இது பற்றிச் சுமார் 20-25 வருடங்களாகவாவது எழுதவேண்டுமென்றிருந்தேன். ஆக, காத்திரமான ஆவணக் குறிப்புகளுடன், நம் சென்னைக்கு அருகில் நடந்த ஒரு விஷயத்தை எழுதுகிறேன்; நீங்களே அதைப் படித்து முடிவு செய்துகொள்ளுங்கள் – என்றேன். ஆகவேயும்.

5. இந்தப் பிறமத வழிபாட்டாளர்களின் வழிபாட்டிடங்கள் சிதைப்பு -> காஃபிர் (முஸ்லீம்களல்லாதவர்கள்) மக்கள், குழந்தைகள் எனக்கூடப் பாராமல் அழித்தொழிப்பு, பெண்கள் அடிமையாக்கப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்படல் -> பின் மசூதிகட்டல் வகையறா மஹாத்மியங்கள் பற்றியெல்லாம் – ஒவ்வொரு முறை இந்த லிபரல்வாதப் பேடிகளுடன் (மண்டையில் அடித்துக்கொண்டு) ஆனால் அமைதியாக உரையாட/விவாதிக்க கடந்தகாலங்களில் நேர்ந்தபோதெல்லாம் (10 வருடங்களுக்கு முன்கூட இப்படி விவாதித்திருக்கிறேன் – ஆனால் பின்னர் இவையெல்லாம் வியர்த்தம் என அறிந்துகொண்டவுடன் துப்புரவாக நிறுத்திவிட்டேன்) – நான் ஆணித்தரமான தரவுகளை அவர்களுக்கு அளித்தாலுமே கூட, அவர்கள் அதனை வெகு சுளுவாகக் கடந்துபோய்ச் சொல்லும் விஷயங்களின் சாராம்சம்: 

அ) நீ ஒரு பிராம்மணன், நீ அப்படித்தான் பேசுவாய் ஆ) நீ ஹிந்துத்துவன் – ஆகவே இ) தமிழகத்தில் இப்படி நடந்ததற்கு ஏதாவது ருசு இருக்கிறதா? ஈ) ஹிந்துக்களும் அப்படி அநியாயம் செய்திருக்கிறார்கள் உ) நீ வரலாற்றாளன் அல்லன், அதற்குப் பயிற்சியும் சரியான அணுகுமுறைமையும் தேவை – ஆகவே.

இவற்றுக்கு என் விரிவான பதில்கள்:

அ) உண்மை. நான் பிராம்மணக் குடும்பத்தில்/குலத்தில் பிறந்தவன். இது எனக்குப் பிரச்சினையாகப் படவில்லை. ஆனால் ஜாதிகீதி விஷயங்களை எள்ளி நகையாடும், துச்சமாக எண்ணும் உங்களைப் போன்ற முற்போக்கு மேதாவிகளுக்கு – எவரைப் பார்த்தாலும்  உங்களுக்கு முதலில் தெரியவேண்டிய விஷயம், இந்த ஜாதிதான்! :-)

ஹ்ம்ம்ம். என்னை தர்மஸாஸ்த்திரங்களின்பயும் சாதா நோக்குகளுடனும் பார்த்தால், நான் அனைத்து வர்ணங்களும் கொண்ட கலவை மட்டுமே. நான் வெறும்பேச்சுப் பேசி வெற்றெழுத்துகளை எழுதித் தொப்பை சரிய அலையும் எழுத்தாளன் அல்லன். உடலுழைப்புக்குத் தயங்காதவன். தேவைப்பட்டால் அடிவுதை வாங்கிக்கொள்ளவும் திருப்பிக் கொடுக்கவும் தெரியும். தொழில்களில் ஈடுபட்டு லாபமீட்டவும் நஷ்டப்படவும் தெரியும். கொஞ்சம் படிப்பறிவு இருக்கிறது. நன்றாகச் சிரிப்பேன். ஹிந்து.

பொதுவாகவே எனக்கு உண்மைதான் (அது ஒவ்வொரு பக்கத்திலிருந்து பார்த்தாலும் ஒவ்வொரு விதமாகத் தெரியலாம் – ஆனால் அதன் ஆதார ஸ்ருதி ஒன்றாகவே இருக்கலாம்கூட என்பது என் கருத்து) முக்கியம். என்னால் முடிந்தவரை, முடிந்த அளவில் அதை நோக்கித்தான் பயணம் செய்வேன், இரட்டைவேடங்களை முடிந்த அளவு குறைத்துக்கொள்வேன். ஆக, மனதாறப் பொய் சொல்லமாட்டேன், அதற்கு அவசியமும் இல்லை. 

இன்னொரு விஷயம்: எனக்கு எல்லா மக்கள்திரள்களிலும் குறிப்பாக முஸ்லீம் திரள்களிலும் – படித்தவர்கள், பண்பாளர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தப் பதிவை இப்போது எழுதிக் கொண்டிருப்பதே ஒரு புணே முஸ்லீம் நண்பரின் வீட்டில் சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய ‘அத்ரக் சாய்’ குடித்துக்கொண்டுதான். நன்றி.

ஆ) ஹிந்துத்துவன் என்பவன் யாவன் என்பதை நான் புரிந்துகொண்ட விதத்தில் 1) ஒருவன் ஹிந்துத்துவனாக இருப்பது கேவலமோ, வெறுப்பியத்தில் அவனை ஈடுபடுத்துவதோ கிடையாது 2) பொதுவாகவே அவன் ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’ எனத்தான் இருப்பவன். ஆனால் இதற்கு அப்பாற்பட்டு, யாராவது திரும்பித்திரும்பி அநியாயமாக அடித்தால், கேவலப்படுத்தினால் திருப்பித் தாக்க (கருத்துகளாலோ கரங்களாலோ – எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளின் படி) யத்தனிப்பவன். அவ்வளவுதான். நம் பப்பரப்பா ஊடகங்களின் மஞ்சள் காமாலை வாந்திகளை நான் உதாசீனம் மட்டுமே செய்வேன். நன்றி.

சரி. எனக்கு மிக ஆழமான விருப்புவெறுப்புகள் இருக்கின்றன, தர்மத்திலும் நம்பிக்கை இருக்கிறது –  ஆனால், வரவர எனக்குத்  துளிக்கூடப் பொறுமையே இல்லை. விரைவில் அதிகோபத்துக்கு ஆளாகிவிடுகிறேன்; ஆகவே, நான் ஒரு ஹிந்துத்துவனா என்பது குறித்து எனக்குச் சந்தேகம்தான். எது எப்படியோ – நீங்கள் என்னை ஹிந்துத்துவன் என்றழைப்பதால் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. சரியா?

இ) இருக்கிறது. சொல்லப்போனால், பலப்பல இருக்கின்றன; அவற்றில் ஒன்றைப் பற்றித்தான் இந்தப் பதிவில் குறிப்புகளைக் கொடுக்கிறேன். உங்கள்  புகழ்பெற்ற சென்னை மாநகருக்குப் பக்கத்திலேயே இருக்கும் பூவிருந்தவல்லியில் உள்ள ஒரு மசூதிதான் அது.

ஈ) இதற்கு நீங்கள் ஆவண பூர்வமாகச் சான்றளித்தால் நன்றாக இருக்கும். எவ்வளவு இடங்களில் மசூதிகளை இடித்து அதில் கோவில் கட்டினார்கள் அந்தகாலத்திய அழிச்சாட்டிய ஹிந்துக்கள், என நீங்கள் நிரூபித்தால் அது மிகச் சரியாக இருக்கும். அதிகம் வேண்டாம் – ஒரு பத்து கோவில்களை இப்படிக் காட்டினால் போதும். நான், வெகுவாக யோசிக்காமலேயே குறைந்த பட்சம் பத்து மசூதிகளை – அதுவும் தமிழ் நாட்டிலேயே இப்படிச் சுட்டமுடியும். ஊக்கபோனஸாக –  சமண, பௌத்தக் கோவில்களை இடித்து மசூதி கட்டியமைகளையும். நன்றி.

உ) உண்மைதான். நான் வரலாற்றாளன் ஆவதற்கு வேண்டிய அடிப்படை ஏட்டுப் பயிற்சி பெறவில்லை. ஆனால், அப்படிப் ‘பயிற்சி’ பெற்ற உங்கள் ரொமிளா தாபர்களையும் இர்ஃபன் ஹபீப்களையும், ராமச்சந்திரகுஹாக்களையுடம் விட என்னால் நேர்மையாக விஷயங்களை அணுகமுடியும். ஏனெனில் நான் பேடியாக உருமாற ஆசைப்படுபவனல்லன்; ஓரளவு படிப்பறிவும் களஅறிவும் இருக்கிறது. இன்னொருவர் போடும் பிச்சைக்காகவும் இன்னபிற ‘உதவி’களுக்காகவும் என் ஆன்மாவை விற்காமல், பிச்சையிடப்பட்ட காசுக்காக நாய் போலக் குரைக்காமல் இருக்கும் மனோபலமும், கையில் வேண்டுமளவு பணமும் இருக்கிறது.  பின்னது தேய்ந்தாலும் மீண்டும் உழைத்துச் சம்பாதிக்கும் திறமையும், ‘தில்’ தைரியமும் இருக்கிறது. சிலபல முறை இப்படித் தேய்ந்துபோய் மேலெழும்பி வந்திருக்கிறேன். இருப்பது ஏதேஷ்டம்; போதும். குறையொன்றுமில்லை கோவிந்தா.

சரி ஐயா, இந்த ஏட்டுப் பயிற்சிக் கழுதை இருக்கட்டும் – என்னுடைய கட்டுரையிலோ, கருத்திலோ ஏதாவது தவறிருந்தால் – அதை நீங்கள் சர்வ நிச்சயமாகச் சுட்டலாமே! நான் திருத்திக்கொள்வேனே! ஆக இது ஒரு பிரச்சினையுமில்லை.

ஆனால், எப்படி இருந்தாலும் உங்களைப் போலல்லாமல், நீங்கள் என்னையும் என் கருத்துகளையும் புறம் தள்ளுவதற்காகச் சொல்லும் சால்ஜாப்புகளை நீங்கள் சொல்ல உங்களுக்குப் பயிற்சி இல்லை எனச் சொல்லவேமாட்டேன். ஏனெனில் இப்படி விதண்டாவாதம் செய்ய உங்களைப் போன்ற பேடிகளுக்கு இல்லாத தொடர் பயிற்சியா?

6. ஆனால், இதை எழுதுவதற்குக் காரணம் – சர்வ நிச்சயமாக தேவையேயற்ற ஹிந்து-முஸ்லீம் பிரிவினைவாதத்துக்காக அல்ல. வெறுப்பியத்தைப் பரப்புவதற்காக அல்ல. தரவுகள் 100%  போல ஒரு பார்வையைச் சுட்டும்போது (மேலும் அது பொதுப் புத்திக்கும் பரப்புரைப் புகட்டல்களுக்கும் எதிராக இருக்கும்போது) அந்தப் பார்வையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதும்தான்.

7. மேலும், அவற்றைக் கருத்தில்கொண்டு – வெகு தீர்க்கமாக, இவையெல்லாம் சரியல்ல, ஆனால் அக்காலத்தில் நடந்தவைதான் என (வெட்டிப் பொய்யோ சால்ஜாப்போ சொல்லாமல்) மனதாற ஒப்புக்கொண்டு – இனிமேல் அப்படிப் பட்ட மதவெறி விஷயங்கள் நடக்கக்கூடாது என முன்னேறவேண்டும் என நினைக்கிறேன்.

8. மறுபரிசீலனைகள் முக்கியம். வாயோர நுரைதள்ளல்கள் ஒதுக்கித் தள்ளப்படவேண்டும். சர்வ நிச்சயமாக – ஒரு காலத்தில் இஸ்லாம் செய்த எதிர்மறை விஷயங்களுக்கு இக்கால முஸ்லீம்கள் ஜவாப்தாரிகளல்ல. ஆனால், நடந்திருக்கும் அயோக்கியத்தனங்களை அறிந்து இனிமேல் அவை மீள்அரங்கேற்றப்படாமல் இருக்க ஆவன செய்யப்படவேண்டும். #NEVER_AGAIN!

9. இப்பதிவு ஒரேயொரு  கோவில் இடிக்கப்பட்டு அதன்மேல் மஸுதி எழுப்பப்பட்ட விஷயம் மட்டுமே.

ஆனால் என்னுடைய குருவிமூளைக்குத் தெரிந்தே பலப்பல இப்படியாப்பட்ட விஷயங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றி விலாவாரியாக எழுத எனக்கு இப்போது தெம்பில்லை.

10. இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து சாதா முஸ்லீம் மீட்டெடுக்கப்படவேண்டும். வறட்டு அரபுமயமாக்கலில் இருந்து, கொர்-ஆன் காலத்திய மூடநம்பிக்கைக் கொடுமைகளிலிருந்து இஸ்லாம் மீட்கப்படவேண்டும். நமக்குத் தேவை, பாரதீயர்களான நம்மெல்லாருக்குமான முன்னேற்றம். இணக்கம். தொடர்ந்த உரையாடல்கள். சொல்வது கொர்-ஆனாக இருந்தாலும் மனுதர்மமாக இருந்தாலும் – நம் பார்வைகளைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து கொண்டு மேலெழும்பும் பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ள வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கடாசவேண்டியவற்றைத் தலையைச் சுற்றி விட்டெறிய வேண்டும். அவ்வளவுதான்.

11. ஒருகாலத்தில் ஐஸக் ந்யூட்டன் அவர்கள் சொன்னது போல hypothesis non fingo என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும் – நான் ஒருவிதமான புதுக் கோட்பாட்டையுமோ, இல்லாத வரலாற்றுப்போக்கையோ சுட்ட வரவில்லை. இருந்த, இருக்கும் வரலாறுகளைக் குறித்த என் புரிதல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவுதான். ஏற்றுக் கொள்ளமுடியுமானால் ஏற்றுக்கொள்ளவும். ஆரோக்கியமான விவாதங்களில் நம்பிக்கை இருந்தால் உரையாடலாம்.

தேவையேயற்ற கோபமோ கழிவிரக்கமோ வேண்டாம். (நீங்கள் நான் எழுதுவதையெல்லாம் படித்தேயாகவேண்டும் அல்லது ஏற்றுக் கொண்டேயாகவேண்டும் எனச் சொல்லவில்லை. இது இருவழிப் பாதை, சரியா? உங்களுக்கு உங்களுடையது, எனக்கு எனது. அவ்வளவுதான்!)

சரி. பீடிகை (=cheroot cigar hand © S. Ramakrishnan, 2023)  போதும். விஷயத்திற்கு வருகிறேன்.

2

பூந்தமல்லியில் பல மசூதிகள் இருக்கின்றன.

இவற்றில் பழமையானது 1653 வாக்கில் ‘கட்டி’ முடிக்கப்பட்ட ‘பெரிய மசூதி’  அல்லது ‘பெரிய பள்ளிவாசல்.’

ஒரு சமகால வரலாற்று நிகழ்வுப் பார்வைக்காக, இந்த மசூதி கட்டப்பட்ட காலங்களில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருந்தன (எந்த ஒரு விஷயத்தையும் இப்படிப் பின்புலத்தில் வைத்து நினைவில் கொள்வது எனக்குப் பிடித்தமான விஷயம்) என்பவற்றச் சுருக்கமாக அவதானிப்போமானால்: 1600களின் நடுவில், தஞ்சாவூர் நாயக்கர்களில் மிகமுக்கியமானவரான ரகுநாத நாயக் தஞ்சையில் மன்னராக இருந்தார்.  மசூதி கட்டி முடிக்கப்படும்போது விஜயராகவ நாயக் தஞ்சை மன்னராக இருந்தார். திருமலை நாயக்கர் மதுரையில். 1620 வாக்கில் டேனிஷ் (டென்மார்க் காரர்கள்) கொள்ளைக்கார ஆசாமிகளும் பாதிரிகளும் தரங்கம்பாடியில் குடியமர்ந்தனர்.  1639 வாக்கில் ப்ரிட்டிஷ் ஆட்களால், ‘மதறாஸ்’ அல்லது ‘சென்னை’யின் ஆதிக்கம் ஆரம்பிக்கப் பட்டது. வந்தவாசியின் நாயக்க அரசரான தமர்லா வெங்கர்லா நாயக்கடு அவர்களிடமிருந்து இதற்கான உரிமையை ஃப்ரேன்ஸிஸ் ட்ரேக் பெற்றார்.

விஜய நகரப் பேரரசும் ஹம்பே நகரும் ஒழிக்கப்பட்டு அவ்வரசு க்ஷீணித்த நிலையடைந்து ஏறத்தாழ 100 வருடங்களாகியிருந்தன. மொகலாயர்களுக்கு அடங்கிய தக்கணி ஸூல்தான்கள்தாம் தென்னிந்தியாவில் பிரதானம். மகாமகோ சத்ரபதி ஷிவாஜி அவர்கள் மேலெழும்பிக் கொண்டிருந்தார். வட இந்தியாவில் முகலாய அரசர் ஔரங்க்ஸெப்… ஃப்ரான்ஸில், ரீனெ டகார்ட் (‘டெஸ்கார்டஸ்’) தத்துவப் புத்தகங்களை எழுதிக்கொண்டிருந்தார். சீனாவில் மிங் காலம் முடிந்து மஞ்சூக்கள் மேலெழும்பிக் கொண்டிருந்தனர்.  ஐஸ்ஸக் ந்யூட்டன் புவியீர்ப்பு சக்தி பற்றி ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தார்.

முனீஷ்வரா அவர்கள், துல்லியமான ஸைன் அட்டவணையை (sine tables) வடிவமைத்துக்கொண்டிருந்தார் + ஸிந்தாந்த தத்துவபௌமா எழுதிக்கொண்டிருந்தார்.

வாராணஸீயின் கமலாகரா அவர்கள் ஸித்தாந்ததத்துவவிவேகா எழுதிக்கொண்டிருந்தார் – இது ஒரு அழகான, பலப்பல வானஸாஸ்திர (astronomy) பற்றிய தேற்றங்களையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய ஒன்று… … இன்னபிற இன்னபிற…

(பெருமையும் பெரும்பாலும் மேன்மைகள் குறித்த உந்துதல்களும் மிக்க காலங்கள் அவை. ஏனெனில் ஐயன்மீர் – அக்காலங்களில் திராவிடர்கள் இல்லை)

நன்றி: https://en.wikipedia.org/wiki/Big_Mosque,_Poonamallee

சரி. இந்தப் ‘பெரிய பள்ளிவாசல்,’ ஸுன்னி இஸ்லாமின் சில பகுதிகளை உள்ளடக்கிய (பெரும்பாலும் ஹன்பலி, மலீகி, ஷஃப்-ஈ, ஹனஃபி பிரிவுகள் – இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய இஸ்லாமிய  ஜாதியினரே மேலாதிக்கப் பாரம்பரியக் காரர்கள், வழிகாட்டிகளாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள் – பிற திரள்களைத் துச்சமாக மதிப்பவர்கள்) வழிபாட்டாளர்களின் கோட்பாட்டுக் களஞ்சியமான ‘அஹ்லே ஸுன்னத் வால்-ஜமாத்’ குழு/வழிமுறைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டது.

இந்த பூந்தமல்லி பெரிய மசூதியில் இரண்டு கல்வெட்டுகள் / வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.  இதில் ஒன்று பாரசீக மொழியிலும் இன்னொன்று தெலுங்கு மொழியிலும் இருக்கிறது.

இவற்றைப் படித்து, புரிந்துகொண்டு ஆவணப்படுத்தியது மகாமகோ குலாம் யஸ்தானி (Ghulam Yazdani) அவர்கள்; புலமையும் புகழும் பெற்ற யஸ்தானி அவர்கள் (ஹைதராபாத் நிஸாம் கீழ் ஆவணக் காப்பகப் பிரிவில் பணி செய்துகொண்டிருந்தபோது) தென்னிந்தியா முழுவதும் தேடி அலைந்து அதிஉயர்தர உழைப்பினால் சேகரம் செய்த பலப்பல கல்வெட்டுக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு எபிக்ரேஃபியா இந்தோ-மொஸ்லெமிகா (Epigraphia Indo-Moslemica) வருடாந்திர சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.

இதன் 1937-38 வருடத்துக்கான இதழில் இக்கல்வெட்டுகள் குறித்த குறிப்புகள் வெளியிடப்பட்டன.

நான் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் இவற்றைப் படித்து, என் நாட்குறிப்பேட்டில் பதித்த விஷயங்களிலிருந்துதான் இச்செய்திகளை எடுத்தேன்.

3

ஆனால் அதே குறிப்புகளை 1944 வாக்கில் பதிப்பிக்கப்பட்ட ‘A Study of Muslim Inscriptions’ உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.

கல்வெட்டு #1

கல்வெட்டு #2

எது எப்படியோ, மேற்கண்டவற்றையும் இந்த எப்க்ரேஃபியா இந்தோ-மொஸ்லெமிகா இதழின் பக்கம் 53-54லிலும், பக்கம்53ன் இரண்டாம் அடிக்குறிப்பில் இருக்கும் விஷயங்களையும்…

… தொகுத்துக் கீழே தருகிறேன்.

4

பாரசீகக் குறிப்புகள் சொல்வதன் சாராம்சம்:

1. இந்த மஸூதி அரேபிய ஆண்டு 1063ல் (அதாவது கிபி 1653ல்) கட்டப்பட்டது.

2. அச்சமயம் இப்பகுதி கோல்கொண்டாவின் குத்ப் ஷாஹி பரம்பரை ஸுல்தான் அப்துல்லாஹ் குத்ப் ஷாஹ் (கிபி 1626 – 1672) கீழ் பணிபுரிந்த கர்னாடக பகுதியின் ஆளுநராக இருந்த மீர் ஜும்லா  வசம் இருந்தது.

3. இம்மஸூதியை வடிவமைத்துக் கட்டியது பாரசீகத்தின் இஸ்தாராபாத் பகுதியைச் சார்ந்த ருஸ்தம் இப்ன் பின் ஸுல்ஃபிகர்; அதாவது, ஸுல்ஃபிகரின் மகன்.  இந்த அப்பா ஸுல்ஃபிகர் கோல்கொண்டாவில் அரசவையில் பணிபுரிந்தவர்.

4. யஸ்தானி அவர்கள் அடிக்குறிப்பில் எழுதுகிறார் –  “In the margin of the tablet, two Persian couplets are carved, the letters of which have been abraded by the effect of weather. The following words, however, can be deciphered: Destroyed the house of idols and built a mosque, demolished infidels built.”

அதாவது – இந்தக் கல்வெட்டின் விளிம்பில்/ஒரு ஓரத்தில் இரண்டு பாரசீகக் கவிதை வரிகள் (couplets) குறிக்கப்பட்டுள்ளன, காலத்தின் போக்கினால் எழுத்துகள் கொஞ்சம் தேய்ந்தநிலையில் இருக்கின்றன. ஆனாலும், கீழ்கண்ட வார்த்தைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

விக்கிரகங்கள் இருக்கும் கோவிலை உடைத்து மசூதியைக் கட்டினோம், இஸ்லாமியர்களல்லாதவர்கள் கட்டியதை…

குறிப்பு: கொர்-ஆனிலும் வரும் இந்த  ‘house of idols’ என்பது பொதுவாக – கடவுள் விக்கிரகங்கள் வைத்துள்ள கோவில்களை / பிற வழிபாட்டிடங்களைக் குறிக்கும். கொர்-ஆனிலும் இம்மாதிரி ‘house of idols’ பிறமதக் கோவில்கள் இடிக்கப்பட்ட விஷயங்கள் வருகின்றன. மக்கா நகரில் இருக்கும் ‘காபா’ இஸ்லாமுக்கு முந்திய காலங்களில், பிறமதச் சார்பாளர்களின் கோவிலாகத்தான் இருந்தது. மக்கா வெற்றிகொள்ளப்பட்ட பிறகு மொஹெம்மத் நபி – இக்கோவிலில் நுழைந்து உள்ளிருக்கும் சிலைகளை – அமைதி மார்க்கத்தில் உலக நன்மைக்காகவும் மானுட மேன்மைக்காகவும் – உடைத்தார்.

இவையெல்லாம் பகிரங்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள்தாம். ஆக நான் சொல்லவருவது, பூவிருந்தவல்லியில் கோவில் தகர்க்கப்பட்டது பின்னர் அதன்மேல் மஸூதி கட்டப்பட்டது போன்ற விஷயங்கள் போன்றவைு ஒன்றும் நடக்கவே நடக்காதவையுமல்ல புதியவையுமல்ல. திடுதிப்பென்று ஆகாயத்திலிருந்து குதித்தவையுமல்ல. மதப் பரப்பல்களுடன் பின்னிப் பிணைந்த விஷயங்கள்தாம்.

தெலுங்குக் குறிப்புகள் (இவை பாரசீக எழுத்துகளின் கீழ் இருக்கின்றன) சொல்வதன் சாராம்சம்:

1. ருஸ்தம் – பூவிருந்தவல்லி கோட்டையில் ஹவலுதாரு (= ஹவல்தார்).

2. ஹஜராதி நவாபு சாஹேபுகளு (=மீர் ஜும்லா) – கோல்கொண்டா அரியணையில் அமர்ந்த ஹஜராதி ஆலம்பன்னா ஸுல்தானு அப்துல்லா குடுபு அபராஜகாரு – வின் பணியாள்.

3. இந்த மசூதி நிலவும் சூரியனும் இருக்கும் வரை நீடிக்கும்.

4. இந்த மசூதிக்கு இடர் கொடுப்பவர்களுக்கு – காசியில் பசுவைக் கொன்ற பாவம் போய்ச்சேரும். :-)

(என்னாங்கடா இது! பாய்மாருங்க கோவில இட்ச்சிட்டு கட்ன மசூதிய இட்சான்னாக்க, காசில பசுவைக் கொன்ன பாவம் வரும்ண்றாங்க!!)

5. யஸ்தானி அவர்கள் அடிக்குறிப்பில் எழுதுகிறார்: 

“The superstructure of the mosque is built of brick and mortar, the base being of stone, which may have originally formed part of a Hindu temple.”

அதாவது – மசூதியின் மேற்பகுதி செங்கல்+சுண்ணாம்பினாலும் – அதன் அடிவாரக் கட்டமைப்பு கற்களினாலும் ஆக்கப் பட்டுள்ளது – இந்த அடிமானம், அங்கு முன்னமேயிருந்த ஹிந்து கோவிலின் பகுதியாக இருந்திருக்கலாம்.

QED :-(

குறிப்பு: அது ஹிந்துகோவிலை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதாக இருந்தாலும், கடந்த சுமார்  370 ஆண்டுகளாகத் (2023-1653) தொடர்ந்துகொண்டிருக்கும் இம்மசூதிக்கு நான் இடர் கொடுக்க விரும்பவில்லையானாலும், காசியில் பசுவைக் கொன்ற பாவம் போன்ற ஷிர்க் வகையறாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

5

இம்மசூதிக்கு (இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைக் குறித்து தரவுகளைச் சேகரிக்க) சுமார் 40 வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். அப்போதும் கூட மஸூதியின் கீழே, தமிழகக் கோவில்களில் இருக்கும் கருங்கல்/க்ரேனைட் அடித்தளத்தைப் பார்க்க முடிந்தது. அது ஒரு சிவன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதிலிருந்த, அநியாயமாகத் தேய்ந்தும் சிதைந்தும் போயிருந்த சிவபுராண சித்திரிப்புகளால் புரிந்தது. அந்தக் கல்வெட்டும் இருந்தது.

இக்கட்டுரையை எழத, 2017 வாக்கில் என் அத்யந்த நண்பன் உதவியுடன் ஓரிருமுறை சென்றேன். யாரையும் பார்க்க முடியவில்லை. கல்வெட்டும் இல்லை! அங்குள்ள மஸுதிக் காப்பாளர்களுக்கோ இமாம்களுக்கோ ஒரு விஷயமும் தெரியவில்லை.

மேலும், மஸூதித் தளத்தின் உயரம், மண்ணைப்போட்டு நிரவி, பின்னர் கடப்பைக் கல் தளம் அமைக்கப்பட்டு அதிகரிக்கப் பட்டு இருந்தது – ஆகவே கீழுள்ள ஹிந்து கோவில் கருங்கல் தளத்தையும் சுற்றுச் சுவரையும் பார்க்கவே முடியவில்லை. சோகம்.

பின்னர் தனியாகவும் சென்றேன் – அந்தப் பக்க நியாயத்தையும் கருத்தில் கொள்ள விழைந்தேன்.  பிரச்சினை என்னவென்றால், என்னிடம் சொல்லப்பட்டது, ‘அந்தக் கல்வெட்டு, தமிழக அகழ்வாய்ராய்ச்சி டிபார்ட்மெண்டால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது’ என்று! ஆனால் ஜிஹாதிப் பாவிகள் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். (ஏனெனில் அக்கல்வெட்டைச் சிதைத்து, அதன்மேல் சுவரையும் எழுப்பிப் பூசி மெழுகியிருக்கிறார்கள் என அறிந்துகொண்டேன்)

இது கிரிமினல் குற்றம்.

வேலுதரன் என்பவர் இதே அழிச்சாட்டிய மசூதிக்குச் சென்று புளகாங்கிதக் குறிப்புகளை எழுதியிருக்கிறார்: Big Mosque / Poonamalle Mosque/ Jummah Masjid / ஜும்மா மஸ்ஜித், Poonamallee, Chennai, Tamil Nadu – முடிந்தால் படிக்கவும்.

6

நம் கண்ணெதிரில், சென்னையிலேயே எட்டிவிடும் தூரத்தில், ஒரு அவமானச் சின்னம் இருக்கிறது.

அதை ஹிந்துக்களாகிய நாம் அறிந்தோமில்லை.

ஏன், அங்கு செல்லும் முஸ்லீம்களுக்கும் அதனைக் குறித்த வெட்க உணர்ச்சியோ குற்ற உணர்ச்சியோ இல்லை.

அந்த மஸூதியின் நிர்வாகமோ – தரவுகளையே அழித்து விட்டிருக்கிறது; வரலாற்று ஆவணங்களையே கிரிமினல் தனமாக ஒழித்திருக்கிறது.

மூன்று வழிகள் இருக்கின்றன:

1. மஸுதி நிர்வாகமே – ஹிந்து பொதுஜனங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு – அந்த வளாகத்தை விட்டுக் கொடுக்கலாம்.

2. மஸூதி நிர்வாகம் அப்படிச் செய்யும் பட்சத்தில் – அவ்வட்டார ஹிந்துக்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு பிரச்சினையை அத்துடன் விட்டுவிடலாம் – அல்லது நியாயமாகவே, மீட்கப் படக்கூடிய  வளாகத்தின்மீது உரிமை பெறலாம்.

3. ஒன்றுமே நடக்காதது போல, இதையும் கடந்து விட்டுச் செல்லலாம்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

குறைந்த பட்சம், தமிழக அரசின் தொல்லியல் துறையாவது – அவ்வளாகத்தில் இருந்து கல்வெட்டுகளை மீட்டு, அகழ்வாராய்ச்சி செய்து கீழே என்னதான் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.  (எப்படியும் துறை – அந்தக் கல்வெட்டு மாயமானதைக் குறித்து புலன் விசாரணை செய்யவேண்டும்)

அ. ஏனெனில் மஹாமஹோ குலாம் மஸ்தானியே ஹிந்து கோவில் சிதைப்பு பற்றிப் பேசியிருக்கிறார்.

ஆ. இஸ்லாமில் மஸூதிகள் புனிதம் என்பதே இல்லை. அது தொழுகை நடத்துமிடம், அவ்வளவுதான் – அதனை தெருவிலும் செய்யலாம் (செய்கிறார்கள்), வீட்டிலும் செய்யலாம்.

பார்க்கலாம் – எதிர்காலம் எப்படி விரிகிறதென்று…

5 Responses to “தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்”

 1. தமிழன் Says:

  //தமிழகத்தில் எங்காவது இப்படியொரு ‘கோவிலை இடித்து மசூதியைக் கட்டிய விஷயம்’ நடந்திருக்கிறதா எனக்கேட்டு//
  சமீபத்தில் நண்பரொருவர் சேலம்-சென்னை இரயில் பயணத்தின்போது தான் கவனித்ததைச் சொன்னார். பயணங்களின்போது வேடிக்கை பார்ப்பதைக் கர்மசிரத்தையாகக் கடைபிடிப்பவர் அவர். ஜோலார்பேட்டை தொடங்கி காட்பாடிக்கு இடைப்பட்ட பகுதிகுள்ளாக கணிசமான எண்ணிக்கையில் முளைத்து விரிவடந்துவரும் ‘கட்டுமானங்கள்’ யாருடையவை என்பதைத் தன்னைப்போல வேடிக்கை பார்க்கும் எவரும் உணரலாம் எனவும், ஆனால் அவ்வாறு வேடிக்கை பார்ப்பதில் பெரும்பாலானோர் பாரதப் பெரும்பான்மையினர் என்பதால் வேடிக்கையோடு மட்டுமே நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார். இக்கட்டுமானங்களின் நோக்கம் தங்களது நம்பிக்கையைப் பின்பற்றுவதாக இருந்தால் அதில் தவறேதும் இல்லை. மாறாக, பிறரது வழிபாட்டிடங்களைச் சிதைத்து, சட்டத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பான வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பு செய்து மற்றவர்களை அச்சுறுத்தித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் இவை பெருகிவருமாயின் பாரதூர விளைவுகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  //நீ பொய் சொல்கிறாய் என்று சொல்லித் தொடர்ந்து கொஞ்சம் தரக்குறைவாக எழுதிவிட்டார். இத்தனைக்கும் என்னைப் பற்றி கடந்த சுமார் 15 வருடங்களாக அறிந்துள்ளவர், நேரடிப் பழக்கம். நல்ல நண்பராக இருந்தவர்.//
  ஐயா, மனமறிந்தோ/பிறழ்ந்தோ வாய்க்குவந்ததைப் பிதற்றுபவரிடம் பேசத்துணிந்த நீங்கள் அக்மார்க் பாரதீயர்தான், ஆனால் ஐயா தங்களை வேறாகக் காட்டிக்கொள்வதையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவர்களிடம் இப்படி ஆதாரங்களை அடுக்குவதால் ‘ஒரு பயனும் இல்லை’. மிருகபலத்தை மட்டுமே அறிந்த குற்றவாளியிடம் பாதிப்புக்குள்ளானவன் சாத்வீகமாக நியாயம் கோரும் கையறு நிலைதான் இது.

  கண்ணிருந்தும் குருடனாய் வாயிருந்தும் ஊமையாய் நாம் வாளாவிருக்கும்வரை விமோசனமில்லை.

 2. பாலாஜி Says:

  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விமோச்சனம் தெரியவில்லை


  • Am not sure whether all these atrocities can be reversed at all – but at least we can become more aware of them.

   But if one loses all hope, then there is nothing to scaffold us, yeah? We might as well scope ourselves out.


  • உண்மை. ஹிந்துக்களுக்கு வீதிபலம் இல்லை.

   பொதுவாகவே ‘ஹிந்து’ என்று சிந்திக்காமல், வெறுமனே தான், தன் குடும்பம், சுற்றம், திரள் எனப் பழக்கப்பட்டுவிட்டவர்கள் – இதுவும் ஒருமாதிரி பரந்துபட்ட பலம் தான் என்றாலும்.

   இதுவும் மாறும். நம்பிக்கையின் பாற்பட்டதுதான் நம் சொற்பகால வாழ்க்கை.

   ஆனால் ரிதவோ, தர்மமோ – ஸாஸ்வதமானவையல்லவா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s