விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள்

March 20, 2022

அடுத்த பதிவானது, விவேக் அவர்களின் திரைப்படம் குறித்த காத்திரமான ‘விமர்சனம்’ ஆக இருக்காது…

…மாறாக – அதன் குறிக்கோள், இந்தப் படத்தினை முகாந்திரமாகக் கொண்டு – என் நினைவுகளையும், நேரடி அனுபவங்களையும் + சிந்தனை(!)களையும் – அதாவது இஸ்லாமியக் கொலைவெறி – அதன் கஷ்மீர் ஜிஹாதி எடிஷனின் பின்புலம், இடதுசாரி/திராவிடிய/’லிபரல்’ அயோக்கிய அறிவுஜீவிகள், ஊடகப் பேடிகள், மேலெழும்பும் பாரதீயம் போன்ற விஷயங்களையும், நாம் மறந்துவிட்ட வரலாறுகளையும் ஒருமாதிரித் தொகுத்துக் கடைவிரிப்பது மட்டுமே.

திரைப்பட இலக்கண, மொழி, கதை நகர்த்தல், தொழில்நுட்ப ரீதியாக – இந்தப் படத்தை வெகுவாகப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது என் துணிபு; இந்த நோக்கில் அது நம்மூர் மிஷ்கின், வெற்றிமாறன், மணிரத்னம், ஷங்கர், பாலா, பாரஞ்சித் போன்ற சராசரி திராபைகளின் அளவில்தான் (ஆனால், அவர்களுடைய மெகா பட்ஜெட்டோ, மினுக்கலோ, ஓவராஸீன்போட்றதோ, அறச்சீற்ற அறைகூவலோ இல்லாமல்) இருக்கிறது.

அதற்குச் செலவான சுமார் ரூ.15 கோடி – பிற பல படங்களைப் போல (நம் தமிழ்த் திரைப்பட தண்டங்கள் உட்பட), திருட்டுப்பண முதலீடு இல்லாமல் இருப்பது இன்னமும் மகிழ்ச்சி தருவது.

அப்படியானால், ஏன் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்?

அதன் உண்மையான கருவுக்காக, மிகக் கோரமான விஷயங்களைப் பெருமளவில் அடக்கி வாசிப்பதற்காக, இந்தியத் திரையுலகத்தின் அதிசராசரித்தனத்தையும் பேடிமையையும், மதச்சார்பின்மைக் கொட்டையின்மையையும் மீறி இது தைரியத்துடன் வெளிவந்திருப்பதற்காக +  தற்காலக் கணக்கீடுகளை வைத்துக்கொண்டு பார்த்தால் இது ஒரு லோ-பட்ஜெட் படமாக இருந்தாலும், ஆகவே அதற்குரிய பிரச்சினைகளையும் மீறி ஒப்புக்கொள்ளக்கூடிய தரத்தில் இருப்பதற்காக…

…பெரும்பாலும் விளம்பரமே செய்யாமல் தட்டி-பேனர் என எதையும் வைக்காமலேயே – பாரதப் பொதுமக்களின் ஆன்மாவின் மீது நம்பிக்கை வைத்து உண்மை நிகழ்வுகளைச் சொல்ல முயற்சித்திருப்பதற்காக, கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர்கள் காரணமாக, இடதுசாரி-லிபரல் + இஸ்லாமியப் பெருந்தகை ப்ரொஃபஸர் அறிவுஜீவி கும்பல்களின் வெள்ளையடிப்புகளையும் கேவலக் கருத்துகளையும் மீறித் திமிர்ந்தெழுந்திருப்பதற்காக, விவேக் அவர்களின் துணிச்சலுக்காக (அவருக்கு ஏற்பட்ட பெரும் பிரச்சினைகளை நான் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் அறிவேன்), அது ஒரு ட்ரெண்ட் ஸெட்டராக, புதுமோஸ்தர்களை உருவாக்கியிருப்பதற்காக…

+ பெரும் சாத்தியக்கூறுகள் கொண்ட, மிகுந்த சக்தியுடைத்த ஊடகங்களுக்கு அறச்சக்தியும் இருக்கலாம் எனும் சந்தேகத்தை நம் மனதோரத்தில் துளிர்க்க விட்டிருப்பதற்காக… தமிழ வரலாறுகளின் அயோக்கிய/திராவிட அத்தியாயங்கள் குறித்தும் இம்மாதிரி ‘X ஃபைல்ஸ்’ வரலாம் எனும் நம்பிக்கையை விதைத்திருப்பதற்காக…

…இப்படம் அவசியம் பார்க்க வேண்டியதொன்று. ஆகவே, அடுத்த பதிவு (even by the standards(!) of this infamous blog) மிக நீளமாக இருக்கப்போகிறது.

tl;dr – too long; didn’t read – ” ர்ரொம்ப நீளம், அத்னால படிக்ல’ வகை சோம்பேறி ரொநீஅப ஆசாமிகளுக்கு, முன்னமேயே, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்:

‘நீங்கள் ஒரு பாரதீயனாக, அதாவது மானுடநேயத்தையும் அடிப்படை நேர்மையையும் பொதுவாகவே விரும்புபவராக, சிலபல முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் குறித்த பின்புலங்களைக் கொஞ்சமேனும் அறியும் விருப்பமுள்ளவராக மனதாற உணர்ந்தால், ஒரு குறைந்த பட்சக் கடமையாகவாவது, இந்தப் படத்தை, தியேட்டருக்குச் சென்று பார்க்கவும்.’

சோம்பேறிகள், அடுத்த பதிவைப் படிக்கவேண்டிய அவசியமே இல்லை.

எப்படியும், அடுத்த சில நாட்களில் அதனைப் பதிக்கிறேன்; அங்குமிங்கும் சென்னை-கோவை  பள்ளி பள்ளியறை பள்ளியெழுச்சி என அலைந்து கொண்டிருப்பதால் கணிசமான நேரத்தை அடுத்த பதிவுக்காக ஒதுக்கமுடியவில்லை.

ஆனால் இதனைச் செய்தேயாக வேண்டும். பார்க்கலாம்.

நன்றி.

பின்குறிப்பு: இந்தப் படம் ஹிந்தியில் வந்திருக்கிறது, நான் அப்படித்தான் பார்த்தேன்; ஆகவே, ஆங்கில-தமிழ் ஸப்டைட்டில்களுடன் தமிழகத்தில் இது ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறதா என அறியேன். அப்படி இல்லாமல் இருந்தாலும், இதனை ஒருமாதிரி ஊமைப்படமாகப் பார்த்தாலும் கொஞ்சம் விமோசனம் கிட்டலாம்.

6 Responses to “விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள்”

  1. Sachidanandam Says:

    இந்த படத்தை முழுமையாக பார்க்க என்னால் முடியாது அந்த அளவு மன தைர்யம் எனக்கு இல்லை.


    • ஐயன்மீர்!

      இது பெரும்பாலும் டயலாக்டயலாக் எனப் பலரும் பேசிக்கொண்டே, பலவிதமாகப் பார்வைகளை முன்வைக்கும் படம்.

      வன்முறை என்பதும் மிகமிகக் குறைவாகவே காண்பிக்கப் பட்டிருக்கிறது – இதற்கே தாங்கமுடியவில்லை என்கிறார்கள். (உண்மையில் நடந்தவை பலப்பல மடங்கு அதிக கோரங்கள், எண்ணிக்கையிலும் சரி, இஸ்லாமிய அயோக்கியத்தனத்திலும் சரி)

      மற்றபடி உங்கள் விருப்பம்.

      • Sachidanandam Says:

        சரி…படத்தை பார்கிறேன்

      • Em Says:

        I know that every year you either write about it / post the earlier articles during the anniversary of these horrendous crimes. It used to make me feel sad and helpless. Never been to a movie theatre by myself yet. Thinking of going with a friend to watch because don’t want to be crying alone there after seeing it. The success of this movie and the overwhelming public support in spite of all the efforts to ignore, suppress and vilify the movie is very heartening. News is that the movie will be dubbed in regional languages also. But our vidiyaa-stock only loves feel-good movies without substance. Give them empty rhetoric of the “Thamilanda” type any day that gives us all an inflated sense of ego and they are happy. We just like to blame others for everything that is wrong with us and around us – so I have little hope for even the dubbed version in TN. We’ll see.


  2. Hello Em, long time no Ce. :-)

    It is definitely not a tear jerker (at least for me) but one can’t avoid those lumps-in-the-throat.

    If you even know passable Hindi, you would mostly get it – it is not very ornate or anything. if you are suitably prepared with what happened in Kashmir, then it would not be a tragic experience.

    Please go, if you can help it – if not for anything else, you would feel energized by so many *other* folks in the audience, who are also kindled by the wistful thoughts (and calm, seething outrage at the bottom of their hearts) of Bharatiyata, its lost past and the possibility of a satisfying reclamation.

    And.

    You said it. One of the basics of Dravidianism is this Perennial Victimhood Narrative while surprisingly claiming all the time that, they were Really Great, Stellar, Beyond Compare and all that.

    May be tomorrow, I would post a rather loooong backgrounder, comments & notes on this KP issue, the proximate context being The Kashmir Files.

    Anyway.

    Do watch the film. Good luck, Bharatiyata’s tryst with its destiny is rolling on, blessed by Jagannath. I am a diehard optimist.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s