இஸ்லாம் பற்றி எழுத்தாளர் சுஜாதா – குறிப்புகள்
May 21, 2022
வருடாவருடம் செய்யும் புத்தகங்களைக் கழித்துக் கட்டல் தொடர்பாக கடந்த ஐந்தாறு (=சிந்துநதி, எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன்) வாரங்களாக, என் நூலகத்தின் பழங்குப்பைகளை (+ சிலபல காரணங்களால் எனக்கு இனிமேல் உபயோகப்படமாட்டா ஆனால் பிறருக்கு உதவலாம் எனும் தொகுப்புகளையும்) கிளறி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். சுமார் 120 காந்தி/பாபுஜி தொடர்பான புத்தகங்களை, பெரியவர் ஒருவர் நடத்திவரும் நூலகத்துக்கு அனுப்பினேன். சுமார் 850 புத்தகங்கள் (குழந்தைகள் படிக்கும் வகை) என்னுடைய செல்லமான ஸ்வாதிக்குட்டியின் பெற்றோருக்கு அளித்தேன். பள்ளிவாத்திகளுக்கு உபயோகப் படக்கூடிய சுமார் 400 புத்தகங்கள், வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பள்ளி ஒன்றுக்குத் தானமாகச் சென்று கொண்டிருக்கின்றன. (இப்படியே அடுத்த 2-3 வருடங்களில் என் நூலகத்தைச் சுமார் 1500க்குள் அடக்கிவிட ஆசை, பார்க்கலாம்…)
1
…அப்போது கிடைத்த, பலப்பல வருடங்கள் முன் ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்தனுப்பிய பரப்புரைத் துண்டுப் பிரசூரங்களில் இதுவும் ஒன்று.
ஏதோ இஸ்லாமிய பழக்கவழக்கங்களின் தமிழக வடிவங்கள் பற்றி அவருடன் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தேன் என நினைவு; ஆனால் அவர் அதனை ஒருமாதிரி புரிந்துகொண்டு மதமாற்ற தாவாவில் ஏறக்குறைய ஈடுபட்டு எனக்கு ஒரு பெரிய கத்தை பரப்புரை பிட்நோட்டீஸ்களைக் கொடுத்தார், பாவம். “படிங்க சார், இஸ்லாம் அறிவியல் பூர்வமானது. கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் அதுல இருக்கு. சுஜாதா என்ன சொல்லியிருக்கார் பாருங்க. உங்களைப் போன்றவங்க மார்க்கத்துக்கு எவ்வளவோ செய்யலாம்…”
‘ஐயா, எனக்கு விருப்பமில்லை, எனக்கு இருப்பது ஒருமாதிரி அகடெமிக் இன்ட்ரெஸ்ட்தான்’ என அவரிடம் நேரடியாகச் சொன்னதில் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்தான் என நினைக்கிறேன், பாவம். ஆனால் அவர் நல்ல மனிதர், கேடுகெட்ட காஃபிர் தண்டமான என்னை ஜஹன்னம் நரகத்தின் கொடும்தீயில் இருந்து காப்பாற்றத்தானே முயன்றிருக்கிறார்?
எது எப்படியோ…அதில் இருந்த சுவாரசியமான சுஜாதா கட்டுரையை அப்படியே படம்பிடித்துக் கொடுக்கிறேன். (இந்தக் கட்டுரை, ‘தினமணி ரம்ஜான் மலர் 2003’ல் வந்திருக்கிறது என அப்பிரசூரத்தில் குறிப்பிடப் படுகிறது; ஆனால் அது உண்மையா என நான் சரி பார்க்கவில்லை; ஆனால் அதன் புனைவு நடை சர்வ நிச்சயமாக, சுஜாதாவினுடையதுதான்)
2
வெறுப்பதற்கு ஒன்றுமில்லை – சுஜாதா
3
என் கருத்துகள்:
அல்ஹம்துலில்லாஹ்!
‘சுஜாதா’ ரங்கராஜன் அவர்கள் மகத்தான புனைவெழுத்தாளர் + நல்ல நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர் (அவருடைய இக்கட்டுரையே அதற்கு ஒரு சான்றோ எனவொரு சந்தேகம் எனக்கு…) + பரவலாகப் படித்திருந்தவர் + ஒருவிதமான புதியமோஸ்தர் துள்ளல் நடையையும் சமகால விஞ்ஞானத்தையும், திராவிடத்தால் காயடிக்கப் பட்ட மலட்டுத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் என்பவையெல்லாம் மிகச் சரியே!
அவர் ஆகிருதியில் வளர வளர, பக்தி இலக்கியத்தில் (லும்) தோய்ந்து கனிந்தார் என்பதும் சரியே.
ஆனாலும் நம்மாழ்வாரின் பக்திப் பெருக்கை கொர்-ஆன் ஃபார்வர்ட்-லுக்கிங் வசனங்களுடன் ஒப்பிட்டிருப்பது ஆச்சரியம் தருவது.
அதற்கும் மேலாக, ‘இஸ்லாமேலோர் எம்பாவாய்’ எனப் பக்திப் பரவசத்தில் தன் தந்தையாரையும் இழுத்து விட்டிருப்பது, அக்மார்க் காஃபிராகிய எனக்குத் துக்கம் தருவது. ஆனால், “எல்லா மதங்களும் உண்மையையும் மானுடவொற்றுமையையும் தாமே போதிக்கின்றன,” சொல்லுங்கள்?
ஆகவே.
அ. சுஜாதா அவர்களுக்கு சாளேச்சுரம் வந்தபின் கொர்-ஆனைப் படித்திருக்கிறார் – ஏனெனில் பட்டவர்த்தனமாக கொர்-ஆனில் பலப்பல இடங்களில் இருக்கும் அழிச்சாட்டிய வெறுப்பியங்களில், மாற்றிமாற்றி பல்ட்டிஅடிப்பதில் ஒரு சிறுதுளிக்கூட, அவர் கண்ணில் படவில்லை. பட்டிருந்தாலும், ‘பார்ப்பவர்கள் கண்ணில்தான் பிரச்சினை’ என லூஸ்லவுட்டிருக்கிறார் எனவும் எடுத்துக் கொள்ளலாம்; அல்லது கொர்-ஆனில் வரும்படிக்குக் கழுத்தறுத்துக் கொல்லலாம் என்றாலும் சரியே.
(கீழே, ஒரு எடுத்துக்காட்டாக – ஒருமாதிரி ஏகத்துக்கும் தமிழில் சப்பைக்கட்டுக் கட்டப்பட்ட, கொர்-ஆன் ஸுரா 47 (ஸுரா மொஹெம்மத்) வரிகள் 3-4; அதாவது அல்லாஹ்வை நம்பாதவர்கள் தலைகள் சீவப்படலாம் எனும் ரத்தினச் சுருக்கமான அமைதிமார்க்க வழியைப் பாருங்கள்… (இதற்கு ஆயிரம் முட்டுக் கொடுக்கலாம், உங்கள் விருப்பம்)
(கறாரான மத வரலாறு என இஸ்லாமிலும் இல்லை, ஏகப்பட்ட இடைவெளிகள், இட்டுக் கட்டல்கள், சொதப்பல்கள், அதீதக் கற்பனைகள், நிரவுதல்கள் ++ என்பவற்றையெல்லாம் லூஸ்லவுட்டால்) கொர்-ஆனிலோ, ஹதீத்களிலோ, ஸிராக்களிலோ எந்த ஒரு விஷயமும் மறைமுகமாக இல்லை. எதுவுமே மறைக்கப் படவில்லை. எல்லாமே கற்பனைக்கு என துளிக்கூட இடம் கொடுக்காத பட்டவர்த்தன ‘உண்மைகளை இயம்புதல்’தான். இஸ்லாமிய மதப்புத்தக போதனைகளின் முக்கியத்துவமே அவற்றின் நேரடித் தன்மையிலும், வாழ்க்கைக்கான-நுணுக்கமான-கையேட்டுக் கருத்துகளிலும் தெளிவு படுத்தப்படுவதுதான்)
ஆ. பொதுவாகவே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் புளகாங்கிதத்துடன் பினாத்துவது, நம் பெருந்தகைகள் பலரின் வியாதித் தொற்று. ஆனானப்பட்ட கல்தோன்றி மண்தோன்றாச் சங்ககாலத்திலிருந்து (=பொதுயுகத்துக்கு முன்னமேயே, ~50, 000, 000 ஆண்டுகளுக்கு முன்) இந்த வகை அஅறிவியல் சிந்தனைக்குச் சான்றுகள் இருக்கின்றன என நினைவு.
இதற்கு சுஜாதா அவர்களும் பலியானதை நாம் லூஸ்ல வுடவேண்டும். ஏனெனில், என் பெரும்பேராசான் ஜெயமோகன் அவர்களுக்கு சுஜாதாவைப் பிடிக்கிறதோ இல்லையோ, சுஜாதா அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பலவிதங்களில் ஒரு மைல்கல். இதில் சந்தேகமேயில்லை. (ஆனாலும் சுஜாதா அவர்கள், ஏற்கனவே படுபாவமாக இருக்கும் விக்கிபீடியாவை கமுக்கமாகச் சிதைத்து அதனைக் கயமையுடன் எடிட் செய்து மாட்டிக் கொண்டவுடன் – ஆனால் ‘பிறர் சிதைக்கிறார்களே’ என ஒப்பாரி வைத்து, இன்னொரு விக்கிபீடியா ஆரம்பித்திருப்பாரா என்பது சந்தேகமே!)
இ. என்ன செய்ய…
4
என்னதூ? “தீதும் நன்றும் பிறர் தர வாரா”வா?
தோ பார்ரா…
அப்ப… அந்தக் காலத்து பாய்மாருங்க காஃபிர் கள்த்த சீவினதல்லாம் – நன்றா தீதா?
அத அவிங்க செஞ்சத்துக்கு நாம்பளா காரணம்? அதெல்லாம் ‘பிறர் தர’வில்லையா?
என்னதூ? “நீங்க தப்ச்சி ஓடிப்போய்ர்க்கணுமா?”
இன்னாடா?
“நீங்க தப்ச்சி வோடாம இருந்ததொட்டுதானடே அவ்னுங்க கழ்த்த சீவினாங்க…. இப்ப வந்திட்டு சும்மா கம்ப்ளெய்ன் செஞ்சிக்கினு…. ப்ளடி….”
எங்க பொம்பளீங்கள கொத்துகொத்தா அள்ளிக்கினுபோய் அவ்னுங்க டெண்ட்ல வெச்சிசெஞ்சத்துக்கும் பொம்பளீங்களேவா காரணம்?
“ஆமா! அவ்ளுங்கோ நெர்ப்ல குத்ச்சி செத்திர்க்கலாமே! வொங்க்ளுக்கு உசுரும் வோணும், கற்பும் வோணும், சௌக்கியமாவும் இர்க்கணும்,,, நரகமும் இல்லேண்றிங்க…. மற்பெற்ப்புண்றீங்க… இதெல்லாம் ப்ளடி ஒரு மதமாடே! வொங்க நாக்கப் பிடுங்கிக்கினு சாவணுண்டா நீங்க…”
!!
“நீங்கொ நரகத்ல நெர்ப்ல எரியவோண்டான்னிட்டுதானடே, வொங்க நன்மெக்காகத்தானடே வொங்கள எங்க மார்க்கத்துக்கு மாத்தறோம் – ஏண்டா இப்டி எங்க்ளோட இந்த நல்லெண்ணத்த வொணர்ர மாட்ரீங்க…”
யிப்ப யின்னா?
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”
!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…”
…!
“ஏச்சுச்சொல் யார்யார் வாய் கேட்பினும்…”
!
“இந்துங்க பாவம், அப்பாவிங்க, சும்மா பொலம்பிக்கினு ட்விட்டர்ஃபேஸ்புக்ல கூவுவாங்க… ஆனாக்க இந்துத்துவாவ ஒளிக்கணுண்டே, அது படா டேஞ்சர்!”
?
“வசுதைவ குடும்பகம்-ன்னிட்டு வொங்க ஆள்ங்கதாண்டே சொல்லிக்கீறாங்க…”
அதனாலே?
“சத்யமேவ ஜயதே – அவ்ளோதான், ஆள வுடு…”
??
“இல்லாகாட்டி, லா இல்லாஹா இல்லல்லாஹூ மொஹம்மதுர் ரஸூலல்லாஹு சொல்ல பயிற்சி செய்யி, சாய்ஸ் வோணும்னாக்க அப்டீக்கா, ‘திராவிடம் வாள்க’ இல்ல ‘தமில் தேசியம் வெள்லும்’ அப்டீன்னிட்டும் கொல்கைமுளக்கம் செய்லாம்… இல்லாக்காட்டீ இப்டிக்கா ‘சோசலிசம் ஒண்றே பாசிச யிந்துத்வாக்கு மாட்ற்று!” இல்லேன்னாக்க ‘புர்ச்சி பூபாலம் வெட்ட்ட்டிக்கும்…'”
:-(
“இப்ப வர்ட்டா நைய்னா…”
5
சார், யிப்ப நீங்க யாருங்க?
“பாவிகளே… இந்த மே2022 மாதத்தில் மேய்ப்பரைச் சரணடையுங்கள்…”
ஐயய்யோ!
“பயப்படாதீர்கள்! விசுவாசம் கொள்ளுங்கள்! இதோ எழுத்தாளர் ஜெயமோகன் அருளிச்செய்த யேஸ்ஸுக்றிஸ்துனாதர் யெல்லாருக்கும் ரட்சக மலையதிகப்பிரசங்கக் கட்டுரை, “தெறித்தோடுவதற்கு ஒன்றுமில்லை…”
…
…
சுபம்
May 21, 2022 at 14:49
சுஜாதா இந்த அளவிற்கு துண்டு பிரசுரத்திற்கு எழுதி இருப்பாரா என தெரியவில்லை. எழுதியிருந்தால், வேதனையளிக்கிறது.
May 21, 2022 at 16:15
ஐயா, சுஜாதா அவர்கள் தினமணியில் (ரம்ஜான் மலர், 2003) எழுதிய கட்டுரைதான் அந்தத் துண்டுப் பிரசுரமாக வெளியிடப் பட்டிருக்கிறதுபோல – அந்தப் பிரசுரம் அப்படித்தான் சொல்கிறது. (ஆனால் இதனை நான் சரிபார்க்கவில்லை)
May 21, 2022 at 16:34
நன்றி ஐயா. 21.5 Op-Indiaவில் வசீம் ரஸ்வி அவர்கள் எப்படி 26 verses தற்போதைய கால நடைமுறைக்கு ஒவ்வாதவை என எழுதியுள்ளார். ஆராய்ந்து கூறியிருப்பார் என நினைக்கிறேன்.
அவ்வாறு இல்லாது, சுஜாதா இப்படி அரைகுறையாக எழுதி இருப்பாரா என எனக்கு ஐயம். அவ்வளவே.
May 21, 2022 at 22:13
ஏற்கனவே உங்களிடம் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்களை கேட்டதாக நினைவு. குறிப்பாக இஸ்லாம் மகளிர்கள் அவர்களுக்கு விதிக்கப்படும் பல கடுமையான கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்களை ஏற்று அதை கடைப்பிடிப்பதும், ஆண்களைக் காட்டிலும் தீவிரமாக அவைகளை ஆதரிப்பதும், மேலும் சமீபத்தில் மதம் மாறியவர்கள் தான் பெரும்பாலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும் ,இஸ்லாத்திலும் மனித பேதங்கள் கடைப்பிடிப்பதை பற்றியும் போன்றவை. நீங்களும் எழுதுவதாக சொன்னீர்கள்.
(மேலே உள்ள பதிவில் சுஜாதா எழுதிய பக்கங்களில் ஒன்று மூன்று தடவை பதிவாகியிருக்கிறது மேலோட்டமாக பார்க்கிறவர்களுக்கு அதிகமாக எழுதியிருப்பதை போல் தோன்றப் போகிறது
May 22, 2022 at 06:12
ஐயா, சுட்டியமைக்கு நன்றி; திருத்திவிட்டேன். :-( (பலப்பலர் இந்தப் பக்கத்தைப் பார்த்திருக்கிறார்கள், ஆனால் படித்தார்களா எனத் தெரியவில்லை – இல்லையேல், இம்மாதிரி சொதப்பல்ஸ்களைச் சுட்டி மண்டையில் குட்ட நம்மூரில் ஆட்களுக்கா குறைவு?)
மற்றபடி – அண்மையில் மதம்மாறியவர்கள், பெண்கள் குறித்த சில குறிப்புகளை எழுதினேன் என நினைக்கிறேன்; என் நினைவு சரியானால், அவற்றைத் தேடிப் போடுகிறேன்.
May 22, 2022 at 13:16
“ ஏற்கனவே படுபாவமாக இருக்கும் விக்கிபீடியாவை கமுக்கமாகச் சிதைத்து அதனைக் கயமையுடன் எடிட் செய்து மாட்டிக் கொண்டவுடன்”
இந்த தகவல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சுட்டிகள் இருந்தால் கொடுக்கவும். நன்றி
May 22, 2022 at 17:54
ஐயா, நானே இரண்டுமூன்று முறை அதைப் பற்றி எழுதிய நினைவு (ஜெயமோகன் தன் மனதுக்குத் தெரிந்து, போகிறபோக்கில் அட்ச்சிவுட்டு, பல எழுத்தாளப் பெரியவர்கள் குறித்துச் செய்த அவதூறுகள் ஏராளம் – மேலும் எனக்குத் தெரிந்தே மூன்று எழுத்தாளர்கள் குறித்துக் கண்டமேனிக்கும் எழுதி அவற்றுக்கு முட்டிக்கொடுக்க விக்கிபீடியாவையும் திருத்தி இருக்கிறார்)
ஆனால் – ஒத்திசைவு பதிவுகளில் சுமார் 40% அழிக்கப்பட்ட விவகாரத்தில் அவையும் போய்விட்டனவோ என்ன எழவோ! :-(
‘விமலாதித்த மாமல்லன்’ அவர் பாணியில் இந்த விவகாரங்களில் சிலவற்றை எடுத்து அலசியிருக்கிறார்.
ஒரு பானை ஜெயமோக அயோக்கியத்தனத்துக்கு ஒரு அயோக்கியப் பருக்கை பதம் என வைத்துக் கொள்ளுங்கள். :-(
May 22, 2022 at 21:05
1990-களின் பிற்பகுதியில் சுஜாதா நிறுவனப்படுத்தப்பட்ட எழுத்தாளர் ஆனார். இதனால் அவர் சிலபல சமரசங்கள் செய்யவேண்டியிருந்தது. அவர் 1970-களில் கணையாழியில் சில தமிழ் பிரபலங்களைக் (பாலசந்தர், வாலி, கண்ணதாசன், தமிழ்ப் படங்கள்) கிண்டல் அடித்திருப்பதைப் படித்தால், பின்னாளில் அவர்களை வெகுஜனப்பத்திரிக்கைகளில் பாராட்டியிருப்பதை எளிதாகக் கடக்கலாம். அவருக்குத் தெரியும் “அன்புள்ள அல்லி” கடிதம் எழுதும் தமிழ் அறிஞன் கணையாழி படித்திருக்க மாட்டான் என்று.
அவர் பங்களித்த தமிழ்ப் படங்கள்?! Less said is better.
அதன் எதிரொலிதான் அவர் குரானின் பல பகுதிகளை சொல்லாமல் விட்டது. ஒரு சாதிப் பெயரை சொன்னதற்காக அவரின் தொடர் நிறுத்தப்பட்டது. குரானின் அடுத்தப் பக்கத்தை அவர் சொல்லியிருந்தால்?
நீங்கள் சொல்லியதுபோல் தமிழில் ஆர்வமான நடையைக் கொண்டு வந்தவர். அதனாலேயே அளவுக்கு மீறிய கவனம் அவர் மீது இருந்தது. தொடர்கதைகளை இன்றைக்குப் புரட்டிப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. அவரால் ஆங்கில வணிக எழுத்தாளர்கள் (ஆனால் சிறப்பாக எழுதக்கூடிய) Michael Connelly, Ian Rankin, Frederick Forsyth போல் எழுத முடியாது.
அவரின் அறிவியல் கட்டுரைகள் எல்லாம் இண்டெர்நெட் வந்ததும் காலாவதியாகி விட்டன. அவர் கொஞ்சம் அறிவியல் கலந்து எழுதிய கிறுக்குத்தனமான கதைகளையெல்லாம் “அறிவியல் புனைவு” என்று அவரின் சிஷ்யர்கள் இன்றும் ஜல்லி அடித்துக் கொண்டிருகிறார்கள் (ஃபிலிப் கே டிக், உர்சுலா லெக்வின் போன்ற நிஜ அறிபுனை எழுத்தாளர்கள் இவர்களை மன்னிக்கட்டும்).
சுஜாதாவை எந்தக் காரணத்துக்காக நினைவு கொள்ளலாம்? அசோகமித்திரனின் செகந்திராபாத் கதைகளின் வரிசையில் வைக்கப்படவேண்டிய ஶ்ரீரங்கம் கதைகளுக்கும், நாடகங்களுக்கும். சிறுபத்திரிக்கைகள் அவரை மதிக்கவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் கணையாழி வாய்ப்பு கொடுத்தும் அவரால் ஒரு நல்ல குறுநாவலோ, நாவலோ அதில் எழுதவில்லை என்பதுதான் நிதர்சனம்.
(Sorry I digressed :))) )
May 23, 2022 at 05:22
Sir, thanks.
And no, you did not digress, but gave a lecture. And, am not going to contest you, there are many reasons for it and no reason.
Now it is my turn to ‘digress’ and give you a gedankenexperiment:
You are in 2060 CE. Do you even think of any of the Tamil Litterateurs of 1900s & early 2000s?
Do they even matter to you now? Are there any exceptions, if at all? And, why?
Perhaps, the great grand kids of GPTx & PaLM of the 2020s along with their relatives and friends have long since taken over the atrocious fictions called Tamil literary outputs. The consumption of whose products is also automated and fed to cortex via attachments.
Now can anyone of the old crop be remembered? Were they even worth it to start with, even in their own time?
OTOH what are the stories that you immerse yourself in, as a species given to storytelling?
*snap*
Now, come back to the present:
Is it all bleddy worth it? (apart from the fun value, for a given value of fun, that is)
Quality Tamil literary stuff is in general, a delectable fiction. To a very large extent, let us accept and come to terms/peace with the fact that, we revel in our mediocrity and petty squabbles.
(so ends the early morn rant)
May 25, 2022 at 00:53
I feel Sujatha aped the western novels..it’s very new for Tamil.. he’s good storyteller no doubt…but very light and superficial many times
May 25, 2022 at 05:28
May be, though I would be ‘careful with that axe, Eugene’ as in Pink Floyd.:-)
Sir, am not sure about these views – they may be correct though! He certainly was not The Greatest, but he was good – definitely much better than what we give him credit for. He has/had lots of relative merit.
I also feel that, there is a vilification campaign by the self-anointed ‘great authors’ – especially some of the current crop – to belittle him and many of us fall for it.
Shakespeare and even some of our ‘Sangam Age’ works come across as superficial and heavily borrowed from elsewhere. But, that does not reduce their value much.
Having said that, sir – you have come across that ‘aping’ and it would be lovely for you to think/analyse and write about that. I would be very happy to read and learn from it.
The point that I am making is – almost NONE of our current leading lights and even the prev ones will be remembered by the posterity, irrespective of how much they write.