முஹர்ரம் துக்கத்தை அனுஷ்டிக்கும் முஸ்லீம்களுக்கு, பண்டிட் அயோத்திதாசரின் அறிவுரை
May 21, 2023
முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும்.
மகம்மதியர்கள் என்றால் மகாமதியர்கள் எனவொரு புதியதோர் வியாக்கியானத்தை அளிக்கிறார், தாசனார்.
அவர்கள் – அளவுக்கதிகமான அறிவுடையோர் என்கிறார், நம்மவர்.
இருந்தாலும் அவர், இஸ்லாமையும் விட்டுவைக்கவில்லை என்பதை இறும்பூதுடன் அறிவிக்கிறேன்…
நன்றாகத் தெரிந்த இஸ்லாமிய பௌராணிகக் கதையாடல்களிலும் அவர், தம் இந்திரதேச வேஷபிராமண திரிவாசக வகை சித்துவித்தையைக் காண்பிக்கிறார், வாழ்க! :-)
(சமூக நல்லிணக்கத்துக்காக, மகாமதியர்களின் மேன்மைக்காக – ஒருமாதிரி நல்லெண்ணத்துடன் தான் இப்படிச் செய்திருக்கிறார், பாவம்!)
ஐயய்யோ! அல்லாசாமியைக் கொண்டாடுபவர்களைப் பற்றி இப்படிப் பொசுக்கென்று சொல்லிவிட்டாரே! ஐயகோ!!
…அதற்கு மேற்பட்டு அறிவுரையும் கொடுக்கிறாரே! இந்த ரோதனையைக் கேட்பாரில்லையா!
:-(
சரி.
அதே சமயம், திமுக, நாம்தமிழர் கட்சி, விட்தலே சிற்த்தே கச்சி இத்தியாதி உதிரிக் கட்சிகளில் ஐக்கியமாகியிருக்கும், ‘ஸனாதன தர்மத்தை பூண்டுவெங்காயத்தோடு வேரறுப்போம்’ வகை செல்ல ஜிஹாதிகளுடைய பிரச்சினையையும் மனக்கிலேசத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடியாமலில்லை.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (இந்த 2023ல் முஹர்ரம் ஜூலை-ஆகஸ்டில் வரலாம்), அஷுராவின்போது ஷியாக்கள் துக்கம் அனுஷ்டித்து இமாம் ஹுஸ்ஸைன் இப்ன் அலி (இஸ்லாமிய ஸ்தாபகர் மொஹம்மதின் மருமகன்) மறைவுக்காக வருந்தித் தங்களைத் தாங்களே கத்திகள் பொருத்தப்பட்ட சாட்டைகளால் ரத்தம் கொப்பளிக்க விளாசிக்கொண்டிருப்பதற்கும் – பெரும்பாலும் ஸுன்னிகளாக எமக்கும் அதற்கும் தொடர்பில்லை எனச் சொல்லலாம்.
ஷியாக்கள் முஸ்லீம்களே இல்லை – ஆனால், அதே சமயம் இஸ்லாமிய மானுடர்களுக்குள் மார்க்க-பேத வித்தியாசமே, உயர்ச்சி தாழ்ச்சி என்பதே இல்லை – எனவும் சொல்லிக் கொள்ளலாம்.
…இருந்தாலும் அயோத்திதாசரின் இஸ்லாமோஃபோபியா பற்றி, அவருடைய முஸ்லீம்-வெறுப்பியம் பற்றி – குறைந்தபட்சம், உரக்க ஒரு கண்டனம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
ஆனால், ஒருவேளை – இந்த அயோத்திதாசரும் பூர்வ ஹிந்துத்துவாவில் இருந்த ஒரு ஆதிகால சந்துத்துவா ஆசாமியோ?
என்னமோடாப்பா… :-(
நன்றி.