(கனவு மெய்ப்படும்) ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!!

December 6, 2022

ஜெய் ஸ்ரீராம்!

இது ஒரு மறுபதிவு. முந்தையது அகற்றப்பட்டிருப்பதால் இது. ஆர்கைவ்.ஆர்க் தயவில் புனருத்தாரணம்.

-0-0-0-0-

எனக்கு வரும் கனவுகள், பொதுவாகவே வினோதமானவை – விவரிக்க முடியாதவை. ஆனால், அண்மையில் எனக்கு வந்த கனவில் ஒன்று அப்படியில்லை. நனவாகும் கனவாகத்தான் அது படுகிறது.

அந்த நனிகனவை ஒட்டி, முடிந்தவரை அதற்கு உண்மையாக ஒரு விவரணையைச் சித்திரபூர்வமாகக் கொஞ்சம் அப்ரஸண்டி பட எடிட் செய்து, வெட்டி ஒட்டிக் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்தப் படங்களைச் செப்பனிடலாம். நனவாகவும் மாற்றலாம். எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள்.

…இந்தக் கனவின் அங்கங்கள் இப்போதுதான் நடக்கப் போகின்றன எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத காலகட்டத்தில் நடக்கின்றன – ஆனால் ஒருமித்து… ஒருங்கிணைக்கப் பட்டு… கனவின் நிகழ்ச்சிகள் நடப்பதை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்… சென்ற வருடம் என் ஊர்சுற்றிப் புராணத்தில் அங்கமான பாரத யாத்திரை சென்றிருந்ததால், அதன் நினைவுகளும் இந்தக் கனவில் கலந்திருக்கலாம்.

-0-0-0-0-

சரி. இப்போது ஒரு சிறு முன்னறிமுகம். சில பின்புல விஷயங்கள்…

காஷி விஷ்வநாதர் ஆலயம் பலமுறை பாலைத்திணை இஸ்லாமிய வெறியர்களால் இடிக்கப்பட்டது. மறுபடியும் மறுபடியும் முகிழ்த்தெழுந்தது… கடைசியாக, மங்கோலிய முகலாய மன்னன் ஓரங்க்ஸெப் ஆலம்கிரால் இடித்துத் தள்ளப்பட்டு, அதன் ஒருபகுதியை மட்டும் வைத்து அதற்குமேல் கும்மட்டங்கள் எழுப்பப்பட்டன. இது 1669ல் நடந்த கோரம்.

இது ஞானவாபி மஸூதி என்றழைக்கப்பட்டு, அழிச்சாட்டிய லும்பன் இஸ்லாமியர் வசம் இன்றுவரை (அதாவது என்னுடைய அந்தக் கனவு ஆரம்பிப்பதற்கு முன்பு வரை) இருக்கிறது. ஏகப்பட்ட பொலீஸ் பந்தோபஸ்த் அதுஇது என ஒரே பாதுகாப்பு மயம்.

இருந்தாலும்…

மதுராவின் ஸ்ரீக்ருஷ்ணர் ஆலயத்தின் கதையும் அதேதான். அதே பாலைத்திணை இஸ்லாமிய வெறியர்கள் இங்கும் ஒரே கோரதாண்டவம். தொடர்ந்து பலமுறைகள்.

இதுவும் கடைசியாக  1670ல் அதே மதச்சார்பின்மைத் திலகமும் நம் ரொமிலா தாபர் போன்ற வரலாறு உருட்டாளர்களின் செல்லமுமான ஓரங்க்ஸெப் பெருந்தகையின் ஆணையில் பேரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அதன் மண்டபத்தின் மேல் ஒரு ஜூம்மா மஸூதி கட்டப்பட்டது. ரொம்ப விசேஷம்.

இதையும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என, இஸ்லாமிய அழிச்சாட்டியங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த இரண்டு இடங்களிலும் ஹிந்துக்களின் கோவில்கள் சிறிய அளவில் இன்னமும் இருக்கின்றன. மேலும் – நடந்த அயோக்கியத்தனமான விஷயங்களை ஐயந்திரிபற நிறுவுவதற்குத்  தேவையான அனைத்து வரலாற்றுச் சான்றுகளும் இருக்கின்றன.

இருந்தாலும்…

இதேபோல பலப்பல மஸூதிகள், தர்காக்கள் ஹிந்துகோவில்களை இடித்தும் ஆக்கிரமிப்பு செய்தும்தான் பாரதமெங்கும் கட்டப்பட்டிருக்கின்றன. அதுவும், பல்லாயிரக்கணக்கில்…

ஏன், தமிழகத்தின் தலைநகரான சென்னையைச் சுற்றிச்சுற்றியேகூட பலப்பல மஸூதிகள் இப்படி அயோக்கியத்தனமாகக் கட்டமைக்கப்பட்டு – நம்மால் 1) மறக்கப்பட்டுவிட்டன 2) அரசுகளால் பூசி மெழுகப்பட்டுவிட்டன 3) நமக்கெதுக்கு வம்பு எனக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளன…

சரி.

-0-0-0-0-0-

இப்போது என் கனவில் நடந்த – உண்மையும் பனிப்படலங்களும் புனருத்துராணங்களும் தியாகமும் சத்யாவேசமும் உள்ளிட்ட பாரதீய வரலாறுகள் மீட்கப்படும் விஷயங்களுக்கு வருகிறேன்.

சுருக்கமாகச் சொன்னால், கீழ்கண்டவை நடந்தன.

கேல்கதம். (எனக்கு ஃபோட்டோஷாப் திறமையில்லை, ஷ்வல்ப அட்ஜஸ்ட் மாடி)

நாம் கொர்கொர் என்று கொரட்டைவிட்டுத் தூங்கியது போதும் அல்லவா? ஹம் ஹோங்கே காம்யாப். மன் மே ஹை விஷ்வாஸ். பூரா ஹை விஷ்வாஸ். हम होंगे कामयाब.

பசித்திரு சேர்ந்திரு விழித்திரு?

நன்றி.

இதற்கு வந்த பின்னூட்டங்கள்: (sorry, a bad cut & paste job)

Posted by வெ. ராமசாமி (11/08/2020)


Filed in #excerptise, All Hail Discordia!, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா!, எனக்குநானே (அ) நமக்குநாமே!, கல்வி, தத்துவம் மதம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம்?, பாரதீயம்!, வரலாறு, politics, Twistorians

5 Comments »

5 Responses to “ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!!”

 1. dagalti Says: 12/08/2020 at 01:27 என்று தணியும் இந்த ஹிந்துத்வா இண்டர்ரெக்னம்!
  திராவிட பம்மாத்தை தட்டி வைக்கும் யுடிலிடரியன் வஸ்துவாக மட்டும் இல்லாமல், கைமீறிப்போய் முகமது பின் காசிம் காலத்து ஸ்டேடஸ்-க்வோ-ஆண்டே-வை மீட்டு நிறுத்தும் வரை விடாது போலயே.Reply
  • வெ. ராமசாமி Says: 12/08/2020 at 07:20
  • ஐயா, ஒருவேளை அதற்கும் முன்பேகூட இருக்கலாமோ என்னவோ.மற்றபடி தாங்கள் சொல்லும் ‘ஹிந்துத்துவா’ அந்த காஸிம் காலத்துக்கு முன்பிலிருந்தே அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டிருந்ததால்தான், உலகத்திலேயே இந்தப் பகுதியில் மட்டும் விஷயங்கள் கொஞ்சம் ஸெமிட்டிக் ஸெப்டிக் ஆகாமல் ஏதோ ஊசலாடிக்கொண்டிருக்கிறன என்பது என் துணிபு மட்டுமல்ல.தயை செய்து நம் வரலாறுகளை அறிந்து அசைபோடவும். ஆனால் – தாங்கள் அறிந்திருக்கலாம், வெண்பா எல்லாம் எழுதுகிறீர்கள்.இருந்தாலும், உங்கள் மட்டற்ற தயை தேவை.ஏழரைகளிலிருந்து ஏழாகிவிட்டதோ என ஆனந்தமாக இருந்தேன். எனக்கு எண்மத்தில் காக்கைவாகனன்போல.கொடுங்கனவு கலைந்து எழுந்திருக்கவேண்டும்.Reply
   • dagalti Says: 12/08/2020 at 10:01 /ஆனந்தமாக/தளும்பும் நிறைகுடம் சிந்தும் தகவல்
    விளிம்பில் அமர்ந்து பருக – களிம்பிலோர்
    ஈயேன் இருப்பேன் அகலேனே ஏழரையில்
    நீயேன் கழித்தாய் அரைReply
 2. Karthikeyan Says: 12/08/2020 at 11:42 கனவு நனவாகும்.Reply

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s