தொடரும் ‘அல் அன்ஃபல்’ – சில குறிப்புகள்
January 12, 2016
இப்பதிவு ரொம்பவே நீளம் – சுமார் 1600 வார்த்தைகள். சிலபல சங்கடம் தரும் படங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பார்வையிலிருந்து இதனைப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கொஞ்சம் வருத்தம்தரும் பதிவாக இருக்கலாம்; நிதானமாகப் படிக்கவும்; உங்களுடனேயேகூட உரையாடிக்கொள்ள இதனை, வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், தேவையேயற்ற கோபம் வேண்டாம். சும்மனாச்சிக்கும் பொங்கவேண்டாம். அதிதீவிர உணர்ச்சிவசப் படலும் வேண்டாம். எப்படியும், ஞமலித்தனமான பின்னூட்டங்கள் கடாசப்படும். நன்றி.

எதற்காக இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன் என்ற நியாயமாக கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படித்து ஒரு திடத்துக்கு வரவும்: இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)
எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான் சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.
“சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் திருத்தவே முடியாது! இவர்கள் விவகாரமெல்லாம் சுத்த வேஸ்ட்!!” + இரு ஊக்கபோனஸ்கள்
December 26, 2015
வெறுத்துப்போன (அக்கால சுபவீ, அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!
ஆதாரம்:
Read the rest of this entry »
#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (2/n) + திபெ கமலநாதன், வீரமணி…
December 24, 2015
பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(
இனி இரண்டாம் பகுதி…
-0-0-0-0-0-0-0-
#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (1/n)
December 23, 2015
#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!
#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!
அமெரிக்காவில் சகிப்புத்தன்மை அதிகம்தான்: சராசரி தகவல் தொழில்நுட்பதட்டச்சு மோசடி குமாஸ்தாவிய நிரூபணம் (அப்பாடா!)
December 19, 2015
…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)
-0-0-0-0-0-0-0-
அமெரிக்காவின் மகாமகோ சகிப்புத் தன்மைக்கு, ஒரு ‘புலம் பெயர்ந்த’ தகவல்(!)தொழில்(!!)நுட்ப(!!!) தட்டச்சு குமாஸ்தாவின் பிரதாப சரித்திர வழியாக ஒரு சாட்சியம்
December 16, 2015
உங்களால் சகித்துக்கொள்ளவே முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?
…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்; எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(
ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)
இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப(!) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்!
November 29, 2015
உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.
முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!
ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »
இசுடாலிர்: மாணவர்கள் ஊக்கு விக்கவேண்டும்!
October 18, 2015
கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி, எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.
ஆனால் அவர் பழைய ஃபேஷன்!
புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?
கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!
இசுடாலிர் மற்றவர்களை அறைவதில்லை, மாறாக அவர் தொடர்ந்து ஈவிரக்கமற்றுத் தாக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை!
October 10, 2015
முதலில் ஒரு விளம்பரம்!
நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!
அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)
-0-0-0-0-0-0-
…பிரச்சினை என்னவென்றால், தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும் கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »
மேஸ்திரிகளின் உலகம் (ஜெயமோகனுக்கு ஒரு பகீரங்கக் கடிதம்!)
October 4, 2015
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை நீங்கள் பார்க்காதது நினைவிருக்கலாம். ஏனெனில் நான் அங்கு போகவில்லை.
உங்கள் வாசகர் உங்களுக்கு எழுதிய ‘மேசன்களின் உலகம்’ கட்டுரைக் கடிதம் படித்தேன். புல்லரித்து அப்படியே உங்களைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இது ஏதாவது ஓரினச் சேர்க்கை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுமோ என உடனடியாகப் பயந்து, நாமிருவரும் தமிழினம்தானே, ஆகவேதான் இப்படி இனச்சேர்க்கை என்று சப்பைக்கட்டு கட்டி – உங்கள் வாசகருடைய கடிதப்பதிவை என் எதிரிகளுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.
மேலும், அந்தக் கடிதத்தின் முழு பாதிப்பில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் வரிக்கு வரி சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி. உள்ளூர் வரிகள் மேலதிகம், கவனிக்கவும்.
[அதிமுக்கியமான பதிவு] 2016ல் எனது கடையேழு புத்தகங்கள்: வெளியீட்டு விழா! + ‘ப்ரொமோ’ படம்!!
October 3, 2015
சுத்தமாக வேலை வெட்டியற்று இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும், என்னால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களின் வெளியீட்டை அடிவயிற்றுக்கலக்கத்துடன், படபடக்கும் நெஞ்சுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்* உங்களைப் போன்ற சோம்பேறி வாசக மாக்களுக்கு…
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் வயதுக்கேற்ப திராவிடத்தனமாக வாழ்த்த எனக்கு வயதிருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆகவே முறையே ஆசிர்வாதம் கொடுக்கிறேன் அல்லது வணங்கி மகிழ்கிறேன்.
ஆனால் மன்னிக்கவும். Read the rest of this entry »
என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(
Read the rest of this entry »
of whine and woeman…
September 28, 2015
Long ago, lost in the twirling mists of the memories past, I wrote a series of rants on ‘talkers and doers‘ – more with a sense of disgust towards myself than with others… The links to the updated versions of the series are at the bottom of this offending post, for your edification.
…and pardon my soliloquy. (you can look at the other meanings/connotations too!)
JournalEntry# October 30, 2008 + updated on 28th September, 2015
I have long since come to the conclusions (not that they are a great revelation or whatever) that:
Read the rest of this entry »
எஸ்.ராமகிருஷ்ணன்: மொழிபெயர்ப்பு விழா
September 26, 2015
புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது. ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(
…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… ஆ!
‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்
September 25, 2015
புர்ராமகிருஷ்ணம்
September 24, 2015
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.
(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)
ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில். உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »

