எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான் சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.
…ஏனிப்படியானது என்று யோசித்தால், என் பேராசான் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் (
#AravindanKannaiyanForAmericanPresident2016!) தன்வசம், தன்
ச் சொந்த
வ் வுபயோக
த் துக்கு
ம் மேலதிகமாக
ய் இருக்கும் மானாவாரி
மெய்யெழுத்து/ஒற்றெழுத்து ஸ்டாக் அனைத்தையும் எஸ்ரா அவர்களுக்கு தானம் அளித்துவிட்டாரோ?
மேலதிகமாக, என் மகாமகோ பேராசான் எஸ்ரா, பொட்டி தட்டி இணையத்தைப் பார்த்து, வெள்ளைக்காரப் பெயர்களின் உச்சரிப்புகளையும் ஓரளவுக்குத் தேற்றிவிட்டாரோ?
சரி, இந்த வருடம் நன்றாகவே அமையப்போகிறதோ, எஸ்ரா திருந்திவிட்டாரோ, அவர் அவருடைய செல்லமான கந்தறகோள பாணியில் தொடர்ந்து எழுதாவிட்டால் என்னால் எப்படி என் கிண்டல் பதிவுகளைத் ‘தேத்த’ முடியும் என்று மன உளைச்சலில், படுபயங்கர பீதியில் பயந்துகொண்டிருந்த வேளையில்… அய்யய்யோ!
எஸ்ராவல் ரிட்டர்ன்ஸ்! :-( ஹ்ம்ம், உண்மையில் :-))))
-0-0-0-0-0-0-0-
அதற்கு முன்னால்
மனுஷ்யபுத்திரனின் உயிர்மை (இது, நமக்கு முன்னறிமுகமாயுள்ள #ராக்ஷசபுத்திரி அவர்களின் #ஹேர்டைபப்ளிகேஷன்ஸ் ஜந்துவின் அத்தைமகன் என்றறிக!) பதிப்பகத்தின் 2016 புத்தாண்டு விழா அழைப்பிதழ் பற்றி.

இவ்னுங்களெல்லாம், அத்தினி பேரும் டமிள்னாட்டோட தலெ செறந்த எள்த்தாளர்ங்க்ளாண்டா! ட்டேய்! ங்ஙொம்மாள. இம்மா தெக்ரியண்டா! டமிளகத்துலே டாலரன்ஸ், அத்தாண்டா, சகிப்புத்தன்மை — ரொம்பவே அதிகமாய்டிச்சிடா!
மேற்கண்ட ஜாபிதாவில் – ஏழெட்டு எழுத்தாளர்களைத் தவிர (பல்ப் வகையறாவானாலும் சரி இலக்கியமானாலும் சரி அலக்கியமானாலும் சரி ஊறுகாய் செய்முறையானாலும் சரி சுயமைதுன முன்னேற்ற வகையறாவானாலும் சரி சீரிய தமிள் ஆராய்ச்சீயானாலும் சரி கவிஞ்சர்களானாலும் செரி!) மற்றவர்களெல்லாம் தலை சிறந்த எழுத்தாளர்கள் என ஒரேயடியாகப் பொய் சொல்வது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது!
எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், யுவகிருஷ்ணா, அதிஷா போன்ற தலைசிறந்தவர்களின் தலைசிறந்த எழுத்துகளின் அருகேகூட தலைசிறுத்த ஏனைய மற்றவர்களால் தலைசிறந்து செல்லமுடியுமா? என் தலைசிறந்த நெஞ்சு வேகிறதே! இந்தத் தலைசிறந்தஅநியாயத்தைக் தலைசிறந்து கேட்பாரே இல்லையா? :-(
ஹ்ம்ம்ம்… ஆனால், இந்த தலைசிறந்த ஜாபிதாவை தர்க்கரீதியாகப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது. அது – இவர்கள் அனைவருக்கும் தலை இருக்கிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் வருத்தம்தரும் வகையில் இது உண்மைதான். மேலும், அந்தத் தலைகள் சிறந்ததாகவே கூட இருக்கலாம், அவை தறுதலைகளாகக்கூட இருக்கலாம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இவர்கள் தமிழ் மாதிரி ஒரு மொழியில்வேறு எழுதுவது போலப் படுகிறது. ஆகவே.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – என் ‘தமிழகத்தில் தலைசிறந்த எழுத்தாளர்’ பெயரையும் இந்த மகாமகோ ஜாபிதாவில் உட்சேர்க்காதவரை, நான் உயிர்மையைக் கரித்துக்கொண்டுதான் இருப்பேன்.
இப்போது இந்த அழைப்பிதழை எனக்கு அனுப்பிய அந்த நக்கல்பிடித்த (2) கிண்டல் துரோகிகளுக்கு…
…டேய் ஸோமாறீங்க்ளா! வொங்க்ளுக்கெல்லாம் வேற வேலயே இல்லியாடா? பர்தேசிங்க்ளா!
ஏண்டா பஸ்ங்க்ளா, இந்த எழவையெல்லாம் எனக்கு தேவ மெனெக்கட்டு அனுப்பி என்னோட மேலான கருத்த கேக்றீங்க? நீங்க வுருப்படுவீங்க்ளாடா?
இதுவாடா புத்தாண்டு வாள்த்து மொற? நீங்க நாசமாப் போக! இத்தாண்டா என்னோட புத்தாண்டூ பதில் வாள்த்து!
ட்டேய்… வொங்க்ளுக்கெல்லாம் சயிப்புத்தன்மை அதிகம்டா! நான் ஒத்துக்கறேண்டா! ஆனாக்க, அத்தொட்டு வய்ஸான என்னபுட்ச்சி எங் குடுமியை வுலுக்காதீங்க்டா, வுலுத்தன்களா!
இப்டீ நீங்க அம்ச்சதல்லாம் பட்ச்சிட்டு மாரடப்பு வந்து நான் மண்டைய போட்டேன்னாக்க என் பொண்டாட்டி புள்ளைங்க இன்னாடா பண்ணுவாங்க? அத்தப் பத்தி நெனச்சிநெனச்சி எனக்கு பேதி புட்ங்கிக்கிச்சின்னாக்க, வூட்ல தண்ணீ ப்ராப்ளம்வேறடா! நான் இன்னாடா ஸெய்வேன், மூதிங்க்ளா!
என்னோட சயிப்பின்மைய என்னாலேயே சகிச்சுக்க முடியலியேடா, பேமானிங்க்ளா! அத்தொட்டு, என்னையே நான் எங்கிட்ட ரிட்டர்ன் பண்ணப்போறேன்டா!
… ஒர்ரேட்டியா கொள்ம்புதேடா, நாயிங்க்ளா! நரேந்திரமோதி ஓளிக!
-0-0-0-0-0-
சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி – ஒரு சுருக்கமான செயல்முறை விளக்கம்
(எஸ்ரா பாடபூதம்)
0. வெள்ளைக்கார ஊரில் எந்தப் பிஸ்தா படம் வந்தாலும் விடக்கூடாது என்பது ஒரு அடிப்படைவிதி. உடனுக்குடனே துரத்தித் துரத்தி அதன் மண்டையில் அடித்து விமர்சனம் செய்துசெய்தே தன் கெத்தை நிரூபிக்கவேண்டும். அறச்சீற்றம் கிலோ என்னவிலை என பார்த்து மொத்தமாகக் கோயம்பேடு சந்தையில் வாங்கினால் நலம்.
1. முதலில் அவசரம் அவசரமாகத் திருட்டு டவுன்லோட் செய்தோ (எஸ்ரா போல டொர்ரென்ட்ஸ் வழி) அல்லது ஸோலார்மூவீஸ் திருட்டுத்தளத்திலிருந்தோ (வா மணிகண்டன் வழி) படத்தை ஒருதடவைக்கு இரண்டுதடவை பார்த்துவிடவேண்டும். அதன் பல்வேறு அர்த்தங்கள், சாத்தியங்கள் போன்றவைகளெல்லாம் புரியவேண்டும் என்கிற அவசியமேயில்லை; மொண்ணையாக அதன் நேர்க்கதையாடல் புரிந்தால் சரி.
2. பின் அறவுணர்ச்சியுடன் மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என அவசரம்அவசரமாகப் பார்த்து கூக்ள் ட்ரேன்ஸ்லேட் செய்துகொள்ளவேண்டும் – இவை அவ்வப்போது மேதாவித்தனமாக அட்ச்சுவுடுவதற்கு வசதியாக இருக்கும். (= லோ ஆங்கிள், க்ரேன் ஷாட், நீளமான ஷாட், கவித்துவமான எடிட்டிங், நர்ரேட்டிவ் டிவைஸ், மெலிதான பின்னணி இசை, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இன்னபிற…)
3. கதையைப் பற்றி அலசும் திறமையோ, சினிமா கோட்பாடுகளைப் பற்றிய புரிதல்களோ – எந்த ஒரு எழவையும் அடைந்திருக்கமுடியாத / செய்யமுடியாத காரணத்தால் – முழு திரைக்கதையையும் மானேதேனே போட்டு வாந்தியெடுத்துவிடவேண்டும். ஏனெனில், சராசரித் தமிழ்க் கூவானுக்கு, இந்த அளவே அதிகம். எப்படியும், அவர்கள் இதனைப் படித்துவிட்டுப் பெறும் புளகாங்கிதம் என்பது அளவிடமுடியாதது.
4. அவ்வப்போது அறச்சீற்ற #ஔட்ரேஜ் முக்கியம். மானுடநுட்பம் நுண்ணுர்ச்சி என்கிற ரீதியில் வழி நெடுக அள்ளித் தெளித்திருக்கவேண்டும்.
5. இந்தப் படத்தின் சில பாகங்கள் சிலபல பிற திரைப்படங்களை நினைவுபடுத்தினால், அவற்றைப் பற்றியும் சில மேதாவித்தனமான குறிப்புகளை விஸ்தாரமாக எழுதவேண்டும்.
8. இப்படி எழுதி/பேசிக் குவித்தபிறகு – அவற்றை ஒரு டீவிடியாக வெளியிட்டு – அவற்றை திருட்டு டீவிடி/டவுன்லோட் யாராவது செய்தால், அறச்சீற்றத்துடன் அங்கலாய்க்கவேண்டும்.
இதுதாண்டா வெமர்சனம்! இது அவ்ளோ ஸிம்பிள்டா!!
-0-0-0-0-0-0-
சரி, இது தொடர்பான, #ராக்கதபுத்திரி, #எஸ்ராவல், #காப்பிக்கடைகள் குறித்த பிற பதிவுகள்:
January 5, 2016 at 21:44
// என் தலைசிறந்த நெஞ்சு வேகிறதே! இந்தத் தலைசிறந்தஅநியாயத்தைக் தலைசிறந்து கேட்பாரே இல்லையா? :-( //
”என் தலைசிறந்த நெஞ்சு *லைசிறப்பாய் வேகிறதே” சே..சே ”தலை சிறப்பாய் வேகிறதே”-ன்னு இருக்கவேணாமா பாஸ் ?
January 6, 2016 at 08:52
யோவ் பொன்னு! வெந்த பொண்ணுல வடிவேலப் பாச்சறியேபா! :-(
January 6, 2016 at 22:06
ஐயா, மாப்பு குடுத்துடுங்க ராசா :) “நெப்போலியன், வாகை சந்திரசேகர், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், ரஜினிகாந்த் போன்றோருக்கு நன்றி” என்பது மாதிரி இல்லாமல் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கே-ன்னு மனச தேத்திக்கோங்க தொர.