ஜெயமோகன், கம்யூனிஸ்ட், நொபெல்பரிசு, சரோஜாதேவி: மேதகு வே மதிமாறன் அவர்களின் சரமாரியான அற்ப உளறல்களுக்கு அளவேயில்லை!
January 29, 2016
பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம் வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால் ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.
தமிழில் எழுதுவதாக பாவலா செய்துகொண்டிருக்கும் அரைகுறை எழுத்தாளர்களின் அதிமுக்கியமான கல்யாணகுணம் என்பது – மானாவாரியாக, சம்பந்தாசம்பந்தமில்லாமல், தாங்கள் ஒரு எழவையும் அறியாத துறைகளில்கூட, துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் – மூக்கையும் பிற துருத்திக்கொண்டிருக்கும் உடற்கூறுகளையும் நுழைத்து, சகட்டுமேனிக்கு அட்ச்சுவுடுவது என்பதில் இருக்கிறது.
என்னே சிறுநீர்ப்பெருவளத்தார்களின் குறிபார்த்துப் பீச்சியடிக்கும் பண்பு! இந்த சராசரி ஜோதியின் அதிஉயர் பதவியில் அமர, டமிள்எள்த்தாலர்கலிடையே அவ்ளோ போட்டி, ங்கொம்மாள, தாங்கவேமுடீலபா!
ஏனெனில், தமிழ் இணையச் செல்லரிப்புக் கரையான் எழுத்தாளர்கள், ஃபேஸ்புக் இலக்கியகர்த்தாக்கள் என, பலப்பலர் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் – அடியேன் உட்பட, அரவிந்தன் கண்ணையனையும் சேர்த்து! ஆக, தேவையற்ற ரத்தக்களறி வேண்டாமென்று – தற்போதைக்கு ஒரு மனதாக, வே. மதிமாறன் அவர்களிடம் இந்தப் பதவி, சுழற்சிமுறையில் வந்தடைந்திருக்கிறது; இவரைவிட இப்பதவிக்கு ஏகபோகத் தகுதியுடையவர் யார்! அவர் கொட்டம் வாழ்க!
படிப்பறிவும் இல்லை, நேர்மையும் இல்லை, தமிழில் நாலு வார்த்தை ஒழுங்காக, சுத்தமாகப் பேசும் தன்மையோ, எழுதும் பாங்கோ அறவே இல்லை. இருப்பதெல்லாம் வாயோர நுரைதள்ளல் மட்டுமே, என்னைப்போல!
ஆனால் குடுகுடுவென்று ஓடிவந்து கருத்து அணுகுண்டுகளை அற்பத்தனமாக, பொதுச்சபையில் வீச முடிகிறது. அற்பக் கைதட்டல்களுக்காகப் பொய்மைகளைப் பரப்ப முடிகிறது. இந்த அசிங்க அழகில், ஓடிவந்து பிற அரைகுறைகள் இடும் ‘வாழ்க நீ எம்மான்‘ வகை புளகாங்கிதப் பின்னூட்டங்கள்வேறு! மெல்லட் டமிள் இணிச் சாவும்.
தன் முட்டாள்தனத்தை, கடைந்தெடுத்த அறிவிலிகளுக்கும் அச்சத்தையும் கூச்சத்தையும் தரும் வகையில் – மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்களுக்கும் பேதியளிக்கும் வகையில் – பகிரங்கமாக பகீரெனப் பறைசாற்றுவதில் – இக்காலங்களில், மதிமாறன் அவர்களுக்கு ஈடுஇணையேயில்லை; எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது, இவரது வீரதீர பராக்கிரமங்களைப் பார்த்து… :-(
-0-0-0-0-0-0-
வே மதிமாறன் அவர்களின் அரைகுறைக் கட்டுரை ஒன்றைப் படித்து (=நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்? – என்ன அழகான சீண்டும் தலைப்பு!) ஒரு எழவும் புரியாமல், பின் இதன் பின்புலத்தைக் கொஞ்சம் நோண்டினால் – அது ஜெயமோகன் அவர்கள், தனக்குக் கொடுக்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என்று சொன்ன விஷயம். இந்த ஆச்சரியமான, ஆனால் புரிந்துகொள்ளமுடிந்த விஷயத்தையும் இன்றுதான் தெரிந்துகொண்டேன்.
ஒருவிதத்தில் பார்த்தால், இந்த மதிமாற உளறலென்பது – பாவப்பட்ட நிஜப் புலியைப் பார்த்து, விடுதலைப்புலி தனக்குத்தானே சூடு போட்டுக்கொண்டவிஷயம் போலத்தான். தமிழகத்தின் தற்காலத் திராபைத் திராவிடச் சூழலில் – அடிப்படைத் தகுதிகளற்றவர்கள், கருத்து உதிரிகள் – தெருக்கற்களைப் பொறுக்கி, பண்பாட்டுக்கண்ணாடிகளின் மீது வீசியடிப்பது என்பதுதான் ஸாஸ்வதம் என்பதும் புரிகிறது. இருந்தாலும் குமட்டல்தான் வருகுதய்யா!
அரைகுறைகளின் அவதூறுகளுக்கிடையே, வெட்டி வம்பர்களின் பொறாமைப் பொச்சரிப்புகளுக்கிடையே, பொறுப்பற்ற பொறுக்கித்தனங்களுக்கிடையே – தொடர்ந்து பணி செய்வது என்பது ஒரு கொடுமையான விஷயம்தான். தமிழச் சூழலின் தன்மை என்பது அப்படிப்பட்டது. இச்சூழலில், – ‘போடா மயிராண்டிகளா, நீங்களும் உங்களோட குப்பை அளவுகோல்களும், பொச்சரிப்புகளும்…‘ என்று வெறுப்புடன் ஒதுங்கிப் போவது எளிது! ஆனால், நல்லவேளை – இவற்றையெல்லாம் மீறி, நல்லவிஷயங்களும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம்தரும் விஷயம்தான்…
சரி. தராதரமில்லாத கண்ட கழுதைகள், ஜெயமோகனைக் கிண்டல் செய்வதுகூடப் பிரச்சினையில்லை – ஏனெனில் அவர்களுடைய அளவு அவ்வளவுதான், அதற்கு மேல் அவர்களுக்குத் தம் சுயத்தை நிறுவமுடியாது என்பதும் புரிகிறது, பாவம் இவர்கள், திராவிடத்தால் காயடிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இவர்கள், தங்களுடைய உளறல்களை ‘சர்வதேச அளவில்‘ தாங்களாகவே உயர்த்திக்கொண்டு மினுக்கிக்கொள்வதைப் பார்த்தால்தான், பயபீதியில் ஜுரமே வந்துவிடுகிறது.
அய்யா மதிமாறனார் சொல்கிறார்:
“சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்குக் கொடுத்ததே இல்லை.“


இவருடைய அறிவிலித்தனமான உளறலை எதிர்கொள்ள, நொபெல் விருதுகளை மட்டும் கணக்கில் கொண்டு, அதிலும் எனக்கு நன்கு அறிமுகமாகியிருப்பவர்களைப் பற்றி மட்டுமே, சில குறிப்புகளை எழுதுகிறேன்….
-0-0-0-0-0-0-0-
சிலே தேசத்தின் ‘பாப்லொ நெருட’ அல்லது ‘பாப்லோ நெரூடா!’ (Pablo Neruda) – இவர் ஒரு கவிஞர். எனக்குப் பிடித்தமான சிலகவிதைகளை எழுதியிருக்கிறார், ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர்தான், ஆனால் ஓஹோவென்றில்லை. இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஒரு இடதுசாரி அரசியல்வாதி. 1920களில் சிலேயின் பர்மிய தூதராக இந்தியாவில்கூடப் பணியாற்றியிருக்கிறார். 1945ல் சிலே கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினராகச் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டவர்.
அமெரிக்காவுக்கு எதிராக, ஸ்டாலினிஸத்துக்கு ஆதரவாக, இடதுசாரி வன்முறைகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு என – பலமுறை முன்னுக்குப் பின் முரணாகவும், அயோக்கியர்கள் சார்பாகவும் விசித்திரமான (=என்னால் புரிந்துகொள்ளமுடியாத) நிலைகளை எடுத்தவர். அற்பத்தனமாக அரங்கேறிய லியான் ட்ராட்ஸ்கியின் கொலையில் (சில செய்திகளின் படி) மறைமுகப் பங்கு வகித்தவர்.
சிலெயின் மாணிக்கமான ஸால்வடர் அய்யன்டே அவர்களின் (என் சிறுவயது ஆதர்ச மனிதர்களில், இந்தப் பெரியவரும் அடக்கம்!) முக்கிய ஆலோசகராகவும், தூதராகவும் பணியாற்றியவர். 1971ல் நெருட அவர்களுக்கு நொபெல் பரிசு கிடைத்தது. அப்போதும் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகத்தான் இருந்தார். பல நாடுகளுக்கு (அமெரிக்க அரசு உட்பட) இது ஒத்துவரவில்லை என்றாலும் விருது கிடைத்தது.
இவ்விருதை வாங்கிக்கொண்டு சிலே சென்று அங்கு ஒரு பிரம்மாண்டமான கூட்டத்திலும், அரசதிபர் அய்யன்டே முன்னிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சை மகிழ்ச்சிகரமாகப் பொழிந்தார் என்றும் மங்கலாக நினைவு.
ஆகவே, ‘சர்வதேச அளவில்’ உளறிக்கொட்டியிருக்கிறார் மதிமாறனார்!

அதேசமயம் த்தோவ அவர்கள், உள் நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வரவும் பாடுபட்டவர். இதற்காகத் தான் இவருக்கு கிஸ்ஸிங்கர் அவர்களுடன் இணையாக, 1973 நொபெல் அமைதிப் பரிசு கிடைத்தது; ஆனால், அவர் அதனை ஒப்புக்கொள்ளவில்லை; அதற்கு அவர் கூறிய காரணங்களும் ஒப்புக்கொள்ளக் கூடியவையே!
மதிமாறனார் பக்கத்திலேயே ‘ஆர் சுப்பிரமணியம்’ என்பவர், இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:
இவர், 1986 வரை கம்யூனிஸ்ட் கட்சிப் பதவிகளில், அரசுகளில் பணியாற்றியவர்; என்ன சொல்லவருகிறேன் என்றால், இவருக்கும் நொபெல் பரிசு கொடுக்கப்பட்டது – அவர் ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு’ எதிராக ஓயாமல் போராடிக்கொண்டிருந்தாலும்!
-0-0-0-0-0-0-

ஆனால், நம் உலகிற்கு, ரஷ்ய மக்களின் முன்னேற்றத்துக்கு அவர் அளித்துள்ள பங்கு, கொடுத்த விலை அளப்பறியது. (ஒரு எடுத்துக்காட்டாக, ‘திருச்சி சிவா’ போன்ற அடிப்படையில் கொஞ்சமாவது நேர்மையாளர்கள், திமுக கும்பலிலிருந்து மேலெழும்பி அதன் ஏகோபித்த-பலம்வாய்ந்த தலைவராகி – கருணாநிதி, இசுடாலிர், கனிமொழி, அழகிரி, தயாநிதி, கலாநிதி, சபரிகிரீசன், டிஆர் பாலு… …. என அனைத்து மகாமகோ அயோக்கிய ஊழலாளர்களையும் சிறைக்கு அனுப்பி, அவர்களுடைய பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள திருட்டுச் சொத்துகளைப் பறிமுதல் செய்து மக்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், திமுகவை மண்டையில் தட்டிச் சரிப்படுத்தினால் எப்படி இருக்கும்? இம்மாதிரி விஷயத்தைத்தான் கோர்பச்செவ் செய்தார்! எனக்கு, மிகமிக ஆச்சரியம் தரும் விஷயம் இது!)
போர்ச்சுகல் தேசத்தின் ஷூஸெ ஸரமாகு (José Saramago) – இவருக்கு 1998ஆம் வருடத்திற்கான இலக்கிய நொபெல் பரிசு கொடுக்கப்பட்டது. இவருடைய படைப்புகளில் பல, எனக்குப் பிடித்தமானவை.
தன்னுடைய சிறுவயதிலிருந்து 2010ல் அவர் இறக்கும்வரை, போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினராக இருந்தார். சில சமயம் படுமோசமான (சரியற்ற) விமர்சனங்களையும் ஐஎம்எஃப், ஐரோப்பிய ஐக்கியம் (+மிக முக்கியமாக, அமெரிக்கா) போன்றவற்றை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.
இருந்தாலும் அவருக்கு இப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்தது – அதுவும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அங்கமாக, தொழில்முறை அரைகுறைகளால் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படும் அமைப்பு ஒன்றினால்!
இங்கிலாந்தின் டோரதி க்ரொஃபுட் ஹாட்ஜ்கின் (Dorothy Crowfoot Hodgkin) – இவருக்கு 1964ல் வேதியியலுக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது. இவரும், இவருடைய கணவர்களான மகாமகோ ஜேடி பெர்னால் (J D Bernal) தாமஸ் லையனல் ஹாட்ஜ்கின் (Thomas Lionel Hodgkin) – மூவரும் என் சிறுவயது ஆதர்சங்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆஃப்ரிக விடுதலை இயக்கங்களுக்கும், அறிவியல் பூர்வமான நாஸ்திகத்துக்காவும் பாடுபட்டவர்கள்; இவர்கள் மூவரும் வாழ்நாள் முழுவதும் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினராக இருந்தவர்கள். அக்கட்சிக்காகவும், அது நம்பிய மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டவர்கள்.

சீனாவின் மோ யான் (Mo Yan) – 2012க்கான இலக்கிய நொபெல் பரிசு இவருக்குக் கிடைத்தது. இவர் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தினராக உள்ளவர். என் பார்வையில் ஓரளவு சுமாராகவே எழுதுபவர். ரெட் ஸொர்கம் நாவல் இவர் எழுதியதுதான்; ஷாங்க் யிமூ இதனை ஒரு முழு நீளப் படமாக எடுத்து, அதுவும் சக்கைப்போடு போட்டது, இந்த ஒத்திசைவு எழவை மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்! :-)
இவருடைய எழுத்துகளில் தேவைக்கதிகமாகவே பிரச்சார நெடி இருப்பதாக எனக்கொரு எண்ணம். ஆனால் கம்யூனிஸ்ம் சிலசமயங்களில் அப்படியாகிவிடுகிறது, என்ன செய்ய!
இதையும் மதிமாறனாரிடம் கெஞ்சிக் கூத்தாடமலேயே செய்திருக்கிறது, இந்த நொபெல் பரிசளிக்கும் கூட்டம்.
மதிமாறனாரின் இன்னொரு நகைச்சுவை: சரோஜாதேவிக்கு நாட்டியம் தெரியாது!

ஆம். ‘நடனமே தெரியாத, சரோஜாதேவி‘ தான். ஏனெனில் பரதக் கலையில் தேர்ந்தவராக இருக்கும் பேராசான் மதிமாறனார் அவர்கள் அளவுக்கு சரோஜாதேவி அவர்களால் நாட்டியமாடியிருக்கமுடியாதுதான்…
மன்னிக்கவும். என் சிறு வயதில் (=1970களில்), பெங்களூரில் இருக்கும் பேலஸ் லோயர் ஆர்சர்ட் (இப்போது சதாஷிவநகர் என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கிறது) சமீபத்தில் இருந்த அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் என் மகாமகோ பணக்கார உறவினர்கள் சிலர் வசித்துவந்தனர். நடு எழுபதுகளில் பலமுறை நான் அங்கு சென்றிருக்கிறேன்; பிரத்தியேகமாக, பூஜைகளின்போதென அவர் ஆடும் நாட்டியங்களைப் பார்த்திருக்கிறேன்; நான் நாட்டியத்தினை நுணுக்கமாக ரசிக்கத் தெரியாதவன், ஆனால் என் அம்மா அப்படியல்லர் – அவர் பார்வையில் அந்தத் தொழில்முறை நடிகை, நன்றாகவே நடனமாடக்கூடியவர்தான்.
ஆனால், திராவிட சினிமா ரசிகனுக்கு (=விசிலடிச்சான் குஞ்சப்ப உதிரி) – கதாநாயகிகளின் இரண்டுமூன்று உடலுறுப்புகளில் மட்டுமே ஆர்வமுண்டு என்பதை நானறிவேன் – அவை முறையே: பிதுங்கிவழியும் பாற்சுரப்பிகள், குலுங்கும் வளமையான பின்புறம், தடித்த தொடை.
பாலுணர்வு வெறியை மட்டுமே கச்சாப்பொருளாகக் கொண்ட அவன் வேறெதைக் கண்டான், பாவம். ஆகவே, நுகர்வோனின் மனப்போக்கை அறிந்த திராவிடத் திரைப்பட இயக்குநர்கள், இவற்றைத்தான் அள்ளி வழங்குவார்கள்… ‘தொடை விரித்தோம், கொள்வாரிருக்கிறார்கள், கல்லா கட்டிவிட்டோம்‘ என வள்ளலாருக்கே காமரசத்தைக் கற்றுத் தருபவர்கள் அல்லவா, அவர்கள்? சரோஜாதேவிகளையும் தத்தக்கா பித்தக்கா என ஆடவிட்டு, திராவிடலை ரசிகனைக் கிளுகிளுக்கவைக்கத்தான் முயல்வார்கள்!
ஆனால், அதே திராவிட நுகர்வோன், மேதாவித்தனமாகவும் பொத்தாம் பொதுவாகவும் இப்படிச் சொல்வான் – ‘சரோஜாதேவிக்கு டான்ஸ் வராதுடோய்!‘
-0-0-0-0-0-0-0-
வெட்கமேயில்லாமல் பீலா விடும், வெறுப்பியத்தினால் மட்டுமே உந்தப்படும் மதிமாறனார்களின் பின்னாலும் ஜால்ரா அடித்துக்கொண்டு ஓடும் கூட்டத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது…
ஆனால் திராவிட நீரானது, அதன் படுமட்டத்தை அடையும்தானே!
இதுதாண்டா, எல்லாம்தெரிந்த ஏகாம்பர திராவிட இளைஞக் குளுவான்! சகலகலாவல்லவனான, அவருடைய பாதாரவிந்தங்களில் நிபந்தனையற்றுச் சரணடைவதைவிட, எனக்கு வேறு வழியேயில்லை! :-(
January 30, 2016 at 08:18
mathi needs to learn some basic numbers.
1883 comes before 1901.
marx died in 1883 and nobel prizes were started only in 1901
January 30, 2016 at 08:23
you can Pyotr Kapitsa also, who won the physics nobel
polish Trade union leader Lech Walesa , were all ex communists…
January 30, 2016 at 08:59
Thanks Ravi for pointing this out, I forgot this Kapitsa. :-( How can I forget great people like him! :-((
There must definitely be a few more folks that I do not sadly know of, and/or left out, but I would rather rely on the advice of folks like you and my memory_retention; otherwise I would also be blathering stupidly like Sri Mathimaran,
But I did not want to add Lech Walesa – because he was vigorously anti communist – and he would therefore not be a candidate for this rebuttal of the bogosity of Sri Mathimaran.
Thanks again, sire!
February 2, 2016 at 09:39
The list is long indeed. If someone thought communists had not given Nobel, that person needs education, if educable.
https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_by_country#Russia
January 30, 2016 at 08:54
ஐயா,
இந்த மாதிரி அரைவேக்காடுகளின் வாந்தி ‘காட்டுரைகளை’ படிப்பதே பெரிய தண்டனை,அதையும் படித்து விட்டு விமர்சனம் வேறு செய்து இருக்குறீர்கள்.உண்மையிலேயே அஞ்சா நெஞ்சன் நீங்கள்தான்! ஒரு விஷயம் மட்டும் உங்கள் நண்பர் பத்ரி சேஷாத்ரி யிடம் கேட்டு சொல்லுங்கள்.என்ன காரணத்திற்காக அவரது வலைப்பக்கத்தில் இந்த அரைகுறைகளின் விலாசத்தை கர்ம ஸ்ரத்தையாக கொடுத்து இருக்கிறார்?(பூர்வ ஜன்ம விட்ட குறையோ,தொட்ட குறையோ தெரியவில்லை!).இந்த இழவுகளின் அறிமுகம்! எனக்கு அங்கு ஆரம்பித்ததுதான்!.உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் தப்பித்தவறி இனிமேல் அந்தப்பக்கம் போகாதீர்கள்.
January 30, 2016 at 09:12
அய்யோ அய்யா!
நானும் பத்ரி சேஷாத்ரி அவர்களின் தளத்தில் தான் இந்த ‘சீண்டும்’ மதிமாறக் கட்டுரையைப் படித்தேன். வெறுத்தேன்.
பத்ரி அவர்களை நேரடியாகக் கொஞ்சம் அறிவேன் என்றாலும், அவர் மேல் கோபம்கோபமாக வந்ததும் உண்மை. ஆக, பல்லை நற நறத்ததில் எனக்கே நோ பல் பரிசு கிடைத்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
ஆனால் ஒன்று – பத்ரி அவர்களுக்குப் பொறுமை அதிகம் – ஒத்திசைவின் சுட்டியும் அங்கே இருக்கிறதே! மேலும், அவர் ஒரு ‘diversity’ விரும்பி எனவும் நினைக்கிறேன். நகைச்சுவை உணர்ச்சியும் அவருக்கு அதிகம்தான். அதனால்தானோ? ;-)
எப்படியும், வாரத்திற்கு இருமுறை அவர் தளத்திற்குச் சென்று, இப்படி திடுக்கிடுவது என்பது என் பழக்கமாகிவிட்டது.
ரா.
January 30, 2016 at 09:43
ஐயா, தங்களால் அந்த மதிமாறன் வலைப்பக்கம் சென்று ஒரு(பாதி) பதிவை படித்தேன் எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சது பாதியிலையே வெளி வந்து விட்டேன். நம்பள என பிழையில்லாது எழுதும் அவரைப்போன்ற எழவுத்தார்களை நீங்கள் கண்டிப்பதும் அவர்களுக்கு விளம்பரம் தான்
January 30, 2016 at 12:07
I pointed out one example to show how Mathimaran’s statement is not correct. But you have given the names of several persons with Marxist leanings who have got Nobel Prize. Congrats.
January 30, 2016 at 12:52
என்னதான் செய்வன திருந்தச் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு அளவில்லையா?
மதிமாறன் வகையறாவுக்கு பதில் அளிக்க இவ்வளவு மெனக்கெட வேண்டுமா?
டாஸ்மாக்கில் போய் சரக்கடித்துவிட்டு வாந்தியெடுத்தாலே போதுமே?
நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்படி கம்யூனிஸ்டுகள் அனைவரும் மதிமாறனார் பார்வையில் போலி திரிபு கம்யூனிஸ்டுகளாக இருப்பார்கள்.
பெரியார் மட்டும்தானே உண்மையான கம்யூனிஸ்ட்?
January 30, 2016 at 13:26
Leonid Kantorovich
Nikolay Basov
Alexander Prokhorov
Pavel Cherenkov
All these people were nobel prize winners and members of communist part of Sovient union !!
Comrades all the way..
January 30, 2016 at 15:17
Thanks, Ravi. Apart from Cherenkov, I have not even heard of anyone else you have mentioned!
There is so much to learn!
Ars longa, vita brevis – what else! :-(
January 30, 2016 at 13:27
http://www.nobelprize.org/nobel_prizes/themes/peace/njolstad/
for ur info
January 31, 2016 at 07:41
Your biases and prejudices prevent you from finding similar faults in the writings of JeMo. He has made allegations without giving any iota of evidence. Still you wont write a single word against him.
You wont criticize nonsense written by right wing’s ‘intellectuals’ and will target mathimarans, luckykrishnas and manikandans as if they are the evil forces.
January 31, 2016 at 08:40
The Answer: A whole lot of redeeming factors. His ability to think thru’ problems. His craft. His ability to move on. As of now, he is the only one that we meaningfully have, who operates tirelessly. I respect him for what he is.
Dear TamilUnderDog, won’t you agree with me that everyone is a package, including myself – and may be yourself too? I am not looking for perfection in others which is not existing in me in the first place.
Of course, I have my biases and prejudices – I know it because I have a good amount of meta-cognition. But I do not pretend to be what I am not.
Generally, I like to do my homework. That’s all.
The folks that you have mentioned are NOT evil forces, at least Vaa Manikandan is definitely NOT one. Why did you miss out Aravindan Kannaiyan, S Ramakrishnan et al? ;-)
They are merely intellectually lazy people, and are exhibitionists of ignorance; they seem to be proud of it. And, I have a problem with that.
And, I write about the things that bother me – and don’t you know sir – ars longa, vita brevis?
I do not claim to be neutral – which generally comes with all its shallowness and despicable dishonesty.
BTW, why don’t you write against the ‘nonsense written by right wing’s ‘intellectuals’’ and send me the URLs. I will read them up, I promise!
I like the way you present your arguments; you seem to be a thinking person. Very nice to meet you over the web, though you tend to be anonymous.
Hugs:
__r.
January 31, 2016 at 22:00
Tu,
Exactly my point. Why should Ram stoop to the level of the likes of Mathimaran and elevate and elate them ? What say ?
Very well put Tu :))
January 31, 2016 at 12:05
கணிதவியலில் நோபெல் பரிசுக்கு இணையாக கருதப்படுவது ஃபீல்ட்ஸ் மெடல் (Fields medal). நான்காண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 1970 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் முறையே Sergei Novikov, மற்றும் Grigori Margulis ஆகிய சோவியத் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட ஆண்டு நடைபெறும் International Congress of Mathematicians மாநாட்டில் விருது வழங்கப்படும். 1970 இல் பிரான்சிலும், 1978 இல் பின்லாந்திலும் மாநாடுகள் நடைபெற்றன. சோவியத் அரசு அவர்களை இந்நாடுகளுக்கு செல்ல அனுமதிக்காததால் அவர்கள் விருதினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
January 31, 2016 at 12:26
அய்யா வெங்கடேசன், தகவல்களுக்கு நன்றி. நன்றாக இருக்கிறீர்களா?
எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், எனக்கு மதிமாறன்கள்தாம் முக்கியமாகப் போய்விட்டார்கள்! காலத்தின் ரோ தான் இது.
இந்த வயல்கள் ( © 2015 எஸ். ராமகிருஷ்ணன்) விருது பற்றி யானும் கொஞ்சம் அறிவேன்,
பியெஹ் ரெனெ டெலிஞ்ய அவர்கள், இந்த வயல்கள் விருது வாங்கியது பற்றி ஒருசமயம் ஏதோ எழுதியிருக்கிறேன்கூட – https://othisaivu.wordpress.com/2013/03/22/post-182/
சில சமயம் – எஸ்.ரா அவர்கள் இந்த வயல்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விவரத்தைக் கூட ஒருசமயம், கொஞ்சம் பொறாமையுடன், கோடிகாட்டினேன் என நினைவு.
ஆனால் அய்யா, இந்த மதிமாரடைப்புக்கு மருந்தாக, நொபெல் பரிசுகளைப் பற்றி மட்டுமே எழுதினேன், அதுவும் எனக்குத் தெரிந்த விவரங்களை மட்டுமே – அதற்கே, இவ்வளவு நேரம் செலவழித்துவிட்டேனே என்று தோன்றுகிறது.
இம்மாதிரி மண்வெட்டிதாச வேலைகளை, உங்களைப் போன்ற படித்த, துடிப்புமிக்க இளைஞர்கள் செய்யக்கூடாதா?
ஏனிந்த மௌனம் அய்யா, ஏழை எனக்கருள, ஆனந்த பைரவனே ஆதரித்தாளுமைய்யா!
January 31, 2016 at 12:32
Oops! I meant Abel prize for Pierre Deligne and NOT Fields medal!
Please allow me to correct myself. :-)
*phew*
January 31, 2016 at 22:04
ஏங்க, நெசமாத்தான் கேக்குறேன், ஒங்களுக்கு எதுக்கு இந்த வேலைல்லாம் ? அவரு என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்ணுறாரு ? ஏதோ அவரு உண்டு அவரோட குஞ்சுகள் (விசிலடிச்சான்-களை சொன்னேம்பா, ஹக்காங், மெய்யாலுமேத்தான்) உண்டு-ன்னு, அவரால முடிஞ்ச காலட்சேபம் பண்ணிட்டு இருக்காரு, நீங்க இப்படி தடால் புடால்-னு என்னென்னமோ அவருக்கு எட்டாத பாஷைல பேசிட்டா “மாப்பு குடுத்துடு தொர, வெவரம் தெரியாம ஒளறிட்டேன்”-னு சொல்லி பதிவ நீக்கிடப்போறாரா ?
பரிதாபப்படவேண்டிய ஜந்துக்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கீங்க பாருங்க … உங்களை “குத்து கொமட்ல” என்று மென்மையாக சொல்ல அனுமதிப்பீர்களாக :)
February 1, 2016 at 13:03
அய்யா, முத்துக்குமார் – ஏற்கனவே ஒருவர் ‘கொமட்ல’ குத்திவிட்டார். ;-)
நீங்களுமா? :-))
February 1, 2016 at 06:42
பாவப்பட்ட நிஜப் புலி என்ன சொல்கிறதென்றால் :-
ஆற்றிலே மரக்கட்டைகள் போகின்றன என்றுதான் குழந்தை நினைக்கும். ஆறுதான் ஓடுகிறது. அதைப்போலத்தான். இந்த மேல்மட்ட விஷயங்கள் எனக்குப் பிடிபடுவதில்லை. எனக்குத்தெரிந்த வட்டத்திற்குள் நான் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை அது உருவாக்குவதை கண்கூடாகப் பார்க்கிறேன். இந்தச் செயல்களெல்லாம் ஒன்றாகத் திரண்டு பெருவெள்ளமாகும் என நம்புகிறேன். பெரு வெள்ளம் என்பதே இவ்வாறு துளிகள் இணைந்து உருவாவதுதான்” கீதையை மேற்கோள் காட்டி புன்னகைசெய்தார் அவர்.
எந்த உள்ளுணர்வால் நான் என் ஆக்கங்களை எழுதுகிறேனோ அந்த உள்ளுணர்வால் நான் அரசியலையும் அணுகவேண்டும். சாமானியர்களுடனும், உச்ச மையங்களுடனும் எல்லாம் எனக்குத் தொடர்பு இருக்கவேண்டும்.
சொல்ல வேண்டியதில்லை என்றால் சொல்லாமலிருக்க வேண்டும். அந்தச் சுதந்திரத்தை எந்நிலையிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருபோதும் தொடர்ச்சியான, தர்க்கபூர்வமான ஒரு கோட்பாட்டை அல்லது நிலைபாட்டை உருவாக்க முயலக்கூடாது. எந்நிலையிலும் எந்த முத்திரைக்கும் அஞ்சி எல்லாரும் சொல்லும் அரசியல்சரிகளைச் சொல்பவனாக ஆகிவிடக்கூடாது. புறக்கணிப்போ வசையோ எதுவானாலும் அதுவும் ஒரு இயல்பான விளைவே என ஏற்றுக்கொள்ளவேண்டும். மனசாட்சியின் குரலாக, ஒரு வெறும் சாட்சியின் தரப்பாக மட்டுமே என் அரசியல் ஒலிக்க வேண்டும். அது முரண்பாடுகள் கொண்டதாக, வெறும் மனப்பதிவாக, சல்லிசாக இருந்தாலும் பரவாயில்லை.
February 1, 2016 at 09:54
will you have spewed poison like this, if madhimaran was a pappan, instead of dalit
ellam pappara sadhivery. you are not a neutral person as you claim
February 1, 2016 at 13:01
Sir, AnonyMouse,
At this point I do not know whether to take you seriously and respond (because your jaundiced viewpoints are representative of the popular Dravidian asinine wisdom) OR toss your trashy comment and forget all about it.
So, may be later…
February 2, 2016 at 00:42
அன்பரே, தலித்தோ பார்ப்பானோ, அது வெறும் அடைமொழிதான். அறிவுக்கூர்மைக்கோ ஒரு விஷயத்தை நிதானமாகவும் எல்லா தரப்பும் பார்த்து அணுகும் தன்மையையும் கொள்வதற்கோ அது ஒரு நிபந்தனை அல்ல. தலித்தாகவே இருந்தாலும் அறிவுலக விவாதங்களில் சலுகை எதிர்பார்க்கக்கூடாது. முட்டாளாக இருக்க அது ஒரு சாக்கு அல்ல.
”நேர்கொண்ட பார்வை” என்றுதான் முப்பாட்டன் சொல்லியிருக்கிறான். அப்படிப்பட்ட பார்வை இருந்ததால்தான் அவன் பாரதி. கோணல் பார்வை கொண்டால் மதிமாறனாகத்தான் முடியவேண்டியிருக்கும்.
இனியும் சும்மா இதுபோன்ற ”சாதிவெறி”, “*திவெறி” என்றெல்லாம் உமது தாழ்வுமனப்பான்மைக்கு போர்வை போர்த்திக்கொண்டு திரியாமல் இருப்பீராக.
ஒரு தலித்தை முட்டாளாகவே வைத்திருக்க – ஐயன்மீர், உம்மைப்போன்றவர்களே போதும்.
பி.கு : உமது பெயரோடு தோன்ற எது உம்மைத்தடுக்கிறது ?
February 1, 2016 at 20:05
நீங்கள் தவறாக சொல்லவில்லை, Pierre Deligne அவர்கள் ஃபீல்ட்ஸ் மெடலும் வென்றிருக்கிறார்.
கணிதவியலில் இன்னொரு மாபெரும் விருது உல்ஃ விருது (Wolf prize). 1990 முன்னால், இவ்விருது Israel Gelfand, Andrey Kolmogorov ஆகிய இரண்டு சோவியத் பேராளுமைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தா புடிச்சுக்கோ. இந்த அளவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா :-)
February 1, 2016 at 20:52
நன்றி, வெங்கடேசன். புட்ச்சிக்கினேம்பா!
எவ்வளவோ நல்ல விஷயங்கள், பிரபலமேயடையாமல் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எந்த மசுத்தையாவது எதிர்மறையாக உளறிக் கொட்டினால், அவை இணையத்தைச் சுற்றிச் சுற்றிவரும். என்ன அரைகுறை மாக்கள் நம் சக செல்லத்தமிழர்கள்….
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் – மதிமாறனார் பகர்ந்ததைச் சுட்டி, மேற்கோள் காட்டி, இன்னமும் நாலு கழுதைகள் உளறிக்கொட்டப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
February 2, 2016 at 14:43
ஐயா,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!.மதிமாறனோ,ராமசாமியோ,ஜெமோ வோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவர்களின் கருத்துக்களில் நம்பகத்தன்மையோ,உண்மையோ இல்லை என்றால் அதை மட்டும் நியாயமான காரணங்களுடன் விளக்குவதை விட்டுவிட்டு,நீ தலித்,நீ பாப்பான் என்று அடையாளப்படுத்தி,போற்றவும்,தூற்றவும் செய்வது நமது திரவிடக்குஞ்சுகளுக்கு மட்டுமே உள்ள ‘copy right ‘ குணமோ?