[அதிமுக்கியமான பதிவு] 2016ல் எனது கடையேழு புத்தகங்கள்: வெளியீட்டு விழா! + ‘ப்ரொமோ’ படம்!!
October 3, 2015
சுத்தமாக வேலை வெட்டியற்று இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும், என்னால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களின் வெளியீட்டை அடிவயிற்றுக்கலக்கத்துடன், படபடக்கும் நெஞ்சுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்* உங்களைப் போன்ற சோம்பேறி வாசக மாக்களுக்கு…
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் வயதுக்கேற்ப திராவிடத்தனமாக வாழ்த்த எனக்கு வயதிருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆகவே முறையே ஆசிர்வாதம் கொடுக்கிறேன் அல்லது வணங்கி மகிழ்கிறேன்.
ஆனால் மன்னிக்கவும்.
2015 சென்னை புத்தகச் சந்தை, அதுபாட்டுக்கு எப்போதோ முடிந்துவிட்டது – ஆகவே, என் புத்தகங்களை வேறு வழிகளில்தான் சந்தைப்படுத்த எத்தனித்திருக்கிறேன்.
2015 லச்சியம், 2016 நிச்சியம், ங்கொம்மாள… ஜாக்கிரதை!
என் புத்தகங்கள் ஏழும் எழுதப் பட்டு, மேன்மேலும் மேன்மைப்படுத்தப்பட்டு, சரிபார்க்கப் பட்டு, அட்டைப் படங்கள் தொகுக்கப்பட்டு, செமத்தியாகச் செம்மைப்படுத்திஎடுக்கப்பட்டு, செம்பதிப்புகளாக அச்சாகி – 2016 சென்னை புத்தகச் சந்தையில் சர்வநிச்சயமாக வெளி வர இருக்கும் இந்த கதனகுதூகல கால கட்டத்தில் – ஜஸ்ட் இரண்டு விஷயங்களே பாக்கி!
1. விழா
2. என்னையும் என் புத்தகங்களையும் பற்றிய ஆவணத் திரைப்பட ‘ப்ரொமோ‘ வெளியீடு
-0-0-0-0-0-0-
…ஆனால், ஓடியலைந்து நான் மட்டுமே எல்லா காரியங்களையும் என் புத்தகங்களுக்காகச் செய்யவேண்டியிருப்பதால் ஒரே அலுப்பாக இருக்கிறது. சிலபல காரணங்களால், இன்னமும் என் ராமசாமி ஐகொஸாஹெட்ரன் நற்பணி மன்றம் ஆரம்பிக்கவேயில்லை. இதில் ஏதாவது ஆரிய சூழ்ச்சியிருக்குமோ, அல்லது ஹிந்துத்துவா பாம்புகள் தலையை நீட்டி நாக்கைத் துருத்திக்கொண்டு ஏதாவது திரியாவரம் செய்து கொண்டிருக்கின்றனவோ – எனச் சந்தேகமாகவே இருக்கிறது. கூடவே இஸ்லாமியத் தீவிரவாதிகளும் மதச்சார்பின்மையுடன் இவர்களுடன் இணைந்து ஏதாவது ஏடாகூடச் சூழ்ச்சி செய்கிறார்களோ என்பது தெரியவில்லை. :-(
ஹ்ம்ம்… ஒரேயொரு தனி மனிதனாக எவ்வளவுதான் களப்பணியாற்ற முடியும், சொல்லுங்கள்? வயதோ ஐம்பதுக்கும்மேல் ஆகிறது. நான் என்ன ரஜினிகாந்தா, ஆர்னால்ட் ஷிவாஜிநகரா, கேப்டனா – – அல்லது அமெரிக்க அரவிந்தன்கண்ணையனா — சுழன்றுசுழன்று கருத்துலக எதிரிகளை, பாவப்பட்ட ஆமிஷ்களை துவம்சம் செய்ய?
அல்லது 60 வயதுக்குமேலாகியும்கூட துர்பாக்கியவசமாக கலக இளைஞ்சர் அணித்தலைவனாக இசுடாலிர் போல இருக்கும் பேறு பெற்று, அதே சமயத்தில் தாத்தாவுமாகிவிட்டவனா? யாரும் என்னை எழுச்சிமிகு கழகத் தாத்தா முன்னேற்ற முன்னணியின் தலைவராகக் கூட ஆக்க மாட்டேனென்கிறார்களே! நான் ஒரு வெட்டி, வெறும் சாமான் மட்டுமே இருக்கும், சாமானிய தமிழ்த் திராவிடன் தானே! :-(
நான் சூத்துரன் என்பதால்தானே எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்? (குறிப்பு: முகத்தைச் சுளித்துக்கொள்ளவேண்டாம். சூத்துரன் – இது, பொதுவாக, வளமையான பின்னம்பக்கத்தைக் காட்டிக்கொண்டு (=சூத்து), புறமுதுகிட்டு ஓட்டமெடுக்கும் (=ரன்) இனமானப் போராளியைக் குறிக்கும் தென்மொழிச் சொல், ஐந்திரம் எனும் பண்டமிழ்ப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது, திராவிட இயக்கத்தினரால் தங்களைத்தாங்களே சிறுமைப்படுத்திக்கொள்ள குறிப்பிடப்படுவது; இதைப் பற்றி கருணாம்ருத ஸாகரம் எனும் முக்கியமான நூலிலும் குறிப்புகள் இருக்கின்றனவாம்! நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள், சரியா?)
-0-0-0-0-0-0-0-0-
ஆனால், என் புத்தகங்களின் ஏகபோகப் பதிப்பாளராகிய பத்ரி சேஷாத்ரி, என் தொடர்பான அக்கப்போர்களைப் பார்த்துவிட்டு, ஏன் வேலியில் ஆனந்தமாக ஓடும் ஓணானை மடியில் வைத்துக்கொண்டு குடையப்பட வேண்டும் என்று மனக்கிலேசமுற்று என்னை முழுவதும் கைகழுவி விட்டார் என்பதை இங்கு மிக வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டும். (நான் சொல்லமுனைவதை, வெகுகவித்துவமாக எஸ்ரா சொல்லுவார் – Why fence going lizard leaving in lap and complain it is umbrellaing like? ©S.Ramakrishnan)
என் கடையேழு புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கு, அவர் ஒரு சுக்கு உதவியும் செய்யவில்லை. மரியாதை நிமித்தம், ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என் ஜாதகம் அப்படி! நான் பூணூல் போடாதவன் என்றுதானே… :-( எங்கு சென்றாலும், சுற்றிச் சுற்றி என் செல்லத் தலைவரான கருணாநிதி அவர்களின் பக்கம் வந்து விடுகிறேன்! இதயம் கசக்கிறது, கண் பனிக்கிறது. இருந்தாலும் விட்டேனா பார்தான்!
… ஆனால், கொஞ்சம் யோசித்தாலே எனக்குத் தெரிகிறது – பத்ரிசேஷாத்ரி ஒரு பார்ப்பனர். அவர் அப்படிச் சொல்லிக்கொள்ளாவிட்டால்கூட அப்படித்தான் அவரைக் கருதுவேன்! அவருடைய தோல் வெள்ளை – ஃபேர் கலர்!! இது எவ்ளோ அன்ஃபேர்! என் தோல் நிறம் பழுப்பாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிலபல வெளியில் சொல்லமுடியாத உடற்கூறுகள் கறுப்பாக வேறு இருக்கின்றன! ஆனால் இவற்றைப் பற்றிப் பகீரங்கமாகச் சபையில் பேசினால், ஒழுக்கவியல்வாதிகள் என்னைக் கடிந்துகொள்கிறார்கள் – அதுமட்டுமல்லாமல் அறிவுரைகளையும் வண்டிவண்டியாகக் கொடுக்கிறார்கள் வேறு… :-(
மேலதிகமாக, அவர் மண்டையில் இன்னமும் வழுக்கை விழவில்லை! வெளிநாட்டில் படித்திருக்கிறார்! தமிழில் பேசுவதை விடுங்கள், தஸ்புஸ்ஸென்று ஆங்கிலத்திலும் லெக்சர் கொடுக்கிறார்! டீவியில் எல்லாம் வருகிறார்! பெரியமனிதர்களுடன் பேசுகிறார்! இடதுசாரியோ வலதுசாரியோ என்ன எழவோ ஆனால் அவர் ஒரு தமிழச் சராசரியல்லர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அவர் ஒரு வெற்றிகரமான முதலாளியும் கூட!
ஆக, இவ்வாறு,ஒரு சராசரித் திராவிடத் தமிழனால் பொறாமைத் தீயில் வெந்து வெறுக்கப் படக்கூடிய அனைத்துத் தகுதிகளும் உடைய இவரை – அப்பாவித் திராவிடனாகிய நான் நிச்சயமாக நம்பியே இருக்கக்கூடாது. என்ன செய்வது சொல்லுங்கள்… மோசம்போனேன்!! பட்டாதாண்டா தெரியும் பாப்பானுக்கு! :-(
ஆனால், நான் தொடர்ந்து கொடுக்கும் சாபத்தினால்தான் அவருக்கு கணித ஆய்வாளரும் மாரல் ஔட்ரேஜ் ஸ்பெஷலிஸ்ட்காரருமான மேதகு ரோஸா ‘லுக்ஸம்பர்க் கணேஷ்‘ வஸந்த் அவர்களுடன், சிலகாலம் முன் மோத நேர்ந்தது. நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். நான் மேஜர் சுந்தர்ராஜனாக அல்லது மேதகு எஸ்ரா–வாக இருந்திருந்தால் Good Want, This also want, More also want (©S.Ramakrishnan) எனவும் மேலதிகமாகச் சொல்லியிருப்பேன். தமிழில் நான் சொல்வது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால், அது சிக்கலல்லவா?
… அம்மாடியோவ்! டமில் நாட்ல சுயவெறுப்பு அறிவுஜீவியம் என்றவொரு பெர்ரீய பிரச்சின, ரொம்பகோரம்தான் டோய்! இம்மாரி அரெவேக்காட்டு அறிவுஜீவியப் பொட்டிக்கட நட்த்றவங்கிட்ட வசம்மா மாட்டிக்னா, அவ்ளோதான்! ங்கொம்மாள, ஒர்ரே வர்ரீல (ஆனாக்க 10000 வார்த்தெங்க உள்ளாற!) அவ்னுங்க்ளோட மேலான கர்த்த சொல்றத நாம 10000 மணி நேரம் பட்ச்சுதான் பிர்ஞ்ச்சிக்கணும்டா, கஸ்மாலம்…
ஆக, பத்ரி நிறைய எழுதுவதையே விட்டுவிட்டார்! சந்தோஷமாக இருக்கிறது. ஹையா!
-0-0-0-0-0-
சரி. புத்தக விழாவுக்காகப் பலப்பல யோசனைகள் வைத்திருந்தேன். மேலும்மேலும் யோசித்ததால், மண்டையில் இருக்கும் இரண்டு கடைசி மயிர்களும் உதிர்ந்துவிட்டன. தகத்தகாய தலையனாகிவிட்டேனே! ஐயகோ!!
எது எப்படியோ – விழாவுக்காக, புத்தகங்களுக்காக பல விதமான ஐடியாக்களை வைத்திருக்கிறேன் எனச் சொன்னேனல்லவா? அவையாவன:
- வெள்ளைக் காகிதத்தில், வெள்லை மசியில் புத்தகங்களை அச்சடித்தல்
- பின் வெளியீட்டுச் சலுகைத் திட்டம் (இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு விட வேண்டாம்!)
- சலுகைத் திட்டங்களுக்குப் பதிலாக, தண்டனைத் திட்டங்களை அமல்படுத்துதல் (அதாவது, என்னுடைய ஒரு புத்தகத்தை வாங்கினால், கண்டிப்பாக இன்னொரு புத்தகம் இலவசம்!)
- புத்தக அட்டையை புத்தகத்தின் நடுஸென்டர் பகுதியில் பின் நவீனத்துவத்துடன் வைத்தல்
- முதல் பிரதியை வெளியிடாமல், கடைசிப் பிரதியை வெளியிடுதல்
- செம்பதிப்புகளுக்குப் பதிலாக, வெண்கலப்பதிப்பு அல்லது காலத்துக்கேற்றவாறு கார்பன்நேனோஃபைபர்பதிப்பாக வெளியிடுதல் (+ஒருவர்கூட ஒருபுத்தகத்தையும் வாங்கவில்லையென்றால், வெறுப்புடன் அவற்றை கரும்பதிப்பாக வெளியிடுதல், போங்கடா!)
- குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்குவதற்குப் பதிலாக, அனைத்து புத்தகங்களின் தலா ஒரு பிரதியையும் மேடையில் எரிக்கும் சடங்கைச் செய்தல்
- புத்தகங்களை இணையம் மூலம் வெளியிட – புத்தக முன்னுரை வழங்கியவர்களையே அழைப்பது. (தூரத்தில் தெரியும் புழுதிமண்டலத்திற்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஏழு பேர்கள் இவர்கள்தானோ?)
- பிரதி வெளியிடப்பட்டவுடன், புத்தகத்தின் ரேப்பருடன் புத்தகத்தையும் கிழித்து, (கிழித்ததைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுக்காமல்) அதனை மூலாதாரப் பிறப்புறுப்பின் முன்னர் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளல்
- குரஸாவா அகிரா, ரிட்விக் கடக், அந்த்ரெய் தார்கொவ்ஸ்கி, ஃப்ரேன்ஸிஸ் ஃபொர்ட் கப்பொலா போன்ற எனக்குப் பிடித்த திரைப்பட இயக்குனர்களை அழைப்பது; அவர்கள் மேலுலகத்துக்குச் சென்றுள்ள காரணத்தால் வரமுடியாவிட்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றோ அல்லது இணையம் வழியாகவோ அவர்கள் பங்கேற்பினைப் பெறுவது. இணையத்தால் போகமுடியாத இடம் என்று ஒன்றுதான் உண்டா? அவர்கள் ஃபேஸ்புக் சுட்டியை, ட்விட்டர் ஐடியை நீங்கள் கொடுத்தால் போதுமானது. மற்றபடி நான் பார்த்துக்கொள்கிறேன்; தொடர்ந்து சளைக்காமல் ‘லைக்‘ போட்டுமட்டுமே அவர்களைப் பணிய வைக்க, கைவசம் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன்!
- …
உங்களிடம், ஏதாவது ஐடியா இருக்கிறதா? வேகமய்யா வேகம்! வேறு ஏதாவது சோட்டா எழுத்தாளன்/பதிப்பகத்தான் விழா நடத்துவதற்குமுன் நான் என் விழா நிகழ்ச்சிநிரலை அறிவிக்கவேண்டாமா?
-0-0-0-0-0-0-0-
விழா பற்றி: எனக்குப் பலப்பல குறும்படக் காரர்களைத் தெரியும். சில சமயம் அவர்களுடன் பணி(!) கூடச் செய்திருக்கிறேன்.
அதனால்தானோ என்ன எழவோ, ஒருவர் கூட என்னைப் பற்றிய ப்ரொமோ படம் எடுக்க முன்வரவேயில்லை! அயோக்கியர்கள்!!
கண்டகண்ட கழுதைகளைப் (=sawsaw donkeys ©S.Ramakrishnan) பற்றியெல்லாம் விலாவாரியாகத் தாடிவுட்டுக்கொண்டு படமெடுத்துத் தள்ளும் இந்த அற்பஜீவிகள், ஒண்ணரைக் கண்ணர்கள், என்னை மட்டும் ஏன் புறக்கணிப்பு (=DOVe-computing ©S.Ramakrishnan) செய்யவேண்டும் என்பது எனக்குப் புரிபடவேயில்லை.
அதனால்தான், வேறு வழியில்லாமல், self promotion துறையில் விற்பன்னனான (=SaleBunMan ©S.Ramakrishnan) நானே, என்னைப் பற்றி ஒரு கொள்கை விளக்கப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். போங்கடா!
அதன் பெயர் ஸெல்ஃப் ப்ரோமொ!
அதனை எடுப்பதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறேன். உங்களுக்கு best of luck!
-0-0-0-0-0-
ஹ்ம்ம்… என்னுடைய கீழ்கண்ட புத்தகங்கள், அனைத்தும் நொக்கர் விருது வாங்கக்கூடிய தரம் சார்ந்தவைகளை – நீங்கள் வாங்கிப் படிப்பதையே விடுங்கள் – அவற்றைத் தொடக்கூட மாட்டேன் என்றாலும் – அவற்றின் பெயர்களையாவது தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உப பெருங்காயணம்” சமையற்கலை நூல்
- சாரு நிவேதிதா அவர்களின் முன்னுறை (=சுந்தர கான்டம்) கொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” புதினம்
- ஜெயமோகன் அவர்களின் முன்னுரையுடன் வெளிவரும், மூச்சடைக்கவைக்கும் ஒரேயொரு முழுநீள வாக்கிய நாவல் பரிசோதனை (HorseTest ©S.Ramakrishnan) முயற்சி “ஸ்வேதடமாரம்”
- என் பெருமதிப்பிற்குரிய பேராசான் பேராசிரியர் ஆஇரா வேங்கடாசலபதி (பிகாம், எம்ஏ, பிஹெச்டி) அவர்களின் அணிந்துரையுடன் வெளிவரும் “அந்தக் காலத்தில் திராவிடம் இல்லை!”
- என் இளம் நண்பர் வா மணிகண்டன் அவர்கள் அருளிச்செய்த ஒரு மதிப்புரையுடன் வெளிவரும் “முதலாளியாடா நீ? பன்னாட்டு நிறுவனக்காரனா?? … ட்டூமீல்ல்ல்ல்ல்!” c/o Bill Gates (இதெல்லாம் வேண்டாம் – அய்யோ, எனக்கெதுக்கு வம்பு)
- போற்றுதற்குரிய என் இளம் நண்பர் ‘யுவகிருஷ்ணா’ அவர்களுடைய ஒரு மதிப்புரையைத் தாங்கிவரும் “ஆறிய திராவிட இயக்க உளறாறு” – சுஜாதாத்தனமான துள்ளு நடையில் துள்ளிக்கொண்டே எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரைக் களஞ்சியப் புதினம். (இலவச இணைப்பாக பழைய சரோஜாதேவி செம்பதிப்புகள்!)
- பல்வேறான அறிமுகப் புத்தகங்களை எழுதும், கிழக்குமேலழகர், குழந்தைச் சிரிப்பர் மருதன் அவர்களின் முன்னுரையில்லாமல் வெளிவரும் “பொந்துத்துவா – ஒரு அறிமுகம்”
நன்றி!
வணக்கம்!
வழக்கம்போல உங்கள் அனாதரவை நல்கவும், பாவிகளே! :-(
-0-0-0-0-0-0-
* எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்! 06/01/2015; இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு! 02/01/2015; நற்செய்தி: 2015 சென்னை புத்தகச் சந்தையில் நான் எழுதிய… 31/12/2014)
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
October 3, 2015 at 15:29
Like
October 6, 2015 at 07:23
2016 வெளியீட்டு விழாவிற்கு இப்போதே என் பெயரை பதிவு செய்கிறேன்.
October 6, 2015 at 13:14
1)உப பெருங்காயணம் சமையற்கலைஞர்களையும்
2)பழைய இம்மைக்ரன்ட் புலம்பெயர்ந்த தமிழர்களையும்
3)ஸ்வேத டமாரம் காது கேளாதவர்களையும்
4)அந்தக் காலத்தில் திராவிடம் இல்லை திராவிடர்களையும்
5)முதலாளியாடா நீ…. முதலாளிகளையும்
6)திராவிட இயக்க உளறாறு சரித்திர மாணவர்களையும்
7)பொத்துத்துவா அறிமுகம் எலிகளையும் பெருச்சாளிகளையும் –
புண்படுத்துவதாலும் தவிர ஏழு நூல்களுமே நூல் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஒட்டுமொத்தமாகப் புண்படுத்துவதாலும் ஏழு நூல்களையும் தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் Public Interest Litigation – பொதுமக்கள் வட்டி வழக்கு போடப்படும் என்று எச்சரிக்கிறேன்.