புலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு

January 26, 2016

எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.

-0-0-0-0-0-0-
… இந்த, மகாமகோ சுவையான பதார்த்தத்தை – நாம் கடந்த 50 வருடங்களாகச் செய்துவந்ததைப் போல, இப்போதெல்லாம் யாரும் அவ்வளவு மெனெக்கடுவதில்லை – இணையத்தில் பீப் ஸாங் சீப் ஸாங் என்று டெம்பரவரியாகப் பொங்கியே திருப்தி அடைந்துவிடுகிறார்கள் போல – அதாவது, அடுத்த பப்பரப்பா வரும்வரை…

இன்றைய தேதியில், இந்தப் பப்பரப்பாவானது, அந்த எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரிப் பெண்பிள்ளைகள் தற்கொலை விவகாரம் என அறிகிறேன்; இந்த நிகழ்வின் சிடுக்கலான பின்புலம் (=திராவிட உதிரிக் கல்விமாமாதந்தைகளின் பராக்கிரமம்) புரிகிறதோ இல்லையோ, ஆளாளுக்குப் பொதுமைப்படுத்திப் பொங்கிப் படையல் வைக்கிறார்கள்!  ஆனால் – இதுவும் நாளைய பப்பரப்பா வரைதான், கவலைவேண்டேல்!

ஆகவே, நம் பப்பரப்பா பாரம்பரியத்தின் உச்சங்களை, அதன் தொடரும் புண்பாட்டுக் கூறுகளை விளக்கவே ஒரு எடுத்துக்காட்டாக இந்தச் சமையல்குறிப்பு. உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி.

இதற்குத் தேவையானவை:

1. வரலாற்று அறிவோ, தமிழறிவோ, அறிவியல் பின்புலமோ, ஆராய்ச்சி மனப்பான்மையோ, அதாவது வேலைசெய்யும் மூளையோகூட  துளிக்கூட  இல்லாத தமிழர்கள் (இவர்களைப் பொதுவாக, சுருக்கமாக, திராவிடர்கள் என அழைக்கலாம்)
2. காற்றுவாக்கில் ஏதோ பறந்துவந்த, நூலறுந்த கருத்துப் பட்டத்தை – ஜகஜ்ஜால வித்தை மூலம், தீப்பிழம்பைக் கக்கும் சீன  ட்ரேகனாக மாற்றும் மனோதிடம்
3. சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுடும் வீரம்
4. எவண்டா கேக்கப்போறான் எனும் மறம்
5, புறநானூற்றுக்கும் புறம்போக்குக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கமுடியாத சமனத் தன்மை. யாதும் ஊறே யாவரும் திராவிடரெனும் அனுபூதி நிலை
6. மற்ற இடுபொருட்களை, சமையல் செய்யச்செய்யப் பார்த்துக்கொள்ளலாம்.

-0-0-0-0-0-0-

செய்முறை விளக்கம்:

முதலில் அண்மையிலிருக்கும் அங்காடிக்குச் சென்று விடுதலையில்லாத புலி ஒன்றினை வாங்கவும். பிரபாகரன் ப்ரேண்ட் புலியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். ஆனால்,  அவசரத்துக்கு ஏதாவது விடுதலைச் சிறுத்தை கிடைத்தாலும், கொஞ்சம்போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்; ஆனால் தமிழீழம் என்பதை தமிழெழவம் என மாற்றிக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான்!

வாங்கிவந்த புலியை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.  பின் அதன் வாலை நறுக்கி எறியவும். வாயை மூடித் தைக்கவும்; கீழதிகமாக, அதன் கொட்டையை அகற்றி அதன் கொட்டத்தை அடக்குவதும் முக்கியம்.

இப்படி, கவனத்துடன் கொட்டையகற்றப்பட்ட புலியை, முடிந்தால் உயிருடன் டாஸ்மாக் சாராய எழவு ஏதாவதில் ஊறல் வைக்கவும்.  (இச்சமயம் கொஞ்சம் கவனம் தேவை: ஏமாந்தால், அது தன் குண்டு சட்டியில் இருந்து எகிறிக் குதித்து, எழவு, தனக்குத்தானே ஃப்லெக்ஸ் பேனர் வைக்க முனைந்துவிடும், ஜாக்கிரதை! நன்றி! நன்றி!! நன்றி!!! வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்!)

சரி. இப்போது கொஞ்சம் வீரியமிக்க ஈரோட்டு வெங்காயத்தை வாங்கி நன்றாக அரியவும். தண்டமிழ்த் தமிழரிஞர்களைத் தஞ்சமடைந்தால் இதனை அரியலாம். தமிழான்மீகப்படி  அரியும் சீவனும் ரெண்டு. இதனை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தை ஏமாற்றலாம். அன்றே எம்ஜியார் சொன்னாரல்லவா? கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா… இவ்வெங்காயப் பயிரை…

சிலசமயம் சந்தையில், வெங்காயத்துக்கும் சுயமரியாதைக்கும் ஏக டிமேண்ட் வந்துவிடும். அப்போது, இனமானம் கினமானம் என்றெல்லாம் பார்க்காமல், வெங்காயத்தின் ஏகபோக பதுக்கல்காரரான வீரமணி அவர்களிடம் பெரியார் திடலில் சரணடைந்தால், அவர் அகமகிழ்ந்து தன் கோடவுனிலிருந்து ஒரு வெங்காயத்தையாவது கொடுக்கக்கூடும். கவனிக்கவும்: அவர் உபப்ரேண்ட் வெங்காயத்துக்கு, செல்லமாக, ‘விடுதலை‘ என்ற பெயர் வைத்திருக்கிறார்.

ஆதாரம்: மகாமகோ கவிஞர் யுகவெங்காயம் – புல்லரிப்பு

Screenshot from 2016-01-26 06:14:28

…அவர் தன் கையில் வைத்துக் கொண்டு முகர்வது, ஒரு வெங்காயத்தைத் தான், மைக் என்று நினைத்துக்கொண்டு விடாதீர்கள்; கூர்ந்து கவனிக்கவும்! கொசுறுச் செய்தி: வீரமணி அவர்களின் ஏகபோக சாம்பார்/சின்ன வெங்காய ப்ரேண்ட் பொதுவாக, ‘உண்மை‘ என அரியப்படுகிறது.

…ஆனால், வீரமணி அவர்களால் அளித்தருளப்பட்ட அந்த பகுத்தறிவு வெங்காயத்தை வாசனை பார்த்துவிட்டு, அதனைத் தலையைச் சுற்றி விட்டெறியவும். இது முக்கியம். அது கவைக்குதவாது. வெங்காயமே இது பொய்யடா! காற்றடைத்த திராவிடப் பொய்யடா!!

-0-0-0-0-0-0-0-
பின்னர் இஞ்சியற்ற முறப்பா ஒன்றை வாங்கவும். இந்த முறப்பா என்பதை வெண்பா கலிப்பா என மானாவாரியாகவும் பலவாரியாகவும் அழைக்கப்படும் புறநானூற்று வீரர்களின் அத்தைமகன் என்பதைப் புரிந்துகொண்டு, சங்ககாலத்துக்குச் சங்கு ஊதுவது முக்கியம்.

இதனை முறம் + பா எனப் பிரித்து, பாவை – க்கூத்துக்கு அனுப்பலாம். அல்லது சந்திரனுக்கும், அது முடிந்தால்.  முறத்தைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ‘ஆர்கனிக்’ தமிழ்ப் பெண் ஒருவரை எப்படியாவது, துரத்தித் துரத்தி, தமிழ் பிலிம் ஹீரோ போல, வாங்கவும். இவர், பிற ஆண்கவிஞ்ஜர்கள் போல ஏதாவது  கவிதை கிவிதை என்றெல்லாம் ஏடாகூடமாக எழுதாதவராக இருப்பது முக்கியம்.  ஏனெனில் ஏற்கனவே இந்தப் பகுப்பில் ஒன்றிரண்டுபேர்தான் சொல்லிக்கொள்ளும்படி தொடர்ந்து எழுதுகிறார்கள், பாவம் – அவர்களையும் கபளீகரம் செய்துவிட்டால், அது பாவம்; ஆக, பூவரசம்பூ பூத்தாச்சு, பெண்ணுக்கு பேதியும் வந்தாச்சு… ஆத்தோடு போற… … ஆகவே, இவரையும் நன்றாகக் கழுவவேண்டும்.

பின்னர், ஒரு பெரிய திராவிட அண்டாவை எடுத்துக்கொள்ளவும்.  அடுப்பில் வைக்கவும். கீழே (உங்களுடையதல்ல!) நெருப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். இருந்தால், தாராளமாக அதனைப் ‘புரட்சித் தீ’ பூபாளம் தாம்பாளம் என அழைத்துக்கொள்ளலாம். இல்லாவிடில் எங்கேயிருந்தாவது ஏதாவது அக்கினிக் குஞ்சு ஒன்றைப் பிடித்துக்கொண்டுவந்து அடுப்பில் போடவும். (ஆனால், இது திராவிட மறவர்களிடம் கிடைக்காத வஸ்து; ஆகவேம, சாதா தமிழர்களிடம் செல்லவும் – இது முக்கியம்)

கொஞ்சம் இதயம் நல்லெண்ணெய் எழவை அண்டாவில் விட்டு அதில், அரியப்பட்ட விடுதலையைப் போட்டு மண்டையில் ரெண்டு தட்டு தட்டவும்.

பின்னர் கொட்டை நீக்கப்பட்ட புலி அல்லது சிறுத்தை (அல்லது அம்மாதிரி பூனை ஜந்து) ஒன்றைப் போட்டு, அது முழுகும் வரை கொஞ்சம் நீர் விடவும். நன்றாகக் கொதிக்கவிடவும்.

புலி நன்றாக வெந்தால்தான் அதனை ஒரு கட்டுக்குள் கொணரமுடியும். இல்லாவிட்டால், நிலைமை ஏடாககூடமாகி மனுஷ்யபுத்திரன் அவர்களை ஒரு கோரக் கவிதை எழுதவைத்துவிடும் (இது தொடர்பான ஆராய்ச்சிக்குறிப்புகள்: மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசபுத்திரி(புளிக் கொட்டை) 28/09/2014)

பின்னர் முறம், பெண் போன்றவற்றைச் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும். நன்றாகக் கலக்கவும். இப்போது அந்தக் கொதிப்பில் மேலே புலி சாவகாசமாக நீந்திக்கொண்டிருக்கும், அதற்குக் கீழே முறம் – எல்லாவற்றுக்கும் கீழே அனைத்தையும் தாங்கிக்கொண்டு, அந்த, பாவப்பட்ட தமிழ்ப் பெண்; + பகுத்தறிவுடன் சுற்றிச் சுற்றிக் கும்மாளம் அடிக்கும் அரிந்த விடுதலை வெங்காயம்.

Screenshot from 2016-01-26 08:34:12

இப்போது அண்டாவின் மேல், கிளறிக்கொண்டே குனிந்துகொண்டு – உரக்க ஒரு முறை ‘திராவிட இயக்கத்தில் சுயமரியாதை! கடமை கண்ணியம் கட்டுப்பாடு!!  இனமானம் வாழ்க!!!  சமூக நீதி வளர்க!!!!‘ என எச்சில் தெறிக்கச் சொன்னால் – உடனே தமிழ்ப்பெண் கோபமுற்று ‘டேய் அயோக்கியனுங்களா! …வ்வோத்தா! இன்னாடா புளுவறீங்க, அற்பக் கூவானுங்களா!!‘ என்று வீரிட்டெழுந்து  தன் தலைமேலுள்ள முறத்தால் புலியை அடித்து மேலெழும்புவாள்.

புலியும் உடனடியாக கனடாவுக்கோ, ஸ்கேண்டிநேவியாவுக்கோ அல்லது அந்த கேடுகெட்ட ஜெர்மனிக்கோகூட புலம்பெயர்ந்து ஓடிப்போய், தன் வெந்த புண்களை, ஆனந்தமாக வடிவேலுவால் வருடிக்கொண்டிருக்கும்.

பின்னர், அண்டாவில் இருந்து கொதி நீரை வடித்தெடுத்து சூப் போலப் பருகலாம். அருமையாக இருக்கும்.

இதற்குப் பெயர் – தமிழ்சூப் செம்சூப்! இது எப்படியிருக்கிறது, உடன்இறப்புகளே! உங்கள் அனாதரவைத் தொடர்ந்து நல்குவீர்! நன்றி.

பின்குறிப்பு: திராவிட அண்டாவும் புளுகாக இருக்குமாதலால், அதனையும் பேரீச்சம்பழத்துக்குப் பண்டமாற்று செய்துகொள்ளலாம்.

அடுத்த சமையல் குறிப்பு: சங்ககாலக் கவரிமானின் ஒரேயொரு மசுத்தைப் புடிங்கி, அதனைத் தற்கொலைக்குத் தூண்டுவது எப்படி!  இதற்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாயாக, திருவள்ளுவனை சாட்சிக்கு அழைப்பது மேலெப்படி!

தற்குறிப்பு: அரைகுறைத் திராவிடர்கள், நம் சாதா சகதமிழர்களுக்கு அளிக்கும் நகைச்சுவை இன்பம்ஸ்களுக்கு அளவேயில்லை!

-0-0-0-0-0-0-0-

மேற்கண்ட சமையல் குறிப்பால், நாம் அறியும் நீதி:

டேய்! …வொங்கம்மாள…  இனிமேக்காட்டீ ஆராவது எங்கிட்ட ‘புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத்தாய்‘ அப்டீன்னிட்டு வொளறிக்கிட்டு புல்லரிஞ்சிக்கினு வந்தீங்கன்னாக்க, பட்டா, வொங்களோட பவுத்தறிவு வெங்காயத்தோட, வொங்க குஞ்சாமணியயும் சேத்து வூக்க போனஸா அரிஞ்சு போட்றுவேன்… வெட்டி பழம் பெரும பேச வந்த்ட்டான்னுவ…  சாவு கெராக்கீங்க…

போங்கடா – நீங்களும் வொங்களோட பொளகாங்கிதமும்…

-0-0-0-0-0-0-

இன்று ஜனவரி 26. உங்களுக்கு என்னுடைய குடியரசுதின வாழ்த்துகள். என்னுடைய பாரதம் மஹோன்னதமானது! 26/01/2015

-0-0-0-0-0-

தொடர்புள்ள தொகுப்புகள்/பதிவுகள்:

 

 

3 Responses to “புலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு”


  1. […] புலியை முறத்தால் அடித்து விரட்டுவது … 26/01/2016 […]

  2. Vijay Says:

    very nice. not able to control laugh.


  3. […] இதனால் வெள்ளிடை மலை! ;-) (பார்க்க: புலியை முறத்தால் அடித்து விரட்டுவது … […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s