“சிலர், மற்ற மனிதர்களுக்கு உதவியென்று ஏதாவதைச் செய்தால் – அதற்கான பிரதிபலனை, பதில் உதவியை எப்படிப் பெறுவது என்று சதா நோக்கியவண்ணம் இருப்பர். மற்றும் சிலர், இந்த பதிலுதவி பெறுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்க மாட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தது பின்புலத்தில் இருக்கும் – ஆகவே, அந்த உதவியை, ஒரு கடனாகத்தான் பாவிப்பர். ஆனால் இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். அவர்கள் திராட்சைக்கொடியைப் போன்றவர்கள் – ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் கனிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். அளித்த உதவிகளுக்குப் பின்னர் மற்றவேலைகளுக்குத் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்பார்கள்… நாம் அப்படித்தான் இருக்கவேண்டும்.”
மார்க்கஸ் ஆரீலியஸ், ரோமன் சக்ரவர்த்தி. (தியானங்கள் / எழுதிய வருடங்கள்: 0161 – 0180 ஸிஇ / மொழிபெயர்ப்பு: க்ரிகரி ஹெய்ஸ் / பக்கம் 55 / ரேன்டம்ஹவ்ஸ், நியூயார்க் / என்னிடமிருக்கும் பதிப்பு 2002 / நான் இப்புத்தகத்தை வெகுவாகப் பரிந்துரை செய்வேன்.)
நம் கீதை சொல்வதும், அடிக்கோடிடுவதும் இதனைத்தான். ஆனால் நான் பரிணாம வளர்ச்சியற்றவன். கிடந்து உழன்று கொண்டிருக்கும் சாதாரணன் தான். ஆகவே – நான், சக்ரவர்த்தி அவர்களின் பகுப்பில், இந்த ‘முதல் சிலர்’ வகையறாக்களில் இருப்பவன். இப்படிச் சொல்வதில் எனக்குக் குற்றவுணர்ச்சியோ போதாமையோ இல்லை; வெறும் வருத்தம்தான். ஏனெனில் நான் போகவேண்டிய தூரம் அதிகம். Read the rest of this entry »
பாவப்பட்ட ஜீவனான, கருத்துரிமைப் பிரகடனங்களிடும் சக வீரத்தமிழ்ப் போராளிகளால் முட்டுக்கொடுத்து நிற்கவைக்கப்படவேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட மாஜி நக்ஸலைட் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு, ஏதோ என்னாலான ஆதரவு. ஹ்ம்ம்ம்…
மாறன்கள், மாறவே மாட்டான்கள்!
January 24, 2015
மகாமகோ மாறன் சகோதரர்களின் ஊழல்கூத்து என்பது ஒரு தொடரும் சோகம்!
மத்திய தகவல்துறை/தொலைத்தொடர்புத் துறை ‘அமைச்சராக’ இருந்தபோது, படுகேவலமாகவும் படுமோசமான பிச்சைக்காரத்தனமாகவும் – தன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே திருட்டு ‘ஸப்-கான்ட்ரேக்ட்’ ;-) எடுத்து தன் வீட்டிலிருந்தும் ஒரு எக்ஸ்சேஞ்ச்(!) நடத்திய மேதகு தயாநிதி மாறன் அவர்களின் கூத்துகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
திராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி?
January 22, 2015
… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!
தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!
ஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜெயமோகன், நமது ஜொலிக்கும் இஸ்ரோ ஆட்கள், வாய்ப்புகள், நம் பிரச்சினைகள், – சில குறிப்புகள்
January 8, 2015
முதலில் மூன்று வெவ்வேறூ எதிர்வினையாளர்களின் மின்னஞ்சல் கருத்துகளின் சாராம்சம்:
1. எனக்கு, கஷ்டத்திலிருப்பவர்களிடம், கடும் துன்பத்தில், திக்குத் தெரியாமல் வாடுபவர்களிடம் கரிசனம் இல்லை. மனிதாபிமானமேயில்லை.
2. நான் ஒரு மேட்டிமைவாதி (elitist!). உச்சாணிக் கொம்புகளில் இருக்கும் ஆட்களைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை. என் பார்வையில், கீழே இருப்பவர்களெல்லாம் ஒதுக்கத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள்.
3. ஜெயமோகன் மேல் பொறாமையுடன் புழுதி வாரியிறைக்கும் கும்பலில் நான் ஐக்கியமாகி விட்டேன். நான் அவருடன் நேரடியாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்வதை விடுத்து, எதிர்க்கருத்து சொல்லி, ஒத்திசைவில் பதிவிடுகிறேன். நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை இப்படியா வெளியில் கொட்டுவது, கல்லெறிவது?
எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்!
January 6, 2015
வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!
ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு!
January 2, 2015
இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:
- ஏன் நீங்கள், சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது எரித்தேயாகவேண்டும்
- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
- சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்
முதல் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் – என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை. என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும். Read the rest of this entry »
ஜேஜே(-வைக் கொலை செய்தது யார்?): சில குறிப்புகள்
August 11, 2014
…. ‘தாங்கவே முடியவில்லை,’ தொடர்கிறது!
‘சலபதி‘ அவர்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும் – அன்னாருடைய ஆய்வுப் புத்தகங்களோடு, கட்டுரைக் கதையடித்தல்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு கால்கோள் விழாவினையே நடத்தியிருப்பேன்! ஆனால், அவர்… :-(
-0-0-0-0-0-0-0-0-0-0-
… பொதுவாக தம்மை இப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார் இவர்: “A.R. Venkatachalapathy is a historian and Tamil writer. chalapathy(at)mids(dot)ac(dot)in”; மேலதிகமாக, சில சமயங்களில் இவர் “social historian” எனவும் “literary historian” எனவும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
இதில் என்னுடைய சிறு பிரச்சினை என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை ‘சலபதி’ ஒரு வரலாற்றாளரோ வேறு ஏதாவது ஆய்வாளரோ அல்லர். ஆனால், அவர் தன்னை அப்படி அழைத்துக்கொள்ள சர்வநிச்சயமாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது – நான் அடுத்தவருடம் இரு நொபெல் பரிசுகளையும் (இயற்பியல்+இலக்கியம் – மற்றவைகளைப் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன்!) ஒரு மேன் புக்கர் பரிசையும் ஒரு நொக்கர் விருதையும் ஒரு பீல்ட்ஸ் விருதையும் ஒரேசமயத்தில் வாங்கப் போகும் அளவுக்கு ஆழமும் வீச்சும் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவன் என்ற என்னுடைய சொந்த, வீங்கிய கருத்தை, பரிதாபத்துக்குரிய நீங்களும் ஒப்புக் கொள்ளமுடியுமென்றால்…

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY?? இதற்கு ஒரு ‘த ஹிந்து’ தினசரியின் பெத்த செய்தி வேறு! http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302411300.htm
கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள்
July 1, 2014
இந்தச் சமன்பாட்டை இப்பதிவு நிரூபிக்கப் போகிறது. (பாவம் நீங்கள்!)
… வழக்கமாக இந்த ஒத்திசைவானது, புளகாங்கிதத்துடன் சிலந்தியோட்டிக்கொண்டிருக்கும் ஒரு அசுவாரசியமான அக்கப்போர் மூளைக்குடைச்சல் வலைதளம்தான்; ஆனால் எப்போதாவது பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் போன்றவர்கள் தேவைமெனெக்கெட்டு சுட்டியைப் பரிந்துரைத்தால், ஆயிரத்துக்குப் பக்கத்தில் பக்கப் பார்வைகள் கூடி விடும். ஆக – அடுத்த நாள் என்னுடைய சாலைப் பயணங்களில், என் அருகில் வரும் ஆட்டோக்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியிருக்கும்; என் புடம் போடப்பட்ட அனுபவங்கள் ஆட்டோமெடிக்காக இப்படிச் செய்யவைக்கும். :-)
இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது: சில ஆயிரம் தமிழ் படிக்கத் தெரிந்த (அல்லது தமிழ்ச்சுட்டிகளின் மேல் க்ளிக் செய்யக்கூடியவர்கள்) அனாமதேய நபர்கள், காலையில் பல்தேய்த்த பின் (வாய்கூடக் கொப்பளிக்காமல்) முதலில் ஆஜர் கொடுப்பது இந்தத் தளங்களில்தான் என்பது. இந்த ஆயிரம் பேர்களும் நிச்சயம், வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவாத, உதவாக்கரை ஆண்களாகத் தான் இருக்கவேண்டும் என்பதும் என் துணிபு. Read the rest of this entry »
QED.
(அல்லது) ஹ்ம்ம்… சில சமயங்களில், என் பதிவுகளின் தலைப்புகளை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே நெஞ்சுவலி வந்துவிடும்தான், உங்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது… ஆனால், கணிதம் மூலமாக, எந்த விஷயத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியாது, சொல்லுங்கள்!
சரி. விஷயத்திற்கு வருகிறேன்.
திராவிடத் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மேற்கண்ட பொதுவிதிச் சமன்பாடு மூலம் மட்டுமே தேர்தலைப் புரிந்துகொள்ள முடியும். முன்னேற்றமாவது, வளர்ச்சியாவது, வளமாவது, நீதியாவது கொள்கையாவது மசுராவது… போங்கடா.
இந்தக் கேடுகெட்ட விதிக்கு விதிவிலக்குகளென்றால் – எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்கள், பாஜக-வினர் போன்றவர்கள் மட்டுமே! இவர்களுக்குத்தான் கொள்கை என்று ஒன்று (மற்றவர்களுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ, அது வேறு விஷயம்) இருக்கிறது. சுய-அர்ப்பணிப்புள்ள அடித்தளம் என்று ஒன்று இருக்கிறது. இவைகளில், உண்மையான தலைவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பலர் இருக்கின்றார்கள். ஓரளவு, இந்த விடுதலைச் சிறுத்தைகளையும் இந்தக் கணக்கில் – அதாவது பைசா கொடுக்காத கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் — சீமார் வகையறா, வினவு வகையறா, தவ்ஹீத்ஜமாத், ஆம்ஆத்மி வகையறா போன்றவை மானாவாரி, மேகம்பார்த்தபூமிச் சாகுபடி பப்பரப்பா உச்சாடன இயக்கங்கள் மட்டுமே, அவை அரசியல் கட்சிகளல்ல. Read the rest of this entry »
தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்
April 23, 2014
பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.
அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:
தேர்தல் பாதை, திருடர் பாதை!
ஆக, ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:
தேர்தல் பாடை, திருடர் பாடை!
… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(
மேலதிகமாக Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம் நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’ – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??
எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!
-0-0-0-0-0-0-0-
2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்), நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி. மற்றபடி அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன… Read the rest of this entry »
இதுதாண்டா மோதி-யின் நீதி பரிபாலனம்!
April 21, 2014
(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.
ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.
ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக, வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக, முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!
அய்யய்யோ! நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-0-
சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: Read the rest of this entry »
குணோத்ஸவ்: மோதி-யின் அழகான கல்வித் திட்டங்களில் ஒன்று – சில குறிப்புகள், தமிழகத்தைக் குறித்த வருத்தங்கள்
April 13, 2014
குணோத்ஸவ் = தரத்தைக் கொண்டாடுதல்!
முன்குறிப்பு:
நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)
ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-( Read the rest of this entry »
நரேந்த்ர மோதி-யின் மேல் புழுதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு!
April 12, 2014
தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் – பல நடைமுறை ரோதனைகள் இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும், கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…
ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக் கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன… கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.
மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள். மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »
Dravidian Disclessia… proudly marching on to Dicklessia!
April 11, 2014
The first part of this offending two-part series is at: Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
In the previous post, it was kind of ‘proved’ that the dastardly & Dyslexic Dravidian Leadership has plunged our dear Tamilnadu into a veritable educational and educative stellar mess.
But moronicities have a momentum of their own – they don’t just stop; they don’t just say enough & exit. They follow a delectable downward spiral. Therefore… this is the second & final part of my illustrious thesis — ‘Subaltern Studies in Dravidian Regress!’™ ;-)
And so.
-0-0-0-0-0-0-0-
Then came Disclessia! Aha!
disklessia \disk*les”i*a\ (d[i^]sk*l[e^]ss”[-e]*[.a]) n.
Any of the various backbone disorders caused by a damaged or a congenitally faulty structure, in a person claiming descent from the Dravidian idea, that constitutes a set of impaired discs, and causing an impairment of the ability to be bold, forthright or to be brave or to be just; to have a propensity to kowtow to perceived authorities; to randomly ingratiate oneself with the powers that be.
Usually, we human beings take pride in the fact that we have a functional Spine or a Backbone, if you will; what we call a backbone consists of a stacking of vertebral bones between which, there are discs, to provide the functionality of a bearing. Sometimes, there would be some malfunction involving the discs, and this impairs the proper functioning of the backbone. However, in the case of the effete Dravidian leadership, these discs are entirely missing because of which – it lacks a functioning spine. Dravidian leadership is Spineless, period. Read the rest of this entry »
Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
April 9, 2014
Foreword: ummm… if you HAD to listen to an old, depleted guy for TWO whole BLOODY hours, extolling the virtues of LEMURIA and the virtuousness of DRAVIDAM ad nauseam, repeating that, Tamilnadu is where it is – all developed, progressive and beautiful – only because of the Dravidian movement and on and on and on…. even an otherwise sane(!) person like me would become an extremely ill-puttogether polemicist, even by my very own bloody standards!
Well, that’s what has happened to me, atleast. And, the fact that this old man is actually well read otherwise and scholarly and is sane, is all the more galling!
Yes. I am of the firm & considered opinion and conviction that, Tamilnadu is where it is now – not BECAUSE of the Dravidian movement – but, IN SPITE of the Dravidian movement. Got it, old man? It is in, whatever that is left of its basic genius, that the Tamil people have gotten some sustenance from, and not from some thieving, idiocy propagating mobs, got it?
Warning: Dear reader of this post, If you seriously believe that the idea of Dravidianism has done any good to my dear Tamilnadu, you should not proceed any further; reading this post would be dangerous to your health. Go back to the hell-hole from which you surfaced for Oxygen. This is PG45 stuff, and is not meant for Twitter trolling adolescents. Period.
Okay. You have been warned enough; read on the rest of the post, if you must; but, don’t squeal rather pathetically, later — got it? Read the rest of this entry »
தமிழ்நாடு vs குஜராத் வளர்ச்சி ‘மாடெல்’, மோதி… …: சில தன்னிலை விளக்கங்கள், குறிப்புகள்
March 31, 2014
… இதெல்லாம் தேவையா என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)
உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் – உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …
சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.
இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.
“மோதி-யின் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்ததில் நாங்கள் பார்த்ததெல்லாம் ரோட்டோர ஒண்ணுக்கடிப்பாளர்களைத்தான்!”
March 29, 2014
:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!
-0-0-0-0-0-0-0-
நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.
ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.
இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்) Read the rest of this entry »
கருணாநிதி: “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?”
March 19, 2014
இக்காலங்களில், எனக்கு மிக மிக வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர் சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம், சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.
அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.
கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம் “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத் தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம் போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?
“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?
… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது. Read the rest of this entry »
இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
February 23, 2014
… … தமிழகத்தில் ஒன்றுமே சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.
எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)
நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.
பதில் கிடைத்ததா? சரி.
கிடைக்கவில்லையா, அதுவும் சரியே.
இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .
ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே சொல்கிறேன்:
சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »



