ஜேஜே(-வைக் கொலை செய்தது யார்?): சில குறிப்புகள்
August 11, 2014
…. ‘தாங்கவே முடியவில்லை,’ தொடர்கிறது!
‘சலபதி‘ அவர்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும் – அன்னாருடைய ஆய்வுப் புத்தகங்களோடு, கட்டுரைக் கதையடித்தல்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு கால்கோள் விழாவினையே நடத்தியிருப்பேன்! ஆனால், அவர்… :-(
-0-0-0-0-0-0-0-0-0-0-
… பொதுவாக தம்மை இப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார் இவர்: “A.R. Venkatachalapathy is a historian and Tamil writer. chalapathy(at)mids(dot)ac(dot)in”; மேலதிகமாக, சில சமயங்களில் இவர் “social historian” எனவும் “literary historian” எனவும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
இதில் என்னுடைய சிறு பிரச்சினை என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை ‘சலபதி’ ஒரு வரலாற்றாளரோ வேறு ஏதாவது ஆய்வாளரோ அல்லர். ஆனால், அவர் தன்னை அப்படி அழைத்துக்கொள்ள சர்வநிச்சயமாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது – நான் அடுத்தவருடம் இரு நொபெல் பரிசுகளையும் (இயற்பியல்+இலக்கியம் – மற்றவைகளைப் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன்!) ஒரு மேன் புக்கர் பரிசையும் ஒரு நொக்கர் விருதையும் ஒரு பீல்ட்ஸ் விருதையும் ஒரேசமயத்தில் வாங்கப் போகும் அளவுக்கு ஆழமும் வீச்சும் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவன் என்ற என்னுடைய சொந்த, வீங்கிய கருத்தை, பரிதாபத்துக்குரிய நீங்களும் ஒப்புக் கொள்ளமுடியுமென்றால்…

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY?? இதற்கு ஒரு ‘த ஹிந்து’ தினசரியின் பெத்த செய்தி வேறு! http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302411300.htm
… என்னைப் பொறுத்தவரை – அவர் ஒரு சுவாரசியமான பத்திக் கதை எழுத்தாளர். ஆங்கில ‘தமிழ் ஹிந்து‘ பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும் தமிழ் ‘ஆங்கில ஹிந்து‘ பத்திரிகைக்கு தமிழிலும் எழுதும் இருமொழிகளில் புனைவுகள் (=ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல) எழுதும் திறமை கொண்டவர். அவ்வப்போது இபிடபிள்யு பத்திரிகைக்கும் அதற்கேற்றவாறு சுளுக்கேஸ்வர தம்பிரான் சமூகவியல் பாணியில் எழுதுவார்.
அப்படியெல்லாம் எழுதும்போது மற்ற பிரபலமான சிந்தனையாளர்களை மேற்கோள் காட்டிமட்டுமே – ஆனால் தன்னுடைய துல்லியமான எண்ணக்கீற்றுகள் என்று ஒரு எழவும் இல்லாமல், ஒரு தர்க்கரீதியான–சித்தாந்தரீதியான அடுக்குகளையும் பின்னாமல், கடன்வாங்கிய கோட்பாடுகளை அடுக்கிக் கொண்டிருப்பார். முடிந்தால் அவருடைய முன்முடிவுகளை முன்னகர்த்த அவரலாற்றை அவலட்சணமாக உபயோகப்படுத்துவார். அவ்வளவுதான்.
இவருக்கு மூளை இல்லாமலில்லை. ஆனால் வெறும் சோம்பலும், இந்தத் தமிழர்களுக்கு இந்த அளவு போதும் என நினைக்கிறவராக இருக்கலாம் – என்பதுதான் என் எண்ணம்.
என்ன செய்வது சொல்லுங்கள். நிறைய நேரம் செலவு செய்து படித்திருக்கிறார் – உதவித்தொகை பெற்று, உதவிகளும் பல பெற்று (இவருக்கு ‘உதவி‘ செய்த ஒருவரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்) கண்டமேனிக்கும் ஆவணக் காப்பகங்களிலேயே குடியிருந்து, நிறைய செய்திகளைத் தெரிந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவரிடம் நுண்ணோக்கிய பார்வையோ, ஆய்வுக் குவியமோ, சமகால வரலாறுகளைப் பற்றிய புரிதலோ இல்லை. ஆனால், என்ன – ஒரு அசாதாரணக் கற்பனை வளம் அவருக்கு அதிகம். வேறென்ன. ஆகவே மானாவாரியாக, போலியாய்வுக் கட்டுரைகளை எழுதித் தள்ள முடிகிறது.
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஏறக்குறைய இவருடைய பதிப்பிக்கப்பட்ட ‘எழுத்துகள்’ அனைத்தையும் படித்திருப்பவன் என்ற முறையில் – எனக்குத் தெரிந்து, இவர் ஒரு தேர்ந்த வரலாற்றாய்வாளராக இதுவரை தன்னைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
சரி. என்னைப் பொறுத்தவரை, ஒரு வரலாற்றாளருடைய புரிதல்கள், கடமைகள் எவ்வாறு இருக்கவேண்டும்?
- அவருடைய படிப்பறிவு அபரிமிதமாக இருக்கவேண்டும். சிந்திக்கும் திறனும் அபாரமாக இருக்கவேண்டும்.
- அவருடைய பார்வை – தேதிகளை, நிகழ்வுகளை அடுக்குவதாகவோ, தொடர்பற்ற நிகழ்ச்சிகளை வலியத் தொடர்புபடுத்தி, ஒரு பக்கப் பார்வைகளை மட்டும் தருவதாகவோ இருக்கக் கூடாது.
- வரலாற்று உண்மைகள் எனப்படுபவைகள் – வெறுமனே விமர்சனம் செய்வதாலேயோ, அக்காலத்து நிகழ்வுகளை இக்காலத்து நடைமுறைகளுடன் பொருத்துவதனாலேயோ, வரலாற்று ஆவணங்களைச் சுருக்கி ஒரு விதமான புரிதலோ, பின்புலத்தையோ அறியாமல் வெட்டிக் கட்டுரைகள் எழுதுவதாலேயோ – வெளிப்படுபவையல்ல — என்பதை அவசியம் புரிந்து கொண்டவராக இருக்கவேண்டும்.
- மேலும், வரலாற்று உண்மைகள் எனப்படுபவைகள், எப்படி மனிதக் குறிக்கோள்களும் திட்டங்களும் தீட்டப்பட்டன, எப்படி அவை வெற்றி பெற்றன அல்லது தோல்வியடைந்தன என்ற ஜாபிதாக்களிலும் இருக்கமாட்டா. இந்த அடிப்படைப் புரிதல் இல்லையென்றால் – வருட ரீதியாக, போர்கள் ரீதியாக, சுவையான நிகழ்வுகள் ரீதியாக, வீங்கிய அதிமனிதர்கள் ரீதியாகத் துணுக்குகளைக் கந்தறகோளமாக அடுக்குவது மட்டுமே சாத்தியம்.
- ஆனால் — மனித வாழ்வின், எண்ணப் போக்குகளின் மாற்றங்களை அவனுடைய சூழல் எப்படிப் பாதித்தது, அதனை உபயோகித்து, அல்லது அந்தச் சூழல் எழுப்பிய முட்டுக் கட்டைகளிலிருந்து மீண்டு எப்படி அவன் தொழில் நுட்ப, தத்துவார்த்த, க்ரியாசக்திகளால் உந்தப்பட்ட வழிகளில் தன்னை மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறான் — போன்ற விஷயங்கள் வரலாற்றாசிரியனின் பார்வைக்கு அவசியம் வரவேண்டும்.
நான் மிகவும் மதிக்கும் வரலாற்றாளரான, தெற்காசிய/இஸ்லாமிய வரலாற்று விற்பன்னரான பெர்னார்ட் லூயிஸ் சொல்வது போல:
“Historians in free countries have a moral and professional obligation not to shirk the difficult issues and subjects that some people would place under a sort of taboo; not to submit to voluntary censorship, but to deal with these matters fairly, honestly, without apologetics, without polemic, and, of course, competently.
“Those who enjoy freedom have a moral obligation to use that freedom for those who do not possess it. We live in a time when great efforts have been made, and continue to be made, to falsify the record of the past and to make history a tool of propaganda; when governments, religious movements, political parties, and sectional groups of every kind are busy rewriting history as they would wish it to have been, as they would like their followers to believe that it was.
“All this is very dangerous indeed, to ourselves and to others, however we may define otherness — dangerous to our common humanity. Because, make no mistake, those who are unwilling to confront the past will be unable to understand the present and unfit to face the future.
– பெர்னார்ட் லூயிஸ் / இஸ்லாமும் மேற்கும் / 1994 / ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (பக்கம்# 130)
ஆனால் – ‘சலபதி’ நம்பவேமுடியாத அடிப்படை சுதந்திரங்கள் மிக்கவொரு நாட்டில் வாழ்ந்தாலும், அவர் தன் கடமைகளைச் செய்யவில்லை.
ஆக, என் கருத்தில், சலபதி அவர்கள் – ஒரு மதிக்கத்தக்க வரலாற்றாசிரியருக்கான மேற்கண்ட லட்சணங்களில். வரையறைகளில் எந்த நற்கூறிலும் அடக்க முடியாதவராக இருக்கிறார்.
-0-0-0-0-0-0-0-
‘சலபதி‘ எனும் முழிபெயர்ப்பாளர் பற்றி:
இவர் நிச்சயமாக, என்னுடைய செல்லமான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அளவுக்குப் படுமோசமான பெயர்ப்பாளர் அல்லர்; ஆனால், இப்படிச் சொல்வது – ‘சலபதி‘ அவர்களைப் பெருமைப் படுத்துவதும் இல்லை.
ஏனெனில் – மொழி பெயர்ப்பது என்பது ஒரு யோக முறை, நெறி. அதனைப் பொத்தாம்பொதுவாக, நேர்மையற்று கந்தறகோளப் புரிதல்களுடன் செய்யக் கூடாது. அரைகுறைகள் இவற்றைச் செய்ய யத்தனிக்கவே கூடாது. முக்கியமாக – எனக்கு ஒரு புதினம் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதனை மொழிபெயர்த்து பஞ்சமாபாதகம் செய்யக்கூடாது.
நிச்சயமாக – இந்தப் பெயர்ப்பு என்பது, வார்த்தைக்கு வார்த்தை மூலத்தின் அர்த்தங்களை அனர்த்தமாகப் புரிந்து கொண்டு (five rupee note = ‘ஐந்து ரூபாய் நோட்டையும், ஒரு குறிப்பையும்‘) எழுதுவது அல்ல.
“டாய், எனக்கு இன்னொரு மொளியும் தெரியும் – எப்பேர்க்கொத்த படிப்பாளி நான் – இதோ பிட்ச்சிக்கோடா ங்கொம்மாள, இன்னொரு மொழிபெயர்ப்ப…” என அகந்தையுடன் அற்ப பெயர்ப்புகளை வாசகர்கள் மேல் விட்டெறிவது அல்ல.
ஆனால், இந்த யோகத்தின் வழியாக – மூலத்தின் ஆழத்தையும் வீச்சையும் – மூலத்தைப் படிக்கும்போது எழும் அற்புத சுகானுபவங்களை – சிந்தனை சார் படிமங்களை, சிரத்தையுடன் அக்கறையுடன் இன்னொரு மொழிக்கலாச்சாரத்தில் மீட்டெடுப்பதுதான் மொழிபெயர்ப்பாளனின் வேலை ஆகும்.
உதாரணத்துக்கு – மாஹ்ஸெல் ப்பூஹ்ஸ்ட் (=மார்ஸெல் பூரூஸ்ட், Marcel Proust) அவர்களின் மகாமகோ மகத்தான புதின வரிசையான ‘தொலைந்த காலங்களைத் தேடுதல்‘ அல்லது ‘பழைய நினைவுகளின் ஞாபகப் படுத்திக் கொள்ளுதல்‘ (=Remembrance of things past அல்லது In search of lost time) எனும் ஃப்ரென்ச் மொழி மூலத்தை எடுத்துக் கொள்வோம்.
இதன் முதல் புத்தகமான ‘ஸ்வானின் வழி‘ (=Swann’s Way) என்பதை எடுத்துக் கொண்டால் – ஸ்காட் மொன்க்ரியெஃப் அவர்களின் மொழிபெயர்ப்பைத்தான் சில வருடங்கள் முன்வரை படித்திருந்தேன். இதிலேயே சொக்கிப் போயிருந்தேன். ஏனெனில் இதுவே தாங்கொண்ணா அழகுடன் இருந்தது…
… ஆனால் அம்மணி லிடியா டேவிஸ் (இவருக்கு 2013 மேன் புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது) அவர்களின் மொழிபெயர்ப்பைச் சில வருடங்கள் முன் படிக்க நேர்ந்தபோது அரண்டுவிட்டேன், ஆடிவிட்டேன் – இப்படியும் ஒரு அதிஅற்புதமான மொழிபெயர்ப்பு ஒன்றை ஒரு மனிதர் செய்யக் கூடுமா என்று!
உலகக் கலாச்சாரத்துக்கு, சந்தோஷத்துக்கு எப்படி ஒரு மகோன்னதமான பங்கை அளித்திருக்கிறார், அம்மணி லிடியா!
குறிப்பு: எனக்கு ஃப்ரென்ச் மொழி தெரியாது. ஆனால் இம்மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமை உள்ள பலரை அறிவேன். இவர்களின் கருத்திலும், அம்மணி லிடியாவின் மொழி பெயர்ப்பு என்பது out of the world!
-0-0-0-0-0-0-
ஆனால், மொழி பெயர்ப்பென்பதை, விட்டேற்றியாகச் செய்வது என்பது மகாமகோ பாவம். இது சம்பந்தப்பட்ட இருமொழிகளுக்கும், அவை தாங்கும் கலாச்சாரங்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் துரோகம்.
… இப்போது சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே: சில குறிப்புகள்‘ எனும் நாற்பத்தைந்து வயதான, நான் மிகவும் மதிக்கும் புதினத்தை எடுத்துக்கொள்வோம்.
இதன் மொழிபெயர்ப்பு (=முழிபெயர்ப்பு) 2003-4 வாக்கில் ‘கதா‘வால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது; பெயர்த்தது: சாட்சாத் ஆ இரா வெங்கடாசலபதி. இதனைக் கேள்விப்பட்டதும் அடுத்த நாளே துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி, கங்காராம்ஸ் (பெங்களூர் எம்ஜி ரோட்) புத்தகக்கடைக்குச் சென்று மூன்று பிரதிகள் வாங்கினேன். ரூ 750/- காலி.

பணத்தையும் நேரத்தையும் விரயமாக்க வேண்டுமென்றால், தமிழ் இலக்கியத்துக்குத் துரோகம் செய்யவேண்டுமென்றால் – தாராளமாக இப்புத்தகத்தை வாங்கலாம்.
அட்டை வடிவமைப்பு கோரம் (தமிழ் மூலத்தில் ஆதிமூலத்தின் கனவும் நனவும் கலந்த அட்டைப்படம் எம்மாதிரி லாகிரி கொடுத்தது!). புத்தக் கோர்ப்பும் (பைண்டிங்) சரியில்லை வேறு.
புத்தகத்தின் தலைப்பு என்பது JJ: Some Jottings என இருந்தது; இது JJ: Some Notes என இருந்திருக்கவேண்டுமோ எனக் கொஞ்சம் இடித்தது. ஆனாலும் பரவாயில்லைதான் என ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். தமிழின் அடுக்குமொழி எதுகைமோனை படைசிரங்கு வியாதிக்கு ஜேஜேயும் ஜாட்டிங்காக பலி என நினைத்துக் கொண்டேன்.
… இந்த மூன்று பிரதிகளுக்கான என் திட்டம்: ஒன்று எனக்கு, இரண்டு என்னுடன் வேலை செய்த இரு அற்புதமான (கன்னட) ஆசிரியைகளுக்கு. இந்த பின்னவர்கள், என்னிடம் சதா மாஸ்தி, கைலாசம், ராஜரத்தினம், குவேம்பு, காரந்த், நாகராஜ், பைரப்பா, கர்னாட், அனந்தமூர்த்தி பற்றிய பெருமையடித்தே வெறுப்பேற்றியவர்கள். இத்தனைக்கும் முதல் மூன்று பேரும் தமிழ்க்காரர்கள் வேறு. இருந்தாலும், பதிலுக்குப் பீற்றிக்கொள்ள – தமிழ் எழுத்தாளர்களின் நல்ல மொழிபெயர்ப்புகள் கல்யாணராமன் போன்ற தரமுள்ளவர்களால் செய்யப் பட்டவைகள் என்னிடம் அவ்வளவு இல்லை. ஆகவே தான் இந்த மூன்று பிரதி திட்டம். :-( சந்தர்ப்பம் கிடைத்தால் விடக்கூடாது என்ற முனைப்பு.
ஆவலுடன் படிக்க ஆரம்பித்த எனக்கு – முன்னுரை நன்றாகவே வந்திருந்தது போலப் பட்டது. ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. எதிர்பார்ப்பில் ஒரே படபடப்பு. ஒரே மூச்சில் படித்துவிடலாம் என ஆரம்பித்தேன்.
ஆனால், மொழிபெயர்ப்பு ஒரே மகாமகோ பரிதாபம். எனக்கு மிகவும் வெறுத்துவிட்டது. கேஎல்பிடி என்று சொல்வார்களே! எனக்கு ஏற்பட்டது அதுதான். :-( (மன்னிக்கவும்)
… ‘சலபதி‘ அவர்களின் மேல் – அவருடைய வரலாறு, சமூகவியல் ரீதியான மேதமையில் மரியாதையற்றவனாக இருந்தாலும், அவர் ஒரு தரமான மொழிபெயர்ப்பாளராக இருக்கலாம் என நினைத்திருந்தேன். அதுவும் தவறாகி விட்டது. என்ன செய்வது சொல்லுங்கள்.
… படபடப்பு குறைந்து, சிறிது நேரம் கழித்து என் மனைவியிடம் – ஒரு கையில் தமிழ் மூலத்தையும், இன்னொரு கையில் இந்த ‘சலபதி‘ய கந்தறகோள மொழிபெயர்ப்பையும் வைத்துக்கொண்டு பிலாக்கணம் வைத்தேன். இது தகுமா என்று கேட்டேன். இதனை எப்படி எதிர்கொள்வது என முறையிட்டேன். என் தமிழில் மட்டும் ஏன் இப்படியென்றேன். அழுவதை மட்டும்தான் செய்யவில்லை… என் வாசிப்பில் ஏதாவது குறையா எனக் கேட்டேன்.
என்னை ஆசுவாசப்படுத்த முயற்சிக்காமல், இரண்டு பிரதிகளிலும் சில பத்திகளைப் படித்த அவள் பதில்: தமிழ் மூலம் சரி. ஆனால் மொழிபெயர்ப்பு நிர்மூலம்.
இதனைவிடச் சுருக்கமான விமர்சனத்தை என்னால் கற்பனைகூடச் செய்யமுடியாது. இருந்தாலும் கேட்டேன்: இப்போது என்ன செய்வது?
அவள்: உனக்கு வேறு வேலையில்லை. காசைக் கரியாக்கியிருக்கிறாய். முதலில் ஒரு பிரதி வாங்கி அதனுடன் ஒப்புதல் இருந்தால் இன்னும் இரண்டென்ன, பத்து பிரதிகூட வாங்கியிருக்கலாமே! இப்போது இந்தப் பிரதிகளை அந்த ஆசிரியைகளுக்குக் கொடுத்தால் தமிழுக்கும் சரி, உனக்கும் சரி, அசிங்கம். இதனைக் கெட்டகனவாக நினைத்து மறந்து – தலையைச் சுற்றி விட்டெறி. அதுதான் உனக்கும், முக்கியமாக எனக்கும் நிம்மதி தரும். சும்மா தொணதொணக்காதே.
தொணதொணக்கவில்லை. சொன்னதைச் செய்தேன். அப்பாடா!
ஆக, இவர் ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் இதுவரை காண்பித்துக் கொள்ளவில்லை.
-0-0-0-0-0-0-0-0-
ஆனாலும் தி ஹிந்து, ஈபிடபிள்யு போன்ற பத்திரிகைகளில் எழுத, இவருக்கு ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. யதா பத்ரிகா, ததா ஸ்ம்ர்திகாரா. வேறென்ன சொல்ல.
இதுவும் மாறவேண்டும். மாறும்.
ஒரு வரலாற்றாளனாக, மொழிபெயர்ப்பாளனாக அவர் ஜொலிப்பதற்கு, அவர் போக வேண்டிய தூரம் அதிகம். ஆனாலும் எனக்கு ‘சலபதி‘ ஒரு புத்திசாலி ஆசாமி, ஆகவே அவரால் முன்னேறமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இவர் தமிழர்களை மதிக்க ஆரம்பிக்க வேண்டும். தன் வாசகர்களில் புத்திசாலிகளும் இருக்கின்றனர் என்பதை உணரவேண்டும். தம்முடைய சிந்தனைகளை, செயல்பாடுகளைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் – இவரும், தன் சராசரித்தனச் செயல்பாடுகளில் இருந்து, சலிக்க வைக்கும் அரைகுறைத்தனத்திலிருந்து மேலெழும்பி வருவதை – எனக்கும் பார்க்க ஆசைதான்.
August 12, 2014 at 06:06
பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிகிறது
August 12, 2014 at 06:07
பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிகிறது பூணூலும் தேறிகிரது
August 13, 2014 at 20:05
’தெரிகிறது’ என்ற ஐந்தெழுத்துகளைக்கூட மூன்று பிழைகளில்லாமல் தட்டெச்சு செய்ய வக்கும் வாக்குமில்லாத உங்களைப் போன்ற அனானிகள் தமது கரங்களை தமது ஆசனவாய்க்குப்பின் வைத்துக்கொள்வதே மேல். இதனைப் புரிந்துகொள்ளுமளவுக்காவது உமக்கு மூளை வாய்க்க விழைகிறேன்.
—->>>> நண்பர் முத்துக்குமார், பொதுவாக இம்மாதிரி வரும் பின்னூட்டங்களை ஒதுக்கி விடுவேன். சில சமயம் சுவாரசியம்+கோமாளித்தனம் கருதி இவற்றை அனுமதிக்கிறேன். மன்னியுங்கள். அதாவது, அவர்களையும் என்னையும். :-))
அன்புடன்,
__ரா.
August 12, 2014 at 06:11
DONT CRITTICISE. IF YOU HAVE SMETHING POSITIVE SAY
August 12, 2014 at 06:13
YOU THINK YOU KNOW EVERYTHING? DONT CRITTICISE TAMIZH SCOLARS. DONT SHOW ARIYAN POISON TOOTH.
August 12, 2014 at 19:55
ராம், 2013 மான் புக்கர் விருது வாங்கியவர் லிடியா டேவி அல்லர். தி லுமினரிஸுகாக எலினார் கட்டன் தயவு செய்து சரி செய்யவும். http://en.m.wikipedia.org/wiki/The_Luminaries
August 13, 2014 at 06:47
Thanks for pointing out this.
However, Ma’am Davis did win the ‘Man Booker International Prize’ for 2013 which is awarded every two years. http://www.themanbookerprize.com/news/lydia-davis-wins-man-booker-international-prize-2013
However, I agree that I should have been clearer.
And, yes – Ma’am Catton did get “the Man Booker Prize’ for 2013. This is awarded every year.
http://www.themanbookerprize.com/man-booker-prize-2013
Thanks again, Chandramouli. It is with a chastening, gratifying & sobering feeling that I gladly realize that the ‘facts that I spout’ are indeed verified and checked.
Please correct me as often as I commit mistakes or errors in judgment. This goes out to all those who are careful readers of this wacko blog.
Hugs:
__r.
August 14, 2014 at 03:36
//இப்போது சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே: சில குறிப்புகள்‘ எனும் நாற்பத்தைந்து வயதான//
நாலு வயசு குறைச்சு சொல்ற மாதிரி இருக்கு !
August 15, 2014 at 01:36
This is a good history/indology/tamil-studies research work done by an ex-IITan. What do you think?
ON THE UNINTENDED INFLUENCE OF JAINISM ON THE DEVELOPMENT OF CASTE IN POST-CLASSICAL TAMIL SOCIETY
November 15, 2016 at 23:11
[…] ஒத்திசைவு ராமசாமி ஜே ஜே சிலகுறிப்புக… […]
February 4, 2019 at 21:17
[…] […]