இதுதாண்டா மோதி-யின் நீதி பரிபாலனம்!

April 21, 2014

(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.

ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.

ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக,  வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக,  முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!

அய்யய்யோ!  நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:

  • இந்த நீதி பரிபாலன அமைப்புமுறை – காலனியாதிக்க வெள்ளைக்காரர்களால் அவர்கள் தேவைக்காகக் கட்டமைக்கப் பட்டது; அதுவரை (சில சமயங்களில், இன்னமும் தொடரும்) இருந்த பாரம்பரிய நீதி பரிபாலன முறைகள் – அநியாயத்துக்கு அடம் ஜோன்ஸ் போன்ற அரைகுறைகளால், நூற்றுக்கணக்கில் இருந்த நீதி நூல்களில், தர்ம ஸாஸ்திரங்களில், பரவலாக அறியப்படாத, உபயோகப் படுத்தப்படாத ஒன்றான மனு நீதியாகச் சுருக்கப் பட்டன; மிகப்பல உரைகள், பிராந்திய, ஜாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், பஞ்சாயத்துகள் இருந்த அகண்ட  பாரதத்தில் – ஏதோ இரு அணியினருடைய ஹிந்து சட்டம் குறித்த உரைகள் (=மீதாக்‌ஷரா, தாயபாக) பரவலாக்கப் பட்டன; ஏனெனில் இவைதான் வெள்ளைக்காரர்களுக்குப் புரிந்துகொள்ளக் கூடிய அளவில், எளிமையாக இருந்தன – அவற்றின் நீர்த்துப்போன மேலதிக எளிமையாக்கங்கள், ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன.  அக்காலத்திய இன்னாட்டு  அறிவுஜீவிகளும் இந்தத் திரிப்புகளை  ஒப்புக் கொண்டனர். ஒப்புக் கொள்கின்றனர். தொடர்ந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
  • மலைபோலத் தேங்கி நிற்கும் வழக்குகளும், குமாஸ்தாமுதல்வாதமும், வேலைப் பளுவினால் ஏற்படும் ஊழல்களும், தேவைப்பட்ட  நிர்வாகமுறைகள்/ஆதரவுகள் இல்லாமையும், எல்லாவகை வழக்குகளுக்கும் ஒரேவிதமான அணுகுமுறைகளும், நீதிக்காக நாயாக அலைய வைக்கப்படும் பொதுஜனங்களும் ஒருபுறமிருக்க — தொழில்முறை பொய்சொல்லிகள் உலவும் இடமாகவும் நீதிமன்றங்கள் மாறியுள்ளன
  • ஆனாலும், பல மகாமகோ இடர்களுக்கிடையில், இடியாப்பச் சிக்கல்களுக்கிடையில், பல அற்பப் பதர்களுக்கிடையில் – தொடர்ந்து ஓரளவுக்குச் செம்மையாகவே பணி புரிந்து கொண்டிருக்கும் ஜனநாயக அமைப்புகளில் – இன்னமும் இந்த நீதித் துறை முதன்மையாகத்தான்  இருக்கிறது என்பதற்கு, கடவுள் நம்பிக்கையுடையவர்கள், அவளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
  • நீதித் துறையில், காலத்துக்கேற்றபடி தேவையான மாற்றங்கள் செய்யப்படவேண்டும், அதன் குறிக்கோள்களை, செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, நடைமுறை மேன்மைகளுக்கு இட்டுச் செல்லப்படவேண்டும் – ஆனால், அதற்கெல்லாம் அரசியல் அறிவும், துணிவும், மேற்கொண்ட செயல்களைச் செய்துமுடிக்கும் செயலூக்கமும் வேண்டும்.

இப்பதிவில், நான் எழுத வருவது: மோதி அவர்கள் – குஜராத்தில், முடிந்தவரை, முட்டிமோதி  மூன்றாவதைச் செய்து காட்டியிருக்கிறார் என்பதை!

-0-0-0-0-0-0-0-

தேங்கியிருக்கும் வழக்குக் குவியல்களை எதிர்கொள்ள குஜராத் அரசு 2006-ஆம் வருடத்தில் கீழ்கண்ட மூன்று நடவடிக்கைகளை எடுத்தது – அதுவும் ஏதேச்சாதிகாரத்துடன் அல்ல, நீதிமன்றங்களை, நீதிபதிகளை, தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசித்துதான், அவைகளுக்கு வெறுப்பேற்றாத, தொய்வு விளைவிக்காத வகையில்தான்!  இதுதாண்டா தொலை நோக்குப் பார்வை – விஷன்!

  1. நீதிமன்றங்களின் தினசரிப் பணிநேரம் 30 நிமிடங்களுக்கு நீடிக்கப் பட்டது. (அதிகம் இல்லை; சிறுதுளி பெருவெள்ளம்!)
  2. நீதி மன்றங்களின் கோடை விடுமுறை நாட்கள் (இது அக்கால வெள்ளைத் துரைமார்களால் விரும்பப்பட்ட ஒன்று – ஆகவே நம் தேங்காய்முதல்வாதிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று!) ஒரு வாரத்திற்குக் குறைக்கப்பட்டன. (அதிகம் இல்லை, ஒருவாரம்தான்; ஆனால் ஒரு மிக முக்கிய நிர்வாக முடிவு!)
  3. மாலை/இரவு நீதிமன்றங்கள்  செயல்பட ஆரம்பித்தன. (அன்றாட வேலைகளில் இருக்கும் ஆனால் வழக்கு வியாஜ்ஜியங்களில் மாட்டிக்கொண்டு முழிக்கும் பொது மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்; அவர்களுடைய தினசரி வேலைகளுக்குக் குந்தகமில்லாமல் வழக்கில் ஈடுபடலாம்; வருடக் கணக்காக ‘தள்ளி வைப்பு’ வாங்கி மட்டுமே பணம் சேர்க்கும் வழக்காடிகளிலிருந்து விடுதலை பெற்று, செலவினங்கள் குறைந்து தீர்ப்புகளை எட்டலாம்.)

முதலிரண்டு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மூன்றாம் நடவடிக்கை 2006 நவம்பெர் வாக்கில் மோதியின் அரசினால் தொடங்கப் பட்டது – இரவு/மாலை நீதிமன்றங்கள் எனும் திட்டம் ஆரம்பித்தது. இதன்படி இரட்டை-ஷிஃப்ட் முறையில், தினமும் இருகாலப் பிரிவுகளில்  நீதிமன்றங்கள் பணிபுரிய ஆரம்பித்தன. இரவுப் பிரிவு: மாலை ஆறு மணிமுதல், இரவு பத்து மணிவரை; நீதிபதிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு இது 6:15 முதல் 8:15 வரை. குஜராத் முழுவதும் பெரியதும் சிறியதுமாக இப்படி நூற்றிச் சொச்சம் இரவு நீதி மன்றங்கள்.

குஜராத் அரசானது, இதற்காக, மேலதிகப் பணியாளர்களை நியமிக்கவில்லை. இருக்கும் அலுவலர்களை,  நீதிபதிகளை வைத்துக் கொண்டு, இரவுப் பணிக்கு மேலதிக சம்பளத்தைக் கொடுத்து (=அவர்கள் மாதச் சம்பளத்தில் 25%) மட்டுமே, இதனை நிர்வாகம் செய்து வருகிறது.

வழக்காடுபொருட்களாக – எட்டுவகையான வழக்குகள் (மோட்டார் வாகனத் தொடர்பு வழக்குகள், ஒரு லட்சத்திற்குக் குறைவான மதிப்புடைய ஸிவில் வழக்குகள், அதிகபட்சம் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய க்ரிமினல் வழக்குகள், தொழில் தொடர்பான, தொழிலாளிகள் தொடர்பான வழக்குகள் போன்றவை) மட்டும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இதனால், மற்ற நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை மேலும் திறம்படத் தீர்க்கவும் முடிகிறது.

ஆக, ஆரம்பித்த நான்கு வருடங்களில் – ஆறு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை விசாரித்து மேல்முறையீட்டுக்கு அவசியமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட நீதிகளை வழங்கியிருக்கின்றன இந்த இரவு நீதி மன்றங்கள். கடந்த சுமார் ஏழு வருடங்களில் இவை மொத்தமாக, சுமார் 11 லட்சம் வழக்குகளை ஃபைஸல் செய்திருக்கின்றன, தீர்த்திருக்கின்றன.

… மத்திய அரசிடம், இந்த விசேஷத் திட்டம் தொடர்பாக குஜராத் அரசு கேட்ட ரூபாய் ஐந்து கோடியைக் கூட, மத்திய அரசு தரமறுத்துவிட்டது; காரணங்கள்: 1) நீதித்துறை நிர்வாகம் பெரும்பாலும் மாநில அரசுகளின் செலவில்தான் நடத்தப்படவேண்டும், அது கன்கர்ரென்ட் ஜாபிதாவில் இருந்தாலும்கூட  2) மாலை நீதிமன்றங்களுக்கென ஒரு விசேஷ திட்டமோ நிதி ஒதுக்கீடோ மத்திய அரசிடம் இல்லை; மன்னிக்கவும்.

ஒரு தொலை நோக்குள்ள, மக்களின் மேல், நீதி பரிபாலனத்தின் மேல் கரிசனமுள்ள அரசானது – வெற்றிகரமான, உபயோககரமான இத்திட்டத்தை ஒரு ‘உதாரண/மாதிரித் திட்டமாகக்’ கருதி, நிதியொதுக்கி, மற்ற மாநிலங்களிலும் இதனைப் பரவச் செய்ய வேண்டாமோ?

ஆனால் நம்முடைய மத்திய ஸோனியா அரசானது ஒரு இத்தாலிய ராணியின் அரசு என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

எது எப்படியோ, இத்தாலியில் மாஃபியா அட்டூழியங்களை, வழக்குகளை துரிதமாக எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை உபயோகப் படுத்தினால் சரி. யாதும் கருவூலமே, யாவரும் கொள்ளைக்காரர்களே. ஆமென்.

ஆக, இன்னொரு முறை குஜராத் அரசு, இந்த விஷயமாக மத்திய ஸோனியா அரசை விண்ணப்பிக்கவோ கேட்கவோ இல்லை!

நிற்க, நம் தமிழகத்தில் கூட இம்மாதிரி இரவு நீதிமன்றங்கள் இயங்கச் செய்ய ஜெயலலிதா அவர்களிடம் திட்டம் ஒன்று இருப்பதாக, மூன்று வருடங்கள் முன் கள்ளக்குறிச்சி அஇஅதிமுக வக்கீல் ஒருவர் பேச்சுவாக்கில் சொன்னார். மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. (யாருக்காவது இதைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்தால், அம்மையாருக்கு நினைவு படுத்தவும்; அவருக்குப் பாவம், திமுக அரசின் கந்தறகோளங்களை நிமிர்த்தவே நேரம் சரியில்லை என்று ஆதூரமாக நினைத்துக் கொள்கிறேன்! ;-))

இன்னொன்று: என் குஜராத்தி நண்பர் ஜெனாப் ஆரிஃப் ஸையத் ஹுஸ்ஸைய்ன் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால்: இந்த ஒரு விஷயத்துக்காகவேகூட (=இரவு நீதி மன்றங்களை இயங்க வைத்துள்ளதற்காகவே) மோதி அவர்கள் போற்றப் பட வேண்டியவர். இந்தியா முழுவதும் நகலெடுக்கப் படவேண்டியவர்.

-0-0-0-0-0-0-0-0-0-

இன்னமும் சந்தோஷம் தரும் செய்திகள் இருக்கின்றன: (இவைகளையும், மேற்கண்டவைகளையும், நான் மூன்று முறை தனித்தனியாக சரிபார்த்துத்தான் தரவேற்றியிருக்கிறேன்)

  • கடந்த பத்து வருடங்களில், இருநூற்றுக்கும் மேலான, புதிய, சகல வசதிகளும்  கொண்ட விஸ்தாரமான கட்டிடங்கள், சுத்தமான கழிப்பறைகளுடன் – நீதிமன்றங்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப் படுகின்றன. மோதியின் கருத்து என்னவென்றால், ஒரு பொதுமனிதனுக்கு தன் இருப்பிடத்திலிருந்து பத்திருபது கிலோமீட்டர் தூரத்திற்குள் துரிதமாக நீதியும் நியாயமும் கிடைக்கும் வழிவகைவேண்டும் என்பதே.
  • நீதி பரிபாலனத்துக்கும், ஆய்வுகளுக்கும், புலன்விசாரணையாளர்களுக்கும் சரியான பயிற்சிகளைக் கொடுப்பதற்கு ஏதுவாக, குஜராத் அரசு, ஒரு தடயவியல் (=ஃபோரென்ஸிக்) பல்கலைக் கழகத்தையும், பாதுகாப்பியல் பல்கலைக் கழகத்தையும் தொடங்கி நடத்தி வருகிறது.
  • லோக் அதாலத்கள் சுமுகமாக இயங்கி (சுமார் 12000) ஏழு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை ஃபைய்ஸல் செய்திருக்கின்றன; பெண் சுயவுதவிக் குழுக்களால் அமைப்பு சாரா முறையில் நடத்தப்படும் நீதிமன்றங்கள் (நாரி அதாலத்), ஜனநாயக முறையில் தங்கள் பகுதிகளிலுள்ள சச்சரவுகளை – இணக்கமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் தீர்க்கின்றன
  • நீதி மன்றங்கள், அவற்றின் ஆவணங்கள் ஒருங்கிணைக்கப் பட்டு – அனைத்து முக்கிய ஆவணங்களும் செயல்பாடுகளும் கணினி வலைப் பின்னல்களால் இணைக்கப் பட்டுள்ளன. மேலதிகமாக வழக்காடிகளுக்கும், நீதிபதிகளுக்கும் உதவ ஏதுவாக, சட்டப் புத்தகங்களும், நீதி ஆணைகளின் தொகுப்புகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பேணப்படுகின்றன. ஒரு சிறு தாலுக்காவிலிருந்து பெரிய நகர நீதிமன்றம் வரை – இந்த வசதிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
  • மார்ச் 21, 2011 முதல், மத்திய அரசு, தான் ‘துரித கதி’ நீதிமன்றங்களுக்கு (= ஃபாஸ்ட் ட்ரேக் கோர்ட்ஸ்) என மாநிலங்களுக்குக் கொடுத்த திட்ட உதவியை நிறுத்தி விட்டது. ஏனென்றால் – வழக்குகள் துரித கதியில் நடத்தப் பட்டால், தீர்ப்புகள் வந்தால் காங்க்ரெஸ் காரர்களுக்கும் கொள்ளைக் (கொள்கை அல்ல) கூட்டாளிகளான திமுககாரர்களுக்கும் பிரச்சினைகள் வந்துவிடும் என்கிற பயமோ என்ன எழவோ!  ஆனால், இந்தியாவிலேயே குஜராத் மட்டும் தான் நாற்பதுக்கும் மேலான ‘துரித கதி’ நீதிமன்றங்களை, தன் அரசுச் செலவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. வழக்குகளை முடிக்கிறது. (இவ்வளவு பெரிய எண்ணிக்கையில்லாவிட்டாலும், தமிழகத்திலும் இந்த முயற்சி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்; விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை)
  • நீதிமன்ற மேலாண்மை வேறு, நீதிபரிபாலனம் வேறு என்று குஜராத் அரசு, தனிப்பட்ட முறையில் நீதிமன்ற மேலாளர்களை நியமித்திருக்கிறது. இதனால், பல தினசரி மேலாண்மை விஷயங்கள், மற்ற சங்கதிகள் போன்றவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் – நீதிபரிபாலனம் என்பது சரியாகவே நடக்கிறது. இதுவும் எனக்குத் தெரிந்து இந்தியாவில் (தமிழகத்தைத் தவிர; இதிலும் கேவலமான ஜாதி சச்சரவுகள்)  வேறெங்குமில்லை.

-0-0-0-0-0-0-

… ஆக, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு – வரலாற்று ரீதியான (=மோசமான காங்க்ரெஸ் அரசு) காரணங்களால் குஜராத்தில் சுமார் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அப்படியே விட்டிருந்தால், இந்த எண்ணிக்கையானது இப்போது சுமார் 140 லட்சத்தை எட்டியிருக்கும். ஆனால், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் சுமார் 16 லட்சம் மட்டுமே!

தமிழகத்தில் ஒரு காலத்தில் நீதிபரிபாலனம் ஒழுங்காகத்தான் இருந்தது. ஆனால் நமக்கும் வரலாற்று ரீதியாக காரணங்கள் (= விடா மல் தொடரும் திரா விட அரசுகள்) இருக்கின்றன, நம்முடைய சமகால நிலைமையை நினைத்துத் தலையில் அடித்துக் கொள்வதற்கு…

-0-0-0-0-0-0-0-0-

பல்வேறு விஷயங்களுக்காக மோதி போன்றவொருவர் பிரதமராக வரவேண்டிய அவசியத்தின் காரணமாக – ஒரு சில விஷயங்களை வெளிக் கொணருவதில் பெருமைப் படுகிறேன்.

… நம் தேசத்தில்,  நல்ல விஷயங்கள், எனக்கு மாளாஆச்சரியம் தரும் வகையில், இன்னமும்  நடந்து கொண்டிருக்கின்றன. இவை தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் என்னுடைய அவா.

ஆகவே, மோதி!

நரேந்த்ர மோதி! பதிவுகள்…

6 Responses to “இதுதாண்டா மோதி-யின் நீதி பரிபாலனம்!”

  1. Venkatachalam Says:

    sir,
    இன்று ஒரு அதிசயம் தங்கள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஆர்வத்தின் காரணமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.இன்று இந்து நாளிதழில் நடு வலப்பக்கத்தில் டேவிட் கோஹன் என்ப்வர் எழுதி உள்ள கட்டுரையைத்தான் குறிப்பிடுகிறேன். அதைத் தாங்கள் படிக்காதிருந்தால் அவசியம் படியுங்கள். இந்து நாளிதழ் இத்தனைநாள் செய்துவரும் அடாத செயலுக்கு ஒரு மாற்றாக இதை வெளியிட்டு உள்ளது. அக்கட்டுரையைத் தொடர்ந்து அதன் மூலம் வந்த டெய்லி காலர் என்ற சைட்டிலும் சென்று படித்தேன். மனது குளிர்ந்தது எனக்கு. அதனை உடனே தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.அவருடைய Left-Hearted, Right-Minded: Why Conservative Policies Are The Best Way To Achieve Liberal Ideals.
    என்ற புத்தகத்தை ஃபிலிஃப் கார்ட்டில் ஆர்டரும் செய்துவிட்டேன். ஏன் தெரியுமா நான் திருவள்ளுவரை Communist by Heart and Capitalist by Action என்று குறிப்பிடுவதுண்டு.

  2. Venkatachalam Says:

    நம்முடைய மோடியும் அவ்வாறனவரே என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன்.

  3. க்ருஷ்ணகுமார் Says:

    Simply Superb presentation.

    தன்னுடைய பல பொதுக்கூட்டங்களில் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் விரைவாக வழக்குகளை பைசல் செய்வது பற்றி தொடர்ந்து பேசி வருவது — தேச விரோத காங்க்ரஸ் கும்பலின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது என்பது தெரிகிறது.

    பல சர்க்காரி கார்யாலயங்களில் அதிகாரிகள் சர்க்காரி ஃபைல்களை காணாமல் போக்கடிக்கும் முயற்சியில் இறங்க ஆரம்பித்து உள்ளார்கள் என பப்பரப்பா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    காங்க்ரஸில் கூட சில நல்ல தலைவர்கள் இருப்பதாக ஸ்ரீ ராம் பகிர்ந்துள்ளார்.

    எனது அனுமானத்தில் ………..

    சர்வ ஸ்ரீமான்கள் ஜெயராம் ரமேஷ், ஜ்யோதிராதிய சிந்தியா, சசின் பைலட்,மஹாராஷ்ட்ரா முக்யமந்த்ரி ப்ருத்வி ராஜ் (சவாண்?)..

    மதிப்பிற்குரிய ஸ்ரீ எல்.எம்.சிங்க்வி அவர்கள் மகனாகிய ஸ்ரீ அபிஷேக் மனு சிங்க்வி யைக் கூட சொல்லலாம். ஆனால் நல்லது பாதி கெட்டது பாதி கேஸாகத் தெரிகிறார்.

    விதிவிலக்காக இப்போதெல்லாம் ஸ்ரீ ஜெயராம் ரமேஷ் அதிகமாகப் பினாத்தி வருகிறார்.

    தமிழகத்தில் சு.ஸ்ரீ.ஜெயலலிதா அம்மணி சர்க்காரி கஜானாவைக் காலிசெய்வதுடன் அல்லாமல் நல்ல காரியங்களையும் செய்வார் என்று உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை — நம்பிக்கையா மூட நம்பிக்கையா — தெரியவில்லை

    ம்…………Kudos for wonderful compilation of this Outstanding Article Ram!!!!!!!!!!!!!!!!

    அன்பின் ஸ்ரீ சரவணன் மற்றும் ஸ்ரீ பூவண்ணன் என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆசை.

    பூவண்ணன் சார் எங்கே காணாமலே போய்விட்டார்.


  4. confidence which drives common man as well as business man. Reforms in judicial system is the fundamental on which only we can build the society. Lack of delivery in judicial system drives people to approach thugs to settle the day today problem like collecting the payment , vacating the tenant or for not vacating etc I am sure efficient judicial system will boost whole society.

  5. nparamasivam1951 Says:

    மோடி அவர்கள் தனது நேர்காணல் ஒன்றில் கோர்ட்டு வழக்குகள், தீர்வு துரிதமாக்க தான் முயற்சிப்பேன் என்றார். அப்போது எனக்கு விளங்க வில்லை. உங்கள் கட்டுரை இப்போது விளக்கியது. ஆனாலும் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்துவது கடினம். சனி, ஞாயிறுகளில் நடைபெற்ற குடும்ப நல் கோர்ட்டுகளையே மூட வைத்துவிட்டார்களே. நாம் உ.பி., பீகார் போல் மாறி வருகிறோம். என்ன செய்ய……


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s