திராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி?
January 22, 2015
… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!
தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!
ஏனெனில் என் போன்ற முட்டாள் தமிழனுக்கு – நகைச்சுவை உணர்ச்சி என்பதே சுத்தமாக இல்லை. எல்லாம் எள்ளி நகையாடத்தக்க அரைகுறைகள். தமிழகம் உருப்படவே போவதில்லை. சுலபத்தில் சுணங்கிப்போகும் சனியன் பிடித்த சீக்காளிகளின் உலகமடா இது!
அய்யய்யோ!!! இதை எழுதியவுடன் நானே புண்பட்டுவிட்டேன்!
ட்ட்டாஆஆஅய்ய்ய்!! நானும் டமிளந்தாண்டா! பச்செத் ட்ராவிடட் டமிலண்டா!! இன்னாடா ஸொல்ல வர்ரே… அடீங்…. ங்கொம்மாள, என்று வீறிட்டெழுந்து என்னை நானே மண்டையில் பொளேர்பொளேர் என அடித்துகொண்டு, ரத்தம் பீறிட – நான் இப்படி எழுதியதற்காக நான் எனக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து நான் எழுதிய அனைத்தையும் என்னிடமிருந்து வாபஸ் வாங்கி எரித்து சாம்பல் கடலில் கலக்கும் வரையில் நான் என்னை விடவே போவதில்லை. வெற்றி+வீரமரணம்தான்! புல்லரிப்பு தான்! ங்கொம்மாள…
*பொளேர்* அய்யோ! வலிக்குதே! வாபஸ் வாங்க்கிப்டேண்டா! நான் எரிச்சது வெறும் பேப்பர்தாண்டா, இந்திய அரசியல் சட்டம் இல்லேடா! என்ன வுட்ருடா! அடிக்றாங்க அடிக்றாங்க! கண்கள் பனிக்குதே! இதயம் இனிக்குதே! கூட வர்ரியா, தீ குளிக்கலாம்! நான் திராவிடன் என்பதால் தானே… … *மடேர்!*
நாங்கெல்லாம் கவரிமான்கள்டா, கோமாளிக்கூவாங்களா! ஒரு மசுத்த புட்ங்கினாலும் உஸ்ர வுட்ருவோண்டா!
அவ்ளோ ஸென்ஸிடிவ்டா நாங்கோ! எங்களுக்கு மானம்றது றொம்ப முக்கியம்டா! அத்தொட்டுதாண்டா குடிச்சிட்டு குஞ்சாமணீ தெர்ய சாக்கடேல பொர்ண்டுகினுக் கீறொம்டா!
திராவிடன்னா அல்லாரும் கிண்டல் பண்றானுங்கடா! எங்க்ளுக்கு ஸிர்க்கவே தெர்யாதாண்டா!! அல்லாரும் கூவறானுங்கடா. மன்ஸு றொம்ப கேக்கலடா, அத்தாண்டா – மவனே, எவ்னாச்சியும் இனிமேக்காட்டி நமக்கு சிரிக்கவேதெரியாத்நுட்டு ஸொன்னாங்கன்னாக்க பாத்துக்கொ, பட்டா தோல வுரிச்சு தோர்ணம் கட்டிர்வோண்டா! ங்கொம்மாள…
இதில் யார் எதற்கு, ஏன் கண்டனம், பதில் கண்டனம், கேள்வி கண்டனம் என்ற எழவுகளெல்லாம் புரியவேயில்லை. இதில் ஒரு அலாதியான மணிகண்டனம் வேறு. யாரைக் குறை கூறுகிறார் என்றே தெரியவில்லை. அதுவும்சரி, இதுவும் சரிதேன் ஆனால் நமக்கேன்வம்பு என்று சந்தடி சாக்கில் இன்னொரு பதிவையும் தேற்றிவிட்டார். வாழ்க!
ஒருவிதமான தத்துப்பித்துவார்த்த ரீதியில் — ஊக்கபோனஸாக, ஜெயமோகனுக்கு பெருமாள்முருகன் மேல் பொறாமை என்றுவேறு நிரூபிக்க முயல்கிறார், பாவம்! ஆச்சரியமாக இருக்கிறது! இப்படியெல்லாம் எழுதுவதற்கு அலாதியான ஸரஸ்வதி கடாட்சம் இருந்தால்தான் முடியும், வேறென்ன சொல்ல.
இப்போது, என் மகாமகோ செல்லங்களில் ஒருவரான கவிஞர் இராக்கதகுமாரி அவர்களின் இதுவரை பிரசுரமாகாத கவிதையை, அவன் முன் அனுமதியுடன் இங்கு உங்களுக்கு முந்தித் தருவதில், உண்மையிலேயே எருமையடைகிறேன். நன்றி.
புண்படுதல்
*இராக்கதகுமாரி*
நாங்கள் காத்துக்கொண்டேயிருக்கிறோம்புண்படுவதற்காகநாங்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டேயிருக்கிறோம்எங்களை யாராவது, எப்படியாவது புண்படுத்தமாட்டார்களா என்றுஏனெனில்
நாங்கள் புண்நகை மன்னர்கள்எங்களைப் பற்றி எழுதினால் புண்படுவோம்
எழுதாவிட்டாலும் புண்படுவோம்ஏனெனில்நாங்கள் புண்ணியகேடிகள்எந்த வகையில் எப்படிப் புண்பட்டால்சந்தடிசாக்கில்எம்மாதிரி புண்ணியம் தேடலாம் எனப் புரிந்தவர்கள்ஏனெனில்எங்களுக்குத் தமிழிலும் எழுதப்படிக்கத் தெரியாதுஎன்ன எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியாவிட்டாலும் புண்படுவோம்அது தமிழிலா அல்லது ஸ்வாஹிலியிலா என்று தெரியாவிட்டாலென்ன மோசம்?ஏனெனில்நாங்கள், ம்ம்ம் இங்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை!(ஆனால் என்ன, வழக்கம்போல அட்ச்சிவுடுவோம்!)புண்படுவோம், புண்படுவோம்!
புண்பட்டு ஒன்றுபடுவோம்!!ஓன்றுபட்டுப் புண்படுவோம்!!
கவிதாயினியின் குறிப்பு: என் கணினியில் ஆச்சரியக்குறிகள் தீர்ந்துவிட்டன! மன்னிக்கவும்!! இல்லையென்றால் கவிதை இன்னமும் நீண்டிருக்கும்!!! உங்கள் மனம், திடுதிப்பென்று நான் கவிதையை நிறுத்தியதால் புண்பட்டிருக்காது என நான் நம்புகிறேன். ஆனால் எப்படியும் நான் புண்படுவதென்னவோ நிஜம். (வா மணிகண்டன் சார் அவர்களிடம் சொல்லி, என் கவிதையை எப்படிப் படிப்பது, எப்படிப் புரிந்துகொள்வது என விலாவாரியாக அல்லது விலாநோக எழுதச் சொல்லவேண்டும் – ஏனெனில் எனக்கே சில சமயங்களில் என்னதான் நான் எழுதுகிறேன் எனப் புரியவே மாட்டேனென்கிறது. ஒருவேளை என் கவிதைகள் – தம்மைத் தாமே எழுதிக்கொல்லும் கலகப் பிரதிகளோ?)
(செல்வி இராக்கதகுமாரி அவர்கள், தன்னுடைய கவிதைகளைப் பீராயாமல் இருக்கும்போது, கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிதைகளை ஆய்ந்து வருகிறவர். இவருடைய ஆராய்ச்சியின் தலைப்பு: மனுஷ்யபுத்திரனும் ராக்ஷஸபுத்திரியும்: ஒரு பின் நவீனத்துவ புண்படுதல்)
-0-0-0-0-0-0-
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
January 23, 2015 at 08:14
// தம்மைத் தாமே எழுதிக்கொல்லும் கலகப் பிரதிகளோ?
அதே தான் சார். எனக்கும் அப்படித்தான் தோணுது.
அது கலகப் பிரதி. நான் கூட ஒரு கவிதை எழுதி இருக்கேன் சார். இது கலக்கப் பிரதி. தயிர் வடை நெறைய தின்னு வயிறு கலக்கத்துல எழுதின கவிதை.
செத்துக் கொண்டு இருக்கின்றன
கவரி மான்கள்
மந்தை, மந்தையாக
மல்லாக்க விழுந்து
இரத்தம் கக்கி
செத்துக் கொண்டே இருக்கின்றன
நாட்டில்
அதிகமாகி விட்டனர்
மயிர் புடுங்கிகள்
இந்த பெருமாள் முருகன் விஷயத்துல ரெண்டு தரப்பும் ரொம்ப அலப்பரை செய்யறதா எனக்கு தோணுது. போய் ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்கப்பா. உதாரணமா திருச்செங்கோடு மலை மேல ஏறுங்க. மனசுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது.
January 23, 2015 at 09:55
தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும் : madhavansekhar@yahoo.co.in
January 23, 2015 at 18:00
https://othisaivu.wordpress.com/page-1/
January 23, 2015 at 10:51
நான் படித்த வரையில் பெருமாள் முருகனின் நிலையை இவ்வளவு விலாவாரியாக கூறியது யாரும் இல்லை. மற்றபடி புத்திரன் கதை அனைவரும் அறிந்தது தான். .தமிழ் நாட்டில் இந்து தமிழனாக இருப்பது பாவம், மிகப் பெரிய தண்டனை.
தாங்கள் “banana trade” படித்து முடித்த உடன் அப் புத்தகம் பற்றிய விமர்சனம் எழுத கேட்டுக் கொள்கிறேன்.