தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, பில் வாட்டர்ஸன் பார்வை…
May 5, 2026

(முதற்கண்: இந்த விஜய் வெற்றிபெற, அவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவென புரிந்துகொள்ளவே முடியாமல் உடல்பொருள்ஆவி++ அனைத்தையும் கொடுத்து உழைத்த, என்னுடைய அத்தனை முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்ல சங்கடமாகவே இருக்கிறது. ஆனால் சனியன்கள் ஒழிந்தன என்பதும் ஒருமாதிரி ஆசுவாசம் தருவதுதான்.)
(ஒன்றரைக்கண்: ஆனால் – இது எப்படிப் போகும் என்பது பிடிபடவில்லை…
இருந்தாலும், அயோக்கிய கொள்ளைக்கும்பல் திராவிடக் கட்சிகள் குறைந்தபட்சம் டெம்பரவரியாகவாவது வீரியம் குறைந்தமை (இவை முழுவதுமாக அழித்தொழிக்கப் படவேண்டியவைதாம்!) குறித்து மகிழ்ச்சியே!
அதே சமயம், இந்த நடிகர் கட்சிக்குப் பெரிதாக ஐடியாலஜி கட்சித் திட்டம் என்று இருக்கிறது போலவும் தெரியவில்லை. இஷ்டத்துக்கு ஈவேரா போன்றவர்களை ஆதர்சங்களாக உள்ளிழுப்பதும், மத்திய அரசோடு அவசியமேயில்லாமல் மல்லுக் கட்டுவதும் போன்ற விஷயங்கள் கலக்கம் தருபவை, பஞ்ச் டயலாக் இழவுகளும்தாம் – தற்போதைக்கு அவரைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப-ஊழல் வாதிகளும்அமைதி தரவில்லை…
ஆனால்…
இந்த மாற்றம், நெடு நாள் நோக்கில் தமிழகத்தை உண்மையாகவே முன்னேற்ற உதவுமானால் அதுவும் நல்லதே! வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?)


May 6, 2026 at 19:05
விஸிலடிச்சான் குஞ்சுகளடங்கிய மற்றொரு திராவிட அரசுதான், சந்தேகமே இல்லை 😤
May 7, 2026 at 05:38
https://othisaivu.in/2026/04/24/post-1714/ – sir yes. D1 DMK. D2 AIADMK. D3 TVK.
(there is so much day-to-day excitement and flux of course!)