தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »

சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு,  தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]

இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.

ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில்  ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.

ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!

… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற  மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை —  எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு  உந்துகிறது. Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)

அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால்,  தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)

சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.

இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஏன்  நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில்,  நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் –  என்ன இருந்தாலும் நானும்  ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)

(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)

முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)

… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை  உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.

குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற. Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)

முந்தைய பதிவுகள்:

சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.

அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக்  குறைவாகவே மதிப்பிடுவோம்.

project_estimation_dilbert Read the rest of this entry »

முந்தைய இரு பதிவுகள்:

ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை  கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத  ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)

-0-0-0-0-0-0-0-

சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.

ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி  நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி  இல்லையே, ஏன் நாம் இப்படி  இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »

இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?  (02/11/2013) இது  0/n – அதாவது முதல் பதிவு.

எச்சரிக்கை:  1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும்  – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன.  2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக   ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?

பத்ரியின் கேள்விகள்:

* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”

சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.

ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே. Read the rest of this entry »

ஒரு வழியாக, இந்த தமிழ் எழுத்துரு, வரிவடிவம். வரியுருக்குறி வகையறா சச்சரவை முடிந்தவரை முழுதும் படித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன்.(நம் தமிழ் விஷயத்தில் என்னை மிகவும் இம்சிக்கும் பிரச்சினைகள் பலவற்றில், இந்த வரிவடிவமும் ஒன்று)

ஜெயமோகன் அவர்களின் கருத்து என்பது ஒரு யோசனையாக ஆரம்பித்து,  நடிப்புத் தமிழர்களால், கோமாளித்தனமாக எதிர்கொள்ளப் பட்டு, நம் தமிழர் பண்பாட்டின் இன்னொரு கூறை, எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறது. முதலில் நான், இந்த சச்சரவைப் புரிந்து கொள்ள முயன்றதால், என்னுடைய 2 மணி நேரம் வீணாகியிருக்கிறது என நினைத்தேன்; ஆனால், இந்த வேலையைச் செய்ததனால், எனக்கு ஒரு முக்கியமான படிப்பினை ஒன்று கிடைத்ததால் இது பரவாயில்லைதான்.

அந்த படிப்பினையாவது: நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…

ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா??

… நம் தமிழர்களின் அற்புதமான நகைச்சுவையுணர்ச்சியை மெச்சுவதைத் தவிர, எனக்கு வேறுவழியே இல்லை. Read the rest of this entry »

கிட்டத்தட்ட ஒரு வருடம்போல, இந்த மங்கள்யான் சாகசத்தின் பயணத்தைக் கவனித்து வந்திருக்கிறேன்.

எனக்கு ஒரே  சந்தோஷம்தான். நமது சூழலில் — தடைக்கற்களை மீறிய மாபெரும் தாண்டல்கள், அதியுயரக் குதிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் வாழ முடிவதற்கு, ஆச்சரியங்கள் நடக்க நடக்க  நாம் தெரிந்துகொள்ள முடிவதற்கெல்லாம், நாம் மிகவும்  கொடுத்துவைத்திருக்க வேண்டும்தான்!

நேற்று காலை, வழக்கம்போல ஒரு பதினைந்து நிமிட உரையாடற்பேச்சில், என் குழந்தைகளுக்கு மங்கள்யான் பற்றிக் கொஞ்சம் சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலாக, கொஞ்சம் என் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டேன்.

அவர்களில் சிலருக்கு – மங்கள்யான் என்றால், ஏதோ இந்தியா ஒரு ராக்கெட் விட்டு ‘மங்களமாக’ நடக்கப்போவதால் அப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என எண்ணம். ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு மங்கள் பாண்டே என்று ஒரு ‘தேசபக்திப் படம்’ வந்திருக்கிறது பற்றித் தெரிந்திருந்ததால் – அதன் தொடர்பாக இருக்கும் என்றான். எனக்கு இப்படி ஒரு திரைப்பட இழவு வந்ததே தெரியாது – யாருங்கடா ஹீரோ இதுல, அந்த விஜய்குஜய்யா (‘இல்ல ராம், அது வேறமொழிப்படம்’) என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே ஆரம்பித்தோம். ஒரு நேபாலி பையன் சரியாகச் சொன்னான் – அவனுக்கு மங்கள்வார் என்றால் செவ்வாய்க் கிழமையென்று தெரிந்திருந்தது. Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?

சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.

மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…

 ‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’

— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம் Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.

… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து —  ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!

அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!

 கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

Read the rest of this entry »

-0-0-0-0-0-

இந்தப் பதிவு – இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளின்…

… தொடர்ச்சி – மூன்றாம் நிகழ்வு:

மற்ற இரண்டு நிகழ்வுகள் பெங்களூரில் நடந்தன.  இது அவற்றில் ஒன்று,

1996 என நினைவு – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு நிறுவனம் – சிறிய, ஆனால் அதி தொழில்நுட்ப முனைவு.

மூன்றாவது மாடியில் அனைவருக்கும், ஒவ்வொரு நாளும் தரமான மதிய உணவு. கைக்குத்தலரிசிச் சோறு. தமிழ் நாட்டுச் சாம்பார் – போன்றவைகளுடன் கூடிய சத்தான உணவு. அற்ப மசாலாக்களும், பூரிக்களும், எண்ணெய் மிதக்கும் பிலாவ் சோறும் கிடையவே கிடையாது. சுமார் 30 பேர்கள் மட்டுமே இருந்ததால் அதுவும் அது ஒரு ஒரு மென்பொருள் வஸ்து (software products) தயாரிக்கும் நிறுவனமாக இருந்ததால், மேலதிகமாக எங்கள் வஸ்துவை, அதன் கருத்துப்பொருளை / கட்டமைப்பு சார்ந்து மட்டுமே நாங்கள் ஏற்கெனவே விற்றுவிட்டிருந்ததால் – எங்களால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செவ்வனேசெய்ய முடிந்தது – மதிய உணவு, அலுவலக உள் அலங்கரிப்பு உட்பட. எங்கள் தொடங்கிகள்-குழுவில் இருந்த அனைவரும், மிகுந்த முனைப்புடன் இருந்தோம்… எவ்வளவோ கனவுகள். பல நிறைவேறினவும் கூட.

ஒரு தமிழ் இளைஞன் (ஆர்இஸி பையன்; தூத்துக்குடிக்காரன்) என் குழுவில் இருந்தான். பொதுவாக ஓரளவுக்காவது முன் அனுபவம் இல்லாதவர்களை நான் சேர்த்திக் கொள்ள மாட்டேன். ஆனால், இவனை நண்பர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார் – ஆக, கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என நான் அவனைச் சேர்த்திக் கொண்டேன்; குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் மட்டுமே, அவன், ஒரு கற்றுக்குட்டியாக. ஆனால் ஒரளவு சூட்டிகையான பையனாகத்தான் தோன்றினான். கொஞ்சம் அளவுக்கு மேலதிகமான தன்னம்பிக்கை இருந்தது, செய்ய எத்தனிப்பதற்கும் செய்கைக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி அதிகம். அதனால் என்ன, அவனுக்கு அது முதல் வேலை, அனுபவங்களைச் சார்ந்து அவன் கற்றுக் கொள்வான் என விட்டு விட்டேன். Read the rest of this entry »

முந்தைய பதிவு: உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013

நமது திருமணங்களில், சமூக விருந்துகளில், நமது உணவகங்களில் – இவற்றையெல்லாமே விடுங்கள் — நம் வீடுகளிலேயே, நாம் அநியாயத்துக்கு வீணடிக்கும் உணவைப் பற்றி யோசித்தால் மாளா துக்கமும் கோபமும் தான் வரும். இந்த – சோற்றை வேலை மெனக்கெட்டு வீணடித்தல் எனும் பொதுவிதிக்கு எந்த மதமோ, ஜாதியோ, நாடோ – எனக்குத் தெரிந்தவரை எதிலும்  ஒரு விதிவிலக்கு கூட இல்லை. ஒரு பக்கம் மாளாப் பஞ்சம், பற்றாக்குறைகள், பானை வயிறுடன் சூம்பிப் போயிருக்கும் குழந்தைகள். இன்னொரு பக்கம் — ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கப்படாத, வீணடிப்புகளும் கயமையும் + உணவின் மீதான சுரணையற்ற அவமரியாதையும்.

… தவிர்க்கமுடியாத சில சமயங்களில், நான் சென்றிருக்கும் சொற்ப எண்ணிக்கைத்  திருமணங்களில் கூட, நம் மக்கள் செய்யும் இந்த அயோக்கிய வீணடித்தல்களால்  என்னை அழைத்தவர்களுக்கு, என்னால், தர்மசங்கடமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன – நிலைமை சில சமயம் ரசாபாசமாகி, மிகுந்த தொந்திரவு கொடுத்திருக்கிறேன்.

இதற்குப் பயந்து கொண்டும், திருமணச் செலவினங்களை பெண் மட்டும் அல்லது பெண்வீட்டார் மட்டுமே தரும் அயோக்கிய வழிமுறைகள் எனக்கு ஒப்பில்லாத காரணத்தாலும் – சுமார் 20 வருடங்கள் எந்தத் திருமணத்துக்குமே போகாமல் இருந்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மூன்று நான்கு திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன்.

அப்படி, வேறுவழியே இல்லாமல் செல்லும்போது, உடலின் அனைத்து  ஓட்டைகளையும் மூடிக் கொண்டு ஒரு மூலையில் புத்தகங்களுடன் உட்கார்வதையும் பழக்கமாக வைத்திருக்கிறேன். Read the rest of this entry »

மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

காலையில் என் அப்பா தொலைபேசியில் கூப்பிட்டார்: “டேய், உன் நண்பன் ஹைகோர்ட் ஜட்ஜாயிட்டான்; பேப்பர் படிச்சியா?”

எனக்குத்தான் நாளிதழ் கிட்டே போகும் பழக்கமே இல்லையே – ஆக, பறந்தோடி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரிடம்,  முந்தா நாள் செய்தித்தாளை யாசித்துப் படித்தேன். Read the rest of this entry »

அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

கருத்துப்படம்: ஆடிகிங்கரரின் அத்வைதம்

இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

வயாக்ரபாதர்

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள்,  ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)

ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான்  தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?

இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?

-0-0-0-0-0-0-

வயாக்ராபாத புராணம்  – அதாவது, எஸ்ரா அவர்களின்  ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …

வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)

… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »

முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.

இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும்  புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)

வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.

என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »

(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!

முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)

அய்யாமார் அவர்களே,

வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து,  கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…

1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன்னால், குவிந்திருந்த பல வேலைகள் காரணமாக, சென்னையில் இரண்டு நாள் ‘சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்தேன் – அதன் மேம்பாலங்களும், ஒரு வழிச் சாலைகளும், புதிய மகாமகோகடைகளும், அலை மோதிக் கொண்டிருந்த மக்களும், ஹாரன்களும், சாலை நெரிசல்களும், புகையும், ப்ளாஸ்டிக் குப்பைமேடுகளும், அதிகப்பளீர் விளக்குகளும், சதாசர்வ காலமும் செல்போனில் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருக்கும் மக்களும் – எனக்குப் பல இடங்களில் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதெல்லாம்கூட ஒன்றுமே புரியவில்லை!

இந்த நகரத்தில் தானா நான் பலபத்தாண்டுகள் குட்டையில் ஊறிய மட்டையாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்? பதினேழாண்டுகளில் இவ்வளவு மாற்றங்களா?

… ஒரு வழியாக வேலைகள் முடிந்ததும், ‘புதிய’ நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்கு பனகல் பார்க் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை! அங்கு ஒரு மேம்பாலம் வேறு – குழம்பிப்போய் இரண்டு சுற்றுச் சுற்றினேன். ஆரெம்கேவி என்ற ஒரு பளபளப்பு ஜவுளிக்கடை முன்னால் ஐந்து நிமிடத்தில் இரண்டாம் முறை என்னைப் பார்த்த ஒரு பூக்காரம்மா கன்ஃபூஸ் ஆய்டுச்சுங்களா என்றார். ஆமாம்மா வய்சாட்ச்சில்ல என்றேன். Read the rest of this entry »

அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.

இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து  நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.

அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்!  Read the rest of this entry »

I against my brother
I and my brother against our cousin
I, my brother and our cousin against the neighbors
All of us against the foreigner.

— A Bedouin proverb, quoted by Bruce Chatwin, in The Songlines

ஒரு சுய பரிசோதனை…

(அல்லது) [+5] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [103 -108; + பின்னுரை]

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

1- 21 காரணங்கள்  |  22-50 காரணங்கள்  |  51-70 காரணங்கள்  |  71-90 காரணங்கள்  91-102 காரணங்கள் |  103-108 காரணங்கள்  |

… … ஏனெனில்:

103. சரி, மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லை. இருந்தாலும், அந்த கோத்ராக் கலவரம் நிகழ்ந்தது நிகழ்ந்தது  தானே! அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போதுமே! ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு மட்டுமே பதமல்லவா??

யோசியுங்கள் – அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் நடந்திருக்கும். அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் உடனே அடக்கப் பட்டிருக்கும்? அவரே பங்கு பெறாமலா இந்தக் கலவரம் ஏற்பட்டிருக்கும்?? Read the rest of this entry »