சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)

November 15, 2013

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)

முந்தைய பதிவுகள்:

சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.

அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக்  குறைவாகவே மதிப்பிடுவோம்.

project_estimation_dilbert

நம் தமிழ்ச் சமூகத்தில், பொதுவாக, நிகழ்வுகளின் காரணிகளை, வரலாற்றுப் பின்புலங்களை, சாதக பாதகங்களை – அவற்றின் சமகால, எதிர்கால விளைவுகளை, தருக்கரீதியாக அவதானித்து நம்மை, நம் எதிர்வினைகளை வளர்த்தெடுத்துக்கொள்வது என்பது நடப்பதில்லை. நிதானம், சமனத்தன்மை போன்றவை சார்ந்த அணுகுமுறைகளெல்லாம் நமக்கு ஒத்துவருவதேயில்லை. பத்து நிகழ்வுகளில் ஒன்றையாவது இப்படித் தராதரம் பார்த்து அறிய முற்படுவோம் எனக்கூடப் புறப்படுவதில்லை. நம்முடையவை எல்லாம், சிந்திப்பால் பாதிக்கப்படாத முட்டியடி எதிர்வினைகள்தாம். இந்தப் போக்குக்கு நாம் கொடுக்கும் விலை  மிகவும் அதிகம்…

We OVERESTIMATE the impact/effect of changes/events in the short run, while we UNDERESTIMATE the impact/effect of changes/events in the long run; so, often times  we go wrong. We don’t, as a society & culture, seem to understand that, every estimation and response to stimuli have to be in moderation. We don’t seem to believe that, level-headedness, experience, knowledge of history, contexts & connections and cool, focused logic help.

This is our lot, our baggage.

எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த ஒன்று: ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ (இது ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ‘தமிழ்’ ஈழத்துக்கு ஆதரவாக – என்று பரவலாக நம்பப்பட்டது). கல்லூரிகள் மூடப்பட்டன; கல்லெறிதல்கள், பொதுச்சொத்து நாசங்கள், ஃப்லெக்ஸ் தட்டியேந்தல்கள், கோஷ்டங்கள், போவோமாஆஆ ஊர்கோலங்கள், அடையாள உண்ணாவிரதங்கள், குப்பை போடல்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் வரும் ஸ்ரீலங்காவின் யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும்கூடக் கதிகலங்க அடித்து விரட்டல்கள், ஊர் இரண்டு பட்டதால் தொலைக்காட்சிக் கோமாளிகளுக்குக் கொண்டாட்டக் கும்மாளங்கள் இன்னபிற இன்னபிற

நம்முடைய முதல் முட்டியடி எதிர்கொள்ளல் ‘ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி.’ இதனால் ஸ்ரீலங்கா அரக்கன் மாய்ந்து ஈழத்தமிழ்த்தாய் புத்துணர்வு பெறுவாள். எங்கும், எதிலும், எப்போதும்  தமிழீழம். தமிழ் நாட்டில் ‘ஸ்டூடென்ட்ஸ்’ புரட்சி செய்து புதியதோர் உலகம் சமைக்கப் போகிறார்கள்.

பின்னர், தமிழக அரசியல் சாக்கடையைத் துப்புரவு செய்யப் போகிறார்கள்! ஆஹா,  விடிவு காலம் வந்தே  விட்டது!!

இதன் தற்போதைய நிலை: அய்யய்யோ! ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ என்று ஒன்று நடந்ததா என்ன? அடக் கடவுளே! ஆண்டிறுதித் தேர்வுகள் காலம் கடந்து நடந்தனவாமே!  மேற்படிப்பு படிப்பது தொடர்பான காலக்கெடுக்களில், மாணவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்குமோ?

இந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ ஜந்துவின் நெடுங்கால அளவுத் தாக்கத்து கீழ்க்கண்டபடியாகவே அமையச் சாத்தியக் கூறுகள் அதிகம்.

‘ஸ்டூடென்ட்’ மாணவ/மாணவியருக்கு வரக்கூடிய ‘விட்டேற்றி மனப்பான்மை’ – அதாவது இவர்கள் இவ்வளவு மாய்ந்து மாய்ந்து  ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ செய்தும் ஒன்றும் நடக்கவில்லை ஆக இவர்கள் என்ன அரசியல் செய்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்கிற தருக்கச் சித்திரம் விரிதல்.

‘ஸ்டூடென்ட்’ மணிகளுக்கு எதிர்காலம் குறித்த அவநம்பிக்கை – ‘ நம்மால் முடியாது தம்பி, நம்பு!’ என்னும் மனப்பான்மை.

தமிழக அரசியல்வாதிகள் முதுகில் குத்திவிட்டார்கள் என்கிற தான்தோன்றித்தனமான  நகைக்கத்தக்க முடிவும் – ஆக, அரசியலைக் கண்டால் தூர விலகு எனும் எதிர்மறை மனப்பான்மை வளர்ச்சியும்.

இந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ மணிகளால் அவதிப்பட்ட பொதுமக்களின் ‘என்ன ஆட்டம்  ஆடினாங்கப்பா!’ எனும் வெறுப்பு கலந்த நிம்மதி. இந்த மாணவமணிகளால் எதிர்கால மாணவர்களுக்கும் அவப்பெயர்.

தீவிர இடதுசாரி ஃபாஸ்ஷிஸ்ட் அணிகளுக்கு, தீவிர தீரா விட, தனித்தமிழ் போன்ற வெறுப்புமுதல்வாத இயக்கங்களுக்கு – ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் ‘முன்னோடிக்’ கும்பலிலிருந்து புதிய இளம் செயல்வீர ரவுடிகள் (= சிந்தனை செய்யக்கூடியவர்கள் அல்ல) கிடைக்கக் கூடியமை.

அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களின் / இளைஞர்களின் மதிப்பு வீழ்ச்சி; அவர்களின் அரைகுறைத் தலைமை பற்றிய, அவர்களின் சமூகமாற்ற இயக்கங்கள் பற்றிய புரிதல்கள்மேலான மிகச்சரியான  கேள்விக்குறிகள். ஆக அகில இந்தியக் கட்சிகளில், தேசிய நீரோட்டத்தின் எதிர்கால இளைஞர் அணிகளில் இவர்களுக்கு உண்டான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாமை.

-8-8-8-8-8-

இன்னொரு எடுத்துக்காட்டாக பழையதான ஒன்று – 1960-களின் நடுவில் நடந்தது: இதுவும் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’தான்; (இது ஹிந்திக்கு எதிராக, தமிழ் மொழிக்கு ஆதரவாக என்றும், வடவ ஆதிக்கத்துக்கு எதிராக என்றும் பொதுவாக நம்பப்பட்டது)

அப்போதும் நம்முடைய முதல் முட்டியடி எதிர்கொள்ளல் ‘ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி.’ இதனால் ஹிந்தி அரக்கன் மாய்ந்து தமிழ்த்தாய் புத்துணர்வு பெறுவாள். எங்கும், எதிலும், எப்போதும் தமிழ். தமிழும் தமிழர்களும் உணர்ச்சிப் பிரவாகப் பீடுநடை போடுவார்கள் – தமிழகத்தின், தமிழனின் வளமையான எதிர்காலத்தை நோக்கி… தேனும் பாலும் ஆறாக ஓடும் தமிழகத்தில், காங்க்ரெஸைத் துரத்திவிட்டால் இதெல்லாம் சாத்தியம். ஆக, ஹிந்தி எழுத்துக்களில் தார்பூசி, தார் வியாபாரிகளின், பெயின்ட் வேலைகள் செய்பவர்களின் வயிற்றில் பால் வார்த்தார்கள்.

சொன்னது - முறையே 1938-லும், 1971-லும்...] Wild Boar-க்கும் அதன் பராக்கிரமத்துக்கும் உரியவர்களாக நம்மை நினைத்துக் கொண்டு - Wild Bore அல்லது Wild Boor-ஆக மட்டுமே இருக்கிறோம்... :-(

[பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்கள்
சொன்னது – முறையே 1938-லும், 1971-லும்…] Wild Boar-க்கும் அதன் பராக்கிரமத்துக்கும் உரியவர்களாக நம்மை நினைத்துக் கொண்டு – Wild Bore அல்லது Wild Boor-ஆக மட்டுமே இருக்கிறோம்… :-(

இந்தப் அரதப் பழைய ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ ஜந்துவின் நெடுங்கால அளவுத் தாக்கத்து இப்படித்தான் ஆகியிருக்கிறது.

தமிழகத்தில் – ஹிந்தியின் வளர்ச்சியையும் தமிழின் வளர்ச்சியையும் ஒரே சமயத்தில் வீழ்த்த முடிந்தது இவர்களால். ஹிந்தி பிழைத்துக்கொண்டது மற்ற மாநிலங்களில், அது வெளிப்பிரதேச மொழியாதலால்.

ஆச்சரியப் படும் விதத்தில், அது மற்ற மாநில மொழிகளை ஒழிக்கவும் இல்லை! மற்ற மாநில மொழிகளெல்லாம் (கன்னடம், தெலெகு, மலையாளம்) அவற்றின் கலாச்சாரச் சூழலெல்லாம் – இணையமொழி தொழில் நுட்பங்கள் மட்டும் தவிர, என நினைக்கிறேன் – நம் தமிழை விட வளமையுடனேயே  இருக்கின்றன!

ஆனால் நம் தமிழ் மொழி, அரைகுறை அரசியல்வாதிகள் கையில் கிடைத்த பூமாலையாகி, தனிமைப்படுத்தப்பட்டு, பரந்துபட்ட மொழிச் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட முடியாமல், தமிழ் வாசிப்பாளர்களின், ஆர்வலர்களின், சிந்தனையாளர்களின் எண்ணிக்கைகள் விகிதாசாரமாகவோ, அல்லது தனி எண்ணிக்கையிலோ மேலெழுப்பப்பட முடியாமல் – அரசியலின் ஒரு தாற்காலிகத் தந்திரோபாயக் கருவியாக மட்டுமே சுணங்கிப்போனது.

இந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ காரர்களும் வேண்டுமளவு வெறுப்புணர்ச்சியை விதைத்தார்கள். திரா விட இயக்கத்தினர் இந்த விதைகளைப் போஷகம் செய்து அறுவடை செய்தனர். நாம் இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அக்கால மாணவமணிகள்தாம் (= கேள்விகளே கேட்காமல் கல்லெறிந்தவர்களும், தார் பூசினவர்களும், நுரை தள்ள இனம்புரியா வெறுப்புவாதம் பேசினவர்களும், உணர்ச்சிக் குவியல்காரர்களும்) திரா விட அரசியலுக்கு, பிற்கால அரசியல் தலைவர்களாக உருவானார்கள், தாரகைகளாகவும் விடிவெள்ளிகளாகவும் மினுக்கிக்கொண்டு அலைந்தார்கள், அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த நாற்பத்தி சொச்சம் வருடங்களாக நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை இவர்களே நிர்ணயிக்கிறார்கள்.

இந்த அரசியல் நிலைமையால், பொதுவாக அரசியலுக்குக் கிடைக்கவேண்டிய நல்லோர்கள், தலைவர்கள் கிடைக்கவில்லை; ஏனெனில், இப்படி மேலெழும்பியிருக்க வேண்டியவர்கள், அரசியல் என்றாலே என்னமோ தீண்டத்தகாதது என நினைப்பதற்கு – இந்த மாணவ இயக்கங்களிலிருந்து போன உதிரித் தலைவர்களும் அவர்களின் எதிர்மறை எடுத்துக்காட்டுகளும் ஒரு காரணம்.

இன்னொரு படுமோசமான விளைவு: திரா விட இயக்கத்தைச் சாராத சான்றோர்கள், அறிவாளிகள், தமிழை முன்னேற்றியிருக்கக் கூடிய பெரியவர்கள், செழுமைப்படுத்தும் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கக் கூடியவர்கள் —   தனிமைப் படுத்தப் பட்டார்கள், மழுங்கடிக்கப் பட்டார்கள். இதே கதைதான் திரா விட இயக்கத்தின் மீது விமர்சனம் வைத்தவர்களுடையதும்,  வெளியேறியவர்களுடையதும்.

சா கணேசன் அவர்கள், மபொசி அவர்கள் போன்றவர்களெல்லாம் நம்மை எங்கோ அழைத்துச் சென்றிருக்கலாம்.  ஆனால்… [ நண்பர் ஒருவர், இந்த ஜாபிதாவில் சி சுப்ரமணியம், கி ஆ பெ விஸ்வனாதம் அவர்களையும் சேர்க்கலாம் என்கிறார். சரி, நான் பெருமதிப்பு வைத்திருக்கும் சாமி சிதம்பரனார் அவர்களையும் இதில் +1 சேர்க்கிறேன்]

ஆக பல திசைகளிலிருந்தும், பல நோக்குகளிலிருந்தும், பல தளங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்த அறிவார்த்தமான, தமிழுக்குப் பெருமையையும் வளமையையும் சேர்க்கும் போக்குகள் மெல்ல அழிந்தன. நமக்கு தற்போதைக்கு மிஞ்சியிருப்பது உள்ளீடற்ற வெற்று  டப்பா   திரா விடம் மட்டுமே.

மேலும், பொதுவாக எதையாவது எதிர்த்துப் போராடுவதே சரி (=அரசியல்ரீதியாகவும் நன்மை கிடைக்கும்), வேறு எதனையும் ஆதரித்துப்போராடுவது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் கவைக்குதவாது எனும் நல்லெண்ணம் வளர, இந்தப் பழைய போராட்ட நிகழ்வுகள் காரணமாக இருந்திருக்கின்றன.

-8-8-8-8-8-

நடுகாலத்தியதொன்றான ஓர் எடுத்துக்காட்டு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் புகழ் ஆ ராசா (கைய வெச்சா, அது ராங்காப் போயிடுச்சா), தற்கால திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் (அது என்ன எழவு  கொள்கையோ!) அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் படுபயங்கர பீதியளிக்கும் ஊழல். 170000, 100000, 55000, 30000, 12000, 6000… கோடி ரூபாய் என பார்வைக்கேற்றார்போல் ஊழல் அளவு.

நம்முடைய முதல் முட்டியடி எதிர்கொள்ளல் ‘ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்டு.’ “ஏன், மத்தவன்லாம் ஒழுங்கா?”, “வடக்கத்திக்காரன் மட்டும்தான் ஊழல் செய்யலாமா?”, “ஒரு தலித் என்பதால்தானே…”, “ராசா கண்டுபிடிச்ச தொழில்நுட்பம்தான் சார், அவரு வுட்ட ஏலம்தான் சார் இன்னிக்கு ஸெல்ஃபோன் வெலயெல்லாம், கால் ரேட்டெல்லாம் கம்மியாக்கிச்சு!” போன்ற முட்டியடி, சிந்திப்பில்லா, பாமரத்தனமான எதிர்வினைகள். சரி.

நம் மக்களை, நம்மை – நாம் அறிந்துகொண்டதைவிட, நம் அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் – அதிகபட்சம் நம்மால், கடைசியாக அண்மையில் நடந்த பப்பரப்பா பற்றி மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். ஆக இந்த 2ஜிக்கு முந்தையவற்றையும், இந்த 2ஜி-யையும், இதற்குப் பிறகு வந்தவற்றையும் (கடைசியாக என்ன வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது – ஆக இதைத் தவிர) நாம் மறந்தே விடுவோம்…

ஆனால், இந்த 2ஜி ஊழல் (அல்லது, உங்கள் பார்வையைப் பொருத்து சர்ச்சை / விவகாரம் / சாதனை / கின்னெஸ் ஆவணத்தில் பதியவேண்டியது / …) இதன் நெடுங்கால அளவுத் தாக்கத்து கீழ்க்கண்டபடியாகவே அமையச் சாத்தியக்கூறுகள் அதிகம்.

“எல்லாரும் திருடன் சார். இந்த நாடு உருப்படாது சார்.” என்கிறரீதியில் மட்டும் பேசி – தங்கள் ஜனநாயகப் பணியை ‘ஆற்றி’விட்டுப் போகும் மனப்பான்மை தொடர்ந்து வளர்வது. இன்னமும் மோசமாக, நம் இளைஞர்களும் நமட்டுச் சிரிப்புடன், அரசியலை அலட்சியமாக  அணுகுவது.

நமது அரசுக்கு இந்த 2ஜி ஊழலால் எவ்வளவு நஷ்டம் என்பதில் பல்வேறு அணுகுமுறைகள் காரணமாக, யூகமுறைகளில் வித்தியாசங்கள் காரணமாக, பல எண்ணிக்கைகள் பவனி வருகின்றன. ஆக – பிற்காலத்தில், ஒன்றுமே தவறுதலாக நடக்கவில்லை என்று ராசாக்களும் மந்திரிகளும் ஒரேபோடாகப் போடக்கூடிய சாத்தியக்கூறுகள்.

பொதுமக்களின் ‘சட்டத்தின் மாட்சிமை’ மீதான அவநம்பிக்கை வளர்ந்து உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணை முறைகள் பற்றிய சந்தேகங்கள் மேலும் வளர்ந்து, நம்முடைய நடைமுறை ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் போக்கும் வளரும். இதுதான்  மற்ற அனைத்தைக் காட்டிலும் விசனம் தருவது.

-0-0-0-0-0-0-

அடுத்த பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம்??

2 Responses to “சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)”

  1. ஆனந்தம் Says:

    அட்சர லட்சம் பெறும். இல்லை, ஒவ்வொரு எழுத்தும் 1,76, 000 கோடி பெறும்.

  2. Yayathi Says:

    On this topic, the big elephant in the room is – “Media” – The Indian Media is “independent” but not “free (of bias)” and is adding to this problem. It is an amplifier with a huge “gain” – with that, there is more noise (or only noise) than the signal. Copying the western media, they also want to create “news stories” instead of “news reporting” – so they add more spice, color, sound to get attention in the fast fungible news shelves so that the customer picks up them on curiosity. We may have to start using “News Estimation Theory” to get “Observability” or write a book called “Indian media for dummies” :-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s