பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?
November 2, 2013
பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.
… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து — ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!
அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!
… மேலும், தமிழ் நாட்டு அரசியலின், அயோக்கியத்தனமான தமிழீழ – மிக முக்கியமாக அந்த நாசகார எல்டிடிஇ ஆதரவைப் பற்றியும், வேலைவெட்டியில்லாமல் – பொய்யும் புனைசுருட்டுமாக அலைந்து கொண்டிருந்த (கொண்டிருக்கும்), பிரச்சினைகளை ஊதிஊதிப் பெரிதாக்கும் நம் தமிழ்நாட்டு அற்பர்களைப் பற்றியும், இவர்கள் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களுக்குச் செய்யும் கயமைத் துரோகத்தைப் பற்றியும் எழுதினேன்.
அதற்கு, எனக்கு ஒரே ‘ஸ்பெஷல்’ பொங்கல் படையல் வைத்தார்கள் பலர். அவர்கள் வாழ்க. வெறுப்பு மின்னஞ்சல்களும் பின்னூட்டங்களும் மானாவாரியாக வந்தன – இவற்றில் பெரும்பாலானவைகளை, பலவற்றைப் படிக்காமலயேகூட, நேரடியாகக் குப்பைக் கூடைக்கு அனுப்பிவிட்டேன்.

கருத்துப் படம்: 19 மார்ச் அன்று, இதே ஜந்துவைப் பற்றிய என்னுடைய கருத்து (பதிவு: மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு)
இந்தச் சமயம் (மார்ச் 2013 வாக்கில்) பத்ரி சேஷாத்ரி அவர்களுடன் ‘அடிக்கடி’ மின்னஞ்சல் தொடர்பில் இருக்க ஆரம்பித்திருந்தேன். இதற்கு முன்னர் அவரை நேரடியாகச் சந்தித்திருந்தேன்.
இந்தச் சூழலில் பத்ரிக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தேன்:
Dear B, I have posted some stuff on how one can look at the ‘boy killed by srilankan military in cold blood’ kind of news items.
Dunno whether you do read my blog, but if you do and if you like this – https://othisaivu.wordpress.com/2013/03/25/post-183/ – may I request you to give it publicity please?
The reason I wrote the polemic is, the entire discourse on the killings and stuff, whoever I talk to, does NOT take cognizance of these facts – so is full of visceral responses.
It is absolutely fine, if you don’t want to do this, for any reason.
Thanks and regards
இதற்குப் பதில் தரும் முகமாக பத்ரி எனக்கு திடுதிப்பென்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அது கீழே:
I have tweeted about this; it of course appears in my blog.
As you may already know, your blogs are making a lot of people angry, but that is perfectly okay. They have hardly seen any one articulate views opposite to them in this manner.
However, you have come across only as a cynical person (which I know you are not!), so if you do not mind I would like to do an interview with you – only on this matter – covering the following aspects:
* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?If you have the time and give answers in Tamil, will be glad to publish it in my blog. I am serious!
பாவம், அவர் நல்ல மனதுடன் தான் கேட்டார் என நினைக்கிறேன். ஆனால் நான் சாவகாசமாக இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு அவருக்கு ஒரு மிக மிக நீளமான, விலாவாரியான பதில் எழுதினேன். என்ன திமிர் அவருக்கு. அடுத்த ஒரு நாளுக்குள் வேலைவெட்டியில்லாமல் டபக்கென்று அதனை ஆர்வத்துடன் படித்து, பின் பல பாகங்களாகப் பிரித்து நிச்சயம் பதிக்கிறேன் என்றார். ஆனால் அவர், பத்ரி சேஷாத்ரிதான், பதிக்கிற சேஷாத்ரி அல்லர் என்றாகி விட்டது, பாவம். எப்படி இந்த வெட்டி ஒட்டலைச் செய்வது என்று கொஞ்சம் திணறிவிட்டார். அவருக்கு, அவருடைய பல வேலைகள் சார்ந்த அழுத்தங்கள் வேறு.
உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் இதே திணறல் பிரச்சினைதான். இந்த ஊசலாடல்களில், சுமார் நான்கைந்து மாதங்கள் கழிந்து விட்டன.
சரி.
இப்போது நானே, என் தலையில் அடித்துக் கொண்டு, இக்கட்டுரையை பகுத்து விரிக்கலாம் என்றிருக்கிறேன். படிக்க விருப்பமிருப்பவர்கள் படிக்கலாம். சொல்ல ஏதாவது உபயோககரமாக இருந்தால் பின்னூட்டங்களிடலாம். இல்லையேல் வேறெங்காவது புதிய தமிழ் திரைப்பட விமர்சனம் படிக்கச் செல்லலாம். உங்கள் விருப்பம். ஆனால் புலம்ப வேண்டாம். யாரும் எவரையும் படித்தாகவே வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்தப் பதிவுகளில் (எண்ணிக்கையில் சுமார் 15 வரலாம் என நினைக்கிறேன்) கீழ்கண்ட விஷயங்களை, முடிந்தவரை விலாவாரியாக (எச்சரிக்கை: என்னுடைய பாணியில்) அலச முயன்றிருக்கிறேன்.
ஆக அடுத்து வரும் (அடுத்தடுத்து அல்ல) பதிவுகளில், பத்ரியின் கேள்விகளும் என் வியாக்கியானங்களும் விரியும்…
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?
(அல்லது)
நம் தமிழ்ச் சமூகம் எதிர் கொள்ள வேண்டிய முக்கியமான சிக்கல்களில் சிலவும், ஆகவே அவற்றைப் பற்றிப் பெரும்பாலும் கவலையேபடாத நம் தன்மையும் — ஒரு புரிந்து கொள்ளல்.
(அல்லது)
நம் இளைஞர்களும் பொதுமக்களும் என்னதான் செய்யவேண்டும். பொதுவாக, நம் சமூகம் மேன்மையுற, நாம் என்ன செய்ய வேண்டும்…
(அல்லது)
போங்கடா நீங்களும் ஒங்களோட ’தமிழ்’ அகமும், போதுண்டா ஃபிலிம் காமிச்சது, விடுங்கடா அவங்களயும், அவங்களோட ’தமிழ்’ ஈழத்தயும்..
Alea Jacta Est.
தொடர்புள்ள பதிவுகள்:
November 2, 2013 at 15:44
Look forward…
November 3, 2013 at 08:50
உங்களது இந்த “போலித் தமிழர் பற்று” எதிர்ப்பு எழுத்துக்கள் தமிழகத்துக்கு நன்மை செய்யும் என்று வேண்டுவோமாக. தமிழ்ச் சமுதாயம் பற்றியும் குறிப்பாக மாணவர்கள் பற்றியும் நான் சந்தித்த ஒரு தமிழரின் நிலை கண்டு நான் ஒரு பதிவு செய்திருந்தேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும்.
http://ammanji.wordpress.com/2013/07/20/futureindia/
.
November 3, 2013 at 11:56
I am neither with you/Badri nor with Arivumathi/Mathimaran in most of the issues and comfortably at a good distance from both. I am afraid that for better or worse most Tamils are like that. So you may now start like Manushya Puthiran and begin to lament எது மாதிரிய சமூகத்தில்….. எதுமாதிரியான மிக்சரை கொரித்துக் கொண்டு….. எதுமாதிரியான சினிமாவை பார்த்துக் கொண்டு
November 4, 2013 at 14:45
Sir, ‘Tamil’:
I appreciate your candor.
But my financial dealings (if any) are pretty straight-forward, so am sorry to disappoint you.
And, I do not pretend to write poems, silly.
Moreover, I am NOT an intellectual.
Thanks.