ஸொஹ்ரபுத்தீன்கள், மாஃபியா குண்டர்கள், என்கௌன்டர்கள், மோதி – சில குறிப்புகள்

October 4, 2013

(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!

முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)

அய்யாமார் அவர்களே,

வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து,  கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…

1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

2. ஸொஹ்ரபுத்தீன் சர்ச்சைக்குரிய விதத்தில் இறந்ததின் காரணம் அவர் ஒரு கடைந்தெடுத்த பொறுக்கி, மாஃபியா குண்டர் என்பதால்தான், அவர் பிறப்பால் முஸ்லீம் என்ற காரணத்தால் அல்ல. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

3. ஸொஹ்ரபுத்தீன்-உடன் பிடிபட்டு அவர் போலவே சர்ச்சைக்குரிய விதத்தில் இறந்த அவருடைய ஆப்த நண்பர்  துள்சிராம் ப்ரஜாபதி – யும் ஒரு கடந்தெடுத்த பொறுக்கி, மாஃபியா குண்டர்தான். அவர் பிறப்பால் ஒரு ஹிந்து என்பதன் காரணத்தால் அல்ல, அவர் இறந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.  ஆனால் நீங்கள் இந்தப் பொறுக்கியாரைப் பற்றிக் கவலையே படமாட்டீர்கள். உங்கள் மதச்சார்பின்மை அப்படி.  (ஒருவேளை, இவர் திராவிடர் அல்லர், அதுவும் முஸ்லீம் அல்லர் – ஆகவே ஒழிய வேண்டியவர் தான் என நினைக்கிறீர்களோ அல்லது இவரைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதோ?)

4. யோசித்துப் பார்த்தால் இவர்கள் இருவருமே கழிசடைகள் தாம். இவர்களைப் போன்றவர்களெல்லாம் ஒழிய / ஒழிக்கப்படவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இவர்களுக்கு மதமுலாம் பூசினால், அம்மதங்களை, அம்மதங்களின்படி ஒழுக முயல்பவர்களை நாம் வெறுக்கிறோம்  என்பதுதான் உண்மை; ஸொஹ்ரபுத்தீன் போன்ற அற்பர்களை எல்லாம் ஒரு முஸ்லீம் என நினைத்து பிரேதவழிபாடு செய்தால், நீங்கள் இஸ்லாமை இழிவு செய்கிறீர்கள் என்றுதான் பொருள். ஆனால் இவரை வழிபாடுசெய்தே தீருவேன் என்றால் அது உங்கள் உரிமை – அதே சமயம் திருவாளர் துள்சிராம் ப்ரஜாபதி அவர்களையும் ஒரு முறை, ஒரேயொருமுறை – ஹிந்துமுறை வழிபாடு செய்யலாமே!

5. கௌஸர்பீ இறந்தார் என்பது சரி. இவர் ஸொனஹ்ராபுத்தீன் மனைவி என்பதும் சரி. ஆனால் அவர் கற்பழிக்கப்பட்டார் என்பதெல்லாம் உங்கள் கற்பனை. வீசப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் இதுவரை செல்லுபடியாகாதவை —  செய்தித்தாள் மஞ்சள்பத்திரிகை நடத்துபவர்களால் இந்தமாதிரி செய்திகள் தயாரிக்கப் பட்டு சுடச்சுடப் பரிமாறப் படுகின்றன. நீங்களும் இவற்றைச் சந்தோஷமாகப் பகிர்ந்துண்ணுகிறீர்கள். பாதகமில்லைதான். ஆனால், தயவுசெய்து நீங்கள் புகைக்கும் கஞ்சாவை தயவுசெய்து எனக்கும் கொடுக்க முடியுமா? எனக்கும் போதை தேவையாக இருக்கிறது. (எனக்கும் கௌஸர்பீ அவர்களின் தாஜ்மெஹல் முன்னாலான படம் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது; ஆனால் இந்தப் படமும் அந்த பிரபாகரனின் பையன் பிஸ்கெட் சாப்பிடும் படம் போன்றதுதான்! ஜோடிக்கப்பட்ட,பின்புலமற்ற பிரதிமைகளை வைத்து மக்களை ஏமாற்றுவது, உணர்ச்சிகளைக் கொந்தளிக்க வைப்பது, லேசு! படிக்கவும்: குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்)

6. கருணாநிதி அவர்கள் ஊழல் செய்திருக்கிறார். அவர் மனைவி+துணைவியார்கள்அவற்றால் பல பலன் பெற்றிருக்கிறார்கள். சரி – இப்போது, இவ்வூழலுக்காக கருணாநிதி அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப் படுகிறார் என்றால், கூடவே பின்னவர்களும் தண்டிக்கத் தான் படுவார்கள். (அய்யய்யோ! ஒரு பேச்சுக்குத் தான் சொல்கிறேன். உங்களால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே சொல்கிறேன்; எனக்குத் தெரியும், கருணாநிதி அவர்கள் ஊழல் ஒன்றுமே செய்யவில்லை; நேர்மையானவர்தான். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்னை! சரியா? மன்னிக்கவும் மன்னிக்கவும்…)

7. “சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.” அய்யய்யோ – நீங்கள் எழுதியதை ‘சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை‘ என்று முதலில் படித்து விட்டேன்.

மோதியே நம்மூர் நம்பியார் மாதிரி கைகளைத் திருகிக் கொண்டு எக்காளமிட்டு கற்பழிப்பு செய்யக் கூடியவர்தானோ! எனக்கே கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, இப்போது! இருக்கலாம்! சரி, முதலில் ‘பல நாட்கள்’ விவகாரம்: தற்போதைய கதைகள்படி இது இரண்டு நாட்கள் மட்டுமே. ஒன்று = சில; இரண்டு = பல. வாழ்க.

8. நீங்கள் சொல்வது போல (=விழைவது போல)  இவர் ஒரு  ‘அப்பாவிப் பெண்’ அபலை என்பதெல்லாம் ருசுவாகாத விஷயம். இருப்பினும், கௌஸர்பீ இன்னபிறர் பற்றி – குஜராத்திப் பத்திரிகைகளில் வந்துள்ள சில விவரங்களை, வெளி வராத விவரங்களை, பின்புலங்களை, சிலரிடம் கேட்டிருக்கிறேன். இவர்களில் எனக்கு ஓரளவு அறிமுகமாயிருக்கும் சில குஜராத் கேடர்  ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளும் அடக்கம். கிடைத்தால், அவர்கள் அனுமதித்தால் பிரசுரிக்கிறேன். (ஆனால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருக்கும் / இருக்கக்கூடும், இவர்
போன்றவர்களின் – சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் குடைய எனக்கு சில மாதங்கள் பிடிக்கும்; இது வேலையற்றவேலைதான். பார்க்கலாம்.)

9. ஒரு விஷயம்: மத்திய அரசு (=சோனியா காந்திகள்), அதிகார வர்க்கம், நீதிபரிபாலன அமைப்புகள் குஜராத் மாநிலம் மேல், அதன் அதிகாரிகள் மேல் கவிழ்க்கும் அழுத்தம் என்பது உங்களாலும் (என்னாலும்) நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவில் இருக்கிறது; எனக்குத் தோன்றுகிறது: இவர்கள் மெய்யாலுமே மோதியைக் கண்டு பயப்படுகிறார்கள்தான் – எப்படியாவது அவரை, தூக்கில் தொங்க விடமாட்டோமா – சிலுவையில் அறைய மாட்டோமாவென்று அலைகிறார்கள் தாம்; பார்க்கலாம் என்னவாகிறதென்று…

10.  “மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா” – அய்யா, சபாஷ், சபாஷ். உங்களுடைய புரிதல்கள் எனக்கு மகாமகோ புல்லரிப்பை அளிக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா – குஜராத் (= மோதி) அரசு பல முஸ்லீம் குழந்தைகளுக்கு இதே மாதிரி  உதவித் தொகைகளை அளித்து வருகிறது என்று? மத்திய அரசு (=பூஜ்யம்) கும்பலின் ஓட்டுவங்கி அரசியலைத் தான் இவர் எதிர்க்கிறார். தகுதிக்கும், தேவைக்கும் ஏற்ற உதவிகளை, உதவித்தொகைகளை எதிர்க்கவில்லை. அவருடைய முஸ்லீம்களை, அவருடைய முஸ்லீம் குழந்தைகளை அவர்களுடைய எதிர்காலத்தை முடக்கவில்லை. (இன்னொரு விஷயம்:மத்திய அரசு 75% தொகைதான் கொடுக்கும் – முழு உதவியல்ல)

-0-0-0-0-0-

ஆராய்ச்சி செய்வது, தரவுகளை எடுப்பது, வாதங்களைப் புனைவது – இதற்கெல்லாம் கடுமையான உழைப்பு வேண்டும். இதெல்லாம் முடியாத பட்சத்தில்,  அய்யா, நீங்கள் திடுக்கிடவைக்கும் க்ரைம் கதைகளை, உங்களுக்குச் செல்லமான புள்ளிவிவரங்களுடன் எழுதலாம் – கண்டமேனிக்கும் கற்பனைக் கழுதைகளை தட்டி எழுப்பி பின்னூட்டத் தூசி பறக்கச் செய்யவேண்டாம்…

பூவண்ணன் அவர்களே! நீங்கள் ஒரு மருத்துவர் தானே? நம்முடைய ராணுவத்தில் மதிப்புக்குரிய பணி புரிபவர்தானே? நம் மக்களுடைய ஆரோக்கியத்தை விழைபவர் தானே? நம் சமூகம் முன்னேறவேண்டும் என்ற ஆசையுடையவர்தானே?

நீங்கள் ஏன் உங்களுக்கு அறிந்து கொள்ள நேரமில்லாத, உங்கள் மேதமை இல்லாத விஷயங்கள் சாரந்து – தேவையில்லாத அக்கப் போர்களில் ஈடுபடுகிறீர்கள்? ஏன் என்போன்ற திரியாவரங்களுடன், படிப்பிலிகளுடன் பொருதி நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்?

பின்குறிப்பு: எப்போது எனக்கு, உங்களுக்குச் செல்லமான மரீஹ்வானா அனுப்புகிறீர்கள்? அதைப் புகைக்க ஆசையாக இருக்கிறது எனக்கு. (ஒரு மின்னஞ்சல் இணைப்பாகவே அனுப்ப முடிந்தால் நலம்!)

பின்பின்குறிப்பு: எப்போது என் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை அனுப்பப் போகிறீர்கள்? ஆறுமாதங்கள் முன்பு கேட்டது (பின்புலம்: ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ ஜந்து): போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் (29/03/2013); தயவு செய்து பதில் கொடுக்கவும்.

நன்றி.

தொடர்புள்ள பக்கம்:

22 Responses to “ஸொஹ்ரபுத்தீன்கள், மாஃபியா குண்டர்கள், என்கௌன்டர்கள், மோதி – சில குறிப்புகள்”

  1. க்ருஷ்ணகுமார் Says:

    பூவண்ணன் சாருக்கு மெனக்கெட்டு பதிலளித்து உள்ளீர்கள்.

    நீங்கள் கோலத்தில் பாய்ந்தால் தடுக்கில் பாய்வது அவர் Techninque.

    ஸஃபர் ஸரேஷ்வாலா என்ன சொன்னார் – அதில் பூவண்ணன் சாருக்கு எந்த விஷயத்தில் ஒப்புதல் எதில் வேற்றுமை என்று அறிவு பூர்வமாக உங்களை துளைப்பார் என்று நீங்கள் அப்பாவித்தனமாக நினைத்திருக்கலாம். நானும் அவர் எழுதியதில் ஒரு அரை வரியாவது இது பற்றி இருக்குமா எனப் பார்த்தேன். ம்…..சம்பந்தமே இல்லாது கூச்சல் போடுவதில் பூவண்ணன் சாருக்கு இணையே கிடையாது. அட…..ஸஃபர் ஸரேஷ்வாலா என்று அவர் எழுதியிருக்காரே…..சம்பந்தம் இருக்கே…என்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

    இனிமேல் அவர் ஸ்டைலில் தான் பதில்

    \\\ சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ\\\ குசெர் பி-சொரபுட்டின் \\\

    பூவண்ணன் சார் என்ன எழுதியுள்ளார் நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள்

    \\ ஸொஹ்ரபுத்தீன்\\ கௌஸர்பீ \\

    பெயரை எழுதுவதிலிருந்தே பூவண்ணன் சாரின் மதசார்பின்மையும் உங்களது மதவெறி மொழிவெறி இன்னும் என்னென்ன வெறியெல்லாம் உண்டோ அத்தனையும் கொடிகட்டிப் பறக்குது.

    \\\ வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து, \\\

    இன்னமும் நீங்கள் முழுமையாக பூவண்ணன் சாருடன் update ஆகவில்லை. Noosepepper, தொல்லைக்காட்சி இவையெல்லாம் கடந்து பூவண்ணன் சாரிடம் இருக்கும் கொலவெறி ஆயுதம் உரல். URL. கூகுள குருகண்டாலை மேய்ந்து மேய்ந்து உரல்களால் உங்களை அடித்தால் — அதுவே ஆதாரம். முடிபான கருத்து. நீங்கள் கௌசர்பீ பற்றி எழுதி அவர் மாட்டுக்கறி பற்றி உத்தரம் கொடுத்தாலும் சரி.

    \\\ இந்தமாதிரி செய்திகள் தயாரிக்கப் பட்டு சுடச்சுடப் பரிமாறப் படுகின்றன. நீங்களும் இவற்றைச் சந்தோஷமாகப் பகிர்ந்துண்ணுகிறீர்கள். \\\

    ம்…….ஏதோ உங்களிடம் முதல் முதலாகப் பந்தியில் பறிமாறியது மாதிரி என்ன இறுமாப்பு? என்ன குசும்புத் தனம்? இட்லிவடை க்ளப்பில் லாலுவைப் (அல்லது லல்லு) பற்றிய அக்கப்போரில் சம்பந்தமே இல்லாது போட்டுத்தாக்கி பரிமாறி — அதன் பின் மேலும் சரக்கைக் கலந்து அரைத்த — ஊசிப்போன மாவில் ஊற்றப்பட்டது உங்களுக்குப் பரிமாறிய ஊத்தப்பம் என அறியக்கடவீர். இன்னும் இந்த மாவு எங்கெல்லாம் அரைக்கப்பட்டது என்பதை பூவண்ணனே அறிவார்.

    \\\ ஆனால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருக்கும் / இருக்கக்கூடும், இவர் போன்றவர்களின் – சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் குடைய எனக்கு சில மாதங்கள் பிடிக்கும்; \\\

    இல்லை நானும் தான் கேழ்க்கிறேன். நீங்கள் உண்டு உங்கள் பள்ளிக்குழந்தைகள் உண்டு என்று மெனக்கெடாமல் இப்படி மெனக்கெட்டு ஆராய்ந்து அறிந்து ( நல்ல அரிப்பப்பா) ஒரு வ்யாசம் போடுவீர்கள்.

    அப்புறம் பூவண்ணன் சார் சீதளவாத அம்மணியின் ஒரு உரலை – ஆதரமாகக் காமித்து — நரேந்த்ரபாய் மோடி தன் மீசை தாடியை —- இம்சை அரசன் வடிவேலு போல — குசுர் பீ – கொர்ரபுட்னியூ – என்ற சிறுபான்மை இனத்தவரின் ஒரு மூக்கில் சொருகி இன்னொரு மூக்கில் மூக்குப்பொடியைப் போட்டுத் தாக்கி சித்ரவதை செய்து கொலைசெய்த விஷயத்தை — போட்டுத் தாக்குவார். அப்ப என்ன பண்ணுவீங்க

    \\\ எப்போது என் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை அனுப்பப் போகிறீர்கள்? ஆறுமாதங்கள் முன்பு கேட்டது (பின்புலம்: ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ ஜந்து): போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் (29/03/2013); தயவு செய்து பதில் கொடுக்கவும். \\\\\

    ம்……..பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்…..திருக்குறளுக்குக் கலைஞ்சர் உரையை வாசித்து மகிழ்பவரிடம் பரிமேலழகர் உரையைப் பரிந்துரை செய்வது போதாது என அதற்கு மேலாகக் கேழ்விக்குடைச்சல்…….பதிலரிப்பு……..

    ஸ்……..ஸப்பா……கண்ண கட்டுதே…….முடியல…….

    • ramasami Says:

      நன்றாக எழுதுகிறீர்கள் – நல்ல நகைச்சுவையுணர்ச்சி. :-) பூவண்ணன் அவர்களிடம் மிகவும் தொந்திரவு பட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன், பாவம்.

      என்னைப் பொறுத்தவரை, அவருடைய பிரச்சினையே – அவருக்கும் மேதமை இருக்கக் கூடும் விவகாரங்களை விட்டுவிட்டு வேறெங்கொ ‘பள்ளம் தான் ரொம்பிச்சு’ என்று அலைவதுதான் என நினக்கிறேன். (இது எனக்கும் பொருந்தும்தான்)

    • poovannan73 Says:

      கிருஷ்ணகுமார் சார்

      zafar sareshwallaa அவர்கள் கட்டுரையை தப்பும் தவறுமாக காப்பி அடித்த (41000 பேர் ஹஜ் செல்ல போட்டி என்பதை 3500 இல் இருந்து 41000 இடங்கள் பெற்ற மோடி எனபது போல )ஆழம் பத்திரிக்கையின் இந்த கட்டுரையின் கீழ் பின்னூட்டங்களில் நீங்கள் தேடும் பதில்கள் இருக்கின்றன

      http://www.aazham.in/?p=3402

  2. poovannan Says:

    http://en.wikipedia.org/wiki/Death_of_Soharbuddin_Sheikh

    On November 23, 2005, Sohrabuddin Sheikh was traveling on a public bus with his wife, Kauser Bi, from Hyderabad to Sangli, Maharashtra. At 01:30 am, the Gujarat police ATS stopped the bus and took them away.[13] Kauser wanted to stay with her husband, but was taken to a Disha farmhouse outside Ahmedabad instead.

    Three days later, Sheikh was killed in a staged encounter on a highway at Vishala Circle near Ahmedabad. The report filed in the Supreme Court by the Central Bureau of Investigation (CBI) quotes a number of witnesses and builds up a narrative of the killing.[9]

    Two days after Sheikh was killed, Kauser Bi was allegedly strangulated and cremated in Illol, the native village of deputy commissioner of police D G Vanzara.[14] The killing of Kauser Bi was subsequently admitted by the Gujarat state attorney in front of the Supreme Court.[15][16]

    குஜராத் அரசு அதன் காவல்துறை,வக்கீல் ஒத்து கொண்ட விஷயங்கள் சார் மேலே உள்ளவை.
    கணவன் கொள்ளப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு,கடத்தி கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு கணவன் கொலை.
    கணவன் உயிரோடு இருக்கும் வரை தி ராஜேந்தர் மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவை அவர் உயிர் இருக்கும் வரை /உயிர் போவதற்கு முன் நானும் உந்தன் உறவை பாட்டை பாடி உயிர் விடும் வரை காப்பாற்றியது போல காப்பாற்றினார்,அதனால் அந்த மூன்று நாட்கள் கடத்தல்,பாலியல் வன்முறை கீழ் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று நாட்டாமையாக கொடுக்கும் தீர்ப்பு சரியா
    http://www.indianexpress.com/news/gujarat-finally-admits-to-sc-yes-kausar-bi-has-been-killed-burnt——–/29760/

    • ramasami Says:

      நகைக்கத்தக்க விக்கிபீடியா, செய்தித்தாள் கருத்துகளை கண்டமேனிக்கும் வீசியெறிய வேண்டா. சம்பந்தப் பட்ட வழக்குகளின் ஆதார ஆவணங்களை, நீதிமன்ற ஆவணங்களைப் படித்திருக்கிறீர்களா? யாராவது விஷயம் தெரிந்தவர்களுடன் பேசியிருக்கிறீர்களா?

      நான் செய்திருக்கிறேன். எனக்கு ‘ஹோம்வர்க்’ செய்து என் நோக்கில் சரியான பாதையை, நிரூபணங்களை, கருதுகோட்களைச் கட்டமைப்பு செய்து விஷயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் உங்களுக்கு அப்படியில்லையெனத் தெரிகிறது. வாதாடும்போது எதிர்வாதாடிக்கு ஒரு அடிப்படை தகுதியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் – இது தவறா?

      • poovannan Says:

        நீங்கள் ஒன்று-சில இரண்டு -பல என்று கிண்டல் செய்ததற்கு

        கௌசர் பி எத்தனை நாள் காவல்துறையினரின் கீழ் கடத்தப்பட்டு இருந்தார்கள் என்பதற்கு கொடுக்கப்பட்ட இணைப்புகளில் என்ன தவறு என்று கூறுங்கள்

        கௌசர்பி-சொராபுதின் பேருந்தில் இருந்து கைது செய்ப்பட்ட நாள் நவ 23.சொராபுதின் கொல்லப்பட்ட நாள் நவ 26.கௌசர் பி கொல்லப்பட்ட நாள் நவ 28.இதை குஜராத் போலீஸ் வழக்கு சி பி ஐ க்கு மாற்றப்படும் முன்பே விசாரணை செய்து சமர்ப்பித்தது இது தவறு என்கிறீர்களா.இதற்கு ஆதாரமாக தரும் செய்திகள் அனைத்தும் பொய் என்று நீங்கள் அடித்து கூறுவது எந்த நம்பிக்கையில்

      • ramasami Says:

        அய்யா, நீங்கள் இப்படி எழுதியததைத் தான் நான் கிண்டல் செய்தேன்: “சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.”

        இதி ‘பல’ என்பதை எப்படி உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் பாருங்கள்.

        இன்னொன்று: கணவன் மனைவி இருவரும் ஒரு பண்ணைவீட்டில் இரண்டு நாள் வைக்கப்பட்டதாகவும், இச்சமயம் துன்புறுத்தல் ஒன்றும் இல்லையென்பதாகவும், மனைவியை சதிசெய்தோ கொன்று எரித்ததாகவோ ஒரு விஷயமும் / ருசுவும் இல்லை என்பதாகத் தான் நீதி மன்ற ஆவணங்கள் சுட்டுகின்றன. மனைவி இறந்துவிட்டார் எனும் தன்னிலை வாக்குமூலம் காவல்துறை கொடுத்தது. இது இரண்டு நாட்களுக்குப் பிறகு. பாலியல் வன்முறை என்றெல்லாம் இல்லை. இரண்டு முறை செய்யப் பட்ட விசாரணைகள் இதைத் தான் சுட்டுகின்றன. அதாவது 27-28 தேதிகள் – இவை ‘பல’ நாட்கள் என்று நான் தாராளமாக ஒப்புக் கொள்கிறேன்.

        சரி, ஸொஹ்ரபுத்தீனும் கற்பழிக்கப் பட்டார் என்பதற்கும் சான்றுகள் (rediff.com, timesofindia.com, ndtv.com) இருக்கின்றன என்பதையும், ப்ராஜபதி, உண்மையாக ஒரு ஆணே அல்ல – இன்னும் முக்கியமாக – இவர் ஸொஹ்ரபுத்தீனுடைய இன்னொரு மனைவி என்பதையும் இவரும் ‘பாலியல் வன்முறை’ செய்யப்பட்டார் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். இவர்களுக்குப் பிறந்த குழந்தையையும் கல்லால் அடித்துக் கொன்றார்கள் எனவும் ஒப்புக் கொள்கிறேன்.

        இந்த வன்முறையையெல்லாம் மோதியே, தன் கைகளால் செய்தார் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

        உங்களிடம் எனக்கு வேறு வழியே இல்லை.

        நன்றி.

  3. poovannan Says:

    ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கில் அவர் குடும்பத்தினர் விடாமல் போராடுவதும்,பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உயர் அதிகாரிகள் மெதுவாக வாயை திறக்க ஆரம்பித்து இருப்பதும் அந்த வழக்கோடு சொரபுட்டின்-கௌசர்பி ,துளசிராம் போலி என்சௌண்டேர் கொலை வழக்குகளுக்கும் தொடர்பு இருப்பது போல தெரிகிறதே
    மோதி திடீர் முதல்வர் ஆன பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே அவர் விரோதி பாண்ட்யாவிர்க்கு எம் எல் ஏ சீட் கொடுக்க கூடாது என்று மருத்துவமனையில் சென்று படுத்து கொண்டு ஆர் எஸ் எஸ் ,அத்வானி என யார் சொன்னாலும் கேட்க்காமல் விடாபிடியாக அவருக்கு சீட்டை மறுத்தவர்.
    சீட் கொடுப்பதில் அவ்வளவு சக்தி வாய்ந்த மோதி 2002,2007,2012 தேர்தல்களில் சாதி,மதம் பார்க்காமல் தகுந்தவர்களுக்கு இடம் வழங்கும் நடுநிலை நாயகம் 182 x 3=456 இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு இடங்களை வாரி வழங்கினார் என்பதை பற்றி பேசவே இல்லையே சார்.
    காங்கிரஸில் இருந்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள்,டோல் பூத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டி அதை நாடே பார்த்த நல்லோருக்கு எல்லாம் இடங்களை வாரி வழங்கிய வள்ளல் இஸ்லாமியர்களுக்கு வாரி வழங்கிய இடங்கள் எவ்வளவு

    http://articles.timesofindia.indiatimes.com/2013-09-22/india/42291606_1_jagruti-pandya-murder-case-haren-pandya

    Jagruti’s appeal comes in the wake of Vanzara’s resignation letter in which he alleged all fake encounters for which police officers are in jail, were carried out as part of a conscious policy of Gujarat chief minister Narendra Modi.

    Vanzara, who is in jail as an accused in fake encounter cases, reportedly revealed new facts on Friday to a CBI team about Pandya’s murder in Ahmedabad in March 2003.

    • ramasami Says:

      உங்கள் முந்தைய பின்னூட்டத்திற்கான என் பதிலை முதலில் படிக்கவும். சட்டரீதியான ஆவணங்களைக் குறிப்பிடவும் / மேற்கோள் காட்டவும். குப்பை இணையச் செய்திகளையல்ல.

      வன்ஸாரா அவர்கள் மீது (+அவருடைய சகோதர காவல்துறையினர் மீது) – மத்திய அரசின் ஸிபிஐ நிறுவனத்தால் கவிழ்க்கப் படும் அழுத்தமும், சித்ரவதைகளும் (மூன்றாம் பாகை) – உங்களுக்குத் தெரியாது என நினைக்கிறேன். மனம் பேதலித்தால், நான் கூட ஒரு திமுக அனுதாபியாகிவிடுவேன்.

      தனக்குச் சரியானது என்று பட்டதை, எடுத்தவேலையை தயவுதாட்சணியமில்லாமல் நிறைவேற்ற முயன்றுகொண்டிருப்பவர் மோதி – ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியும் கூட. (இதனை நான் நக்கலாகவோ, அருவருப்புடனோ சொல்லவில்லை) – இதுதான் உங்களுக்குப் பிடிக்கமாட்டேனென்கிறது. ஆனால் நமது நாட்டுக்கு இது போன்ற ஆட்கள் தேவை.

      ஹோம்வர்க் செய்யுங்கள், நண்பரே!

  4. poovannan Says:

    எவ்வளோ சரக்கு அடிச்சாலும் steady
    ட்ரைனிங் அப்படி
    அதே மாதிரி
    மோதி விஷயத்தில் மறதி ,ஏதாவதொரு கொலையை (அவர் ஆட்சியில அள்ள அள்ள குறையாம கெடைச்சாலும் )விட்டுறது எனபது கிடையாது
    பெரிசா பின்னூட்டம் எழுதுறேன் என்று திட்டியதால் பிரஜாபதி மிஸ்ஸிங்
    வேறு மதத்தை சார்ந்த நண்பனுக்காக நீதி கேட்டு போராடி உயிர் இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பிரஜாபதி மறக்க கூடிய மனிதர் அல்ல சார்.மோதியை கனவில் கூட வந்து தினமும் மிரட்டும் மனிதர்
    எங்க தலைவர் கனவில எல்லாம் பெரியார் ,அண்ணா தான் வருவாங்க உங்க தலைவர் கனவில் தினம் குசர் பி,இஸ்ராட் ஜெஹான்,சொரபுட்ட்டீன்,பிரஜாபதி தான்

    http://www.badriseshadri.in/2013/06/blog-post_13.html#comment-form

    poovannanFri Jun 14, 08:57:00 PM GMT+5:30

    சொரபுட்தின் மனைவி கூட கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு,உடல் எரிக்கப்பட்ட சாதனை மோடியின் குஜராதிர்க்கே உரிய தனிபெரும்பெருமை சார்.
    இதே போல மனைவியும் குற்றம் சாற்றப்பட்டவரோடு கடத்தபட்டு கொலை செய்யபடுவது, அதற்க்கு சாட்சியாக இருந்த பிரஜாபதி என்பவர் வெளிமாநில சிறையிலிருந்தாலும்,என் உயிருக்கு ஆபத்து என்று நீதிமன்றத்தில் கதறினாலும்,அங்கு இருந்து வரவழைக்கப்ட்டு போட்டு தள்ளப்பட்டது குஜரதிர்க்கும்,மோடி அரசிற்கும் ஒரு மைல் கல்.அதை குறைத்து மதிப்பிடாதீர்கள் சார்
    சலவைகள்தொழில் நடத்துபவர் சார்பாக அமித் ஷா ஆடிய ஆட்டங்கள் ,காவல்துறை உயர் அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தது எல்லாம் கொஞ்சம் படியுங்கள் சார்
    அமித் ஷா மீது குற்றசாட்டு இருந்தாலும் அவர் நிரபராதி.ஆனால் தி மு க,காரரை இருந்தால் குற்றம் சாற்றப்பட்டாலே குற்றவாளி.நடத்துங்க சார் நாட்டாமையை
    குசர் பி என்ற பெயர் கொண்ட சொரபுத்தீன் மனைவியை (அவள்மேல் எந்த குற்ற பின்னணியும் கிடையாது.அவளை கடத்தி கொன்று விட்டு )இது எல்லாம் சாதாரணம் அப்பா என்று வாதிடுவது அடடா மோடி ஆதரவாளர்கள் எல்லாம் நியாய தர்மத்தில் எங்கயோ போயிட்டீங்க

  5. சான்றோன் Says:

    பூவண்ணன் சார்…….

    1 . சொராபுதீன் குஜராத்தில் மட்டுமல்ல…..ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறையினாரால் தேடப்பட்ட குற்றவாளி……..

    2. ஆந்திர போலீஸிடம் இருந்து தப்பித்து பாகிஸ்தான் செல்லும் முயற்சியில் குஜராத் சென்றான் என்பது ஆந்திர காவல்துறையின் அறிக்கை…..

    3. சொராபுதீன் மீதான குற்றச்சாட்டுக்களில் மிக பெரும்பாலானவை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் ஆந்திர போலீசாரால் முன் வைக்கப்படுபவை……..

    4 . வீரப்பன் தமிழன்……. ஆனால் அவன் கர்நாடக‌ போலீசாரால் கொல்லப்பட்டிருந்தால் அதற்கும் இன சாயம் பூசுவீர்கள் …அப்படித்தானே?

    5. தமிழகத்தில் . இதுவரை எத்தனை என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன? அதைப்பற்றி மறந்துகூட மூச்சுவிட்டிருப்பீர்களா?

    6. இந்தியா முழுவதும் இந்த வருடம் 555 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது…இதில் எத்தனை என்கவுன்ட்டர்களில் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிறையில் உள்ளனர்?

    • poovannan73 Says:

      சான்றோன் சார்
      சொராபுதீன் வழக்கு எப்படி வெளியில் வந்தது என்று கொஞ்சம் படியுங்கள்.
      கேரளாவில் போலி என்குண்டேரில் முப்பது ஆண்டுகள் கழித்து ஒரு ஓய்வு பெற்ற கான்சடபெல் மனசாட்சி உறுத்தி மேல் அதிகாரியின் உத்தரவின் பேரில் போலி என்சௌண்டேர் நடைபெற்றது என்று உண்மையை கூறியதால் 70 வயதை கடந்த ஐ ஜி ஆயுள் தண்டனை பெற்றார்
      அதை போல இங்கு போலி என்குண்டேரில் ஈடுபட்ட போலீசார் பெருமையாக கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதை பற்றி குடித்து விட்டு (மது விலக்கு ,மது விலக்கு மாநிலம் )உளறியதை வைத்து பத்திரிக்கைகாரர் புலனாய்வு செய்து வெளியிட்ட செய்தி தான் அனைத்து கைதுகளுக்கும் ஆரம்பபுள்ளி.
      1000 என்சௌண்டேர் இந்தியா முழுக்க நடந்தாலும் தேடப்படும் குற்றவாளி கணவனோடு மனைவியும் சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சில (சில என்றாவது சொல்லலாமா சார் )நாட்களுக்கு பிறகு கொல்லப்பட்ட கௌசர்பி.சொராபுட்தின் போலி என்சௌண்டேர் வழக்கு குஜராத்தின் தனி பெரும் பெருமை.ஆயிரம் வைரங்கள் இருந்தாலும் கோஹினூர் போல இந்த என்சௌண்டேர் பல பெருமைகள் கொண்டது.
      ஒரு வருடம் கழித்து அவர்கள் கைது செய்யப்படும் போது அதற்க்கு உதவியாக இருந்த சாட்சியையும் இன்னொரு போலி என்குண்டேரில் கொலை செய்ய காரணமாக இருந்த போலி என்சௌண்டேர் பெருமைக்குரிய கௌசர் பி என்சௌண்டேர் http://www.rediff.com/news/2007/apr/25spec.htm

      Dayal said when he first filed the story, editors were hesitant to go with it, as “there can’t be documented evidence” of such crimes.

      Dayal said he has cultivated a habit of drinking alcohol with police officers, “where I drink within limit, so that I can listen and grasp what the officers say when they open up after a few pegs.”

      Prashant revealed that on one such evening, officers involved in the Sohrabuddin encounter case boasted before him how they had “punished” and eliminated some anti-national elements.

  6. ramasami Says:

    இந்தப் பதிவிற்குத் தொடர்பாகவே இல்லாமல், மேன்மேலே எழுதிக் கொண்டே போகிறீர்கள். உங்கள் மன அழுத்தம் புரிகிறது. ஏதோ, இப்படி அர்த்தமற்ற மானாவாரிச் சாகுபடிப் பின்னூட்டங்கள் இடுவதால், உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமாயின், நிம்மதி அடைபவனே நான் தான். ;-)

    பொலிக, பொலிக…

  7. க்ருஷ்ணகுமார் Says:

    \\\ பூவண்ணன் அவர்களிடம் மிகவும் தொந்திரவு பட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன், பாவம். \\

    இல்ல சார். ஸ்ரீமான் பூவண்ணன் அவர்களிடம் சிலப்பலமுறை விவாதிக்க நேர்ந்துள்ளது. அவருடைய பெரிய குறை ஜோடுக்குத் தகுந்த படி பாதங்களை செதுக்குவது. சில விஷயங்களில் அவர் கருத்தும் என் கருத்தும் அபூர்வமாக ஒத்துப்போவதும் உண்டு. ஆனால் அவர் கொலவெறி ஆயுதமான உரலை எடுத்தாரென்றால் அவ்வளவு தான். எனக்கு கூகுள குருகண்டாலை மேய்வதற்கு பொறுமையும் கிடையாது. சமயமும் கிடையாது.

    பூவண்ணன் சார்.

    நல்லா கலக்குறீங்க. சார் நீங்கள் வாதிடும் திறமை கொண்டவர். கோத்ரம், மாட்டுக்கறி — இத்யாதி சமாசாரங்களை விட்டு விதிவிலக்காக அவ்வப்போது பேசுபொருளுடன் சம்பந்தப்பட்டு வாதம் செய்வீர்கள் என நான் அறிவேன். ஆனால் சலிக்க வைக்கும் (பிடி) வாத முறைமை – உரலால் போட்டுத் தாக்குவது.

    ராமசாமி சார் பாருங்க பொழுது போகாது என்ன சொல்கிறார்.,

    \\\ நகைக்கத்தக்க விக்கிபீடியா, செய்தித்தாள் கருத்துகளை கண்டமேனிக்கும் வீசியெறிய வேண்டா. சம்பந்தப் பட்ட வழக்குகளின் ஆதார ஆவணங்களை, நீதிமன்ற ஆவணங்களைப் படித்திருக்கிறீர்களா? \\

    அடியப்புடிடா பாரதபட்டா என உங்களுக்கு மீண்டும் நூலெடுத்துக்கொடுக்கிறேன் சார். நீங்கள் பாட்டுக்கு கௌசர் பீ (குசர்பி) பாலியல் வன்முறைக்கு மோடியால் ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என அடித்து விடுகிறீர்கள். பதிலுக்கு உரல் உரல் உரல். மோடி hate தளத்தில் பேசுவது போல் பேசக்கூடாது. விஷயம் சார்ந்து பேசுங்கள்.

    பாலியல் வன்முறைக்கு கௌசர் பீ உட்படுத்தப்பட்டார் என்றால்….

    postmortem report – postmortem report – postmortem report என்றெல்லாம் பொழுதுபோகாதவர்கள் சொல்லுவார்களே.. இந்த வழக்கில் அப்படியான ரிபோர்ட் ஏதும் பார்த்தீர்களா? அது என்ன சொல்கிறது. அது பற்றி ஏதும் சொன்னீர்கள் என்றால் நீங்கள் விஷயம் சார்ந்து பேசுகிறீர்கள் என்று சொல்லலாம்.

    அது பக்கமே போகாது *எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி* என பூ பூ வாக கௌசர் பீ – ஹரேன் பாண்ட்யா என தாவு தாவாக தாவுகிறீர்கள் சார். உரல் உரலாகப் போட்டுப் பிடிவாதமாகத் தாக்குகிறீர்கள்.

    விஷயத்துக்கு வாருங்கள். போஸ்ட்மார்டம் ரிபோர்ட் என்ன சொல்கிறது என்று சொல்லுங்கள். கௌசர் பீ பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது முதல் கேழ்வி. மோடியே நம்பியார் வீரப்பா கணக்காக அவரை பாலியல் வன்முறை செய்தாரா என்பதையெல்லாம் அதற்கு அடுத்த படிக்குப் போய் விவாதியுங்கள்.

    அல்லது நான் பேசுபொருள் சேராது பேசுகிறேன் என்று நீங்கள் சொன்னால் ….. இந்த வழக்கில் போஸ்ட்மார்டம் ரிபோர்ட் ஏன் தேவையில்லை என்று சொல்லுங்கள்

  8. க்ருஷ்ணகுமார் Says:

    யசோதைப் பிராட்டி கண்ணனெம்பெருமானைக் கண்ணிநுண்சிறுத்தாம்பால் கட்டியது போல் நான் பூவண்ணன் சாரை பிடித்து இழுத்து போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் எனும் தாம்பால் கட்டிவிட முடியும் என மூடநம்பிக்கையில் உள்ளேன். வெல்வது தாம்பா உரலா — என பூவண்ணன் சாரின் உத்தரமே சொல்லும்.

  9. க்ருஷ்ணகுமார் Says:

    பூவண்ணன் சார்,

    \\ ஆழம் பத்திரிக்கையின் இந்த கட்டுரையின் கீழ் பின்னூட்டங்களில் நீங்கள் தேடும் பதில்கள் இருக்கின்றன \\

    போய்ப்பார்த்தேன். எல்லாம் உங்கள் உரலில் அரைபட்ட ஊசிப்போன மாவால் ஊற்றிய ஊத்தப்பங்கள்.

    If you really want to make up your mind, and convince someone interested in truth – that require going through what ramasami sir was repeatedly saying ad nausea — GO THROUGH PRIMARY SOURCE DOCUMENTS – QUOTE FROM THEM – COURT DOCUMENTS – CROSS EXAMINATIONS – POST MORTEM REPORTS – NOT AD NAUSEA REPETITION OF COCK AND BULL STORIES IN – times of india, outlook, ndtv – bla bla bla

    ராமசாமி சார்,

    பூவண்ணன் சாரோட மேதைமைக்கு இன்னொரு சாம்பிள் கொடுத்தால் உங்கள் estimation எல்லாம் கிடுகிடாட்டம் கண்டு விடும். 1984 ல் தில்லியில் நடந்த கலஹத்தில் சீக்கியர்களை கொலை செய்தது காங்க்ரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் – என்பது படிப்பிலா அறிவிலிகளின் புலம்பல். பூவண்ணன் சார் கண்டுபிடிப்பு – 1984ல் தில்லியில் நடந்தது ஹிந்துக்கள் சீக்கியர்கள் மீது நிகழ்த்திய வன்முறை. இந்த மாவை – இந்த அறுதி உண்மையை – அவர் திண்ணையில் உரலில் போட்டு ஆட்டியதை நீங்கள் வாசித்து மகிழ்ந்ததில்லை……ம்…..உங்கள் கொடுப்பினை அவ்வளவு தான்.

    டைட்லருக்கு ஜே. எச்கேஎல் பகத்துக்கு ஜே. ஸஜ்ஜன் குமாருக்கு ஜே. ராஜீவ் காந்திக்கு ஜே.

    பூவண்ணன் சாருடைய உரலாயுதத்துக்கு ஜே.

  10. poovannan73 Says:

    உண்மை எப்பவுமே கசக்கும் ஐயா
    பதில் இல்லை என்றால் கிண்டல் செய்து திசைதிருப்பும் செயலை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

    குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்ற செய்திகள் எல்லாம் பொய்யா.
    எந்த அடிப்படையில் அவை கட்டுகதைகள் என்று எண்ணுகிறீர்கள்

    http://www.indianexpress.com/news/kausar-bi-was-raped-before-killing-exats-officer-to-cbi/704260/

    This is the first time Kauser Bi’s alleged rape, before she was killed — allegedly at Shah’s behest — comes on record.

    Ravindra Makwana, who was posted at the ATS office on the day of the Sohrabuddin encounter, testified about the rape in his statement to the CBI on August 25, which forms part of the supplementary chargesheet recently submitted by the probe agency in the special CBI court. A copy of Makwana’s statement is available with The Indian Express.

    Makwana has said that Balkrishan Chaubey, then a sub-inspector with the Gujarat ATS, had been assigned the task of guarding Kauser Bi after she was picked up, and had raped her.

    • ramasami Says:

      அய்யா பூவண்ணன், உங்களைக் கிண்டல் செய்வது உண்மைதான். ஆனால் திசைதிருப்பும் எண்ணமெல்லாம் இல்லை. ஒரு அயர்ச்சிதான். சுற்றிச் சுற்றித் தட்டாமாலையாடுவதும், குதித்துக் குதித்துக் கும்மியாடுதலும் எனக்கு ஒத்துவராத விஷயங்கள். புரிந்து கொள்ளுங்கள்.

      சரி – இது ஒரு வெறும் கூடுதல் சார்ஜ்ஷீட் தான். (நான் இதனை இன்னும் பார்க்கவில்லை) இம்மாதிரி விஷயங்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால் ஏன் எதற்கு என்றெல்லாம் புரியும். கவனிக்காமல் இருந்தால் நிரூபணம் ஆனதாகவே தோன்றும்.

      ”வன்ஸாரா அவர்கள் மீது (+அவருடைய சகோதர காவல்துறையினர் மீது) – மத்திய அரசின் ஸிபிஐ நிறுவனத்தால் கவிழ்க்கப் படும் அழுத்தமும், சித்ரவதைகளும் (மூன்றாம் பாகை) – உங்களுக்குத் தெரியாது என நினைக்கிறேன்.” என நான் ஒரு உங்களுடைய ஒரு பின்னூட்டத்திற்கான பதிலைக் கொடுத்திருக்கிறேன். இதைத்தான் நான் மீண்டும் சொல்வேன்.

      எனக்குத் தெரிந்த இரு உயர் பொலீஸ் அதிகாரிகள் இன்னமும் சிபிஐ-யில் இருக்கிறார்கள். பதவிக்காலம் முடிந்த சிலரையும் அறிவேன். இவர்கள் மீது நான் வைத்துள்ள மரியாதையையும், பிரமிப்பையும் மீறி – இப்போது நான் சிபிஐ ஆட்களை மிகவும் சந்தேகமாகவே அணுகமுடியும். கடந்த ஐந்தாண்டுகளில் மகா கேவலமாக ஆக்கி விட்டார்கள் இதனை. வெறும் கைத்தடியாகிவிட்டது இது, சில முக்கியவிஷயங்களில். (ஆனால் இன்னும் பல நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள்தான் – பல விஷயங்களில் – அரசியல் தொடர்பற்ற பொருளாதாரக் குற்றங்களைச் சிடுக்கவிழ்ப்பதை இன்னமும் சரியாகத்தான் செய்கிறார்கள், ஆனால்…)

      உங்கள் முறை உரையாடல்கள், வாதங்கள் எனக்குச் சரியாகப் படவில்லை. ‘க்ருஷ்ணகுமார்’ அவர்கள் போல, இவற்றை அணுகுவதில் எனக்கு நகைச்சுவை உணர்ச்சியும் இல்லை. என் மாணவனாக இருந்திருந்தால் (ஏன் குருவாகவே இருந்திருந்தால் கூட) உங்கள் காதைத் திருகி, தயவுசெய்து வாதம் செய்யும் முறைகளைக் கற்றுக் கொண்டு வரவும் என்று செல்லமாக கோரிக்கை விடுத்திருப்பேன். ஆனால் எனக்கு அயர்வாக இருக்கிறது.

      சரி, பாலியல் வன்முறை நடந்தது என்றே வைத்துக் கொள்ளுங்கள். நடந்திருக்கலாம். நடக்காமலும் இருந்திருக்கலாம் – அது வேறு விஷயம்.

      என்ன சொல்லவருகிறீர்கள்? மோதி இதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொண்டு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்கிறீர்கள், அவ்வளவு தானே! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

      சரி, ஆனால் என்னால்(!) அவரை இதைச் செய்யவைக்க முடியாது. ஆனால், என்னால் முடிந்ததை – அவர் சார்பாக, என்னால் எதிலிருந்தும் ராஜினாமா செய்ய வழியில்லையென்றாலும், இம்மாதிரி உங்களுடன் வெட்டிப் பின்னூட்டக் கேளிக்கைகளில் ஈடுபடாமல் விலகிவிடுவதைச் செய்கிறேன். சுபம்.

      ஆனால், உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் தொடர்ந்து பின்னூட்டமிடலாம், பாதகமில்லை; எனக்கு என் தேசத்திற்காக, அதுவும் ராணுவத்தில், காவல்துறையில் (உங்களைப் போல) பணி புரிகிறவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்துடனும் ஒப்புதல் இருக்கிறது எனப் பொய் சொல்லமாட்டேன். அனைத்தையும் வெறுத்தொதுக்கவும் மாட்டேன்.

      நன்றி. பொலிக.

  11. GOPALASAMY Says:

    i request to ignore pooh vannans comments. it appears he is ardent follower of sonia/karuna. he may support sorapuddin and pakruddin also. what benefit he is getting is out of reach and interest. but you can ignore his comments. i am very sorry to say you please dont allow your readers to eat shit.

  12. rbkaran Says:

    please do not waste your good time to answer this type of uneducated and mad people

  13. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் பூவண்ணன்,

    உரையாடல்களில் சில சமயம் நம்மிடையே கருத்து ஒற்றுமையும் இருந்துள்ளது என்பதை நீங்கள் நினைவு கூர்வீர்கள் என நினைக்கிறேன்.

    வாத முறைமைகளில் தவறு என்று மட்டும் ராமசாமி சார் சொல்லியுள்ளார். எனக்கு எட்டிய வரை என்ன தவறு என்பதையும் பதிவு செய்து விடுகிறேன்.

    பேசு பொருளிலிருந்து பெரும்பாலும் விலகிச்செல்வது அல்லது பேருக்காக மட்டிலும் பேசுபொருளைத் தொட்டுக்கொள்வது.

    பொறுக்கிநடைத்தமிழ் என்ற வ்யாசத்தில் தாங்களாகட்டும் சந்த்ரசேகரேந்த்ரர் என்ற அன்பர் ஆகட்டும் அது ஏன் பொறுக்கிநடை அல்லது ஏன் அப்படி சொல்வதற்கு உகந்ததல்ல என்பதை விசாரிக்கவே இல்லை. நான் நூலெடுத்துக் கொடுத்தேன் – ஏன் என்று. நீங்கள் உரையாடிய விஷயங்கள் முக்யமில்லை என்று நான் சொல்ல வரவில்லை – பேசு பொருளுடன் சம்பந்தப் படாது பேசிக்கொண்டே போவது வெறும் பொழுது போக்கு இல்லாது வேறென்ன. இங்கும் நீங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்திலிருந்து எப்படியெல்லாம் தாவியுள்ளீர்கள் என ஒரு முறை மீள் வாசிப்பு கொடுக்கவும்.

    Extreme bias. இது தான் உங்கள் வாதங்களை செல்லரிக்க வைக்கிறது.

    நீங்கள் கொடுத்த இணைப்பிலேயே கூட

    \\\ This is the first time Kauser Bi’s alleged rape, before she was killed — allegedly at Shah’s behest — comes on record. \\\

    என்று தான் உள்ளது. அந்த பத்திரிக்கைக் காரர் கூட தடாலென்று முடிவுக்கு வராது வெறுமனே *rape* என்று சொல்லாது *Alleged Rape* என்று எழுதியுள்ளார். ஆனால் நீங்கள் உங்கள் கருத்துக்களில் முடிந்த முடிபாக அதை *Rape* என்று மாற்றியதும் போதாதென்று அந்தக் குற்றத்தை மோடியின் மீது வேறு சுமத்த முனைகிறீர்கள். இது ஒரு matured தளத்தில் வாதம் செய்யும் முறை அல்ல. இதற்குக் காரணம் உங்களுக்கு மோடி அவர்கள் மீதுள்ள bias.

    பொழுது போகாது அல்லது வெறுப்பை மட்டிலும் முன்னெடுக்கும் ஒரு தளத்தில் நீங்கள் இப்படி ஒரு உத்தரம் சமர்ப்பித்திருந்தால் இன்னும் பத்து பேர் அதை ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது வரை சென்றிருப்பார்கள். அந்த வாந்தியை இன்னும் பலப்பல தளங்களில் பகிர்ந்து தொல்லைக்காட்சிகளில் போட்டுத் தாக்கு தாக்கு எனத் தாக்குவார்கள்.

    Dont you think this is ridiculous. How can you hang a person before even properly charging him, Sir.

    வெறுமனே ஒருவர் கொடுத்த testimony இன்னொருவரை குற்றம் சாட்ட அறுதியானது என்பது மானாவாரி பின்னூட்டத்திற்கு வேண்டுமானால் நகைச்சுவையாக சரியாக இருக்கலாம். உண்மை அறிவதற்கு வெத்து tesimony அதன் அளவில் வெறும் ஒரு allegation. அவ்வளவே. மேலே விஜாரித்தாலே உண்மை என்ன என்று விளங்கும்.

    ஒரு Allegation ஐ குற்றம் என்று சாட்டி ஒருவரை அதற்காக உட்படுத்துவது என்பது வரை செல்லவேண்டுமானால் கண்டிப்பாக நீங்கள் வழக்கு சம்பந்தமான Postmortem என்ன சொல்கிறது (இந்த வழக்கில்) என்பது வரை சென்றிருக்க வேண்டும்.

    உங்கள் கவனம் பின்னூட்டமிட்டு பேருக்கு ஒரு எதிர்த்தாக்குதல் ( அப்படி நினைத்துக்கொள்வது; அவ்வளவு தான்) என்பதில் மட்டுமிருப்பதால் முறையான விவாதம் சார்ந்து உங்களால் யோஜனை கூட செய்ய முடியவில்லை.

    keep writing, sir. but try to be focussed.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s