வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’
October 20, 2013
அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.
இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள், ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)
ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான் தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?
இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?
-0-0-0-0-0-0-
வயாக்ராபாத புராணம் – அதாவது, எஸ்ரா அவர்களின் ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …
வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)
… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது.
… இரவில் ஜென் துறவிகள் போல, வழித்தடத்தில் எத்தனையோ வேசிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் வயாக்ராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன்.
… வாழ்வில் ஒரு முறை வயாக்ராவை உபயோகிப்பது பேறு. பலமுறை உபயோகிக்கக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு வயாக்ராவே சாட்சி.
… வயாக்ராவைப் பற்றி பாடப்புத்தகங்களில் வாசித்திருந்தபோதும், திரைப்படங்களில் பார்த்திருந்தபோதும், அதனை நேர்நின்று காணும்போது அடையும் மனவெழுச்சியை சொல்லில் வெளிப்படுத்துவது எளிதானதில்லை. மர்லின் மன்றோ ‘வயாக்ரா’ என்றொரு படம் நடித்திருக்கிறார்.
… வயாக்ராவை மர்லின் மன்றோ தனது அறையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டேயிருப்பார். அதில் வயாக்ராவைப் பற்றி how big they are and how small I am என்றொரு வசனம் இடம் பெறும், அந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை வயாக்ராவின் முன்னால் நின்றபோது முழுமையாக உணர்ந்தேன்.
… வயாக்ராவை உபயோகிப்பது என்பது மாபெரும் அனுபவம். அது ஒரு வயாக்ரா முன்நிற்கும் நிமிஷம் மட்டுமில்லை. மனிதர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணரும் தருணம். இயற்கையின் வலிமையை இந்த உலகில் எவரா லும் கட்டுப்படுத்த முடியாது என்பதை வயாக்ரா நிரூபணம் செய்கிறது.
… கண்கள் தனது பலவீனத்தை உணர்கின்றன. உடல் எழுச்சி கொள்கிறது. காதுகள் வயாக்ராவின் பேரோசையை நிரப்பிக் கொள்கின்றன. இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. நான் வயாக்ராவின் முன் நிற்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-
இப்போது ஒரிஜினல் ‘நயாகரா முன்னால்’ புராணத் துணுக்குகள் தொடர்கின்றன… (அடைப்புக் குறிகளுக்குள், வயாக்ராபாதரின் குறிப்புகளுடன்)
நயாகரா முன்னால்
… ஓடுகிற ஆறுதான் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் நீர்வீழ்ச்சியாகப் பாய்கிறது, தண்ணீரை இதுவரை நாம் கண்டிராத மாயமான திரவமாக மாற்றிக் காட்டுகிறது. (தாங்க முடியவில்லையே! #1/n; என்னப்பா இது?)
… எத்தனை ஆயிரமாண்டுகாலமாக இந்த அருவி இதே இடத்தில் விழுந்துகொண்டிருக்கிறது, இதைப் பார்க்கிற எத்தனையாவது மனிதன் நான் என்ற கேள்வி எழுகிறது. (தாங்க முடியவில்லையே! #2/n; எத்தனை முறை நான் இதனைப் படித்திருப்பேன் என்ற கேள்வியும், எத்தனை பேர் இதனைப் படித்திருப்பார்கள் என்கிற நெடுங்குருதிக் கேள்வியும் ஒருசேர, பேரோசையுடன் எழுகின்றன!)
… ஒவ்வொரு மனிதனும் அருவியை ஒருவிதமாக உள்வாங்கிக் கொள்கிறான், ஒரு பாத்திரம் தண்ணீரை நிரப்பிக் கொள்வதைப் போல. அப்படி நான் என்னால் முடிந்த அளவு அருவியை எனக்குள் நிரப்பிக் கொள்ளப்போகிறேன். என் இதயம் இந்த அருவியை வேண்டும் மட்டும் நிரப்பிக் கொள்ளட்டும் என்று மௌனமாக ஒரு கூழாங்கல் அருவியை எதிர்கொள்வது போல அமைதியாக, முழுமையாக என்னை ஒப்படைத்துக் கொண்டு தனியே நின்று கொண்டேயிருந்தேன். (தாங்க முடியவில்லையே! #2/n!)
…
…
….
(தாங்க முடியவில்லையே! #n/n!)
…
…
…
(தாங்க முடியவில்லையே! #n/∞)
…
…
(தாங்க முடியவில்லையே! #∞/∞)
நம் பேரண்டம் அழிகிறது!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
காலம் நிற்கிறது!
ஆ ஆ ஆ…
இன்னுமொரு பெருவெடிப்பு!
மற்றுமொரு கால-விசும்புச் சுழற்சி…
எவ்வளவு பெருவெடிப்புகளை இந்த அண்டம் பார்த்திருக்கும்? எவ்வளவு அண்டங்களை இந்தப் பெருவெடிப்பு பார்த்திருக்கும்?
-0-0-0-0-0-0-0-
நான் தான் வயாக்ராபாதன் சொல்கிறேன்.
ஆதிகிங்கரனின் சிஷ்யன் இறைஞ்சுகின்றேன்…
தெண்டனிட்டு விஞ்ஞாபனம் செய்கிறேன்…
நாத்தழுதழுக்கக் கெஞ்சுகிறேன்…
இந்தக் கட்டுரையை, மேலும் படிக்கவேண்டாம் என்றால் இந்தப் பக்கம் போகவே வேண்டாம், தயவுசெய்து.
-0-0-0-0-0-0-0-
October 24, 2013 at 16:21
‘நயாகரா’ ஒரு வியர்க்க வைக்கும் மொக்கை என்றுதான் நானும் நினைக்கிறேன். இருப்பினும், அது குறித்து இத்துணை ஆவேசம் தேவையா? இணையத்தில் வேண்டிய இடம் இருக்கிறதே, ஸார்! அவருக்குத் தோன்றியதை எழுதி மகிழட்டுமே! நீங்கள் பெரும்பாலும் objective ஆகவும் behavioural ஆகவும் தேர்ந்தெடுத்து எழுதிப் பார்த்திருக்கிறேன். அப்படியே தொடருங்களேன்.