…பொதுவாகவே, கடந்த சிலவருடங்களாக,  இளம் ஆர்வலப் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்; ஏனெனில் இடதுசாரிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு – ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய படிப்பறிவும், களப்பணித்திறனும், அடிப்படை நேர்மையும் துளிக்கூட இல்லாமல் – இதற்கெதிராகப் போர்க்கொடி, அதற்கெதிராகப் போராட்டம், முதலாளியத்திற்கெதிராகச் சதிராட்டம், பன்னாட்டு நிறுவனச் சதியாட்டம், ஏகாதிபத்திய அவலம், இனப் படுகொலை என்றெல்லாம் முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொண்டிருக்கும் அரைகுறைகளிடம் என் பொன்னான நேரத்தை வீணடிக்க எனக்கு மனமேயில்லை.

இருந்தாலும் இப்படியாகிவிட்டது. ;-) Read the rest of this entry »

அய்யன்மீர்! இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல.  மாறாக, இது மகாமகோ பேத்துரிமை!

Read the rest of this entry »

Once in a while, I organize trips to interesting historic / geographical / sciencey kinda of places, for young learners, in association with small schools. This blog-post is one example of what gets organized around these visits – and is posted in the hope that, based on this data,  any adult can take a group of kids on a field-trip of pure and tiring joy! (please do read the postscript too! and of course, this post is also only some 1900 words loooong!)

… come, walk with me in the mud*… Read the rest of this entry »

‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »

இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில்,  இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(

அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை?  :-((

ஆகையால்தான்… Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள்! நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)

… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம்? குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்!) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு! :-( Read the rest of this entry »

பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம்  வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால்  ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

The first part here: the importance of being aravindan kannaiyan.

Rushpucted Saars & Meydums – unfartunately for you, there is no speeling mushtake in the tightle; so, interpret it if you must, on an ‘ass is where is’ basis, though it is gastly.

The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.

Read the rest of this entry »

எனக்கு, சாப்பிடுவதும் பிடிக்கும்; சமையல் செய்வதும் (அல்லது யுவகிருஷ்ணாபடுத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய சுஜாதாத்தனமாக, சமையலிப்பதும்) பிடிக்கும்; ஆகவே.

Read the rest of this entry »

எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான்  சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.

Read the rest of this entry »

#பெரியார்புதைந்தமண்ணுக்கு ஜே!  இவ்வரிசையின் முந்தைய பகுதி = (1/n)

பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா  தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(

இனி இரண்டாம் பகுதி…

-0-0-0-0-0-0-0-

Read the rest of this entry »

السهل الممتنع

December 21, 2015

= அல்ஸஹ்ல் அல்மம்தானி.

இந்த அரேபியப் பொன்மொழி சொல்வது போல, சுலபமான வழியென்பது கண்டடைவதற்கு அரிதுபல பிரச்சினைகளுக்கு சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியம் இல்லை. Yes, there is NO silver bullet kinda solution whatsoever, for NP Complete/hard problems.

படிப்பறிவில்லாத, யோசிக்கும் திறமையுமில்லாத வெறும் பப்பரப்பா பரப்புரைகளை மட்டுமே காரியார்த்தமாக நம்பும் பலரைப் போல இவற்றை மட்டுமே நம்பும் இடதுசாரி வாயோர நுரைபொங்கும் அடிப்படைவாதிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் சொல்வதற்கு மாறாக இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் என்பது அமெரிக்கர்களின் குழப்படிகளினால், இஸ்ரேலிய மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனத்தால் உருவாக்கப் பட்டதல்லஇப்பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் பழமைவாத இஸ்லாமிலும் + கறாரான, தற்காலத்திற்கேற்ப செழுமைப் படுத்தப்படாத மதப்புத்தகப் புரிதல்களாலும்தான் இருக்கின்றன.

Read the rest of this entry »

…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?

…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி  முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்;  எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(

ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

Read the rest of this entry »

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

நீல்ஸ் ஹென்ரிக் டேவிட்  போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.

இன்று அவருடைய பிறந்தநாள். :-)

Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…

முகாந்திரம்:  அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய  இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Read the rest of this entry »