இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க!
March 26, 2016
என் குழந்தைகள் தொடர்பான இரண்டு சிறுவீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். Yes. Unlike what I and others of my ilk think, there are major reasons for hope, and boundless optimism, YES!
-0-0-0-0-0-0-0-
திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைச் சாக்கடையிலிருந்து (= குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும்) திமிறியெழுந்து ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் பல முன்னெடுப்பகளில் முனைந்து – நம் தமிழகத்தை, அயோக்கியத் திராவிடர்களிடமிருந்து காப்பாற்றும் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை.
இடையன்சாவடி, எங்கள் பள்ளி (நானல்ல!) மகத்தான பணியாற்றிவரும் பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஒன்று. இப்பகுதிகளில் பொதுவாகவே, திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைகள் அமோகமாக வேரூன்றியிருப்பவை.
இக்குறும்படம் இது ஒரு வெறும் வெட்டி ‘ப்ரொமோ’ விளம்பரம் அல்ல; பலப்பல ஆண்டுகளாக, பலத்த உடல்/மனரீதியான வன்முறைகளை சாத்வீகமாகத் தொடர்ந்து எதிர்கொண்டு, சிறுதுளிகளாகச் சேகரம் செய்து குவியப்படுத்தப்பட்ட களப்பணிகளின் சில வெளிப்பாடுகளில் ஒன்று, உத்வேகம் தரக்கூடியதொன்று – அவ்வளவுதான்.
தாமரை அமைப்பு – இது அறிதலுக்காகப் பலவகைகளில் அமைதியாகப் படாடோபமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு தன்னார்வக் கோளாறு நிறுவனம். (இது ஒரு பிச்சைக்கார என்ஜிஓ அல்ல, மன்னிக்கவும்!)
எதிர்காலம் நம்மை விடுதலை செய்யும். ஆமென்.
-0-0-0-0-0-0-0-0-
… An outer activity as well as an inner change is needed and it must be at once a spiritual, cultural, educational, social and economical action …
— Sri Aurobindo
நன்றி.
March 26, 2016 at 21:34
தாமரை அமைப்பிற்கு வாழ்த்துக்கள். ஆரோவில் பற்றி ஒரு எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தேன் இதுவரை. வீடியோ சிந்திக்க வைத்துள்ளது.