கூடங்குளம் தொடர்பான அபாண்டப் ​ ‘போராளி’ப் பொய்மைகளுக்கு ஒரு சோறு பதம்

March 10, 2016

…பொதுவாகவே, கடந்த சிலவருடங்களாக,  இளம் ஆர்வலப் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்; ஏனெனில் இடதுசாரிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு – ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய படிப்பறிவும், களப்பணித்திறனும், அடிப்படை நேர்மையும் துளிக்கூட இல்லாமல் – இதற்கெதிராகப் போர்க்கொடி, அதற்கெதிராகப் போராட்டம், முதலாளியத்திற்கெதிராகச் சதிராட்டம், பன்னாட்டு நிறுவனச் சதியாட்டம், ஏகாதிபத்திய அவலம், இனப் படுகொலை என்றெல்லாம் முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொண்டிருக்கும் அரைகுறைகளிடம் என் பொன்னான நேரத்தை வீணடிக்க எனக்கு மனமேயில்லை.

இருந்தாலும் இப்படியாகிவிட்டது. ;-)

-0-0-0-0-0-0-0-

கடந்த ஒரு வாரத்தில் வடமேற்குக் கர்நாடக வனப் பகுதிகளில் ஆனந்தமாகச் சுற்றோ சுற்றென்று சுற்றி வந்துகொண்டிருந்தேன்; இதற்குக் காரணம், பள்ளிக் குழந்தைகளைக் கல்வியுலா கூட்டிக்கொண்டு செல்ல சிலபல இடங்களைத் தெரிவு செய்யவேண்டியிருந்தது. ஆத்தும சுகமளிக்கும் பயணம் தான் – சுவிசேஷக்காரர்களின் சொர்க்கபூமி.

Screenshot from 2016-03-08 21:10:15

ஆனால், இப்பயணத்தின்போது ஒரு இளம்பெண் தன் பெரியமுதுகுப்பை சகிதம் என்னுடன்   சேர்ந்து கொண்டாள்; புத்திசாலிப்பெண், தமிழச்சியாக இருந்தாலும் தமிழில் சரியாகப் பேசக் கூட முடியாத வகையில் ஒரு விபரீதமான நோய். அனைத்து ஆண்களையும் வெறுக்கும் ப்ரேன்ட் அதிநவீன அல்ட்ரா பெண்ணியம்.  ஏதோ ஐரோப்பிய நிதியுடன் ஒரு பிச்சைக்காரத் தன்னார்வ ‘என்ஜிஓ’ நிறுவனம் ஒன்றுடன்  ஒன்றுடன் சகவாசம்.  எந்த பாவப்பட்ட massகளை  என்ன எழவு uplift செய்துகொண்டிருக்கிறார்களோ! மன்னிக்கவும். :-(

தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்த ஒரு அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் எல்லாவற்றுக்கும் எதிர். ஆனால் கைப்பையில் ஒரு ஐபாட் பாட்டுக்கருவி, மோடரோலா ஸ்மார்ட் ஃபோன், ஒரு ஏர்டெல் வயர்லெஸ் தொடர்புடன் கூடிய ஐபேட், ரேபேன் குளிர்க்கண்ணாடி; லீவைஸ் ஜீன்ஸ். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் ஒழிக; சாதாரண மக்களுக்கெதிரான அதிதொழில்நுட்பம் ஒழிக. ஊருக்கு ஏகோபித்த நற்செய்திச் சுவிசேஷ உபதேசம். நன்றி.  :-(

…இப்பெண் செய்திருப்பதெல்லாம் பெங்களூர் கல்விக்கடை ஒன்றில் பிஎஸ்ஸி ஒன்றை முடித்துவிட்டு, மும்பய் டிஸ் நிறுவனத்தில் சுற்றுச்சூழலியல் பற்றிய மேற்படிப்பு, பின்னர் கண்டமேனிக்கும் போராட்டம் – எல்லாம் அப்பா-அம்மா செலவில்; தான் இதுவரை ஒரு உருப்படியான சுக்கு வேலை செய்தும் நேர்மையாகச் சம்பாதிக்கவேயில்லை – ஆனால் பேச்செல்லாம் ‘creating rural livelihoods’ பற்றியும் அனுதினப் போராளித்தனத்தையும் பற்றித்தான்! இப்படியும்கூடப் பெற்றோர்கள், துளிக்கூடப் பொறுப்புணர்ச்சியேயில்லாமல் தம்முடைய வளர்ந்த 26 வயதுக் குழந்தைகளைப் போற்றிப்போர்த்திப் பாதுகாக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள எனக்கு மிக ஆச்சரியமாகவே இருக்கிறது! இவளுடைய தம்பியும், சுற்றுச்சூழலியல் சட்டங்கள் பற்றியென ஏதோவொரு லா-காலேஜ் வகையறா எழவைப் படித்துக்கொண்டிருக்கிறானாம் – மேலதிக விவரங்களைக் கேட்டுக்கொள்ளக் கொஞ்சம் பயமாகவே இருந்ததால் அதனை ‘சாய்ஸ்’ல் விட்டுவிட்டேன்! :-(

…பொதுவாகவே இம்மாதிரி ஜந்துக்களைப் பார்த்தவுடன் பணிவுடன் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு ஓரம் ஒதுங்கிவிடுவேன்; ஆனால் இப்பெண் என் ஆப்த நண்பர்களுடைய நண்பரின் மகள்…

மேலும் நான், இந்த ஜென்மத்தில் நிறைய பாவம் மட்டும்தானே செய்திருக்கிறேன்? ஆகவே.

-0-0-0-0-0-0-

இரவு உணவின்போது, பேச்சு வாக்கில் அவள் ‘ஃபுகுஷிமா அணுவுலை உருகல்’ (‘nuclear(!) meltdown(!!)’) தொடர்பான போராளித்தன உளறல்களை அவிழ்த்து விட்டாள் – எல்லாம் நம்மூர் எஸ்ராமகிருஷ்ணன்களும், ‘எஞ்ஜினீயர்’ சுந்தரராஜன் போன்ற குதர்க்கவாத ‘பூவுலகின் டம்ப்ஆஸ்களும்’ சொல்லும் வழக்கமான பொய்கள்தாம். (ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…02/05/2014   ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்) 11/05/2015)

பிரச்சினையென்னவென்றால், என்னால் ஓரளவுக்குத் தான் உளறல்களைப் பொறுத்துக்கொள்ளமுடியும். ஆகவே, நான் அவளிடம் சொன்னேன் – இளம் பெண்ணே! ஃபுகுஷிமா விவகாரத்தில் ஏற்பட்ட மரணங்கள் அனைத்தும் சுனாமியால் மட்டுமே ஏற்பட்டன. ஒரு மரணம் கூட கதிரியக்கத்தினாலோ, அணுவுலை உருகலிலானாலோ ஏற்படவேயில்லை. சொல்லப்போனால், சுனாமியால் பாதிக்கப் பட்டவுடன் அணுக்கருவுலையின் பாதுகாப்பு விஷயங்கள்/முஸ்தீபுகள் எல்லாம், ஒன்று விடாமல், மிகச் சரியாகவே பணி செய்தன.  இது பாதுகாப்பு அறிவியல்/தொழில் நுட்பங்களுக்கு வைக்கப்பட்ட உயர்மட்டப் பரீட்சை – அதில், அவை அனைத்தும் அதிகபட்ச உயர்மதிப்பெண் வாங்கி (=100%) தேர்ச்சியடைந்திருக்கின்றன. இதுவெல்லாம் உனக்குத் தெரியாதா?

அவள் சொன்னாள் – அந்தச் செய்திகளெல்லாம் பொய். க்ரீன்பீஸ் அமைப்பின் அறிக்கைகளைப் படித்திருக்கிறாயா?

பதிலுக்கு நான் சொன்னேன் – அம்மா, நீ சொல்வதைப் படித்திருக்கிறேன். வரிக்கு வரி அம்மாதிரி அறிக்கைகளை  விமர்சித்து, அவற்றின் பொய்மைகளை வெளிப்படுத்திய தரம்வாய்ந்த பதில்அறிக்கைகளையும் ஊக்க போனஸாகப் படித்திருக்கிறேன், நன்றி… மேலும், பல சுற்றுச்சூழல் அமைப்புகள், இப்படிப்பட்ட பொய்களை அவிழ்த்துவிட்டபின், அவைகள் அபாண்டங்கள் எனப் பகிரங்கமாகத் தெரியவந்தாலும், தம் பொய்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவோ, அவற்றுக்காக வருத்தம் தெரிவிக்கவோ இல்லை என்பதையும்… நன்றி.

இதற்கெல்லாம் எங்கே ருசு (=’proof’) என்று அவள் கேட்டவுடன், நண்பனின் கையில் இருந்த கணிநி மூலமாக, முக்கியமான சில தொழில் நுட்ப ஆவணங்களைக் காட்டினேன். அவளால் இவற்றையெல்லாம் நம்பவே முடியவில்லை – உண்மையாகவே, ஃபுகுஷிமாவில் நடந்தது ஒரு அணுவுலை விபத்து, பலர் அதனால் மரணமடைந்தனர் என்று நம்பியிருந்தாள்!

மறுபடியும்சொன்னேன் – ஃபுகுஷிமா விவகாரத்தில் ஒருவர் கூட, அணுவுலை விபத்தினால் சாகவில்லை; கதிரியக்கத்தால் பாதிக்கப் படவில்லை. தயவுசெய்து இனிமேலாவது பொய்ச் செய்திகளைப் பரப்பாதே!

அவளுக்குக் கோபம் வந்துவிட்டது; கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாள்.

பிறருடன் நடந்துகொண்டிருந்த உரையாடலில், நான் ஒரு ஆசிரிய வேலைக்காரன் என்று தெரிய வந்ததும் – ஒரு முகாந்திரம்கூட இல்லாமல், அவள் கேட்டாள் – தலித் சமூகத்துக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? உன்னைப் போன்ற ஆணவம் பிடித்த மனுவாதி பார்ப்பான் (=’manuvadi arrogant brahmin’) என்னதான் கல்வித் தொழிலில் இருந்தாலும், அவன் ஜாதிவெறியன் (=’casteist bigot’)  தானே!  (= பாவம், அந்தப் பெண்ணுக்கு, எப்படியாவது என்னை வீழ்த்தி அசிங்கப்படுத்திவிடவேண்டும் என அப்படியொரு குழந்தைத்தனமான ஆர்வம், வேறென்ன சொல்ல!)

நான் சிரித்துவிட்டேன்; சொன்னேன் – நான் ஆணவம் பிடித்தவன் தான்; ஆனால் அதற்காக,  நீ என்னைக் கழுவிலேற்றப்போவதில்லை என நினைக்கிறேன்; ஆனால், தலித் சமூகத்திற்கென்று நான் தேவை மெனக்கெட்டு ஓடிப் போய் சேவைகீவையெல்லாம் ஒன்றும் செய்யவில்லை; நான் வேலை செய்து கொண்டிருந்த பள்ளியில் சுமார் 20 விழுக்காடு தலித் குழந்தைகள் – அவ்வளவுதான்.  பல பத்தாண்டுகளாக நான் முனைப்புடன் இயங்கிவந்திருக்கும் பலவிதமான ‘கிராமப்’ பள்ளிகளில் இக்குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள், அவ்வளவே! ஆனால், அவர்களுக்கு நான் என்ன ஜாதிக்காரன் என்றே தெரியாது, நன்றி.

எனக்குக் குழந்தைகள் முக்கியம், கல்விதான் அதிமுக்கியம் – தலித்கிலித் என்றெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்து மனிதவுரிமைக் கயமைக் கபடியாடுவது, பிரித்துப் பேசுவது, வெறுப்பியத்தைப் பரப்புவது  போன்றவையெல்லாம் எனக்கு ஒத்துவரமாட்டா.

தொடர்ந்து, நாடகத் தன்மையுடன் உடலை வளைத்துக் குறுக்கிக்கொண்டு கேட்டேன் – எனக்கு நீ சாபவிமோசனம் கொடுக்கமுடியுமா? மேலும், அப்பகுப்பில் இருக்கும் சில அழகான நண்பர்களும் என் நண்பர் திரளில் இருக்கிறார்கள் – இது ஒரு மேலதிகக் கொடூரப் பாவமோ என்ன எழவோ? இதற்காகவும் என்னை நீ, தயவுசெய்து மன்னிக்கமுடியுமா? எனக்கு மீட்பு உண்டா? அல்லது மனுவாதம் பக்கவாதம் என என்னை வசைபாடமட்டும்தான் உனக்கு முடியுமா?

கூட இருந்த நண்பர்கள்  சிரித்துவிட்டார்கள்! பாவம், அந்தப் பெண்.

-0-0-0-0-0-0-

ஆனால், சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்ட அவள், நம்மூர் கூடங்குளம் பற்றிப் பேச ஆரம்பித்தாள், பாவம்… உதயகுமார், விஆர் க்ருஷ்ணஐயர், மேதாபட்கர், வந்தனாஷிவா  எனப் பல பெயர்கள், உச்சாடனம் செய்யப்பட்டன.

எனக்குக் காதுவலிக்க ஆரம்பித்தது போலவிருந்ததால், நாடகத் தனத்துடன் என் காதுகளை மூடிக்கொண்டு அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினேன். (இதனைச் செய்திருக்கக்கூடாது)

அவளுக்குக் கோபம் அதிமாகி – தன் முதுகுப் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து, என் மேஜை பக்கம் விசிறினாள்; கேட்டாள் – உனக்குக் கொஞ்சமாவது வெட்கமிருந்தால், இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்… அடுத்த தலைமுறைகளுக்குச் சமாதிவைக்கப்போகும் சாத்தானுக்கு வக்காலத்து வாங்குவதை  நிறுத்திவிடுவாய்…Screenshot from 2016-03-10 08:25:42

(No: Echoes Kudankulam – இப்புத்தகத்தில் நம்பவே முடியாத அளவில் விஆர் க்ருஷ்ணஐயர், மஹாஸ்வேதாதேவி போன்ற நான் பொதுவாகவே மதிக்கும், பலரும் உளறிக்கொட்டியிருப்பது விசனம் தருவது; ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், பொத்தாம்பொதுவாகப் பிதற்றியிருக்கிறார்கள், தேவையா?)

சரி. அப்புத்தத்தைப் புரட்டிவிட்டு நான் சொன்னேன் – அம்மணி அனிதா சாந்தி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நான் முன்னமே புரட்டிப் பார்த்திருக்கிறேன் – இது மிகுந்த நகைச்சுவை உணர்ச்சியுடன், தப்பும்தவறுமாக எழுதப் பட்ட புத்தகம். பக்கத்துப் பக்கம் மகாமகோ கற்பனையுடன் இருக்கிறது, நன்றி. எனக்கு இதனை, மறுபடியும் மறுபடியும் படிக்க முடியாது – சிரித்துச் சிரித்து வயிறு வெடித்துவிடும். மன்னிக்கவும்.

அவளுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது, பாவம். க்றீச்சிட்ட குரலில் என்னிடம் சவால் விட்டாள் நீ இந்தப் புத்தகத்தில் தவறு என ஒன்றை – ஒன்றேஒன்றைச் சுட்டிக்காட்டினால்கூட, நான் என் பெயரை மாற்றிக்கொள்வதுமட்டுமல்லாமல், அணுவுலை எதிர்ப்பையும் விட்டுவிடுகிறேன்.

நானும் சிரித்துக்கொண்டே – சில பக்கங்களைப் புரட்டி, கீழ்கண்ட படத்தையும், அதுகுறித்த சிறுகுறிப்பையும் காண்பித்தேன்.IMG_20160307_145913365IMG_20160307_145929983

அதாவது இந்த சுற்றுச்சூழல் வீராங்கனை அனிதா சாந்தி அவர்களுக்கு, ஒ​ரு சிறுகுழந்தைக்குக் கூடத் தெரி​யக்கூடிய​ –  ஒரு ஆகாயவிமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம்  ​புரியவில்லை; ஆனால், அதிநவீன அணுக்கருவுலை மேலான தொழில் நுட்ப விமர்சனங்களை கண்டமேனிக்கும் உளறிக்கொட்டி வைக்கமுடிகிறது.

கூரையேறிக் கோழி பிடிக்க வக்கில்லாத போராளிச் சோம்பேறிகள், வானமேறி வானத்தையும் எதிர்ப்பார்கள். இந்த வீணர்களுக்கு விமோசனமேயில்லை.

இதற்கு மேல், ஒரு சிறுவன் இந்த ‘ஹெலிகாப்டர்’ காரணமாகக் கொல்லப்பட்டான் எனும் அப்பட்டமான பொய் வேறு!

தொடர்ந்து அப்பட்டமாகப் புளுகிக்கொண்டேயிருக்கும் இவர்களுக்கு வெட்கமோ மானமோ இல்லவேயில்லை, வேறென்ன சொல்ல.

-0-0-0-0-

சில நிமிட அமைதிக்குப்பின், அந்த இளம்பெண்ணிடம் சொன்னேன் – நீ உன் பெயரை ஒன்றும் மாற்றிக்கொள்ளவேண்டாம் – ஆனால் உன்னுடைய தேவையேயற்ற குருட்டாம்போக்கு எதிர்ப்பு முட்டாள்தனத்தை மட்டும் விட்டுவிட்டால் அதுவேபோதும்; பாவம், அவள் முகத்தில் ஈயாடவில்லை.

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆக, அவளருகே போய் அவளை அரவணைத்துச் சொன்னேன் – நம் வாழ்க்கையில் தவறு செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம்தான்; ஆனால், அதனால் சுணங்கிப்போகாமல் தொடர்ந்து மேலெழும்புவது முக்கியம், பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியம், சரியா? குட் நைட். போய் நன்றாகத் தூங்கு. நாளை நான் உனக்கெனப் பிரத்தியேகமாக அணுக்கரு சக்தி பற்றி, அதன் மகாமகோ சாத்தியக் கூறுகள் பற்றி, அதன் ஆபத்தின்மை பற்றி, நம் அரைவேக்காட்டுக் கயமைக் கருத்துகள் பற்றியெல்லாம் பாலபாடம் எடுக்கிறேன்.

கேல் கதம்.

6 Responses to “கூடங்குளம் தொடர்பான அபாண்டப் ​ ‘போராளி’ப் பொய்மைகளுக்கு ஒரு சோறு பதம்”

  1. ravi Says:

    தலித் சமூகத்துக்கு நீ என்ன செய்திருக்கிறாய்?

    one doubt !!!

    சரி, அந்த அம்மணி , தலித்துகளுக்காக ,இதுவரை எத்தனை ஆணிகளை புடுங்கினார்களாம்.
    அம்மணியிடம் தான் தலித்துகளை முன்னேற்ற என்ன வழிகள் உள்ளனவாம் ?? கொஞ்சம் சொல்லவும்.. இல்லை பொது குழு , செயற்குழு , பொலிட்பியுரொ முடிவு செய்யுமா


    • அய்யா ரவி,

      இந்தப் பெண் ஒரு அயோக்கியத்தனமான மனுஷியல்லள்; வெறும் முட்டாள்தான்.

      எனக்கு மிகவும் பிடித்தமான கருத்துகளில் ஒன்று:

      “Never blame on malice, that which can be sufficiently explained by stupidity.”

      இந்த அம்மணியைப் போன்ற பிற அம்மணிகளையும் அம்மணர்களையும் நிறையவே பார்த்திருக்கிறேன்.

      இம்மாதிரிக் கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளவர்களில் சிலர் மட்டுமே கடைந்தெடுத்த அயோக்கியர்கள் – இந்தப் பின்னவர்களில் நான், ரொமிலா தாபர்களை, ஸாகரிகா கோஷ்களை, மல்லிகா ஸாராபாய்களை, பர்க்கா தத்களைச் சேர்ப்பேன்.

  2. சந்திரமௌலி இரா Says:

    தலை புல் பார்ம்ல இருக்காரு

  3. Prabhu Raja Says:

    These Greenpeace people standing outside IT companies to collect funds claiming environment, climate change, etc, all these people are ultra modern and gadget savvy mango people, but when we question them, they get anger :).


    • It is a sad story; it would have been nice, if GreenPeace folks just stuck to their usual double standards, but most of the time the no of standards >>> 2.

      Such is their state! Everything is rotten in the state of Greenpeace, as my dear Omelette would say! ;-)

  4. nparamasivam1951 Says:

    Sir, now I have some idea of Green Piece movement. But has no idea reg Narmada Bachao Andolan. Can I expect a blog from you, regarding that, for the benefit of folks like me?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s