ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய்யோ! அப்போது, அரவிந்தன் கண்ணையனின் முழுமுதற்சீடர் கமல்ஹாஸனா? நான் இல்லையா? :-(
February 9, 2016
இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில், இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(
அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை? :-((
ஆகையால்தான்…
-0-0-0-0-0-
… என்னைவிட இதற்கான அடிப்படைத் தகுதி, நடிகர் கமல்ஹாஸன் அவர்களுக்கு மிகமிக அதிகம் என்பதை இன்று உணர்ந்து விட்டேன்! நான் தோற்றுவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்வதற்கு எனக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், உண்மை அதுதானே, சொல்லுங்கள்? தகுதியுள்ளவர்களுககுத் தானே மதிப்புகூடவேண்டும்? :-(
ஆனால்… கொஞ்சம் யோசித்தால், இப்படியே போனால், கமல்ஹாஸன் அவர்கள், கூடிய விரைவில் அவரது குருவையே பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலிருக்கிறது – எனத்தான் படுகிறது.
ஏனெனில் – அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அஅ-வில் (அஅ = அரவிந்தனின் அமெரிக்கா) இருக்கும் நெவர்ரெஸ்ட் மலையுச்சியில் தன் தட்டச்சுப்பலகையுடன் அமர்ந்துகொண்டு இந்தியர்களுக்கு, அவர்கள் நாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் என, கனகம்பீர அறிவுரைகள் பலவற்றைத் தொடர்ந்து கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் அறிவுரைகளுக்கு சாட்சியங்களாக, அந்த மகாமகோ அய்ன் ரேன்ட் அம்மணியின் கருத்துகளைச் சுட்டலாம்.
ஆனால் – ஸ்பெஷல் ஹாலிவுட் மேக்கப் போட்டுக்கொண்டு, கமல்ஹாஸன் அவர்கள், தன்னுடைய செல்ல வில்லனிடம் இருந்து கத்திக்கப்பலில் தப்பித்து, பின்னர் தன்னுடைய காகித விமானத்தில் ஏறி மிக உயரத்துக்குப் பறந்துபோய், அஅ பனிமலைப் பகுதிமேல் சுற்றி, அதிலிருந்து தன் காதலியை (=அவருக்குக் கொள்ளுப் பேத்தியாக இருக்கமுடியும் அழகான அசட்டுப் பெண்பிள்ளை) முத்தமிட்டுக்கொண்டே பாராசூட்டில் இறங்கி, வலதுகையால் சின்முத்திரை காண்பித்துக்கொண்டு இடதுகாலால் அரவிந்தன் கண்ணையன் அவர்களை உதைத்துத் தள்ளி, அடாவடி அமர்க்களம் செய்து ஒரு பாட்டுப்பாடி, ஊக்கபோனஸாக ஒரு குத்தாட்டத்தையும் போட்டு, தானே மகாமகோ குருவாகவும் ஆகிவிடக்கூடும் தானே? (இந்தச் சமயம் கமல்ஹாஸனின் இடதுகை, வலதுகால் போன்றவையெல்லாம் என்ன செய்கின்றன என்று மேதாவிபோலக் கேட்காதீர்கள்! இடதுகையில் நாரீமணி தொங்கிக் கொண்டிருக்கிறார் + எதன்மீதாவது நிற்க, தமிழ்க் கதாநாயகனுக்கு, தமிழ்ப் பிலிமிலும் கூட ஒருகால் வேண்டும் அல்லவா?)
…அப்படியாகிவிட்டால், பின்னர், அரவிந்தன் கண்ணையன் போன்ற திரிகால ஞானிகளின், அறிஞர்களின் அறிவுரைகளை, பாவப்பட்ட இந்திய அறிவிலிகளான நாம் எப்படித்தான் பெற முடியும், சொல்லுங்கள்? :-(
-0-0-0-0-0-
சரி. ஹார்வர்ட் ஹார்வர்ட் என்ற பெயரில் அஅவில் ஒரு பல்கலைக்கழக வளாகம் இருக்கிறது. அது இருக்குமிடம் கேம்ப்ரிட்ஜ், மஸ்ஸாசூஸெட்ஸ், அஅ. அதன் பகுதிகளாக, பலப்பல உயர்படிப்புகளுக்கான கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பேரும் புகழும் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில், மேனேஜ்மென்ட் படிப்புகளும் பிரசித்தி பெற்றவை. அதில் படித்துக்கொண்டிருக்கும் இந்திய இளைஞர் திரள் ஒன்று, பலப்பல வருடங்களாக, இந்தியா கான்ஃபரென்ஸ் எனும் வருடாந்திர நிகழ்வை நடத்தி வருகிறது – இதன் விழைவு என்னவென்றால்: உலகளாவிய தலைமைக்குச் செல்லக்கூடிய பாதையில் இந்தியா பயணம் செய்யவேண்டியிருப்பதைக் குறித்த – இந்தியா சார்ந்த பலப்பல துறையாளர்களின் அனுமானங்கள், பேச்சுகள் இன்னபிற.
அஅ-வில், என்ஆர்ஐ பிரஹஸ்பதிகளால் நடத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளும் மோசமானவை எனச் சொல்லிவிடமுடியாதுதான்; ஏனெனில், இந்த நிகழ்வின் சில பேச்சுகளில் சிலவற்றை, கடந்த சில வருடங்களில் நான் கேட்டிருக்கிறேன்; இவற்றில் பல சுமார்தான் என்றாலும், சில நன்றாகவே இருந்தனகூட எனத்தான் நினைவு.
ஆனால்…
-0-0-0-0-0-
பொதுவாகவே, கமல்ஹாஸன் அவர்களின் மேடைப்பேச்சுகளை – அவை தமிழானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி – என்னால் புரிந்துகொள்ளமுடிந்ததில்லை என்பதை – என் மேடைப்பேச்சுகளையே கூட, நான் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது – என்கிற பின்புலத்தில் பார்க்கவேண்டும். ஆகவே, நான் ஒன்றும், கமல்ஹாஸன் அவர்களிடமிருந்து அதிஉயர் தர மேடைப்பேச்சை எதிர்பார்க்கவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது அல்லவா?
இருந்தாலும், என்னை இன்று, அநியாயத்துக்கு விக்கிவிக்கி அழ வைத்துவிட்டார், இந்த மனிதர். என்ன பேசுகிறார் என்றே சுத்தமாகப் புரியவில்லை; ஆகவே, என் கையறு நிலையை நினைத்து நொந்துகொண்டு, தெருவில் போய் புரண்டுவிட்டு வந்து உடலெல்லாம் அசுத்தமாகப் படிக்க முயற்சித்தாலும், ஒரு எழவும் புரியவில்லை; அவர் இப்பேச்சை அஅவில் பேசியிருப்பதால், கொஞ்சம் ‘அமெரிக்க ஜனநாயகப் புகழ்ச்சி’ செய்ய முயன்றிருக்கும் விஷயத்தைத் தவிர.
அவருக்கு (எனக்கும்கூட!) ஏன் இப்படித் தொடர்ந்து ஆகிறது என்பது எனக்கு, இந்த ஜென்மத்தில் புரியப்போவதில்லை என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.
வழவழா கொழகொழா மொழமொழா சுற்றிச் சுற்றி தட்டாமாலை வார்த்தை கும்மி வாக்கியங்கள் தொங்கல் கருத்துகள் வெறுத்துகள் சுதந்திரம் உரிமை நான் நடிகன் எங்கள் நாடு உங்கள் நாடு சகிப்புத் தன்மை சாயபுத் தன்மை எங்கள் நாட்டில் உரிமை இருக்கிறது ஆகவேதான் வெளி நாடு புலம்பெயர்ந்து செல்லப்போகிறேன் என்கிற ரீதியில் ரசிகர்களுக்கு டெம்பரவரி மகிழ்ச்சியைக் கொடுத்தேன் … …
… ஆ!
சரி. எது எப்படியோ, இந்த ‘வற்புறுத்தல் சகிப்புத்தன்மை’ தொடர்பான பேச்சினை, அவருககு, ஆங்கிலத்தில் பேசும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும் என்னைப் போலவே ஆங்கில வீக்கம் இருக்கிறதோ என நினைத்து – ஆகவே கூக்ல் மொழிபெயர்ப்பான் மூலம் இப்பேச்சினைப் புரிந்துகொள்ளமுடியுமா என்று பார்த்தேன்; https://translate.google.co.in/ சென்றேன் – கீழே அந்த மொழி, பெயர்ந்து இருக்கிறது.
இதனை முழுவதும் படித்தால், ஆங்கிலத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகப் புரியலாம் என்று இதனைப் பெரு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன். நான் இப்படித்தான் புரிந்துகொண்டேன்! நன்றி.
இம்மாதிரி விஷயங்களில் தமிழர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும்
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
என் சர்வாங்க நமஸ்காரங்கள்….
-0-0-0-0-0-
பேச்சு சுதந்திரம் காதல் போல் உள்ளது. பிரபலமாக மேற்கோள் என, ஒருபோதும் நீங்கள் வருந்துகிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியமே லவ்.
நீங்கள் மன்னிப்பு முன் நீங்கள், வேண்டும் என, பேச்சு சுதந்திரம் நீங்கள் பல விஷயங்களை சொல்ல தயாராக இருக்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே நாம் உறுதியாக நம்புகிறோம் நேரங்களில் மட்டும் நீங்கள் என்று, மன்னிக்கவும் என்று. தலைப்பு “பேச்சு சுதந்திரம்” தேர்வு என்னுடைய இருந்தது. இங்கே என்னை அழைத்தார் செய்பவர்கள், அதில் நம்பிக்கை. எனக்கு இந்த சுதந்திரம் அனுமதிக்கும் அவர்களுக்கு நன்றி.
நான் ஏன் இந்த தலைப்பை தேர்வு செய்தார்? ஏன் இப்போது? அது ஒரு திரைப்பட தயாரிப்பாளர், நான் பேச்சு என் சுதந்திரம் பற்றி திடீரென்று அக்கறை கொள்ளும் ஒரு இலவச சபாநாயகர் மற்றும் சிந்தனையாளர் இருக்கிறது? அது தடுத்து அல்லது அரசியல் அல்லது மதம் மூலம், என் பேச்சு நிர்ப்பந்திக்கின்றனர் எந்த சமீபத்திய அசம்பாவிதம் அல்லது அச்சுறுத்தலான முயற்சியா? அல்லது இரண்டும்?
என் நேர்மையான பதில்? உண்மையாக இல்லை. துல்லியமான, சரியாக இருக்க வேண்டும். நான் மட்டும் என் முன்னோர்கள், தங்கள் நிறைய கவலை யார் நகரம் அழுபவர்கள் பல தலைமுறைகளாக என்னை வழிவழியாக இது என் கவலையை.
கமல்ஹாசனின் என்ன பிரச்சனை? என்ன அவர் என்றால் அது அச்சுறுத்தல் உள்ளது பேச்சின் சுதந்திரத்தைப் பற்றிப் பேச முடிவெடுத்தால் அந்த குணமடைந்துவரும்? அதுவும் சுதந்திரம் வளர்கிறது மற்றும் இன்னும் நிறைய பேச்சு சுதந்திரம் அங்கு ஒரு யூஎஸ், போன்ற ஒரு ஜனநாயக கோட்டையில். நீங்கள், பேச ராப் மற்றும் சாபம் மற்றும் உங்கள் கல்வி காட்ட பாராளுமன்ற மொழி பயன்படுத்த முடியும். அந்த சுதந்திரத்தை வகையான இங்கே அனுபவித்து தான். பேச்சு சுதந்திரம் இருக்கிறது? அந்த சுதந்திரம் போதும்?
லண்டன் ஹைட் பார்க், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஓரளவு ஒத்த சுதந்திரம் கிடைத்தது. அது சோப்பு பெட்டியில் வாக்கு வன்மை, அனுமதிக்கப்பட்ட பேசும் வாய்ப்பு என்று அழைக்கப்பட்டது. பல தெளிவாக வரலாறு முழுவதும் அடக்குமுறை அல்லது சந்தர்ப்பவாத அரசியல் கை பார்க்க முடியும் நூற்றாண்டுகளாக எனினும் அது சென்றார் இரகசியமான. ரோம் செனட், நவீன நாள் செனட்டுகளுக்கான வேண்டும்.
நான் இன்னும் சொல்ல போது ஜனநாயகம் அரசியல் அமைப்புகள் அவர்கள் மரங்களின் இலைக் எடுத்து மிக தவறிழைக்காத அல்ல என் கருத்து கேள்வி. அவர்கள் சிவப்பு பார்க்க. என் அரசியல் தோற்றத்தை சிவந்த. என்னை நான் அல்ல ஒப்புக்கொள்ள நாம். நான் ஒரு மதம் போன்ற ஒரு உணவில் செய்யாத அரசியல் சித்தாந்தங்கள் இந்த சர்வதேச பஃபே என்னை ஊட்டி. நான் உணவு பழக்கம் போன்ற, மனிதன் உணவு சங்கிலி மேல் இருக்க அம்மிணிவோரசாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நான் வெட்கமின்றி சிறந்த வாழ்க்கைத் மற்றும் ஒற்றுமைக்காக கூட மதம் இருந்து சில அரிதான ஆனால் லேசானது புள்ளிகள் பயன்படுத்த இன்னும் ஒரு மதம் இல்லை. நான் ஜனநாயகம் கம்யூனிசம் அல்லது பாசிசத்தை அல்லது வேறு எந்த “குத்தகைக்கு” அல்லது அனைத்து சமூக நோய்களுக்கு இறுதி மற்றும் இறுதி பதில் இருக்க போகிறது என்று நான் நினைக்கவில்லை. நாம் பல்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்தி சோதனை நேரம் நமது குறுகிய 10 ஆயிரம் ஆண்டு காலத்தில் வேண்டும். அது முன்னேற்றம் வேலை உள்ளது. நம் சமூகத்தில் முன்னேற்றம் வேலை உள்ளது.
சில விஞ்ஞானிகள் மனித மனம் தன்னை முன்னேற்றம் வேலை என்று நம்புகிறேன். எனவே நான் எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு தீர்வு சிகிச்சை போன்ற எந்த ஒரு அரசியல் சித்தாந்தம் ஏற்று எனக்கு மனதில்லை. நான் எப்போதும் வழக்கமாக கண்டிப்புடன் நான் மட்டும் ஒரு ஜனநாயகத்தில் பேச்சு சுதந்திரம் இருக்க முடியும் என்று பணம் போல் சுதந்திர ஒரு வங்கி லாக்கர் உள்ளே முறை அதை பாதுகாப்பாக இல்லை என்பதை மறுக்க முடியாது என்று தகவல். அதை பாதுகாப்பாக அவசரமான காலங்களில் பயன்படுத்த திரும்பப் பெற வேண்டும் பெறுவார்.
-0-0-0-முற்றும் (அல்லது) முற்றிவிட்டது-0-0-0-
நன்றி.
February 9, 2016 at 19:46
நான் எனக்கு தான் கமலின் பேச்சு புரியவில்லை என ஒரு மாய உலகில் இருந்தேன். இப்போது தான் தெரிகிறது. என்னைப் போல் பலருக்கும் புரியவில்லை என்று. தமிழ் பேச்சே புரியவில்லை எனும் போது,…..முழுதும் படித்து திரும்பவும் வருகிறேன்.
February 10, 2016 at 09:33
நீங்கள் கூகிளின் மூலம் சுட்ட கமல்ஹாசனின் தமிழ் தோசையை அதன் மூலம் மறுபடியும் ஆங்கிலத்தில் மாத்தி சுட்டேன் அப்பவும் ஒன்றும் புரியவில்லை! மஹா மக்கு நான்!
February 10, 2016 at 09:44
இந்த பதிவிற்கு இது சம்பந்தம் இல்லாவிட்டாலும். திரு.பத்திரியின் மூலம் அடுத்த “தொடர் குண்டு’ வினவு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது! தொடர்ந்து படித்து இன்புறவும்!
http://www.vinavu.com/2016/02/09/new-genes-study-throws-lights-on-catse-system-and-endogamy/#tab-comments
February 10, 2016 at 09:48
யோவ்! ஆளை விடும். (நீங்கள் ஓய்வு பெற்று, முழு நேர இணையப்படிப்பாளராக இருக்கிறீர்களோ?)
தமிழ் இணையம் என்றாலே அற்பக் கேளிக்கை என்றாகிவிட்டது. இதில் எப்படியும், வினவுகள் தான் உளறல் மன்னர்கள்.
இதை வேறு நான் படிக்கவேண்டுமா?
February 11, 2016 at 08:27
யப்பா !! இப்போ என்னத்த சொல்ல வர நீ !! மருவாதையா சொல்லிடு
February 25, 2019 at 20:04
[…] ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய…09/02/2016 […]
March 7, 2019 at 13:04
[…] ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய…09/02/2016 […]
April 9, 2020 at 17:54
[…] ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய…09/02/2016 […]
February 11, 2021 at 10:08
[…] ஹார்வர்ட் சாவிக்குறிப்பு முகவரி: ஐயய…09/02/2016 […]