السهل الممتنع
December 21, 2015
= அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
இந்த அரேபியப் பொன்மொழி சொல்வது போல, சுலபமான வழியென்பது கண்டடைவதற்கு அரிது… பல பிரச்சினைகளுக்கு சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியம் இல்லை. Yes, there is NO silver bullet kinda solution whatsoever, for NP Complete/hard problems.
படிப்பறிவில்லாத, யோசிக்கும் திறமையுமில்லாத – வெறும் பப்பரப்பா பரப்புரைகளை மட்டுமே காரியார்த்தமாக நம்பும் பலரைப் போல – இவற்றை மட்டுமே நம்பும் இடதுசாரி வாயோர நுரைபொங்கும் அடிப்படைவாதிகளும் தொழில்முறை அறிவுஜீவிகளும் சொல்வதற்கு மாறாக — இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் என்பது அமெரிக்கர்களின் குழப்படிகளினால், இஸ்ரேலிய மொஸ்ஸாத் உளவு ஸ்தாபனத்தால் உருவாக்கப் பட்டதல்ல; இப்பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்கள் பழமைவாத இஸ்லாமிலும் + கறாரான, தற்காலத்திற்கேற்ப செழுமைப் படுத்தப்படாத மதப்புத்தகப் புரிதல்களாலும்தான் இருக்கின்றன.
அமெரிக்கா அரேபியப் பிரதேசத்தை கிஞ்சித்தும் அணுகாத, 1900களின் ஆரம்பத்தில் இருந்தே, இந்த ‘நவீனமாக்கப்பட்ட’ ஸலாஃபி–வஹ்ஹாபியத்தின் நச்சு விதைகள் ஊன்றப்பட்டு வருவதன் பரிணாம வளர்ச்சிகளில் ஒன்றுதான் இது. அதற்கும் முன்பே 14ஆம் நூற்றாண்டிலிருந்து தொடரும் சோகக் கதைதான் இது. இன்னமும் பின்னோக்கி நகர்ந்தால், மொஹெம்மத் நபி அவர்களின் காலத்திலிருந்தே, வன்முறை மூலமான மதப் பரப்பலுக்குப் பயன்பட்டுவருபவைதான் இதன் கூறுகள்.
நாம் அறிந்த வரலாற்றினை அதன் சமகால நிதர்சன நிலவரங்கள், விழுமியங்களினூடே வைத்துப் பார்க்கும் சமனநிலை, நமக்கு அவசியம் வேண்டும். வெறும் குற்ற உணர்ச்சியினாலும், இக்காலங்களில் குற்றம் என நாம் கருதுபவற்றை அக்காலங்களின் அவர்கள் செய்யவேவேயில்லை என்று சாதிப்பதாலும் ஒரு பயனும் இல்லை. அதே சமயம், அந்தக் காலத்தில் உங்கள் முன்னோர்களால் அம்மாதிரி குற்றங்கள் செய்யப்பட்டனவே, அதற்கு நீ இப்போது பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரைகுறைத்தனமாகச் சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் நம் அனைவரின் முன்னோர்களின் அயோக்கியத்தனங்களுக்கும் நாம் பொறுப்பாக முடியாது. மாறாக, நாம் நம் வாழ்க்கையில் அதே அற்பத்தனங்களைச் செய்யாமலிருந்தால் – அதுவே போதும். மேலும், பொதுப்படையாக அனைத்துப் பழமைகளையும், பாரம்பரியங்களையும் நிராகரிக்கவேண்டும் என்ற அற்பத்தனமும் தேவையேயில்லை.
பழமை வாதத்தை, மூடத்தனங்களை அந்தக் காலகட்டத்தின் அத்தியாவசியங்களுக்கேற்பப் புரிந்துகொண்டு – அவை நடக்கவேயில்லை எனத் தேவையற்றுப் பார்வையைக் குறுக்கி மறைத்துக்கொள்வதற்கு மாறாக – தற்காலத்திற்கேற்ப, முக்கியமாக, அடிப்படை மானுட விழுமியங்களுக்கேற்ப அந்த மதக் கூறுகளைப் பிரித்து அறிந்துகொள்ளுதல் அவசியம். பின்னர் எடுத்துக் கோர்த்துக் கொள்ளவேண்டியவைகளை ஒப்புக்கொண்டு, ஒவ்வாதவற்றைக் கடாசுவதும் முக்கியம். (=acknowledge the past, accept the present, adapt and go ahead towards the future in all humility, with equanimity and, most importantly with courage – but without any feeling of guilt: இஸ்லாம், முஸ்லீம், நான்: சில மேற்குவிதல்கள் பற்றிய குறிப்புகள் (4/n) )
ஆனால், அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
வெறும் ட்விட்டராலும் ப்லாக்கினாலும், ஆவேச அறச்சீற்றங்களினாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. முதிரா மனிதர்களின் பழைய பொதிச்சுமைகளை தூக்கிக்கொண்டலையும் தன்மை அப்படி! அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் வெறிக் கண்ணாடிகள் வழியே காமாலைக்கண் பார்வை தான் உச்சபட்ச சாத்தியக்கூறு. இதுதான் சோகம்.
-0-0-0-0-0-0-0-0-
என்னடா, ஒரேயடியாக தத்துப்பித்துவமாக இருக்கிறதே என பயப்படாதீர்கள்.
என் பிரச்சினை என்னவென்றால், எனக்கு உரையாடல்களில், சுயவிமர்சனங்களில், தொடர்ந்த மறுபரிசீலனைகளில், நகைச்சுவை கொப்பளிக்கும் கிண்டல்களின் மூலமாகச் சாத்தியமாக்கப்படும் சிடுக்கவிழ்த்தல்கள் முறைமைகளில், இதுவரை நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. இனிமேல் – இம்மாதிரி அணுகுமுறைகள் எனக்கு ஒத்துவருமா என்பது தெரியவில்லை.
ஏனெனில் – கடந்த சில மாதங்களில் ‘இடதுசாரிகள்’ எனத் தங்களை மிகப் பெருமையாக அழைத்துக்கொள்ளும் படிப்பறிவோ, சுயசிந்தனையோ, ஏன், செறிவான வாழ்வனுபவங்கள் கூட அற்ற (சுமார் 20 வருடங்களுக்கும் முன்வரையிலும் கூட, இவர்கள் இப்படி இருந்ததில்லை! ஏனெனில், நான் பல மிகவும் மதிக்கக்கூடிய ‘இடதுசாரி’களுடன் உரையாடும் பேறு பெற்றிருக்கிறேன்; இன்னமும் பல பெரியவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்!) ஜந்துக்களுடன் – இவர்களில் பெரும்பாலும் 25-40 வயதினர், வெறும் ஏட்டுச் சுரைக்காய குடுகுடுக்கைகள், (இவர்களுடைய அதிக பட்சத் தகுதி, அந்த அற்பர்களின் கூடாரமாக ஆகிவிட்ட ஜேஎன்யு-வில் அரசு செலவில் பல்கலைக்கழகப் படிப்பு தான்!) – பேச வேண்டிய துர்பாக்கிய நிலையில் என்னை நான் தள்ளிக்கொண்டுவிட்டேன்!
மற்றசிலர் இதே பகுப்புகளில் சிக்குபவர்கள், அவர்களிடமும் பரிவாக, பண்புடன் உரையாட முயன்றேன் – ஆனால் இவர்கள் இரண்டு இஸ்லாமிய மதவெறி அரைகுறைகள், இவர்களுடைய பாணி என்பது எடுத்த எடுப்பிலேயே வசைதான் – ஒருவர் எழுதினார், உங்கள் பாரதமாதாவை எங்கள் அல்லா கற்பழிக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது! தேவையேயற்ற சீண்டல்கள், அற்பத்தனங்கள். அவர்கள் தங்களுடைய அல்லாவைப் புரிந்துகொண்டிருக்கும் அளவு அப்படி! எப்படியும் இவர்களுக்கும், மேற்படி தொழில்முறை இடதுசாரிகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுமில்லை. (இத்தனைக்கும் நானாக இவர்களைத் தொடர்புகொள்ளவில்லை; அவர்களேதான் எழுதினார்கள்!)
ஆகவே – இக்காலங்களில், முட்டாள்களுடன் அவர்கள் அளவுக்கு இறங்கி, பொறுமையாக, மறுபடியும் மறுபடியும் செய்யப்படும் உரையாடல்களின் மீது ஒருவிதமான அலுப்புத்தான் வருகிறது.
ஏனெனில், முட்டாள்களோடு, ஒரு மசுத்துக்கும் ஒரு எழவையும் புரிந்துகொள்ளமுடியாத அறிவிலிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தால் (இதற்கெல்லாம், நான் வளர்ந்த சூழ்நிலை காரணமாக எனக்குள் இனம்புரியாமல் உறைந்திருக்கும் மனிதநேய எழவுதான் காரணம் என்று எனக்குச் சந்தேகம். எப்படிப்பட்ட கோமாளி நான்!) நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் போலவே முட்டாள் ஆகிக்கொண்டு வருகிறேன் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது.
ஆகவே.
-0-0-0-0-0-0-0-0-0-
ஆகவேதான் – மகத்தான இளைஞர் ஃபைய்ஸல் ஸையீத் அல்முதர் அவர்கள் சொல்வது போல – மத்தியக்கிழக்குப் பிரதேசத்தில்தான் ‘நரகம்’ என்பதைக் கருத்தாக்கம் / உருவாக்கம் செய்தார்கள் – இது அனைத்து அப்ரஹாமிய மதங்களிலும் ஒரு அங்கம் – அதனால்தால் அந்த நரகத்திலேயே வாழவேண்டிய கஷ்டகாலம் அவர்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆகவேதான் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு ஒரு சுலபமான ஒன்றல்ல. ஏனெனில் அது இஸ்லாமின் அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஆகவே தான்: அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
ஆனாலும் எதிர்காலத்தில் மானுடத் திரள்களில் பெரும்பாலோர் – முக்கியமாக, அறவுணர்ச்சியுடன் சிந்தித்துப் பொறுப்புணர்ச்சியுடன் காரியங்களைச் செய்யும் இளைஞர்கள் – தொடர்ந்த மேன்மைப்படுத்தலில் ஈடுபடுவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, இப்படி நடக்க – கசண்டுகள், மானுட அழுக்குகள் தொடர்ந்து அழித்தொழிக்கப் பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனெனில் – கசண்டுகளை ஒழிப்பதில் மனிதவுரிமை, வினவு, கடலை மாவோயிஸ்ம், போண்டாயிஸ்ம் என்றெல்லாம் எனக்கு உளறிக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது.
-0-0-0-0-0-0-0-
முன்னூறுக்கும் மேற்பட்ட அரைவாசி கால்வாசி பதிவுகள் என்னைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தாலும் – நடுவில் சுமார் ஐந்து வாரங்களுக்கு நான் ஒரு பதிவு எழவையும் எழுதவில்லை; யாருக்கும் இதனால் ஒரு நஷ்டமும் இல்லையென்றாலும் – கொஞ்சம் அசக்தனாக ஆகிவிட்டேன். (கடந்த நான்கைந்து பதிவுகளுக்குக் காரணம் அரவிந்தன் கண்ணையனின் சகிப்புத் தன்மை!)
இதற்குக் காரணங்கள்: என்ன மசுருக்கு எழுதி என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற விட்டேற்றி மனப்பான்மையும், என் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஏகப்பட்ட பிற வேலைப் பளுக்களும், நான் ஒரு தொழில்முறை டமிள் எள்த்தாளன் அல்லன் என்பதும் ஆகவே என் சொந்த பிம்பத்தில்/வார்ப்பில் ஒரு மிகச் சிறிய பகுதிதான் (இயற்கைக்கு நன்றி!) நான் தமிழில்(!) எழுதுபவன்(!!) என்பதும்…
ஆக, இந்த விட்டேற்றி மனப்பான்மைக்குக் காரணமாக இரண்டு குறிப்புகள்:
#1. என்னுடைய முந்தைய பதிவில்– சில கோரிக்கைகளை வைத்திருந்தேன்; அவற்றில் ஒன்று கர்ட் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்துக்காக நன்கொடைகள் ஏதாவது அனுப்ப முடியுமா என்று. ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே, ஒரு சுக்கு பணமும் இந்த நல்ல காரியங்களுக்குச் செல்லவில்லை. நன்றி.
என் ‘புது’ நண்பன் ஒருவனிடம் (இவன் ஒரு கேடுகெட்ட மூதி என்ஆர்ஐகாரன்தான்; அமெரிக்காவில் சுயமரியாதையற்றுத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தட்டச்சு குமாஸ்தாக்களில் ஒருவன்தான் – ஆனாலும் சிந்திப்பவன்!) இது பற்றிப் பேசியதற்கு அவன் பதிலாக (எனக்கு ஆதூரமாகவோ ஆதரவாகவோஅல்ல) உதிர்த்த கருத்துகள் மூன்று:
அ. தமிழர்களுக்கு எல்லாமே கேளிக்கைதான். எது எங்கே ஓசியில் கிடைக்கும் என்று நாய் போல் அலைவார்கள். பணத்தை கேளிக்கைகளுக்குச் செலவழிப்பதைத்தான் விரும்பும் இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்? இவர்களுக்காகவெல்லாம் எழுதி நீயும் சரி, நானும் சரி ஒரு மசுரையும் பிடுங்கமுடியாது. (என் பதில்: நான் எனக்காகத்தான் எழுதுகிறேன்; உன்னைப்போல ஒரு நாற்பது பேருக்குத் தான் நான் எழுதுகிறேன், அவ்வளவுதான்; சமூக முன்னேற்றம் கின்னேற்றம் செய்யவேண்டும் என்றெல்லாம் ஒரு எழவு ஆசையும் இல்லை; என்னையே உய்வித்துக்கொள்ளாமல், வேறெந்த எழவையும் உய்விப்பதாக இல்லை; எப்படியும் நான் செய்வது எனக்குப் போதும், அவ்வளவுதான்!)
ஆ. நீ தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் எழுதினால் ‘ரீச்’ அதிகமாகும்; நீ ஆங்கிலத்தில் கேட்டால் உன் பழைய சகமாணவர்களே கூட, உனக்குப் பிடித்த அளவுக்குப் பணம் கொடுக்கமாட்டார்களா என்ன? (என் பதில்: எனக்கு ரீச் என்பது முக்கியமில்லை; எனக்குப் பிடித்த விஷயங்களைப் பிடித்தமான வகையில் நான் செய்துகொள்வேன். பேடித்தனமான வேசைத்தொழில் எனக்கு ஒத்துவராது; ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதுவேன், அதாவது – எனக்கு ஒத்துவரும்போது!)
இ. நீயே ஏன் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கக்கூடாது? உன்னிடம் நம்பிக்கை வைத்து, நீ தகுதியான காரியங்களுக்கு உதவுவாய் என மதித்து உன்னிடம் பிறர் பணம் கொடுத்தால், அதில் என்ன தவறு? (என் பதில்: யாராவது ஏதாவது எதற்காகவாவது கொடுக்க/உதவிசெய்ய முன்வந்தால், அவர்களுக்கு நேரடியாகச் சிலபல முகவரிகளை/விவரங்களைத் தரமுடியும்; தந்தும் இருக்கிறேன். சிலர் நேரடியாக அவற்றுக்குத் தொடர்ந்து உதவவும் செய்கிறார்கள்; ஆனால் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்களுக்கு உடைத்து புண்ணியம் தேடிக்கொள்வது எனக்கு ஒத்துவராது; எனக்கு இருக்கும் கந்தறகோளச் சுயபிம்பமே போதும்; அதனை மேன்மேலும் வீங்கடித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை; ஆனால் அறக்கட்டளை நடத்துபவர்களை வெறுப்பதும் இல்லை, அவர்கள் வழியும் குறிக்கோளும் அவர்கள்பாடு!)
-0-0-0-0-0-0-0-0-0-
#2. சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, என்னுடைய ஆறு கர்ட் அறிமுகங்களில் (இவர்கள் மூலமாகத்தான் நான் சிலபல செய்திகளைப் பெற முடிந்தது; இவர்களில் எவருடனும் மின்னஞ்சலைத் தாண்டி ஒரு சுக்குத் தொடர்புமில்லை!) நால்வர், இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலுக்கு எதிரான தர்மயுத்தத்தில் இறந்தனர். இந்த நால்வரில் ஒருவர் ஆண். இவர்கள் அனைவரும் (தோழி கில்யஸ் போல) இளைஞர்கள்; எதிர்காலத்தைப் பற்றிய, ஜனநாயகம்+சுபிட்சம் பற்றிய கனவுகளுடன் இருந்தவர்கள் – சாவகாசமாக ‘சமூக வலைத் தளங்களில்‘ சமூக அவலங்களைச் சாடி கண்டமேனிக்கும் கருத்துக் குண்டுகளைப் போடும் சொகுசு அற்பர்களல்லர். களத்தில் இறங்கிப் போராடியவர்கள். துருக்கி வெறியனும் அதன் அதிபனுமான எர்டொகன் + இஸ்லாமிக் ஸ்டேட் அயோக்கியர்களின் கொலைக்கொள்கைக் கூட்டணியை எதிர்த்துப் போராடியவர்கள்!
…எனக்கு விக்கித்துப் போய் விட்டது, இவர்கள் இறந்த விதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது…
-0-0-0-0-0-0-0-
அண்மைய காலங்களில் இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்கள், பச்சிளம் குழந்தைகளை மூளைச்சலவை செய்து அவர்களை தற்கொலைப் படைகளாக உபயோகிக்கிறார்கள். (இச்சமயம் எனக்கு நம்முடைய சொந்த அயோக்கியனான ‘விடுதலைப் புலி’ பிரபாகரனின் நினைவு வருகிறது. ஏனெனில் அந்த ஆளும் தோற்க ஆரம்பித்தது, இப்படி அநியாயத்துக்கு குழந்தைகளை உபயோகித்துக் கொன்ற பின்னர்தான்; குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013)
படித்த தமிழ் இளைஞக் கழுதைகளே இவ்வன்முறைப் பாதையைத் தொடரும்போது, பச்சிளம் பாலகர்கள், இவர்களுக்கு எம்மாத்திரம்! (Tamil Nadu becoming a hotspot for ISIS activities)
ஆக, குழந்தைகளுடன் அவர்கள் தூக்குமளவுக்கு 10கிலோ 15கிலோ என அவர்கள் முதுகுப் பையில் வைத்தடைத்து, பாலககுண்டர்களைத் தயாரிக்கிறார்கள். அவர்களுக்குக் தெரிந்தோ தெரியாமலோ, குழந்தைகள் தற்கொலைக்குண்டர்களாக்கப் படுகிறார்கள்.
இப்படியாகத்தானே இஸ்லாம்முதல்வாத வெறிக்கிரையாகும் அந்தக் குழந்தைகள், இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களிடமிருந்து தப்பித்து ஓடிவந்து கர்ட் ராணுவங்களிடம் சரணடைவதுபோல பாவலா காட்டி, தங்களுக்கு ஆதரவாக உதவி செய்ய முன்வரும் கர்ட் வீரர்களையும் கொல்கிறார்கள்.
இப்படி இறந்தவர்கள்தான் அந்த நால்வர். தப்பித்துவரும் குழந்தை என இரக்கம் காட்டி, அதனை அரவணைத்தற்கு உடனடி பலன், மரணம்.
இப்படி குழந்தைகளைக் கொல்வதை விடவும் மோசமான ஒரு கயமை உண்டா? :-(
-0-0-0-0-0-0-
இந்த துக்கத்தில் நான் இருந்த போது, அச்சமயம் என் நண்பர்களில் ஓரிருவரிடம் கீழ்க்கண்ட மாதிரி பிலாக்கணம் வைத்திருந்தேன்.
Another reason (a very self centered one at that) is that, I am feeling very helpless about the Kurdish situation. This bothers me no end. Pals out there keep sending me grisly & desperate news and… I thought I should shut myself out from all that insanity by not going anywhere near the web. Very childish and stupid, I know. More on this later.
So, how to locally optimize happiness, is the question. How to do things in which one can make a reasonable difference – is the thought. How not to bother much about the things that are not in my control and instead focussing on what can be meaningfully accomplished – is the agony. Sometimes I feel that I am becoming nuts – even more than the normal nuttiness levels of mine. It is hard to keep up a sane perspective. May be I should invent one. Sorry to have bothered you with all my stupidity…Life goes on…
ஆம், வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் சமகால வரலாற்றின் சோகம் என்னவென்றால், இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒன்றும் சேர்ந்து – இஸ்லாமியப் பிரதேசங்களில் ஒன்றாக இருந்தும் ஜனநாயகமும், பெண்ணுரிமையும், அமைதியும், மத நல்லிணக்கமும், நகைச்சுவை உணர்ச்சியும், இசையும் ததும்பும் கர்டிஸ்தானை (=குற்திஸ்தான்) – நசுக்க முயல்வது.
நம் சமகால வரலாற்றின் ஆச்சரியம் என்னவென்றால், கர்டிஸ்தான் மக்களின் தொடர்ந்து மேலெழும்பும் தன்மை – அவர்கள் மீதான தொடர்ந்த வன்முறைகளையும், இக்கட்டுகளை-படுகொலைகளையும் மீறி…
சில சமயம் யோசிக்கிறேன் – பாபுஜி இன்றிருந்தால் என்ன செய்திருப்பார் என்று. எனக்குத் தோன்றுகிறது, அவர் குறைந்தபட்சம் இரு விஷயங்களைச் செய்திருப்பார்:
1. தான் துருக்கியின் காலிஃபேட் சார்பாக, மத இணக்கத்துக்காக, சாத்வீகமான உரையாடல்களுக்காக மட்டுமேயென்று எடுத்த தரப்பைப் பற்றிய (1920கள் வாக்கில் அவர் ஆதரித்த கிலாஃபத் இயக்கம்) சுய/மறு பரிசீலனை; காலிஃபேட் என்றாலே வெறும் வன்முறையில் மட்டுமேதான் முடியும் என்பதை அறிதல்.
2. துருக்கியின் இஸ்லாமியவெறி அராஜகத்துக்கெதிரான நிலையெடுத்து கர்ட்களையும் அர்மேனியர்களையும் ஆதரித்தல்.
-0-0-0-0-0-0-0-0-
பலப்பல நாட்களுக்குப் பின் இணையம் பக்கமாக, தற்போதைய இணையப் பப்பரப்பா என்னவென்று தெரிந்துகொள்ளலாம் என நேற்று போனால், அதுவானது – அந்த இளையராஜா பாவம், சில நொடிகள் தன் சமனத்தை இழந்து ஏதோ பேசிவிட்டதுதான்.
ஆனால், இளைஞ ஊடகப்பேடிகளுடன், பப்பரப்பா வம்பாளர்களுடன் வேறு எப்படித்தான் அவரால் பேசியிருக்க முடியும்?
ஆயிரம் விஷயங்கள் உரையாடப்படவேண்டியிருக்கும்போது, சிக்கல்கள் தீர்க்கப் படவேண்டுமென்போது – நம் இணைய இளைஞக் குளுவான்களுக்குக் கிடைத்தது இந்த அவல்தான்.
அற்பர்கள், ஊடகப்பேடிகள் மட்டுமல்லர்.
நம் தமிழகத்தின் இளைஞ கும்பல்களைப் பார்த்தால் எனக்கு ஒரே அவநம்பிக்கை; ஆனாலும் சில சாதனையாளர்கள் இந்தச் சகதியிலிருந்தும், அவற்றின் சராசரி அயோக்கியத்தனத்திலிருந்தும் மீண்டு வெளிவரமுடியும் என்பதை – முற்காலங்களில் அப்படி நடந்துள்ளதால்- உணர்கிறேன்.
ஆம், அல்–ஸஹ்ல் அல்–மம்தானி.
December 21, 2015 at 15:31
[அகற்றப் பட்டது; முகம்மது, உங்களுடைய வாய்ச்சொல் வீரத்தில் 0.0001% அளவையாவது உங்கள் சமூகத்தினை உய்விக்க உபயோகித்துக்கொள்ளவும்.
தேவையற்ற வெறுப்பு உமிழல், உங்கள் ஆரோக்கியத்துக்கேகூட ஒத்துவராது, புரிந்து கொள்ளுங்கள்!
__ரா.]
December 21, 2015 at 16:44
[அகற்றப் பட்டது; முகம்மது அலி ஜின்னா, இதுவும் நீங்கள்தான்.
நான் உங்களுடைய சக-முட்டாள் அல்லன், நன்றி. அவ்வப்போது உங்கள் கைக்குட்டையை வைத்து வாயோர நுரைதள்ளலை துடைத்துக்கொள்ளவும்.
எப்படியும், முதலில் அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்தால், சுமார் 1000 வருடங்களில் எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டுவிடுவீர்கள். ஜமாயுங்கள்!
வாழ்த்துகள். நன்றி.
ரா.]
December 22, 2015 at 10:53
சார்,இந்த ஆள் வந்து நமது அன்பான செல்லங்களில் ஒன்றான “மதிமாறனார்” “வலைத்தளத்தில்” சகிக்க முடியாத அளவுக்கு தினமும் ‘வாந்தி’ எடுத்து வருகிறது.அவரும் “புளகாங்கிதத்துடன்” இதை வெளியிட்டு தன் வக்கிர அரிப்பையும் இவர் மூலமாக தீர்த்து கொள்கிறார் என நினைக்கிறேன்.
December 22, 2015 at 23:51
// உங்கள் பாரதமாதாவை எங்கள் அல்லா கற்பழிக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது! //
ஆக கற்பழிப்பாளர்தான் இவர்களது கடவுளா ? வெளங்கிடும் :)
December 22, 2015 at 23:53
ஓ அந்த ஜந்துதானா இது ? அவர்களது ஏதோ ஒரு கழிவில் – ஒருவேளை “பதிவில்”-தானோ ? :)) – இந்த ஜந்து கலாமை “தேவடியாள் மகன்” என்று விளித்திருந்தது.
இழிபிறவிகள்.
January 1, 2016 at 12:18
எல்லாம் பார்ப்பனர்களின் சதி… ஐ.எஸ்.ஐ.எஸ் எல்லாம் இஸ்ரேலின் அமைப்புகள் ..
பாகிஸ்தானில் பள்ளியில் நடந்த தாக்குதலுக்கு காரணம் , ஆர்.எஸ்.எஸ் மற்றும் இஸ்ரேலின் மொசாத் ..
இது மோடிக்கும் தெரியும்.. ஆமா சொல்லிப்புட்டேன் !!! …எல்லாம் பார்பன , பனியா, இந்துத்துவா , ஏகாதிபத்திய , தாராளமய , அமெரிக்க , இஸ்ரேலிய சதி … (அப்பாடி .. இதுக்கு மேல எனக்கு ஒன்னியும் தெரியாது !!)
April 3, 2020 at 22:50
[…] அல்–ஸஹ்ல் அல்–மம்தானி. السهل الممتنع 21/12/2015 […]
June 14, 2021 at 14:10
weekend payday loans installment loans
June 14, 2021 at 16:27
loan personal loans with low interest rates
June 14, 2021 at 16:40
canadian pharmacy cialis 10mg
June 14, 2021 at 17:08
viagra 50mg