கருத்துரிமை, பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா வாய்ப்பேச்சு. Read the rest of this entry »

வசதிவாய்ப்பும் பணமும் அபரிமிதமாக இருந்திருந்தாலும், இப்போதும் இருந்தாலும் ஒழுங்கான படிப்புக்கு, உழைத்துச் சம்பாதிப்பதற்குத் துப்பில்லை. நேர்மையில்லை. ஒரு மேடைப்பேச்சில் (அந்தப் பேச்சுக்கான அடிப்படைக் காரணியான ‘அனிதா’ எனும்) ஒரு பெயரை நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து சரிதா தப்புதா என ஒரு விஜயகாந்த் தனமான மேடைப்பேத்தல். ஏனெனில் சிரத்தையில்லை, என்ன சொன்னாலும் புளகாங்கிதமடைவான் உடன்பிறப்பும் ஊடகப்பேடியும் என்பது நன்றாகவே தெரியும். Read the rest of this entry »

என்னாலேயே நம்பமுடியவில்லை. மானமிகு வீரமணி அவர்கள் சார்பாக, கேடுகெட்ட நான்போய் இப்படியொரு கோரிக்கையை வைப்பேனென்று. :-( ஏனெனில் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை. :-(( Read the rest of this entry »

இந்தச் சிறுமி அனிதா, அகாலமாக இறந்ததை முன்வைத்து ஒரு விதமானபிரமிப்புடன் வருத்தப்பட்டு, தமிழகத்துக் கல்வியின் தற்கால நிலையைக் குறித்து, தான் மேற்கொண்டு என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றியென என் மேலான கருத்துகளைக் கேட்டிருந்தாள், என்னுடைய (முன்னாள்) பிள்ளைகளில் ஒருத்தி.

அதாவது – 4½ + ½ = 5   :-)

இதற்கு என் பதில்: (அச்சிறுமியின் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்)

-0-0-0-0-0-

யோ!

1. இனிமேலாவது, எனக்கு எழுதும்போது அதனைத் தமிழில் எழுத முயற்சிசெய், சரியா சுட்டிப்பெண்ணே? இந்த அனிதா உனக்கு ஒரு ரோல்-மாடெல் அல்லள். அச்சிறுமி செய்தது தியாகமல்ல. முட்டாள்தனம். இந்தத் தியாகம் என்பதே ஒரு பம்மாத்து. மனவலி, தன்னம்பிக்கை என்பவையெல்லாம் மிகமுக்கியமான விஷயங்கள். கண்டிப்பாக இந்த டீவி எழவுகளைப் பார்க்கவே பார்க்காதே. நன்றாகப் படி. தினமும் ஓடு. தமிழகத்தை விட்டுவிட்டு வேறேதாவது வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்க முயற்சி செய். உன் மனம் விசாலமாக வேண்டும். திராவிடக் குறுகல் கூடாது. ஆகவே! (நானும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், பார்க்கலாம் – எப்படியும் புத்திசாலியான உனக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது; தோல்விகள் தற்காலிகமானவைதான், சரியா?)

2. இந்தச் சிறுமியின் இறப்பைக் குறித்து என்னுடைய கருத்து – பாவம், ஆனால்  she fell by the wayside வகை. இதன் மூல காரணம் நீட் தேர்வோ அல்லது வேறெந்த அண்மைய காலக் காரணமோ தனிப்பட்டமுறை சிக்கலோ அல்ல. இந்த நிலைக்கு  ஆதி காரணம் – தமிழகத்தின் அதிசராசரி கல்வி-சமூகச் சூழல் – கல்வித்தந்தை+திராவிட பிஸினெஸ்காரர்களின் கொள்கைளைக் கூட்டணி. தரங்களைத் தரதரவென்று கதறக்கதறக் கீழிழுத்து அதல பாதாளத்தில் தள்ளும் அயோக்கியத்தனம்.

அதாவது — ப்ளூவேல் வழியாக இறக்காதவர்கள், திராவிடத் தமிழகக் கல்வியின் பராக்கிரமம் வழியாகப் பாதிக்கப்பட்டு பிணங்களாகவோ நடைப்பிணங்களாகவோ ஆவார்கள். அவ்வளவுதான். இந்தத் திராவிட ப்ரேண்ட் கல்வி(!) பற்றி, தனியார்+திராவிடக் கூட்டுக்கொள்ளை, சமச்சீரழிவுக் கல்விபற்றியெல்லாம்  நாம் பலதடவை பேசியிருக்கிறோம் அல்லவா?

3. சரி.  அடுத்த சில நாட்களில் இச்சிறுமியும் மறக்கப்படுவாள். தேவையற்ற உயிர் விரயம்.  தேவையற்ற உணர்ச்சிகரமும் சுயபச்சாத்தாபமும் தைரியமின்மையும் தன்னில்மூழ்கலும் அதிமானுடனாதலும், வேறென்ன சொல்ல. ஆனால், இந்த விவகாரத்தைத் தொடர, எங்களுக்கு நேரமோ அவகாசமோ இல்லவேயில்லை. ஏனெனில், அடுத்து –  ஏதாவது தமிழ்ப்படம் அல்லது நடிகக்கோமாளிச் சர்ச்சையலை ஒன்று வரும். அதில் அதிதீவிரத்துடன் ஈடுபடவேண்டிய கட்டாயம் வரும், நம்மைப்போல படுபிஸியான போராளிகள் உலகத்தில் உண்டா எனத் தெரியவில்லை. :-( திராவிடம் வாழ்க. செப்டெம்பர்2017 இறுதியில் என் மரியாதைக்குரிய புரட்சித்தலைவி கனிமொழி அவர்களின் ஊழல் குறித்த விஷயங்கள் தொடர்பாக நீதிமன்ற விவகாரங்கள் வேறு வெளிவரலாம். ஆகவே அது குறித்துப் பொங்குவதற்கு ப்ளான் செய்யவேண்டுமல்லவா? ஆகவே வீணாகப் பொங்கி என் சக்தியை விரயம் செய்துகொள்வதாக இல்லை. (யார் அந்தப் பையன்? பலவருடங்களுக்கு முன் முத்துகுமாரோ குத்துகுமாரோ – தன்னை வீரத்துடன் விறகுக்கட்டையாக மாற்றிக்கொண்டானே, நினைவிருக்கிறதா? இவனும் திராவிடவீரத்தின் வெளிப்பாடுதான், ஆனால் இவன்பெயரே எனக்கு மறந்துவிட்டது! இவன் எதற்குத் தன்னை எரியூட்டிக்கொண்டான் என்பதே சனியன், நினைவுக்கு வரமாட்டேனென்கிறது! திராவிடத்தின் மறதிசக்தி என்பது மிகவும் நுட்பமானதும் வீரியமிக்கதும், அல்லவா?)

4. என்னைப் பொறுத்தவரை – தமிழகத்தில் 1967ல் ஆரம்பித்த பாரம்பரியமிக்க கந்தறகோளத் தமிழகக் கல்வியின் காரணமாக – இன்னமும் மேலதிகமாக இப்படி அகால மரணங்கள் லட்சக்கணக்கில் ஆர்பரித்து வீரஎக்காளத்துடன் உருமிமேளதாளத்துடன் நடக்காமலிருப்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1) திரைப்பட/டீவி கேளிக்கைகள் 2) இந்துத்துவ சதி 3) என்னுடைய சுயமுன்னேற்றக்கட்டுரைகள்.

5. நீட் பரீட்சை எதற்கு, ஏன், அதன் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் என்பதைப் பற்றி ஒரளவு தெரியும். ஆனால் அப்பரீட்சை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விளக்குகிறேன் என்கிற பெயரில், டாக்டர் படிப்பைப் பற்றி ஒன்றும்பெரிதாக அறியாத என்னால் தேவையேயில்லாமல் உளறிக்கொட்ட முடியாது. ஆனால் ஏதாவது ஃபேஸ்புக் / டிவிட்டர் / வாட்ஸப் போன்றவற்றில் உள்ள போராளி அறிவாளிச் சான்றோர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இது பற்றி நிறையவே தெரிந்திருக்கும் என்பது அந்த எழவுகளில் நேரத்தை வீணடிக்கும் உனக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆகவே ஆளை விடு. அரைகுறைகள் ஆர்பரித்து உளறிக்கொட்டுவதைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவே விருப்பம்.

6. நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் இருந்திருந்தால் அவற்றிலொன்றில் புத்திசாலியான நீ நிச்சயம் படித்திருப்பாய். ஏன் அந்த அனிதாவுமே கூட,  அவற்றில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடும். ஆக, அவள் இன்று உயிருடன் இருந்திருப்பாள். (இந்த அற்புதமான முற்றிலும்-இலவசம் (மாநில அரசு இவற்றுக்கு ஒரு நயாபைசா செலவு செய்யவேண்டியதில்லை) வகை உயர்தரப் பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் வராமல் இருந்ததற்கு திராவிட அயோக்கியக் கொள்ளைக்காரர்கள் தாம் காரணம்) அவை மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இன்று சுமார் 24,000 குழந்தைகள் அதனால் பயன்பெற்றிருப்பார்கள்! ஆனால், அந்த அளவு திராவிடக் கொள்ளை நடந்திருக்காது அல்லவா?  24000 குழந்தைகளுக்கு நல்லபள்ளிச்சூழலில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் தமிழகத்தில் திராவிடக் கல்வித்தந்தைகள், மன்னிக்கவும், மாமாக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில், இஞ்சினீயரிங் கஞ்சினீயரிங் கல்லூரிப் பம்மாத்துகளில் சேரமாட்டார்களல்லவா? இது பிரச்சினைதானே!

7. என்னுடைய கருத்துகளுக்கு, நீ ஒரளவு செவிசாய்த்தால் போதும். ஏனெனில் அவைதான் உண்மை, வழியும் சத்தியமும் ஜீவனும் என்றெல்லாம் நான் உளற முடியாது. ஆகவே பிறர் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு உன் அனுபவங்களின் மூலமும் சூழற்தேவைகளின்படியும் உன் சொந்த அணுகல்களை கட்டமைத்துக் கொள்வது சிறந்தது எனப் படுகிறது. உதாரணமாக. என்னைப் பொறுத்தவரை, நீ சார்ந்திருக்கும் மக்கள் திரளுக்கு முதன்மையான, கரிசனம் உள்ள தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எனத்தான் நினைக்கிறேன்; அதே சமயம் – உனக்கு நான் முன்னமே சொல்லியிருப்பதுபோல, சர்வ நிச்சயமாக அவர், தொல்.திருமாவளவன் அல்லர் எனவும்; ஆகவே கிருஷ்ணசாமி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் (அதாவது சொல்லியிருந்தால்) என்பதைக் கூர்ந்து கவனிக்கவும். (பொதுவாகவே, எனக்கு அவரிடம் மரியாதை உண்டு – அதிகம் அவரைப் பற்றித் தெரியாவிட்டாலும், அவ்வப்போது அவர் குறித்து தனிப்பட்ட முறையில் சிலபல நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவருடைய அனுதினச் செயற்பாடுகள் பற்றிய அறிவு எனக்கு லபிக்கவில்லை என்றாலும், பல்லாண்டுகளாக அவர் எழுப்பி வந்திருக்கும் கருத்துகளில் பல எனக்கு ஒத்துப்போகின்றன, அவர் சமூக மேன்மைக்காக உண்மையாகவே விழைபவர் எனப் படுகிறது – சொல்லப் போனால், இவரும் இவரைப் போன்றவர்களும் தமிழக அரசியலில் வளரவேண்டும். அவ்வளவுதான்.)

8. இந்த அகாலச் சாவு குறித்து, சமனத்துடனும் உண்மையான கரிசனத்துடனும் யார் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது, நான் இன்னமும் எழுதவில்லை, எழுதப் போவதுமில்லை.

ஆனால் — இது குறித்துப் பொங்கியிருப்பவர்களில் என்னைப் பொறுத்தவரை முதன்மையானவர், என் பேராசானான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆகவே உனக்கு போராளித்தனமான அறிவுரைகள் வேண்டுமென்றால் – தயவுசெய்து அவரை அணுகவும்.

(http://www.sramakrishnan.com/?p=6539)
அவர் — தமிழகக் கல்வியை முன்னேற்ற, போராட, கருத்துக்குண்டுகளை அள்ளிவீச என பலப்பல விஷயங்களை இணயத்திலிருந்து டவுன்லோட் செய்து தயாராக வைத்திருக்கிறார், சரியா? (இது கிண்டல்தான்; ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாதே!)

சரி. நிஜமாகவே உனக்கு ஏதாவது மனவுளைச்சல் ஏற்பட்டால் எதாவது உருப்படியாகப் பேசவேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள். ஆனால் — அப்படியில்லாமல் ‘சும்மாதான் ஃபோன் பண்னேன், காலேல என்ன சாப்டீங்க’ வகை வெட்டி அரட்டையாக அது இருந்தால் நிஜமாகவே மனவுளைச்சலை வரவழைத்துவிடுவேன். கபர்தார். :-)

தினமும் ஓடு.

__ரா.
-0-0-0-0-0-0-

மேற்கண்டதின் மின்னஞ்சல் மூலவடிவத்தை, இன்று காலை அனுப்பினேன். அச்சிறுமி இன்னமும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. படித்துவிட்டுச் சிரித்தேன் என்றாள். ஆகவே, ஒரு ஆசுவாசம். :-)

சரி.  பிரச்சினையென்னவென்றால், எஸ்ராமகிருஷ்ணன் அவர்களின் இன்னொரு +1 ‘also ran’ விசிறியாக அவள் மாறாமலிருக்கவேண்டும்.

இன்று காலை, நண்பரொருவர் அனுப்பிய சுட்டியைப் படித்தேன் – இது ஆங்கிலத்தில் இருக்கிறது; ‘நீட்’ குறித்த தமிழகக் குழப்படிகளை எதிர்கொள்ளும் வகையில், மேன்மைக்கான சிலவழிகளைப் பரிந்துரைக்கும் அளவில் –  இது ஒரு முக்கியமான கட்டுரை. அவசியம் படிக்கவும்.

Explainer: How NEET has exposed the standard of science education in Tamil Nadu  (How do TN students measure up against their peers in south India?)

இம்மாதிரிக் கட்டுரைகளை இந்த கேஎஸ்நாகராஜன் போன்ற இளைஞர்கள் தமிழிலும் எழுதலாமே எனப் படுகிறது.

எது எப்படியோ, இம்மாதிரிக் கட்டுரைகளை விரித்து, வரலாற்றுக்காரணிகளை இணைத்து மேம்படுத்தி – தமிழ்ப்படுத்திஎடுக்கப்படவும் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுதப் பட வேண்டும். அது மட்டும் போதாது.  மிகமுக்கியமாக நிறைய பணிகள் செய்யப் படவும்வேண்டும்.

முதலில் – திராவிடப் பெருங்கொள்ளைக்காரர்கள் அதிகார மையங்களிலிருந்தும் சமூகப் பீடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்படவேண்டும்.

பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.

-0-0-0-0-0-

37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!

05/04/2017

பெங்களூரில் வசிக்கும் நண்பர் (=பித்துபிடித்து கார்களைச் சேகரிக்கும் போக்கற்றவர்) ஒருவரின் பண்ணைக்கு, வளர்ந்துகொண்டிருக்கும் கார்ப்பித்துலியலாளனான என் மகனைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். #பெற்றோர்படும்பாடுகளியல் Read the rest of this entry »

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது சுதந்திர தினம், அதிகாலை 1.15 மணியிலிருந்து, ஒரே சீராக மழை பெய்த மணியம்.

Read the rest of this entry »

விடு தலை சிறு தை = leave head small sew ©பேராசான், 2017. நன்றி. Read the rest of this entry »

​#DravidanAduடா!  ;-)

Read the rest of this entry »

ஆ!

May 1, 2017

இக்காலங்களில் பொதுவாகவே நான் நேர்கோணல் காணல்கள் செய்வதில்லை என்றாலும்… அப்படியே ஆனாலும், குறைந்த பட்சம் 15 வருட வேலை அனுபவம் இல்லாதவர்கள்கிட்டேகூட போக விருப்பமில்லை, உண்மையில் நேரமும் இல்லை என்றாலும்… Read the rest of this entry »

தமிழகத்தில்  இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை!) என்றாலும் –  சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்… Read the rest of this entry »

*பகீர் செய்தி* … … *பயபீதி*     … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(

…தாம் இழுத்த இழுப்புக்கு வராமல் சசிகலாவும் நடராஜனும் டபாய்த்ததால், பன்னீரும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டதால் — ஏன், இளம் 64வயதிலேயே இளைஞரணித்தலைவராக இருக்கும் இசுடாலிருமேகூட பிடி கொடுத்துப் பேசாததால் — தமிழகத்தையே நசுக்கி அழித்தொழிக்க காவி மோதிகும்பல் அரங்கேற்றியிருக்கும் விஷவிளையாட்டுதான் இந்த ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் விஷம்!

Read the rest of this entry »

(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.

‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதிரியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட  ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.

தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக  நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »

சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!

…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)

ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த  கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?

(இந்தப் பதிவில் சுமார் 2050 வார்த்தைகள்; நீஈஈஈஈஈஈளம்; பொறுமை தேவை – கைவசம் அது இல்லையென்றால் அல்லது நீங்கள் ஒரு திராவிட அபிமானியென்றால், விட்டுவிட்டு ஓடவும். நன்றி!)

Read the rest of this entry »

கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ்.  இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை  ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’  சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது. Read the rest of this entry »

நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை  ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Read the rest of this entry »

“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”

க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)

மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத்,  சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.

MASOODOBITசர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை.   ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.

ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..

Read the rest of this entry »

…இன்றுதான் இந்த மகாமகோ ஜேப்பியார் இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மனிதரைப் பற்றியும் இவரது மகத்தான சமூகப் பங்களிப்புகள் பற்றியும் முன்னமே ஒருதடவை எழுதியிருக்கிறேன்கூட.

Read the rest of this entry »

பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு. Read the rest of this entry »

என் திருவாரூர் நண்பர் ஒருவர் (இவரது நம்பகத்தன்மை அதிகம்) இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிவித்துள்ளபடிக்கு:

அவருக்கு நேரடியாகத் தெரிந்தே திருவாரூர் சட்டசபை தொகுதியின் விஜயாரூரம், கிடாரம்கொண்டான் பகுதிகளில் திமுக சார்பாக பணம் அமோகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது! (நண்பர், பணத்தை வாங்கிக்கொள்ளாமல் திமுக களவாணிகளைத் திட்டி அனுப்பிவிட்டார்)

Read the rest of this entry »

பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-( Read the rest of this entry »