மு. க. இசுடாலிர்: என் இனிஷியலில் உள்ள மு = முட்டாள், நன்றி!
September 18, 2017
வசதிவாய்ப்பும் பணமும் அபரிமிதமாக இருந்திருந்தாலும், இப்போதும் இருந்தாலும் ஒழுங்கான படிப்புக்கு, உழைத்துச் சம்பாதிப்பதற்குத் துப்பில்லை. நேர்மையில்லை. ஒரு மேடைப்பேச்சில் (அந்தப் பேச்சுக்கான அடிப்படைக் காரணியான ‘அனிதா’ எனும்) ஒரு பெயரை நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து சரிதா தப்புதா என ஒரு விஜயகாந்த் தனமான மேடைப்பேத்தல். ஏனெனில் சிரத்தையில்லை, என்ன சொன்னாலும் புளகாங்கிதமடைவான் உடன்பிறப்பும் ஊடகப்பேடியும் என்பது நன்றாகவே தெரியும்.
சொந்தச் சகோதரனுடன்கூட ஒத்துப் போக முடியாமல், அவரோடு சுமுகமாக நல்லிணக்கத்துடன் இருக்க முடியாமல், அற்ப குடும்பச்சொத்துச்சண்டை கழகக்கொள்ளைச்சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் – நம்பவேமுடியாத நகைச்சுவையாக ஊராருக்கு நல்லிணக்க மதச்சார்பின்மை ஜாதிச்சார்பின்மை உபதேசம் வேறு. அதாவது ஊரோடு ஓத்து வாழ். என்ன எழவோ!
ஆக – கூரையேறிக் கோழி பிடிக்கமுடியாத இந்த நபர், வானமேறி அடுத்து தமிழக முதலையமைச்சராகவே ஆகிவிடுவாரோ? தமிழ் நாட்டுக்கு விமோசனமேயில்லையா?
சரி. ஜன்னி கண்டு அடுத்த தலைமுறைகளுக்குச் சொத்துச்சேர்க்கிறார் என இவருடைய போராட்ட அறைரைகூவல்களைல்லாம் விட்டுவிட்டாலும் – ஏனிந்த அடிப்படைத் திராவிட உரிமையான உளறல் ஏகத்துக்கும்… புரியவேயில்லை.
‘நமக்கு நாமே’ என இத்தனை நாள் தெருத்தெருவாக ஆட்டோ ஓட்டி, நாற்று நட்டு, ஏரியைத் தூர்வாருவது என்பதெல்லாம் பம்மாத்தா? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா? அவ்வளவு கையாலாகாத நிலையா? ஹிந்தி ஆதிக்கம் என ஒரு பேச்சுக்கு நகைச்சுவையாக ஒப்புக்கொண்டாலும் – அது வந்து ஒழியும் நிலையிலா, நீங்கள் போற்றிப் போற்றிக் கடந்த 60 ஆண்டுகளாக மேன்மை(!)ப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ் இருக்கிறது?
திராவிடம் என்றாலே உளறலும், வசைபாடலும், வாய்கூசாமல் பொய்யும்தான்.
(ஆம், நானும் இந்தத் தீராவிடத்தின் தாக்கத்தினால்தான் வசைபாடிக்கொண்டிருக்கிறேன். திராவிடமுள்ளை திராவிடத்தால்தான் எடுக்கமுடியும். நன்றி!)
-0-0-0-0-0-0-
“என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நான் வகுப்புகளை, கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர். படங்களுக்கு போனதுண்டு.
ஆசிரியர்களைப் பற்றி – ஆசிரியர்களெல்லாம் இருக்கும் அரங்கிலேயே, அதுவும் ஒரு திமுக கல்வித்தந்தையின் பொக்கைப் பல்கலைக்கழக எழவிலே அற்பக் கருத்துகள்.
“பேராசிரியர்களிடம் வம்பு பண்ணிய நாட்கள், எனக்கு நினைவுக்கு வருகிறது.“பேராசிரியர்களை போல வறுத்தெடுக்க விரும்பவில்லை.
பெண்களைப் படுகேவலமாகப் பேசும் பாங்கு.
இந்திராகாந்தி ஒரு “முண்டச்சி.” ஜெயலலிதா, ஒரு “பச்சத் தெவிடியாமுண்டை!“
அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன், ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’ கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி, படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … …
என்றெல்லாம், ஒருமுறையல்ல, பலமுறை சொல்லி அர்ச்சனை செய்திட்டிருக்கிறார் இந்தப் பெருமகனார்! மேலும்.
பின்னர் இந்திராகாந்தி பற்றி மாதவிடாய் ரத்தம் என்றெல்லாம் பேசி தன் அசிங்கமான உள்ளீட்டைக் காண்பித்துக்கொண்டவர்தாம் இந்தத் தலைவர். அப்பா எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறடி பாய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது சொல்லுங்கள்?
(ஆனால் – இம்மாதிரி ஆட்களையும் நக்கிக்கொண்டு – ‘காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம்’ எனக் கூசாமல் தமிழக காங்கிரஸார் பேசும்போது எனக்கு வரும் ஆச்சரியத்துக்கு அளவேயில்லை!)
சரி, தரமான கல்விக்கு, நம் தமிழகத்தின் ஏழைபாழைகளுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு (நிஜமான, நடத்துகொண்டிருக்கும், ஜொலிக்கும்) திட்டத்துக்கு இந்த ஜென்மங்கள் முட்டுக்கட்டை போடுவதால் இந்தப் பதிவு. மன்னிப்பீர்களா?
… இப்போது மு = முட்டாள் எனும் சமன்பாட்டிற்கு வரலாம். சொல்லப் போனால், ‘முட்டாள்’ என்பது மிகக் குறைந்த பட்ச அனுமானம் என்பதைக் கருத்தில் கொள்க.
(சரி, தலைவர்தான் வாய் கூசாமல் பொய்சொல்கிறார் அல்லது அமோகமாக உளறுகிறார் என்றால் – பொதுவாகவே மூளையுள்ளவரும் கொஞ்சமாவது கல்வியில் ஈடுபாடுள்ளவருமான திருச்சி சிவா போன்றவர்கள், உளறல்களை எதிர்கொள்ளாமல், இளித்துக்கொண்டே புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுப்பது இன்னமும் சோகம்! தங்கம் தென்னரசு போன்றவர்கள் (எனக்குத் தெரிந்து இவர் ஒரு திராவிட விதிவிலக்கு – உண்மையாகவே ஒரளவாவது தமிழகம்மீதும் கல்வியின்மீதும் கரிசனம் உள்ளவர்) எல்லாம் திமுக-வில் உட்கார்ந்துகொண்டு என்னதான் செய்கிறார்கள்? (இவர் மேடையில் இல்லை என நினைக்கிறேன், தப்பித்துக்கொண்டுவிட்டாரோ?))
என்னவோ இந்த நவோதயா பள்ளிகள் வருவதால் ஹிந்தித் திணிப்பாம்! என்ன மகத்தான உளறலும் முட்டாள்தனமுமிது!
இந்தப் பள்ளிகள் குறித்த ஏதாவது ஒரு விஷயத்தை இந்த அரைகுறைகள் அறிந்துள்ளார்களா? ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், ஒரு ஹோம்வர்க் எழவையும் செய்யாமல் எப்படி இவர்கள் மிகத்தைரியமாக உளறுகிறார்கள்?
ஏன், இந்த அயோக்கியர்கள் கொஞ்சம் தங்கள் வெட்டிப் போராளிக் குண்டிகளை அசைத்து – புதுச்சேரி காளாபேட்டையிலும் காரைக்காலின் ராயன்பாளையத்தில் இருக்கும் நவோதயா பள்ளிகளுக்குச் சென்றால் (இவற்றில் படிப்பறிவு பெறும் பாக்கியம் பெற்ற தமிழ்க்குழந்தைகளில் மிகப்பெரும்பாலோர், வீட்டில் தமிழ் பேசும் ‘தலித்’ குழந்தைகள்தாம்!) எல்லா உண்மைகளையும் அறிந்துகொள்ளலாமே! ஹிந்தி திணிக்கப் படுகிறதா, தமிழ் ஒடுக்கப்படுகிறதா என்று?
ராஜீவ் காந்தி அவர்களால் கொணரப்பட்ட முன்னோக்குத் திட்டமான இந்த நவோதயா திட்டத்தை ஆதரிக்காமல், பகிரங்கமாகப் பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசாமல் இந்த தமிழகக் காங்கிரஸ் பேடிகள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? திமுக திருடிச் சாப்பிட்டது போக அது விட்டெறியும் மீதமிருக்கும் எலும்புத் துண்டுகளுக்கு இப்படியா அலைவார்கள்?
…மு = முட்டாள்தனம் என்பது திராவிடர்களின் பாரம்பரியம் என இதனை விட்டுவிடமுடியாது இது. இவர்கள் அயோக்கியர்கள். இவர்களுக்குப் போய் என்ன மசுத்துக்கு தமிழகத்தின் மேன்மையிலும் கல்வியறிவிலும் அக்கறை இருக்க முடியும்? சோடா பாட்டில் அடித்து சைக்கிள் செயின் சுற்றியே ஆட்சிக்கு வந்த ரவுடி கும்பலிடம், தீவட்டிக் கொள்ளைக்காரர்களிடம் நாம் என்ன பெரிதாக எதிர்பார்க்கமுடியும்?
அய்யோ! கல்லா கட்டுவதிலும் தமிழகத்தை ஒழிப்பதிலும் கடமை-கட்டுப்பாட்டுடன் குறியாக இருக்கும் தற்குறிகளா நம்மை அடுத்தமுறை ஆளப் போகிறார்கள்?
சர்வ நிச்சயமாக ‘தலித்’களின் விரோதிகள், இந்த திமுகவின் இசுடாலிரும் இத்தியாதிகளும்… ஆனால் இம்மக்கள் திரளுடைய விரோதிகள் மட்டுமல்லர் இந்தத் திராவிடர்கள். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் – நம் அனைவரின் மேன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரானவர்கள் இந்த அயோக்கியர்கள்!
=========
- அட அயோக்கிய கல்வித்தந்தே திராவிடனுங்களா! இப்படியாடா வெக்கமேயில்லாம புளுகுவீங்க? 13/09/2017
- விடுதலை வீரமணி: அவசரத் தேவை! எனக்கு உடனே உதவவும்! 11/09/2017
- திராவிடக்கல்வி (அனிதா, இளம் மாணவி) – சில குறிப்புகள் 09/09/2017
September 18, 2017 at 20:49
புதுச் சேரி குழந்தைகள், கொடுத்து வைத்தவர்கள். அருகிலேயே இருந்தும், திண்டிவனம்/கடலூர் மாவட்ட குழந்தைகள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.
September 19, 2017 at 13:52
அய்யா,
நவோதயா பள்ளிகள் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் படிக்க நேர்ந்தது.
1. http://nvshq.org/downloads.php 2015-2016 க்கான நவோதயா பள்ளி அறிக்கை
2. http://niti.gov.in/writereaddata/files/document_publication/report-nvs.pdf மார்ச் 2015 நவோதயா பள்ளிகள் பற்றிய மதிப்பாய்வு [2006-2007 to 2011 – 2012]
தாங்கள் இது பற்றி அறீவீர்கள் என்று நம்புகிறேன்.
ஒட்டுமொத்தமாக அறிக்கைகள் இப்பள்ளிகளைப்பற்றி ஒரு நேர்மறை கண்ணோட்டத்தையே உருவாக்குகிறது.மகிழ்ச்சி. நவோதயா பள்ளிகளுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டியது முக்கியம்.
இது தொடர்பான அவதானிப்பும் கேள்வியும் கீழ் வருமாறு:
உறுத்திய விஷயங்கள் பற்றி மட்டுமே கீழே :-(
1. நவோதயா பள்ளி அறிக்கையில் {SC + ST} : பொது மாணவர்கள் விகிதாச்சாரமும்,கிராம நகர மாணவர்கள் விகிதாச்சாரமும் ஆரோக்கியமானதாக இருப்பினும், நிதி ஆயோக் மதிப்பறிக்கையில் குறிப்பிடப்படும் மாணவர்களின் பொருளாதார பின்புலம் பற்றிய குறிப்பில், மாணவர்களின் பெற்றோர் சராசரி வருட வருவாய் Rs.173,124, பெரும்பாலானோர் மத்திய வருவாய் பெரும் குழுவில் அடங்குவர் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளோர் பயன்பெறும் மாணவர்கள் சதவீதம் 14.85 % என்று உள்ளது. [பக்கம் 67,68 படம் 12.1]
No of Functional JNVs 591
No of students on Rolls 247,153
Boys 61.12% 151,071
Girls 38.88% 96,082
Rural Students 78.33% 193,600
Urban Students 21.67% 53,553
General Students 55.79% 137,876
SC Students 25.77% 62,204
ST Students 19.05% 47,073
[as of மார்ச் 2016]
2. மேலும், மதிப்பாய்வு அறிக்கையில், கற்பிக்கும் பணி தவிர்த்த பணிச்ச்சுமை+ ஒய்வு ஊதியம் பற்றி பள்ளி ஆசிரியர்களின் கருத்துக்கள் பாசிட்டிவ் ஆக இல்லை. [பக்கம் 53-54 படம் 10.5,10.6 மற்றும் 97-98]
3. நவோதயா SMART பள்ளிகளின் தரம், மற்ற நவோதயா பள்ளிகளை விட சொல்லிக்கொள்ளும் மேம்பட்டு வகையில் இல்லை [பக்கம் 96].
591 நவோதயா பள்ளிகளில் 33 SMART பள்ளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. [கணினியும் தொடு திரையும் மட்டுமே தரத்திற்கு உத்திரவாதமில்லை என்று கொள்ளலாமா?]
4. மாணவர்களின் திறன் அடையாளம் கொள்வதில் , குறிப்பிட்ட ஆசிரியரின் தனிக்கவனமே மிக அதிக பங்கு வகிக்கிறது (42%) [பக்கம் 51,படம் 10.3]. எனினும், ”நிரப்பப்படா ஆசிரியர் பணியிடங்கள்” [பக்கம் 49 படம் 10.1] அதிகம் உள்ளது பள்ளி நோக்கத்தைப் பாதிக்கும் அல்லவா ?
நேரம் இருப்பின் தங்கள் கருத்தை பகிரவும்.
நிற்க..
பக்கம் 102, குறிப்பிடப்பட்ட நவோதயா பள்ளி மேம்படுத்தலுக்கான ஆலோசனை [Involvement of Panchayati Raj Institutions / Local Bodies for Various Support] காமராஜரையும், நெ.து.சுந்தரவடிவேலு அவர்களையும் நினைவு படுத்தியது.
முதன்முதலில் ஒரு கிராம சபை முன்னெடுத்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உணவு அளித்து, மதிய உணவு திட்டத்தை ஒரு மாடல் ஆக உருப்பெற காரணமாக அமைந்தது ”நாகலாபுரம்” என்ற தென் தமிழக கிராமம் என்ற தகவலும், மேலதிகமாக அது ஒரு நாயக்க கிராமம் என்றால் ”நாம் டமிலர்கள் ” என்ன சொல்வார்களோ என்ற பயமும் உள்ளது. [தகவல் தவறெனில் திருத்திக்கொள்கிறேன்] :-)
நன்றி.
September 19, 2017 at 14:56
Sir, RC – I had gone thru these documents.
Thanks for sharing your pointers. I will not dispute NITIaayog report – but actually visiting many schools and talking to jnv teachers and kids and a few of the parents at least does help; when you note that the salary of 173k pa translates to a mere Rs. 14,000 per month and if you have 4 to five mouths to feed, it still is difficult. Even in Sukma or in Bastar. Numbers are necessary to understand but they are not necessarily sufficient to interpret the whole gamut of ideas. For example, no one, not even these reports – covers or talks about the positive influences these jnvs have on the local communities.
Anyway, will revert in detail later – may be in the next few days please!
Feeling exhausted after that #iamNOTgowri rant.
September 23, 2017 at 02:32
anyway JNVs at present in itself is leaps and bounds better than any govt school in tamilnadu. will help a lot for the rural and scheduled communities of the state and also people who r from the marginal sections of the society. there is scope for improvement nevertheless but it will take time and is a continuous process.