விடுதலை வீரமணி: அவசரத் தேவை! எனக்கு உடனே உதவவும்!

September 11, 2017

என்னாலேயே நம்பமுடியவில்லை. மானமிகு வீரமணி அவர்கள் சார்பாக, கேடுகெட்ட நான்போய் இப்படியொரு கோரிக்கையை வைப்பேனென்று. :-( ஏனெனில் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை. :-((

ஆனால் அய்யா, ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உதவிக்கொள்ளத்தானே நாமெல்லாம் இருக்கிறோம், சொல்லுங்கள்? நம் புறநானூறு அகநானூறு நடுநானூறு எல்லாம் நமக்கு இப்படித்தானே சொல்லிக்கொடுத்திருக்கின்றன?

திராவிடனுக்குத் திராவிடன், இப்படியொரு சின்னஞ்சிறு உதவியைக்கூடச் செய்யாவிட்டால் நம் இனமானம் என்னாவது, சொல்லுங்கள்?

-0-0-0-0-0-0-0-

ஆதாரம்.

அவரே வாயுவிட்டு இப்படி உதவி கேட்கிறார் என்பதால், உடனடியாக அவருக்கு உதைவ முடியுமா?  இவருக்கு புத்தி பேதலித்துவிட்டதால், ஏதாவது மனோதத்துப்பித்துவக்கார உதவியையாவது இவருக்கு நல்க முடியுமா?

சவப்பெட்டி கிவப்பெட்டி என்று மானாவாரியாகவும் ஆணித்தரமாகவும் சவடால் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார் வேறு!

என் மசுர்க்கூச்செறிதலுக்கு அளவேயில்லை! :-(

தலைப்பைப் படித்ததும், என்னவோ இரு சவப்பெட்டிகளுக்கு ஆணி அடிக்கப்போகிறார் என நினைத்தேன். ஆனால் உள்ளே படித்தால், ஒரே சவப்பெட்டிதானாம்! இது என்ன கஞ்சத்தனம்?

…அல்லது அதற்குள்ளேயே ஒரு சவப்பெட்டி திராவிடத்தனமாக லவட்டப் பட்டுவிட்டதா? ஐயகோ!

ஒரு அப்பாவிச் சிறுமியின் அகால இறப்பை வைத்துக்கொண்டு பிணந்தின்னிக் கழுகு வியாவாரம் செய்வதென்றால் அதனை முழுவதும் சரியாகச் செய்யவேண்டாமா? இப்படியா ஏதோதானோவென்று இருப்பது, சொல்லுங்கள்?

சரி, வயதான காலத்தில் ஏதோ உளறிவிட்டார் என விட்டுவிடலாம் எனப் பார்த்தால்.. தமிழகத்தையே மண்ணோடு மண்ணாக்க இப்படியா திராவிடச் சாபம் கொடுப்பது?

-0-0-0-0-0-

இவர் சொல்வதைப் பார்த்தால்,  சுயசிந்தனையுடன் கொடுத்துள்ள தன்னிலை வாக்குமூலத்தைப் பார்த்தால்:

பெரியார் மண்! (ஈவெரா அவர்களுடைய சொத்துகளையெல்லாம் அனுபவித்துக்கொண்டு இப்படியா சொல்வார் ஒருவர்?)

அதுமட்டுமல்ல:

திராவிட இயக்கம் மண்!

அண்ணா மண்!

இப்படியெல்லாம் மண் என்று சொல்வதற்கு, விடுதலை வீரமணி அவர்களுக்கு கொஞ்சம் தெகிர்யம் தாஸ்தீதான். அய்யா, ஸப்பாஷ்! :-)

-0-0-0-0-0-0-

என்ன சொல்லவருகிறேன் என்றால் – இனமான அடலேறுகளெல்லாம், உடனடியாக வீரமணியாருக்கு உதவிடவேண்டும் என்பதைத்தான்.

நன்றி.

 

4 Responses to “விடுதலை வீரமணி: அவசரத் தேவை! எனக்கு உடனே உதவவும்!”

  1. vaidy Says:

    இந்த திராவிடக் குஞ்சுகள் எப்பொழுதும் “எங்களை முதலில் பலி கொடுப்போம் ” என்று கூவி விட்டு கத்தியைக் கண்டவுடன் மாயமாய் மறைக்கிறார்கள். நானும் 50 வருடமாக ஒரு ஒரிஜினல் திராவிட தலை பலியாவதை காண காத்திருந்ததுதான் மிச்சம். 65ல் ஒரு அனாமத்து.இன்று ஒரு அனிதா அனால் என்றும் நிரந்தரமாக கொள்ளையடிப்பவர்கள் பதவியில். தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா!


    • :-( அய்யா, உண்மைதான்.

      ஆனால், பாவப்பட்ட ஆனால் மூளையற்ற தொண்டர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் டார்வின் அவர்கள் சொன்னபடி – survival of the fittest or the death of/to the idiots, what else!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s