தொல். திருமாவளவன் அவர்கள் ஒரு போலி என்றறிக; ஊக்கபோனஸாக, ஊடகப்பேடிகள் கடைந்தெடுத்த போலிகள் என்பதையும்…
October 1, 2017
கருத்துரிமை, பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா வாய்ப்பேச்சு.
…விடுதலைச் சிறுத்தையானது விடுதலைப்புலி பிரபாகரனாக மினுக்கவேண்டி வரிகள் போட்டுக்கொண்டு பின்னதற்காக ஃப்ளெக்ஸ் தட்டி பஜனை செய்து + அடங்கமறு அத்துமீறு திருப்பியடி திமிறியெழு உச்சாடனங்கள் செய்து + பொறுப்பற்று (பிற சமூகங்களுக்கான பொறுப்புணர்வு என்பதையே விடுங்கள், தம் சமூகத்தையே வெறுப்பிய முட்டுச்சந்துக்கு அழைத்துச்சென்று) அடாவடி அரசியல் செய்து இப்போது, அம்பேட்கர் வெறுத்த இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் கைகோர்த்துக்கொண்டு விடுதலைக் கழுதையாகியுமாச்சு!
வாழ்க!
தமிள் தேசியமிஸத்தை நன்றாகக் கொதிக்கவைத்து, அம்பேட்கர் கருத்துகளைக் கிள்ளிப்போட்டு, அதனுடன் (ஆச்சரியத்தக்கவகையில்) பெரியார் வெங்காயத்தையும் வெறிப்ரேண்ட் இஸ்லாமியப் பூண்டையும் மணக்க மணக்கச் சேர்த்தால் – சுடச்சுட அரசியல் வ்யாவாரம் அமோகமாகத் தயார்!
-0-0-0-0-0-
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரப்போகிறார்கள் எனக் கரித்துக்கொட்டுகிறார்கள்; என் செல்லங்களில் ஒருவரான விடுதலை வீரமணி முதல் பலப்பலர் பயப் பிராந்தியில் பினாத்துகிறார்கள்…
ஹ்ஹ, அவர்களால் எங்களை என்ன செய்துவிடமுடியும் என வீராப்பும் பேசுகிறார்கள் சில பிற அரசியல்வாதிகள்.
ஏனெனில், சினிமா நடிகர்கள் (படங்களில்) வேடம் போடுவதோடு பெரும்பாலும் விட்டுவிடுவார்கள்; பொதுவாழ்வில் அவர்கள் அளவுக்கு மீறி நடிக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு இயல்பாகவே அசட்டுக் களை தட்டிவிடும், பாவம்.
ஆனால், அளவிலா பம்மாத்துடையார்களான நம் செல்லத் திராவிட அரசியல் வாதிகள் அப்படியல்லர்; அவர்களுக்கு விதம் விதமாக வேடங்கள் போட்டுக்கொண்டு மினுக்குவதில் கூச்ச நாச்சமேயில்லை.
இங்குதான் வருகிறார், தொல். திருமாவளவன் அவர்கள்!
-0-0-0-0-0-0-
அரேபியப்பகுதிகளில் பிரபலமான ‘மூன் டிவி’ எனும் இஸ்லாமிய பக்தி தமிழ் சேன்னலும் – இஸ்லாமிய அடிப்படைவாதி ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கட்சியும் + ஏதோவொரு ஊடகப்பேடியமைப்பும் இணைந்து – அம்மணி கௌரி லங்கேஷ் அவர்களின் திவசத்தைக் கோலாகலமாகக் கொண்டாடி – கௌரியின் படத்தை வைத்து அஞ்சலி ஆறலி எனச் செலுத்தி க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரி. அவரவர்களுக்கு அவரவர் வ்யாவாரம். பம்மாத்து. மன்னிக்கவும் – கௌரி பிணம் ஒரு மூலதனம் என்பதை மறந்துவிட்டேன். இதில்போய் அந்த அம்மணி ஐரொம் ஷர்மிளா.
ஆதாரம்: தஹிந்து தினசரிச் செய்தி
ஜவாஹிருல்லாஹ் + திருமா சிரித்துக்கொண்டே கௌரியின் கொலை பற்றிப் பேசுகிறார்கள்…(ஆதாரம்)
இவருடைய நீலிக் கண்ணீரில், ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்: “When there is no freedom to even voice your views, I begin to wonder if we are living in a democracy at all.” அண்ணாத்தை என்ன சொல்கிறார் என்றால் -‘கருத்துகளைச் சொல்லக்கூடச் சுதந்திரம் இல்லையென்கிற போது, எனக்குத் தோன்றுகிறது – நாம் ஒரு ஜனநாயகத்தில்தான் இருக்கிறோமா?‘
ஏனெனில், திருமாவளவன் அணியும் பலப்பல வேடங்களில், அவருக்குப் பிடித்தமானது இரட்டைவேடம்.
இதுவும் அரசியலில் பொதுவாகவே சாதாரணவிஷயம் என்றாலும், இவர் தன் அளவுக்கும் மீறி, என் செல்ல நடிகர்திலகமான சிவாஜி கணேசன் அவர்களுக்கு மிகையாகவே நடித்து விடுகிறார். இதுதான் பிரச்சினை.
-0-0-0-0-0-0-
ஸெப்டெம்பர் 2005 வாக்கில், ஒரு விடுதலைச் சிறுத்தைக் கூட்டமொன்றில், அதன் ஆதரவாளரான டைரடக்கர் தங்கர் பச்சான் அவர்கள் – தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றிப் படுகேவலமாகப் பேசினார். ஆனால் நடிகர் சங்கம் (South Indian Film Artistes Association – SIFAA) இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து (ஆச்சரியம்தரும் விஷயமிது!) தங்கர் பச்சானைக் கட்டாயப்படுத்தி நேரில் வரச்சொல்லி, அவரிடம் ஒரு மன்னிப்பை வாங்கிக்கொண்டது.
ஆபாசமாகப் பேசுவதும், படுகேவலமாகப் பெண்களைக் குறிப்பிட்டுப் பேசுவதும் திருமாவளவனிடமிருந்து தங்கர்பச்சான் வரை – அக்கட்சியினருடைய திராவிடப் பாரம்பரியத்தின்படி ஒரு சாதாரணமான நடைமுறைக் கருத்துரிமை விஷயம்தான் என்பதால் – இந்தக் கட்டாய மன்னிப்புக்கோரல் விடுதலைச் சிறுத்தைகளைப் ‘புண்’படுத்திவிட்டது.
அடுத்த சிலவாரங்களில், ஒரு டீவி நிகழ்ச்சியில் (என நினைவு) – இந்த குஷ்பூ அம்மணி பெண்ணுரிமை குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தார்; அதன் சாராம்சம்: ஒருவரையொருவர் விரும்பும் ஆணும்பெண்ணும், திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொண்டால், அது தகுந்த பாதுகாப்புடன் கையாளப் பட்டால், அது ஒப்புக்கொள்ளக் கூடியதே!
அவ்வளவுதான், ஒழுக்கவியல் திலகங்களான திருமாவளவன்களுக்குக் கோபம் வநதுவிட்டது. அவர் சொன்னதன் சாராம்சம்: ‘நடிகர் சங்க அங்கத்தினர்களில் ஒழுக்கத்தை விட, தமிழர்களின் ஒழுக்கம் குறைவானதல்ல; குஷ்பூ மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகர் சங்கம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையானால், தன் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபடும்!‘
சரி.ஆனால்ஆகவே பிள்ளைகள் பதினாறடி பாய்வார்கள்.
ஸெப்டெம்பர் 25, 2005 அன்று அவருடைய சிறுத்தைக் குளுவான்கள், நடிகர் சங்க அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் செய்து – செருப்புகளுடனும் துடைப்பங்களுடனும் அலுவகத்தில் நுழைந்து அராஜகம் செய்தனர். ‘குஷ்பு, தமிழ் இனமானத்தைக் கேவலப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல்!‘
அச்சமயம் – பொது மேடைப்பேச்சுகளிலும் தொலைக்காட்சி விவாதங்(!)களிலும் மறுபடியும் மறுபடியும் திருமாவளவன் சொன்னதன் சாராம்சம் + என் குறிப்பு: ‘திருமணம் எனும் பாரம்பரியத்தை குஷ்பூ கேவலப்படுத்திவிட்டார். திருமணத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். அதாவது, பெண்கள் ‘கற்புடை மகளிராக’ இந்தத் திருமணத்துக்கு வந்து சேர்ந்தால் தான் நம் பாரம்பரியம் உருப்படும்; திருமணத்தின்போது ஒரு ஆணால், தன்னை மணந்த பெண்ணின் கற்பினை உறுதிசெய்யப்பட முடியாது என்றால், நம் பாரம்பரியம் பாதிக்கப்படும், …‘ வகையறா.
(பால்முர்ளி நட்ராஜன் (இவர் ஒரு மானுடவியலாளர், ஆஸிம்ப்ரேம்ஜி பல்கலைக்கழகப் பேராசிரியர்) அவர்களின், முக்கியமான ‘The Culturalization of Caste in India: Identity and Inequality in a Multicultural Age‘ (Routledge Contemporary South Asia, 2013) புத்தகத்திலிருந்து)
சரி…தலைவனே இப்படிச் சொல்லிவிட்ட பிறகு குளுவான்கள் என்ன செய்வார்கள்? ஊர் ஊராக குஷ்பூ மேல் காவல்துறையில் விசாரணைக்குக் கேட்டு, வழக்குத் தொடர்ந்து – அவர் போகுமிடமெலாம் செருப்பையும் துடைப்பத்தையும் காட்டி – மாதக் கணக்கில் தமிழகத்தையே நாற அடித்தார்கள். அசிங்கப் படுத்தினார்கள்…
குறிப்புகள்: 1. இந்தப் பேடி நடிகர்சங்கம் குஷ்பூ அவர்களுக்கு உதவியாகப் போகவில்லை என்றும் என் நினைவு; 2. என்னைப் பொறுத்தவரை கௌரிக்கும் சரி, குஷ்பூக்கும் சரி, எனக்குமே சரி – கருத்துரிமை, கருத்தரிப்புரிமை இன்னபிற உரிமைகளும் அதனைப் பொறுப்புணர்ச்சியுடன் வெளிப்படுத்தலும் முக்கியம். கௌரி அவர்கள் குறித்த இரங்கல்(!) கட்டுரையிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். நியாயமாகப் பார்த்தால் திருமாவளவனின் கருத்துகளும் இப்படித்தான் இருக்கவேண்டும்!
-0-0-0-0-0-0-
போலி திருமாளவன்களின் சிறுத்தைஸ்ம்ருதியிலுள்ள சில ‘கோட்பாடுகள்’ என்னவென்றால்.
- அரசியல் அடாவடித்தனங்களுக்குத் தேவையென்றால் பாரம்பரியத்தை வலுக்கட்டாயமாக இழுத்து எங்கள் மனம் போன போக்கில் பயன்படுத்திக்கொள்வோம். இல்லையேல் வழக்கம்போல இழிப்போம். எது எப்படியோ – வாயில் நுரை தள்ள, வெறுப்பியப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
- குஷ்பூவுக்குக் பேச்சுரிமை இல்லை – மிகக் கண்ணியத்துடன், ஒரு புத்திசாலிப் பெண்மணி, அடிப்படை உளவியல்-உடலுறவு தொடர்பான விஷயங்களைப் பற்றி சிலபல கருத்துகளைத் தெரிவித்தால் – அது பச்சைத் துரோகம். தமிழ் இனமானம் கத்திக் கப்பலேறிவிட்டது. (ஆனால் நாங்கள் கருத்துரிமைக்கு எதிராக – கொச்சைத்தனமாக ஆர்பாட்டம் நடத்துவோம்; தொடர்ந்து, பாலுறவு தொடர்பான வக்கிரப்பேச்சுகளை மேடையில் – அனைவருக்கும் கூசும்படிக்குப் பேசுவோம்; அராஜகம் செய்வோம்!)
- கௌரிக்குப் பேச்சுரிமை இருக்கிறது – மிகக் கொச்சைத்தனமாகவும் மேம்போக்காகவும் வசைபாடும் ஒரு அரைகுறைப் பெண்மணி, வாழ்நாள் முழுவதும் வெறுப்பியப் பிரச்சாரம் செய்துவந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டதனால்மட்டுமே – அவர் போற்றத்தக்கவர். (ஆகவே நாங்கள் கண்ணியமான மதவாதிகள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துரிமையின் முக்கியத்தைக் குறித்தும், நம் ஜனநாயகத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் நீலிக்கண்ணீர் வடிப்போம்! நன்றி! நன்றி!! நன்றி!!!)
-0-0-0-0-0-
திருமாவளவன் – மேதாவித்தனமாகவும் மனிதவுரிமைத்தனமாகவும் கௌரிலங்கேஷ் இறப்பு குறித்து ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனத்துடன்’ பேசியபோது – அவருக்குக் கூசவில்லை. ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி. ஆக, அவருடைய கூச்சமற்ற நாக்கு அப்படியும் இப்படியும் சுழலலாம்.
சரி. எனக்குத் தெரிந்த சிலர் சொல்வது என்னவென்றால், அவர் ‘தனிப்பட்ட முறையில் பண்பாளர்’ வகை சால்ஜாப்புகள்; பிரச்சினையென்னவென்றால் எனக்குச் சத்தியமாக, ‘தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர்’ ஆனால் ‘கோபம் வந்தால் கற்பழித்துவிடுவார்’ வகைக் கருத்துகள் ஒத்துவரமாட்டா; மன்னிக்கவும். என்ன சொல்லவந்தேனென்றால் – அப்படி அவர் ‘தனிப்பட்ட முறையில் பண்பாளர்’ என்றால் – பகிரங்கமாகத் தன் தவற்றுக்கு, அயோக்கியத்தனத்துக்கு, குஷ்பு அவர்களிடம் மன்னிப்பு கேட்பாரா?
குஷ்பு அவர்கள் இப்போது காங்கிரெஸ் கட்சியில் இருக்கிறார் என நினைக்கிறேன். ஆக, தமிழகக் காங்கிரெஸ்காரர்கள் – அவர்களும் மனித வுரிமைக்காரர்களாகவும், கௌரிபிணமூலதனவாதிகளாகவும் இருப்பதால் – குஷ்புவிடம் திருமாவளவன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனச் சொல்வார்களா?
ஏன், திருமாவளவனின் – சீருறும் சிறசெருப்புமாக வாழும் சிறுத்தைத் தொண்டர்கள் தங்கள் தலைவனுக்கு – அடிப்படைப் பண்பையும் நேர்மையையும் போதிப்பார்களா?
அடிமட்டத் தொண்டர்களையே விடுங்கள் – அக்கட்சியில் ஓரளவு படிப்பாளிகளாகவும் அறிவாளிகளாகவும் இருக்கும் ‘நிறப் பிரிகை’ ரவிக்குமார் போன்றவர்கள் தம் தலைவனின் இரட்டை நாக்குப் போக்கைக் கண்டிக்கவேண்டாமா? அறச்சீற்றம் எல்லாம் ஊரானுக்குப் போதனைதாம் போலும்… இந்த அழகில் முழ நீளத்துக்கு மனிதவுரிமை மசுத்துரிமை எனப் போஸ்டர் ஒட்டி அனுதாபம் தேடவும் எச்சில் தெறிக்கப் பேசவும்தான் லாயக்கு!
எனக்குத் தெரிந்து ஒரு ஊடகப்பேடி கூட – இந்த திருமாவளவனின் அருவருக்கத்தக்க இரட்டை வேடத்தைக் குறித்து, இதுவரை ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை. இப்பேடிகள் கேட்கவும் மாட்டார்கள் எனத் தெரியும்.
ஏனெனில் – இப்பேடிகளுக்கு வரலாற்று அறிவு, ஹோம்வர்க் பற்றி ஒரு மசுரும் தெரியாது – மேலும் பப்பரப்பாக்களுக்குப் பின் நாய்கள் போல அலைகிறவர்கள். கவர் வாங்கிக்கொண்டு, ‘ப்ரெஸ் கிட்’ எழவுகளை வைத்தே தங்கள் பத்திகளை ஒப்பேற்றிவிடுபவர்கள். ஆகவே இந்த ஜந்துக்களைப் பார்த்து, ‘கொஞ்சமாச்சும் நேர்மையாக இருங்கடா’ என என்னால் சிரிக்காமல் சொல்லமுடியாது.
-0-0-0-0-0-0-
October 1, 2017 at 12:12
அரசியலை விவரம் தெரிந்தவர்களுக்கு விட்டுவிடுகிறேன்.
ஆனால் சார், அந்த போட்டோவில் திருமாவுக்கு அருகில் வரலாற்றாய்வாளர் சஞ்சய் சுப்ரமண்யம் சாயலில் இருப்பது அவர்தானா? இல்ல, என்னோட கண்ணு போயிடுச்சா? ஹிண்டு ஸ்டாஃப் ரிப்போர்ட்டர் கண்டுக்கவே இல்லையே?
October 1, 2017 at 16:32
Sir, I do not know who that chap is either! Sorry!
October 1, 2017 at 20:22
அதெல்லாம் சரிங்க. பாக்யராஜ் என்ன அங்கே செய்கிறார்?
October 1, 2017 at 20:29
அவர் பாக்கியராஜா? அந்த மனிதர் ஏதோ மூன் டீவி ஆசாமி என்றல்லவோ நினைத்தேன்?
October 1, 2017 at 15:02
நன்றி அய்யா.
தங்கள் புண்ணியத்தில், பதிவுச்சுட்டி பின் தொடர்ந்து இந்த பதிவைப் பார்க்க நேர்ந்தது.நன்றி. [https://kafila.online/2014/02/18/of-khap-and-aap-eight-myths-about-culture-and-caste-n-balmurli/ ]
திரு.பால்முர்ளி நட்ராஜன் அவர்களின், ”சாதி – கலாச்சாரம்” தொடர்பான பொதுப்புரிதல்களை [கட்டுக்கதைகள்/பழங்கதைகள் ] பற்றியதான கட்டுரை. பொதுவில் புழங்கும் பொருள் தாண்டி வேறோர் கோணத்தில் பார்க்க உதவியது.
அது போக, அந்த தளத்தின் பெயர் ‘kafila’ அருமையான அரபி பெயர் இல்லையா?
திருமாவளவன் கூட ”பெத்தபெயர்” தான், ஆனால் ..என்று நீங்கள் கேட்க ஆரம்பிக்கும் நான் ஓடிவிடுகிறேன்.
”அடங்க மறு அத்து மீறு” காலத்திலே இருந்து ரொம்ப தூரம் வந்துட்டாருங்க என்ற பிம்பம் சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல்களில் [one- one] அவர் உரையாடும் விதம் பார்த்து பொது சமூகத்திற்கு உள்ளது. எனக்கும் அவ்வாறே..[சரியோ தவறோ அடித்தொண்டையில் இருந்து வரும் சொற்களுக்கான காப்புரிமை இப்போது சீமானிடம் தானே உள்ளது !]
உங்கள் பதிவுகள் மாற்றுக் கோணத்தை முன் வைக்கின்றன.நன்றி.
கொஞ்சம் பாத்து பண்ணுங்க அய்யா. இன்னும் கொஞ்சம் காலம் கொடுப்போம்.
நன்றி.
October 1, 2017 at 16:30
Thanks RC, about Balmurli Natrajan & Kafila,
I do not fall hook, line and sinker for these folks. Sometimes I violently disagree with them too. But they definitely offer a good PoV. They are well read, to start with.
For example, I do not agree with BN’s take on khaap panchachayats.
These differences happen may be, because reading Sri Dharampal more than 3 decades back or so was a MAJOR eye opener for me. I do not relate much to jargon mongering and looking at India from western categories of knowledge.
__r.
October 1, 2017 at 20:43
நல்ல வேளை..தப்பித்தேன் “போய்யா வெங்காயம்” என்ற தங்களின் எதிர்வினை எதிர்பார்த்தேன்.
“jargon mongering” வெங்காய உரிப்பு தான் எனினும், அவ்வகை ஈர்க்கத் தான் செய்கிறது.
எங்கவூர் ”சொதி” குழம்பு [coconut milk stew] சாப்பாட்டோடு இஞ்சி துவையலும் வைப்பார்கள் செரிமான சமனத்துக்கு . [குழம்பில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் அதிகம் சேர்ப்பார்கள் ..அது தனி]
ஆனால் “counter balance” கருத்துக்கு இன்று பஞ்சம் இருப்பதாகவே நினைக்கிறேன்.
ஃபொக்காச்சியா ப்ரெட் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பூண்டு/வெங்காய ப்ரெட் வகை எனக்கு உவப்பானது.[ஆனால் வீட்டுச் சமையலில் அல்ல, papa johns தான்].தங்கள் புகைப்படப் பதிவு சமையல் செய்யத் தூண்டுகிறது. நன்றி.
October 1, 2017 at 17:23
திமிறா டேய்? கைஅய ஒடச்ச்சுடுவோம் வெச்சி செஞ்சிருவோம் சாக்கரதை
ஸ்டாப் நான்சென்ஸ்
October 1, 2017 at 18:58
போடா புண்ணாக்கு, ஜிஹாதி அரைகுறைளையே பார்த்துவிட்டேன். உன்னைப் போல் அனாமதேய அரைகுறைகளிடம் எனக்கு ஒரு பிரச்சினயும் இல்லை. தொடர்ந்து குரைக்கவும்.
பிகு: ‘வெச்சி செஞ்சிருவோம்’ என்றால் எனக்கு என்னவெனப் புரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, நன்றி! (திட்டும்போது திட்டப்படுபவனுக்கு அது திட்டல் எனப் புரிந்தால்தானே உங்களுக்குத் திருப்தி?) ;-)
பிகு2: தமிழில் நாலு வார்த்தைகளை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொண்டு பழகவும்; பின்னர் சாவகாசமாக, உளறல் பின்னூட்டங்களை இடலாம், சரியா?
October 1, 2017 at 20:21
பெயர் இட தைரியமில்லை. கையை உடைப்போம். காலில் விழுவோம் என அதட்டல் வேறு.
October 1, 2017 at 20:26
அய்யா மஹாபிரபு! இம்மாதிரிப் பின்னூட்டங்கள் அவ்வப்போது வரும். பொதுவாக இவற்றை அகற்றிவிடுவேன் – ஆனால் நகைச்சுவைக்காக என்று இப்படி எப்பவாவது இப்பின்னூட்டங்களும் வெளியிடப்படும். இதற்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் சும்மா படித்துச் சிரிக்கவும். :-)
October 1, 2017 at 19:22
இவர் பற்றி சமஸ் எழுதிய கட்டுரையை படித்து விட்டு கொதித்த எனக்கு இந்தப் பதிவு ஆறுதலாய் இருந்தது. நன்றி
October 1, 2017 at 20:20
நீங்கள் ஏன் அங்கெல்லாம் போகிறீர்கள்? இந்த சமஸ் அவர்கள் பலமுறை உளறிக்கொட்டியிருப்பதைப் பார்த்து அவர் கிட்டவே போவதில்லை; நகைச்சுவை வேண்டுமானால் விடுதலை.இன் தளத்திற்குப் போகவும். சிரிப்பு கியாரண்டி.
October 1, 2017 at 21:19
அய்யா,
திரு.சமஸ் அவர்கள் கடலோடிகள் பற்றிய தன் கட்டுரைக்காக தென் தமிழக பகுதி வந்தபோது [2014 என்று நினைக்கிறேன்] , என் நண்பரொருவர் இவரிடம் உரையாடி இருக்கிறார்.பேசிய வரையில், அவரின் வயதுக்கு அலைச்சலும்,யோசிப்பும் சராசரிக்கு அதிகம் தான். ”யுவகிருஷ்ணா வகை ஆய்வு எழுத்துக்கு’ சொந்தக்காரர் அல்ல. இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களாக, அவரின் கள அனுபவமும் மீறி, கற்றுக்கொண்ட/படித்த சித்தாந்தம் [திராவிட /கம்யூனிச] அவரின் எழுத்தை ஆக்கிரமிக்கின்றதோ என்ற எண்ணம் எனக்குண்டு. அதற்கு மேல் சொல்ல, அவரின் முந்தைய கட்டுரைகளின் தரம் மற்றும் நேர்மை என்னை அனுமதிக்கவில்லை.
அனுபவம் ஏதும் அற்ற வாசகர்களாகிய என்னைப் போன்றோர், இவ்வகை வீழ்ச்சிகளை காண நேர்வது சாபக்கேடின்றி வேறன்ன!
October 2, 2017 at 16:59
ஐயா,
இந்த ஜோதியில்! புதிதாக இணைந்திருப்பவர்.நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள்.கௌரி லங்கேஷ் விஷயத்தில் பிரதமர் மோதி அவர்கள் இன்னும் மௌனமாக இருந்து அவரைக் காட்டிலும் பெரிய நடிகரென்று நிரூபித்து வருகிறாராம்!.இது தொடர்ந்தால் அவர் வாங்கிய தேசியவிருதுகளைத் திருப்பித்தரவும் தயங்கமாட்டாராம்!!.(இந்தியக்கூரையின் கீழ் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் மோதி மட்டும் தான் காரணம்?)சற்று கூறுள்ள நடிகர் இவரென்று நினைத்தேன்…
October 5, 2017 at 06:08
Sir, actors generally make fashion and fashionable statements. Don’t worry, okay? :-)
October 2, 2017 at 20:56
அய்யா,
திரு.ஜெயமோகன் அவர்கள் தன் கட்டுரை ஒன்றில் திருமாவளவன் பற்றி எழுதிய குறிப்பு காண நேர்ந்தது இன்று. உயர்வு நவிற்சி தவிர்த்து குறிப்பில் தகவலை மட்டும் கவனித்தால் திருமா மீது நம்பிக்கை கூட்டக்கூடியது .
http://www.jeyamohan.in/102688#.WdHvcVtL-M8
ஜெ சொல்ற அளவுக்கு திருமாவே தன்னைப்பற்றி எண்ணுவாரா என்பது தான் எனக்கு வர்ற சந்தேகம்.
இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு.
ஜெ பதிவிலிருந்து … // திருமாவளவனின் பேச்சு இரு மைய அழுத்தங்கள் கொண்டது. ஒன்று இந்தியா என்னும் நாடு, இந்தியா என்னும் பண்பாட்டு அமைப்பு வலுவுறவேண்டுமென்றால் தலித்துக்கள் விடுதலையும் முன்னேற்றமும் அடையவேண்டும். அவர்களின் பண்பாட்டுச்சரடு அதில் முக்கியமான இடத்தை அடையவேண்டும். இரண்டு, ஆவணப்படுத்துதல் மொழிப்பதிவாக ஆக்குதல் ஆகியவையே இன்று தலித் இயக்கத்தில் குறையக்கூடிய முதன்மைச்செயல்கள். ஆவணப்படுத்தாமையால் இருக்கவேயில்லை என்னும் நிலை உருவாகிறது. இல்லாத வரலாறுகளை உருவாக்கி எழுதிப்பதிவுசெய்துகொண்டு இருக்கின்றன சாதிகள். இருக்கும் வரலாற்றை தலித்துக்கள் இழந்துகொண்டிருக்கிறார்கள்.//
இச் செய்தி உண்மையெனில், இவ்வளவு தெளிவான கருத்துக்கள் உடையவர் சிற்சில தவறுகளால் மட்டுமே மதிப்பிடப்பட்டு முழுவதுமாக ஒதுக்கப்படவேண்டியரில்லையே !
நிற்க..
ஒரு தலைவனாக மக்களோடு தொடர்பிலும் தொடர் நம்பிக்கையையும் பேண முடிவது அரிய விஷயம்.அறிவார்ந்த ஆளுமை என்ற விஷயம் தாண்டி திரு.கிருஷ்ணசாமி சறுக்கும் இடம் அந்த தொடர்பு இல்லாமை தானே. [கண்டிப்பாக நான் கட்டப்பஞ்சாயத்திற்கோ வேறு எதற்கோ வக்காலத்து வாங்கவில்லை.]
MATRIX என்ற ஆங்கில வணிக வெற்றிப்படம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
”ஆண்டர்சன்” [அல்லது “Neo”] தான் திருமா.
Oracle மற்றும் Architect [ though not in exact film equivalent ] யாரோ எவரோ இருந்துவிட்டு போகட்டும் :-)
பெயரற்ற ”சொங்கி பயல்” [kid] ஒருத்தன் படத்தில் ”Neo” குழுவுக்கு சண்டையில் உதவி செய்வான். அது நான் தானோ?.
ஒப்பீடு சீண்டலாக இருப்பின் மன்னிக்க.
நம்புங்க சார் ..நம்பிக்கை தானே எல்லாம் :-)
நன்றி.
October 3, 2017 at 05:03
Sir RC,
I like my determinants more than the matrix.
Also, I do not agree with Jeyamohan’s irrational takes on insignificant fractions (actually vulgar fractions) and praising of imaginary traits.
I think he has his own convoluted number theory, interpretative proofs and circuitous logic.
With whatever:
i.
October 3, 2017 at 15:35
sounds too complex !!
October 5, 2017 at 06:09
sir, that’s the .
October 3, 2017 at 21:27
I see your point about jayamohan whom I hold in high respect But his “unreasoned” praise for Mr Pinarayi Vijayan took me by surprise. For Mr Vijayan unlike earlier leaders like EMS or Achutha Menon or the Bengali CPM leaders is a double distilled lumpen element not known for integrity.
October 5, 2017 at 06:05
Sir, I have also have respect for Jeyamohan, but generally I qualify it; also value his contributions for a given value of value, mathematically speaking.
…after some 5 decades of existence or so, I have come to the conclusion that – expertise (or critical thinking or depth) in one field does not automatically translate to other fields, but about 99.99% folks do not know it; there is no meta-cognition at all, including in yours truly ignorantly, i…
October 3, 2017 at 07:35
ஹபீபி,
மொத்தப் பதிவையும் தூக்கி ஓரம் வச்சிட்டு, கடைசிப் பின்னூட்டத்தில இருக்கிற மூணே வார்த்தைகளுக்காக பூங்கொத்தும் அன்பும் 🌺💐💐 ..i cant resist my laugh Thanks a lot. சுபம்.
October 5, 2017 at 06:07
habibi? dear, this reminds me of the funda amr diab and his wailing soulful songs… :-)
March 6, 2021 at 09:57
[…] […]