ரஜினி குருதை வண்டி, எம்ஜிஆர் கார், கருணாநிதி சங்கர பாஷ்யம் – குறிப்புகள்
August 28, 2017
பெங்களூரில் வசிக்கும் நண்பர் (=பித்துபிடித்து கார்களைச் சேகரிக்கும் போக்கற்றவர்) ஒருவரின் பண்ணைக்கு, வளர்ந்துகொண்டிருக்கும் கார்ப்பித்துலியலாளனான என் மகனைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். #பெற்றோர்படும்பாடுகளியல்
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அவர் மாய்ந்துமாய்ந்து சேகரம் செய்துள்ள விதம் விதமான பழம் பெரும்கார்கள், பேரீச்சம்பழம் பெரும் கார்கள், பண்டைய லெமூரிய கால திராவிடச் சைக்கிள்கள், ‘சாரட்’ வண்டிகள், சினிமாவில் நடிக்கும் வண்டிகள் – இன்ன பிற.
இந்த போக்கற்ற நண்பருக்கு ஒரு பெரிய்ய்ய கார் ம்யூஸியம் ஒன்றைத் திறக்கவேண்டும் எனவொரு பேராசைக் கனவு – அடுத்த இரண்டுமூன்று வருடங்களில் பெங்களூர் கெங்கேரி பகுதியில் இது நனவாகும்போல இருக்கிறது. பார்க்கலாம்.
இருந்தாலும், பிரபல பாடகரும் தாங்கொணா அறிவுஜீவியுமான மேதகு டிஎம் கிருஷ்ணா அவர்களை விட்டால், கர்நாடக சட்டசபையிருக்கும் விதான சௌதாவின் வாசலில் டப்பாங்குத்து பாடிஆடியே சமூகத்தை முன்னேற்றி விடுவார் எனத்தான் படுகிறது. ஆனால் சென்னைக்கு இருக்கும் வசதிவாய்ப்புகள், பண்பாட்டுப் பருந்துகளின் பராக்கிரமங்கள் – பெங்களூருக்கு லபிக்கவில்லை, பாவம்!
எதுஎப்படியோ – குடி பெருங்கொள்ளை கூத்து வாதிகளான இந்தக் கர்நாடகத் தலீவர்களும் ஆட்டோமேடிக்காக எழுச்சித் திராவிடர்கள்தாம். ஆக… கார்காலம் வரும் வரை காத்துக்கொண்டிருப்போம்.
இந்தப் பதிவானது கார் ம்யூசியம் பற்றியது என்றாலும், இது, தமிழர்களுக்காக ஒரு தமிழனால் எழுதப் படுவதால், தமிழ் இனமானப் பகுத்தறிவு தொடர்புள்ள சில அதிவுன்னதமான கொசுறு செய்திகளைக் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன்.
1. நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் இயல்பாகவே நடித்த (குதிரைகள் பூட்டப்படாத) ‘சாரட்’ வகைக் கட்டைவண்டி ஒன்றைப் பெருமையாகக் காண்பித்தனர். ‘லிங்கா’ என்றவொரு படத்தில் அவருடன் நடிக்கும்பேறு பெற்ற வண்டியாம் இது! ரஜினி அவர்கள் பாதாரவிந்தங்கள் பட்ட இடத்தைப் பார்த்தேன். புல்லரிப்பு.
அவருடைய வணக்கத்துக்குரிய ப்ருஷ்ட பாகங்கள் அமர்ந்த இடங்கள் இன்னமும் கொஞ்சம் அமிழ்ந்துதானிருக்கின்றன என்பதை மானசீகமாக உணர்ந்து எனக்கேதெரியாமல் கன்னடத்தில் போட்டுக்கொண்டேன். எனக்கெதுக்கு வம்பு. ஜெய் கர்நாடகா! இல்லையேல் வத்தல் நாகராஜ் பொரித்தெடுத்துவிடுவார்.
2. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ரோல்ஸ்ராய்ஸ் வண்டியும் பளப்பளாவென நின்று கொண்டிருந்தது.
இதன் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணின் ப்ரபஞ்ச தாத்பர்யம் பற்றி, நண்பருக்கு, வாமனனாகிய நான் அளந்தேன்; அதாவது இந்த 111 என்பது அண்ணா சார்பில், எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்துக்குப் போட்ட நாமத்தின் பின் நவீனத்துவ குறியீடுதான் இது, என்ற உண்மையை சொன்னேன்.
நண்பர் அசந்து போய்விட்டார். எப்படி அய்யா உங்களுக்கு இத்தனை விஷயங்கள் இவ்வளவு ஆழமாகத் தெரிகின்றன என ஒர்ர்ர்ரே தாழ்மையுணர்ச்சி அவருக்கு! பாவம், அவருக்குத் தனக்குத்தானே வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு அதற்கு பதிலையும் எழுதும் வாய்ப்புகள் அவ்வளவு இல்லை போலும்.
இன்னொரு விஷயம்: எம்ஜிஆர் அவர்களின் பிரபலமான, இன்னமும் சமாதிக்குள் சுழன்றுசுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் போல – இந்த ரோல்ஸ் ராய்ஸ் வண்டிக்குள்ளும் தலையை விட்டுக் கூர்ந்து கவனித்தால், அதில் வெகுசாதாரணமாகவே கியர் மாற்றும் சப்தமும், நடு ஜாமத்தில் அந்த வண்டியிலிருந்து ஹார்ன் சப்தமும் கேட்கும் எனச் சொல்கிறார்கள்.
…ஹ்ம்ம்… ஆக திராவிடனாகிய எனக்குத் தூய பகுத்தறிவுரீதியான பேய்பயம் உண்டு – என்பதைச் சக திராவிடரான நீங்கள் அறிவீர்கள்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் – சாதா திராவிடப் பேய்களானால் பரவாயில்லை, தலையைச் சொறிந்துகொண்டு முரசொலியைச் சுருட்டி புட்டத்தில் அடைத்துக்கொண்டு மாமூல் கேட்கும் – எத்தையாவது சில்லரைக்காசு கொடுத்தால், டாஸ்மாக் போய்ச் சரணடைந்துவிடும். ஆனால் இந்துத்துவா ஆரியப் பைசாசங்கள்? இவைகளுக்கு ஆட்சியிலும் பங்கு வேண்டுமாம்! பரதேசிகள்! தமிழகத்தையே முன்னேற்றி நாறடித்துவிடும்கள்.
ஆகவே கொஞ்சம் நடுக்கமாக இருக்கிறது. இதயம் கசக்கிறது. கண் பனித்துக்கொள்வது மட்டுமில்லாமல் சொருகுகிறது. அடிவயிறு கலங்குகிறது. பில்லி சூனியம் திராவிடம் பகுத்தறிவம் அகல கூழ்மோர் காய்ச்சிக் குடிக்கவேண்டும். ஊக்க போனஸாக, வீட்டில் எனக்குச் சுற்றிப்போடச் சொல்லியிருக்கிறேன். வாரறுந்த ஹவாய் செருப்புடன் அரை கிலோ வற்றல்மிளகாயை வறுத்து நாற்சந்தி நடுத்தெருவில் யாரும் பார்க்காதபோது எரிக்கவேண்டும். அது படபடவென்று வெடித்துச் சிதறினாலொழிய என்னைப் போன்ற திராவிடனுக்குப் பயப்பிராந்தியிலிருந்தும் இனமான விஸ்கியிலிருந்தும் விடுதலை பெற வேறுவழியேயில்லை.
இன்றிரவு என் மனைவியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுதான் தூங்கவேண்டும்போல! :-(
-0-0-0-0-0-
எது எப்படியோ – ஜெயலலிதா வண்டி கருணாநிதி வண்டிகளெல்லாம்கூட கூடிய விரைவில் இந்த ம்யூசியத்துக்கு வரலாம் – ஏனெனில் அவரவர் உடன் பிறந்த/பிறவாத பங்காளிகளும், பரம்பரையினரும் போடக்கூடும் சொத்துச் சண்டைகளில் எல்லா விஷயங்களும் சந்திக்கு வந்து சிரித்து – அவர்களுடைய சொத்துகளையே விடுங்கள், அவர்களுடைய கொள்ளைக்காரத் திராவிடக் கட்சிகள் உட்பட, அனைத்தும் ஆடித் தள்ளுபடியில் அமோகமாகக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
… அந்த நாளும் வந்திடாதோ!
ஹ்ம்ம்… என்னுடைய கவலையெல்லாம், கருணாநிதி அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர், பாவம், அவர்தம் பரிசுத்த ஆவி (=horse clean steam ©எஸ்ரா) – மேன்மேலும் சம்பாதிக்க முடியாமல், சமாதிக்குள் சமாதி நிலையில் இருந்துகொண்டே ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்துக்கு ஒரு அமரகாவிய பாஷ்யம் எழுதுவது மட்டுமல்லாமல், அதற்கு மேற்பட்டு ஒரு திரைப்பட வசனத்தையும் எழுதிவிட்டால், அந்தப் படத்தை எப்படி, எம் நண்பர் சீமார் இயக்குவார் என்பதுதான்!
ஆக, இனமான முஷ்டிமைதுனம் செய்தே புஜபலத்தை வளர்த்திக்கொண்ட பராக்கிரமத் திராவிடன், மேற்கொண்டு பகுத்தறிவு பஜகோவிந்த பஜனையைச் செய்து இன்பசாகர ஆரியனாகிவிடுவானோ?
August 28, 2017 at 10:13
oh! my, gear shifting and bulb horn sound coming out of that car ?He is the man.
August 28, 2017 at 12:47
Appa..semma thaleeva..
August 28, 2017 at 20:24
//ஆக… கார்காலம் வரும் வரை காத்துக்கொண்டிருப்போம்.// Poetic …
August 28, 2017 at 22:58
அய்யா,
கன்னடத்தில் போட்டுக்கொண்டேன் எனக்கெதுக்கு வம்பு, பித்தத்தின் பித்தமே மற்றும் பரிசுத்த ஆவி (=horse clean steam ©எஸ்ரா) ..ஹா ஹா
கிறுக்காயி சாரே …
February 14, 2018 at 17:23
[…] ரஜினி குருதை வண்டி, எம்ஜிஆர் கார், கரு… […]