விடுதலைச் சிறுத்தை – சில குறிப்புகள் + ஒரு கருத்துப் படம்
June 19, 2017
விடு தலை சிறு தை = leave head small sew ©பேராசான், 2017. நன்றி.
-0-0-0-0-0-
- திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை! 24/02/2017
- நம் ‘பொறியியல்’ கல்லூரிகள், அவற்றின் லட்சணம், ‘இலக்கியம்’ – சில குறிப்புகள் 20/02/2017
- தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-( 22/02/2017
+ ஊக்க போனஸாக
-
ஜெயமோகனின் பகீர் அவதூறுகள் – சில குறிப்புகள் 06/03/2017
…பாவம் அவர், மூச்சு விடாமல் ஒர்ரே புலம்பல். தம் கட்சியையும் அதன் தலைமையையும் பற்றி அவ்வளவு ஆற்றாமை. திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருந்த கண் தெரியாத கபோதி கடல்பட்டாங்கு இன்னபிற. நானும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
Wisdom is the reward you get for a lifetime of listening when you’d have preferred to talk.
— Doug Larson
சில மாதங்களுக்கு முன்பு, மேதகு சசிகலா அஇஅதிமுக பொதுச்செயலாளராகத் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ உடன், தொல் திருமாவளவன் அவர்கள் அடித்துப் பிடித்துக்கொண்டுபோய் உடனே அவரைப் பார்த்து குசலம் விசாரித்த நாளிலிருந்து தனக்குத் தூக்கமே வரவில்லை என்றார்.
…இது சரிபார்க்கப்பட்ட செய்தியா உண்மையாகவே நடந்ததா என்றால், நிச்சயம் நடந்தவிஷயம்தான் என்றார் – பத்திரிகைகளில் வந்திருந்ததே, பார்க்கவில்லையா? (எனக்கும் இதனைச் சரிபார்க்கத் துப்பில்லாததால் நண்பர் சும்மனாச்சிக்கும் பீலா விடமாட்டாரென்று சமாதானம் சொல்லிக்கொள்கிறேன், சரியா?)
ஆனால், எனக்கு ஒரு அளவுக்குமேல் பிலாக்கணத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை – என்னதான் டக் லார்ஸன் அவர்களேகூடச் சொன்னாலும்… ஆக:
…எவ்வளவோ முறை உங்கள் திருமாவளவனார், கருணாநிதியாரைப் பார்த்துப் பலமுறை பொற்சால்வை போர்த்தியபோதும் வீரமணியார் ஜவாஹிருல்லாவார்களுடன் குலாவிக் கொண்டிருக்கும்போதும் வராத கோபம் – இப்போது சசிகலாவை அவர் பார்க்கப் போனதும் பொத்துக்கொண்டு வருவது நியாயமா என (என் படுசெல்லங்களில் ஒருவரான பூவண்ணனார் கணபதியார் அவர்கள் போல) கேட்டேன். அவர் சிரித்துவிட்டார். ‘திருடர்களிலும் ஒரு ஸ்டேண்டர்ட் உண்டே! ஹைக்ளாஸ் திருடர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டிருந்தால் பரவாயில்லை, ஒப்புக்கொள்வோம்; ஆனால் பிக்பாக்கெட்காரர்களுடன் எதற்கு உறவு?’
சரிதான்! :-)
…பிரச்சினை என்னவென்றால் அய்யா – ஒரு கட்சியை நடத்திச் செல்வதில் இருக்கும் இடியாப்பச் சிக்கல் பணம்+பிணம் சார்ந்த பிரச்சினைகளைப் பெரும்பாலோர் – நண்பரே நீங்கள் உட்பட – அறிவதேயில்லை. தட் தட் கட்சி, தட் தட் பணக் ‘கஷ்டம்.’ தட் தட் பண வரவு, தட் தட் புறங்கைகள் நக்கப் படுதல். இது பெரும்பாலான தமிழகக் கட்சிகளுக்குப் பொருந்தும். திராவிடக் கட்சிகளுக்கு 1000000% பொருந்தும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒரு திராவிடக் கட்சி. வெறுப்புகளையும் உணர்ச்சிகளையும் மோதல்வாதத்தையும் குவித்து அவற்றின் மூலமாக ஊழல்பணத்தையும் அதிகாரத்தையும் அறுவடை செய்ய முனையும் கட்சி, உங்களைப் போல ஓரிரு விதிவிலக்குகள் இருந்தாலுமேகூட இதுதானே உண்மை?
ஆனால் உங்களுடையது ஒரு சிறுகுறுங்கட்சி. ஆகவே, பணரீதியாக பிற திராவிடக் கட்சிகளைப் போல அவ்வளவு வலிமை வாய்ந்தது அல்ல. இந்தக் காரணத்தால் உங்கள் கட்சித்தலைமையை மன்னித்து விடலாமே! பகிரங்கமாக மின்காந்த அலைக்கற்றை ஒதுக்க ஊழற் பணமும், மணல் அள்ள மாமூலும் வாங்கமுடியாத கட்சி இப்படியெல்லாம் நெடுஞ்சாண்கிடையாக விழுதல்களில், சிறு அடாவடிகளில், நகைக்கடைகளை மிரட்டிப் பணம் பண்ணுதலில், சிறு ஊழல்களில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும் அல்லவா? நிதர்சன நிலைகளைப் புரிந்து கொள்ளவேண்டுமய்யா; என்ன உங்கள் திருமா, திருவண்ணாமலையில் பொறியியல் கல்லூரிகல்லூரியாக ஏகேவேலுகள் போலக் கட்டிவிட்டாரா என்ன – பாவம்? அவர் என்னவோ கட்சியின் அன்றாடச் செலவுகளுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக்கொண்டிருப்பவர் தானே! கொஞ்சமாவது அவரைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் நண்பருக்குத் தொடர்ந்து ஆற்றாமை. திடீரென்று நீ இவ்வளவு பேசுகிறாயே, என் கட்சியில் சேரேன்* என்றாரே பார்க்கலாம்! பாவம். தொடர்ந்து – கட்சியின்/பொதுஜனத்தின் மேன்மைக்கு உழைப்பவர்கள் இல்லை – பேச்சுத் துணைக்குக் கூடப் படித்தவர்கள் இல்லை; அப்படி ஓரிருவர் இருந்தாலும் மதிக்கத்தக்கவர்களாக இல்லை என்று புலம்பல் வகையறா. (*என்னுடன் சேர்ந்தால் புத்தி பேதலித்து விடும் என்பதற்கு இதுவும் சான்று, வேறென்ன சொல்ல!)
நான் சொன்னேன் – திராவிடக் கட்சியென்றாலே அப்படித்தான் இருக்கும். அடுத்த பத்தாயிரம் தலைமுறைகளுக்கென கூழுக்கு அலையவும் வேண்டும் ஆனால் கௌரதையாக மீசையும் வேண்டுமென்றால் எப்படி? கொள்கையாவது மசுராவது என ஒரு முடிவுக்கு வந்த பின்னர் — கண்ட கழுதைகளுக்கும் பொன்னாடை போர்த்தி அவர்களுடைய கடைக்கண் பார்வைக்கு, விட்டெறியப்படும் எலும்புத் துண்டுகளுக்கு ஏங்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும்…
அய்யா, நாமெல்லாம் படுசுளுவாக நக்கல் செய்துகொண்டிருக்கலாம், ஆனால் இந்த உதிரிமயமான திராவிடச் சூழ்நிலையில் ஒரு கட்சியை நடத்திக்கொண்டிருப்பது சாமானியமான விஷயமேயல்ல… இதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
…எது எப்படியோ இந்த அரசியல் விவாதத்தை விட்டு முன்னகர்ந்தோம்.
-0-0-0-0-0-
…பலப்பல வருடங்களுக்கு முன் – இளையராஜா அவர்கள் திருவண்ணாமலைக்கு அடிக்கடி வந்து ராம்சூரத்குமாரையும் குஞ்சு சுவாமிகளையும் பார்த்தபோது நடந்த சில சுவாரசியமான கதைகளைச் சொன்னார். ஏனய்யா கூடவே இருந்து பார்த்ததுபோல சொல்கிறீர்களே என்றால், ஆமாம் நானும் இவற்றில் பலப்பல நடந்தபோது அங்கு இருந்தேன் என்றார்.
…தொட்டுக்கொள்ள — திமுகவினர் மலை ஆக்கிரமிப்பு செய்தது, கிரிவலப் பாதைகளை அமுக்கியது, மலைச் சரிவுகளை வளைத்துப் போட்டது, அடாவடியாகத் திமுக தொண்டர்/குண்டர் கும்பல்களை அங்கே குடியமர்த்தியது, ரமணாசிரமத்தை மிரட்டி வன்முறையில் ஈடுபட்டு – சுற்றுச்சூழல்காப்பு தொடர்பாக ஆசிரமத்துடன் தொடர்புள்ளவர்கள் தொடுத்த நியாயமான வழக்குகளை அவர்களே வாபஸ் வாங்கிக்கொள்ள வைத்தது ஆனால் இப்போது அதே திருவண்ணாமலை திமுகவினர் சுற்றுச்சூழல் மாசுபடல் நீலிக் கண்ணீர் வடிப்பது என்றெல்லாம்கூட இந்த உரையாடல் விரிந்தது…
ஆனால் பொதுவாகவே, அதிமுக-திமுகவினரின் ஊழல்களையும் பேடித்தனத்தையும் பற்றி மேலும் மேலும் எழுத எனக்கேகூட அயர்வாக இருக்கிறது.
ஆகவே, விசிக பற்றிய கீழ்கண்ட, மிக முக்கியமான கருத்துப் படத்தைப் பதித்து…
… இந்தப் பதிவெழவை முடிக்கிறேன்.
இதனை நண்பருக்கும் அனுப்பினேன் – அவர் ROTFLMAO என, பதில்சிரிப்பையும் அனுப்பினார், பாவம்! சுபம்.
பின்குறிப்பு: ஊடகப் பேடிகளின் அரைவேக்காட்டுத்தனத்துக்குக் குறைவேயில்லை. மாட்டிக்கொண்டது சீட்டா-சிறுத்தையல்ல, அது சிறுத்தைப்புலி எனக் குழப்படியாக நாம் அழைக்கும் லெப்பர்ட்.
…ஹ்ம்ம்ம்… சசிகலா அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, இம்மாதிரியே பாத்திரம் ஒன்றை மண்டையில் மாட்டிக்கொண்டு, திருமாவளவன் அவர்கள் அலையாமல் இருந்தால் சரி… பாவம், அவருக்கு அப்படிச் செய்யவேண்டி வந்தாலும் தயவுசெய்து சொம்புகளை உபயோகிக்கவேண்டா என்று மட்டும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். ஏனெனில் பிற திராவிடச் சொம்புகளுடன் அவருக்கு ஒரே போட்டியாகிவிடும், தேவையா சொல்லுங்கள்?
எது எப்படியோ — கல்லெறிந்து இந்திராகாந்தியை அடித்துவிட்டு அவருக்கு ரத்தம் வந்தவுடன், பெண்ணென்றால் மாதாமாதம் ரத்தம் வரும் என அதற்கு ஒரு அசிங்கக் கயமைத் திராவிட வியாக்கியானம் கொடுத்து – பின்னர் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என அவர் காலடியில் விழுந்துபுரண்டு புளகாங்கிதம் அடைந்த கருணாநிதிகளிடம் இருந்தும், ‘இந்திராகாந்தி என் அப்பாவிடம் விண்ணப்பம் செய்தால் அவருக்கு விதவை பென்ஷன் தரத் தயார்’ என திராவிடப் பண்பாட்டுடன் முழங்கிய இசுடாலிர்களிடமிருந்தும் — திருமாவளவன் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய…
…ஆனால், அவர் அவ்வளவு மோசமாகப் போகமாட்டார் என்பது என் நம்பிக்கை. பார்க்கலாம் இவருடைய எதிர்காலம் எப்படி விரிகிறதென்று! என்னென்ன பாத்திரங்களை இவர் ஏற்று எப்படிப்பட்ட அரசியல் நாடகங்களில் அரங்கேறப் போகிறார் என்று…
June 19, 2017 at 13:15
ராம், இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லா ஒரு கேள்வி. எந்த keyboard layoutல் தமிழ் தட்டச்சிடுகிறீர்கள் ? Phonetic(amma), InScript or Tamil99
June 19, 2017 at 15:41
பொதுவாக இன்ஸ்க்ரிப்ட் (நான் ஒரு ஃப்ரீபிஎஸ்டி வெறியன், சிலசமயம் லூனக்ஸ்) தான்; சில சமயம் கூக்ல் ஃபொனெடிக் விஷயம் – ஜிமெய்ல் வழி. அய்யா, எதற்குக் கேட்கிறீர்கள்?
June 19, 2017 at 16:37
ஒன்றுமில்லை. பொதுவாக எந்த layout பயன்பாட்டில் உள்ளது என்றறிய ஒரு ஆர்வம்.
பெரும்பாண்மை அம்மா என்பதற்கு “ammaa” என்று தட்டச்சிடும் முறையில்தான்(google phonetic போல ) எழுதுகிறார்கள் நானும். InScript அல்லது Tamil99 ஏதாவதொன்றை பழக எண்ணியுள்ளேன்.
(ubuntu-வை வைத்துக் கொண்டு எப்போதாவது விளையாடுவது உண்டு)
June 20, 2017 at 08:59
அந்தச்செய்தியில் சரியாகத்தான் சொல்கிறார்கள். அதன் பெயர் சிறுத்தைதான் நண்பரே. Cheetah தமிழில் – சிவிங்கிப்புலி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் இருந்த சிவிங்கிப்புலி இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதை ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவந்து மறு அறிமுகம் செய்வது பற்றிய திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பரிசீலனையில் இருந்து, பின் கிடப்பில் போடப்பட்டது. :)
*மாற்றிவிடுங்கள்.
June 20, 2017 at 10:01
அய்யா, தகவலுக்கு நன்றி.
ஆனால் அது சீட்டா அல்ல. லெப்பர்ட் தான். அதாவது சிறுத்தைப் புலி. (நான் இந்தச் சிவிங்கிப் புலி என்பதைக் கேள்விப்பட்டதில்லை. அப்படியும் இருக்கலாம்)
பலப்பல வித்தியாசங்கள் இருக்கின்றன இவை இரண்டுக்கும் – ஆனால் இரு முக்கியமான வித்தியாசங்கள்:
சீட்டா – மேற்தோலில் கருவட்டங்கள்/புள்ளிகள் இருக்கும், கண்களிலிருந்து மூக்கைச் சுற்றி வருவது போன்ற கருவளையம் இருக்கும்
லெப்பர்ட் – வட்டங்களாக இல்லாமல் பலகோண வடிவங்களில் இருக்கும்.
நன்றி.
ரா.
June 20, 2017 at 14:31
இந்த இணைப்பில் பாருங்கள்.
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=141
இந்தியப் பெரும்பூனைகளில் சிங்கம், வேங்கை (பெங்கால் டைகர்), சிறுத்தை, பனிச்சிறுத்தை மற்றும் சிவிங்கிப்புலி ஆகியவை இந்தியாவில் இருந்தன. இவற்றில் அற்றுப்போனது – சிவிங்கிப்புலி மட்டுமே. தமிழில் வேட்டுப்புலி என்ற ஒரு தீப்பெட்டி இருந்தது. அதில் வரையப்பட்டுள்ள விலங்கு சிவிங்கிதான் என்று ஒரு தகவல் உண்டு.
அந்தத் தொலைக்கட்சியில் சட்டிக்குள் தலையை விட்டுக்கொண்டு விழிப்பதை – சிறுத்தை – என்றுதான் சொல்கிறார்கள். சீட்டா என்று அல்ல. எனவே ஊடகத்தினர் மீது இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அவ்வளவுதான். :)
நன்றி.
June 20, 2017 at 16:08
I think you both are agreeing the animal is Leopard. Where the difference is about it’s Tamil name. Anonymous saying it “சிறுத்தை” and ram saying it as “சிறுத்தை புலி”.
June 20, 2017 at 17:32
அய்யா, கனம் கோர்ட்டார் அவர்களே!
அவரவருக்கு அவரவர் வியாக்கியானம் என விட்டுவிடவும். நான் அவரை விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு ஊடகம் என்கிற ரீதியில் இந்த நூஸ் எழவாளர்கள் செய்தது தவறுதான்.
நன்றி.
March 6, 2021 at 09:58
[…] விடுதலைச் சிறுத்தை – சில குறிப்புகள்… 19/06/2017 […]