#திராவிடன்ஆடு

May 29, 2017

​#DravidanAduடா!  ;-)

மிச்சமிருக்கும் என் வெ​குசில நெடுநாள் நண்பர்களில் ஒருவர் (இவர் பிள்ளைக்கு நான் முன்னாள் +2 கணித வாத்தி), பாவம்,  நேற்றிரவு மிகுந்த விசனப்பட்டு ஒரு மின்னஞ்சலை எழுதியிருந்தார்; அதன் (என்னுடைய)  சாராம்சம்:

‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ போல என மறுபடியும் பேயாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள். இது எங்கே எந்த வன்முறையில் போய் முடியுமோ தெரியவில்லை. நம் இளைஞர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. படிப்பை விட்டுவிட்டு கானல்நீர் பின்னால் அலைகிறார்கள். தமிழகத்தின் எதிர்காலம் இவர்கள் கையில் மாட்டினால்… நினைக்கவே பயமாக இருக்கிறது. டட்டடா டட்டடா டட்டடா.

அனுப்பிய சிறி​​து நேரத்தில் ஒரு தொலைபேசியழைப்பு; மேலதிகப் பிலாக்கணம். இத்தனைக்கும் இவர் கணவர், ஒரு தீராவிடக் கட்சியில் ஐக்கியம். இருந்தாலும் நண்பருக்குச் சிலபல (நியாயமான) காரணங்களால் திராவிடத் திராபைத் தத்துப் பித்துவங்களின்மீது ஒரு வெறுப்பு.  மேலும் அவருக்கு ‘ஸ்டூடென்ட் ப்ரொட்டெஸ்ட்’ குஞ்சாமணி விடலைகளின் வீரதீர, இலங்கையை வென்ற மகாத்மியம் எல்லாம் மறந்துபோய்விட்டிருக்கிறது, பாவம்.

-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… அம்மணீ! முதலில் உங்களுக்கு திராவிடன்ஆடு என்பதைப் பற்றிய முக்கியமான கருத்துப் படங்களுடன் ஆரம்பித்து, பின் என் மேலான கருத்துகளைக் கொடுக்கிறேன்.

முன்னர் (=திராவிடன்ஆடு சீவிச்சிங்காரிக்கப்பட்டு கொம்புசீவிவிடப்படுதல்)

பின்னர்​ (=திராவிட மோட்சம்)

-0-0-0-0-0-

0. ​மேதகு அண்ணாவும் அவர் தம்பீ கரு​ணாநிதியும் திராவிடத்திற்கு ஏற்கனவே இப்படி மோட்சம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறியவும். அதாவது திராவிடம் என்பது ஒரு மொக்கை அரைவேக்காட்டுத் தத்துப்பித்துவம் என்றாலும், அதனை வைத்துக்கொண்டு தமிழர்களை ஏமாற்றுவது லேசு அல்லவா?  உணர்ச்சிகளுக்குத் தீனிபோட்டு ஆட்டுமந்தைக்குக் கொம்பு சீவிவிட்டு, பின்னர் அவற்றின் கழுத்தைச் சீவி பெருலாபம் அடையலாமே! ஆக – பிரிவினையாவது, மசுராவது.

1. தீராவிடக் கட்சிகளின் குறிக்கோட்கள் கொள்ளையின் பாற்பட்டுதான் இயங்கும். அவர்கள் லேசில் இந்தியாவை விட்டு ஒழியமாட்டார்கள் – ஏனெனில் மாறன்களும் சசிகலாக்களும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் வளரவேண்டுமே. பாவம், இந்தியா. ஆக, பிரிவினை வாதத்துக்குத் தொடர்ந்து சமாதிகட்டி பின்னர் சமாதியை உடைத்து என சரித்திர சக்கரம், எழவு சுற்றிக்கொண்டேதான் இருக்கும். ஆக, சிரித்துக்கொண்டே கடந்து செல்லவும், சரியா?

2. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இணைய வீரம் என்பது அளவில்லாமல்தான் இருக்கும். களத்திற்கு வந்தால்தான் தெரியும் அதன் காத்திரம். ஆக, சும்மா இந்தத் #DravidanAdu கழுதைகளின் அலப்பரைகளால் விசனமடையவேண்டா.

3. வெட்டிவேல் வீரவேலை விட வீரியம் மிக்க மொண்ணைதான் இந்த இணையவேல். கவலையை விடும்.

4. நண்பரே, நான்/நாம் பார்க்காத ‘ப்ரொட்டெஸ்ட்’ எழவா? எவ்வளவு முறை இம்மாதிரி போக்கற்ற கபோதிகளைப் பார்த்திருப்போம். ஆக, கவலை வேண்டேல்.

5. இந்த #திராவிடன்ஆடு பிரச்சினையானது – #தமிழண்டா பிரச்சினையின் முறைப்பெண். ​நான் இந்தத் #தமிழண்டா எழவுக்காகத் தனியாக ஒரு கோனார் நோட்ஸ் போட்டிருக்கிறேன். நீங்கள் அதனையும் (மறுபடியும்) படித்து இன்புறவும்.

6. தற்காலிகப் பிரச்சினைகள் முடிந்தபின் அல்லது போரடிக்கும்போது, போராட்டத் தட்டிகளைக் கீழே போட்டுவிட்டுத் தியேட்டர்களில் விஜய்குஜய் படம் பார்க்க,  நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள் – அவர்களுக்கு இதில் நிறையவே அனுபவம் இருக்கிறது.

7. ​​போக்கற்ற விசிலடிச்சான் குஞ்சுகள், அதுவும் இளைஞக் குஞ்சுகள் மூத்திரமறியா. ஆகவே  அவை, திராவிட நாடு போன்ற வெட்டிக் கூச்சல்கள் பக்கம் ஆவலுடன் போகத்தான் செய்யும். கவலைப் படாதீர்கள், சிறுநீற்றுக் குட்டைகளில் ஊறிய மட்டைகளாக இருந்தாலுமேகூட இந்தப் போராளிக் குஞ்சுகளால் நீண்டகாலம் காலட்சேபம் செய்துகொண்டிருக்க முடியாது. அதன் கவிச்சையானது, விசிலடிச்சான் குஞ்சப்ப நாயனார்களுக்கேகூட கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆகவே அந்தக் காக்காய்க் கூட்டத்திலிருந்து அவர்கள் கூடிய விரைவில் கிளம்பி விடுவார்கள். பயப்படவேண்டா!

7.5 = திராவிடச் சனி கூடியவிரைவில் தேயும், விலகும். ஆமென்.

8.​ இலங்கையைவிட்டுஓடு, ஜல்லிக்கட்டுமாடு, திரா​விடன்​ஆடு ​என மெகாஸீரியல் போல அலைந்துகொண்டிருக்கும் சோம்பேறிகளைப் படு ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளாமல், அவர்களைப் பார்த்து விழுந்துவிழுந்து உருண்டுபுரண்டுச் சிரிக்கப் பழகிக் கொள்ளவும்.

9. அதிசராசரித்தனமும் அரைவேக்காட்டு உணர்ச்சிகளும் நிரம்பிய மாபெரும் இளைஞக் குளுவான் கூட்டம் ​நம் தமிழகத்தில் ​இருந்தாலும் – சிலபல ஜொலிக்கும் தமிழிளைஞர்களை உள்ளீடாகக் கொண்ட குழாம்களும் திரண்டு வருகின்றன. மகாமகோ அறிவும், செயலூக்கமும், சகமானுடர்கள் மீது கரிசனமும், நேர்மையும், பாரதத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையும் மிக்க இவர்களால், நாம் மறுபடியும் கட்டெழுப்பப் படுவோம். நான் நன்னம்பிக்கை வாதிதான். நன்றி. :-)

-0-0-0-0-0-
பின்குறிப்பு: ​

நான் எவ்வளவு தான் ‘கெட்ட’ வார்த்தை கலந்து எழுதினாலும், ஒத்திசைவெழவைப் படிப்பவர்களில் சிலபல ​பாவப்பட்ட பெண்மணிகளும் இருக்கிறார்கள்.

இது எனக்கு ஆச்சரியமாகவும் உந்துதல் தருவதாகவும் இருக்கிறது; ஆக, ங்கொம்மாள, மேலதிகமாக ​ இன்னமும் அவற்றை உபயோகித்து, ஒவ்வொரு நாளும் சுமார் பத்து பேர் படிக்கும் அளவுக்கு என் சேவைத்திறனை அதிகரிக்கப் போகிறேன்.​ 5லிருந்து 10 – 100% முன்னேற்றமன்றோ?

வ்வோத்தா, வாழ்க ஒத்திசைவு! வளர்க ஒத்திசைவு! :-)​

! மறந்துவிட்டேனே! அடைந்தால் திராவிடன்ஆடு, இல்லையேல் அட்லீஸ்ட் திராவிடன் ஆம்லேட் ​பார்ஸேல்!

#போங்கடா, நீங்களும் வொங்களோட பேயாட்டப் பொழுதுபோக்கும்…

10 Responses to “#திராவிடன்ஆடு”

 1. Anonymous Says:

  punal kalpu kolaveri

   • ஆனந்தம் Says:

    பூணூல் காழ்ப்பு கொலைவெறி என்பதைத் தங்கிலத்தில் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. பரமண்டலத்திலிருக்கும் பிதாவே! இவர்கள் தமிழிலும் தட்டச்சாமல் ஆங்கிலத்திலும் தட்டச்சாமல் வழிதவறிப்போன ஆடுகள். O Lord Forgive them (தேவனே என்னைப் பாருங்கள் ஸ்டைலில் அலறிக்கொள்ளவும்)


   • ஓ! இப்போது புரிந்தது – பூணூல் காழ்ப்பு கொலைவெறி! நன்றி ஆனந்தம். :-))

    இது இப்படித்தானென்றால், நன்றி அரைவேக்காட்டு அனாமதேயரே. உங்கள் தமிழ் குறித்த மேதமை+ கரிசனத்தையும் உங்களுடைய ஒண்ணரைக்கண் பார்வை அரைகுறை ஆங்கிலத்தனத்தையும் பார்த்தால் சிரிப்பாக வருகிறது! :-)

 2. ஆனந்தம் Says:

  வளைகுடாப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஒரு கார்ட்டூன்: எல்லாரும் பரபரப்பாக அடுத்து கெமிக்கல் வார், அடுத்து பயாலஜிகல் வார் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருவர் வந்து There will be No World this week என்பார். கேட்ட எல்லாரும் மயங்கி விழுவார்கள். சொன்னவர் என்ன இது? இந்த வாரம் ஒரு டிவி நிகழ்ச்சி (World this week) கிடையாதென்று தானே சொன்னேன்? என்று வியப்பார். இப்போது இணையத்தைத் திறந்தால் அந்தக் கார்ட்டூன் தான் நினைவுக்கு வருகிறது.
  ஒரு வேற்றுகிரகவாசி திடீரென்று வந்து தமிழ் இணைய உலகத்தைப் பார்த்தால் அடுத்த வாரம் இந்தியா இருக்காதோ என்று ஐயம் கொள்வார். அந்த அளவு வீரச் சொறிதல்கள், புல்லரிப்புகள், தமிழண்டா எக்காளங்கள்!
  2017 பிறந்ததிலிருந்தே போராளிகளுக்கும் அவர்தம் விசைப்பலகைகளுக்கும் ஓய்வே இல்லை. :-( ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு, மரபணு மாற்றப் பயிர் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, மாட்டுக்கறி தடை எதிர்ப்பு, ஜி எஸ் டி எதிர்ப்பு, நினைவேந்தல் தடை எதிர்ப்பு….. இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவன ஏகாதிபத்திய இல்லுமனாட்டி, மோடி எதிர்ப்பு….. எந்த எதிர்ப்பிலும் போராளிகளுக்குத் துணை வராத வந்தேறிகளான “அவாள்” எதிர்ப்பு……. (முகநூலில் ஒரு கணக்கு துவங்கி போராளியா இருந்து பாருங்க சார். அப்பதான் அந்த வலி என்னன்னு தெரியும்.)
  ஆனால் ஒன்று, இணையத்துக்கு வெளியே எல்லாத் தமிழர்களும் இந்தியர்களும் தேவையான அளவு மன நலத்துடன் அவரவர் உருப்படியான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்தியா சுபிட்சமாக இருக்கிறது, இருக்கும். இது நான் எடுத்த Survey ஜனா சுகிநோ பவந்து! ததாஸ்து!

 3. Ranjani Says:

  Hi – I am also one of the Female continuously reading your blog in spite of bad words. Thanks for acknowledeging us. Anyway I continue to read since i like the main content and push away the bad words :)


  • :-) but you need not have come out in the open, yeah?

   On second thoughts, it appears that the majority of the five readers (in toto) of the blog are females? The reality is more bizarre than surreality, it looks like.

   Whatever it is, please keep your sanity and a great sense of humour.

   … but ma’am, ‘bad’ words are an integral part of the package that othisaivu has as a baggage, so don’t you try to push them away…

   • Ranjani Says:

    Hi Sir,

    Reading your blogs many times I would wish my kids should have a teacher like you. I am victim of our school’s teaching and evaluation methods. When I completed my SSLC I decided that I should not encounter with Maths and Science in my lifetime and selected Commerce. But after lot of years when I read science related articles without any pressure I feel that I actually interested in them. But aversion is created by our system and race for marks. I do not want to happen same thing to my kids. After lot of searching and reading I put them Montessori as of now.


   • Good. Hail Montessori. I love her.

    I was part of a damn good (easily the best one yet in India – I can confidently say!) montessori school and had a great time.

    Goodluck and all power to you (and to your children).

    __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s