ஆ!
May 1, 2017
இக்காலங்களில் பொதுவாகவே நான் நேர்கோணல் காணல்கள் செய்வதில்லை என்றாலும்… அப்படியே ஆனாலும், குறைந்த பட்சம் 15 வருட வேலை அனுபவம் இல்லாதவர்கள்கிட்டேகூட போக விருப்பமில்லை, உண்மையில் நேரமும் இல்லை என்றாலும்…
…சிலசமயம், அடிவயிற்றுக் கலக்கத்துடன் இந்த அற்ப – புதுமுக நேர்கோணல் எழவையும் மண்டையில் அடித்துக்கொண்டு செய்யவேண்டிவருவது என் பழவினைப் பயன் (fruit reaction use) தான். :-( இந்தப் புதுமுகங்கள், புத்திசாலி இளைஞர்களாக இருந்தாலாவது பரவாயில்லை (அவ்வப்போது அப்படியும் ஆகிவிடுகிறது) – ஆனால் அப்பன்செலவில் காசை புஸ்வாணமாக்குவதை மட்டும் செவ்வனேசெய்யும் சிலபிரகிருதிகளிடம் நான் சிலசமயங்களில் செமத்தியாக மாட்டிக்கொண்டு விடுகிறேன். பிரச்சினை.
பிரச்சினை என்னவென்றால் – நான் எடுத்துக்கொண்டிருக்கும் வேலை தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளுடன் ‘சுமுகமாக’ நடந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. எப்படியெல்லாம் கையை முறுக்குகிறார்கள் இந்த அற்பப் பாவிகள்!
இந்த மனிதர்களில் சிலருடைய பிள்ளைகளுக்கு இன்டெர்ன்ஷிப் (சிலமாதகால வேலைப்பயிற்சி) கொடுக்கவேண்டியிருக்கிறது. சம்பளம் பயிற்சிப்பணம் என அவர்கள் ஒன்றும் கேட்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கவேண்டும். அதில் நான் என் மேலான கைநாட்டைப் பதிக்கவேண்டும் – இங்குதான் முட்டிக்கொண்டுவிடுகிறது. :-( ஏனெனில் – நான் சான்றிதழ் கொடுக்கவேண்டுமானால், அதை முழு திருப்தியுடன் கொடுக்கவேண்டும். சும்மா வெட்டியாக ஸர்ட்டிஃபிகேட் எழவுகளை என்னால் கொடுக்கமுடியாது. என் சுயமதிப்பை நானே தாழ்த்திக்கொள்ளமுடியாது – ஏனெனில் நான் சுயமரியாதை இயக்கத்தவனும் அல்லன்.
…அவர்கள் ஏதாவது உருப்படியாகச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் பொதுவாகவே அவர்கள் ஒரு மசுத்தையும் செய்வதில்லை. முட்டாப் புண்டரீகாக்ஷன்கள். தத்திகள். கஸ்மாலங்கள். ஆனால் அதிகாரிப்பெருமகனாரின் மகனுக்குச் சான்றிதழ் மட்டும் வேண்டும். சொல்லிப்புட்டேன், அது முக்கியம்ல. பையன் மேல்படிப்புக்கு ஃபாரீன் போணூண்றான்.
இன்று காலை இப்படி ஒரு அப்பன்செலவில் (அப்பனும் அட்ச்ச பணம்தான், அயோக்கியன்) படிக்கும்(!) இளைஞ்ஜனுடன் ஒரு நேர்காணல். சுளையாக அரைமணி நேரம் இதற்குச் செலவழித்தேன். எல்லாம் என் நேரம்தான், வேறென்ன சொல்ல.
காருண்யா கல்விக்கடையில் படித்துமுடித்து – அதிலும் ஒன்றரை ஆண்டுகள் கோட்டு வாத்தியம் – தற்போது வீட்டோடு பஜனை. அற்ப தகவல்தொழில் நுட்ப(க்!) கடைகள் கூட தேர்ந்தெடுக்காத அளவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் இந்த காருண்யக் கல்லூரியில். மிகவும், நிரம்பிவழியும் அழகு.
வெறுத்துப் போய்ச் சொன்னேன் – தம்பீ, எனக்கு அலுப்பாக இருக்கிறது. ஒரு வாரம் நேரம் கொடுக்கிறேன். ஒழுங்குமரியாதையாகப் பைதன் கற்றுக்கொண்டு வா. வெண்முரசு.இன் தளத்துக்குச் சென்று அங்குள்ள கட்டுரைகளின் தலைப்புகளை மட்டும் கொணரும் ஒரு நிரலை எழுது. நான் அதற்கு முடிவுநாள் ஆரம்பிக்கும்நாள் மட்டும் தான் கொடுக்கும் படியாக இருக்கவேண்டும். சரியா.
-0-0-0-0-0-
அம்மணீ, உங்களுக்கு நான் வேண்டுமா, அல்லது புண்டரீகாக்ஷன்கள் முக்கியமா. முடிவு செய்துகொள்ளுங்கள்.
அவரிடமிருந்து உடனடியாக பதில்: கவலைப் படாதே. அவனை எடுத்துக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. இந்த இன்டெர்ன் இல்லாவிட்டால் இன்னொரு இன்டெர்ன். கவலை வேண்டேல்.
இதற்கு என் எதிர்வினை – டேய், அதுதாண்டா இப்பதிவெழவின் தலைப்பு. :-)
இவ்னுங்கள வுட்டு வுடுதலயாகி நின்னுக்க்கினு சிட்டுக்குர்விபோல செறகட்ச்சுப் பற்ந்து போய்டணும்டா!
:-(
May 2, 2017 at 02:01
ரொம்ப வெறுப்பில் இதை பதிந்திருப்பீர்கள் போல:
>>உலகளாவிய வலைப்பின்னலுக்கும் (Internet) இணையத்துக்கும் (Web)
அடைப்புக்குறிக்குள் இப்படியல்லவா இருக்கவேண்டும்: உலகளாவிய வலைப்பின்னலுக்கும் (Web) இணையத்துக்கும் (Internet) .
இப்படிக்கு
(உங்களிடமும்) குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும்… :)
May 2, 2017 at 05:34
நன்றி ராஜ்சந்த்ரா.
வெப் என்பது இன்டர்னெட்டின் ஒரு அங்கம் – இன்டெர்னெட்டின் மீது வடிவமைக்கப்பட்ட ஒரு அப்ளிகேஷன், செயலி(?) – என்பதைச் சொல்லவந்தேன். ஆனால் இதனைத் தமிழ்ப்படுத்திஎடுப்பதில் எனக்குப் பிரச்சினைகள் – என் ஆங்கிலபூர்வமான எண்ணங்களைச் சரியாக ஒழுங்காக ஒப்புக்கொள்ளும்படிக்குத் தமிழில் வடிக்க இயலவில்லை; இயலாமை கொடிது. இதைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி – ஆனால் எனக்கு இந்த மொழிமாற்றத்தில் இன்னும் சந்தேகம்தான். எதுஎப்படியோ.
உங்கள் தளத்திற்குச் சென்று படித்தேன். http://rchandratech.blogspot.in/ + தமிழ் தளம்: http://rchandra.blogspot.com/; விஷுவல்விஎம் பற்றி க்ளிப்தமாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து கலந்துகட்டி ஜாவா பைதன் முதல் தமிழ் வரை அனைத்து மொழிகளிலும் எழுதலாமே! ஏன் விட்டுவிட்டீர்கள்?
(மற்றபடி, நான் சர்வ நிச்சயமாகத் தவறுகளைச் செய்தால் திருத்திக்கொள்ள முயல்பவன் தான்; நன்றி. மேலும் இந்த முயல் பவன் என்பது சென்னையில் அண்மையில் திறக்கப்பட்டிருக்கும் பேலியோ உணவகம் என்பதை அறிக; விசேஷம் என்னவென்றால் உணவக வளாகத்துக்குள்ளேயே முயல்களை வேட்டையாடி அவற்றை அப்படியே கடித்துத் தின்று தொப்பைகளை அடங்கவைக்க உதவும் ஒரு பொடீக் உணவகம் இது; பேலியொ மதவெறியர்கள் கவனிக்கவும்!)
__ரா.
May 2, 2017 at 06:27
சார்…அந்த Tech blog எனக்கு reference-ஆக எழுதிக்கொள்வது. வேலை நேரத்தில் ஏதாவது சுவாரசியமான கண்டுபிடிப்புகள் நடந்தால் அதை பதிவுசெய்துகொள்வேன். அதனால் சகட்டுமேனிக்கு ஒழுங்கு இல்லாமல் இருக்கும். பொறுமையாகப் படித்து பார்த்தமைக்கு நன்றி.