…நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்
July 9, 2017
‘விடுதலை’களுக்கும் என்டிடிவி ஸன்டிவி கும்பல்களுக்கும் ஈடு கொடுக்கும்படியான – இந்த அண்டப்புளுகு ஆனந்தவிகடன் குழுமத்தின் அயோக்கிய செய்தி திரித்தல்களை படிக்கும்போதெல்லாம் (எப்போதாவது ஒருமுறை அவற்றை ஒரு நோட்டம் விட நேரும்போதும் கூட) எனக்குப் பயங்கரமாக எரியும். வயிற்றில் அமிலம் சுரக்கும். Read the rest of this entry »
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன… (இவ்வரிசையின் முதல் பகுதி. இரண்டாம் பகுதி; இவற்றை வாசித்துவிட்டு வந்து கீழே படித்தால் ஓரளவு புரியலாம். ஆனால், உங்களுக்கு மேம்போக்கான சொதப்பலுளறல் கருத்துகள்தாம் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக விடுதலைவீரமணிகளிடமும் திருமாவளவன்களிடமும் மண்வெட்டி மம்பட்டிய இசுடாலிர்களிடமும் சரணடையலாம். நன்றி!) Read the rest of this entry »
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன…
…கவலை வேண்டேல். இதுதான் கடைசி. (ஹ்ம்ம்… + 1 வரலாம். திருவண்ணாமலைக்காரர் தொடர்பதிவுக்காகப் பிடுங்கி எடுத்ததினால் இப்படி. மன்னிக்கவும்)
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள்
June 26, 2017
ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பற்றி – அவர், நம் ஜனாதிபதியாகப் போவதைக் குறித்து, நம்மில் பலருக்கும் பலப்பலப் பலான பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள்? Read the rest of this entry »
விடு தலை சிறு தை = leave head small sew ©பேராசான், 2017. நன்றி. Read the rest of this entry »
மேதகு ‘கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர்…
June 8, 2017
அணுக்கரு சக்தி பற்றி ஒரு மசுரும் தெரியாவிட்டாலும் அறிவியலில் அடிப்படைகளை அறிந்திலர் என்றாலும் மிகைப்போராளித்தனமாகக் குரைப்பவர், புரளிகளை ஏகோபித்துப் பரப்புபவர், அறிவிலித்தனமான பிரிவினைவாத வெறியையும் தொழில்நுட்பதுவேஷத்தையும் கர்மயோகி போலக் கடைபிடிப்பவர், ஊக்கபோனஸாக மாதாந்திரக் காலட்சேபத்துக்கு வெறும் மனிதவுரிமைத் தொழிலில் அமோகமாக முனைந்துள்ளவர்தாமே – ஆனாலும், நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தபடிக்கு பிச்சைக்காசுகளைப் (‘நல்கை!’) பெற்றுக்கொண்டு அடியாள் போலச் செயல்படுவரில்லைபோலுமே ஆக வெறும் முட்டாக்கூத் தனமாக நடந்துகொள்பவர்தாமே, அயோக்கியரில்லைபோலுமே அதனால் விட்டுவிடலாமா எனப் பார்த்தால்… Read the rest of this entry »
இந்திய அரசின் அடல் டிங்கரிங் பரிசோதனைச்சாலைகள் தேர்வு – தமிழகம்சார் பள்ளிகள் = 20/257 :-)
June 1, 2017
நம் பள்ளிக் குழந்தைகளுக்காக, காத்திரமான ‘மாதிரி’ பரிசோதனைச் சாலைகள்: இந்திய அரசின் அழகான திட்டங்களில் ஒன்று – என ஒரு பதிவை வெளியிட்டிருந்தேன். நான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒன்றும் இதில் இருக்கிறது = சத்தீஸ்கட் அரசு பெண்கள் பள்ளி, தம்தரி மாவட்டம். :-)
கீழே, இந்த மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட நம் தமிழகத்துப் பள்ளிகளின் வரிசை… [ஊக்கபோனஸாக, நம் தமிழகத்தில், நவோதயா பள்ளிகளின்மையைக் குறித்த என் ஆதங்கமும் இருக்கிறது. :-( ] Read the rest of this entry »
#திராவிடன்ஆடு
May 29, 2017
என் நாத்திகம், நடைமுறை இஸ்லாம் – சில குறிப்புகள்
May 13, 2017
திருவிழாக்களும் மக்கள் தன்னிச்சையாகத் திரளும் கொண்டாட்டங்களும் (இதனை நான் – ஒரு தமிழ்க்குடிகாரக் கூவான்தனமாகச் சொல்லவில்லை, மன்னிக்கவும்!) – எனக்குப் பிடித்தமானவை; அமைதியாகப் பராக்கு பார்த்துக்கொண்டு கற்பனையூரில் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பேன். என்னென்ன படிமங்கள் அவற்றில் உறைந்துள்ளன என, என் அரைகுறைப் படிப்பறிவுடன் அகழ்வாராய்ச்சி(!) செய்வதில் அப்படியொரு முனைப்பு. மேலும் — பகட்டையும், பணவிரயங்களையும் மீறி, அவற்றில் பாரம்பரிய ஆன்மா என ஒன்று உசுரைப் பிடித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்துகொள்வதில், எனக்கு அப்படியொரு ஆர்வம். Read the rest of this entry »
குழந்தைகளுடன் கணிதத்தை நோண்டுவதற்குத் தோதாகவென்று பலப்பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாமகோ சுந்தரராவ் அவர்கள் எழுதியுள்ள இப்புத்தகம். Geometric Exercises in Paper Folding – எனும் அழகு. T Sundara Row எனும் சென்னைவாசி கணித ஆசிரியர் ஒருவரினால் எழுதப்பட்டு 1893ல் வெளியிடப் பட்டது. Read the rest of this entry »
இசுடாலிர் அவர்களின் பிரமிக்கவைக்கும் நகைச்சுவை உணர்ச்சி?
April 29, 2017
எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக், இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்) Read the rest of this entry »
…இஸ்லாமிய முதன்மைக் கழுத்தறுப்பாளர் அபுபக்ர் அல்-பக்தாதியின் பிரதான அடிமை – அயத் ‘அபு யாஹ்யா’ அல்-ஜுமைய்லி ஒழிந்தான்! :-) Read the rest of this entry »
(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப் பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)
புதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி
March 21, 2017
அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!) Read the rest of this entry »
*பகீர் செய்தி* … … *பயபீதி* … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(
திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!
February 24, 2017
(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.
தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »
தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(
February 22, 2017
இதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.
ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.
அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.
கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்
February 18, 2017
சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!
…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)
ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?

