மேதகு ‘கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர்…

June 8, 2017

அணுக்கரு சக்தி பற்றி ஒரு மசுரும் தெரியாவிட்டாலும் அறிவியலில் அடிப்படைகளை அறிந்திலர் என்றாலும் மிகைப்போராளித்தனமாகக் குரைப்பவர், புரளிகளை ஏகோபித்துப் பரப்புபவர், அறிவிலித்தனமான பிரிவினைவாத வெறியையும் தொழில்நுட்பதுவேஷத்தையும் கர்மயோகி போலக் கடைபிடிப்பவர், ஊக்கபோனஸாக மாதாந்திரக் காலட்சேபத்துக்கு வெறும் மனிதவுரிமைத் தொழிலில் அமோகமாக முனைந்துள்ளவர்தாமே – ஆனாலும், நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தபடிக்கு பிச்சைக்காசுகளைப் (‘நல்கை!’) பெற்றுக்கொண்டு அடியாள் போலச் செயல்படுவரில்லைபோலுமே ஆக வெறும் முட்டாக்கூத் தனமாக நடந்துகொள்பவர்தாமே, அயோக்கியரில்லைபோலுமே அதனால் விட்டுவிடலாமா எனப் பார்த்தால்…

…இந்த மனிதரின் அழிச்சாட்டியமும் உதிரிமுதல்வாதமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. :-(

-0-0-0-0-0-

இந்திய அரசின் உயர்பதவியிலிருக்கும் ஒருவரிடம் (=நம் தமிழகக் குழந்தைகளின் கல்வியின் பால்(பாலும்) கரிசனம் கொண்டவர், பாரதத்தின் மேன்மையை விழைபவர்; இடதுசாரிச் சிந்தனையாளராக இருந்தாலும் படிப்பாளி, உச்சாடனவாதி அல்லர்! எனக்குத் தெரிந்தவரை பப்பரப்பா புல்லரிப்புகளில் இவர் ஈடுபடுவதில்லை) அண்மையில் பேசிக்கொண்டிருக்கும்போது, இம்மாதிரி போராளிப் பிறவிகளுடைய லீலைகள் லீலாவினோதங்கள் பற்றியும் பேச்சு வந்தது. நாங்கள் உரையாடியதன் சாராம்சம்:
1) இம்மாதிரி பிறவிகள், வெறும் பணத்தாசையால் மட்டும் ஆட்டுவிக்கப் படுவதில்லை – வெளி நாட்டு சக்திகளுக்கு உள் நாட்டு அடியாட்களாகவும் கூட்டாளிகளும் சேவை செய்வதில் பலப்பல அனுகூலங்கள் இருக்கின்றன, பிராபல்யம் இருக்கிறது, ஊடகப் பின்னல்களின் மீதான ஆக்கிரமிப்பு இருக்கிறது, அதனால் பலப்பல பிறபயன்கள் + பிம்ப அறுவடைகள்
2) இம்மாதிரி அதிரடிக் குழப்ப வாதிகள் சந்தர்ப்ப வாதமாக  இஸ்லாமியத் தீவிரவாத உதிரிகளுடன் இணைந்து போராடுவது என்பதும் ஏகோபித்து நடக்கிறது
3) தொடர்ந்து பப்பரப்பா ஊடகங்களுடன் பரஸ்பர வதந்தி பரப்புதல்களிலும் பரவலாக அறியப்படுவதிலும் முனைவு இருப்பதால் – தங்களுடைய அயோக்கியத் தனங்களை அறியாதவர்களாகவும் தாங்கள் செய்வது சரியே என நம்புகிறவர்களாகவும் கூட இவர்கள் ஆகி விடுகிறார்கள்
4) பொதுவாக, இம்மாதிரி பிரிவினைவாதப் போராட்டங்கள் தமிழ் நாட்டில் தான் அதிகம், மிக அதிகம்; குளுவான்கள், போலிகளின் பின் அணிதிரண்ட மணியம்; இது நம் மாநிலத்தின் சாபக்கேடான – பரிதாபத்துக்குரிய படிப்பறிவின் நிலையைத்தான் காட்டுகிறது.

…இரண்டுமூன்று தினங்களுக்கு முன், நான் மிகவும் மதிக்கும் நண்பர் ஒருவர், சிலபல உரையாடல்களுக்காக என்னை சென்னை தலைமைச் செயலகத்துக்குக் கூட்டிச் சென்றிருந்தார் – உயர்மட்ட அதிகாரிகளுடன் நடந்த அறிமுகங்கள் மிக அழகாகவும், உபயோககரமாகவும் இருந்தன. மகிழ்ச்சி. :-)

ஆனால், நண்பர் முன்னனுமதி பெற்றிருந்தாலும் செயலகத்துக்குள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடி. நான் கறுப்புச்சட்டை போட்டிருந்ததால், ஏதாவது போராளித்தனமாக உள்ளே போய் களேபரம் செய்துவிடுவேனோ எனவேறு போலீஸ்மகளிர் (நியாயமான) பயம். மேலதிகாரிகளிடன் யோசனை கேட்டுக்கொண்டிருந்தனர்; பிரச்சினை என்னவென்றால், எங்களுக்குச் சற்றுமுன்னர்தாம் இந்த மேதகு உதயகுமாரார் ஆள் மாறாட்டம் செய்து அடாவடியாகப் பொய் சொல்லி உள்ளே நுழைந்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து புளுகல் விண்ணப்பம் கொடுத்து விட்டு வெளியே பிலுக்கிக்கொண்டே வந்து – இந்த பாவப்பட்ட வாயிற்காப்போர்களுக்கு பலத்த பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார். ‘அதோ போறாரு, பாருங்க!’

இம்மாதிரி சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொய்களைச் சொல்லி அரசு அலுவலகங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் கோஷ்டம் போட்டு, அப்பாவிக் காவலாளிப் பெண்களுக்கு ஹல்வா கொடுத்து அவர்களை வெட்கத்தில் ஆழ்த்தி… இதெல்லாம் அசிங்கமான விஷயங்கள்!

இந்த மனிதரெல்லாமா ஒரு காந்தியர்? ​இப்படியெல்லாம் தன்னைத்தானே அழைத்துக்கொள்வதற்குக் ​கொஞ்சமாவது​ கூச்சம் வேண்டாமா? தொடர்ந்து பொய் பல சொல்லிக்கொண்டு, பித்தலாட்டங்களை அரங்கேற்றி மினுக்கிக் கொண்டலைவதற்கு தடித்த மேற்தோலும் மதச்சார்பின்மை முகமூடியும் ஒத்துழைக்கின்றன போலும்… பேடிகள்.

-0-0-0-0-0-0-0-
கூத்தடித்துவிட்டு வெளியே வந்து இப்படியொரு விரக்திப் பதிவு போடுகிறார் அந்த எழவெடுத்த ஃபேஸ்புக்கில்…
​’என்ன செய்வது மக்களே’ பிலாக்கணப் பித்தலாட்டம்! ஏன், ஊரை ஏமாற்றாமல் உழைத்துச் சாப்பிடுவதுதானே, அய்யா!​

…மாலை மதிமயங்கும் வேளையில் 7.15க்கு அய்யாவின் புரட்சிப் பூபாளப் பெருந்தீ பிரகடனம்… மசுர்க்கூச்செறிகிறது! வெற்றிவேல் வீரவேல்!

அடுத்த நாள் காலை 5.34க்கு வாலைச் சுருட்டிக்கொண்டு குய்யோமுறையோ!
மப்பு தெளிந்துவிட்டதோ?

இப்படி முன்னுக்குப்பின் முரணாக உளறிக்கொண்டிருக்கும் இவருடைய வாலையும் பிடித்து 4000 பேர் ட்விட்டரில் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்! ஆச்சரியம்!!

அமல் என்பதற்கும் அமுல் என்பதற்கும்கூட வித்தியாசம் தெரியாத பால்மணம் மாறாத குழந்தையார், என்ன செய்வது சொல்லுங்கள்…

​தொட்டுக்கொள்ள ஆரியம்திராவிடம் மதவெறி உச்சாடனங்கள்… அய்யா, நடத்துங்கள் உங்கள் வியாபாரத்தை…​

…என்னவோ மாட்டிறைச்சி உண்பதையே மத்திய அரசு தடுத்துவிட்டாற்போல் இன்னா துக்கிரித்தனம் பாரு! என்ன ஆவேஷம்! மசுர்க்கூச்செறிந்து மசுர்க்கூச்செறிந்து என் மசுர்களெல்லாம் உதிர ஆரம்பித்து விட்டன!

ஒரு எழவையும் புரிந்துகொள்ளமாட்டேன் எனச் சண்டித்தனம் செய்யும் வெட்டிப் போராளி அரைகுறைகள் பின்னால் நம் மக்கள் அணி திரள்வதை நிறுத்துவது எப்போது? :-(

…ஈழ மார்க்கெட்டுக்கு ஒரு உச்சாடன வெறிமுழக்கம்…

இம்மாதிரி போராளிக் கூவான்களின் வியாபாரமெல்லாம் – நம் தமிழகத்தில் மட்டும்தான் அமோகமாக நடக்கும். எல்லாம் திராவிடத்தின் கொடை, வேறென்ன சொல்ல!

-0-0-0-0-0-

இதை எழுத வேண்டாமென்று நினைத்தேன் – எடுத்த காரியத்தைத் தொடராமல் எல்லாவற்றையும் கயமையுடன் குழப்பி, பற்றி எரியவிட்டு அதில் குளிர் காய்வதுதான் இம்மனிதர் இதுவரை சாதித்துள்ளது…

1998 வாக்கில் இவர் http://www.bjpgovernmentwatch.com/ எனும் ஒரு அரைகுறைத்தளத்தை அமர்க்களமாக ஆரம்பித்து வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தார். இதைத்தவிர மின்னஞ்சல் கோமாளித் தனங்கள் வேறு! ஆனால் அவையெல்லாம் எடுபடாமல் போய் இத்தளமே முடங்கிப் போயிருக்கிறது.
​…இதைப் பற்றியெல்லாம், மாபெரும் சாதனைகளைச் செய்துவிட்டது போல அவருடைய அரைவேக்காட்டுப் புத்தகம் ஒன்றின் முகவுரையில் பிலுக்கிக் கொண்டிருக்கிறார் வேறு!
அய்யா, உதயகுமாரரே! சரி. அணுக்கரு குண்டினை பாஜக அரசு வெடித்தது. அதனால் உலகத்துக்கு என்ன கேடு? ஏன் இப்படி வதந்தியை அப்போது, மூளையுமில்லாமல் அறமும் இல்லாமல் பரப்பினீர்? ஏன் இப்போதும் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறீர்?

வெள்ளைக்காரர்களுக்காக, மேலை நாட்டு வணிகத்துக்காக – அநியாயத்துக்கு ​திரித்தல்களை உள்ளடக்கி வெறுப்பு உச்சாடனம் செய்யும் இப் புத்தகத்தை, நம் நாட்டில் எவ்வளவுபேர் படித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. படிக்காதவரை உளைச்சல் குறைவு, அவ்வளவுதான்!  ​

-0-0-0-0-0-0-

…நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. அசிங்கமாக இருக்கிறது – இம்மாதிரி ஆசாமிகளைப் பற்றி எதிர்மறையாக எழுதக்கூடக் கூசுகிறது. என்ன ஜென்மங்கள்!

ஹ்ம்ம்ம்… நிலைமை மோசம்தானென்றாலும் எனக்கு ஆசுவாசம் தரும் விஷயம் என்னவென்றால் – இம்மாதிரி போராளிக் காலட்சேபக் காரர்களின் பின் நம் கூறுகெட்ட தமிழிளைஞக் குளுவான்கள் லட்சங்களில் அணிதிரளவில்லை…  (ஆனாலும், என் இந்திய அரசு உயரதிகாரி நண்பர் சொன்னபடி – இம்மாதிரி ஆட்கள் வெளி நாடுகளிலும் உள் நாட்டிலும் செய்யும் பொய்ப் பரப்புரைகளின் நீண்ட கால நோக்கு தாக்கத்தும் அச்சப் புரளிகளின் விளைவுகளும் + தீவிரவாதக் கூவான்களின் வால்பிடித்தல் + ஒருங்கிணைக்கப்படுதலும் சோகம் தருபவை)

…பார்க்கலாம், இந்தக் கயமைவாதப் பேடி அலப்பரைகளி​ன் தாக்கத்தானது, இனிவரும் காலங்களில் எப்படி விரிகிறது (அல்லது சுணங்குகிறது) என்று…

6 Responses to “மேதகு ‘கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர்…”

 1. nparamasivam1951 Says:

  இந்தப் போராளி, 2014ல் மிகுந்த அலப்பறையுடன் தேர்தலில் நின்று, டெபாசிட் இழந்து, தோல்வி அடைந்ததை நினைவு கூறுகிறேன்.


  • அய்யா பரமசிவம்,

   ஆம்! அப்போது அவர் (AAP) ஆப்பசைத்த ஜந்துவாக இருந்தார். பின்னர் துடைப்பக்கட்டையைத் தூக்கிப் போட்டுவிட்டு மதவெறியர்களுடன் குலாவிக் கொண்டிருக்கிறார். அவர் பராக்கிரமம் ஓங்குக!

   அவர் பொழுதும் போகவேண்டுமல்லவா?

 2. Deeban Chakravarthi MAthivanan Says:

  Just crossed kudankulam ! Quite a timing

 3. senthildasan Says:

  கூடங்குளம் புகழ்’ உதயகுமார், அற்பப் பொய்யர் = அற்பர், பொய்யர். பொய் அற்பம் அல்ல.


  • நீங்கள் சொல்வது சரிதான்… அவர் அற்பர். மனமறிந்து சொல்லப்படும் அவருடைய பொய்களானவை, பெரும்புளுகுகள். சரியா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s