நம் கிராம, சிறு நகர இளைஞர்கள் டிமானெடைஸேஷன் விவகாரத்தை அணுகும் விதம், நம் அயோக்கிய அறிவுஜீவிகள் + ‘த ஹிந்து’ அரைகுறை தினசொறியின் தொடரும் தகிடுதத்தம்…

March 31, 2017

(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப்  பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)

‘த மண்டு’ தினசரியின் – அதலபாதாளத்தை நோக்கிய தொடரும் வீழ்ச்சி என்பது எனக்கு சந்தோஷத்தையும் வெறுப்பையும் ஒரேசமயத்தில் தரும் விஷயமாக இருந்தாலும், என்னுடைய தொடரும் ஆச்சரியம் என்னவென்றால்…

… எப்படித்தான் தேடித்தேடிப் பொறுக்கியெடுத்து அரைகுறைகளை – அதுவும் சோம்பேறிக்கூவான்களை மட்டுமே தங்கள் பத்திரிகையில் சேர்த்துக்கொள்கிறார்கள் இவர்கள் என்பது. அண்மையில் இந்த அரைகுறை ஜோதியில் ஐக்கியமாகி இருப்பவர்கள் மேதகு மஹிமாஜெயின் + விஸ்வக்.

இந்த த மண்டு ஜந்துக்கள் ஏன் — மேதாவித்தனமான  படுபீலாவாதிகளும், என் செல்லங்களும், ‘அரைகுறை மாஸ்டர்ஸ் ஆஃப் ஆல் சப்ஜாட் ஸப்ஜெக்ட்ஸ்‘களுமான  ‘யுவகிருஷ்ணா,’  ​நீல ‘புறம்_​பாலிடிக்ஸ்’ கண்டன் போன்றவர்களை தங்களுடைய அதிசராசரித்தன ஜோதியில் இதுவரை சேர்த்திக்கொள்ளவில்லை என்பதும் இன்னொரு ஆச்சரியம்தான்! ‘த ஹிந்து’வின் விக்கித்துப் போகவைக்கும் நகைச்சுவை உணர்ச்சி என்பது குறைந்து வருகிறதோ?

தமண்டுக்களே! தமண்டூகங்களே!! எங்கள் மாஸ்டர்ஸ்ஸோதிமாஸ்டர்ஸ் போராளிக்குளுவானிய திராவிடப் பிண்டப் பிரகிருதிகளிடம் என்ன தகுதிக் குறையைக் கண்டீர்?  இப்படி அவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறீர்களே! எனக்கு மெய்யாலுமே வருத்தமாக இருக்கிறது. நீங்கள் புறம்பாலிடிக்ஸ் யுவகிருஷ்ண வகையறாக்களை,  ஊக்குவிக்காமல் பாராமுகம் காட்டினால், வேறுயார்தான் கொக்கிவிக்கமுடியும், சொல்லுங்கள்?
-0-0-0-0-0-0-0

படிப்பறிவோ, எழுதும் விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து நன்றாக அறிந்துகொண்டு + விஷயம் தெரிந்தவர்களுடன் பேசி மேலதிக ‘ஹோம் வர்க்’ செய்து பின்பு மட்டுமே தங்களுடைய மேலான கருத்துகளை அள்ளிவிடுவது என்பதோ — பொதுவாகவே என்.ராம் முதல் ஆஇரா வேங்கடாசலபதி வரை ‘த மண்டு’ தினசரியில் தொடர்ந்து இல்லாமலிருப்பது என்பது வெள்ளிடை மலை என்றாலும்… அது பாரத்வாஜ்ரங்கன், ஜிசம்பத் என மிக அமோகமாகவே தொடர்ந்தாலும்… (இன்னும் பலப்பலர் இருக்கிறார்கள் இந்த வகையறாவில், ஆனால் எனக்கு மூச்சு முட்டுகிறது)

… பாரதத்தில் ஏதாவது நன்முனைவுகள் செயல்படுத்தப் பட்டால், அதை மானாவாரியாகக் கரித்துக்கொட்டியே ‘தம் வயிற்றுக்கு ஈந்துகொள்ளும்’ அயோக்கியர்கள் எனப் பலர் இருக்கிறார்கள். இவற்றில் பலர் அறிவுஜீவிகள் எனப் பிலுக்கிக்கொண்டு அலைபவர்கள். எதற்கெடுத்தாலும் விட்டேற்றி நக்கல் கமெண்ட் அடித்துக்கொண்டு அலைபவர்கள்.

…காலனிவாதக் காமாலை கண்ணோடு மட்டும், அந்த முப்பட்டகத்தின்மூலமாக மட்டுமே தங்கள் காமாலைமஞ்சள் சிந்தனை நிறப்பிரிகையை விரிப்பவர்கள். தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஜெயமோகன் அவர்களுடைய அண்மையக் குறிப்பொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளது போல – காலனிக் கறை http://www.jeyamohan.in/92992  ஆசாமிகள். ஒருதடவைக்கு மேல் மிஷெல் தானினொ அவர்களின் கட்டுரையைப் படித்துவிட்டு அசைபோடவேண்டியவர்கள். மேலும் (என்னைப் போலவே) சுயமோகிகள்.

சாய்வு நாற்காலிகளில் அமர்க்களமாக அமர்ந்துகொண்டு குண்டிகளைத் திருப்பிக் கருத்துக்குசுக்களை விட்டே நாட்டை நாறடிப்பவர்கள்; இவர்களின் வால்களைப் பிடித்துக்கொண்டு (அல்லது முன்பக்க வால்களைச் சப்பிக்கொண்டு) ஆனந்தமாகக் கருத்துகளை விட்டெறிந்து அலையும் கூறுகெட்ட அற்ப இளைஞர் (+மேதாவிகள்) பட்டாளங்கள் வேறு. எங்கு பார்த்தாலும் ஒர்ர்ர்ர்ர்ரேயடியாக மேலான, அபூர்வமான கருத்துச் சொட்டுக்கள். நாடு திரியாவரவிழாக்கோலம் பூண்டு சிலிர்த்தெழுவதற்குக் காரணமா வேண்டும்?

இப்போது நடந்துகொண்டிருக்கும் ‘சிலபல மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைக் கழித்துக்கட்டல் + புதிய நோட்டுகளை அச்சடித்தல் ‘டிமானடைஸேஷன்” விஷயத்தை எடுத்துக்கொள்வோம். என்னைப் பொறுத்தவரை + நான் மிகவும் மதிக்கும் பொருளாதார விற்பன்னர்களின் ஆழ்ந்தகருத்துகள் வரை — இது ஒரு முக்கியமான, தேவையான விஷயம். மன்மோஹன்சிங்கனாரார் செய்த (+செய்யாது கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் விட்ட) சிலபல தகிடுதத்தங்களினாலும் செய்யவேண்டி வந்திருக்கும் விஷயம். பாகிஸ்தானியக் கள்ள நோட்டுகளுக்கு அப்பாற்பட்டு (ஒரு பாகிஸ்தான் கள்ள நோட்டுஅடிப்பாளர், இதனால் தற்கொலையே செய்துகொண்டிருக்கிறார்! –  http://www.dawn.com/news/1300463  – http://postcard.news/breaking-fake-currency-kingpin-pakistan-commits-suicide-demonetization/)

…தீவிரவாத ஜிஹாதி அராஜகங்களுக்கு அப்பால், நம்மூர் திராவிட (+பிற) களவாணிகளின் பெரிய நோட்டு பதுக்கலுக்கு அப்பாற்பட்டு – மாவோயிஸ்ட் அரைகுறைகளையும் அவர்களுடைய பதுக்கல்களையும்கூடக் குறிவைத்து நடத்தப் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம்… தேசத்தின் ஆன்மிக மேம்பாட்டுக்கு, சுத்திகரிப்புக்கு அவ்வப்போது இம்மாதிரி விஷயம் நடக்கவேண்டும்தான்.

-0-0-0-0-0-0-

தொடர்ந்து – சத்தீஸ்கட், ராஜஸ்தான், மிஸோரம், தெலெங்காணா மாநிலங்களின் பாவப்பட்ட கிராமப்புறப் பிரதேசங்களில் என் சகாக்களாக வேலை செய்யும்  (எல்லோரும் அநேகமாக அந்தந்தப் பிராந்தியக் காரர்கள்தாம்! இவர்களில் சுமார் 85% பேர் விவசாயம் சார்ந்த தொழிற்பின்னணியுடையவர்கள்) குறைந்த பட்சம் 23 பேர்களுடன் (அதிக பட்சம் 32) கடந்த ஏழெட்டு மாதங்களாக, ஏறத்தாழ அனுதினமும் தொடர்பில் இருக்கிறேன்.

எங்கள் இணையக் கூட்டங்களில் எல்லாவிஷயங்களும் – பணிக்களம் சம்பந்தப்பட்டவை, அப்படி இல்லாதவை எனப் பலவகை விஷயங்களும் பேசி அலசப்படும். நான் சிலசமயம்  இவர்களைச் சில கேள்விகள் கேட்பேன் – ஆனால் பெரும்பாலும் பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். ‘டெலெக்ராம்’ வகை உரையாடல்களும் நடந்த மணியம். இந்த முயற்சியெல்லாம் ஒரு சமூகத்தை (‘Communities of Practice!’) உருவாக்குவதற்காக இன்னபிற.

இவர்களில் அனைவரும் ஏடிஎம் வரிசைகளில் இருந்து பணம் பெற்றுக் கொள்பவர்கள்தாம். தட்டச்சு ஃபேஸ்புக்/ட்விட்டர் சொகுசுப் போராளிகள் போலல்லாமல், ஸெல்ஃபிக்கூவான்களாக அல்லாமல் — இந்தப் பையன்களுடைய நிலைமை கொஞ்சம் கஷ்டஜீவனமாக இருந்தாலும் – இவர்களுடைய புரிதலும், தேசத்தின் முன்னெடுப்பு எத்தனங்கள் குறிந்த கரிசனமும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தருபவை. இவர்களில் பலர், விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்; முதல் தலைமுறையினராகப் படிப்பறிவு பெற்றவர்கள். இவர்களில் எனக்குத் தெரிந்தே அனைத்துப் பிரதான ஜாதியினரும் இருக்கிறார்கள். சுமார் 20% முஸ்லீம் ஜாதிகளைச் சேர்ந்தவர்களும்கூட.

இவர்கள் ஒருவர்கூட முக்கவில்லை முனகவில்லை.  முனகியதில்லை.

…நான் சும்மனாச்சிக்கும் நாட்டு + நோட்டு நடப்பு பற்றிப் பேசினாலும் அவர்கள் போராளிக் குளுவானியத்தனமாகப் பேசவில்லை. என்னிடம் அப்படிப் பேசக்கூடாது என்று அவர்களுடைய கற்பிதம் அவர்களுக்குச் சொல்லவில்லை. அவர்கள் நாணயமானவர்கள்; உழைத்துச் சம்பாதித்து உண்பவர்கள். போக்கத்த வெட்டி அலப்பரைகள் அல்லர். அவ்வளவு சாதுர்யமும் சூட்டிகைத்தனமும் இல்லாதவர்களாக இருக்கலாம் – அதனாலென்ன, அவர்கள் நேர்மையானவர்கள், இதற்குமேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

இவர்களில் ஒருவர் கூட – இந்த டிமானடைஸேஷன் விவகாரம் குறித்து ஒருவிதமான பிலாக்கணமும் வைக்கவில்லை.

எனக்கு இது தொடர்ந்து ஆச்சரியம் தந்துகொண்டிருக்கும் விஷயம். (இம்மாதிரி விஷயங்களைக் கூர்ந்து கவனித்து என்னை முன்னேற்றிக்கொள்ளும்படியான பார்வையைப் பெற்றதற்காக ஸ்ரீ தரம்பால் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்)

ஆம், இது பேச்சுவாக்கில் எனக்குத் தெரியவரும் விஷயம்தான். வெறும் anecdotal விவகாரம்தான். ஆனால் மிகப் பெரும்பாலான இந்தியர்கள், கிராமாந்திர மக்கள் இப்படித்தான் – அடிப்படை நாணயமும் நோட்டும் உடையவர்கள், பண்பாளர்கள்.  இவர்கள் பெய்யெனப் பெய்யும் மழை. இவர்களிடம்தான் பாரதத்தின் ஆன்மா அமோகமான உயிர்ப்புடன் ஓளிர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் — இந்த ஊடகப்பேடிகள், ட்விட்டர்ஸ்தான்-ஃபேஸ்புக்கிஸ்தான் அயோக்கியர்கள், வாய்ப்பேச்சு வீரப் போராளிகள், திராவிடக்கூவான்கள் அப்படியல்லர். இவர்கள் பொய்யெனப் பொய்க்கும் மழை. போராளிக் கூவான்களே! போங்கடா நீங்களும் வொங்களோட குசுத்தனமும்…

ஆக, இந்த அறிவுஜீவி அலப்பரைகள் சொல்ல முடிந்ததெல்லாம் பெரும்பாலும் கற்பனாவாத, அல்லது அதிகபட்சம் அரைகுறைவாத எதிர்மறை டிமானடைஸேஷன் விஷயங்கள்தாம்:

1. இது ஒன்றுதான் வழியா?

2. அடித்தளத்து மக்களை ஒரேயடியாகப் புரட்டிப் போட்டு அவர்கள் வயிற்றில் அடிக்கும் விஷயமிது!

3. ஏடிஎம் வரிசைகளில் ஐந்து பேர் மாரடைப்பில் மரணம்.

4. பாஜக ஆட்களுக்கு முன்னமேயே விஷயம் கசியப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் கொள்ளைப்பணத்தை அட்ஜஸ்ட் செய்து விட்டார்கள்.

5. இது வழியில்லை.

6. ஏன் அப்படிச் செய்யவில்லை?

7. எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, ஆனால் அய்யகோ, அவர்களுக்குப் பிரச்சினை என எனக்குத் தெளிவாகத் தெரிகிறதே!

8. இந்தக் கழித்துக்கட்டலைச் செய்தது மோதி – ஆகவே அது எப்படி சரியாக இருக்கமுடியும்?

9. இப்படி வங்கிக்குச் சேரும் பணம், அவைகளுக்கு இருக்கும் மீளாக்கடன்களைச் சரிசெய்யவே பயன்படும்.

10. அரசு, பொதுமக்களை ஜேப்படியடிப்பதுதான் இந்த விஷயம்.

11. நாட்டில் இவ்ளோ பர்ஸெண்ட் தான் இந்த காகிதப் பணம் அல்லது பெரும்பாலும் பரிவர்த்தனைகள் ரொக்கத்தில் தான் நடக்கின்றன. ஏன், துவாளு தீவில்கூட இப்படித்தான். ஆகவே இந்த டிமானடைஸேஷன் வேலைக்காகாது.

12. நான் நேற்றுதான் மனி என்பதற்கு ஸ்பெல்லிங் கற்றுக்கொண்டேன். ஆகவே, முந்தா நாளிலிருந்தே நான் ஒரு பொருளாதார விற்பன்னன். டீவி கேமராவை என் பக்கம் திருப்புங்கடா, சும்பனுங்களா!

13. ஏடிஎம் நெட்வர்க்குக்குப் போட்டிஎம் நெட்வர்க் தொடங்கவேண்டும்.

14. நோட்டுகளெல்லாம் குறிப்புகள். (நன்றிக்கடன்: எஸ்ரா) குறிப்புகள் எல்லாம் ஸிம்பல்கள். ஸிம்பல்கள் எல்லாம் வட்டத் தகடுகள். ஆகவே ஜால்ரா. மோதிக்கு எதிரா – அத்தொட்டு அந்த மதச்சார்பின்மக்காவ அந்த ஜால்ராவ ஓங்கி அட்றா!

15. …

…ஏனெனில், அரசு எந்தவிஷயத்தைச் செய்தாலும் அதனைக் கண்மூடித்தனமாக எதிர்த்துக்கொண்டேதான் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நம் மட்டரக, மட்டையடி இடக்குsorry அறிவுஜீவிகளின் நிலை + எதிர்க்கட்சிகள் என்றால் கேட்கவேவேண்டாம்!

சரி. இந்த டிமானடைஸேஷன் விவகாரத்தில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. மனிதர்கள் பாதிக்கப்படாமல் இல்லை; ஆனால், இந்த அழிச்சாட்டியவாதிகள் கூசாமல் பொய் சொல்வது போல் நிலைமை சர்வ நிச்சயமாகக் கவலைக்கிடமாகவே இல்லை.

(டிஸெம்பர் 17, 2017 அதிகாலை எழுதிய இந்த வரைவுப் பதிவு முற்றும்; எனக்கும் முற்றி விட்டது, நன்றி!)

-0-0-0-0-0-

சரி. இப்போது என் புது செல்லங்களான மேதகு மஹிமாஜெயின் + விஸ்வக் பெருந்தகைகள் பக்கம் வருகிறேன்.

பெருந்தகைகள் எழுதி(!) டிஸெம்பர் 2, 2016 அன்று வெளிவந்த ‘த ஹிந்து’ தினசரியில் இந்தச் செய்தி:

http://www.thehindu.com/news/national/Many-Ministers-had-large-cash-holdings/article16738705.ece?homepage=true

எவ்வளவு அரைகுறைத்தனங்கள் இந்தப் பத்தியில். இவை மட்டுமிருந்தால் பரவாயில்லை! எவ்வளவு கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்கள்!

இதனைக் கிழிக்கலாம் என ஆரம்பித்துதான் இப்பதிவை ஆரம்பித்து அரைகுறையாக நிறுத்தியிருந்தேன். ஆனால் இப்போதும் இதனைச் செய்யப் போவதில்லை; அலுப்பாக இருக்கிறது.

ஆகவே என்னெருமை 5 < x < 7 நண்பர்களே, இந்தக் கிழித்தலை உங்களுக்கு ஹோம்வர்க்-ஆகக் கொடுக்கிறேன். நாளைக்குள் இது தொடர்பான எதிர்வினைகளைக் கொடுக்கவேண்டும், சரியா?

நன்றி. வாழ்க – பாரதத்துக்கு நன்றியுடன்..

-0-0-0-0-0-

15 Responses to “நம் கிராம, சிறு நகர இளைஞர்கள் டிமானெடைஸேஷன் விவகாரத்தை அணுகும் விதம், நம் அயோக்கிய அறிவுஜீவிகள் + ‘த ஹிந்து’ அரைகுறை தினசொறியின் தொடரும் தகிடுதத்தம்…”

 1. Rajkumar S Says:

  One mismatch in data: Article says Nitin Gadkari and Uma bharati has not submitted the details. The quoted source in CHRI which was updated on 22nd Nov, 2016 says the same. But, the Government website shows data for both. Nitin Gadkari’s data represents info as on Sep, 2016. Uma Bharati’s data is completely in Hindi and I noticed dates as 30th April which I assume is the date the data represents. Even if there is a time gap in publishing the data in the website, at least info of Uma Bharati should be present.

  The shocking thing in all this is the tone of the text in CHRI. The text praised Rahul Gandhi for standing in the queue and questioned why the ministers did not. It seems, this institute with Commonwealth in the name lacks Common sense.

 2. ravi Says:

  cash in hand does not necessarily mean hard cash. they include amount in savings and current account. you can have cash in lakhs. but you should be able to show the source .

  many gold/silver and textile shops deals in lakhs and crores..

  why they didnt stand in lines, because they have their PA, staff and premium accounts in banks, further they have credit cards , credit facilities in shops . none of the businessmen even in small towns did not stand in queue.

  I have credit in my nearby shop. many of us got the groceries from that shop in credit. i have a advance credit in my area restaurant. I pay in advance and deduct my bills now and then..

  Average cash holding in hands of common man is very low .. check out any bank branch.. average balance in savings will be in few thousands only …

  demerits: yes the initial days were tough .. getting change was tough ,esp in tier 2 towns and villages . it took 1 month to normalize.

  the hindu article is just plain bullshit,.

 3. ஆனந்தம் Says:

  இந்த டிமானிடைசேஷன் அறிவிப்பு வந்த நாளிலிருந்து நான் அவ்வப்போது தட்டச்சு செய்திருந்தவற்றின் தொகுப்பு:
  1) முதலாவது இது கள்ள நோட்டு ஒழிப்புக்கானதா கருப்புப் பண ஒழிப்புக்கானதா?
  இந்த நடவடிக்கையின் நோக்கம் தெளிவுபடுத்தப்படவில்லை. கருப்புப்பண ஒழிப்பு என்றுதான் முதலில் (பிரதமரின் ரேடியோ உரையில்) சொல்லப்பட்டதாக ஞாபகம். பிறகு அதற்கு மோதி ஆதரவாளர்களால் பல சால்ஜாப்புகள் சொல்லப்பட்டன. (மத்திய அமைச்சர்கள் உட்பட) முழுமையாகவே டிஜிட்டல் பொருளாதரத்துக்கு மாறுவது என்பது அவற்றில் ஒன்று. இனி வீட்டு வேலை செய்பவருக்கு சம்பளம் கூட PAYTM மூலம் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அறிவுரைகள். ஆனால் பண அளிப்பு (supply) ஓரளவு அதிகரித்ததும் மேற்படி ஊழல் ஒழிப்புக்கு டிஜிட்டல் பொருளாதாரம் என்ற வாதம் மறைந்தே போய்விட்ட மர்மம் என்ன?
  கருப்புப் பணம் இதனால் எதிர்பார்க்கப்பட்ட அளவு குறைந்ததாகத் தெரியவில்லை. ஒரு மத்திய அமைச்சர் சில நாட்களுக்கு முன் (அதாவது டிச 31க்குப் பின்) டிவியில் தோன்றி அறிவித்த வசூல் நிலவரம் 7500 கோடி. தடை செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 1,16,000 கோடி (இது ஆல் இந்தியா ரேடியோவில் 08.011.16 அன்று ஒரு வங்கி சேர்மன் கூறிய புள்ளிவிபரம்.) என்பதை ஒப்பு நோக்கும்போது எந்த அடிப்படையில் எதிர்த்த கூவான்கள் நொறுக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறீர்கள் புரியவில்லை.
  2) மோதி செய்தார் என்பதற்காகவே எதிர்ப்பது:
  மோதி செய்தார் என்பதற்காகவே எதிர்ப்பவர்களைக் குற்றம் கூறுகிறீர்கள். மோதியின் ஆதரவாளர்கள் மோதி செய்தது என்பதற்காகவே மக்கள் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது அராஜகம். மீறி எதிர்ப்பவர்கள் தாங்களே கருப்புப்பணம் பதுக்கியிருப்பவர்கள் அல்லது விலை போன ஊடகங்களை நம்பிய முட்டாள்கள் என்று பேசுவது எரிச்சலூட்டுகிறது.
  3) இதை எதிர்க்க வேண்டுமானால் பொருளாதார நிபுணராக இருக்க வேண்டும்:
  இது வரை அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும் மக்கள் எதிர்க்க நிபுணர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. 2G ஊழலை சொல்லித்தானே பாஜக ஆட்சியைப் பிடித்தது? அப்போது பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அந்த ஊழல் பற்றி எவ்வளவு பிரச்சாரம் செய்யப்பட்டது? அதற்கு லைக், ஷேர், கமென்ட் போட்ட எல்லாரும் தொலைத்தொடர்பு நிபுணர்களா? அரசாங்க ஏலம் பற்றிய நிபுணத்துவ அறிவு பெற்றவர்களா? இதே சமூக வலைத்தளங்கள் மூலமாக முன்னிறுத்தப்பட்டுத்தானே மோதி பிரதமரானார்? இப்போது எதிர்ப்பு வரும்போது சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் உணர்வைப் பதிவு செய்யும்போது மட்டும் நிபுணத்துவம் பற்றிய கேள்வி வருவது ஏன்? நெடுவாசலோ, நியூட்ரினோவோ கூடங்குளமோ என்றால் நிபுணர்கள் கருத்து சொல்லட்டும் என்று காத்திருக்கலாம். ஏனென்றால் அது குறிப்பிட்ட பகுதிக்கான உள்ளூர் பிரச்சினை. நீண்ட காலத்தில் நடப்பதில் நன்மை, தீமை இரண்டும் இருக்கலாம்.
  ஆனால் இது அப்படியல்ல. குறுகிய காலத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 08.11.16 அன்று என் வீட்டில் வீட்டுக் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தது. கூலியாட்கள் பழைய 500 ரூபாயை வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டனர். ஆனால் அடுத்த நாள் அதை மாற்ற அவர்கள் வேலைக்கே வர இயலவில்லை.
  அதற்கு அடுத்த நாள் வேலை நடந்தது. ஆனால் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்த ஓரிருவர் தவிர மீதி அனைவரும் மதிய உணவு உண்ண இயலவில்லை. கையில் இருந்த 500 ரூபாயுடன் எங்கள் பகுதி முழுக்க சுற்றிவிட்டுப் பட்டினியுடன் திரும்பி வந்துவிட்டனர். இதுபோன்ற பல அனுபவங்கள் பல லட்சம் பேருக்கு ஏற்பட்டிருக்கும். யாருமே புகார் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
  அதற்கு அடுத்த நாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம். நான் வழக்கமாகப் பார்க்கும் சிறிய மருத்துவமனை கார்ட் ஏற்றுக்கொள்ளாததால் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனைக்குப்போக வேண்டிய நிலை. ஆட்டோ, டாக்ஸிக்குப் பணம் இல்லை. ஓலா, ஊபரில் போனால் தினம் அந்த டிரைவர்கள் சொன்னது: எங்களுக்குப் பேமென்ட் வர மூணு, நாலு நாள் ஆகுது. வீட்டுச் செலவுக்குப் பணம் இல்ல. எப்படியாவது கேஷ் குடுங்க. கடைசி நாள் சென்றபோது வந்த டிரைவர் நான் காலைலருந்து சாப்பிடலே. டீ குடிக்கவாவது காசு குடுங்க என்று பரிதாபமாகக் கெஞ்சினார். ஓலா மீட்டர் காட்டிய தொகைக்குமேல் 20 ரூபாயை (என்னிடம் இருந்ததே அதுதான்) கொடுத்துவிட்டு வந்தேன். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பதிவு செய்ய லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படிக்க வேண்டுமா? மீறிப் பதிவு செய்தால் (என் முகநூல் நண்பர்களில் அநேகம் பேர் மோதி வெறியர்கள்) எல்லையில் ராணுவ வீரர்கள் துன்பப்படுகிறார்கள் நீங்களும் படுங்கள் என்று அறிவுரை.

 4. ஆனந்தம் Says:

  இனி உங்கள் பதிவில் நீங்கள் முன்வைத்த 14, 15 வாதங்களுக்கு பதில்கள்:
  1) இதுஒன்றுதான் வழியா?
  2) இது வழியில்லை
  3) ஏன் அப்படிச்செய்யவில்லை?
  மிகுந்த விரக்தி வேதனையிலிருந்துதான் இந்தக் கேள்விகள் பிறக்கின்றன. கேட்டால் நீ பொருளாதார நிபுணரா? என்று பதில் கேள்வி. என்னுடைய பதில் கேள்வி: ஆதரிக்க வாதங்கள் சொல்லுகிறவர்களும் இதுதான் வழி என்று வாதிடுகிறவர்களும் பொருளாதார நிபுணர்களாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அப்படி இல்லையே?
  சாதாரணமாக போக்குவரத்தில் சின்ன டைவர்ஷன் செய்தால்கூட இந்த ரோடு வழியா விடறதுக்கு பதிலாக அந்த ரோடு வழியாத் திருப்பி விட்டா ஈஸியா இருக்குமே என்று அலுத்துக்கொள்வது மக்கள் வழக்கம். இது வரை யாரும் மாற்று ஆலோசனை சொல்ல நீங்க போக்குவரத்து நிபுணரா? போக்குவரத்து ஐஜியா என்று கேட்டதில்லை. மக்களின் அன்றாட வாழ்வை அடியோடு (சில நாட்களுக்காவது) புரட்டிப்போட்ட விஷயம் பற்றிப் பொருளாதார நிபுணர்கள் மட்டுமே பேச வேண்டும் என்பது அராஜகத்தின் உச்சமாகும். கூட்டத்தில் நம் காலை ஒருவர் மிதித்தால் வலிக்கிறது என்றால் உனக்கு உடற்கூறு தெரியுமா? வலி பற்றிப்பேச நீ என்ன மருத்துவரா என்று கேட்பதற்கு ஒப்பானது இது.
  4) அடித்தளத்து மக்களை ஒரேயடியாகப் புரட்டிப்போட்டு அவர்கள் வயிற்றில் அடிக்கும் விஷயமிது!
  வேலைக்குச் சென்றால் பழைய செல்லாத காசை வாங்கிக்கொள்ள வேண்டும். நேற்று வாங்கிய / ஏற்கெனவே வீட்டில் இருக்கிற செல்லாத பணத்தை மாற்ற வேண்டுமானால் இன்றைக்கு வேலைக்கு வர முடியாது. இன்று வருமான இழப்பு. விளைவு நாளை சோற்றுக்கு என்ன வழி? இதுதான் நவம்பர் கடைசியில் பல லட்சம் தினக்கூலிகளின் நிலை.
  இதைத் தவிர்க்கப் பல இடங்களில் என்ன நடந்தது என்று தனிப்பட்ட முறையில் (எங்கள் பகுதியில் கூட நடந்தது) நான் கேள்விப்பட்டது: 500 ரூபாய்க்கு நானூறு ரூபாய் இந்த வணிகம் கிட்டத்தட்ட ஒரு மாதம் கனஜோராக நடந்தது. என் கேள்வி: இந்தக் கமிஷன் கருப்புப்பணமா, வெள்ளைப் பணமா?

  கருப்புப் பண ஒழிப்பில் கஷ்டப்பட்டதெல்லாம் மத்திய ஏழை வர்க்கங்கள் மட்டுமே. யாருக்காக அது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டதோ அவர்கள் இதைப்போல பல அரசுகளையும் அதன் நடவடிக்கைகளையும் விழுங்கி ஏப்பம் விடத் தெரிந்தவர்கள். கருப்புப்பண ஒழிப்பின் போதே பல லட்சம் சம்பாதித்த பல கமிஷன் ஏஜென்டுகள் இருப்பார்கள். பேங்க் மேனேஜர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு இது வெகு சுலபமாக நடந்ததென்று நான் நேரடியாக அறிந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

  இதற்கு ஆதாரம் அப்போது நடந்த இடைத்தேர்தலை ஒட்டி வாகனச்சோதனைகளில் சிக்கிய புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள். (இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பணவிநியோகம்/ நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதால் -அந்தப் பகுதியில் சோதனை நடந்ததால் பணம் சிக்கியது.- நாட்டின் மற்றப் பகுதிகளில் சிக்காமல் தப்பியது எவ்வளவு இருக்கலாம்? பேங்க் மானேஜர்கள் உதவி இல்லாமல் இது நடந்திருக்குமா? குறிப்பு: எல்லையில் ராணுவ வீரர்களுக்கு ஒப்பாக வங்கி ஊழியர், அதிகாரிகளும் அந்த இருமாதங்கள் போற்றித் துதிக்கப்பட்டனர்.

  5) ஏடிஎம் வரிசைகளில் ஐந்துபேர் மாரடைப்பில் மரணம்
  6) பாஜக ஆட்களுக்கு முன்னமேயே விஷயம் கசியப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் கொள்ளைப்பணத்தை அட்ஜஸ்ட் செய்துவிட்டார்கள்.
  இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இது ஊடகங்களில் மட்டுமே வந்த விஷயம். தனிப்பட்ட முறையில் தகவல்கள் இல்லை.

 5. ஆனந்தம் Says:

  7) எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, ஆனால் அய்யகோ, அவர்களுக்குப் பிரச்சினை என எனக்குத் தெளிவாகத் தெரிகிறதே!

  கடைசி வாதம், நீங்கள் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம், அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இரண்டு பதில்கள்:
  முதாலவது: மக்களில் உண்மையாகவே நேர்மையாக அப்பாவியாக உழைத்து வாழ்கிறவர்கள் இந்த முயற்சியாலாவது நாடு திருந்தாதா என்று ஏக்கம், நப்பாசை, விரக்தியிலிருந்து பிறந்த சின்ன நம்பிக்கையின் நூலிழையைப் பிடித்துக்கொண்டு இந்த முட்டாள்தனத்தின் அத்தனை விளைவுகளையும் சகித்துக்கொண்டார்கள்தான். ஆனால் அதற்காக அது சரியாகிவிடுமா? மக்கள் அறுபது வருஷமாக மோசமான சாலைகளை, திறந்த, நிரம்பி வழியும் சாக்கடைகளை, மருந்து இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களை டாக்டர் இல்லாத மருத்துவமாய்களை ஆசிரியரோ கட்டிடமோ இல்லாத பள்ளிகளை – இன்னும் எத்தனையோ சீர்கேடுகளை – ஏன் திராவிடத்தைக்கூடத்தான் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். சகித்துக்கொள்வதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் எந்த அரசும் நிர்வாகக் குளறுபடிகளை உண்டு பண்ணக்கூடிய ஒரு முடிவை இஷ்டம்போல் எடுக்கலாம் என்று பொருளா?
  இரண்டாவது: இந்தக் கருப்புப்பண ஒழிப்பின்போது ஜோதியில் ஐக்கியமான ‘அப்பாவி’ மக்களும் உண்டு. எனக்குத் தெரிந்து ஒரு கல்வித்தந்தை தன் ஜாதியைச் சேர்ந்த மக்கள் பலருக்கு வட்டியில்லாக் கடன் என்ற பேரில் ஆளுக்கு ஒரு லட்சம் என்ற அளவில் (அடுத்த நிதியாண்டில் திருப்பித் தருவதாகப் பத்திரம் வாங்கிக்கொண்டு) வழங்கினார். (வழங்கப்படாமல் கோட்டைவிட்ட ஒருவர் என்னிடம் இந்தத் தகவலை நேரடியாக வருத்தத்துடன் கூறினார்.)
  இன்னொரு கல்வித்தந்தை தன் கல்லூரி ஊழியர்கள் எல்லாருக்கும் 2 லட்சம் தந்தார். இதுவும் தனிப்பட்ட முறையில் நானறிந்த தகவல்.
  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கைகள் “பாயும்” என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரை எதுவும் நடக்கவில்லை. அது நடைமுறையில் சாத்தியமா? லட்சக்கணக்கான கணக்குகளைக் கண்காணித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கை எடுப்பதற்குள் மத்திய அரசின் பதவிக்காலமே முடிந்துவிடும், அதற்குள் எல்லாரும் இதை மறந்தும்விடுவார்கள் என்ற ஆதார நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?

 6. ஆனந்தம் Says:

  8) இந்தக் கழித்துக்கட்டலைச் செய்தது மோதி – ஆகவே அது எப்படி சரியாக இருக்க முடியும்?
  (இதற்குப்பின் எல்லாக் கேள்விகளும் பகடி என்பதால் பதில் சொல்லவில்லை)
  மோதி செய்தது என்பதற்காகவே எதிர்ப்பது தவறென்றால் மோதி செய்தது என்பதற்காகவே- அவரளவில் அவர் நேர்மையானவர் என்ற ஒரே காரணத்துக்காக- இதை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறல்லவா?
  ஒரு பகுதியில் அடிக்கடி சைக்கிள்திருட்டு நடக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதை இரண்டு முறைகளில் தீர்க்கலாம்.
  சாதாரண நடைமுறை: காவல்துறை ரோந்துப்பணியை முடுக்குவது, வழக்கமாக இதுபோல் குற்றம் செய்கிற சந்தேகத்துக்கிடமான நபர்களைக் கண்காணிப்பது / விசாரிப்பது, திருட்டு சைக்கிள் வாங்குவதற்கென்றே இருப்பவர்களைக் கண்டறிந்து விசாரிப்பது. இது யாருக்கும் தொந்தரவில்லாதது.
  மோதி முறை: பகுதியில் உள்ள எல்லாரும் அவரவர் சைக்கிளைக் காவல் நிலையத்தில் கொண்டு வைத்துவிட்டு அவரவர் சைக்கிள் வாங்கியதற்கான பில்லைக் காட்டி அவரவருடையதுதான் என்று நிரூபித்துவிட்டு எடுத்துச் சென்றால் மீதி இருக்கிற சைக்கிள் எல்லாம் திருட்டு சைக்கிள் என்று முடிவு செய்வது.
  பில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக சொந்த சைக்கிளையும் எடுக்க முடியாமல் பலர் விழிக்க, திருட்டு சைக்கிள்காரர்களோ காவல்நிலையத்தில் இருக்கிற சிலர் உதவியுடன் திருட்டுப்பொருளைத் தங்களுடையதாகக் காட்டிக்கொள்வது, பக்க விளைவாக சில நாள் யாருமே சைக்கிள் ஓட்ட முடியாமல் போவது. இந்த தர்க்கமற்ற முடிவால் மக்கள் படும் அவதிகளைச் சுட்டிக்காட்ட ஒருவர் சட்டம் படிக்க வேண்டும் ஐபிஎஸ் பாஸ் பண்ண வேண்டும் என்று சொல்வீர்களா?
  இந்த உதாரணத்தில் கண்டதுபோல் பலர் தங்கள் சொந்தப் பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டனர். பழந்தின்று கொட்டையையும் ஜீரணம் செய்துவிட்ட முதலைகளோ “ஏழைக”ளின் கணக்கை உபயோகித்துக்கொண்டனர். (அதற்கு ஆதாரம் அவ்வாறு செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் எச்சரித்தது.)
  (இந்தக் குளறுபடி டிசம்பருடன் முடியவில்லை. டிசம்பருக்குள் மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் மார்ச் வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று முதலில் பிரதமர் அறிவித்தார். ஆனால் பின் அந்த மார்ச் வரை என்ற விதி நவம்பர், டிசம்பரில் வெளிநாடு சென்றவர்களுக்கு மட்டும்தான் என்று மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட விதி பிரதமரின் முதல் அறிவிப்பு அளவுக்கு மக்களை சென்றடையவில்லை. உள்நாட்டிலேயே இருந்தும் அறுவை சிகிச்சை/ மருத்துவமனை வாசம் செய்தது போன்ற காரணங்களால் பழைய விதியை நம்பிப் பணம் மாற்றுவதை ஒத்திப்போட்டவர்களின் கதி? (தனியே வசிக்கிற வயதானவர்கள் பலருக்கு இது நேர வாய்ப்பிருக்கிறது அல்லவா?) மக்கள் இதையும் சகித்துக்கொண்டுவிட்டார்கள்.
  வெளிநாடு போய் வந்தவர்களும் அதற்கான ஆதாரத்தைக் (கஸ்டம்ஸ் அதிகாரியிடமிருந்து சான்றிதழ்) காட்ட வேண்டும் என்று இப்போது RBIயில் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது முதலில் கூறப்படவில்லை. பாஸ்போர்ட்டைக் காட்டினால் போதுமென்று சொல்லப்பட்டது. இந்த விதி மாற்றம் பற்றி விமான நிலையங்களில் பெரிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா? இதையும் மக்கள் சகித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  இதற்கு பதிலாக நாட்டில் அதிகம் ஊழல் மலிந்த பணம் நிறையப் புழங்குகிற சில துறைகளைத் தேர்ந்தெடுத்து (உதா: மணற்கொள்ளையர்கள், கல்விக்கொள்ளையர்கள் மட்டுமே பல்லாயிரம் கோடி கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.) சந்தேகத்துக்கிடமான சில நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வலுவான வழக்குகளைப்போட்டு மிகக் கடுமையாக நடவடிக்கை எடுத்திருந்தால் அது மற்ற ஊழல்வாதிகளுக்கு எச்சரிக்கையாகவும் இருந்திருக்கும். இத்தனை பேருக்கு மிகுந்த வலி, உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்காது. வசூலும் பல்லாயிரம் கோடி கிடைத்திருக்கும். இப்படியும் செய்யலாமே என்ற மாற்றுக்கருத்தைச் சொல்ல நான் ஒரு பொருளாதார நிபுணராகவோ அரசியல் மேதையாகவோ இருக்க வேண்டுமா?
  இன்னும் நாட்டில் எந்தத் துறையிலும் ஊழலும் லஞ்சமும் ஒழியவில்லை, இரண்டு மாதங்கள் அடக்கி வாசிக்கப்பட்டு ஒத்திப்போடப்பட்டது, அவ்வளவே என்ற உண்மையை மனதில் கொண்டு பார்த்தால் (இது கருப்புப்பண ஒழிப்பல்ல, கள்ளநோட்டு ஒழிப்பு என்ற சால்ஜாப்புக்கான காத்திரமான ஆதாரங்கள் எதுவும் அரசிடமிருந்து இதுவரை முன்வைக்கப்படவில்லையாதலால்) இது முகமதுபின் துக்ளக்தனமான நடவடிக்கை என்றே சொல்லலாம்.
  ஆனாலும் மக்கள் சகித்துக்கொள்வார்கள். முகமதுபின் துக்ளக்கையும் சாதாரண மக்கள் முக்காமல் முனகாமல் சகித்துக்கொண்டார்கள். தலைநகரம் மாற்றும்போது உயிரையும் விட்டார்கள்.

  • kannan Says:

   +1

   By far, the most coherent answer I ever read.

   • kannan Says:

    Govt. says people have to fill a form with their personal details along with old notes to get it exchanged. So far so good, guy goes to the bank did so the first day and got 4k in new notes.

    The next day, bank staff notices the whole procedure and start filling the form on their own with the previously submitted form and begin to exchange notes for the rich people for a hefty commission. That is the reason why from 2 day on wards everyone got the stock answer ‘ new notes haven’t arrived’ or ‘they have already dispersed all the money that came’. Fact is, the money came alright, but it was given out in bulk for a commission.

    Still ignorant of what is going on, the govt. believes that bank are OK and people are bad and they start marking the people with ink and more formalities.

    Question is, can’t the govt. see such a use case before announcing an important decision. Is it possible to cross verify mountains of paper documents ?.

 7. A.Seshagiri. Says:

  ஆனந்தம் அவர்களுக்கு,
  தங்கள் பதிவுக்கு பதிலாக ஜெயமோகன் அவர்கள் இன்று இது பற்றி எழுதிய பதிவை பார்வைக்கு வைக்கிறேன்.ஓன்று மட்டும் உறுதி இது மோதி அவர்கள் எடுத்த நல்லதொரு நடவடிக்கைதான்.பாமர மக்கள் இதன் மூலம் சிறிதுகாலம் கஷ்டப்பட்டார்கள் என்பது உண்மைதான்.ஆனால் ஒருவர்கூட இதன் மூலம் வரும் நன்மை தீமைகளை காய்தல் உவத்தலின்றி பதிவு செய்யவில்லை அது பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னோ மன்மோஹன் சிங்க்கோ,ப.சி.யோ யாரானாலும் சரி.என்னறிவுக்கு எட்டிய வரை இதனால் நாட்டின் பெருந்தொகை ‘வெள்ளையாக’ மாறியிருக்கிறதென்பது கண்கூடான உண்மை. மற்றவையெல்லாம் போகபோகத் தெரியும்
  http://www.jeyamohan.in/96969#.WOCdoyB95dg

 8. ஆனந்தம் Says:

  சேஷகிரி அவர்களுக்கு,
  ஜெயமோஹனின் கட்டுரையைப் படித்துவிட்டேன். அவரது கட்டுரையில் சுட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையையும் இந்தப் பின்னூட்டங்கள் எழுதப்படும் முன்பே படித்துவிட்டேன். இது மூன்று பொருளாதார நிபுணர்களுடைய சொந்தக் கருத்து. ஜெயமோஹனின் சொந்தக் கருத்துடன் ஒத்துப்போவதால் அவர் சுட்டியிருக்கிறார்.
  பெருநோட்டு அகற்றம் முழு வெற்றியா இல்லையா என்பது உறுதியாக இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஜெயமோகனே அது முழு வெற்றி அடைந்ததாகக் குறிப்பிடவில்லை. அவர் சுட்டியுள்ள கட்டுரையும் அவ்வாறு அடித்துக்கூறவில்லை.

  நான் புரிந்துகொண்ட அளவில் இந்தியாவின் கருப்புப் பொருளாதாரம் இதுபோன்ற ஒரு நாள் அதிரடி புதிரடிகளால் சரிசெய்யப்படக்கூடிய விஷயமே அல்ல. நீண்ட தொலைநோக்குப் பார்வையுடன் தொடர் உறுதியுடன் பலகாலம் தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டிய விஷயம் அது. உடனடிப் பலன்கள் கிடைக்காத – ஒரு முழுத் தலைமுறை உருவாகும் வரை காத்திருக்க வேண்டிய- நடவடிக்கைகள்தான் நீண்டகாலத்தில் நிலையான பலன் கொடுக்கும். ஆனால் நவம்பருக்குப் பிறகு கருப்புப் பொருளாதாரம் தொடர்பாக அதுபோன்ற எந்த நடவடிக்கையும் (எனக்குத் தெரிந்து ) எடுக்கப்படவில்லை.

  இப்போது வரிப்பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப்பட்ட பணம் பற்றி சரியான தகவல்கள் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் இந்த நடவடிக்கை நாள்பட சேர்ந்துபோன குப்பைகள் திடீரென்று ஒரு நாள் அடிக்கும் புயலால் அகற்றப்பட்டு மழையால் சுத்தம் செய்யப்படுவது போன்றது தான். தொடர்ந்து குப்பை சேராமல் இருக்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு முறையும் புயலடிப்பது தீர்வாகுமா? வேறு தீர்வைத்தானே நாட வேண்டும்? எனில் அதை இந்த நடவடிக்கைக்கு முன்பே / இதற்கு பதிலாக செய்திருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

  உபி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துவிட்டதால் இந்த நடவடிக்கையை எதிர்த்தவர்கள் இன்று கேலி செய்யப்படுகிறார்கள். மக்கள் தீர்ப்பு இறுதியானது, அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் மக்கள் தீர்ப்பு ஆதரவானதால் அது சரியென்று ஆகிவிடாது. மக்களுக்குத் தவறானதையும் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது என்பதே ஜனநாயகத்தின் பலம், பலவீனம் இரண்டும். ஆனால் தவறைத் தவறென்று சுட்டிக்காட்டுவதற்கு என் போன்றவர்களுக்கு உரிமை உள்ளது. அதுவும் ஜனநாயகத்தின் பலம், பலவீனம் இரண்டும். இதை மோதி ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்வதாகவே தெரியவில்லை. மோதி ஏற்றுக்கொள்கிற அளவுகூட அவரது ஆதரவாளர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லை :-))) .

  நான் சொல்ல வந்தது பண மதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மக்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதுபோன்ற கருத்துகளைப்பற்றி மட்டுமே. முகநூலில் இது பற்றி நான் விவாதிக்க முற்பட்டபோது எனக்குக் கிடைத்த பாஜக எதிர்வினைகள் திராவிட எதிர்வினைகளுக்கு சற்றும் குறையாதவையாக இருந்தன. சலிப்படைந்து விவாதிப்பதையே நிறுத்திக்கொண்டேன்.

  இந்த நடவடிக்கைக்கு எதிரான எந்த வாதமுமே கருப்புப் பணத்துக்கு ஆதரவானது என்ற எகிறல், தேசபக்தி பற்றி அறிவுரைகள், கபாலி படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூல நிக்கலியா என்ற ரீதியில் அபத்த வாதங்கள், இதன் நிர்வாகக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டப்போனால் எல்லையில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுக்குக் குறையாத வங்கி ஊழியரின் பணிச்சுமை பற்றிய கண்ணீர் மல்கல்கள்….. இதற்கு பதிலான என் பொருமல்களின் தொகுப்புதான் மேற்கண்ட பின்னூட்டங்களில் நான் சொல்லியிருக்கிற கருத்துகள்.

  அரசியல், மொழி, பண்பாட்டு விஷயங்களில் எகிறல்களைப் பார்த்துள்ளேன். ஆனால் ஒரு பொருளாதார நடவடிக்கையை விமர்சிக்கவே கூடாது என்று யாரும் இவ்வளவு எகிறிக்குதித்ததாக நினைவில்லை. இதை விமர்சிக்கிற எல்லாருமே தேசத்துரோகிகளோ விலைபோன ஊடகங்களின் கைக்கூலிகளோ அல்ல என்று புரிந்துகொண்டால் போதும்.

  இதில் இருக்கிற ஓட்டைகளைச் சுட்டிக்காட்டும்போது ஒப்புக்கொண்டு ஆராய்ந்தால் கருப்புப் பணத்தின் மீதான தொடர் போராட்டத்துக்கு அது நன்மைதானே பயக்கும்? வேறு வழியில்லையா என்ற வாதம், வேறு வழிகளைச் சுட்டிக்காட்டுவது எல்லாமே ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்பாக அமைய வாய்ப்பிருக்கிறது அல்லவா?
  நன்றி,
  ஆனந்தம்


  • அன்புள்ள ஆனந்தம்,

   உங்கள் (+கண்ணன் அவர்களின்) கருத்துகளுக்கும் நன்றி. உங்கள் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அனைத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை.

   1. இந்த நடவடிக்கை, வெறும் கருப்புப்பணத்தை மட்டும் ஒழிக்கும் நடவடிக்கையல்ல. அதனை மந்திரம்மாயம் போல ஒழிக்க முடியாது. ஆனால் பரவலாக வெளியில் தெரியவராத பல பிற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

   2. வங்கிகளில் சிலபல ஊழல்கள் நடந்திருக்கலாம்; ஆனால் வங்கி ஊழியர்கள் (முக்கியமாக அதிகாரிகள் – குமாஸ்தாக்கள் அல்ல) உழைத்த உழைப்பிற்கு அளவேயில்லை. ஓட்டுமொத்தமாக அனைத்து ஊழியர்களையும் ஊழல்வாதிகள் என்பதுபோல வண்ணம்பூசுவது சரியல்ல என நினைக்கிறேன்.

   3. மற்றபடி அலுப்பாக இருக்கிறது. ஆகவே விரிவாக பதிலளிக்கவில்லை. மன்னிக்கவும்.

   நன்றி!

   __ரா.


   • Dear Anandam, another thing:

    If you are curious and want to talk to about the points you have raised:

    1) a very high level SBI officer to clarify your doubts, I can put you on to him.

    2) a senior (retd) IAS officer, who is non-partisan and was a man of integrity – I can request him to talk to you too!

    They have been very personal friends of mine – but dunno whether the second one can be convinced, but then I can try.

    But, for the above two to happen – you would be required to share your tel no (you don’t have to do this of course) with me, and I will handle that with required precautions and all that.

    I am offering to do this, because you are a little bit known to me and I happen to like you, that’s all.

    But, you can feel free to say NO. I would understand that, given your background and past experience.

    Thanks and best:

    __r.

  • A.Seshagiri. Says:

   ஆனந்தம் அவர்களுக்கு,
   உங்களின் விரிவான பதில் எனக்கு திருப்தி இல்லையென்றாலும் நன்றி.இந்த விஷயத்தில் ராமசாமி சார் உங்களுக்கு தமிழில் 1,2,3 என்று போட்டு பதிவு செய்துள்ள கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.மற்றபடி நான் மோதி அவர்களின் கண்மூடித்தனமான ஆதரவாளன் இல்லை.நீங்களும் அவரை கண்மூடித்தனமாக எதிர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன் :-))) .

 9. Rajkumar S Says:

  என் வரையில் இந்நடவடிக்கையின் பலனாக இவற்றை பார்க்கிறேன்.

  குறுகிய கால பலன்: பெட்டிக்குள் அடைபட்டிருந்த பணம் வெளிவந்திருக்கிறது. எவ்வழியிலோ இப்பணம் சுழற்சியில் இறங்கும் பொழுது இதுவும் பொருளாதாரத்திற்கு உதவும். வங்கிகளின் வட்டி குறைப்பிற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், இப்பணம் எதனை நாள் வங்கிக்கணக்கில் இருக்கும் என்பது தெரியாததால் முழுமையாக பயன்படுத்த முடியாது.

  நீண்ட கால நோக்கில், கணக்கில் காட்டாமல் பணம் பதுக்குபவர்களுக்கு புது சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது. பணத்தை மாற்ற இம்முறை அனைவருமே குறைந்தது 10 முதல் 30 சதவிகிதம் வரை கமிஷனாகவோ, லஞ்சமாகவோ இழக்க நேர்ந்தது. முழுமையாக இழந்தவர்களும் உண்டு. இதுவரை கணக்கு காட்டாமல் ஆனால் நேர்மையான தொழில் மூலம் சம்பாதித்தவர்களுக்கு இனி நேர்மையாக வரி கட்டுவதே லாபமாக இருக்கும். யாரும் நல்லவராக மாறுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிச்சயமாக அவர்களுக்கு லாபமானதை செய்வார்கள்.கணக்கு காட்டினால் அதிக பட்சம் 30%. அதோடு தொழிலின் செலவுகளையும் லாபத்தில் கழித்து அதன்மூலம் வரி இன்னும் குறைக்க முடியும். எவனுக்கும் பயப்பட வேண்டியதும் இல்லை.

  ஜி எஸ் டி இந்த வகையில் முக்கியமானது. மூலப்பொருள் முதல் இறுதித்தயாரிப்பு வரை நிறுவனத்தின் வரி செலுத்துபவர் எண் மூலம் சரி பார்க்க முடியும் என்பதால் இடையில் எந்த நிறுவனமும் ஏமாற்றுவது கடினம். ஏமாற்ற முயற்சிக்கலாம், ஆனால் கண்டுபிடிப்பது எளிது.

  ஆனால் லஞ்சம் / ஊழல் செய்யும் அதிகாரிகள் போன்றோரை பிடிக்க இவை பயன்படாது. புதிய பினாமி சட்டம் சிக்கியவர்களை கடுமையாக தண்டிக்க உதவும். ஆனால் சிக்கவைப்பது சிக்கலாகவே இருக்கும்.

 10. gopinath Says:

  http://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-man-deposits-rs-246-crore-in-ac-will-pay-45-of-it-as-tax/articleshow/57834472.cms
  http://indianexpress.com/article/india/rs-4-17-lakh-crore-suspicious-deposits-by-18-lakh-people-post-note-ban-cbdt-4504411/
  http://www.thehindubusinessline.com/economy/budget/only-76-lakh-indians-showed-income-of-over-rs-5-lakh-jaitley/article9514752.ece
  http://economictimes.indiatimes.com/news/economy/finance/post-demonetisation-india-running-on-half-the-cash/articleshow/56487652.cms
  http://in.reuters.com/article/india-trafficking-demonetisation-idINKBN1451VT
  http://www.hindustantimes.com/delhi/demonetisation-impact-petty-crimes-dip-in-delhi-after-note-ban/story-FSSaHzxKCaLmuErbKnTEbL.html
  இந்த திட்டத்தின் முதல் சிறப்பு உங்கள் வங்கி கணக்கில் உங்கள் பணத்தை போட வேண்டும் என்பது தான். வேறு எவ்வித முறையிலும் பழைய 500,1000 மாற்றிக்கொள்ள வழியில்லாது போய் விட்டது ஸிரோ பாலன்ஸ் கணக்குகளில் மற்றும் குறைந்த வைப்பு உள்ள கணக்குகளில் திடீரென்று பெரிய அளவில் பணம் போடப்பட்டவுடன் அது வெளியில் எடுக்க படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது உங்கள் வருமான அளவை காட்டியவுடன் அதற்கான ஆவணங்களை அளித்தவுடன் தான் அதை எடுக்க முடியும் இன்று அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதன் மதிப்பு 4.5 லட்சம் கோடி என்று வருமானவரித்துறை தெரிவிக்கிறது இவர்கள் வெறும் 18 லட்சம் பேர் இந்த அளவு பணம் இதுவரை வெளியில் வராமல் பதுங்கி கிடந்தது. ஹவாலா அல்லது உண்டியல் பணம் 95% ஒழிக்கப்பட்டு விட்டது. 500,1000 செல்லாது என்பதால் அரசியல் கட்சிகளிடமும் மணல் கொள்ளையர்களிடமும் இன்று பணம் இல்லை பாதி வங்கியில் மாட்டிக்கொண்டிருக்கிறது மிச்சம் கரியாகிவிட்டது ஏனென்றால் அவற்றை மாற்றமுடியவில்லை. நக்சலிசம்,ஆள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் போன்றவை கணிசமான முறையில் தானாகவே குறைந்து விட்டது. ஒரு 10% ஒரு வாரத்தில் பல்வேறு நபர்களிடம் கொடுத்து மாற்றப்பட்டது மட்டுமே மிச்சம் அவையும் பிடிபடும் ஏனென்றால் பான் கார்டு அல்லது ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து அவை மாற்றப்பட்டிருக்கின்றன ஒரே ஆள் 20 இடங்களில் மாற்றியிருந்தால் ஆள் பிடிக்கப்பட்டு யாருக்காக மாற்றினார் என்பது தெரிந்துகொள்ளப்படும். யாரிடம் எவ்வளவு இருந்தது அவர்கள் வரி கட்டினார்களா என்று தெரியாமல் இருந்தது இன்று அறிந்துகொள்ள பட்டது.இனி அவர்கள் வருடம் தோறும் வரி கட்டியாக வேண்டும் இனி ஏமாற்ற முடியாது இதனால் இந்தியாவின் வருமான வரி மும்மடங்கு பெருகும் வாய்ப்பு உண்டு. சில சிரமங்கள் இருந்தன 87% நோட்டுகளை மாற்றும் போது இவை தவிர்க்க முடியாதவை. இனி நோட்டுகள் மறைந்து மின்னணு பணப்பரிமாற்றம் வரும் போது ஊழல் லஞ்சம் முற்றிலும் ஒழியும் ஏனென்றால் யார் பணத்தை யாரிடம் கொடுத்தார்கள் என்று சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். இன்னும் நிறைய இருக்கிறது உங்களை போல் தான் எனக்கும் தூக்கம் வருகிறது…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s