சுந்தர ராவ்: காகித மடிப்புகளின் மூலம் வடிவவியல்/கணிதம் கற்றுக்கொள்வது எப்படி? (1893)
May 6, 2017
குழந்தைகளுடன் கணிதத்தை நோண்டுவதற்குத் தோதாகவென்று பலப்பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாமகோ சுந்தரராவ் அவர்கள் எழுதியுள்ள இப்புத்தகம். Geometric Exercises in Paper Folding – எனும் அழகு. T Sundara Row எனும் சென்னைவாசி கணித ஆசிரியர் ஒருவரினால் எழுதப்பட்டு 1893ல் வெளியிடப் பட்டது.
-0-0-0-0-0-0-
இது 1893லேயே எழுதப்பட்டது என்றாலும் அது அக்காலத்தில் மிகவும் பேசப்பட்டிருக்கிறது என்றாலும், அந்தக்கால இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் [அதாவது ஆனானப்பட்ட அந்த வெள்ளக்காரன்களே ஒத்துக்கொண்டான்கள் என்றால் புத்தகத்தின் தரத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்! :-( ] இதனைப் பள்ளியாசிரியர்கள் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் – நான் இதனைப் பற்றித் தெரிந்துகொண்டது என்னவோ, 1985 வாக்கில்தான்!
என் கல்லூரிக்குப் பின்னால் அப்போது ஒரு குக்கிராமமாய் இருந்த தரமணியின் அரசாங்க ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதற்குத் தோதான (+ குறைந்த செலவில் நிறைய கற்றுக்கொள்ள, இருக்கும் பொருட்களை வைத்துகொண்டு அறிவியலை அணுக ஏதுவான முன்னெடுப்புகளை உடைய) புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது எனக்கு. இதுவும் ஒரு அமெரிக்க அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர் தாத்தா மூலமாக வந்ததுதான். (அவர் அப்புத்தகத்தின் ஸெராக்ஸ் நகலை எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார்)
அதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது என்னவென்றால் – அடடா, என்னுடைய குழந்தைப்பருவத்தில் இது எனக்குக் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! தமிழ் நாட்டுப் பாடபாடாவதி நூல்நிறுவனத்தின் ஆபாசங்களைப் பார்த்து பொருமிக் கொண்டிருந்திருக்காமல் அழகான அனுபவங்களில் திளைத்திருக்கலாமே என்று!
ஒரு வெள்ளைக்காரன் சொல்லித்தான் நமக்கு நம் சென்னையில் மெட்ராஸில் பதிப்பிக்கப்பட்ட ஒரு புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடுமோஎன்று.
இம்மாதிரி புத்தகங்கள் பலப்பல எழுதப் பட்டிருக்கின்றன [என் (அம்மாவழித்) தாத்தா எனக்கு இதனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்கூட] என்றாலும் – இந்தப் பாரம்பரியம் ஏன் ஒழிந்தது, என்று!
இம்மாதிரிப் புத்தகங்களைப் படித்து வளர்ந்தவர்களின் நான்காம்/ஐந்தாம் தலைமுறையினர் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும் – ஆனால் இவர்களின் 1% ஆசாமிகளுக்காவது இவற்றைப் பற்றி காற்றுவாக்கில் கேட்டதான கேள்வி ஞான எழவாவது இருக்குமோ என்று!
ஏன் இம்மாதிரிப் புத்தகங்களின் வாலைப் பிடித்துக்கொண்டு – நம்மூர்களில் இருந்து ஒருவர் கூட ஆழமான கெடல் ஈஷர் பாக்ஹ் வகை புத்தகங்களை எழுதமுடியவில்லை என்று! (நமக்கு இல்லாத பண்பாட்டு, அறிவியல், தொழில் நுட்பப் பாரம்பரியங்களா?)
ஒரிகாமி கிரிகாமி என மானாவாரியாக ஜல்லியடிக்கப்படும் இக்காலங்களில், அரைகுறை அற்ப விற்பன்னர்களால் ‘பாபுலர் ஸைய்ன்ஸ்’ பொழுதுபோக்கு அறிவியல் புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்படும் இச்சமயங்களில் – ஒருவர் கூட இந்தப் பழைய அழகைப் பற்றித் தெரிந்துகொண்டதாகக் கூடப் படவில்லையே என்று.
இம்மாதிரிப் புத்தகங்கள் எழுதப்பட்டு 125 வருடங்கள் ஆகியும்கூட இன்னமும் ஒண்ணோனொண்ணு ரெண்டோன்ரெண்டு என்றே நம் பள்ளிகளில் சகட்டுமேனிக்கு ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறோம் என்று!
திராவிடத்தால் நம் கல்வியின் நிலையிலும் நாம் ஏகோபித்துச் சாதித்துள்ள கடாகடா குடுகுடு கிடுகிடு பள்ள வீழ்ச்சிகளுக்கு ஒரு முடிவே வராதா என்று.
சரி. இன்றுதான் தெரிந்துகொண்டேன் – அதாவது நண்பர் அர்விந்த் குப்தா அவர்கள் இந்தப் புத்தகத்தையும் ஸ்கேன் செய்து தரவேற்றியிருக்கிறார் என்று. :-) A pleasant trip down the memory lane, what else! :-)
முழுப்புத்தகத்தையும் தரவிரக்கிக் கொள்வது மட்டுமல்லாமல், இந்தப் பதிவையும் மண்டையில் அடித்துக்கொண்டு முழுவதும் படித்திருக்கும் தாங்கள்:
1. அதனை முழுவதும் படிக்கவேண்டும், அவசியம்!
2. அதில் உள்ள அழகான சின்னஞ்சிறு காகித வடிவமைப்புகளை உங்கள் குழந்தைகளுடனோ, பிற குழந்தைகளுடனோ சேர்ந்து செய்து மகிழ்ச்சியடையவும்.
இவை என் கோரிக்கைகள்.
மூன்றாவதாக – என்னைப் படுத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் காத்திரமாக பதில்கள்/எதிர்வினைகள் இருக்குமானால் – அவற்றை உங்களுக்கு வெளிப்படுத்தவும் / பதிக்கவும் முடியுமானால் – பாதி ராஜகுமாரியும் ராஜ்யமும் உங்களுக்கே!
May 6, 2017 at 20:47
Thanks a lot for sharing. I kindly request you to suggest some more useful books in maths and science like this.
May 7, 2017 at 08:59
Thanks a lot.
May 7, 2017 at 21:24
Thanks very much
May 8, 2017 at 20:33
I have forwarded this article to my cousins who are teachers
Thanks
May 8, 2017 at 22:40
Thanks lot Sir, for a wonderful book by Sundararow. Keep update good things to us. RegardsS Velumani
May 19, 2017 at 17:23
Thank you!
May 22, 2017 at 15:53
I forwarded to my grand-children as I found it very interesting.
July 22, 2020 at 11:05
[…] […]
July 22, 2020 at 11:05
[…] […]
July 23, 2020 at 07:44
Thanks for the link.