ராம்நாத் கோவிந்த், நம் எதிர்கால ஜனாதிபதி – அதிஅற்புதமான, சான்றோர்-கருத்துகளைக் கோடிகாட்டிச் சில குறிப்புகள் (தொடர்ச்சி)
July 2, 2017
ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன…
…கவலை வேண்டேல். இதுதான் கடைசி. (ஹ்ம்ம்… + 1 வரலாம். திருவண்ணாமலைக்காரர் தொடர்பதிவுக்காகப் பிடுங்கி எடுத்ததினால் இப்படி. மன்னிக்கவும்)
- ஆ! அவரைக் கருவியாக உபயோகித்து பாஜக ‘தலித்’ ஓட்டுகளை அறுவடை செய்ய நினைக்கிறது
- அவரைத் தலைவராக வைத்துவிட்டு ‘தலித்’களுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடப் போகிறது
- இதுவரை என்ன பெரிதாக இவர் செய்து கிழித்து விட்டார்?
- ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?
- ஆஹா! இவர் இன்னொரு பிரதிபா பாட்டில்!
- ஜனாதிபதி பதவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
- கேஆர் நாராயணனும் ‘தலித்’தான்! எவ்ளோ சாதனைகளைச் செய்திருக்கிறார் அவர்! ஆனால் அவருடன் பொருத்திப் பார்த்தால் ராம்நாத் சாதித்திருப்பது என்ன?
- ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மதச்சார்பற்றவர்-சான்றிதழ் இல்லை. ஆகவே.
- ராம்நாத் கோவிந்த் ‘தலித்’தான், ஆனால் ‘தலித்‘ அல்லர் (ஏனெனில் நாங்கள் ‘தலித்’ கட்சி, எங்களுக்கும் பேத்துரிமை இருக்கிறது)
சரி. இப்போது ஒவ்வொன்றாக, நம் நடிப்புச் சிகாமணிகளின் சிந்தனைச் சிதறல்களைப் பார்க்கலாம்: முதல் மூன்று உளறல்கள் பற்றி இப்பதிவில் – பிறவற்றை அடுத்த (சர்வ நிச்சயமாகக் கடைசி) பதிவில் பார்க்கலாம்!
ஆ! அவரைக் கருவியாக உபயோகித்து பாஜக ‘தலித்’ ஓட்டுகளை அறுவடை செய்ய நினைக்கிறது
¯\_(ツ)_/¯
அய்யன்மீர் – நம்மைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் என எதற்கு இருக்கின்றன? சும்மா நாக்கை வழித்துக்கொள்ளவா அவை நடத்தப் படுகின்றன? சும்மா பேத்தாதீர்கள்!
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் குறிக்கோள்கள் எனச் சில இருக்கும். அவற்றை முன்னெடுத்து அரசியல் அதிகாரத்தை அடைந்து அக்குறிக்கோட்களை அமல் படுத்துவது என்பது ஒரு ஒப்புக்கொள்ளப்படவேண்டிய விஷயம்.
எடுத்துக்காட்டாக, நம் தமிழகத்தின் செல்லங்களாக திராவிடக்கட்சிகளின் குறிக்கோட்கள்: தீவட்டிக்கொள்ளை, அடுக்குமொழி, ஜிகினா, கேளிக்கை, கொலை, பாலியல் பலாத்காரம், தலைமைகளின் அடுத்த ஆயிரம் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்தல், எதற்கெடுத்தாலும் லஞ்சம், ஜாதிவெறி, மதச்சார்பின்மைவெறி – போன்ற உன்னதமான தரத்தைச் சார்ந்தவை. ஆக, இக்கட்சிகள் அரசியல் அதிகாரத்தை அடைந்து பின்னர் சென்றடைய விழைவது -இக்குறிக்கோட்களையே! இதைப் பற்றி நாம் ஒன்றுமே சொல்வதில்லையே!
இன்னொரு எடுத்துக்காட்டாக – காங்கிரஸ் கட்சி தன் குறிக்கோளான பரந்துபட்ட ஊழலைச் செய்ய. மதச்சார்பின்மை பேடித்தனத்தைத் தொடர அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோமா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் குறிக்கோட்கள் – புரட்சி செய்வது, கோஷ்டம் போடுவது, அவ்வப்போது கூட்டம் போட்டு அதுவரை அவர்கள் செய்தவையைத் தவறு என்று உணர்வது, பின்னர் அதேரீதியில் தவறுகளை மேலும் தொடர்ந்து செய்வது, கோகாகோலா நிறுவனத்துக்கு எதிராகப்போராடும் போது வெகு கவனமாக அதே நிறுவனத்தின் கின்லே பாட்டில்களிலிருந்து தண்ணீர் குடிப்பது, திக்குத் தெரியாத காட்டில் ஃபுல் மார்க்ஸ் (முழு மதிப்பெண்கள்) வாங்க அலைவது, முதலாளியத்தை நுரைதள்ள எதிர்த்துக்கொண்டே வெளி நாட்டு மூலதனத்துக்காக அல்லாடுவது – இன்னபிற. இவர்கள் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் இதனைத்தானே செய்கிறார்கள்? இதற்கு நாம் ஒன்றும் சொல்வதில்லையே!
…அதேபோல, பாஜகவும் (ஜன நாயக ரீதியில்) – நம் சமூகத்தில் சிலபல மாற்றங்களைக் கொணர நினைக்கிறது. அதையும் முடிந்தவரை எதிர்ப்புகளை மீறி, ஊடகப் பேடிகளை எதிர்கொண்டு சாதுர்யமாகச் செய்யவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு அங்கமாக – பதவியின் மாண்புக்குச் சரியான அட்டவணை மக்கள்திரள் சார்ந்தவர் ஒருவரை போட்டிக்கு நிறுத்துகிறது.
இதனை வெளிப்படையாகச் செய்கிறது. இதிலென்ன தவறு?
இந்த ராம்நாத்-ஜனாதிபதி விஷயத்தில் சும்மனாச்சிக்கும் கூவிக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியையே எடுத்துக் கொள்வோம். அதன் தற்போதைய தலைமை கொஞ்சம் வால்மை போலிருப்பதால் – அதனைச் சரிகட்ட சமூக நல்லிணக்கத்தை கட்டியமைக்க, உட்கட்சியிலாவது நம்பகத்தன்மையைக் கொணர தொல் திருமாவளவனார் தம் பதவியை ராஜினாமா செய்து ஒரு அருந்ததியருக்கோ, ஒட்டருக்கோ – பாவப்பட்ட இவர்களையே விடுங்கள், தேவேந்திரகுலத்தவர் யாரையாவதுகூடக் கொணர்வாரா? அல்லது ஜவாஹிருல்லாக்களைக் கொணர்வாரா?
மாட்டார். ஏனெனில் அவருக்கு (தன் கட்சியிலாவது) ஏகோபித்த அரசியல் அதிகாரம் தேவை. அது கொணரும் ஆதாயங்கள் தேவை.
ஆனால் – இதே விஷயத்தை, அதாவது தலைமையைப் பரந்துபட்டதாக பாஜக செய்தால் அது தவறு. இதைச் சொல்வது — ஜாதிவெறியினால் பீடிக்கப்பட்டு வன்னியப் பெண்களைக் கேவலமாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய அதே திருமாவளவன். நல்லா வெளங்கிடும்டா வொங்க கச்சீ!
…நமது அரைகுறைத் தலைவர்களின் அற்ப அலப்பரைகளுக்கு எல்லையே இல்லை!
அறுவடை என்பது கெட்ட வார்த்தையல்ல. நேர்மையாக உழைத்து மஹஸூல் எடுத்திருப்பவனுக்குத்தான் தெரியும், இதைப் பற்றியெல்லாம். ஆனால் இந்தியா ஒரு சுதந்திர நாடு. அமோகமாக உளறுபவதற்கும் உரிமையுண்டு – அதற்கு வரியும் இல்லை. நன்றி!
ஓட்டுகளை அறுவடை செய்யத்தான் கட்சிகள் இருக்கின்றன – உங்கள் கம்மீனிஸ்ட் கட்சிகள் உட்பட. அறுவடை செய்தால்தான் அரசியல் அதிகாரம். அதிகாரம் இருந்தால்தான் குறிக்கோட்களை எட்ட முடியும்.
… எது எப்படியோ – அரசியலைப் பற்றிய அரிச்சுவடியைக்கூட அறியாமல், அதேசமயம் மினுக்கல்தனமாக உளறிக்கொட்டாமலிருந்தால் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும், அய்யன்மீர்!
அவரைத் தலைவராக வைத்துவிட்டு ‘தலித்’களுக்கு எதிரான அடக்குமுறையை, பாஜக கட்டவிழ்த்துவிடப் போகிறது
:-) அப்படியா என்ன? எப்படி அய்யா உங்கள் மூளையற்ற மொட்டைத் தலைகளுக்கும் முழங்கால்களுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?
…ஆமாண்டா! மோதி ‘பிற்படுத்தப் பட்ட’ மக்கள்திரளைச் சார்ந்தவர். அவரைப் பிரதமராக வைத்துவிட்டு அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறையை பாஜக கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறது.
அமித் ஷா ஒரு ஜெயின் ஆசாமி. ஆக அவரைத் தலைவராக வைத்துவிட்டு ஜெயின்களுக்கு எதிரான அடக்குமுறையை பாஜக கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறது.
தமிழிசை ஒரு தமிழச்சி. ஆக, அவரை மாநிலத் தலைவராக வைத்துவிட்டு தமிழ்ப் பெண்டிருக்கு எதிரான அடக்குமுறையை பாஜக கட்டவிழ்த்துக் கொண்டே இருப்பது மட்டுமல்லாமல், ஊக்க போனஸாக – தமிழ் இசையையும் ஒழிக்க நினைக்கிறது! கர்நாடக இசையையும் ஹிந்துத்துவாஸ்தானி இசையையும் திணிக்கிறது! ஐயகோ!
இப்படியே உங்கள் தர்க்க அறிவை நீட்டித்தால்…
ரயில்வே அமைச்சகம் ரயில் சேவையை மூடப் போகிறது!
பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானைப் பாதுகாக்கப் போகிறது!!
தகவல்தொடர்பு அமைச்சகம் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கே கதி என்று இருக்கப் போகிறது!!!
… போங்கடா, போக்கத்த முட்டாக்கூ கருத்துதிர்ப்பாளர்களா!
யாரிவர்? இதுவரை என்ன பெரிதாக இவர் செய்து கிழித்து விட்டார்?
இதை, மெத்தப் படித்த மேதாவிகளே சொல்கிறார்கள். சோகம்.
உண்மையைச் சொல்லபோனால், பெரும்பாலான கருத்துதிர்ப்பாளக் கூவான்களின் பப்பரப்பா உணர்ச்சிகளுக்கு தீனி போடும் படிக்கு இந்த கோவிந்த் ஒன்றும் செய்யவில்லை. மண்வெட்டியெடுத்து பிலிம்தனமாகப் போஸ் கொடுக்க அவர் இசுடாலிர்தனமாகவெல்லாம் முயற்சிக்கவேயில்லை! என்ன கேவலம் பாருங்கள்!
மாறாக – அவர், தன் காரியமுண்டு தம் சேவையுண்டு என இருந்திருக்கிறார், பாவம். இப்படியிருந்தால் அரைகுறைகளான நாங்களெல்லாம் அவரைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்ளமுடியும் சொல்லுங்கள்?
இவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோது இவருடைய நேர்மையும் நிதானத்தையும் பலமுறை கேள்விப்பட்டு வியந்திருக்கிறேன். இத்தனைக்கும் இவர் ஸெயிண்ட் ஸ்டீஃபன்ஸ் ஜேஎன்யு போன்ற எழவுகளிலெல்லாம் படித்தவர் அல்லர். லுட்யன்ஸ்தனமான நுனிநாக்கு ஆங்கிலத் திமிரோ பொய்மையோ திராவிடக் கொள்ளைத்தனமோ இல்லாதவர். ஆகவே ஆங்கில ஊடகப் பேடிகள் இவரைப் புறக்கணித்தனர். ஏனெனில் இந்தப் பேடிகளுக்குத் தேவையான தீனியை/பலியை (உளறலாளர் மணிஷங்கர அய்யர் போலவோ, நடிகர்பொட்டு இசுடாலிர் போலவோ, பெரியார்மூடமடத் தம்பிரான் வீரமணி போலவோ – ஏன், உதிரித்தனமாகச் செயல்படும் இந்த உள்ளீடற்ற தொல்திருமாவளவன் போலவோ கூட) இந்த மனிதர் போடவேயில்லை. என்னைப் பொறுத்தவரை அவருடைய கண்ணியமான செயல்பாட்டுக்கு இந்தச் சான்று ஒன்றே போதும்.
அது மட்டுமல்ல – நிதிஷ் குமார் போன்ற ‘க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம்’ ஆட்டக்காரர்களுடன், பிறழ்ச்சி இல்லாமல் சச்சரவில்லாமல் மரியாதையுடன் செயல் பட்டிருக்கிறார் (அவர் அண்மைக் காலம் வரை பிஹாரின் கவர்னராக இருந்தவர்) வேறு!
(ஹ்ம்ம்… எனக்கும் இந்த கோவிந்த் அவர்களைப் பற்றிச் சுமார் பத்துப்பனிரெண்டு வருடங்கள் முன்னர் தாம் தெரியும். பொய் சொல்லக் கூடாது; ஆனால் என்றுமே, எனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி இன்று தெரிந்துகொண்டதால் மட்டுமே அது முன்னமே இருந்ததேயில்லை என அழிச்சாட்டியப் பேடித்தனத்தைச் செய்யமாட்டேன்! மேலும் எனக்கு ஒருவிஷயம் பற்றித் தெரியவில்லை என்றால், தாராளமாக அதனைப் பிரகடனப் படுத்துவதில், சரியாகக் கற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை; எனக்குத் தெரியவராத விஷயம் முக்கியத்தனம் இல்லாததுதான் என உளறிக்கொட்டவும் மாட்டேன்! இந்தக் கல்யாணகுணங்களுக்கு – நான் இரண்டு உண்மைகளுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் 1) நான் தொழில்முறை அறிவுஜீவியோ போராளியோ அல்லன் – மாறாக உழைத்துச் சாப்பிடுபவன் 2) நான் ஊடகப் பேடியுமல்லன். நன்றி!)
-0-0-0-0-0-0-
பிற கேள்விகள் – அடுத்த பதிவில்…
- ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?
- ஆஹா! இவர் இன்னொரு பிரதிபா பாட்டில்!
- ஜனாதிபதி பதவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
- கேஆர் நாராயணனும் ‘தலித்’தான்! ஆனால் அவருடன் பொறுத்திப் பார்த்தால் ராம்நாத் சாதித்திருப்பது என்ன?
- ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மதச்சார்பற்றவர்-சான்றிதழ் இல்லை. ஆகவே.
- ராம்நாத் கோவிந்த் ‘தலித்’தான், ஆனால் ‘தலித்’ அல்லர்
July 4, 2017 at 17:24
ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல. உங்க கவலைகளை மறந்து சிரித்திட ஒரு கிவிதை… யார் எழுதியது அறிமுகமெல்லாம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். (ஒரு வேளை தெரியவில்லையெனில் நீங்கள் தமிழனே அல்ல என்று பொருள்.)
பல நாட்களுக்கு முன்பே பத்திரிகை நிருபர் ஒருவர்
சில கேள்விகளை சிறப்பாக என்னிடம் கேட்ட போது;
உலகில் நீங்கள் பார்க்க விரும்புகிற தலைவர்கள் யார் என்று
ஒரு கேள்வியை வைத்தார் – நான் பதில் அளித்தேன்.
நான் பார்க்க விரும்பிய; எனக்குப் பயிற்சி அளித்த தலைவர்கள்;
பகுத்தறிவுப் படிப்பளித்த தலைவர்கள் பெரியாரும் அண்ணாவும்
கர்ம வீரர் காமராஜரும், செங்கொடிச் சிங்கம் ஜீவானந்தமும்
நாட்டுத் தலைவர்கள் – நல்வழி காட்டும் தலைவர்கள் என்றேன்.
உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!
இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய ‘பாடிஸ்டா’ எனும் பசுத்தோல் வேங்கை;
அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான்
“வரலாறு என்னை விடுதலை செய்யும்’’ எனும்
வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ், சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!
பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் –
பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு;
ஈ.டு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது – அந்த
சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!
தங்கத் தம்பியாம் ரால் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி – இனி
கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு;
நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!
கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்!
கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;
சோதனைகளை சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,
சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,
மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!
‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு
ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு!
தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம்
கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் – அந்தக்
கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!
நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் – மக்கள்
நலம் பெருக்கும் சாதனைகள் பலவும்
இல்வாழ்வையும் துறந்து
இலட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின்
புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய்
புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டேயிருக்கின்றன.
உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப் பேசுமளவுக்குக்
கரும்பு வயல்களைக் கொண்ட கியூபாவில்
சர்க்கரை வாங்குவதையே நிறுத்தி பொருளாதாரச்
சரிவு ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமான போது;
சீனாவும், சோவியத்தும் தான் சிநேக நாடுகளாய்க்
காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்த கதை உலகறியும்!
“வாழை தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால்
யானை முறித்துப் போட்டு விடும்
அந்த யானை போன்றதே அமெரிக்கா’’ என்றனர்.
அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை.
வாழை மரம், தென்னை மரங்களை; யானை
, வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக!
ஆனால் அங்குசத்தை யானை விழுங்க முடியுமா?
அங்குசந்தான் கியூபா; அமெரிக்க யானைக்கு!
இந்தியா என்றைக்குமே கியூபாவின்
இணை பிரியாத் தோழனாகவே இருந்து வருகிறது –
இனியும் அப்படியே இருக்கும் – இதற்கு
எங்கள் கழக ஒத்துழைப்பு எப்போதும் நிலைக்கும்.
இருபது ஆண்டின் முன்னே இந்தக் கியூபா நாடு
இறுகிய பொருளாதாரத் தடையால் இன்னலுற்ற போது
இரண்டு கப்பல்களில் இன்றியமையாப் பொருள்களை
இந்தியா அனுப்பி வைத்து, நட்புக்கு இலக்கணமாகவும்
நாடுகளிடையே வளர வேண்டிய நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகவும்;
நலிவுற்றவரை நசுக்க முனையும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாகவும்;
அமைந்ததை அகில உலகமே அறியும் –
அதையெண்ணி இன்றைக்கும் மகிழும்!
வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்த போது – பல
நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில்
முப்பத்திரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக
முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ
முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா –
அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு அணியாக
ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த போது;
அது தான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்று –
மக்களைத் திரட்டினார் காஸ்ட்ரோ –
மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்;
பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது
பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் – அவரைப்
பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்;
பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் –
அடையாளம் என்பதை இந்த அவையோரும் அறிவீர்
அடியேனும் அறிவேன் –
நம் கொடியின் நிறத்திலும் சிவப்பு –
நம் குருதியின் நிறமும் சிவப்பு –
கொள்கையிலும் மாறுபாடில்லை என்பதில் ஓர் உவப்பு!
கொண்டாடுகிறோம் கியூபா தினம் என்பதால் பெருங்களிப்பு!
சமதர்மம் சமத்துவத்தைப் பரவச் செய்து;
ஜனநாயகத்தை வளரச் செய்வதே இந்நாளின் நோக்கம்!
எஃகு உள்ளமும் இலட்சிய தாகமும் இழிவுகளைப் போக்கும் –
ஏழைபாழைகள் ஒன்றுபட்டால் புரட்சி மலர் பூக்கும்!
வாழ்க கியூபா!
வாழ்க பிடல் காஸ்ட்ரோ!
July 4, 2017 at 17:34
இந்தக் கிவிதையை கனகாரியமாக கட் பேஸ்ட் செய்ததற்கு எம்மை நீர் திட்டுவதாயிருந்தால் திராவிட அடுக்குமொழி கிவிதை நடையில்தான் திட்ட வேண்டும் என்பது நிபந்தனை.
July 5, 2017 at 11:53
ஆனந்தம்!
சிரித்து மாளவில்லை. தெலெங்காணா டொக்கொன்றில் சலித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் எனக்கு, என் தானைத்தலைவரின் கிவிதையை அனுப்பி மிரள வைத்ததற்கு நன்றி…
அவருடைய எழவெடுத்த பிழைகள் மலிந்த தமிழையே விடுங்கள் – தகவல்களிலும் மகா பிரச்சினைகள்!
‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!’
‘எத்தனை எத்தனை காலம்தான் பொறுத்திருப்பார் இந்த நாட்டிலே’
வாழ்க!
July 5, 2017 at 13:46
திராவிடத் திட்டு? ஏமாந்து விட்டேனா? :-(. Better luck for me next time. Btw உங்கள் நன்றிகளை உங்கள் படு செல்லமான இளைய கருப்பனாருக்கே நவின்றிட வேண்டும். எது எடுக்கப்பட்டதோ அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது. (காபி, பேஸ்ட் எக்ஸ்பர்டுக்கே காபி பேஸ்டா?)
July 6, 2017 at 12:35
:-)ரிஷிமூலம் நதிமூலம் காப்பிபேஸ்ட்மூலம் நிர்மூலம்…
கடுப்புடன் கடிமையாக உழைக்கிறீர்கள் போல!
July 7, 2017 at 13:39
காபி பேஸ்டுக்கு எவ்வளவு கடுமையான உழைப்பு தேவைப்படும்னு காபி பேஸ்ட் எக்ஸ்பர்டுகளுக்கு மட்டுமே தெரியும். ;-)
July 5, 2017 at 09:13
ram, am tired of having to followup with you.
either you complete the series or in future, don’t ever start writing something that you can’t finish.
July 5, 2017 at 12:00
Yov, thatthaa! adeeng *^$#@!
Since when did reading my stupid blog became your freakin’ birthright?
Sorry, we haven’t signed any SLA. So, keep quiet, will ya? I will write when I can and when I should.
‘பொறுத்தது போதும் பொங்கியெழு மவனே!’
__r.
July 7, 2017 at 14:04
ராம்நாத் தலித் தான். ஆனால் தலித் அல்லர். -இப் பதிவைத்தான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
July 7, 2017 at 15:03
அய்யா பரமசிவம், எவ்வளவுபேர் இப்படி நெருக்கடி கொடுப்பதற்குக் கிளம்பியிருக்கிறீர்கள்!
உங்களுக்கெல்லாம் வேறு வேலைவெட்டியே கிடையாதா? (அதாவது, என்னைப்போலத்தானா நீங்களும்?)
March 6, 2021 at 09:58
[…] […]