இசுடாலிர் அவர்களின் பிரமிக்கவைக்கும் நகைச்சுவை உணர்ச்சி?

April 29, 2017

…அல்லது இவையெல்லாம் தன்னிலை விளக்கங்களா? திராவிடராக மாறிக்கொண்டிருக்கிறார்களா தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்?

அல்லது திமுக இளைஞ்ஜர் அணி எனும் விலாநோகச்சிரிப்பை திமுக தாத்தா அணி எனமாற்றி – பின்னர் அதற்கு மிகச் சரியாகவே தலைவராக நீடிக்கப்போகிறாரா எம் திராவிட வாரிசு?

ஆக, தாத்தாக்களுக்கே (+பாட்டிகளுக்கும்) இருக்கக்கூடிய உலக ஞானமும் சமனமும் இறப்பின் அணுக்கமும் — இசுடாலிரை இப்படித் தத்துப்பித்துவார்த்தரீதியில் பேத்த  வைக்கின்றனவா?

…அல்லது திமுக  –  திராவிட முன்னேற்றக் கலகம் என மாறிக்கொண்டிருக்கிறதா?

1970களின் மேதகு கருணாநிதி அவர்கள்,   ஜொலிக்கும் மொரார்ஜிபாய் + ஜெயப்ரகாஷ்நாராயண் கால்களில்  (உண்மையாகவே) வீழ்ந்துபுரண்டு தம்மைக் காப்பாற்றும்படிக்கு  வேண்டியதைப் போல — 2ஜி வழக்கில் நீதி வரப்போகும் இக்கால கட்டங்களில்  கும்பலோடு கோவிந்தா என பாஜக-விடம் சரணடையப் போகிறதா? (ஆனால் முன்னதிலும் சரணாகதி ஒத்துவரவில்லையே!)

தீராவிடம் தன்னை தூர்வாரி இறைத்துக் கொண்டிருக்கிறதா? சுத்திகரிப்பு செய்துகொண்டிருக்கிறதா? இருக்காதே! திராவிடத்தின் மரபணுவில் நேர்மையோ பொது நன்மையோ தேசவளர்ச்சியோ ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகளே சுத்தமாக இல்லையே!

அல்லது தொடர்ந்த திராவிட அயோக்கிய மாய்மலங்களின் இன்னொரு காட்சியா இது?

“இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அறிவியல் ரீதியான நடைமுறைகளை கடைபிடித்து எல்லை கடந்த அதிகார துஷ்பிரயோகத்தை செய்வதுதான் .. … தேர்தல் பணி “

புதியதலைவலி ஊடகப்பேடிகளின் சுட்டி:  (எச்சரிக்கை: மேற்கோளில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக ‘எடிட்’ செய்திருக்கிறேன். தீராவிடத்தில் அதிமுகவென்றும் திமுகவென்றும் உண்டோ?)

…குறிப்பாக, ‘அறிவியல் ரீதி’ என்பதை அவதானித்தால் சர்க்காரியா முதல் மேம்பாலங்கள் ஊடாக  திருமங்கலகரமான நினைவுகளும் அண்ணா நகர் ரமேஷ் (தற்)கொலை முதல் சாதிக்பாட்ஷா (தற்)கொலை போன்றவைகளும் நினைவுக்கு வருவது, நம்மை திக்குமுக்காட வைப்பது – போன்றவையெல்லாம் நம்மால் மண்டயில் அடித்துக்கொண்டு ஒப்புக்கொள்ளப் படவேண்டிய விஷயங்களே!

சரி, இதையாவது ஏதோ தூக்கக் கலக்கத்தில், கொள்ளைக் குழப்பத்தில் உண்மையை உளறிவிட்டார் என எடுத்துக் கொள்ளலாமா என விட்டுவிடலாமா எனப் பார்த்தால்…

-0-0-0-0-0-0-

…இப்படி இன்னொரு வெடிகுண்டு!

பொது வாழ்வில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி ஜனநாயகம் அருகிக்கொண்டே செல்கிறது: மு.க.ஸ்டாலின் (புதியதலைவலி ஊடகப்பேடிகளின் சுட்டி)

ஆ!

இப்படியெல்லாம் ஒருவர் (அவர் இருக்கும் நிலையில் இருந்து) கூச்சமேயில்லாமல் பேசுகிறார் என்றால் ஐந்து  விஷயங்கள் உண்மை:

 1. தமிழனின் ஞாபக சக்தி மிகவும் குறைவு. குறிப்பாக, திராவிட லட்சணங்களைப் பற்றிய வரலாற்றறிவு பூஜ்யம்.
 2. வாய்கூசாமல் தொடர்ந்து பொய் சொல்வான், வெட்கமேயற்ற அயோக்கிய திராவிடன்.
 3. சராசரி திராவிடக்கூ அரசியல்வாதிக்குத் தெரியும் – விசிலடிச்சான் குஞ்சப்ப, லஞ்சம்கேட்கும் வாக்காளர்களுக்கு – தாம் பேசுவதைப்  பற்றி ஒரு மசுத்துக்கும் கவலையில்லை என்பது.
 4. தமிழர்கள் கேளிக்கைமுதல்வாதிகள். திராவிடர்கள் கொள்ளைக் கோமாளிகள்.  இவர்கள் இருவரும் சேர்ந்த கூட்டணியால் தமிழகம் வெளங்கிடும்டா.
 5. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்; இதையும் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டே இருப்பார்கள்.

… தீராவிட மாய்மலங்களில் இருந்து நம் தமிழகமும் பாரதமும் விடுபடுவது எப்போது?

எனக்குப் பொறுமையே இல்லை. :-(  அந்த ஒளிரும் எதிர்காலத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

…ஹ்ம்ம்ம். பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகின்றதென்று… நான் நன்னம்பிக்கைவாதியே! :-)

தற்குறிப்பு: கடந்தகாலங்களில், இந்த புதியதலைவலிக்காரர்கள் வாய்கூசாமல் பப்பரப்பாக்களைப் பரப்பியிருப்பதை நான் அறிவேன்; அவர்கள் இப்போது அப்படி இல்லாமலிருக்கலாம், எனக்குத் தெரியாது. இருந்தாலும் — மேற்கண்டவை போல் இசுடாலிர் உளறிக்கொட்டவில்லை என எனக்கு யாராவது. நம்பகத்தன்மையுள்ள ஆதாரங்களுடன் தெரிவித்தால், தாராளமாக என்னைத் திருத்திக் கொள்கிறேன்; நன்றி!

4 Responses to “இசுடாலிர் அவர்களின் பிரமிக்கவைக்கும் நகைச்சுவை உணர்ச்சி?”

 1. A.SESHAGIRI Says:

  சாத்தான் ஓதும் முழு வேதத்தையும் தங்களுக்கு இந்தச் சுட்டியின் மூலம் சமர்ப்பணம் செய்கிறேன்!

  https://minnambalam.com/k/2017/04/29/1493404235

  “யாம் பெற்ற வயித்தெரிச்சலை நீரும் பெறுக !!”

  “பழிக்கு பழி “

  • mekaviraj Says:

   << இதுபோன்ற சமயத்தில் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில் எழுந்திருப்பதை காண முடிகிறது. – ஆக அப்பகூட இவருக்கு ஒன்னும் காணலை இளைஞர்கள் மத்தயில் காணுதாம் :)

 2. Aathma Says:

  It shows they are safe and secure, no skeletons in their cupboard.

 3. mekaviraj Says:

  அன்புள்ள ராம்,
  twitter timeline -இல் இளைஞர்கள் எப்படி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதை கண்டு அமைதி கொள்ளவும் :)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s