…நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்

July 9, 2017

‘விடுதலை’களுக்கும் என்டிடிவி ஸன்டிவி கும்பல்களுக்கும் ஈடு கொடுக்கும்படியான – இந்த அண்டப்புளுகு ஆனந்தவிகடன் குழுமத்தின் அயோக்கிய செய்தி திரித்தல்களை படிக்கும்போதெல்லாம் (எப்போதாவது ஒருமுறை அவற்றை ஒரு நோட்டம் விட நேரும்போதும் கூட) எனக்குப் பயங்கரமாக எரியும். வயிற்றில் அமிலம் சுரக்கும்.

…உடனடியாக இப்புரளிவாதிகளைக் கிழிக்கவேண்டும் என ஆரம்பிப்பேன் (கடந்த 3-4 வருடங்களில் தொடங்கிய சுமார் 40 இப்படியாப்பட்ட பதிவுகள் ‘வரைவு’ நிலையிலேயே இருக்கின்றன – இவற்றில் பாதியாவது அந்த பசுமைமஞ்சள்விகடன் உளறல்களுக்கு, அப்பட்டமான பீதிவாதத்துக்கு எதிராக) ஆனால் அதன் பொய்ச் செய்திகளைத் தொடர்ந்து கிழித்துக்கொண்டிருந்தால், அவற்றுக்கெதிரான காத்திரமான சான்றுகளோடு எழுதவேண்டுமென்றால் எனக்கு வேறுவேலையே செய்யமுடியாது + மன ஆரோக்கியமும் பாதிக்கும் என (ஒருவழியாக) உணர்ந்ததும் – எப்படியும் விகடன் என்றாலே அகடவிகடம் என்பதால், அது  உயிர்மை, குங்குமக் குமுதம், நக்கீரன்  நாற்றங்களை விடப் படுகேவலமாக இருப்பதால்  – இந்த எழவையே, அடச்சீ போங்கடா அயோக்கிய வி(க)டலைகளா என விட்டுவிட்டேன்.

ஆக, எனக்கு  ignorance is absolute bliss. That is – ignoring the Scoundrel Press, especially of the Vikatan and TheHindu kind – is truly blissful and a blessing in disgust for me. See no Vikatan, hear no Vikatan. Shameless rumour mongering imbeciles, these vikatan types, what else!

…இருந்தாலும் சிலபல சமயங்களில் நண்பர்கள் சிலர் தேவைமெனக்கெட்டு வெட்டியொட்டி அனுப்பும் விகடப் பேடித்தனங்களால் நான் துணுக்குறுவதும் நடந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கை தொடர்ந்து இனிமையாக இருந்தால் எனக்குப் பிரச்சினை அல்லவா, அதனால்தான் நண்பர்களுக்கு அவ்வளவு கரிசனம்.

இப்படி – நம்மாழ்வார், பாளேகர் போன்ற போராளி அரைகுறைகளின் உளறல் கருத்துகளையும் பகுத்தறிவற்ற எதிர்அறிவியல் அட்ச்சுவுடல்களையும் கவனிக்க நேர்ந்தபோதெல்லாம் + அவர்களுக்கும் எனக்கும் பொதுவான குரு – என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய மகாமகோ பெர்னார்ட் டிக்லர்க் என்பதால் – என் குருவுக்கு, அவருடைய விவசாயலோகாயத ஞானத்துக்கு இந்த சிஷ்யகேடிகள் செய்திருப்பது துரோகம் என்பதால் இன்னமும் வயிற்றிலமிலம் சுரக்கும். இந்த அழகில் இவர்களெல்லாம் ‘விஞ்ஞானி’களாம்,  அற்பப் பேடிகள்.

பாரம்பரியம் கீரம்பரியம் என்பார்கள் – ஆனால் அதனையும் ஒரு மசுத்துக்கும் அறியமாட்டார்கள்; ஒரே சமயத்தில் பாரம்பரியங்களுக்கும் அறிவியலுக்கும் எதிரான அறிவிலி நிலையையும் வதந்தி மனோபாவத்தையும் பரப்பி ஒரு தலைமுறை இளைஞக்குளுவான்களையே முட்டாக்கூ வெறியன்களாக்கி விட்டார்கள். இவர்களெல்லாம் பச்சைமுண்டாசு பிரபாகர சீமான்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை!

இத்தனைக்கும் நம்மாழ்வார் வகையறாக்கள் சொல்லியிருப்பதில்/சொல்வதில் சுமார் 10% ஒப்புக்கொள்ளும்படிக்கும் உண்மையாகவும்  (அவர்களுடைய இயல்பைமீறி) இருக்கலாம் என்றாலும் – இவர்கள் மனமறிந்து சொல்லும் பொய்கள் கணக்கிலடங்கா. இதுவும் பெரிய பிரச்சினையில்லை என்றாலும், இந்த உளறல்களைச் சொட்டைத்தலைகளில் வைத்துக் கூத்தாடும் வெட்டிக் கும்பல் அலப்பரைகள் இருக்கிறார்கள் – ஆயிரக் கணக்கில்! ஆகவே, இவர்கள் சொல்வதே ‘அனுபவ’ரீதியான உண்மையாகிவிடுமே என்பதை நினைத்தால்…

சரி, இவர்கள் உளறட்டும் என்று விட்டுவிடலாம் என்றால் – இவர்களுக்கு பயப் பரப்புரை செய்ய ஒரு தட்டிமேடை போட்டுத்தரும் கயமைமிகு குசுமைவிகடன்கள்… கோவணாண்டிகள், மண்புழு மன்னாருகள், மரத்தடி மேடைகள்… ஊழல் பேடிகள்.

தொழில்நுட்பங்களின், அறிவியலின் சகல சாத்தியக் கூறுகளையும் 1000% உபயோகித்துக்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக நமக்குக் கிடைத்த வசதிகளையெல்லாம் உபயோகித்து மேன்மேலும் தங்களை அபிவிருத்தி செய்துகொண்டு – அதே சமயம், கயமையுடன் உலகமயமாக்கல்-ஐயகோ, கார்ப்பரேட் சதித்திட்டம்-சீ, தரகு முதலாளியம்-ஆ, அவன் வாழ்கிறான்-நான் தேய்கிறேன், விவசாயி-தற்கொலைகள், வறட்சி-பாரீர், விளைநிலங்கள்கபளீகரம்-பகீர், ‘கெமிக்கல்’  என்றெல்லாம் வதந்திகள் பல பரப்பி… இயற்கை, பாரம்பரியம், கலாச்சாரம் என்கிற பெயரில் அவற்றையும் ஒரு மசுத்துக்கும் ஆழ்ந்து புரிந்துகொள்ளாமல்  பம்மாத்து செய்யும் கும்பல்கள் இனம் காணப்பட்டு இடக்கையால் புறந்தள்ளப்படவேண்டும். முடிந்தால் காலணிகளால் கன்னங்களில் கொஞ்சம் வேகத்துடன் தடவிக்கொடுக்கப்பட்டு வெளியே விரட்டப் படவேண்டும்!

இந்தக் கேடுகெட்ட விகட அயோக்கியர்கள், வெறும் கந்தறகோளக் கருத்துலகப் பொறுக்கிகள், குயுக்திகள் எனக் கருதப்படக்கூடாது என்றால்:

1. அவர்கள் காடுகளை அழித்து உருவாக்கிய மரக்கூழினால் தயாரிக்கப்பட்ட காகிதத்தில் குசுமை விகடனை அச்சிடக் கூடாது.

2. அவர்கள் உபயோக்கும் அச்சிடும் மசி – அனைத்தும் ‘ஆர்கனிக்’ எழவாகவே இருக்கவேண்டும். அதுவும் செடிகொடி வகைகளை அழிக்காமல் மந்திரமாயமாக இலைதழைகளை (அவற்றுக்கு துன்பம் விளைவிக்காமல்) வெட்டிப் பிழிந்து அந்தச் சாறுகளை வைத்து கலர்கலராக குசுமை விகடனை அச்சடிக்கவேண்டும். (இந்தப் பேடிகள், தற்போதுஉபயோகிக்கும் பெட்ரொலியம் வழி வேதிப்பொருட்கள்சார் நிறங்கள்++ களுடன் டிடிடி(DDT) கலக்கப்படுவது இவர்களுக்குத் தெரியுமா? அது எதற்கென்று தெரியுமா? இவர்கள் செய்வதெல்லாம் ஊருக்கு உபதேசம்! பொய்யர்கள்…)

3. அச்சு இயந்திரங்களை ஒட்டுவதற்கு கையால் இயங்கும் வகைகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும். ஏனெனில் மின்சாரம் உபயோகிக்கும் தானியங்கிகளை உபயோகித்தால் – மின்சாரம் தயாரிப்பதற்கு காடுகள் அழிக்கப் படும், சுரங்கங்கள் நோண்டப்படும், எரிவாயுக்கள் எரிக்கப்படும், புகையினால் சுற்றுச் சூழல் நாசமாகும், அணைகள் கட்டினால் இன்னமும் மோசம், இருக்கவே இருக்கிறது அய்யய்யோ-அணுசக்தி! அம்மாடியோவ்!

4. குசுமை விகடனுக்கு பின் அடிக்கக்கூடாது. வெறும் ஆர்கனிக் பருத்தியினால் செய்த நூலைத்தான் உபயோகிக்கவேண்டும்.

5. இணையதளத்தையெல்லாம், அலுவலக தொலைபேசி அலைபேசி கொலைபேசி எல்லாவற்றையும் இழுத்துமூடவேண்டும்; ஏனெனில் இவையெல்லாம் பன்னாட்டு நிறுவன சதிகார நிறுவனங்கள் செய்த விஷயங்கள் தாமே!

6. பேசாமல் குசுமை விகடனை கையெழுத்துப் பிரதியாகவே நடத்தவேண்டும் – இதையும். தனிச்சுத்துக்கு அல்லது தனிச்சூத்துக்கு மட்டும் என ஓட்டலாம்.

7. வண்டிகளை உபயோகித்து குசுமை விகடனை வினியோகம் செய்வதற்கு பதிலாக நடந்தோ, சைக்கிளில் சென்றோ காலட்சேபம் செய்யலாம். ஏனெனில் வண்டிகள் என்றால் – கார்ப்பரேட் லாபம் – மேலும் புகை – ஆக சுற்றுச்சூழல் மாசடையும் அல்லவா?

8. அலுவலகத்தில் ஒருவரும் பன்னாட்டு நிறுவன லீவைஸ் ஜீன்ஸோ நைகி ஷூக்களோ அணியக் கூடாது. அலுவலக உடை – கோவணம் மட்டுமே. வேண்டுமானால் அது பச்சை நிறத்தில் இருக்கலாம்.

9. பன்னாட்டு நிறுவனம் செய்த எந்தவொரு வஸ்துவையும் உபயோகிக்கக்கூடாது.

10. எதுவும் ஆர்கனிக் எல்லாம் ஆர்கனிக் அதுவும் ‘ஜீரோ’ பட்ஜெட்டில் இருக்கவேண்டும்.

…நன்றி. பின்னர் வாருங்கள், உங்கள் வியாக்கியானங்களுடன், இரட்டை வேடம் போடும் விகடப் பேடிகளா!

-0-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே ஆர்எஸ் பிரபு என்பவர் (யாரிவர், அப்படியே கட்டியணைத்துக் கொண்டு உச்சிமுகர்ந்து முத்தம் கொடுக்கலாம் போல இருக்கிறது) இந்த அகடவிகடனைத் தோலுரித்து, தரவுகளுடன் +அனுபவ ரீதியான அறிவுடன் + குமிழியிடும் நையாண்டியுடனும் ‘கோவணாண்டி’ அவர்களின் கோமணத்தை உருவியிருக்கிறார். (பிரச்சினை என்னவென்றால், இந்தக் ‘கோவணாண்டி’களுக்கு கோவணத்துக்குள்ளும் ஒன்றும் இல்லை, அதற்கு ஒத்தியைபான மண்டைக்குள்ளும் ஒரு மசுரும் இல்லை என்பது பலருக்கும் பரவலாகத் தெரியவராத ரகசியம்!)

மணியான, அர்த்தபூர்வமான கட்டுரை. அதன் ஃபேஸ்புக் சுட்டி.  உங்களுக்கு உண்மையின்மீதும் நேர்மையின்மீதும் மதிப்பும் + பப்பரப்பா ஊடகங்களின்மீது மிதிப்பும் இருந்தால் ஆர்எஸ் பிரபு அவர்களுடைய கட்டுரையை அவசியம் படித்து இன்புறவும்.

(இந்தக் கட்டுரையை ஒரு பிடிஎஃப் கோப்பாக்கித் – RejoinderPasumaiVikatan-RSPrabhu-Facebook – தரவேற்றியிருக்கிறேன். ஏனெனில், இது ஒரு முக்கியமான கட்டுரை. ஃபேஸ்புக் தொலைந்து போனாலும் இக்கட்டுரை தொலையக் கூடாது. ஆர்எஸ் பிரபு அவர்கள், இதற்குக் கோபிக்கமாட்டார் என நினைக்கிறேன் + நன்றி – இந்தக் கட்டுரையை பிடிஎஃப் ஆக்கி எனக்குக் கொடுத்த ஃபெலிக்ஸ் எனும் இளைஞருக்கு!)

…ஃபேஸ்புக்கில் இப்படியெல்லாம் காத்திரமான விஷயங்கள்கூட வரலாம் என்பதை நான் உங்கள் கட்டுரை மூலமாக அறிந்துகொண்டேன், நன்றி ஆர்எஸ் பிரபு அவர்களே! I don’t know who you are, but I really, really appreciate what you have done and accomplished! May your tribe increase. Here’s wishing all the very best for all your (future) continued, scholarly and witty debunking of scumbags and racketeers! :-))

+ நன்றி – இந்த அழகான கட்டுரையின் சுட்டியை எனக்கு அனுப்பிய ரமணன் ஜகன்னாதன் எனும் இளைஞருக்கு :-)


10 Responses to “…நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்”

 1. SENTHILRAJ R Says:

  rams sir intha aalu karunanithi soo nakki . sakkadayila santhnamaa ??? pls. review


  • Dear Sir, I do not know anything about the man. Even if he were to be a DMK supporter, when he is telling the truth, one needs to take it, yeah? (each unto his own)

   But a person of this guy’s calibre, which would be so unusual / miraculous for that party – will eventually realize the truth, so patience, patience. (and thanks!)


  • …and I wished this youngman well – for his future battles with ‘scumbags and racketeers’

   Don’t you think DMK (or that matter ANY dravidian party) is a reference implementation of these categories and much more? ;-)

   anyway, ’nuff said.

   __r.

 2. Kannan Says:

  Right on! most of their pages are laminated and glazed and in no way environment friendly.

  On this point alone Dinadhonthi beats Vikatan. (:

  Cheers/


 3. […] நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்… […]


 4. […] அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – […]


 5. […] …நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங… 09/07/2017 […]


 6. […] இளைஞர் ஆர்எஸ் ப்ரபு அவர்களைப் பலவிஷயங்களின் காரணமாக (=அவருடைய களஅனுபவங்கள், படிப்பு, தீர்க்கமான – தமிழகத்தின்மீது கரிசனம்கொண்ட கருத்துகள், வேளாண்மை குறித்த பார்வைகள், முனைப்பு, வேளாண்ஆராய்ச்சி குறித்த ஆதங்கங்கள்…++) மதிக்கிறேன். (ஒரிரு முறை இவர் குறித்து எழுதியிருக்கிறேன்கூட: …நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங…09/07/2017) […]


 7. […] அவர்களைச் சிலாகித்திருக்கிறேன்: …நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s