2017-18 புதுநிதியாண்டின் முதல் நாளில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி: அபு யாஹ்யா ஒழிப்பு!
April 2, 2017
…இஸ்லாமிய முதன்மைக் கழுத்தறுப்பாளர் அபுபக்ர் அல்-பக்தாதியின் பிரதான அடிமை – அயத் ‘அபு யாஹ்யா’ அல்-ஜுமைய்லி ஒழிந்தான்! :-)
ஒரு வழியாக இந்த இஸ்லாமிக் ஸ்டேட் கொலைகாரர்களும் அதன் வால்பிடிப்பாளர்களும் போஷகர்களுமான — துருக்கி, ஸவுதி அரேபியா, கத்தார் போன்ற ஈனப்பிறவி அரசுகளும் ஒழிந்தால் எனக்கு மிகவும் திருப்தியே. ஊக்கபோனஸாக பாவப்பட்ட இரானியர்களுக்கும் அயதொல்லாஹ்களிடமிருந்து விடுதலை கிடைத்தால் இன்னமும் திருப்தியாகிவிடும். ஆனால் நான் கஞ்சா புகைப்பதை நிறுத்தவேண்டும்.
(நேற்றிரவு இதனைக் கேள்விப்பட்டபோது – இது ஏதாவது ஏப்ரல்முதல்தேதி முட்டாள் அரைகுறைத்தனமாக இருக்கும் என நினைத்தேன். இப்போதும் இதுவரை அல்-அரேபியா போன்ற தினசரிகளும், இராக்கிய ராணுவ அறிக்கைகளும் மட்டுமே இந்தக் களையெடுத்தல் பற்றிப் பேசியிருக்கின்றன. அமெரிக்க ராணுவமோ, குர்தி அமைப்புகளோ இதனைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்லவில்லை; ஆனால், இந்தக் கொலைகாரன் கோரமாகப் போய்ச் சேர்ந்தான் என நிச்சயமாகத் தெரியவந்தால் இந்த ஒத்திசைவெழவைத் தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு அளப்பரியாத, புளகாங்கிதப் பரிசு* தரப் போகிறேன்!)
மேதகு கொடுங்கோலரும் – குர்திக் குழந்தைகளையும் பெண்பிள்ளைகளையும் கொன்றுகுவித்தவரும் ஆன ஸத்தாம் ஹுஸ்ஸைய்ன் – பாஆத் கட்சியின் அதிபர். குத்துமதிப்பாகச் சொல்லப்போனால், மேதகு பிரபாகரன் ஒருவேளை ஸ்ரீலங்காவில் ஆட்சி(!) எனவொன்றைக் கட்டியெழுப்பியிருந்தால் அதனடியில் எலும்புக்கூடுகளாகத்தானே இருந்திருக்கும் – அதேபோலத்தான் ஹுஸ்ஸைய்னும் ஆட்சி செய்தார்.
பின்னர், அவராட்சி சமயம் பேயாட்டம் ஆடிய பெரும்பாலோர் — இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலில் ஐக்கியமாகி – அதன் அயோக்கியத்தனங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.
அம்மாதிரி வெறியர்களில் முக்கியமான ஒரு ஜந்துதான் இந்த அல்-ஜுமைய்லி. அப்படி இப்படியென்று கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்து (அதற்கெல்லாம் கொர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டி) ஒருவழியாக அந்த வெறிஅமைப்பின் உச்சாணிக் கிளையில் (அல்-பக்தாதியின் கீழ், முதலடுக்கு) அமர்ந்து – அதன் ஒற்றுவேலை நிறுவனத்தில் தலைமைப் பதவியில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்த நபர்.
இந்த ஜந்துவை நேற்று இராக்கிய விமானங்கள் தாக்கி – ஊக்கபோனஸாக 40த்திச் சொச்சம் இஸ்லாமிக் குண்டர்களுடன் கூண்டோடு கைலாசம் அனுப்பியிருக்கின்றன என நேற்று இரவு செய்தி வந்தது. இன்று வந்துள்ள சில செய்திகளும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றன.
- https://www.thesun.co.uk/news/3231350/isis-second-in-command-has-been-killed/
- http://www.nbcnews.com/storyline/isis-terror/isis-second-command-ayad-al-jumaili-killed-airstrike-iraqi-military-n741536
* இந்த விஷயம் உண்மையாகவே இருந்து இந்த அல்-ஜுமைய்லி ஒழிக்கப்பட்டிருந்தால் – உங்களுக்குப் பரிசு = குறைந்த பட்சம் மூன்றுநான்கு வாரங்களுக்கு ஒரு பதிவும் போடாமல் உங்களுக்கு சந்தோஷம் தரப் போகிறேன். அற்ப ஜந்துக்கள் ஒழிக்கப்படுவது என்பது அனுதினமும் நடப்பது இல்லையே! ஆகவேதான், கொஞ்ச நாட்களாவது உங்களுக்குத் தலைவலி தரவேண்டாம் என்கிற கொண்டாட்ட ஆஃபர்! ;-)
April 3, 2017 at 12:43
’மேதகு’ ராஜபக்ஷே அவர்களையும் இடை இடையே போட்டால் நன்று..
April 3, 2017 at 17:57
அய்யன்மீர், மன்னிக்கவும்.
எனக்கு ராஜபக்ஷ அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. உளறிக்கொட்ட விருப்பம் இல்லை. நன்றி.
April 5, 2017 at 07:23
/ராஜபக்ஷ/ …. நன்றி… சரியாய் எழுதிக் காட்டியதற்கு.
July 19, 2017 at 18:43
https://www.voanews.com/a/after-mosul-the-is-family-dilemma/3946483.html