அந்த்ரெய் ஆர்ஸென்யவிச் தார்கொவ்ஸ்கி – திரைப்படமே கவிதையாக…

April 8, 2017

எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக்,  இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்)

இம்மாதிரி ஆசாமிகளின் பிறந்தநாள் வரும் சமயம் அதனை நான் தனிப்பட்ட முறையில் கொண்டாடிவிடுவேன் – இது பெரும்பாலும் அவர்களைப் பற்றிய சிலபல புத்தகங்களை மறுவாசிப்பு செய்வதாகவும்  – அதிகபட்சம் – பின்னிரவில், தன்னந்தனியே அவர்களுடைய படம் ஒன்றைப் பார்ப்பதாகவும் இருக்கும்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஏதாவது கொடுப்பினை நல்லூழ் வகையறாயெழவு போல இருந்தால்தான் ஒருவிதமான தகுதியுமில்லாத என்னைப்போன்ற ஒரு போக்கத்தவனுக்கு, வாழ்க்கையில் இதெல்லாம் லபிக்கும். அப்படி லபிக்கும்போது லபக்கென்று அதைக் கவ்விக்கொண்டு ஓடிவிடுவதற்கும் நான் தயார். ஆக, பூலோகசொர்க்கத்துக்குக் கேட்பானேன்…

…சரி. குறைந்த பட்சம் ஒருமுறையாவது என் தார்கொவ்ஸ்கி பற்றி எழுதியிருக்கிறேன் –அந்த்ரெய் தார்கொவ்ஸ்கி – ஸொலாரிஸ் (1972)  ஆஹா! 14/07/2014

-0-0-0-0-0-0-

தார்கொவ்ஸ்கி ஏப்ரல் 4, 1932 அன்று பிறந்தார்… (எனக்குத் தெரிந்து ஏழேஏழு படங்களை மட்டும்தான் இவர் எடுத்திருக்கிறார்… ஆனால் ஒவ்வொன்றும் பலவிதங்களில் அற்புதம்! எல்லாம் யாம் பெற்ற பேறுதான், வேறென்ன சொல்ல…)

ஆக, கடந்த சில நாட்களில் உட்கார்ந்து படித்த சிலபல புத்தகங்களில் இதுவும் ஒன்று:

‘திரைப்படமே கவிதையாக’ என இந்தப் புத்தகத்தின்  தலைப்பைச் செல்லமாகப்  பெயர்த்திருக்கிறேன்.  அனால் ‘கவிதையாகத் திரைப்படம்’ என்பது தான் ஓரளவுக்குச் சரியான பெயர்ப்பாக இருக்கவேண்டும்.

இப்புத்தகத்தைப் பற்றிய விவரங்கள்:  விற்பனைக்கு, குட் ரீட்ஸ்

…கடந்த ஒருவாரமாக என் காதில், ஓய்வேயில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது — யோஹான் ஸெபாஸ்டியன் பாக்ஹ் அவர்களின் ‘ஏசுவே, உன்னை நான் அழைக்கிறேன்!’

இதற்கு தார்கொவ்ஸ்கியின் ஸொலாரிஸ்தான் காரணம். பாவி.

சந்தேகமேயில்லாமல், இவையெல்லாம் யாம் (சேனைக்கிழங்கு ©ராஎஸ் = படைவேர் ©எஸ்ரா = ஆர்மிஎங்கே ©ராஎஸ் = அல்லதுநான்என்னுடையஓரினச்சேர்க்கையுறவு  ©எஸ்ரா  = OrMeMineOneRaceAdditionRelationship ©ராஎஸ்… …) பெற்ற பேறுதான், வேறென்ன சொல்ல!

16 Responses to “அந்த்ரெய் ஆர்ஸென்யவிச் தார்கொவ்ஸ்கி – திரைப்படமே கவிதையாக…”


  1. விருப்பம் இருந்தால் அஞ்சாதே படம் பார்க்கவும்.


    • அய்யா, நீங்கள் சொல்வது புரியவில்லை. விளக்க முடியுமா?

      நன்றி!


      • தங்களுக்கு சினிமாவில் ஈடுபாடு உண்டு என்பது தற்போது தெரிந்து கொண்டதால், ‘அஞ்சாதே’ படத்தை சிபார்சு செய்தேன். எல்லா சினிமா ரசிகர்களுக்கும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. அவ்வளவுதான்.

  2. Deeban Chakravarthi MAthivanan Says:

    https://youtu.be/ak6rI-j07QU. You might like this sir !

  3. Manikandan V Says:

    Sir, Most of his films are available online for free

    http://www.openculture.com/freemoviesonline


    • Thanks, dear Manikandan. :-)

      But Criterion collection is the best – one has to pay a little, but there are added (previously deleted/edited) footages, alt scenes, comments, interviews, annotations etc… They maintain the original/intended aspect ratio.

      https://www.criterion.com/about_us

      Go for it please!

      I really feel that ‘free downloads’ should not really be the main way of internalizing the experiences; been there done that – but…

      to the extent possible, should we not encourage excellence in every thing please? therefore should we not – at least part underwrite the efforts?

      sorry about this sermon – but I feel vague – not because of the piracy angle – but because of the quality angle.

      because, anything that is worth doing, is worth doing well.

      therefore anything that is worth watching, is worth watching in its intended original pristine glory.

      Amen. (and thanks!)

      __r.

      • Manikandan V Says:

        Yes Sir :-)

      • Gopinath Venkat Says:

        Absolutely right. I have been trying to find out, if anyone would create a platform, where we can directly contribute to the producers of the movies. Does anyone know, if any such efforts are in play?

      • Bala V Says:

        Criterion collection is available in iTunes for purchase. Quality is excellent.

    • செத்த தமிழ் Says:

      yeah man u shit in english becoz ur father was an englishman.mother kuppayi


      • அய்யா, தமிழ் முக்கியம்தான், ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் ஆங்கிலமும் பரவாயில்லை. தேவையேயில்லாமல் கோபப்படவேண்டாமே! உரையாடல்கள் முக்கியமல்லவா?

  4. Ramasamy S Says:

    Hi,
    This is my first comment and I share your views on education.
    Have you tried Hayao Miyazaki movies? You MIGHT like it.

    – ramasamy

  5. செத்த தமிழ் Says:

    தமிழில் எழுதப்பட்ட பதிவிற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம்!மேலுள்ள எருமைகள் ஆங்கிலத்தில் போட்ட பதிவிற்கு தமிழில் பின்னூட்டமிடுவார்களா?


    • நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான். ஆனால் எருமைகள்?

      பெரும்பாலும் இந்தவிஷயங்களுக்குக் காரணம் 1) தமிழில் தட்டச்சு செய்யமுடியாத சூழல் 2) சிலசமயம் அசிரத்தை 3) தமிழில் சிந்திக்கமுடியாமை 4) எழுத்துத் தமிழுடன் அவ்வளவு அணுக்கமில்லாத சூழல் 5) தமிழில் உரையாடுவதில் கொஞ்சம் சிரமம், சில சமயம் வெட்கம் — போன்ற பல காரணங்கள்… இருந்தாலும், தேவையற்ற கோபம் வேண்டாமே!

      நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s