இந்திய அரசின் அடல் டிங்கரிங் பரிசோதனைச்சாலைகள் தேர்வு – தமிழகம்சார் பள்ளிகள் = 20/257 :-)

June 1, 2017

நம் பள்ளிக் குழந்தைகளுக்காக, காத்திரமான ‘மாதிரி’ பரிசோதனைச் சாலைகள்: இந்திய அரசின் அழகான திட்டங்களில் ஒன்று – என ஒரு பதிவை வெளியிட்டிருந்தேன். நான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒன்றும் இதில் இருக்கிறது = சத்தீஸ்கட் அரசு பெண்கள் பள்ளி, தம்தரி மாவட்டம். :-)

கீழே, இந்த மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட நம் தமிழகத்துப் பள்ளிகளின் வரிசை… [ஊக்கபோனஸாக, நம் தமிழகத்தில், நவோதயா பள்ளிகளின்மையைக் குறித்த என் ஆதங்கமும் இருக்கிறது. :-( ]

AGN Matric Higher Secondary School
Alpha Wisdom Vidyashram Senior Secondary School
AMRITA VIDYALAYAM
CK SCHOOL OF PRACTICAL KNOWLEDGE MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
Holy Angel Matriculation Higher Secondary School
Kanchi Sri Sankara Academy Matriculation Higher Secondary School
KENDRIYA VIDYALAYA CRPF AVADI CHENNAI
KENDRIYA VIDYALAYA NO 1 OE TRICHY
KENDRIYA VIDYALAYA NO II SADRAS KALPAKKAM


Kongu Vellalar Matriculation Higher Secondary School
KSHATRIYA GIRLS HIGHER SECONDARY SCHOOL
LALAJI MEMORIAL OMEGA INTERNATIONAL SCHOOL
NATIONAL ACADEMY MATRIC HR SEC SCHOOL
NAVARASAM MATRIC HR SEC SCHOOL
PATHIPAGA CHEMMAL K GANAPATHI GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL
Shri J T Surana Jain Vidyalaya
Sri Ramakrishna Vidyalaya Matriculation Higher Secondary School
Subbiah Vidyalayam Girls Higher Secondary School
Yuvabharathi Public School
Vidhya Parthi Higher Secondary School

முழு ஜாபிதா.

குறிப்புகள்:

1. இந்தத் திட்டத்தில் கண்டிப்பாகப் பங்கு பெறவேண்டிய பல பள்ளிகள் விண்ணப்பிக்கவேயில்லை (பெரும்பாலும் ஆள்வசதியின்மையால் அல்லது வெளித்தொடர்புகள் அவ்வளவு இல்லாததால் இப்பிரச்சினை – இதில் நான் ஈடுபாடு கொண்டுள்ள/தொடர்புள்ள விழுப்புரம் பள்ளியும் அடக்கம் + இரு பிற பள்ளிகளும்)

2. இவற்றில் பலப்பல மத்திய அரசின் ஸிபிஎஸ்இ கல்வித்திட்டத்தின்கீழ் இயங்குபவை. (வெளியே தெரியவருவதுபோல இருப்பது ஒரேயொரு அரசுப்பள்ளி மட்டுமே!) இருந்தாலும், எனக்கு மகிழ்ச்சிதான்.

3. திராவிட முதலைகளுக்கும் அற்ப வீரமணிகளுக்கும் ஒரு கேள்வி: மேற்கண்ட பள்ளிகளில் மூன்று பள்ளிகளைத் தவிர –  ஹோலி ஏஞ்செல்ஸ், கொங்கு வேளாள, க்ஷத்ரிய, வித்யாலயம், வித்யாஷ்ரம், பாரதி, ஜெய்ன், சங்கரா, கேந்திரிய, கணபதி, லாலாஜி, ராமக்ருஷ்ண என – நீங்கள் எதிர்க்கும் பெயர்களில் எல்லாம் இருக்கும் கல்விசாலைகள் இருக்கின்றன; போய்க் கல்லெறிந்து, தார்பூசி, கண்ணாடியை உடைத்து (என் பள்ளியில் செய்ததுபோல) பிரச்சினை பண்ணாமல் என்ன மசுத்தைப் புடுங்கிக்கொண்டு இருக்கிறீர்கள், சாவுக்கெராக்கிகளா! ஏனெனில் ஒரு நல்ல விஷயம் கூட நம் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதுதானே உங்கள் லட்சியம்? உங்கள் அட்டைக்கத்தி வீரத்தைக் காண்பிக்கமுடியும் எந்த விஷயத்தைத் தான் நீங்கள் விட்டுவைத்திருக்கிறீர்கள்?

4. சரி. மேற்கண்டபடி நான் கோபப் பட்டாலும் – மேற்கண்ட பள்ளிகளில் சிலபல பள்ளிகளை நான் அறிவேன் என்கிற முறையிலும், இந்த அடல் திட்டம் நம் பிள்ளைகளுக்கு நல்லதுதான் செய்யும் என்பதாலும் நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன். அதன் பிள்ளைகளும் ஆசிரியர்களும் மேலாண்மைக்காரர்களும் பொலிக, பொலிக என வாழ்த்துகிறேன்! :-)

-0-0-0-0-0-0-

…நல்லவேளை, நம் திராவிடக்கூ அரசியல்வாதிகள், முன்னம் – அழகான நவோதயா பள்ளிகளை இங்கு வரவிடமுடியாமல் அழிச்சாட்டிய அயோக்கியத்தனம் செய்ததைப் போல இப்பரிசோதனைச் சாலைத் திட்டத்திலும் ‘அடல்’ எனவொன்று வடமொழியில் இருக்கிறது என்று, வடவர் சதி, திணிப்பு, தெருப்புழுதி என தமிழகப் பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுவார்களோ என கொஞ்சம் சஞ்சலப் பட்டுக்கொண்டிருந்தேன்.

நவோதயா திட்டமென்பது 1985ல் ஆரம்பித்தது. திராவிடர்கள் முட்டுக்கட்டை போடாதிருந்தால் சுமார் 35 பள்ளிகள் தமிழகத்தில் இருந்திருக்கும் – அனைத்து மாவட்டங்களிலும், மலைப் பிரதேசங்களிலும்…

ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 400 பிள்ளைகள் தரமாகப் படிப்பிக்கப் பட்டு, தரமான உணவை உண்டு, உடலையும் மனதையும் சரியாகப் பேணிக்கொண்டு, பிற பிரதேசச் சிறார்களுடன் உறவாடிக்கொண்டு, மனதை விசாலப் படுத்திக்கொண்டு இருந்திருப்பார்கள்!

இப்போது சுமார் 14000 தமிழகம்சார் குழந்தைகளுக்கு நல்ல சூழலும் படிப்பறிவும் கிடைத்துக் கொண்டிருக்கும்.

நவோதயா மூலமாக தரமான, மணியான கல்வியைச் சுமார் 24,000 குழந்தைகள் தமிழகத்தில் பெற்று – தன்னம்பிக்கையுடன், தற்சார்புடையவர்களாக வெளி வந்திருப்பார்கள்… (இவர்கள் பெரும்பாலும் கிராமப்புற, அவ்வளவு வசதி வாய்ப்பற்ற குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் – பிற மாநிலக் குழந்தைகளைப் போல!)…

…என்பதெல்லாம், எனக்கு இப்போதும் கூட படுகோரமான வயிற்றெரிச்சலைக் கொடுக்கிறது;

இத்தனைக்கும் பள்ளியை ஸ்தாபனம் செய்ய, நடத்த முழுச் செலவையும் மத்திய அரசே எடுத்துக்கொண்டிருக்கும்! எப்படிப் பட்ட கடைந்தெடுத்த அயோக்கியர்கள் நம் ஆசாமிகள்! இவர்களுக்கா நம் பிள்ளைகள் மீது கரிசனம் இருக்கிறது? நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை என்ற பேடித்தனமான பிலாக்கணம் தான் இப்பதர்களின் அடிப்படைப் பங்களிப்பு. கொள்ளைக்காரர்கள்.

ஹிந்தி கிந்தி திணிப்பு ஆர்பாட்டம் எனக் கபடியாடி ஒழித்துவிட்டார்கள்! இந்த மத்திய அரசுத்திட்டத்தால் திராவிடர்களுக்குப் புறங்கைகளை நக்க வாய்ப்பில்லை என்றதும் எதிர்த்தார்கள், அற்பப் பதர்கள்!

ஏண்டா கூவான்களா, நவோதயாக்கள் நடக்கும் கேரளத்திலும், கர்னாடகாவிலும், ஆந்திராவிலும் அவரவர்கள் மொழிகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா என்ன?

ஏன், அந்தச் சுண்டைக்காய் புதுச்சேரியில் தமிழ் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்ன? (அதில் நான்கு நவோதயா பள்ளிகள் அமோகமாகப் பணி செய்கின்றன – காளாபேட்டையில் இருக்கும் இப்பள்ளியொன்றுக்குச் சென்று – அதிலுள்ள வசதிகளைப் பார்த்து, ஆசிரியர்களின் தரத்தைப் பார்த்துப் பலமுறை பொறாமைப் பட்டிருக்கிறேன்!)

இந்தவொரு மகத்தான திட்டத்திற்காக – ராஜீவ்காந்தி அவர்களை மெச்சத்தான் வேண்டும்; ஆனால் இந்த மனிதரையும் திராவிடர்களும் தமிழ்வெறியர்களும் சேர்ந்து கொலை செய்தார்கள், பாவிகள்… :-(

(நவோதயா பள்ளிகளை தீராவிடர்கள் புறம்தள்ளியதைப் பற்றி சில பத்திகள் கொண்ட என்னுடைய முந்தைய பதிவு)

—00000—-

4 Responses to “இந்திய அரசின் அடல் டிங்கரிங் பரிசோதனைச்சாலைகள் தேர்வு – தமிழகம்சார் பள்ளிகள் = 20/257 :-)”

  1. nparamasivam1951 Says:

    30வருடங்களாக ஆண்டு, 3 தலைமுறை மக்களின் எதிர்காலத்தை அழித்த பெருமை, திராவிட கட்சிகளுக்கு உண்டு. இருக்கும் வரை அழித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

  2. Anonymous Says:

    Dravidian long term vision of globalization started with Hindi protest.

  3. Thirumulanathan Says:

    //போய்க் கல்லெறிந்து, தார்பூசி, கண்ணாடியை உடைத்து (என் பள்ளியில் செய்ததுபோல) பிரச்சினை பண்ணாமல்//

    அடப்பாவமே! அதெல்லாம் வேறு உங்கள் பள்ளியில் நடந்ததா? நீங்கள் என்ன “கட்டாய ஹிந்தி” கற்பிக்கும் பள்ளியிலா இருந்தீர்கள்?


    • அய்யா, இல்லை.

      நம் கல்லூரி மாணவக் கொழுந்துகள் ‘ஸ்டூடெண்ட் ப்ரொட்டெஸ்ட்’ செய்தபோது நடந்தது.

      தமிழகக் கிராமப்புறப் பள்ளியைச் சேதம் செய்து ஸ்ரீலங்கா ராஜபக்ஷவை பயமுறுத்துவது எப்படி?

      பேடிகள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s