புதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி

March 21, 2017

அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!)

இவனும் ஜேஎன்யு காரன் தான் (ஆனால் மன்னித்துவிட்டேன்!) –  பாபா ஆம்டே அவர்களுடன் பலகாலம் இருந்து பின்னர் மேதாபட்கர் அவர்களிடம் போய் பின் ஓடிப்போய் – கடைசியில் தில்லியில் உள்ள பல திங்க்டேங்க் வகையறாக்களில் ஒன்றில் அடைக்கலக் காதை. திருந்தி விட்டான். என்னைப் போலவே ஸ்ரீ தரம்பால் அவர்களால் உந்தப் பட்டவன் – முதலில் எதிர்மறையாக, இப்போது அதற்கு எதிர்ப்பதமாக!

அவன் சொல்வது + நானும் (என் சொற்ப ஊடக ஞானத்தில்) ஒப்புக்கொள்வது போன்றவற்றின் சாராம்சம் – நான் மேலதிகமாகச் சேர்த்தவற்றுக்குப் பழுப்பு நிறம்:

1. இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகளே அல்லர்; கூலிக்குக் கூத்தாடும் நபர்களே! (ஆமென்!)

2. ஏனெனில் – இவர்களுடைய காஸ்ட்யூம்கள் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பச்சை தலைப்பாகை, பச்சை துண்டு, கோமணம், கவனமாக கலைக்கப்பட்ட பரட்டைத்தலை, உள்பாவாடை, மண்டையோட்டு மாலை, வேப்பிலைப் பாவாடை, செத்தஎலிகள், முக்கியமாக – மகாமகோ பெருந்தொந்தி இன்னபிற (அடுத்த தடவை இந்த ப்ரொட்டெஸ்ட் பிலிமுக்கு பல ஆஸ்கர் விருதுகள் நிச்சயம் – முக்கியமாக, உடையமைப்புக்கு, படு நிச்சயம்!)

3. வேளாவேளை சோறுபோட்டு இவர்களை நன்றாகவே கவனித்துக்கொள்கின்றனர் – இதில் மனிதாபிமானம் பளிச்சிடுகிறது. (ஆனால் தமிழனுடைய மானம் போச்சே!)

4. இந்த நாடகம் இயல்பாக நடக்கவில்லை – ஒரு செயற்கைத்தனமும் ஊடகத்துக்காக நடனமாடும் போக்கும் தென்படுகிறது!  தூக்கில் தொங்குவேன் என்று ஒரு ஆள் கையில் பச்சைத் துண்டுடன் அவசரமாக ஒரு மரத்தில் ஏறினார், டீவி கேமராவெல்லாம் வந்து படம் பிடித்தவுடன் இறங்கிவிட்டார். ஒரே ஏமாற்றம், போ.  (எங்களுக்கு எல்லாமே ஊடகத்துக்காகத்தான் – நாங்களெல்லாம் ஒன்று – நடிப்போம், அல்லது யாராவது நடிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்போம். அவ்ளோதான் எங்க்ளுக்குத் தெர்யும்)

5. ஆகவே, இவர்களை வேறு யாரோ அரசியல் காரணங்களுக்காகக் கொணர்ந்திருக்கவேண்டும் – ஷரத்ஜோஷி (ஷேத்காரி ஸங்கதனா),   பூபீந்தர்ஸிங் மண், நாராயணசாமி நாயுடு (நம்மூர்), நஞ்சுண்டஸ்வாமி (கர்நாடகா), சரண்சிங், மஹேந்திரஸிங் டிகெய்த் (பாரதீய கிஸான் ஸங்)  உட்பட எவ்வளவோ விவசாயிகளின் போராட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம் – ஆனால் இம்மாதிரி கேவலங்களை நாங்கள் பார்த்ததேயில்லை… … ஆனால் ‘கனிமொஜி’ அழகாக இருக்கிறார் – இவரா இப்படி மோசமாக 2G ஊழல் செய்தார்? (என் சந்தேகம் – என் வழக்கம்போலவே திமுக வகையறா திராவிட கொள்ளைக்காரர்கள் தாம் இதன் பின்புலத்தில் இருக்கவேண்டும் – நேற்றோ அல்லது அதற்கு முன் தினமோ இந்த நடிகர்களை நேரடியாகப் பார்த்து அளவளாவினார் கனிமொழி எனச் சொன்னான் இவன்; யோசிக்கிறேன் – கனிமொழிக்கு தில்லியிலாவது தன் பிரதாபத்தைக் காட்ட முடியுமா, இசுடாலிருக்கு எதிராகத் தாக்குப் பிடிக்கமுடியுமா என்ற நிலையில், அவர் இந்த ‘சென்னை சங்கமம்’ போல ‘தில்லி தில்லுமுல்லுவம்‘ என இதனை அரங்கேற்றியிருப்பாரோ என்ன எழவோ!)

6. ஏழ்மையில் வாடும் விவசாயிகளாக இருப்பதால் இந்தப் போராளி நடிகர்களில் பெரும்பாலோருக்குப் பெரிய்ய்ய்ய்ய தொப்பை! (பாவம் இந்த ஆண்களெல்லாம் நிறைமாத கர்ப்பிணிகளாக நடுரோட்டில் அல்லாடுவது சோகம்)

7. தில்லியில் தற்போது – இந்த ப்ரொடெஸ்ட் வகையறா ஷோவுக்கு ஏற்ற சீஸன் தான் – இதையே மேமாதத்திலெல்லாம் அரங்கேற்ற முடியாது. இப்போது இதமான குளிர், வெப்பமும் அவ்வளவாக இல்லை. (தில்லியே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, உண்மைதான்!)

8. தில்லியில் பலவிதமான போராட்டவகைகளைப் பார்த்து அலுத்துப்போயிருக்கிறோம். இப்படிப் பொழுதன்னிக்கும் போராட்டக்காரர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்தால் அடங்குவார்களோ எனப் பரிசோதனை (experiment)செய்தால், அது எங்களுக்கு சோதனையாகவே (testing) முடிந்துவிட்டது. கெஜ்ரீவால் எங்களை விட்டுவிட்டு பஞ்சாப் போய்விடுவார் எனப் பார்த்தால் அங்கே அவருக்குக் கல்தா கொடுத்துவிட்டார்கள்! என்ன செய்வது! ஆனாலும் உங்களூர் போராட்ட நடிகர்களுக்குப் பயிற்சி அதிகம்தான்; அதனால் எங்களுக்கு, உங்கள் போராட்டத்திலுள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் பிடித்துள்ளன. நன்றி. (அய்யா, நாங்கள் பலப்பல வருடங்களாக கேளிக்கை என்பதையே வாழ்க்கை எனக் கருதும் ஆசாமிகள். ஆக எங்களுடைய கேளிக்கைத் திறனுக்குக் கேட்பானேன்!)

9. எலியை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் இந்த எலிசாயிகள்.   (அய்யா, அவைகள் எலியில்லையாம், திராவிடப் பெருச்சாளிகளாம்!)

(டேய்! எவ்ளோ நேரண்டா இந்த சவத்த எலீங்க்ள கட்ச்சிக்கினு சிர்ச்சிக்கிட்டே :-) சோகமா :-(  போசு ;-) கொடுக்கறது?  வாயி வலிக்குதுடா, ஷோவ முடிக்கோணும்! சீக்கிரமா போட்டோ பிலிம்னிட்டு எடுங்கடா, ஊடகப் பேடீங்களா — போயி சூடா பிரியாணி சாப்டோணும்! — மேற்படி படத்துக்கான சுட்டி)

-0-0-0-0-0-

குறிப்பு: எனக்குத் தெரியும் – பலப்பல விவசாயிகள் இப்படிப் புலம்பலிலும் பசப்பிலும் நாடகத்திலும் பொழுதுபோக்கிலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான திராவிடத்திலும் ஈடுபடுவர்களல்லரென்று. முடிந்தவரை நீரை வீணாக்காமல், மண்ணினை ஒழிக்காமல் – பாரம்பரிய விவசாயம்  ஆர்கனிக் இனார்கனிக் அய்யோமரபணு – எனவெல்லாம் அமோகமாக உளறிக்கொட்டாமல் – அரசிடமோ பிறரிடமோ உதவிக்கென பிச்சைக்காரத்தனமாகக் கையேந்தாமல் – கும்பலைக் கூட்டிக்கொண்டு ஊடகத்துக்காக நடனமாடாமல் – தன்னால் என்ன செய்யமுடியுமோ அதனை ஆக்கபூர்வமாகச் செய்து அமைதியாகக் காலத்தைக் கழிக்கிறார்கள் என்று.  இவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வணக்கமும்.

உங்களில் சிலருடன் பலவருடகாலமாகப் பழகி, பல நடைமுறை விஷயங்களையும் தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிச்சமிருக்கும் எச்சங்களுக்கு…

ஊடக நாடக விவசாயி(!)களே! இலவச மின்சாரத்தை வைத்து அது கிடைக்கும்போதெல்லாம் பம்ப்செட்டை ஓட்டி நிலத்தடி நீரை உறிஞ்சி அதைத் தேங்கவைத்து, அதை வெட்டியாக ஆவியாக்கி, ஊக்கபோனஸாக நிலத்தைப் பாழாக்கி நுண்ணுயிரிகளையும் கொன்று, அதேசமயம் நிலத்தடி நீர் குறைந்துவருகிறதே எனக் கூக்குரலிட்டு, ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் தாமிரபரணிக்குப் போராடி, மணல்கொள்ளை ஆற்றுப்படுகை எனக் கூக்குரலிட்டு சொந்தகிராமத்தின் கண்மாய்களையும் கால்வாய்களையும் பாதுகாத்துக்கொள்ளாமல் – பைசா வாங்கிக்கொண்டு நடனமாடாதீங்கடா!

(மேற்படி படத்துக்கான சுட்டி1, சுட்டி2)

பின்குறிப்பு: டேய் மண்டையோட்டுப் பிச்சைக்காரனுங்களா, ஊர் மேல போவாம வூட்டுக்குப் போயி மொதல்ல வொங்க பம்ப்செட்டமோட்டார அணைங்கடா!

6 Responses to “புதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி”

 1. venkatesh Says:

  நடுபக்க கட்டுரை நாயகனின் அந்தரங்க சமாச்சாரத்தில் கசிந்து பிரவாகம் எடுக்க இருந்த ஒரு கண்ணீர் காவியத்தில் இப்படி கல்லை போட்டு விட்டீர்களே?


  • அய்யா வெங்கடேஷ் 1) நீங்கள் யாரென்றும் தெரியாது 2​) நீங்கள் பூடகமாகக் குறிப்பிடும் நாயகனும் யாரென்று புரியவில்லை. ஆக, உதவுங்கள் எனக் கதறுகிறேன்! ;-)

 2. A.SESHAGIRI Says:

  “சிறப்புப் பேட்டி: டெல்லியில் விவசாயிகளுக்கு அன்னமிட்ட தமிழ் கைகள்..!.”

  மின்னம்பலம் இணைய ஊடகத்தில் இந்த தலைப்பில் வந்துள்ள செய்தியையும்,படத்தையும் ஒரு மாறுதலுக்காக படியுங்கள்/பாருங்கள்! :-(

  https://minnambalam.com/k/1490080865


  • அய்யா சேஷகிரி,

   நன்றி. படித்தேன். இதுவும் உண்மையின் ஒரு பக்கமாக இருக்கலாம்.

   ஆனால், இந்தக் காமராஜ் என்பவரின் (இந்த மின்னம்பலம் தளத்தின் முதலாளி) பராக்கிரமத்தைப் பற்றி நெடு நாட்களாக அறிவேன். இவர், ஒரு படுமோசமான நபர். கடைந்தெடுத்த அயோக்கியர்.

   அவரையும் மீறி இந்தச் செய்தி உண்மையானதாக இருந்தால் மகிழ்வேன். ஒருவேளை இவர் திருந்திக்கூட இருக்கலாம்.

   • A.SESHAGIRI Says:

    அவர் “நக்கீர பரம்பரையில்” வந்தவர் அல்லவா! வேறு எப்படி இருப்பார்?

 3. nparamasivam1951 Says:

  தலைநகரில் தமிழ்நாட்டின் மானம் பறந்தோடிவிட்டது. இந்த கோவண டிராமா செட்டப்பால் நம்மை தலை குனிய வைத்து விட்டனர்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s