…அந்தப் பாவப்பட்ட பாம்பை, அந்த எழுத்தாளனின் படமெடுத்தலில் இருந்து உடனடியாக, போர்க்காலரீதியில் காப்பாற்றவேண்டும். வேறு வழியேயில்லை. :-( Read the rest of this entry »

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது சுதந்திர தினம், அதிகாலை 1.15 மணியிலிருந்து, ஒரே சீராக மழை பெய்த மணியம்.

Read the rest of this entry »

இது சோகங்களைக் குறித்த பதிவு.  ஆகவே — தேவையில்லாமல் மனவுளைச்சல் அடைவதைத் தவிர்க்க விரும்புவர்கள், வெகுசுளுவாக மனம்புண்படுபவர்கள், மதரீதியான சமனமற்றவர்கள் – இந்தப் பதிவை மும்முரமாகத் தவிர்க்கலாம். நன்றி.  (+ இதில் ~1500 வார்த்தைகள்! உங்களுக்கு இது தேவையா? தீவிரமாக யோசிக்கவும். சரியா?) Read the rest of this entry »

மனது ஒரு நிலையில் இல்லை. Read the rest of this entry »

+ இலவச இணைப்பு: ஜெயமோகன் அவர்களுடைய எதிர்வினை குறித்து என்னுடைய நடுக்கங்கள் :-( Read the rest of this entry »

…ஜெயமோகன் அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – “…ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை” ஆரம்பித்து வசைபாடியெனக் கோடிகாட்டி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். வஸிஷ்டர் வாயால் ப்ரம்மராக்ஷஸ் எனப் பட்டம் வாங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். :-) Read the rest of this entry »

‘விடுதலை’களுக்கும் என்டிடிவி ஸன்டிவி கும்பல்களுக்கும் ஈடு கொடுக்கும்படியான – இந்த அண்டப்புளுகு ஆனந்தவிகடன் குழுமத்தின் அயோக்கிய செய்தி திரித்தல்களை படிக்கும்போதெல்லாம் (எப்போதாவது ஒருமுறை அவற்றை ஒரு நோட்டம் விட நேரும்போதும் கூட) எனக்குப் பயங்கரமாக எரியும். வயிற்றில் அமிலம் சுரக்கும். Read the rest of this entry »

இப்படியாகத்தானே  மே2017ல் மூன்று வாரங்கள் கழிந்தன… Read the rest of this entry »

மூன்று வாரமாக, காலை 7.15 மணிமுதல், இரவு  9.00 மணி வரை ஒவ்வொரு நாளும் – ஏழாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுடன் காகிதம், கண்ணாடி, காற்று, மரம் என நான்கு விதமான கச்சாப் பொருட்களைக் கொண்டு விதம்விதமான விஷயங்களைச் செய்தோம். அவற்றின் பின்னுள்ள அறிவியலைக் கற்றுக் கொண்டோம். எஞ்சினீயரிங் என்றால் என்ன, எப்படிப் பொருட்களை வடிவமைப்பது என அது விரிந்தது – வருடத்துக்கு ஒருமுறையாவது நான் பங்கேற்கவேண்டிய அந்தப் ‘பொறியியலின் அடிப்படைகள்’ வகுப்பு. ஆனால் – அந்தக் கழுதையைப் பற்றி எழுதப் போவதில்லை இங்கு… Read the rest of this entry »

இந்த centrifuge எழவை மிகவும் தமிழ்ப் படுத்தி எடுத்தால் ‘மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி’ என விரியும். High speed centrifuge எழவானது – ‘அதிவேக மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி‘ என முழ நீளத்துக்கு விரியும். தேவையா?

Read the rest of this entry »

திரியாவரத்தனமில்லாத புத்திசாலிகளுடனும் பேசுவது ஒரு அணுக்கமான அனுபவம் என்றால் அப்படிப்பட்டவர்களில், செயலூக்கமும் தளராமுயற்சியும் நமது பாரதத்தின் மீது மாளாக் கரிசனமும் நேர்மையும் உடையவர்களுடன் பேசுவது மேலதிகமாகச் சுகத்தையும் திருப்தியையும் – ஆகவே, எதிர்காலத்தின்மீது ஒரு நன்னம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கும் சமாச்சாரம். Madhuji is one such person who is absolutely non-partisan and a very sane headed pragmatist at that. A real doer. Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக்,  இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்) Read the rest of this entry »

(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப்  பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)

Read the rest of this entry »

அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »

அவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே! வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல!)  இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன். Read the rest of this entry »

(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.

‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதிரியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட  ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.

தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக  நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »

சில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69

Read the rest of this entry »

#தமிழண்டா!

January 31, 2017

இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++  வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)

கருத்துப்படம் #1: தமிழண்டா!  ^%&*$#@!தமிழண்டா! Read the rest of this entry »

கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ்.  இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை  ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’  சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது. Read the rest of this entry »

மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!) Read the rest of this entry »