ஜிரொ டனிகூசி – குறுங்குறிப்புகள்
February 16, 2017
சில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69
Yes, all created things must move on, or so the Buddha said; but art lives forever, so does of course, engineering. Yeah. ஆக, புத்தருடைய புரிதல் சரியில்லையோ? அல்லது மறுசுழற்சி என்பதை விரித்தால், புத்தர் சொல்வது சரியாக இருக்குமா? எனக்குச் சந்தேகம் தான். ஹ்ம்ம்…
…நினைவிலிருக்கிறதா, அந்த ‘நடக்கும் மனிதன்?’ மாங்கா என்றாலே கத்திச்சண்டையும் யகூஸா குண்டர்களும் போர்னோவும்தான் என மருவியிருக்கும் இக்கால கட்டங்களில் இப்படியொரு அழகான மாங்கா காமிக்ஸ் இருக்கக்கூடுமா என வியந்தோமல்லவா? இத்தனைக்கும் இப்புத்தகத்தில் – ஒரு மனிதன் நடந்துகொண்டே அவன் சுற்றுச் சூழலை அவதானிக்கிறான். அவ்வளவுதான்! ஹ்ம்ம்… இதில் கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை – ஆனால், கவிதை இருக்கிறது!
அனைத்தும் கையால் வரைந்த படங்கள் – கணிநியால் தயாரிக்கப்படும் இந்தக் கால மாங்கா சித்திரங்கள் போலல்லாமல். கொஞ்சும் கோட்டோவியங்கள்; ஆழமும் வீச்சும் அழகும் நிரம்பியவை. நுணுக்கமும் கணிதத் துல்லியமும் கொண்டவை.
இன்றிரவு தூங்குவதற்கு முன் இப்புத்தகத்தைத் திருப்பி அனுபவிக்கவேண்டும்; ஆனால் வெறும் 150 பக்கங்கள்தான் இருக்கின்றன இந்தப் பொக்கிஷத்தில்… :-(
:-)
February 17, 2017 at 12:43
எஸ்ரா வை பதத்துக்குப் பதம் பிரித்தெரியும் நீங்கள், <> இதையும் படித்திருக்க வாய்ப்புண்டு. ஆதலின் Jiro Taniguchi என்பதன் சரியான உச்சரிப்பை தமிழில் எழுதுவீர்களா? அல்லது உபதேசம் ஊருக்குதானா?
குறிப்பு: பத்து பேரில் ஒருவன்
அன்புடன்,
ஜி எஸ் லெனின்
February 17, 2017 at 12:44
ஜப்பானிய மொழியில் டா உச்சரிப்புக் கிடையாது, ஆகவே தோக்கியோ என்றே அழைக்க வேண்டும் @ http://www.sramakrishnan.com/?p=3701
February 17, 2017 at 16:58
லெனின் அவர்களே!
நன்றி! என் படுசெல்லமான #எஸ்ரா அவர்களை ஆராதிக்காமல் எனக்கு நாட்கள் நகர்வதே இல்லை. :-(
ஜிரொ டனிகூசி என்று தமிழில் எழுதுவதே தவறு; எப்படியென்று என் எஸ்ராவலியத் தர்க்கரீதியான விளக்கம் கீழே:
1. ஜீரோ என்றால் சூனியம்
2. ஜிரொ என்றால் சுன்னியம்.
3. டனிகூசி என்பது தனி + கூசி
4. = அஃதாவது, தன்னந்தனியாகச் சுன்னியைக் காட்டிக்கொண்டு நின்றால் வெட்கத்தினால் கூசிப்போய் விடுபவன்.
5. ஆகவே ‘சுன்னியத் தனிக்கூசியோன்’ எனத்தான் ஜிரொ டனிகூசி மொழி பெயர்க்கப் படவேண்டும்.
6. இதை மறுபடி சப்பாணிய மொழியில் பெயர்த்தோமானால் அது ‘பதினாறு வயதினிலே’ என விரியும்.
7. இந்தப் பதின் பருவத்தில் தான் ஆண்பிள்ளைகளுக்கு ஜிரொ விஷயம் என்பது வேறு சிலபல விஷயங்களுக்கும் உதவும் என்பது தெரியவரும். இது எஸ்ராவிய தர்க்கசாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. (ஆ! உடனே எடுத்துக் காட்டி விடாதீர்கள்! ஏற்கனவே நான் பயந்து போயிருக்கிறேன்!)
8. சரி. அதனால்தான் எஸ்ரா ‘பதின்’ என்றவொரு புத்தம்புது நாவலை எழுதியிருக்கிறார். நான் இன்னமும் அதனைப் பதின்க்கவில்லை. நாவலோ நாவல்.
9. ஓட்றா டேய்!
நன்றி.
February 17, 2017 at 18:18
உங்கள் விளக்கம் கேட்டு..புல்லரித்துவிட்டது..
தினேஷ்பாபு
February 17, 2017 at 20:17
சார்! இப்படி ஒரு முழிபெயர்ப்பை எதிர்பார்க்கவில்லை! மிக்க நன்றி! ஆளைவிடுங்கள்!
February 18, 2017 at 06:33
அய்யா!
நகைச்சுவை உணர்ச்சி என்ற பெயரில் உங்களை விசித்திரவதை செய்வதற்கு மன்னிப்பு உண்டா?
நீங்களும் போய்விட்டால் மொத்தம் 9 பேர் (என்னையும் சேர்த்து) எனச் சுருங்கிவிடுமே, ஆர்பரிக்கும் அலைகடலையொத்த ஒத்திசைவாளர் கூட்டம்?
மிகவும் குளிருமே! :-(
நடுங்கிக்கொண்டே,
ர் ர்ர் ரா ர் ர்ர்ர்…
February 21, 2017 at 17:14
minus one, pls update your count (;
February 21, 2017 at 17:18
okay, 8! Have included you too!
February 21, 2017 at 17:39
i mean, excluded!