நம்பிக்கை, அவநம்பிக்கை, அறிவியல்… பொறியியல்!

February 26, 2017

அவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே! வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல!)  இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன்.

அவற்றில் ஒன்றுக்கு, என் மகளிடமிருந்து வந்த ஒரு எதிர் வினை. :-)
screenshot-from-2017-02-26-112950

#பொறியியலாளன்டா! ;-)

#எடுத்தகாரியத்தைமுடிப்பதெப்படி #GettingThingsDone #gtd #http://gettingthingsdone.com/

…வரும் 2017கோடைவிடுமுறையிலும் குழந்தைகளுக்கான (பெங்களூர்) பணிமனை ஒன்றில் ‘பொறியியல்’  பற்றி கொஞ்சம் ஓட்டிக்கினு-பீத்திக்கினு மூன்றுநான்கு வாரங்கள்போல குழந்தைத்தனமாகக் கவலையேயில்லாமல் ஆனந்தமாக அலையலாம் எனவெண்ணம். சென்ற 2016கோடையில் நடந்த இந்த விஷயத்தின் பதிவு:

பள்ளிச் சிறுவர்களை-சிறுமிகளை வைத்துக்கொண்டு ஆனந்தமாக, ஒன்றரை நாட்களில் மர நாற்காலி செய்து இன்புறுவது எப்படி 29/05/2016

விஷயங்களும் வாய்ப்புகளும் திரண்டுவந்தால், அவகாசமும் சரியாகக் கிடைத்தால் — கொஞ்சம் மின்னியல், இயந்திரவியல் தொடர்பான விஷயங்களைத் தொடுவதாக இருக்கிறேன்; சிலபல விமான மாடல்களையும் செய்யலாமென்றும்; முடிந்தால், ஒரு துக்குணியூண்டு கவிதையான  2.5 ஸிஸி டீஸல் எஞ்சின் பொறுத்தப்பட்ட விமானத்தையும் தயாரித்துப் பறக்கவிடுவோம். பார்க்கலாம், கோடை எப்படி விரிகிறதென்று.

சுபம்.

[நமக்கு நாமே!] பயோசார் ‘உரக்கரி’ செய்துகொள்வது எப்படி – சில குறிப்புகள் 04/02/2016

சொந்தமாகக் காயலான் கடை நடத்துவது எப்படி 19/09/2015

5 Responses to “நம்பிக்கை, அவநம்பிக்கை, அறிவியல்… பொறியியல்!”

  1. ஆனந்தம் Says:

    உங்கள் மகளுடைய நகைச்சுவை உணர்வைப் பார்த்ததும் கவலை தீர்ந்தது. அனைத்து இந்திய ஒத்திசைவு நற்பணி மன்றத்துக்கு அடுத்த தலைமை உருவாகிவிட்டது. வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.
    இவண் ஒத்திசைவு படிப்போர் சங்கம்

  2. mekaviraj Says:

    << வரும் 2017கோடைவிடுமுறையிலும் குழந்தைகளுக்கான (பெங்களூர்) பணிமனை ஒன்றில் ‘பொறியியல்’ பற்றி கொஞ்சம் ஓட்டிக்கினு-பீத்திக்கினு மூன்றுநான்கு வாரங்கள்போல குழந்தைத்தனமாகக் கவலையேயில்லாமல் ஆனந்தமாக அலையலாம் எனவெண்ணம்.

    அன்புள்ள ராம் ,
    I would like to volunteer :) on weekends. May I?

    Thanks,
    Kavi


    • Sir, I will get back to you on this; reason being – I would probably be an instructor for these courses run by other people, and normally they provide all the help/assistants and such support.

      Let me see, what I can do. Thanks for your interest. :-)


      • Sorry Sir, I checked. It wouldn’t work.

        They want to use the services of student interns from some engg colleges. Last year too, ISTR that they did so.

        Thanks for your interest though! I will remember this for any possible future ref.

        Best:

        __r.

  3. selvarajan Says:

    அய்யா … ! // “பள்ளிச் சிறுவர்களை-சிறுமிகளை வைத்துக்கொண்டு ஆனந்தமாக, ஒன்றரை நாட்களில் மர நாற்காலி செய்து இன்புறுவது எப்படி” // என்ற பதிவில் என்னுடைய பின்னூட்டமும் — அதற்கு தாங்கள் அளித்த ” மறு மொழியில் ” தாங்கள் கூறியது :–

    // மதிமுக தேமுதிக கட்சிகளை திராவிடநாயகரீதியில் திமுக பிளந்ததுபோல், அஇஅதிமுகவையும் பிளக்க முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதா மீதான ‘சொத்துக் குவிப்பு’ வழக்கு அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் குவியம்பெறும்போது, நமக்கு இம்மாதிரி மேலதிகமாகக் கேளிக்கைகள் காத்துகொண்டிருக்கின்றனவோ என்னவோ! ;-)

    பார்க்கலாம், காலம் எப்படி விரிகிறதென்று! // — தற்போது அஇஅதிமுக வில் தங்களின் கூற்று நடந்தே விட்டது …. என்ன ஒரு தீர்க்க தரிசனம் … !!!

    அய்யா … வெறும் ” குழந்தைகளுக்கான பணிமனை ” மட்டும் நடத்தாமல் — தரங்கெட்ட பொறியியல் கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளை வீணாக்கிவிட்டு — ” பொறியாளன் ” என்கிற அட்டையோடு வெளிவந்துள்ள ஒன்றுமே தெரியாதவர்களுக்கும் அவ்வப்போது நடத்தினால் — என்ன … ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s