மறுபடியும் மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்

April 14, 2017

திரியாவரத்தனமில்லாத புத்திசாலிகளுடனும் பேசுவது ஒரு அணுக்கமான அனுபவம் என்றால் அப்படிப்பட்டவர்களில், செயலூக்கமும் தளராமுயற்சியும் நமது பாரதத்தின் மீது மாளாக் கரிசனமும் நேர்மையும் உடையவர்களுடன் பேசுவது மேலதிகமாகச் சுகத்தையும் திருப்தியையும் – ஆகவே, எதிர்காலத்தின்மீது ஒரு நன்னம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கும் சமாச்சாரம். Madhuji is one such person who is absolutely non-partisan and a very sane headed pragmatist at that. A real doer.

ஒருவழியாக, சிலபல மாமாங்கங்களுக்குப் பின் மது அவர்களை மறுபடியும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்தான்.
கல்விகலவி தொடர்பான – ஏதோ  அலைச்சலில் பலமுறை பலப்பல விஷயங்களுக்காக தில்லி சென்றுகொண்டே இருந்தாலும், மனிதவளமேம்பாட்டு அமைச்சகமே கதி எனத் தலைசுற்றிக்கொண்டிருந்தாலும் – இந்த முறை அவரைப் பார்த்தே தீருவது என முடிவெடுத்தேன்.  சென்றவாரம், அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார்; மகாமகோ திட்டங்களிட்டு  அவற்றில் பாதி முடக்கப்பட்டாலும் – ஒருவழியாகப் போய் சந்தித்தேன்; மூக்குப் பிடிக்க இரவுணவு உண்டபின் சிலமணிநேரம் அரட்டை. கஷ்மீர் முதல் இஸ்லாமியத் தீவிரவாதம் ஊடாக அரவிந்த் கெஜ்ரீவால் விடலைத்தனங்கள் உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம்.

ஊழல் என் டி டிவி அவர்மேல் ஏதோ அவதூறு வழக்கு போட்டிருக்கிறது போலும். ப்ரணய்ராய் ஸாகரிகாகோஷ் போன்ற ஊழல்வாத ஊடகப்பேடிப் பொய்யர்கள் இதில் நிச்சயம் தோற்பார்கள்  என்பதில் எனக்கு ஐயமேயில்லை. அண்மையில் இந்த வழக்கில் சுப்ரமணியம்ஸ்வாமி இணைந்திருக்கிறார். மகிழ்ச்சி.  மேலதிகமாக,  கஷ்மீர் உயர் நீதிமன்றம்,  ஏதோ ‘பிடி வாரண்ட்’ அனுப்பியிருக்கிறதாம். இதன் கதை என்னவாயிற்று என்பது எனக்குத் தெரியவில்லை – பிரச்சினை என்னவென்றால், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக அமைப்பில் கழுதைகளுக்கும் உரிமைகள் (மட்டுமே, கடமைகள் அல்ல) உண்டு – ஆக சிலபல கழுதைகள் நீதி மன்றங்களிலும் உட்கார்ந்துகொண்டு தீவிர பஜனை செய்துவிடுகின்றன. தீவிரமான விசாரணையில்லாமல் முட்டியடி எதிர்வினைகளை, சமூகவளைத்தலப் போராளிப் பெருச்சாளிகளைப் போல, வாரிவாரி வழங்கிவிடுகின்றன. பிதற்றல்களை நீதிகள் போல அட்ச்சுவுட்டுவிடுகின்றன. (இந்தக் கழுதைகள், பெருச்சாளிகள், ஊடகப்பேடிகள் வகையறா வியாக்கியானம் என்னுடைய கருத்து – மது அவர்கள் என்னைப்போல அதிர்ந்துபேசுபவர் அல்லர்)

எது எப்படியோ, அவர் இந்தக் கொசுத்தொல்லைகளிலிருந்து கூடியவிரைவில் மீண்டுவருவார் என அனுமானிக்கிறேன். மது அவர்கள் பலப்பல புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அடுத்த ஒரிரு வருடங்களில் இவை வெளிவரும் என நினைக்கிறேன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கக்கூடுமோ?

புத்தகங்களை எடிட் செய்ய உதவிவேண்டும், செய்வாயா எனக் கேட்டார்.  நான் ஏற்கனவே இம்மாதிரி ஆங்கிலப் புத்தக எடிட்டர் வேலைகளை (மண்டையில் அடித்துக்கொண்டுதான்) சிலபலருக்கு இலவசமாகச் செய்திருக்கிறேன். ஆகவே, தாராளமாக என்றேன். பார்க்கலாம் இதெப்படி விரிகிறது என்று.

…தில்லி நகரின் மெட்ரோ என்பது – ஒலா ஊபர் என சதா ஸ்மார்ட்ஃபோனைத் தேய்த்துக்கொண்டு அலையாமல் முடிந்த வரை அரசுப் பேருந்துகளையும் ரெயில்களையும் அல்லது நடையையும் உபயோகிக்கும் – என்னைப் போன்ற நரைமுடிப் பைத்தியங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கையில் இருக்கும் ஓஸி ஸெல்ஃபோனில்  இணைய இணைப்புத்தேவையற்ற ஓபன்-ஸ்ட்ரீட்-மேப்ஸ்; ஆனந்தமாக ஊர் சுற்றுவதற்கு வேறென்னவேண்டும், சொல்லுங்கள். (ஹ்ம்ம்… ஆனால் நேரம் வேண்டும், சந்தர்ப்பங்கள் வாய்க்கவேண்டும். ஆனால் அதற்கு பயங்கர கெடுபிடி. Life, I simultaneously celebrate and berate thee! what else…)

-0-0-0-0-0-0-

ஆனால் பட்டவர்த்தனமாக உண்மைகளைப் பேசுவது என்பது ஃபேஷன் சமாச்சாரமில்லை;  மாறாக – வெட்கமேயற்று வெட்டியாகவும் புளுகல்தனமாகவும் போராளிக்கூவானாகப் பொங்குவதுதான் சாலச்சிறந்தது, ஆதாயம் தரக்கூடியது என்பது நன்றாகவே தெரிந்தாலும் மது அவர்கள் திருந்துவதாக இல்லை. :-)

ட்விட்டர் ஃபேஸ்புக் வகையறாக்களில் இருக்கிறாயா எனக் கேட்டார். நிமிடத்துக்குநிமிடம் என் மேலாக கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டும், 24×7 பிறருடைய மேலான கருத்துகளைக் குறித்து அதிமேலான கருத்துகளைத் தெரிவிப்பதற்கெல்லாம் பொறுமை வேண்டும், எனக்கு அது இல்லை என்றேன். மேலும் முட்டாக்கூ கழுதைகளுடன் உரையாடமுடியாது, நான் ஒரு மேட்டிமைவாதி + என் காலம் பொன்னானது என்றேன். அவர் சொன்னார் – தன்னுடைய ட்விட்டர் அனுபவத்தில் 1) அவர் சராசரியாகச் சுமார் 10 ட்வீட்கள்/தினம் போல மட்டுமே வெளியிடுகிறார் ஆகவே அது அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை  2) பர்க்காதத், ராஜ்தீப்ஸர்தேஸாய் போன்றவர்களைப் போலல்லாமல், அவருக்கு அதிகம் ட்விட்டர் திட்டல் தொல்லைகள் இல்லை. 3) பொதுவாக அவர் அக்கப்போர்களில், வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் இல்லை 4) பல ஸஹ்ருதயர்களின் சிந்தனைச்சிதறல்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, நடப்புகளைத் தெரிந்துகொள்வதற்கு  இது ஒரு நல்ல ஊடகம், இன்னபிற.
நேற்று நான் மிகவும் மதிக்கும் மும்பய் பேராசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, டிவிட்டரில் ஆரோக்கியமான(!) விவாதங்களும் நடைபெறுகின்றன என்றார், நீ ஏன் இத்தளங்களை உபயோகிக்கக்கூடாது. அறிவியல் பொறியியல் கணிதம் எனப் பலவிஷயங்கள் இருக்கின்றனவே, வெட்டி அரட்டையும் போராளித்தனமும் மட்டும் ஊடாடுவதாக இந்த ஊடகச் சந்தர்ப்பங்களப் பார்ப்பது சரியில்லையே!
நான் சொன்னேன் – எனக்கு இப்போதைக்கு இந்த தமிழ் ப்ளாக் எழவு மட்டுமே போதும். அதற்கே கணிசமாக நேரம் போகிறது. @othisaivu எழவு பற்றிச் சிந்திக்கிறேன், பார்க்கலாம். எப்படியும் உங்கள் ட்வீட்களையும் வாரம் ஒருமுறை மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கத்தானே செய்கிறேன், ஊக்கபோனஸாகத் திட்டவும் திட்டுகிறேனே! என் கடைக்கண் (=ShopEye) பார்வை (=SeeKeep) உங்கள்மீது பட்டுக்கொண்டு தானே இருக்கிறது? உங்களுக்கு என்ன குறைச்சல், ஸ்வாமீ!

-0-0-0-0-0-

(படங்கள் கூக்ல் ‘social media activism’ மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டவை)

3 Responses to “மறுபடியும் மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்”

 1. K.Muthuramakrishnan Says:

  நேரமும் மனமும் இருக்கும் போது இந்த (www.sevalaya.org) வலை தளத்தினை சற்று விரிவாக வாசிக்கும் படி அன்புடனும் பணிந்தும் வேண்டிக்கொள்கிறேன்.

  சேவாலயா முரளிதரனும் தாங்களும் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  திரு முரளிதரன் 25 ஆண்டுகளாக மென் பொறியாளராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டுவிட்டார். விவேகானந்தர்,பாரதி, காந்திஜியின் பொன் மொழிகளால் ஊக்கம் பெற்றவர்.

  2000 பிள்ளைகள் படிக்கும் மேல் நிலைப்பள்ளி, 200 ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி, 75 முதியோருக்கான இல்ல்ம,50 மாடுகளுக்கான கோசாலா, இயற்கை விவசாயம், மேலும் பல இடங்களில் சமுதாயக்கல்லூரி என்னும் தொழில் பயிற்சி மையங்கள், ஒரு 10 படுக்கை மருத்துவமனை, 20 கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை, இன்னும் முடிவுறாத சேவைகள் செய்து வருகிறார். இப்போது மழலையர் பள்ளியில் மான்டீசோரி முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளது.அனைத்தும் கிராம மக்களுக்குச் செய்யப்படும் சேவை. அனைத்துமே இலவசம். அரசு உதவி ஏதும் வாங்குவது இல்லை.
  ஆனால் அரசு மேற்பார்வை உண்டு.அவர்களுடைய கணக்குகள் அனைத்தும் மிகவும் வெளிப்படை.வலைதளத்தில் காணலாம்.

  இந்த நிறுவனத்திற்கு அடியேன் தஞ்சாவூரில் என் சிறிய நிலம் 3500 சதுர அடி அளித்துள்ளேன். 7 ஏப்ரல் 2017ல் பதிவானது.அதில் 20 பேருக்கான முதியோர் இல்லம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

  திரு முரளிதரனும் தாங்களும் சந்திப்பது பல நன்மைகளைச் செய்யும் என்று நம்புகிறேன். தங்களின் பதிலை என் மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன். நான் 68 வயது நடக்கும், எல் ஐ சி குமாஸ்தா பென்ஷனர்.

  கே.முத்துராமகிருஷ்ணன்.
  kmrk1949@gmail.com


  • அய்யா முத்துராமகிருஷ்ணன், நன்றி.

   ஸேவாலயா தளத்தைப் படித்துவிட்டு, பின்னர் உங்களுடன் கூடிய விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

   அன்புடன்,

   ரா.

 2. K.Muthuramakrishnan Says:

  மிக்க நன்றி


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s