“தயைசெய்து எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவும்”
March 12, 2017
அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது.
ஏனெனில் படிப்பதற்குச் சுளுவான நடையில், தரவுகளுடனும் ஆணித்தரமான விவாதங்களும் கொண்டுள்ள அரசியல்சரியற்ற பார்வையைக் கொண்டிருந்தாலும் – கண்ணியத்துடனும் கவனத்துடனும் எழுதப்பட்டுள்ள புத்தகம்தான் இது. மேலும், லிபரல்களை அவர் கேலி செய்யவில்லை – அவர்களுடைய பார்வைகளைக் குறித்த தம் வருத்தங்களைத் தான் தெரிவிக்கிறார். ஏனெனில் நம்முடைய செல்லங்களான இந்திய லிபரல்களை முன்வைத்து அவர் எழுதவில்லை. :-)
“Liberalism has also succeeded, tragically, in convincing blacks to see themselves first and foremost as victims. Today there is no greater impediment to black advancement than the self-pitying mindset that permeates black culture. White liberals think they are helping blacks by romanticizing miscreants. And black liberals are all too happy to hustle guilty whites. The result, manifest in everything from black studies programs to black media to black politics, is an obsession with racial slights real or imagined.“
பலப்பல வருடங்களாக பலவிதமான சூழல்களிலிருந்து வரும் குழந்தைகள் — இளைஞர்களாக எப்படி மாறுகிறார்கள், தங்களை எப்படி வரித்துக்கொள்கிறார்கள், தமக்கு உள்ள சந்தர்ப்பங்களை/வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை சிலசமயம் ஆச்சரியத்துடனும் பலதடவை விசனத்துடன் பார்க்கும் வாய்ப்புப் பெற்றிருக்கும் எனக்கு – இம்மாதிரியொரு புத்தகம் இந்தியச் சூழலில் வைத்து எழுதப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற அங்கலாய்ப்பைத் தவிர்க்கமுடியவில்லை.
(முடிந்தால் இதற்கு ஒரு அறிமுகம் எழுதவேண்டும்; ஆனால் இப்போதைக்கு நான் பரக்கத்அலிதாசன் மட்டுமே!)